TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சர்க்கரை நோய் Diabetes -1

3 posters

Go down

சர்க்கரை நோய் Diabetes -1 Empty சர்க்கரை நோய் Diabetes -1

Post by sakthy Sat Oct 15, 2011 1:13 pm

சமூகத்தின் கறைகள் 25 நீரிழிவு -சர்க்கரைவியாதி -Diabetes

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

உணவில் உள்ள காபோகைட்ரேட்(carbohydrate )கல்லீரலினால்(Liver) குளுக்கோசாக மாற்றமடைந்து,உடலில் உள்ள ஏன்சிமினின்(Enzymes) துணையினால் உடலெங்கும் கொண்டு செல்லப்படுகிறதென்றும், அது உடலில் உள்ள கலம்(cells) க்கு சென்றதும் சக்தியாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் முன்னைய கட்டுரை ஒன்றில் தெரிவித்திருந்தேன்.இந்த குளுக்கோசை பன்கிறியாசினால்(pancreas-கணையம்) சுரக்கப்படும் இன்சுலின் சமநிலையில் வைத்திருக்கிறது. இன்சுலின் குறைவடையும் போது இரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸ்(blood sugar) செல்ஸ் களினால் சக்தியாக(energy) மாற்றமடைய முடியாமற் போய் இரத்தத்திலேயே இருந்து விடும் போது சர்க்கரைநோய் என்ற நீரிழிவு நோய் வருகிறது.
சர்க்கரைநோய் என்ற டயபிட்டிஸ் பிரிவு 1 என்றும் பிரிவு 2(Type1,Type2) என்றும் இரு வகை உண்டு.குழந்தைகளுக்கும் இளவயதினருக்கும் பிரிவு 1 உம், பெரியவர்களுக்கு,அதாவது அநேகமாக 40வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பிரிவு 2 (diabetes mellitus) என்றும் அனைத்து வயதினருக்கும் இன்று சர்க்கரைநோய் எனும் நீரழிவு நோய் வருகிறது.
பங்கிறியாஸ் ல் உள்ள செல்ஸ்(Cells) பழுதடைந்து முற்றாக இன்சுலினை(Insulin dependant diabetis) சுரக்காமல் விடும் போது, வரும் பிரிவு-1,Type-1 (juvenileeஎன்றும் அழைப்பர்) இருப்பவர்களுக்கு களைப்பு,தாகம்,எடைக்குறைவு,பசி,குறைந்த இடைவெளியில் அதிக சிறுநீர் வெளியேற்றம் ஏற்படுகிறது.இது குழந்தைகளுக்கும் இள வயதினருக்கும் வருவதால் சாதகமான உணவு,இன்சுலின் கொடுத்தல்,உடற்பயிற்சி முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.வாழ்க்கை முழுவதும் இன்சுலின் மூலம் பராமரிக்கப்பட வேண்டிய இவர்களில் சிலருக்கு சில சமயம் சில நாட்களுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதை,சிலர் தவறாக வியாதி குணமடைந்து விட்டதாக எண்ணிக் கொண்டு கவலையீனமாக இருப்பர்.டயபிடிஸ்சை கட்டுப் படுத்த முடியுமே தவிர, முற்றாக குணப்படுத்த முடியாது என்பதை கருத்தில் கொண்டு, அல்ட்சியமாக இருப்பது பல பின் விளைவிகளைக் கொடுக்கும் என்பதால், தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம்.
Type-2,பொதுவாக குடும்பம்,பரம்பரை,அதிக எடை,அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வது,உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்களால் வருவது அறியப்பட்டுள்ளது.அதனால் பிரிவு 2 ல் முதலில் உடல் எடை குறைப்பு,சாதகமான உணவு, உடற்பயிற்சி கவனத்தில் கொள்ளப்படுவதுடன்,இரத்தத்தில் உள்ள குளுக்கோசை சமநிலைப்படுத்த முதலில் மாத்திரைகள் மூலமும், முடியாத போது இன்சுலினை நேரடியாக இரத்தத்தில் சேர்க்கவும் செய்கிறார்கள்.இன்சுலின் குறைவாக சுரப்பதாலும் அல்லது சுரக்கும் இன்சுலினிற்கு எதிர்வினை ஏற்படுவதாலும்(Insulin resistance) குளுக்கோசை சமநிலைப் படுத்த முடியாத நிலையில் இருக்கும் இந்த நோய்(non Insulin dependant diabetes) அநேகமாக 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு வருகிறது.இதைக் கட்டுப்பாட்டில் வைக்காத போது இருதயநோய்,நரம்பு பாதிப்புக்கள்,சிறுநீரகம்,கண் பார்வைப் பாதிப்பு,சில சமயங்களில் கோமா நிலைக்கும்,இறப்பிற்கும் கொண்டு செல்லுகிறது. இதய நோய்,புற்று நோய்க்குப் பின் மூன்றாவதாக அதிக உயிரிழப்பிற்கு காரணமாகி உள்ள நீரிழிவு நோய் இருக்கும் போது பசி, தாகம்,காயங்கள் ஆற தாமதம், எடைக்குறைவு,அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவை ஏற்படுகிறது.நரம்புகளின் பாதிப்பினால் காலில் ஏற்படும் பிரச்சனைகள்(diabetic foot )அதிக பிரச்சனைகளைக் கொடுக்கும் போது சிலர் கால்களை இழக்க நேரிடுகிறது.
இதைவிட கர்ப்பமடைந்த பெண்களுக்கும் தற்காலிக டயபிடிஸ்(gestational diabetes) வரும் போது, அதைக் கண்டறிந்து செயல்படா விட்டால், கருவில் உள்ள குழந்தையை பாதிப்பதுடன் பிறக்கும் குழந்தைக்கு நீரிழிவு நோய் வரவும் அல்லது இறந்து பிறப்பதும்,எடை கூடிய குழந்தையாக பிறப்பதற்கும் அது காரணமாகி விடுகிறது. இந்த நோய் அநேகமாக பிரசவத்திற்குப் பின் சில மாதங்களில் சுகமாகி விடுகிறதானாலும்,சிலருக்கு கவலையீன காரணத்தால் தொடராக இருந்தது காணப்பட்டது.

Blood Sugar Test உணவிற்கு முன் சாதாரணமாக(empty stomach) 70-120 mg/dl ;
70 - 99 mg/dl(3,9 – 5,5mmol/l) சாதாரண நிலை என்றும்,100mg/dl க்கு மேல் prediabetes என்பர்.
உணவிற்கு 2 மணி நேரம் பின் 140 mg/dl(7,84 mmol/l) ற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.சாதாரண நிலையில் 120mg/dl(6,72mmol/ளில்)எல்லையாக கருதப்படுவதால் அதற்கு மேல் செல்லும் போது நீரிழிவு என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு,பரிசோதிக்கப்படும் நேரம்,இடைவெளி போன்றவற்றால் சோதனை முடிவுகள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொண்டு,நோய் என்று முடிவு செய்யு முன் ஒன்றுக்கு மேற்பட்ட சோதனைகளை செய்த பின்பே இறுதி செய்யப்படும்.
சிறுநீர் சோதனை தொடக்க காலம் முதல் செய்யப்பட்டு வந்தாலும், சிறுநீரக தொற்று,நீரிழிவு எனும் சர்க்கரை நோய்,சிறுநீர்ப்பை தொற்று, preeclamsia எனும் கர்ப்பகால நோயாகவும், சிறுநீரில் இரத்தம் இருப்பின் prostate புற்றாகவும் இருக்க வாய்ப்புண்டு என்பதாலும், அதிக உணவு,அதிக இனிப்பு கொண்ட பானம் போன்றவற்றை எடுத்த பின் சிறுநீரகம் மேலதிக சர்க்கரையை சிறுநீருடன் வெளியேற்றும் என்பதாலும், சிறுநீரில் இருக்கும் சர்க்கரையின் அளவை(150mg/dl ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவாகும்) வைத்து வேறு நோய்களையும்,கர்ப்பம்,சிறுநீரக தொழிற்பாடு போன்றவற்றை,கண்டறிய முடியும் என்பதாலும்,சிறுநீரை முதல் பரிசோதனையாகவும், இரத்த பரிசோதனையை உறுதி செய்யும் சோதைனையாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.
இதை தவிர bloodsugar 70 ற்கு குறையும் போது Hypoglycemia என்றும்,200 ற்கு மேல் செல்லும் போது hyperglycemia எனவும் அழைப்பர்.

இனிப்புக்களால் நீரிழிவு நோய் வருகிறது என்ற வாதம் பலரிடம் வெவ்வேறு வகையில் இருந்து வருகிறது. இல்லை என்று பலர் கூறினாலும்,வரும் ஆனா வராது என்பதே பதிலாக உள்ளது. இயற்கையாக எல்லா உணவுகளிலும்,பழங்கள் போன்றவற்றிலும் சர்க்கரை, குளுக்கோஸ், உள்ளதும்,இவற்றினால் பாதிப்பு இல்லை என்றாலும் செயற்கை முறையில் செய்யப்படும் இனிப்பு வகைகள்,ஐஸ்,குளிர் பானங்களில் உள்ள இனிப்பால் உடை எடை அதிகரிப்பதால் அது மறைமுக காரணமாகி, டயபிடிஸ் வர காரணமாகி விடுகிறது. அதனால் நாம் எந்த வகையான இனிப்புப் பொருட்களை சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து,அதாவது எடையை கூட்டும் இனிப்புப் பொருட்கள் காரணத்தால், வரும் ஆனா வராது என்று சொல்ல முடியும்.
இனிப்புக்கள் சாப்பிடக் கூடாது என்பது சரியல்ல என்பதற்கு காரணம், நாம் உண்ணும் கார்போகைட்ரேட் இரத்த சர்க்கரையாக மாற்றப்படும் போது அதை செல்கள் சக்தியாக
மாற்றவும் சமநிலையில் வைத்திருப்பதற்கு இன்சுலின் தேவைப்படும் போது, அந்த இன்சுலின் இல்லாமல் அல்லது போதாமல் போக வருவது டயபிடிஸ் என்பதால், இனிப்புக்களுக்கும் இந்த நோய்க்கும் சம்பந்தம் இல்லாமல் போனாலும் கூட,அதிக மாச்சத்துணவும்,இனிப்பு வகைகளும் குளுக்கோசாக இரத்தத்தில் மாற்றப்படும் போது,அதை சக்தியாக மாற்ற அதிக இன்சுலின் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொண்டால்,நோயாளிகள் இந்த வகையான உணவுகளை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது என்பதே முடிவாகும். அதே சமயம் சிம்பிள் சுகர் (simple sugar) உள்ள உணவுகளான பழங்கள் போன்ற இயற்கைப் பொருட்கள் தவிர்ந்த, செயற்கை குளிர்பானங்கள்,பீர், போன்றவற்றினால் சர்க்கரைக் கட்டுபாடு மீறப்படுகிறது என்கிறார் பேராசிரியர் மார்டின் கம்ப் (Prof.Martin Kamp,Gold Coast Hospital ) மருத்துவ ஆராய்ச்சியாளர்.அளவான காம்ப்ளெக்ஸ் கார்போகைட்ரேட் எடுப்பதும் உடற்பயிற்சியும் முக்கியமாக கருதப்படுகிறது என்கிறார் அவர்.
டையபிட்டிக்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதால்,குறைந்த அளவிலான கூடிய இடைவெளியில்,ஒரு நாளில் ஆறு முறையாக பிரித்து, உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்வதும்,உடற்பயிற்சியும் செய்து,இன்சுலினை கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தால் வழமையான வாழ்க்கையை நடத்த முடியும். சில தொலைக்காட்சி மருத்துவ வியாபாரங்களை நம்பி ஏமாறாமல், இந்த நோயை கட்டுப்படுத்த முடியுமே தவிர முற்றாக குணப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருத்துவமும்,சில யோகாசனமும், சமையல்,மூலிகைப் பொருட்களும் இயற்கை முறையில் சில நாட்களுக்கு கட்டுப்பாட்டில்,டைப் 1 இல் சொல்லப்பட்டது போல், வைத்திருக்க உதவி புரிவதால், சிலர் நோய் குணமடைந்து விட்டதாக கருதி கவலையீனமாக இருப்பார்கள். அதனால் இந்நோயை முற்றாக குணப்படுத்த முடியாது என்பதையும்,தொலைகாட்சி விளம்பரங்கள் உண்மையற்றவை என்பதும்,வியாபார நோக்குடன் விளம்பரம் செய்யப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வயதாகும் போது நம் உடல் தளர்வடைவதும்,சில உறுப்புக்கள் பலவீனமடைவதும்,வேலை செய்யாமல் போவதும் இயற்கையே. அவற்றை குணப்படுத்த முடியுமாயின்,நம்முடைய உடல் உறுப்புக்களையும் சரியாக்கி என்றும் மார்க்கண்டேயனாக வாழ முடியும் அல்லவா. சிந்தியுங்கள்,ஏமாறாதீர்கள்.
இதைவிட diabetes insipidus என்றொரு நோய் உண்டு.இது டயபேடிஸ் என்று தொடங்கினாலும் சர்க்கரை வியாதி அல்ல. ADH,antideuretic hormone(Hypaothalamus) என்ற ஹார்மோன் குறைவினால், தடையினால் ஏற்படுகிறது.அளவுக்கு அதிக சிறுநீர் வெளியேறுவதால் அதிக தாகமும் ஏற்படும்.
நீரிழிவிற்கு மருத்துவம் தந்த புதிய கண்டுபிடிப்பு.
டையபிட்டிக் தொடக்க நிலையில் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் மாத்திரைகள் இன்சுலின் மாத்திரைகள் அல்லவென்பதையும்,ஓரளவிற்கு இரத்த குளுக்கோசை கட்டுப்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆனால் மாத்திரை வடிவில் உள்ள, இன்சுலின் HIM-2 (Hexyl-insulin monoconjugate-2) மாத்திரைகள், தற்போதய இன்சுலினை விட அதிக பலனை தரக் கூடியதும்,ஊசியைக் கண்டு அலறுவோருக்கு ஒரு வரப்பிரசாதமுமாகும்.
இது தவிர இஸ்லெத் செல் மாற்று சிகிச்சை(Islet cell transplant) எட்மோண்ட் டெக்னிக் மூலம்,அதாவது இரண்டு அல்லது மேற்பட்ட பங்கிறியஸ்(கணையம்) செல்களை ஒருவரிடமிருந்து தானமாக பெற்று, நோய் உள்ளவருக்கு மாற்று சிகிச்சை மூலம், சிறுநீரக மாற்றுப் போல், செய்வதால்10-15 மாதங்களில் இன்சுலின் சுரக்கக் கூடியவராக மாற்றி டைப் 1 றை குணப்படுத்தவும்,மரபணு சிகிச்சை(gene SHIP2) மூலம் டைப் 2 இன் இன்சுலினை கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அளவு - mg/dl American அளவு; mmol/l - British அளவு
பாதாள உலகம் சென்று வந்தேன்,பண்பாடுகள் பல கண்டு வந்தேன். பாதாள உலகம் பாதாள கோஷ்டி இப்படி சொல்வார்கள். இது சட்டத்திற்கு மாறாக நடந்து கொள்ளும் சிலர் மறைந்து இருந்து செய்யும் செயல்களாகும். ஆனால் நான் கூறும் இந்த பாதாள உலகம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட, நாகரீகத்திற்கு சவால் விடும் ஒரு சிறிய உலகம். ஆண்டு தோறும் ஒன்று கூடும் இந்த உலகை பார்த்து வந்த செய்தியுடன்.......
மீண்டும் அடுத்த வாரம்..........................Dr. சக்தி


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சர்க்கரை நோய் Diabetes -1 Empty Re: சர்க்கரை நோய் Diabetes -1

Post by மாலதி Sat Oct 15, 2011 1:27 pm

அறிவிப்பு நல்ல இருக்கு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சர்க்கரை நோய் Diabetes -1 Empty Re: சர்க்கரை நோய் Diabetes -1

Post by Tamil Tue Jul 01, 2014 8:46 pm

அருமையான விளக்கம் சக்தி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சர்க்கரை நோய் Diabetes -1 Empty Re: சர்க்கரை நோய் Diabetes -1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum