TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

4 posters

Go down

இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி Empty இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Post by ஜனனி Mon May 31, 2010 7:25 am


இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 30spt



பந்தை பவுண்டரிக்கு விளாசுகிறார் விராட் கோலி. பந்தை சிக்ஸருக்கு விளாசும் ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா.


புலவாயோ
(ஜிம்பாப்வே), மே 30: ரோஹித் சர்மா, விராட் கோலியின் அபார ஆட்டத்தால்
இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. முதலில்
ஆடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர்
ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து
வெற்றி பெற்றது.இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார்
காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடது கை சுழற்பந்து
வீச்சாளர் பிரக்யான் ஓஜா சேர்க்கப்பட்டார்.டாஸ் வென்ற இந்திய
அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து இலங்கை அணியின் கேப்டன் தில்ஷனும், உபுல் தரங்காவும்
ஆட்டத்தைத் துவக்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கிய உபுல்
தரங்கா, 1 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து
தில்ஷனுடன் சமரவீரா ஜோடி சேர்ந்தார். தில்ஷன் கேப்டன் பொறுப்பை உணர்ந்து
நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சமரவீரா 19 ரன்களில்
இருந்தபோது தினேஷ் கார்த்திக்கால் ஸ்டம்ப்டு முறையில் அவுட்
செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து துணை கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ்,
தில்ஷனுடன் இணைந்தார். அணியின் ஸ்கோர் 97 ரன்களை எட்டியபோது சிறப்பாக
விளையாடிக் கொண்டிருந்த தில்ஷன் எதிர்பாராதவிதமாக ரன்அவுட் ஆனார். அவர் 84
பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். இதையடுத்து
மேத்யூஸýடன், கபுகேதரா ஜோடி சேர்ந்தார். கபுகேதரா மிகவும்
நிதானமாக விளையாட, மறுமுனையில் இருந்த மேத்யூஸ் ஓரளவு சிறப்பாக விளையாடி
ஸ்கோரை உயர்த்தினார். 48 பந்துகளைச் சந்தித்த கபுகேதரா, 20 ரன்களில்
ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த சில்வா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பெரேரா மேத்யூஸýடன் ஜோடி சேர்ந்தார். பெரேரா அதிரடியாக
விளையாடியதால் மந்தமாக இருந்த இலங்கை அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.
அவர் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து
ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 226 ரன்களை எட்டியபோது சிறப்பாக
விளையாடிக்கொண்டிருந்த மேத்யூஸ், யாதவ் பந்தில் கிளீன் போல்டு ஆனார்.
இறுதியில் 49.5 ஓவர்களில் இலங்கை அணி 242 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இந்திய வீரர்கள் திண்டா, ஜடேஜா, ஓஜா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.243
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தமிழக
வீரர்கள் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் ஆட்டத்தைத் துவக்கினர்.
கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடாத இந்த ஜோடி நிதானமாக விளையாடியது.
இருப்பினும் விஜய் 14 ரன்களுக்கும், கார்த்திக் 18 ரன்களுக்கும்
ஆட்டமிழந்து வெளியேறினர்.இதைத்தொடர்ந்து விராட் கோலியும், ரோஹித்
சர்மாவும் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் ரன்அவுட் ஆன கோலி, இந்த
ஆட்டத்தில் மிகவும் கவனமாக விளையாடினார். இந்த ஜோடி விக்கெட்டுகள் விழாமல்
பார்த்துக்கொண்டதோடு, பந்துகளையும் வீணடிக்காமல் அருமையாக விளையாடியது.
இருவரும் அடுத்தடுத்து அரை சதமடித்தனர்.37.4-வது ஓவரில் அணியின்
ஸ்கோர் 201 ரன்களை எட்டியபோது,82 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்த கோலி,
ரனதேவ் பந்தில், பெர்ணான்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 92
பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். இதையடுத்து
கேப்டன் ரெய்னா களமிறங்கினார். 43-வது ஓவரின் கடைசிப் பந்தில் பவுண்டரி
அடித்து, ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை ரோஹித் சர்மா நிறைவு
செய்தார். கடந்த ஆட்டத்திலும் ரெய்னா சதமடித்தது குறிப்பிடத்தக்கது.இறுதியில்
43.3 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி
பெற்றது. ரோஹித் சர்மா 100 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 101
ரன்களுடனும், ரெய்னா 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக
விளையாடி சதமடித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.சுருக்கமான ஸ்கோர்: இலங்கை- 242 (மேத்யூஸ் 75, ஓஜா 2வி/44), இந்தியா- 243/3 (ரோஹித் 101*, விராட் கோலி 82).ஜிம்பாப்வே
அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் தோற்றதால் விமர்சனங்களுக்குள்ளான இந்திய
அணி, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம் அதிலிருந்து
மீண்டுள்ளது. ரெய்னா தலைமையிலான இந்திய அணியின் வெற்றி தொடருமா? என்பதே
கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி Empty Re: இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Post by kalairaja Mon May 31, 2010 11:30 am

வெற்றி பெற வாழ்த்துக்கள்.
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி Empty Re: இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Post by tamilparks Mon May 31, 2010 12:15 pm

kalairaja வெற்றியே பெற்றுவிட்டாங்க
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி Empty Re: இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Post by மாலதி Mon May 31, 2010 3:47 pm

இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 917304
tamilparks wrote:kalairaja வெற்றியே பெற்றுவிட்டாங்க
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி Empty Re: இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்:இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» விராத் கோஹ்லி அபாரம் : இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» யுவராஜ் அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது அவுஸ்திரேலியா
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு; தீர்மானம் வெற்றி
» வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - இந்திய வீரர் பின்னி சாதனை ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum