TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Current date/time is Sun Apr 28, 2024 11:55 am

Search found 2 matches for WT20

நிர்மூலமாக்க நியூசிலாந்து தயாரா? - சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 3)

நிர்மூலமாக்க நியூசிலாந்து தயாரா? - சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 3)


சிறந்த வீரர்கள், அமைதியான வீரர்கள், வசை சொற்கள் வீசாத ஜென்டில்மேன்கள், அதிரடியும் ஆக்ரோஷமும் கொண்டவர்கள், சிக்ஸர் பிரியர்கள், ஆவேச வேகப்பந்து வீச்சாளர்கள் என உலகின் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஓர் அணி, நியூசிலாந்து. கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் நியூசிலாந்துக்கு ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு முறை கூட ஐ.சி.சி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை நியூசிலாந்து வென்றதே இல்லை.
Topics tagged under wt20 on TamilYes Cri_09_2
பிரண்டன் மெக்குல்லம், ஷேன் பாண்ட், டேனியல் வெட்டோரி என கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த பல வீரர்களை நியூசிலாந்து உற்பத்தி செய்திருக்கிறது. ஆனால், ஓர் அணியாக சேர்ந்து ஏன் கோப்பையை வெல்லமுடியவில்லை என்பதன் ரகசியம் இன்னும் நியூசிலாந்துக்கே பிடிபடவில்லை. நியூசிலாந்து அணிக்கு பிளஸ், மைனஸ் எல்லாமே சொந்த ஊர் ஆடுகளங்கள்தான். சொந்த ஊரில் எந்த போட்டி நடந்தாலும் அதிரடி அபார வெற்றிகளை குவிக்கும் நியூசிலாந்து அணியால், மற்ற நாடுகளில் உள்ள பிட்சில் விளையாடும்போது சிங்கிள் வெற்றிக்கே தடுமாறுகிறது. இதுதான் வரலாறு. ஆனால், இந்த வரலாற்றை கொஞ்சம் அசைத்து பார்த்தார் பிரண்டன் மெக்குல்லம். கடந்த இரண்டு வருடங்களாக பிரண்டன் மெக்குல்லம் தலைமையில் அயல் நாடுகளில் போட்டிகளை வெல்ல ஆரம்பித்துள்ளது நியூசிலாந்து அணி.
Topics tagged under wt20 on TamilYes Sixes-fever-wt20-03-01
கடந்த ஆண்டு ஒருதின உலகக் கோப்பையில் மிகவும் அக்ஸ்ரசிவ் மனப்பான்மையுடன் வியூகங்களை வகுத்து, அதிரடியாக பைனலில் நுழைந்தது நியூசிலாந்து அணி. நல்ல மைதானமான மெல்போர்னில் முதலில் பேட்டிங் பிடித்தது நியூசிலாந்து. முதல் ஓவரில் மெக்குல்லம் அவுட்டாகும்போதே நியூஸியின் கையில் இருந்து கோப்பை நழுவ ஆரம்பித்துவிட்டது. ஆஸ்திரேலிய மண்ணுக்கு ஏற்றவாறு, எதிரணியை பொறுத்து சில நேரம் வியூகங்களை மாற்றி விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால்,  வலுக்கட்டாயமாக ஒரே பார்முலாவை கடைப்பிடித்து விளையாடியதால் நியூஸிலாந்து அணி தோல்வியை தழுவியது.
உலகக் கோப்பைக்கு பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணங்களில் சிறப்பாகவே விளையாடியது நியூசிலாந்து. அதன் பின்னர் இலங்கை, பாகிஸ்தான் அணியை சொந்த ஊரில் வறுத்தெடுத்தனர் நியூசி வீரர்கள்.
Topics tagged under wt20 on TamilYes Sixes-fever-wt20-03-02
நியூசிலாந்து அணியில் தற்போது பிரண்டன் மெக்குல்லம் இல்லை. அவரது திடீர் ஓய்வு காரணமாக சற்றே சில படிகள் பின்னிறங்கி உள்ளது நியூசிலாந்து அணி. டி20 போட்டிகளை பொறுத்தவரையில் நியூசிலாந்து எப்படி விளையாடும் என யாராலுமே கணிக்க முடியாது. திடீரென்று இரண்டு வீரர்கள் அடுத்தடுத்து வேகமான அரைசதம் அடித்து சாதனை படைப்பதும், சில சமயங்களில் இரண்டு விக்கெட் விழுந்துவிட்டால் படுத்தே விடுவதும் நியூசிலாந்து அணியில் மட்டுமே நடக்கும்.

Topics tagged under wt20 on TamilYes Sixes-fever-wt20-03-03நியூசிலாந்து அணியில் மரண ஹிட்டர்கள் இருக்கின்றனர். குப்டில், முன்ரோ, கோரே ஆண்டர்சன் ஆகியோர் பக்கா டி20 ஸ்பெஷலிஸ்ட்கள். பேட்டிங்கில் நியூசிலாந்து அணி பக்கா மாஸ் காட்டினாலும், பவுலிங்கில் வீக் தான். இந்திய பிட்ச்களை கருத்தில் கொண்டு அணியில் இஷ் சோதி எனும் சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்திருக்கிறார்கள். சோதி யார் தெரியுமா? இந்திய மண்ணில் பிறந்தவர் தான். பஞ்சாபில் பிறந்து பின்னாளில் நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார். நியூசிலாந்து அணி மலை போல இஷ் சோதியை நம்பியிருக்கிறது. டி20 உலகக் கோப்பைகளில்  நியூசிலாந்து அணி இதுவரை அரையிறுதியை தாண்டியதில்லை. பெரும்பாலான சமயங்களில் அரையிறுதிக்கு கூட தகுதி பெற்றதில்லை. இந்திய பிட்ச்களில் பெங்களூருவை தவிர மற்ற அனைத்து பிட்சும் சற்று பெரிதாகவே இருக்கும். நியூசிலாந்தில் குட்டி பிட்ச்களில் விளையாடி பழக்கப்பட்ட வீரர்களால், இந்திய மண்ணில் ஜொலிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

கேன் வில்லியம்சன் தற்போது முழு நேர கேப்டனாகிவிட்டார். இளம் வீரர். வில்லியம்சன் இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியவர். வில்லியம்சன் மட்டுமே நியூசிலாந்து அணியில் நிலைத்து நின்று பொறுப்பாக விளையாடும் ஒரே வீரர். கேன் வில்லியம்சன் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதியை அடைந்துவிட்டாலும், தற்போது கூடுதலாக கொடுக்கப்பட்ட கேப்டன் பொறுப்பை இனி வில்லியம்சன் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பார்ப்போம். பல  ஆண்டுகளாக கிடைக்காத உலகக் கோப்பை எனும் கனியை, இம்முறை வில்லியம்சன் நிச்சயம் நியூசி மண்ணுக்கு எடுத்து வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் கிவி மக்கள்.

Topics tagged under wt20 on TamilYes Cri_09_3


இந்த உலகக்கோப்பையில் கிவிக்கள் படைக்கப்போகும் சாதனைகளுக்காக  காத்திருக்கிறோம்.

-பு.விவேக் ஆனந்த்

வடிவமைப்பு: ராஜு முருகேசன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...
Topics tagged under wt20 on TamilYes Sixes-fever-wt20-02(1)
Topics tagged under wt20 on TamilYes Sixes-fever-wt20-01
by Tamil
on Thu Mar 10, 2016 6:10 am
 
Search in: விளையாட்டு செய்திகள்
Topic: நிர்மூலமாக்க நியூசிலாந்து தயாரா? - சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 3)
Replies: 0
Views: 461

இலங்கை அணி கர்ஜிக்குமா? பதுங்குமா?- சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 2)

இலங்கை அணி கர்ஜிக்குமா? பதுங்குமா?- சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 2)

நாள்-  ஏப்ரல் 6, 2014
இடம்-  வங்கதேச நாட்டின் மிர்பூரில் உள்ள  ஷீர் பங்களா நேஷனல் ஸ்டேடியம்
சம்பவம்  - 2014 உலககோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், செம ஸ்ட்ராங்காக ஃபைனல் வந்த இந்திய அணியை அசால்ட்டாக  தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது மலிங்கா தலைமையிலான இலங்கை அணி.
 

Topics tagged under wt20 on TamilYes T20%20Srilanka%20team
அந்த நாள் தான் இலங்கை அணி கடைசியாக சிறந்த பெர்பார்மென்சை வெளிப்படுத்திய நாள். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இறங்கு முகம் தான். ஜெயவர்த்தனே மற்றும் சங்கக்காரா ஆகிய இருவரும் ஓய்வு பெற்றபிறகு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல வளைய வருகிறது இலங்கை அணி. புதிதாக அணிக்குள் வந்துள்ள இளைஞர்கள் நம்பிக்கை தரும் விதத்தில் விளையாடினாலும், தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். இதனால் இலங்கை அணியானது கத்துக்குட்டி அணிகளை கூட மிக கடுமையாக போராடி தான் வெல்கிறது. 

கடந்த உலககோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக 14 டி20 போட்டிகளை விளையாடியிருக்கிறது இலங்கை அணி. அதில் பத்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. நடப்பு சாம்பியன் திடீரென சோடை போனதற்கு காரணம் சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே ஓய்வு மட்டுமல்ல, பல முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயமும்தான். இலங்கை அணிக்கு கோப்பையை வாங்கித்தந்த மலிங்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். உலககோப்பை அணியில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை நேற்று இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியுள்ளார் மலிங்கா. ஆனால் அணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவிக்கவில்லை. மலிங்கா ஒரு வேளை விளையாடாமல் போனால் இலங்கை அணிக்கு  பேரிழப்பு ஏற்படும், ஏனெனில் கேப்டன்சி மட்டுமின்றி  இறுதி ஓவர்களில் நெருக்கடியான சூழ்நிலைகளில் கூட சிறப்பாக பந்துவீசக்கூடியவர். 

இலங்கை அணி பேட்டிங்கில் தில்ஷனையும், சந்திமாலையும் பெரிதும் நம்பியிருக்கிறது. ஆனால் இருவருமே நல்ல கன்சிஸ்டன்சியுடன்  விளையாடுவதில்லை என்பதால் நல்ல தொடக்கம் கிடைப்பதில்லை.  நடு வரிசையில் விளையாடும் வீரர்கள்  சிக்ஸர்கள், பவுண்டரிகளை  விளாசுவதில் மட்டுமே ஆர்வம் காண்பிக்கின்றனர். எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடுவதில்லை. இதனால் சரியான பார்ட்னர்ஷிப் அமைவதில்லை என்பதால் 150  ரன்களை எடுப்பதற்கே சிரமப்படுகிறது இலங்கை அணி. சேஸிங்கில் இலங்கை அணி  எப்போதுமே வீக் என்பதால் பேட்ஸ்மேன்கள் திட்டமிட்டு விளையாடாத  பட்சத்தில் ரன்கள்  குவிக்க முடியாது.

Topics tagged under wt20 on TamilYes T20%20Srilanka%20
பந்துவீச்சை பொறுத்தமட்டில் இலங்கை அணி கலவையாக இருக்கிறது.  புற்கள் நிறைந்த மைதானத்தில் மட்டுமே வேகபந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசுகிறார்கள். அணியில் சீனியர் வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதால் சோடை போயிருக்கிறது வேகபந்து டிப்பார்ட்மென்ட். இந்திய மைதானங்கள் சுழற்பந்துக்கு சாதகமானவை என்பதால் சுழற்பந்து வீச்சை பெரிதும் நம்பியிருக்கிறது இலங்கை அணி. இலங்கை அணியின் முக்கிய ஆயுதம் சுழற்பந்து வீச்சாளர் ரெங்கனா ஹெராத்.

இலங்கை அணி இடம்பெற்றிருக்கும் பிரிவில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன. இலங்கை அணிக்கு இருக்கும் ஒரே பிளஸ் இலங்கை இடம்பெற்றிருக்கும் பிரிவு தான். தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய  மூன்று அணிகளுமே சுழற்பந்துக்கு திணறுவார்கள். அதுவும் இந்தியா போன்ற மைதானங்களில் அக்ஸ்ரசிவ் மனப்பான்மையுடன் விளையாடவிட்டால் சுழற்பந்தில் வரிசையாக அவுட்டாகி நடையை கட்டவேண்டியதுதான். மற்ற மூன்று அணிகளுக்கு இருக்கும் வீக்னெஸ் தான் இலங்கை அணிக்கு இப்போது  இருக்கும் ஒரே பிளஸ். 

இலங்கை அணி பொதுவாக  டி20 உலககோப்பையில் சீரான முறையில், சிறப்பாக விளையாடக்கூடிய அணி. இதுவரை நடந்த ஐந்து உலககோப்பை தொடரில் மூன்று முறை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற ஒரே அணி இலங்கை மட்டுமே.  உலககோப்பையில் அதிக போட்டிகளை இதுவரை வென்றுள்ளதும்  இலங்கை அணி தான். வராலாறு இலங்கைக்கு சாதகமாக இருந்தாலும்  முக்கிய வீரர்களின்  அவுட் ஆப் பார்ம் காரணமாக இந்த உலககோப்பையை இலங்கை வெல்வதற்கான வாய்ப்பு தற்போதைய நிலையில் குறைவு தான். எனினும் மற்ற அணிகளின் வீக்னெஸ்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அரையிறுதி வரை முன்னேறிவிட்டால் அதன் பின்னர் நாக்அவுட் போட்டிகளில் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் எனும் சூட்சமம் தெரியும் என்பதால் இலங்கை அணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. 

- பு.விவேக் ஆனந்த்

வடிவமைப்பு - 
நடராஜன் 


இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1)
by Tamil
on Tue Mar 08, 2016 5:19 pm
 
Search in: விளையாட்டு செய்திகள்
Topic: இலங்கை அணி கர்ஜிக்குமா? பதுங்குமா?- சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 2)
Replies: 0
Views: 527

Back to top

Jump to: