TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9

Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9

Post by வாகரைமைந்தன் Wed Jun 30, 2021 11:35 am







பி. பி. ஸ்ரீநிவாஸ் (Prativadi Bhayankara Sreenivas, செப்டம்பர் 22, 1930 - ஏப்ரல் 14, 2013) காக்கினடா ஆந்திரா.பெற்றோர் பனினதிர சுவாமி-சேஷாகிரம்மா

முதல் தமிழ்ப் பாடல், சிந்தனை என் செல்வமே" என்ற பாடல்,ஜாதகம் , (1953) படம்,இசை ஆர்.கோவர்த்தனம்,பாடல் வரிகள் டி.கே. சுந்தர வாத்தியார்



இது அதே படத்தில் மூட நம்பிக்கையாலே..பாடல்



ஆயிரத்தில் ஒருவன் (2010) படம்,இசை ஜி.வி.பிரகாஷ்குமார்,உடன் பாடியவர் பாம்பே ஜயசிறி,வரிகள் வைரமுத்து.ஒரு பாடலை யுவன் சங்கர் ராஜா இசைஅமைத்திருந்தார்.அவர் விலகவே அந்தப் பாடல் நீக்கப்பட்டது.



 பாவமன்னிப்பு (1961) காலங்களில் அவள்.. இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி,வரிகள் கண்ணதாசன்



Last edited by வாகரைமைந்தன் on Wed Jul 07, 2021 11:48 am; edited 6 times in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1716
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty 2.சி. எஸ். ஜெயராமன் 

Post by வாகரைமைந்தன் Thu Jul 01, 2021 11:59 am

சி. எஸ். ஜெயராமன் (6 சனவரி 1917 - 29 சனவரி 1995) எனப் பொதுவாக அறியப்படும் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் ஒரு நடிகரும், இசையமைப்பாளரும், பிரபல திரைப்படப் பாடகரும் ஆவா
ஜெயராமன் கோயில் நகரமான சிதம்பரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன்.

 ஜெயராமன், கிருஷ்ண லீலா (1933) நடித்ததுடன் திரைவாழ்க்கை தொடங்கியது.
கிரிஷ்னபக்தி (1948) பாடி நடித்துள்ளார்.இசை : S.V. வெங்கட்ராமன் / ஜி.ராமநாதன் / குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் வரிகள் : உடுமலை நாராயண கவி



பராசக்தி (1952) பாரதி பாடலுக்கு ஆர்.சுதர்சனம் இசை அமைத்துள்ளார்.



ரத்தக்கண்ணீர் (1954) கு.ச.கிரிஷ்னமூர்த்தி வரிகளில் பாடிய பாடல்.இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி



யார் ஜம்புலிங்கம் (1972) டி.ஆர்.பாப்பா இசையில்


         
பாசவலை (1956) விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரிகளில்..



     தங்கப்பதுமை (  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரிகள் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி,குரல் பத்மினி.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1716
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty 3.சந்திரபாபு

Post by வாகரைமைந்தன் Fri Jul 02, 2021 11:13 am

சந்திரபாபு (J.P.Chandrababu -Joseph Panimayadas Chandrababu Rodriguez  -ஆகத்து 5, 1927 – மார்ச் 8, 1974) தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.
சந்திரபாபு தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர்.ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.

சந்திரபாபுவின் தந்தை ஒரு விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய பிரித்தானிய அரசு இவரது சொத்துக்களை பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார்.

சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார். சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்தனர். தந்தை தினமணி பத்திரிகையில் பணியாற்றினார்.

1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக முதல் பாடலை பாடி நடித்தார்.



நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் 1958 இல் சைலா என்ற பெண்ணை மணந்தார்.திருமணத்திற்கு காமராஜ் உட்பட பல பிரமுகர்கள் வாழ்த்தி சென்றனர்.அந்தப்  பெண் தான் வேறொருவரை விரும்புவதாகக் கூறியதால், அந்த பெண்ணின் விருப்பப்படியே அவர் விரும்பும் நபருடன் சந்தோசமாக வாழ, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு.

சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.
நீதி (1972) இசை  எம்.எஸ்.விஸ்வனாதன், உடன் பாடியவர்கள் டி.எம்.எஸ்.,பி.சுசீலா,கோவை சௌந்தரராஜன்,மனோரமா.



புதையல் (1957) இசை விஸ்வனாதன்+ராமமூர்த்தி,வரிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்



அன்னை (1962)  இசை ஆர்.சுதர்சனம்,வரிகள் கண்ணதாசன்+கொத்தமங்கலம் சுப்பு.



கவலை இல்லா மனிதன் (1960) இசை விஸ்வனாதன்+ராமமூர்த்தி,வரிகள் கண்ணதாசன்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1716
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty 4.பி.பானுமதி

Post by வாகரைமைந்தன் Fri Jul 02, 2021 11:22 am

பானுமதி- பி. பானுமதி (Paluvayi Bhanumathi Ramakrishna) பானுமதி இராமகிருஷ்ணா, 7 செப்டம்பர் 1925 – 24 டிசம்பர் 2005. பல மொழிகளில் நடித்த ஓர் இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.7 செம்படம்பர் 1925 அன்று ஆந்திராவில் உள்ள தோடவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் 

1943 ஆம் ஆண்டு கிருஷ்ண பிரேமா படப்பிடிப்புக்காக சென்னை வந்தவர், அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை சந்தித்து,பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்தார்.
முதல் பாடி நடித்தது சந்தண தேவன் (1939) படத்தில் ஜி.ராஜகோபால் இசையில்..



அதே படத்தில்,வரிகள் டி.பி.வேலாயுதசாமி



   அலிபாபாவும் நாற்பது திருடர்களும்( 1955) மதுரகாசி வரிகளில் ,சுசர்சா தட்சணாமூர்த்தி இசையில்..



1992 ஆம் ஆண்டு வெளிவந்த 'செம்பருத்தி', தமிழில் அவரது கடைசிப் படம் ,இளையராஜா இசையில் எஸ்.ஜானகி+மனொ இணைகிறார்கள்.


....………………………….
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1716
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty 5.கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் 

Post by வாகரைமைந்தன் Sat Jul 03, 2021 11:03 pm

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகத்து 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்து, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் 1957 ஆகத்து 30 அன்று தனது 49வது வயதில் காலமானார். கிருஷ்ணன்-மதுரம் தம்பதிகளுக்கு 18-2-1948 இரவு 10.50 மணிக்கு பெண்மகவு ஒன்று பிறந்தது. கலைச்செல்வி எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை 1948 மே 18 அன்று காலமானாது.குழந்தை இல்லாமல் போகவே மதுரம் தனது தங்கை பு அம்மாலை மூன்றாம் தாரமாக மணம் முடித்துக் கொடுத்தார்.இவர்களுக்கு 7 பிள்ளைகள்.

மனைவி டி. ஏ. மதுரம் 1974 இல் காலமானார்.டி. ஏ. மதுரம் (1918 -1974) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையும் பாடகியும் ஆவார். முதல் மனைவி நாகம்மாள் 1931 இல் திருமணம்,டி.ஏ.மதுரம் 1939 இல் திருமணம்.பம்மல் கே. சம்பந்தம் இவருக்கு கலைவாணர் என பட்டம் சூட்டினார்.

அப்போது புகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் இலட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும்.1935 இல் மேனகா படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ம. கோ. இராமச்சந்திரன் , என்ற எம்.ஜி.ஆர். உடைய முதல் படமாகும்.

சக்கரவர்த்தி திருமகள் (1957) இசை ஜி.ராமநாதன்



ராஜா ராணி (1956)   ஏ.மருதகாசி வரிகளில் டி.ஆர்.பாப்பா இசையில்...



முதல் தேதி (1955) டி.ஜி.லிங்கப்பா இசையில் உடுமலை நாராயண கவி வரிகளில்..



அம்பிகாபதி (1937) ஏ.மருதகாசி வரிகளில் ஜி.ராமனாதன் இசையில்..



கொடுத்துக் கொடுத்து கை சிவந்த என்.எஸ்.கிரிஷ்னன்...இவரைப் பின்பற்றியதாக எம்.ஜி.ஆர். தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1716
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty 6.தங்கவேலு

Post by வாகரைமைந்தன் Mon Jul 05, 2021 12:55 pm

காரைக்கால் அருணாசலம் தங்கவேலு( 15 சனவரி 1917  - 28 செப்டம்பர், 1994) கே. ஏ. தங்கவேலு என்ற  டணால் தங்கவேலு  1950 முதல் 1970 வரை தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகராவார்.வாழ்க்கைத் துணை - டி. ராஜாமணி, எம். சரோஜா

திரை வாழ்க்கை சதிலீலாவதி (1936)  என்ற படத்டில் சிறிய வேடத்துடன் ஆரம்பமானது.பெரிய மருது (1994) உடன் முடிவடைந்தது.

அமரகவி (1951) நகைச்சுவை



கல்யாணப்பரிசு (1959)



பூரி சுடச் சொல்லித்தரும் தங்கவேலு



மனஅழுத்தத்தைக் குறைக்க இந்த நகைச்சுவக் காட்சிகள்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1716
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty 7.ஏ.எம்.ராஜா

Post by வாகரைமைந்தன் Tue Jul 06, 2021 11:32 am

ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா (சூலை 1, 1929 - ஏப்ரல் 8, 1989) ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. மனைவி ஜிக்கி என்ற பி.ஜி.கிரிஷ்ணவேணி.,அவருடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார்.அவர்களுக்கு 4 பெண்களும் 2 பையன்களும் உள்ளனர்.

பன்மொழிப் படமான சம்சாரம் (1951) எமனி சங்கர சாஸ்திரி இசையில்...



குமாரி (1952) இசை கே.வி.மகாதேவன்,வரிகள் கு.சா.க்ரிஷ்ணமூர்த்தி


 
ஆடிப்பெருக்கு (1962) பாடல் கண்ணதாசன்,இசை ஏ.எம்.ராஜா,உடன் பாடியவர் பி.சுசீலா



ஆடிப்பெருக்கு படத்தில் கண்ணதாசன் +கவிக்னர் சுரதா வரிகளில் பி.சுசீலாவுடன்..



வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1716
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty 8.ஜிக்கி

Post by வாகரைமைந்தன் Tue Jul 06, 2021 11:37 am

ஜிக்கி (நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) ,பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி .ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர்.
1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ஞானசௌந்தரி (1948) எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில்,பி.ஏ.பெரியனாயகி உடன்.


                                                                     
குமாரி படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து முதல் பாடலை பாடினார்.



  எதிர்பாராதது (1954) சலபதி ராவ் இசையில்..

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1716
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty 9.ஏ.இ.மனோகரன் (சிலோன் மனோகர்)

Post by வாகரைமைந்தன் Wed Jul 07, 2021 11:46 am

சிலோன் மனோகர் என அழைக்கப்பட்ட ஏ. ஈ. மனோகரன் (இறப்பு: 22 சனவரி 2018) இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார்.இவர் சுராங்கனி மனோகர் எனவும் அழைக்கப்பட்டார். பலமொழிகளிப் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர்,இவரின் அன்றைய பாடல்கள் பைலா பாடல்கள் என இலங்கையிலும் இந்தியாவிலும் பெயர்பெற்றவை.இவரின் பாடல்களை வைத்து தமிழ் சினிமாவில் சில பாடல்கள் பாடப்பட்டன.

உதாரணமாக அவர் எனக்கே சொந்தம் (1977) படத்தில் இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன்+ரேணுகா பாடிய பாடல்...









வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1716
Join date : 23/05/2021

Back to top Go down

 அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9 Empty Re: அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum