TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில் 334 ரன்களை "சேசிங்" செய்து இந்திய அணி அபார வெற்றி

Go down

இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில் 334 ரன்களை "சேசிங்" செய்து இந்திய அணி அபார வெற்றி Empty இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில் 334 ரன்களை "சேசிங்" செய்து இந்திய அணி அபார வெற்றி

Post by அருள் Sun Jun 02, 2013 7:48 am

இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில் 334 ரன்களை "சேசிங்" செய்து இந்திய அணி அபார வெற்றி Won_01இலங்கைக்கு
எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் 334 ரன்கள் இலக்கை இந்திய அணி அபார வெற்றி
பெற்றது.கோலி, தினேஷ் கார்த்திக் சதம் அடித்து அசத்தினர். "மினி உலக
கோப்பை" என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற
6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. டாப்-8
அணிகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில்
பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ்
கோப்பைக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடுகிறது.
இதில் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை பர்மிங்காம் நகரில்
நேற்று சந்தித்தது. பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை இரண்டு அணியும் தலா 15
வீரர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது களத்தில் 11 பேர் நின்றாலும்,
அவர்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். பேட்டிங்கின் போது, பீல்டிங்குக்கு
வராத வீரர்களையும் களம் இறக்க முடியும்.

டாஸ் ஜெயித்த இந்திய
கேப்டன் டோனி முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். 22 வயதான குசால்
பெரேராவும், 36 வயதான தில்ஷனும் இலங்கை அணியின் இன்னிங்சை தொடங்கினர். இந்த
ஜோடி இலங்கை அணிக்கு வலுவான அஸ்திரவாரம் அமைத்து கொடுத்தது.

இர்பான்
பதானின் ஒரே ஓவரில் தில்ஷன் 3 பவுண்டரிகள் விளாச, இஷாந்த் ஷர்மாவின் பந்து
வீச்சில் குசால் பெரேரா 2 சிக்சர்களை பறக்க விட்டார். இப்படி தொடக்கத்தில்
இருந்தே பந்தை நாலாபுறமும் ஓட விட்டு அதிரடி காட்டிய இந்த ஜோடியை பிரிக்க
இந்திய கேப்டன் டோனி 7 பவுலர்களை பயன்படுத்தியும் ஒன்றும் செய்ய
முடியவில்லை.

தில்ஷன் 68 ரன்களில் இருந்த போது, அஸ்வின் பந்து
வீச்சில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது பந்து ஏமாற்றியது. ஆனால்
விக்கெட் கீப்பர் டோனி மிக எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்டார்.
இறுதியில் இவர்கள் இருவரும் பின்வரிசை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்
வகையில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினர்.

26 ஓவர்களில் 160
ரன்களை எட்டிய போது, குசால் பெரேரா 82 ரன்னிலும் (94 பந்து, 7 பவுண்டரி, 3
சிக்சர்), தில்ஷன் 84 ரன்னிலும் (78 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்)
வெளியேறினர்.

அணியின் ரன்ரேட் விகிதம் 6 ரன்களுக்கு குறையாமல்
சென்று கொண்டிருந்தது. அடுத்து வந்த பேட்ஸ் மேன்களும் அதை சரியாமல்
பார்த்துக் கொண்டனர். முன்னாள் கேப்டன்கள் மஹேலா ஜெயவர்த்தனே 30 ரன்களும்,
சங்கக்கரா 45 ரன்களும் (32 பந்து, 7 பவுண்டரி), துணை கேப்டன் சன்டிமால் 46
ரன்களும் (48 பந்து) விளாசினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள்
முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. இந்திய
தரப்பில் புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு
விக்கெட் எடுத்தனர்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு
சாதகமானவை என்றாலும், நமது வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி
வழங்கினார்களே தவிர, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பின்னர்
334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு
தொடக்கம் மோசமாக இருந்தது. ஷிகர் தவான் ஒரு ரன்னில் ரன்-அவுட் ஆனார்.
முரளிவிஜய் (18 ரன்), ரோகித் ஷர்மா (5 ரன்), சுரேஷ் ரெய்னா (34 ரன், 31
பந்து, 4 பவுண்டரி) ஆகியோரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

110
ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (20.3 ஓவர்) இழந்ததால் இந்திய அணியை குறைந்த
ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என்று இலங்கை வீரர்கள் கணக்கு போட்டனர்.
ஆனால் 5-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விராட் கோலியும், தினேஷ்
கார்த்திக்கும் நிலைமையை தலைகீழாக மாற்றினர். அவசரமின்றி ஏதுவான பந்துளை
மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்த இந்த ஜோடி ஸ்கோரை படிப்படியாக
உயர்த்தியது.

அணிக்கு நம்பிக்கையூட்டிய இந்த கூட்டணியை உடைக்க 9
பந்து வீச்சாளர்களை இலங்கை பயன்படுத்தி பார்த்தும் அவ்வளவு சீக்கிரத்தில்
அசைக்க முடியவில்லை. கலக்கலாக ஆடிய விராட் கோலி சதம் அடித்தார். சதத்திற்கு
பிறகு மேலும் துரிதம் காட்டிய அவர் 144 ரன்களில் (120 பந்து, 11 பவுண்டரி,
3 சிக்சர்) கேட்ச் ஆனார். கோலி-தினேஷ் கார்த்திக் ஜோடி 5-வது
விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேகரித்தது.

இதைத் தொடர்ந்து கேப்டன்
டோனி களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தினேஷ்
கார்த்திக்கும் சதத்தை தொட்டார். அத்துடன் வெற்றிக்கான ரன்னை அவர் பவுண்டரி
அடித்து கொண்டு வந்தார். முடிவில் இந்திய அணி 49 ஓவர்களில் 5
விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார
வெற்றி பெற்றது.

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 106
ரன்களுடனும் (81 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 18 ரன்களுடனும் (17
பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். தினேஷ் கார்த்திக்குக்கு நேற்று
28-வது பிறந்த நாளாகும். பிறந்த நாளில் செஞ்சுரி கண்டதால், இரட்டிப்பு
மகிழ்ச்சியில் திளைத்தார்.

இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வருகிற 4-ந்தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - இந்திய வீரர் பின்னி சாதனை ...
» இந்திய அணி இமாலய வெற்றி : தினேஷ் கார்த்திக் அபார சதம்: 65 ரன்னுக்கு சுருண்டது ஆஸி.,
» டர்பன் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி: டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு; தீர்மானம் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum