TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35

4 posters

Go down

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 Empty கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35

Post by sakthy Sun Jun 15, 2014 5:29 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35

கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது?
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 2a5f8g0
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 35mk2mw
Cellular phone,Cell Phone,Mobile Phone, Smart Phone,PDA,கைத்தொலைபேசி இப்படி பல பெயர்கள் நமக்குத் தெரிந்தது தான் என்றாலும்,சிலருக்கு மட்டுமே எப்படி வேலை செய்கிறது என்ற தொழில் நுட்பம் தெரிந்திருக்கிறது என்று சொல்லலாம். பொதுவாக தொழில் நுட்பம் பற்றி சொல்வது என்றால், பல பக்கங்கள் தேவை என்பது மட்டுமல்ல  ,தொழில்நுட்பச் சொற்களை அப்படியே தமிழில் தருவதும் சுலபமல்ல..
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 33cup88
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 2eyuj5c

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 241maki

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 Zxm8hx

முதலில் இந்த தொழில் நுட்பத்திற்கு வித்திட்டதை சிறிது சொல்லி விடலாம். இந்த கம்பியில்லாத் தொலைதொடர்பு, 1918 இல் ஜேர்மன் பேர்லின் நகரில் இருந்து செல்லும் இராணுவ தொடரூந்துகளுக்கு இடையில் பரீட்சாத்தமாக ஆரம்பித்ததில் இருந்து ஆரம்பமானது. 1924 இல் பேர்லின்-ஹம்புர்க் பொது இரயில் பாதைகளுக்கு இடையில் விரிவு பெற்று, Zugtelephonie A. G. நிறுவனமாக மாறி,1925 இல் தொடர்பு சாதனங்களை உருவாக்கி,1926 இல் தொடரூந்துகளுக்கு இடையிலான சேவையையும், முதலாம் வகுப்பு பயணிகளுக்கான சேவையையும் ஆரம்பித்ததில் இருந்து  தொடங்கியது எனச் சொல்லலாம்.

அதைத் தொடர்ந்து 1940 இல்  Motorola நிறுவனம் இருவழி வானொலி தொடர்பை  Walkie-Talkie மூலம் தொடக்கியது. இதன் தொடர்ச்சி, ஏபரல் 3, 1973 இல் Motorola பணியாளர்  Dr. Martin Cooper ,தனக்குத் தானே ஒரு தொடர்பை ஏற்படுத்தி, இன்றைய மொபைல் தொழில் நுட்பத்தை உருவாக்கினார்.முதல் மொபைல் அழைப்பை பெற்ற பெருமை, AT&T's Bell Labs இன் தலைமை ஆய்வாளரும், Dr. Cooper இன் போட்டியாளருமான Joel Angel ற்குக் கிடைத்தது.மார்டின் கூப்பரையே செல்போனின் தந்தை-father of the cell phone -என்று அழைக்கிறார்கள்.
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 5mwqdi
ஆனாலும் இன்றைய cellular என்ற hexagonal cells அமைப்பை 1947 இல்  Bell Labs ஐச் சேர்ந்த Douglas Ring மற்றும் W. Rae Young என்பவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.

அவர்களின் முடிவின்படி, cell towers இந்த hexagonal cells மத்தியில் அமைக்கப்படாது ஒரு மூலையில் அமைக்கப்படல் வேண்டும் என்றும்,கூடவே directional antennas களும் அமைக்கப்படல் வேண்டும் என முறைப்படுத்தினார்கள்.இதைத் தொடர்ந்து,1971 இல் ARP network, Finland, என்ற வர்த்தக ரீதியிலான மொபைல் நெட்வேர்க் உருவானது.
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 2naplxd
Ericsson, 1956 இல் சுவீடன் நாட்டில் MTA எனப்பட்ட,தானியங்கி மொபைல் ஆக உருவாக்கப்பட்டது.இதன் நிறை 40 kg. ஆகும்.1965 இல் DTMF முறையிலான தொழில் நுட்பத்தில்,நிறை குறைந்த கைத்தொலைபேசியும்,1970 இல் Amos E. Joel, Jr,  Bell Labs engineer கள் வெவ்வேறு செல்களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தினார்கள்.

இந்த  Cellular தொழில் நுட்பம் ( Cellular technology) தலைமுறையாக (generation) அறிமுகப்படுத்தப்பட்டது.முதலாவது தலைமுறை 1979 இல் அனலோக் பிணைய ( analog networks) முறையில் ஜப்பானிலும்,இரண்டாவது தலைமுறை 1991 இல் டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் (GSM and CDMA) பின்லாந்திலும்,மூன்றாவது தலைமுறை 2001 இல் ஜப்பானில் அதிவேக தரவு,ஒலி பரிமாற்றத்தில்( high-speed data and voice services) ஜப்பானிலும் உருவானது.இவை 1G,2G,3G எனச் சொல்லப்பட்டு,3G ஐ மேலும் வலிமை அடைய செய்ய  mobile Internet access, mobile TV, video conferencing and IP telephony போன்றவற்றை அதி வேகத்துடன் தொழில்பட செய்ய உருவாக்கப்பட்டது.

முதலாம்,இரண்டாம் தலைமுறை தொழில் நுட்பத்தை மேம்படுத்தி(analog cellular technology generation + digital/PCS) உருவானது தான் 3G ஆகும். சிறந்த bandwidth,இணைய தொடர்பு, ஆடியோ-வீடியோ இவைகளுடன் கூடிய smartphone களும் உருவானது.இந்த 3G, 14 Mbps ற்கு மேற்பட்ட தரவுப் பரிமாற்றத்திற்கும்,அதைத் தொடர்ந்த 4G, IP அடிப்படையிலான தொழில் நுட்பத்தில் 1Gbps ற்கு அதிகமான தரவுப் பரிமாற்றத்திற்கும் ஏற்படையதாயிற்று.தொடர்வது 5G இன்னும் பல அரிய தொழில்நுட்பங்களுடன் கூடியதாகும்.

மொபைல் ஒலி அலைகள், வானொலி அலைகளாக மாற்றப்பட்டு, tower களில் உள்ள microwave antennas கள் மூலம் பரிமாறப்படுகிறது.இவை குறைந்த அளவு தொடர்புகள் (low powered radio transmitters) மூலம் மொபைல் போன்கள், சுவிச்சுகளுக்கு இடையே(mobile phones + switch) தகவல் பரிமாற்றம் செய்கிறது.இந்த சுவிச், ஒரு மொபைலின் தொடர்பை ஒரே வழங்குனருக்கு (service provider ) உட்பட்ட மற்றொரு மொபைலின் தொடர்பாளருடன் இணைக்கிறது.இந்த முறை கணினி முறையில் பல சுவிச்சுகளுடன் பல்வேறு வழ்ங்குனர்களுடன் இணைக்கப்படுகிறது. ஒரு மொபைல் திறக்கும் போது (turned on),சுவிச்( switches )அந்த தொலைபேசிக்கு வரும் தொடர்புகளை மற்ற தொடர்புகளைப் பாதிக்காத வண்ணம் வேறு பிணையங்களுடன்( networks ) இணைக்கிறது.இதை handoff என்கிறார்கள்.
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 2r7o5ea
Cellphones - cellular phones - mobile phones -நகர்பேசி-செல்பேசி-,இப்படிப் பலவிதமாக சொல்லப்படும் கைத்தொலைபேசியும்,சாதாரண தொலைபேசியும்(land lines and cellphones)  வேலை செய்வதில் வேறுபடுகிறது. வழமையாக தொலைபேசியில் பேசும் ஒலி மின்காந்த அலையாக கம்பிகளின் ஊடாக கொண்டு செல்கிறது. ஆனால் கைத்தொலைபேசி ஒலி அலைகளை, மின்காந்த வானொலி அலைகளாக ( electromagnetic radio waves ) கொண்டு செல்கிறது. இந்த அலைகள் ஒரு விநாடிக்கு 300,000 கிமீ. எனப் பயணிக்கிறது.
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 2qjdnad
நாம் பேசும் போதும்,கேட்கும் போதும்,பரிமாறப்படும் ஒலி மின்காந்த குறியீட்டு(electrical signals ) அலையாக மாற்றப்படுகிறது. பின் அவை கைத்தொலைபேசியினுள் இருக்கும் சிறிய சிப்ஸ்( microchip )மூலம் எண்சரங்களாக (strings of numbers )மாற்றப்படுகிறது. இந்த இலக்க தொகுதிகள் வானொலி அலைகளாக(radio waves) தொலைபேசியின் ஆண்டெனா மூலம் (antenna )பரப்பப்படுகிறது.இவை அதி வேகத்துடன்(ஒரு விநாடிக்கு 300,000 கிமீ. ) அருகில் உள்ள  cellphone mast எனப்படும் தரை டவரை அடைகிறது.
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 2yw8odc
இந்தcellphone mast கிடைத்த அலைகளை, உயர்ந்த டவரில் உள்ள ஆன்டெனாக்கள் வாங்கி, base station ற்கு கொடுக்கிறது.இதன் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த cellphone network ,cell எனப்படுகிறது.இரண்டு அலைபேசிகளும் ஒரே நெட்வேர்க்கில் இருந்தால் வரும் அழைப்பை மற்ற அலைபேசிக்கு cellphone mast-Tower-மூலம் அனுப்பும். கைத்தொலைபேசிகள், வானொலி அலைகளை (radio signals),  அழைப்பை அனுப்பும்(radio transmitter) பெற்றுக் கொள்ளும் (radio receiver ) வேலையைச் செய்கிறது.

இவை குறைந்த மின்னில் வேலை செய்வதால் அதிக தூரத்திற்கு அனுப்பும் திறனைக் கொண்டிருக்காது. அதனால் தான் உள்ளக local mast - base station  ( base station + cell tower)  கைத்தொலைபேசியில் இருந்து வரும் சக்தி குறைந்த அலைகளைக் கையாண்டு, மற்ற local mast -base station  ற்கு அனுப்புகிறது. இவை மிக உயரத்தில் வைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் அன்டெனாக்கள் மூலம் சாத்தியமாகிறது.
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 2mdezwh
இந்த நிலையில், ஏன் வானொலி அலைகள் மூலம் இரண்டு கைத்தொலை பேசிகளுக்கிடையில் Walkie-Talkie போல் பேச முடியாதா என்ற கேள்வி வரலாம். அப்படிப் பேசும் போது, ஒரே இடத்தில் பல தொலைபேசிகளில் பேச முற்படும் போது, குறுக்கீடுகள் வர வாய்ப்புகள் அதிகம் என்பதே காரணமாகும்.அத்துடன் ஒவ்வொருவரும் வெவ்வேறான அலைகளை (frequency ,wavebands)  வானொலி நிலையம் போல் பாவிக்க வேண்டி வரும்.ஒரு சிறிய இடமாக ஒரு சில தொலைபேசிகள் இருப்பின் இது சாத்தியமாகலாம். பெரிய நகரொன்றில் பல ஆயிரம் தொலைபேசிகள் ஒரே சமயத்தில் அழைப்புகளை மேற்கொண்டால்................?

பல இலட்சக் கணக்கான வேறுபட்ட அலைகளை (separate frequencies ) உருவாக்கி செயல்படுவதில் ஏற்படும் சிரமங்களை இல்லாமல் செய்ய, நகரங்கள் சிறு சிறு செல்களாகப் (Cells) பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் தனக்கென masts +base station ஐக் கொண்டிருக்கும்.இவை கண்களால்  பார்க்க முடியாத hexagons தொடர்களாக இருக்கும்.
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 Jinho2
சாதாரண இரண்டு கைத்தொலைபேசிகளுக்கு இடையே பேசும் போது, A என்பவர் B என்பவருக்கு நேரடித் தொடர்பாக பேச முடியாது. A இன் அழைப்பு அவர் இருக்கும் mast +base station ற்குச் சென்று,அங்கிருந்து B என்பவரின் mast + base station  க்கும் பின் அவரின் தொலைபேசிக்கும் செல்கிறது.(படத்தைப் பார்க்கவும்)
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 21mdonr
காரில் அல்லது வேறு வகையில் அசைந்து கொண்டிருக்கும் ஒருவரின் அழைப்பு, Roaming call ,அலைகள் தொடர்ந்து அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அவற்றை எந்த அன்டெனாக்கள் (mast +base station ) கிட்டே இருக்கிறதோ அவை பெற்றுக் கொண்டு, தொடர்ந்து பரிமாற்றம் செய்து கொண்டிருக்கும்.எந்த டவர் கிட்டே இருக்கிறது என்பதை cellphone network-MTSO- கண்டறியும் வசதியைக் கொண்டிருக்கும்.

நாம் அலைபேசியை on செய்ததும், control channel  இன் SID ஐ அலைபேசி சரிபார்க்கும்.இந்த control channel என்பது அலைபேசிக்கும் BS ற்கும் இடையிலான தனியான அலைவரிசையாகும். control channel இல் இருந்து வரும் SID (15 bit,System Identification Code-SID) சரியாக இருக்கும் போது,அலைபேசி registration request  ஒன்றை,  MTSO விற்கு அனுப்பும்.MTSO ற்கு இந்த request வந்ததும்,அந்த அலைபேசி எந்த செல்லில் இருக்கிறது என்பதைக் கண்டறிவதுடன்,தெரிவுசெய்யப்பட்ட இலக்கத்தின் அருகில் உள்ள டவரையும் கண்டறிந்து ஏற்ற அலைவரிசையை ஏற்படுத்தி இணைப்பைக் கொடுக்கும்.
 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 4rewbt
தொடர்ந்து பேசப்படும் அனலொக் சிக்னல்கள், டிஜிட்டல் சிக்னல்களாக-மைக்ரோவேவ் சிக்லனல்களாக, அடுத்த டவர்-Bace satation ற்கு செல்கிறது.திரும்பும் போதும் அப்படியே மைக்ரோவேவ்-டிஜிட்டல்-அனலொக் ஆக மாறி செல்பேசியில் நம்மால் கேட்க முடிகிறது.  விமானத்தில் இருந்து அழைப்பு மேற்கொள்ளும் போது அவை சாட்டிலையிட் மூலம் இணைக்கப்படுகிறது.


Last edited by sakthy on Thu Jun 19, 2014 11:59 pm; edited 2 times in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 Empty Re: கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35

Post by KAPILS Sun Jun 15, 2014 10:03 pm

அருமையான தகவல் நன்றி
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 Empty Re: கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35

Post by sakthy Fri Jun 20, 2014 5:39 pm

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 2e3rd45

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 Empty Re: கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35

Post by அருள் Fri Jun 20, 2014 6:46 pm

இத்தனை நாள் செல்போன் பயன் படுத்தி உள்ளேன் ...அது எப்படி வேலை செய்கிறது என்று இந்து தான் அறிந்து கொண்டேன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 Empty Re: கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35

Post by அருள் Fri Jun 27, 2014 8:10 am

KAPILS wrote:அருமையான தகவல் நன்றி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 Empty Re: கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35

Post by krishnaamma Tue Jul 01, 2014 7:11 am

அருள் wrote:இத்தனை நாள் செல்போன் பயன் படுத்தி உள்ளேன் ...அது எப்படி வேலை செய்கிறது என்று இந்து தான் அறிந்து கொண்டேன்
அருமை சக்தி அய்யா ..உங்களின் பதிவுகள் அனைத்தும் பயன்தரும் பதிவுகள் தொடரட்டும் ..காத்து கொண்டு உள்ளோம்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

 கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35 Empty Re: கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூழ்கடிக்கப்பட (Unsinkable) முடியாத டைட்டானிக் (Titanic ) எப்படி மூழ்கியது? முழுக் கதை. ---தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 11
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-27
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-28
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum