TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வழக்குகள்: அ.தி.மு.க., அதிரடி திட்டம்

Go down

வழக்குகள்: அ.தி.மு.க., அதிரடி திட்டம் Empty வழக்குகள்: அ.தி.மு.க., அதிரடி திட்டம்

Post by ஜனனி Thu May 05, 2011 7:42 am

"தமிழகத்தில், 1996ல் நடந்த சம்பவங்கள் தற்போது நடக்கவுள்ளன. இதன்
மூலம், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தடுமாறி வரும், தி.மு.க.,
மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள், அ.தி.மு.க.,
வட்டாரத்தில் முழுவீச்சில் நடந்து வருகின்றன' என, உயரதிகாரிகள்
வட்டாரத்தில் ஒரு தகவல் உலவி வருகிறது.
கடந்த, 1991-96ல், அ.தி.மு.க., ஆட்சி முடிவுற்று, தி.மு.க., ஆட்சி
பொறுப்பேற்றது. ஐந்தாண்டு அ.தி.மு.க., அரசில் நடந்த ஊழல்கள் துறைவாரியாக
பட்டியலிடப்பட்டு, வழக்குகள் வேகமாய் பாய்ந்தன. முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா, அப்போதைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, செங்கோட்டையன்,
செல்வகணபதி, கண்ணப்பன், மதுசூதனன், ஈஸ்வர மூர்த்தி, நாகூர் மீரான்,
இந்திரகுமாரி என, பெரும்பான்மையான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்
சரமாரியாக சுமத்தப்பட்டன. போக்குவரத்து கழகங்களுக்கு உதிரி பாகங்கள்
வாங்கியதில் ஊழல் நடந்ததாக செங்கோட்டையன் மீதும், இலவச, வேட்டி, சேலையில்
ஊழல் செய்ததாக இந்திரகுமாரி மீதும், சுடுகாட்டு கொட்டகை அமைப்பதில் ஊழல்
செய்ததாக செல்வகணபதி மீதும், மின் உற்பத்திக்கு நிலக்கரி வாங்கியதில்
முறைகேடு செய்ததாக கண்ணப்பன் மீதும் வழக்குகள் பதிவாயின. தொடர்ந்து
பாய்ந்த வழக்குகளால், அ.தி.மு.க., கடும் பின்னடைவை சந்தித்தது.
அ.தி.மு.க.,வில் தொடர்ந்தால், வழக்குகள் நிச்சயம் என்ற பயத்தில் முக்கிய
பிரமுகர்கள் சிலர், தி.மு.க.,விற்கு மாறினர்; சிலர், "ஆக்டிவ்' அரசியலில்
இருந்து, "நல்லபிள்ளையாய்' ஒதுங்கி வழக்கில் இருந்து தப்பித்தனர். இந்த
வழக்குகள் காரணமாக, மற்றொருபுறம் பொதுமக்கள் மத்தியில், அ.தி.மு.க., கடும்
அவப்பெயரை பெற்றது. அந்த காலகட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை உதாரணமாக
காட்டி, இன்று வரை எதிர்தரப்பு பிரசாரம் செய்யுமளவிற்கு இந்த வழக்குகள்,
அ.தி.மு.க.,வின் இமேஜை சேதப்படுத்தின.
இந்த தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில்
அக்கட்சி தலைமை உறுதியாக உள்ளது. அவ்வாறு ஆட்சி அமையும் போது, "1996ல்
அ.தி.மு.க.,விற்கு எதிராக வழக்குகள் மூலம் கொடுக்கப்பட்ட நெருக்கடி,
தற்போது, தி.மு.க.,விற்கு கொடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., தலைமை
திட்டமிட்டுள்ளது. இந்த யோசனை அ.தி.மு.க.,விற்கு வரக் காரணமாக இருந்ததே
இந்த ஆட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்ட, உயரதிகாரிகள் தான் என்கின்றனர்
விவரமறிந்தவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதை புரிந்து
கொண்ட அவர்கள், அடுத்து அமையும் அரசில் முக்கிய பதவிகளை பிடிக்க
தற்போதிருந்தே காய் நகர்த்த துவங்கியுள்ளனர். அதற்காக, கடந்த ஐந்தாண்டு
கால, தி.மு.க., ஆட்சியில், துறை வாரியாக நடந்த முறைகேடுகள், ஊழல்
விவகாரங்களை ஆதாரங்களோடு பட்டியல் போட்டு, அ.தி.மு.க., தலைமையிடம்
கொடுத்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இந்த ஆதாரங்களின்
அடிப்படையில், தற்போதைய முதல்வர் கருணாநிதியில் துவங்கி, அவரது முன்னணி
அமைச்சரவை சகாக்கள் மீது வழக்குகள் பதிவாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, பொதுப்பணித் துறை, தொழில் துறை, மின் துறை, போக்குவரத்து,
உணவு, உயர்கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறைகளில் நடந்த
முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் தற்போது தொகுக்கப்பட்டுள்ளது என்கிறது
அதிகாரிகள் வட்டாரம்.
பொதுப்பணித் துறையில் நடந்த பெரிய திட்டங்களுக்கு யார், யாருக்கு
ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பணிகளின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில்
குற்றசாட்டு பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு தொழில்
நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் பின்னணி குறித்தும்,
அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்தும் ஆவணங்கள்
சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு, 50 கோடி ரூபாய் வரை செலவு செய்து,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கி
வருகிறது. இது குறித்தும், மின் உற்பத்திக்கு நிலக்கரி வாங்கியதில்
மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து துறையில், ஜவகர்லால் நேரு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்
கீழ், 5,000க்கு மேற்பட்ட புது பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள்
வாங்கியதில் உள்ள பின்னணி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ரேஷன்
கடைகள் மூலம் வழங்கப்பட்ட மளிகை பொருள்கள் கொள்முதல், அரிசி கடத்தல் ஆகிய
விவகாரங்கள் உணவுத் துறையை குறிவைத்து சேகரிக்கப்பட்டுள்ளன.
மருந்து கொள்முதல், நெடுஞ்சாலைத் துறையில் மேற்கெண்ட கோடிக்கணக்கான
ரூபாய் மதிப்புள்ள பணிகளில் நடந்த முறைகேடுகள், புதிதாய் துவங்கப்பட்ட
கல்லூரிகளின் பின்னணி குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இது தவிர,
புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப் பணி விவகாரம், செம்மொழி மாநாட்டையொட்டி
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட, 1,000 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சி
பணிகள் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளும் தொகுத்து, அ.தி.மு.க., தலைமையிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சிலர் மீது எழுந்துள்ள கொலை
சம்பவங்களில் தொடர்பு, நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து
போன்ற புகார்கள் தூசி தட்டப்பட உள்ளது.
மொத்தத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், அடுத்தடுத்து பாயும்
வழக்குகள் மூலம், தி.மு.க.,வை நிலைகுலைய வைக்க வேண்டும் என்ற திட்டம்,
உயரதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பில் நிச்சயம் நடக்கப் போகிறது
என்கின்றனர், அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிகள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வீடுகளுக்கு புதுபட டி.வி.டி.க்கள் விநியோகம்: திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சேரன் அதிரடி திட்டம்!
» மலிவு விலையில் மீன்கள், கோழிகள்: முதல்வர் மம்தா அதிரடி திட்டம்
» "மினி-பைனலில்' இந்தியா-ஆஸி., மோதல்! * காலிறுதியில் சாதிக்க அதிரடி திட்டம்
» வட மாகாண சபை : 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! அதிரடி அறிவிப்புக்கள் !
» உலகம் முழுவதும் இலவச இண்டர்நெட் சேவை : ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி திட்டம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum