Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஈழ அகதிகளின் செங்கல்பட்டு முகாமில் நடாத்தப்பட்ட பொலிஸாரின் தாக்குதல் பற்றிய ஆய்வு
Page 1 of 1

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அண்மையில் அதாவது 02 /01 /2010 இல் நடத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் மிகுத்த மன வேதனையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இது தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடைபெற்ற சம்பவம்.
இந்த சம்பவத்தை கண்டித்து, நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் மற்றும் பழ நெடுமாறன், இன்னும் சில இந்திய அரசியல்வாதிகளும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உதவி நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் பற்றி பி பி சி மற்றும் சில சர்வதேச ஊடகங்களும் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த சம்பவம் நடக்க காரணம் என்ன? இதன் பின்னணி என்னவாக இருக்கின்றது, என்று எமது தமிழக உறவுகளின் உதவியோடு அறிய முயற்சி எடுத்தோம். இதன் பின்னணி சாதாரணமாக இருக்கவில்லை. இதன் பின்னணி இந்திய, இலங்கை கூட்டு சதியாக இருப்பது போல் இருக்கின்றது. இதற்கு கருணாநிதியின் அரசும் கூட்டாக இணைந்து கைகொடுப்பதாய் உணர்த்தும் இந்த தாக்குதல் தமிழகத்தின் மீது இருக்கும் இலங்கை தமிழர்களின் கொஞ்ச நம்பிக்கையும் இழந்து போக இது வழி வகுக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அதுவும் இரவில் இரண்டு பட்டாலியன் பொலிஸார் ஏவப்பட்டு முப்பத்திமூன்று தமிழர்கள் துவைத்து எடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பதின்மூன்று பேர் படுகாயமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு ஜனநாயக நாட்டில் உண்ணாவிரதம் இருப்பது மாபெரும் குற்றமாக கணிக்கப்படுமா? சத்தியாக்கிரகங்களின் மூலமே இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தி பிறந்த நாடு. காந்தியின் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கின்றது. இங்கு அமைதியான முறையில் தமது கோரிக்கையை நியாயப்படுத்த உண்ணா நோன்பு இருந்தால் தடியடி நடத்தப்படுமா? ஏன் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு என்ன ஆகிவிட்டது. மாபெரும் ஜனநாயக நாட்டில் இது ஜனநாயகமா? என்னதான் அங்கே நடக்கின்றது?
உண்மையில் அந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களே அங்கு அடைக்கப்பட்டுள்ளதாக சில மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களை இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் பொது முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விடயங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி கூறுகையில், இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை பொது முகாங்களுக்கு வழக்குகள் முடிவடையும் முன்னர் மாற்ற முடியாது என்றும், செவ்வாய்க்கிழமை அதாவது மூன்றாம் திகதி கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பதின்மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றையவர்கள் தொடர்ந்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அவரின் கூற்றுப்படி அங்கிருந்து மக்கள் தப்பிக்க முயற்சித்த வேளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் வெடித்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், உண்மையில் முகாமில் இருந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அந்த போராட்டத்தை கைவிடும்படி பொலிஸாரினால் கேட்கப்பட்டதாகவும், ஆனால் மக்கள் தங்களின் கோரிக்கைகளுக்கு கியூ பிரிவு பொலிஸ் உத்தரவாதம் அளிக்கும் வரை தங்களின் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டதாகவும் அதன் பின்னர் மாலை ஆறு மணியளவில் பொலிஸ்துறையைச் சேர்ந்த இருநூறு பேர் முகாமுக்குள் புகுந்து அகதிகளை அடித்து துன்புறுத்தப்பட்டதாக முகாமில் எஞ்சியிருக்கும் அகதிகளுடன் நேரடியாக பேசியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசின் விருப்பத்துக்கு அமைய காங்கிரஸ் ஆட்சிப்பீடம் கருணாநிதி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை இலங்கை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டதாகவும், இது ஒரு உளவியல் ரீதியாக இலங்கையின் அரசாங்கத்தால் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகின்றது.
அதன் காரணம் இந்தியாவில் இருக்கும் அகதிகளை மீளப் பெற இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கையின் ஒரு கட்டமே இது என்றும், இனிவரும் எதிர்காலங்களில் இன்னும் அதிகமான அழுத்தங்களை இலங்கை அகதிகள் மீது பிரயோகிக்கப்படலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாய் சொல்லப்படுகின்றது…
இது எல்லாம் இருக்க தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக மசோதா ஒன்றை இயற்றப்போவதாகவும், அதில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்க இலங்கையிடம் மத்திய அரசு மூலமாக அழுத்தங்களை கொடுக்க தீர்மானித்திருப்பதாகவும் பி பி சி தமிழோசைக்கு செவ்வி ஒன்றில் கூறியிருக்கின்றார். ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகின்ற கதையாக உள்ளது.
இலக்கியன்

Similar topics
» செங்கல்பட்டு முகாமில் நடந்தது என்ன ? கண்ணீர் வாக்குமூலம்
» செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நேற்று தமிழக பொலிஸார் நடத்தியுள்ள
» செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து ஐந்து ஈழத் தமிழர்கள் விடுதலை
» செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மீண்டும் பட்டினிப் போராட்டம் தொடங்கினர் 10 ஈழத் தமிழர்கள்.
» செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை. சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum