TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தனி நாடு போல் செயல்படுகிறது கேரளா: ராமதாஸ் ஆவேசம்

Go down

தனி நாடு போல் செயல்படுகிறது கேரளா: ராமதாஸ் ஆவேசம் Empty தனி நாடு போல் செயல்படுகிறது கேரளா: ராமதாஸ் ஆவேசம்

Post by ஜனனி Sat Feb 20, 2010 9:16 pm



தனி நாடு போல் செயல்படுகிறது கேரளா: ராமதாஸ் ஆவேசம் Tblfpnnews_76559084654
உடுமலை
: "கேரள மாநிலம் தனி நாடு போல் செயல்படுகிறது. தமிழகத்திலிருந்து
கேரளாவுக்கு செல்லும் உணவுப் பொருட்கள் மற்றும் மின்சாரத்தை ஒரு வாரம்
நிறுத்தினாலே, அங்கு எந்த ஆட்சியும் நிலைக்காது' என பா.ம.க., நிறுவனர்
ராமதாஸ் கூறினார்.


அமராவதி அணைக்கு
வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் வகையில் கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை
கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, நேற்று பா.ம.க.,
சார்பில் உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக, ராமதாஸ்
நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 1990ல், காவிரி நடுவர் மன்றம்
அமைக்கப்பட்டு, 17 ஆண்டுகளுக்கு பின், 2007ல் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
தமிழகம் உட்பட பயன்பெறும் மாநிலங்கள், மேல்முறையீடு செய்துள்ள நிலையில்,
இதற்கான ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. தீர்ப்பு வெளியாகி மூன்று
ஆண்டாகியும், "காவிரி ஒழுங்கு முறை ஆணையம்' அமைக்கப்படவில்லை. இவை
நடைமுறைக்கு வருவதற்கு முன், பாசன பரப்புகள் அதிகரிப்போ, நீர்ப்பிடிப்பு
பகுதிகளில் அணை கட்டுவதோ கூடாது. ஆனால், கேரளா அரசு வழக்கமாக,
சட்டங்களையும், நடைமுறைகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக பாம்பாற்றின்
குறுக்கே அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதனால், அமராவதி மூலம்
பயன்பெறும் திருப்பூர் , கரூர் மாவட்டங்களிலுள்ள ஒரு லட்சம் ஏக்கர்
நிலங்கள் பாலைவனமாகும்.


பாம்பாறு
கேரளா எல்லையில் உற்பத்தியானாலும், தமிழக பகுதியில் உற்பத்தியாகும்
காட்டாறுகளிலிருந்துதான் அதிகளவு நீர் பெறுகிறது. இதை தடுக்க தமிழக அரசு
சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில்
நெய்யாறு அணை பிரச்னை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில்
அச்சன் கோவில் - வைப்பாறு இணைப்பு திட்டம், தேனி, திண்டுக்கல், மதுரை,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு பிரச்னை, கோவை,
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பாம்பாறு பிரச்னை, ஆழியார்-
பரம்பிக்குளம் நதி நீர் பிரச்னை ஆகியவற்றில் தமிழக அரசுடன் கேரளா
ஒத்துழைப்பதில்லை. வீணாக அரபிக்கடலில் கலந்தாலும், தமிழர்களுக்கு ஒரு
சொட்டு தண்ணீர் தரமாட்டோம் என்ற கொள்கை, கேரளாவில் எந்த ஆட்சி வந்தாலும்
கடைபிடிக்கப்படுகிறது.


தமிழகம்
நீருக்கு மட்டுமே கேரளாவை சார்ந்திருக்கிறது. ஆனால், கேரளா மின்சாரம்,
அரிசி, காய்கறி, பால், பழங்கள், மணல், போக்குவரத்து, வேலைவாய்ப்பு என,
அனைத்துக்கும் தமிழகத்தை நம்பியிருக்கிறது. ஒரு வாரம் கேரளாவுக்கு
பொருட்கள் செல்வதை நிறுத்தினால், கேரளாவில் ஆட்சி கவிழ்ந்து விடும். ஒரு
ஆட்சியும் நிலைக்காது. கேரளா அரசு தனி மாநிலம் போல் இல்லாமல், தனி நாடு
போல் செயல்படுகிறது. தமிழக மக்கள் பொறுமை சாலிகள். ஆனால், பொறுமைக்கும்
எல்லையுண்டு. இவ்வாறு, ராமதாஸ் தெரிவித்தார்.


"தமிழக அரசியலில் ஒற்றுமை இல்லை' :
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டியவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா,
ஆந்திரா தருவதில்லை. மற்ற மாநிலங்களில், மக்கள் பிரச்னைகளுக்கு அரசியல்
கட்சிகள் ஓரணியில் திரளுகின்றன. தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை.
இதனால் தான், நமது உரிமைகளையும், வளத்தையும் நாம் படிப்படியாக இழந்து
வருகிறோம். தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை
கூட்ட வேண்டும். தமிழக அரசும், தமிழக மக்களும் கேரளா அரசுக்கு பாடம்
புகட்ட வேண்டும். ஒரு கிலோ அரிசி கூட கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க கூடாது,
என பேசினார்.


"ஜெய்ராம், கபில் சிபிலை நீக்க வேண்டும்':
உடுமலையில் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "" வனம் மற்றும்
சுற்றுச்சூழல் பிரச்னையில் கவனம் செலுத்தாமல், அமெரிக்க மான்சான்டோ
நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,
மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே ஆதரவாக உள்ள கபில் சிபல் ஆகியோரை பிரதமர்
அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். மத்திய அரசின் ஆட்சி, அதிகாரத்தில்
மலையாளிகள் ஆதிக்கம் அதிகளவு உள்ளது. ஆள்வது பெயருக்கு பிரதமராக
இருந்தாலும், ஆட்சி செய்வது மலையாளிகள் தான். முக்கிய செயலர்களாக 19 பேர்
உள்ளனர். இதனால் தான், தமிழகத்துக்கு தீங்கு ஏற்படுகிறது,'' என்றார்.
"தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுமா?' என்ற கேள்விக்கு, "" சட்டசபை
தேர்தலின் போது முடிவு செய்து கொள்ளலாம்,'' என்றார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum