TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வெளி மாநிலங்களுக்கு செல்லும் காற்றாலை மின் திட்டங்கள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Go down

வெளி மாநிலங்களுக்கு செல்லும் காற்றாலை மின் திட்டங்கள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? Empty வெளி மாநிலங்களுக்கு செல்லும் காற்றாலை மின் திட்டங்கள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Post by ஜனனி Mon Nov 14, 2011 9:57 am

தமிழகத்தில், காற்றாலை மின் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அதிக
வாய்ப்பிருந்தும், நிலுவை தொகை வழங்குவதில் அரசின் மெத்தனம், மின்மாற்றிகள்
மற்றும் மின் பாதையை (டிராஸ்மிஷன் லைன்) மேம்படுத்தாமல் உள்ளது
போன்றவற்றால், பல முதலீட்டாளர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை
ஏற்பட்டுள்ளது.

மரபு சாரா மின் உற்பத்தியில், காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரம்
தூய்மையானதாக உள்ளது. இந்தியாவில், காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம்
முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.உற்பத்தித் திறன்: தமிழகத்தில் நெல்லை,
குமரி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய
மாவட்டங்களில், 2,000க்கும் மேற்பட்ட காற்றாலை பண்ணைகள் உள்ளன. இவை, 6,500
மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.காற்று அதிகம்
வீசும், மே முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், நாள்தோறும் 2,500 முதல்
3,000 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதர காலத்தில்,
நாள்தோறும் சராசரியாக, 400 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது.

நிலுவை: காற்றாலை மூலம் பெறப்படும் மின் உற்பத்தியை, சில
நிறுவனங்கள் சுய பயன்பாட்டிற்கு பயன்படுத்துகின்றன. பெரும்பான்மை
நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்தை, 2.37 முதல் 3.39 ரூபாய் வரை,
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்கின்றன. மாதந்தோறும்
கொடுக்கப்படும் பில் தொகைக்கு, 30 நாட்களுக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம்
பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால், வாரியம் இதை
பின்பற்றுவதில்லை.சென்றாண்டு அக்டோபர் முதல் நடப்பாண்டு அக்டோபர் வரை,
தமிழ்நாடு மின்சார வாரியம் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, 2,500 கோடி
ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது.

மோசமான நிலை: காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து
பெறப்படும் மின்சாரத்தை வெளிகொண்டு வருவதற்கான, துணை மின் நிலையங்கள்
மற்றும் மின் பாதைகள் மிகவும் மோசமாக உள்ளன. தமிழகத்தில், காற்றாலை மின்
திட்டங்களில் கூடுதலாக, 10,000 மெகா வாட் உற்பத்தி செய்யும்
வாய்ப்பிருந்தும், பல முதலீட்டாளர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை
ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும்
ரெட்டி என்பவர் கூறும்போது, "தமிழகத்தில், தற்போது, 10 மெகா வாட் மின்சாரம்
உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம்.
மின்வாரியம், உற்பத்தி செய்யும் மின்சாரத்தை முழுமையாக வாங்க மறுப்பதுடன்,
வாங்கிய மின்சாரத்திற்கான, பணத்தையும் ஒழுங்காக வழங்குவதில்லை. எனவே,
தமிழகத்தில் காற்றாலைகளுக்கு அதிக வாய்ப்பிருந்தும், ராஜஸ்தான், குஜராத்
ஆகிய மாநிலங்களில், 30 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில்,
காற்றாலைகளில் முதலீடு செய்துள்ளோம்' என்றார்.

மின் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "காற்றாலை மின்
உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை வெளி கொண்டு
வருவதற்கு, 33 முதல் 230 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களே
உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இதை, 400 கிலோ வாட் என்றளவில் அதிகரிக்க
திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவை செயல்பாட்டுக்கு வரும் போது
நிலைமை சீராகும்' என்றார்.

சரிவு: காற்றாலைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர்
கூறியதாவது: தமிழகத்தில், காற்றாலை டர்பைன் விற்பனை தொடர்ந்து
அதிகரித்திருந்த நிலையில், சில மாதங்களாக, இதன் விற்பனை குறையத்
தொடங்கியுள்ளது. மின் வாரியம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி
நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்னைகளால், டர்பைன்கள் விற்பனை குறைந்துள்ளது.
இருந்த போதிலும், தமிழக காற்றாலை டர்பைன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு
ஆந்திரா, கர்நாடகம், குஜராத் போன்ற மற்ற மாநிலங்களிலிருந்து, அதிகளவில்
ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்தியாவில், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
காற்றாலை டர்பைன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவை, 225 முதல் 2,500 கிலோ
வாட் திறன் கொண்ட, காற்றாலை டர்பைன்களை தயாரித்து விற்பனை செய்து
வருகின்றன.10 மெகா வாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென்றால், 850
கிலோ வாட் திறன் கொண்ட, 11 டர்பைன்களை நிறுவ வேண்டும். தமிழகத்தில்,
பெரும்பாலான காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள், 850 கிலோ வோல்ட் திறன்
கொண்ட டர்பைன்களையே நிறுவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

சாக்கு போக்கு: இதுகுறித்து, இந்திய காற்றாலை சங்க தலைவர்
மற்றும் உலக காற்றாலை சங்க துணை தலைவர் கஸ்தூரி ரங்கய்யன்
கூறியதாவது:நிலுவை தொகை அளிப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்து வரும் மின்
வாரியம், மின் பகிர்மானத்தில் இழப்பு என சாக்குபோக்கு சொல்லி, காற்றாலை
நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் பெறுவதை தட்டிக்கழிக்கிறது. வாங்கும்
மின்சாரத்திற்கு பணம் தர வேண்டும் என்ற காரணத்தாலும், மின் வினியோகம் சீராக
இல்லை என்ற தவறான தகவலை அளிக்கிறது.தமிழகத்தில், மின் பற்றாக்குறையால்
ஏராளமான தொழில்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே, மின்வாரியம்
காற்றாலைகளிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பெற்று கொள்ளும்
வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதர மாநில அரசுகள்,
காற்றாலை வாயிலாக பெறும் மின்சாரத்திற்கு, உடனடியாக பண பட்டுவாடா செய்து
விடுகின்றன. தமிழக மின்வாரியமும், இதேபோன்று, செயல்பட்டால், இங்கும்
அதிகளவில் காற்றாலை வாயிலாக மின் உற்பத்தி மேற்கொள்ள பலர் முன் வருவர்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறையும் சீரடையும். இவ்வாறு கஸ்தூரி ரங்கய்யன் கூறினார்.

ஒரு மெகா வாட் மின் உற்பத்திக்கு ரூ. 6 கோடி:தமிழகத்தில்,
காற்றாலை மூலம் ஒரு மெகா வாட் மின் உற்பத்தி செய்ய, 6 கோடி ரூபாய் முதலீடு
தேவைப்படுகிறது. இதன்படி, தற்போதைய, 6,500 மெகா வாட் மின் உற்பத்தி
திறனுக்கு, 39 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த,
2008-09ம் ஆண்டில், காற்றாலைகளில், 805 மெகா வாட் மின் உற்பத்திக்கான,
முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, 2009-10ல், 890 மெகா வாட், 2010-11ல்,
997 மெகா வாட் என்ற அளவிற்கு உள்ளது. சென்ற அக்டோபர் வரை, 400 மெகா
வாட்டுக்கும் குறைவாகவே முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில், காற்றாலை
மின் உற்பத்தியில், தமிழகம் 40 சதவீத பங்களிப்பை கொண்டு முதலிடத்தில்
உள்ளது. அடுத்த இடங்களில், குஜராத், (3,000 மெகா வாட்), மகாராஷ்டிரா (2,500
மெகா வாட்), கர்நாடகா ( 2,000 மெகா வாட்) ஆகியவை உள்ளன.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மாவட்டங்களில் மின்வெட்டு ஒரு மணிநேரம் "கட்!' : காற்றாலை மின் உற்பத்தியால் அரசு நடவடிக்கை
» பொது வேலைநிறுத்தம்; வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
» கேபிள் டி.வி. கட்டணம் ரூ.70-க்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு
» சென்னையில் அரசு கேபிள் டி.வி. தமிழக அரசு தீவிர நடவடிக்கை
» சூரிய மின் திட்டத்திற்கு சலுகை - தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum