TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நெருக்கடியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது

Go down

நெருக்கடியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது  Empty நெருக்கடியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது

Post by ஜனனி Tue Aug 16, 2011 1:10 pm

புதுடில்லி: டில்லியில் உண்ணாவிரதம் துவக்கவிருந்த காந்தியவாதியான அன்னா
ஹசாரே இன்று காலையில் அவரது வீட்டில் இருந்து போலீசார் கைது செய்து
அழைத்து சென்றனர். இவரை கைது செய்யவில்லை அப்புறப்படுத்தியிருக்கிறோம்
என்று சொன்னாலும், ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு உரிமை மறுக்கும்
மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் மற்றும் ஹசாரே ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பார்லி.,யிலும் ஒலித்தது.
எதிர்‌கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும்
ஒத்திவைக்கப்பட்டன. டில்லி மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தில்: மத்திய அரசின் இந்த நடவடிக்கை
சரியானது அல்ல. ஹசாரே தனது எதிர்ப்பை காண்பிக்க அவருக்கு உரிமை இருக்கிறது.
இது மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம் என
இக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மார்க்., கமயூ., கட்சி தரப்பில் ஹசாரே கைது செய்யப்பட்டதன் மூலம் ஊழலுக்கு
எதிராக போராடுபவர்களை ஊழல்வாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று
கூறப்பட்டுள்ளது.



பா.ஜ., எதிர்ப்பு :
ஜனநாயக மாண்பை குலைக்கும் சதி என பா.ஜ., கட்சி
தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த‌
தலைவர் அத்வானி ., ஹசாரே கைது ஒன்றும் வியப்பளிக்கவில்லை அரசு
இப்படித்தான் செய்யும் என்று தெரியும் என்ற கருத்தை மேற்கோள் காட்டி
கூறியிருக்கிறார். அருண்ஜெட்லி கூறுகையில்; அரசு அடிப்ப‌டை உரிமையை தூக்கி
வீசியிருக்கிறது. என்றார்.


அன்னா ஹசாரே குழுவினர் எதிர்ப்பு:
ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே
இது போலீசாரி்ன் வரம்பு மீறிய செயல், இப்படி நடக்கும் என்று
எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி
கிரண்பேடி; இது எமர்‌‌ஜென்சியை மீண்டும் நினைவுப்படுத்துகிறது. சட்ட
விரோதமான செயல், ஜனநாயகத்தை அரசு கொலை செய்திருக்கிறது என்றார். சாந்தி
பூஷண் தனது அறிக்கையில்: அரசின் ஆணவப்போக்கை காட்டுகிறது, ஆங்கிலேயேர்
ஆட்சியை விட கொடுமையாக உள்ளது. ஹசாரே கைதை நாடும் , மக்களும்
பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறியிருக்கிறார்.


யோகாகுரு பாபா ராம்தேவ் எதிர்ப்பு:
கறுப்பு பணம்கொண்டு வரப்பட வேண்டும்
என கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பாபா
ராம்தேவ் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , ஊழலுக்கு எதிராக நியாயமாக
போராடுபவர்களை அரசு நசுக்க பார்க்கிறது. இதுவே சட்டவிரோதமானதும்,
ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும். கடந்த ஜூன் மாதம் நான் பங்கேற்ற
போராட்டத்தின் போது போலீசார் நடந்து கொண்ட விதம் மீண்டும் வராமல்
பார்த்துக்கொள்ள பிரதமர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும்
கூறியுள்ளார்.



வாஷிங்டனில் மாணவர்கள் போராட்டம்:
அன்னா ஹசா÷õர கைது செய்யப்பட்டதற்கு
கண்டனம் தெரிவித்து அமெரிக்க பல்கலை., மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து
ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தூதரகம் முன்பாக திரண்ட மாணவர்கள்
ஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ஊழலை தடுப்பதில் மத்திய அரசு
தோல்வி அடைந்து விட்டதாலும், போராடுவதற்கான அடிப்படை உரிமை
மறுக்கப்பட்டிருப்பதாலும் நியாயமான அரசு நடக்கிறதா என்று சந்தேகம்
எழுந்திருப்பதாக எழுதிய மனு ஒன்றையும் மாணவர்கள் தூதரக அதிகாரிகளிடம்
கொடுத்தனர்.


பார்லி.,யில் அமளி - ஒத்திவைப்பு : ஹசாரே
கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும்
எதிர்ப்பை தெரிவித்தனர். பார்லி.,யில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு
ஹசாரே கைது விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு
விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பன்சிலால் கூறுகையில்:
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் 12 மணிக்கு விளக்கம் தருவார் என
அவையில் தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சியினர் ஏற்க மறுத்து கூச்சல்
குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பார்லி., இரு அவைகளும்
ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்: ஹசாரே
கைது குறித்து உள்துறை அமைச்சர் அளிக்கும் விளக்கம் எங்களுக்கு தேவையில்லை
என்றும், பிரதமர்தான் ‌இதற்கு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும்
என்றும் கூறியுள்ளார்.

இன்று மாலையில் கண்டன பேரணி: இவரது
கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டில்லியில் இன்றும் , நாளையும்
கண்டன பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திரளாக அனைவரும் பங்கேற்குமாறு
ஹசா‌ரே குழுவை சேர்‌ந்த பிரசாந்த் பூஷண் ‌கூறியுள்ளார்.

காலையில் இருந்து சாப்பிடாத ஹசாரே :
தியாகி அன்னா ஹசாரேவை போலீசார் காலை 7. 30 மணியளவில் கைது செய்தனர். இது
முதல் அவர் சாப்பிடவில்லை. அழைத்து சென்றது முதல் அவர் எதுவும் ஆகாரம்
எடுத்துக்கொள்ள மறுத்து விட்டார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசுக்கு பக்கவாத நோய் : அத்வானி கடும் தாக்கு!
» எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டிப்பு
» தேசிய நெடுஞ்சாலைகளில் மருத்துவ வசதிகள்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
» ஜெனிவா கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
» ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்: சென்னையில் ஹசாரே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum