TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியா திணறல் வெற்றி! * காலிறுதிக்குள் நுழைந்தது * நெதர்லாந்து போராட்டம் வீண்

Go down

இந்தியா திணறல் வெற்றி! * காலிறுதிக்குள் நுழைந்தது * நெதர்லாந்து போராட்டம் வீண் Empty இந்தியா திணறல் வெற்றி! * காலிறுதிக்குள் நுழைந்தது * நெதர்லாந்து போராட்டம் வீண்

Post by ஜனனி Thu Mar 10, 2011 9:24 am

இந்தியா திணறல் வெற்றி! * காலிறுதிக்குள் நுழைந்தது * நெதர்லாந்து போராட்டம் வீண் 2222


புதுடில்லி: உலக
கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை 5 விக்கெட்
வித்தியாசத்தில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. "கத்துக்குட்டியாக
கருதப்படும் நெதர்லாந்துக்கு எதிராக நம்மவர்கள் திணறியது, ரசிகர்களுக்கு
பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை
கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று டில்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில்
நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
நெஹ்ரா வாய்ப்பு:
நெதர்லாந்து
அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப்
படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஷிஸ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றார். "டாஸ்
வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் "பேட்டிங் தேர்வு செய்தார்.
டசாட்டே ஏமாற்றம்:
நெதர்லாந்து
அணிக்கு சுவார்சின்ஸ்கி, வெஸ்லி பாரசி இணைந்து நிதான துவக்கம் தந்தனர்.
இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. முதல்
விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், பியுஸ் சாவ்லா சுழலில்
சுவார்சின்ஸ்கி(28) போல்டானார். யுவராஜ் வலையில் பாரசி(26) சிக்கினார்.
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த டசாட்டே இம்முறை
சோபிக்கவில்லை. இவரை 11 ரன்களுக்கு வெளியேற்றி திருப்புமுனை
ஏற்படுத்தினார் யுவராஜ்.
போரன் அதிரடி:
நெஹ்ரா
வேகத்தில் கூப்பர்(29) காலியானார். ஜுடிரன்ட்(0), குரூத்(5), கெர்வசி(11)
விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் போரன், புக்காரி
அதிரடியாக ஆடினர். யுவராஜ் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார் போரன். பின்
பியுஸ் சாவ்லா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து மிரட்டினார்.
மறுபக்கம் வாணவேடிக்கை காட்டிய புக்காரி, நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்சர்,
பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு பறக்க
விட்டு, ஸ்கோரை உயர்த்தினார். பின் ஜாகிர் கான் தனது ஒரே ஓவரில் இரட்டை
"அடி கொடுத்தார். முதலில் போரனை(38) வெளியேற்றினார். அடுத்து புக்காரி(21)
விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.4 ஓவரில் 189
ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சார்பில் ஜாகிர் 3, சாவ்லா 2, யுவராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
போகிற
போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், சேவக்
அதிரடி துவக்கம் தந்தனர். புக்காரி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு
அனுப்பினார் சேவக். டசாட்டே வீசிய அடுத்த ஓவரில் சச்சின் இரண்டு பவுண்டரி
அடித்தார். போட்டியில் 5வது ஓவரை புக்காரி வீச... சேவக் வரிசையாக 3
பவுண்டரிகள் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின் சீலார்
ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சேவக்(39) அடுத்த பந்தில்
அவுட்டானார். அடுத்த வந்த யூசுப் பதான் போரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர்
அடித்தார்.
விக்கெட் சரிவு:
சீலார்
வீசிய போட்டியின் 10வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில்
சச்சின்(27) வெளியேறினார். 5வது பந்தில் யூசுப் பதான்(11) அவுட்டானார்.
விராத் கோஹ்லி(12) ஏமாற்றினார். காம்பிரும்(28) அதிக நேரம்
தாக்குப்பிடிக்கவில்லை. இப்படி "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என
விளையாட, ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.
யுவராஜ் அபாரம்:
பின்
யுவராஜ், தோனி இணைந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் பதட்டப்படாமல் பேட்
செய்தனர். கிருகர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய யுவராஜ் அரைசதம்
அடித்ததோடு, அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். இந்திய அணி 36.3 ஓவரில்
5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "பி
பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, காலிறுதிக்கு ஜோராக
முன்னேறியது. யுவராஜ் (51), தோனி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
யுவராஜ் "100 விக்.,
நேற்று
நெதர்லாந்து வீரர் பாரசியை அவுட்டாக்கி யுவராஜ் சிங், ஒருநாள் கிரிக்கெட்
அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். சுழலில் அசத்திய இவர் 2
விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 269 போட்டியில் பங்கேற்று 101 விக்கெட்
வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேல்
விக்கெட் வீழ்த்திய 14வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
---
டேவிஸ் "100
இந்தியா-நெதர்லாந்து
போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் அம்பயராக செயல்பட்டார்.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட
போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய 14வது அம்பயர் என்ற பெருமை பெற்றார்.
---
சச்சின் 2,000 ரன் சாதனை
உலக
கோப்பை அரங்கில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்
இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று 18வது ரன்னை எடுத்த
போது, இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 40 உலக கோப்பை போட்டிகளில்
பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 2009 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 40 2009 5/13
பாண்டிங் (ஆஸி.,) 42 1577 4/6
லாரா (வெ.இ.,) 34 1225 2/7
ஜெயசூர்யா (இலங்கை) 38 1165 3/6
கில்கிறிஸ்ட் (ஆஸி.,) 31 1085 1/8
*
இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த இவர், உலக
கோப்பை அரங்கில் அதிக சதம் (5) கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை
பிடித்தார். நேற்று நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், உலக
கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் 2வது
இடத்துக்கு முன்னேறினார். இதுவரை இவர், 40 போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (39 போட்டி), 3வது இடத்துக்கு
தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (42
போட்டி) உள்ளார்.
ஒவ்வொரு உலக கோப்பை தொடரில், சச்சின் எடுத்த ரன்கள்:
ஆண்டு போட்டி ரன்கள்
1992 8 283
1996 7 523
1999 7 253
2003 11 673
2007 3 64
2011 4 213
1992-2011 40 2009
---
ஸ்கோர்போர்டு
நெதர்லாந்து
சுவார்சின்ஸ்கி(ப)சாவ்லா 28(42)
பாரசி-எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 26(58)
கூப்பர்(கே)தோனி(ப)நெஹ்ரா 29(47)
டசாட்டே(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 11(28)
கெர்வெசி(கே)ஹர்பஜன்(ப)சாவ்லா 11(23)
ஜூடிரன்ட்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(6)
குரூத்--ரன்அவுட்-(சாவ்லா/தோனி) 5(11)
போரன்(கே)நெஹ்ரா(ப)ஜாகிர் 38(36)
குருகர்-ரன்அவுட்-(கோஹ்லி/தோனி) 8(12)
புக்காரி(ப)ஜாகிர் 21(18)
சீலார்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 12
மொத்தம் (46.4 ஓவரில், "ஆல்-அவுட்) 189
விக்கெட் வீழ்ச்சி:
1-56(சுவார்சின்ஸ்கி), 2-64(பாரசி), 3-99(டசாட்டே), 4-100(கூப்பர்),
5-101(ஜூடிரன்ட்), 6-108(குரூத்), 7-127(கெர்வெசி), 8-151(குருகர்),
9-189(போரன்), 10-189(புக்காரி).
பந்துவீச்சு: ஜாகிர்கான் 6.4-0-20-3, நெஹ்ரா 5-1-22-1, யூசுப் 6-1-17-0, ஹர்பஜன் 10-0-31-0, சாவ்லா 10-0-47-2, யுவராஜ் 9-1-43-2.
இந்தியா
சேவக்(கே)கெர்வெசி(ப)சீலார் 39(26)
சச்சின்(கே)குருகர்(ப)சீலார் 27(22)
யூசுப்(கே)+(ப)சீலார் 11(10)
காம்பிர்(ப)புக்காரி 28(28)
கோஹ்லி(ப)போரன் 12(20)
யுவராஜ்-அவுட் இல்லை- 51(73)
தோனி--அவுட் இல்லை- 19(40)
உதிரிகள் 4
மொத்தம் (36.3 ஓவரில், 5விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-69(சேவக்), 2-80(சச்சின்), 3-82(யூசுப்பதான்), 4-99(கோஹ்லி), 5-139(காம்பிர்).
பந்துவீச்சு: புக்காரி 6-1-33-1, டசாட்டே 7-0-38-0, சீலார் 10-1-53-3, போரன் 8-0-33-1, கூப்பர் 2-0-11-0, குர்கர் 3.3-0-23-0.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum