TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்குமா?

Go down

உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்குமா? Empty உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்குமா?

Post by ஜனனி Fri Feb 12, 2010 6:52 am

சீனாவில் உருவாகிய மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் தற்போது புதிதாக கொழும்பில்
உருவாகி வருகின்றது. உலக விவகாரங்களில் சீனா கடுமையான அழுத்தங்களை
ஏற்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. உலகம் தனது தூக்கத்தை கலைத்து
சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை தற்போதாவது பார்க்க வேண்டும் என
பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த டெய்லி ரெலிகிராஃப் (09.02.2010)
நாளேட்டில்

எழுதிய பத்தியில் பீற்றர் போஸ்ரர் (Peter Foster) தெரிவித்துள்ளார்.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததன் மூலம் ஜனநாயக
வழிகளில் தெரிவுசெய்யப்பட்ட சிறீலங்கா அரசு மீண்டும் ஒருமுறை
எதிர்க்கட்சிகள் மீதான தனது வெறுப்பை காட்டியுள்ளது. நடைபெற்று முடிந்த
அரச தலைவர் தேர்தலில் பொன்சேகா மகிந்தாவை எதிர்த்து போட்டியிட்டிருந்தார்.

பொன்சேகா எப்படியான ஒரு வன்முறையான வழியில் கைது செய்யப்பட்டு இனம்தெரியாத
இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என எனது நண்பர் டீன் நெல்சன் விரிவாக
தெரிவித்திருந்தார். இராணுவத்தினர் அவரை கைது செய்து இழுத்துச்
சென்றிருந்தனர்.

சிறீலங்காவில் முன்னேற்றமடைந்துவரும் அருவருப்பான செயற்பாடுகளின் பிந்திய
தொடர்கதை இது. கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக நடைபெற்றுவரும்
நிகழ்வுகள் மூலம் சிறீலங்கா சர்வாதிகார நாட்டின் நிலையை அண்மித்துள்ளது.
இது இனவாத சிந்தனையுள்ள மகிந்தாவின் காலத்தில் நிகழ்ந்துள்ளது.

தனக்கு எதிரானவர்களை ஏற்றுக்கொள்ளாத தன்மை சிறீலங்கா அரசிடம் அதிகரித்து
செல்கின்றது. உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு
சிறீலங்காவாகும். அதனை ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம்
உறுதிப்படுத்தியுள்ளது. “எனது மரணத்தின் பின்னர்” என எழுதிவைத்துவிட்டு
சென்ற லசந்தா விக்கிரமதுங்கா படுகொலை செய்யப்பட்டார். நான் அதனை
அனுப்பியுள்ளேன், நீங்கள் முன்னர் படிக்காது விட்டால் அதனை உடனடியாக
படிக்குமாறு கேட்டுக்கொண்டார் எனது நண்பர்.

இதில் ஏதாவது சீனாவின் நடவடிக்கையுடன் பொருந்திப்;போகின்றதா? ஆம்,
அதிகமானவை உண்மையானது, சீனாவில் உருவாகிய மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்
தற்போது புதிதாக கொழும்பில் உருவாகி வருகின்றது. உலகின் விவகாரங்களில்
சீனா கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்துள்ளதற்கு இது ஒரு
முக்கிய உதாரணம்.

உலக விவகாரங்களில் சிறீலங்கா சின்னதாக இருக்கலாம், ஆனால் தென்ஆசிய
பிராந்தியத்தின் ஜனநாயகம் என்பது சிறீலங்காவை போல ஊழல்கள் மிக்கதாக,
சர்வாதிகார போக்கு கொண்டதாக சீனாவின் ஆதரவுடன் மாற்றம் பெற்று வருகின்றது.
அது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று.

சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடுவதில் இருந்து சீனா பல
தசாப்தங்களாக விலகியே இருந்தது. இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ள அது
விரும்பவில்லை. ஆனால் இந்த அணுகுமுறை 2007 ஆம் ஆண்டு சிறீலங்கா அரச தலைவர்
மகிந்தா ராஜபக்சா சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்துடன் மாற்றமடைந்துள்ளது.

அதன் பின்னர் சீனா கடன் உதவிகளையும், படைத்துறை உதவிகளையும்
சிறீலங்காவுக்கு அதிகளவில் வழங்கி வருகின்றது. இரு நாடுகளும் இணைந்து
பிரிவினைவாதங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக போராடப்போவதாக
கூட்டாக அறிவித்தல்களை விடுத்திருந்தன.

அதனை விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம்
மகிந்தா உறுதிப்படுத்தியிருந்தார். சீனாவின் அரச நிறுவனமான சீனா துறைமுக
பொறியியல் நிறுவனம் தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் துறைமுகம்
ஒன்றை விரைவாக நிர்மாணித்து வருகின்றது. அங்கு அது புதிய விமான நிலையம்
ஒன்றையும் அமைத்து வருவதுடன், அங்கிருந்து கொழும்புக்கு விரைவு
நெடுஞ்சாலையையும் அமைத்து வருகின்றது.

இதேபோன்ற நடவடிக்கைகளை சீனா ஆபிரிக்க நாடுகளிலும் மேற்கொண்டு வருகின்றது.
சீனா அரசின் பெருமளவான நிதி நேரடியற்ற முறையில் ஆளும் கட்சியை
பலப்படுத்துவதில் செலவிடப்படுகின்றன (அதற்கு சீனா சபாரி என்ற பத்திரிகை
ஒரு உதாரணம்). எனவே அம்பாந்தோட்டை பிரதேசம் மகிந்தாவின் பலத்திற்கான
பிரச்சாரம் என்பதில் எந்த ஆச்சரியங்களும் இல்லை.

சிறீலங்கா பின்னோக்கி செல்வதை ஐரோப்பாவும், அமெரிக்காவும் எதிர்த்து
வருகின்றன. ஆனால் அவர்களால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் சிறீலங்காவுக்கு
சீனா வழங்கும் பணத்துடன் ஒப்பிடும் போது புறக்கணிக்கத்தக்கது.

அண்மையில் முடிவுக்கு வந்த போரில் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் மீதான
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளையும் சீனாவும், ரஸ்யாவும் தடுத்துள்ளன.
சிறீலங்காவின் புதிய நண்பன் ரஸ்யா, அது தற்போது சிறீலங்காவுக்கு 300
மில்லியன் டொலர்களை ஆயுதங்களை கௌ;வனவு செய்வதற்கான கடனாக வழங்கியுள்ளது.
சீனாவின் முக்கிய நட்பு நாடான ஈரானும் சிறீலங்காவுக்கு அதிகளவான
கடன்களையும், மலிவாக எண்ணையையும் வழங்கி வருகின்றது.

பிரித்தானியா தனது எதிர்ப்புக்களை தெரிவித்து, உதவிகளை நிறுத்தியுள்ளது.
ஆனால் அதன் அளவு மிகவும் குறைவானது. எனவே அதனை கொழும்பு இலகுவாக
புறக்கணித்துள்ளது. அமெரிக்கா தொடர்ச்சியாக தனது கவலைகளை தெரிவித்து
வருகின்றது. ஆனால் அடிப்படையில் அது முக்கியமான நடவடிக்கைகள் எதனையும்
மேற்கொள்ளவில்லை.

இறுதியாக சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவதாக
ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை (5) அறிவித்துள்ளது. சிறீலங்காவில்
மோசமடைந்துள்ள மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த
நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆனால் சீனா வழங்கும் நிதி உதவிகள் அதனை
ஈடுசெய்துவிடும்.

சிறீலங்காவின் சமூக உறுதித்தன்மை பேணப்படவேண்டும் என சீனா விரும்புவதாக
சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் மா சாஒசூ கடந்த மாதம் சிறீலங்கா
தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்திருந்தார்.

சீனாவை பொறுத்தவரையில் அரசுக்கு எதிரானவர்களை வெள்ளை வான்களில் கடத்தி
செல்வதுண்டு. அதுவே கடந்த சில வருடங்களாக மகிகிந்தாவின் விருப்பமான
தொழிலாகவும் உள்ளது.

எனினும் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இறுதியான கடத்தலுடனாவது உலகம் தனது
தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்க
வேண்டும். ஆனால் அது நடைபெறுமா என்பது கூட சந்தேகமாகவே உள்ளது என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» என்ன உலகம் இது???
» காமத்தை அடக்கும் வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
» ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள லண்டன் சென்ற இலங்கை குழு அங்கு சாதித்தவைகள் என்ன என்பதை படத்தில் காணலாம்..........PHOTO
» உலகம் வெப்பமாதலும்,மாசுபடுதலும்....Global warming and Pollution.........என்ன?
» உலகம் டிசம்பர் 21 ல் அழிகிறது.இது பற்றி நாசா என்ன சொல்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum