TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியா இன்னும் 10 ஆண்டுகளில்....

Go down

இந்தியா இன்னும் 10 ஆண்டுகளில்.... Empty இந்தியா இன்னும் 10 ஆண்டுகளில்....

Post by Tamil Mon Feb 01, 2010 4:22 pm

இது மானுட நம்பிக்கை இதழுக்காக பழ.நெடுமாறன் அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணலின் முழுவடிவம்)
இந்தியா இன்னும் 10 ஆண்டுகளில்.... PN1211

தமிழ் குடும்பம்


தமிழுக்கு தொண்டு செய்யும் குடும்பத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். அப்பா
பெயர் பழனியப்பனார். மதுரை தமிழ்ச் சங்கச் செயலாளர். மதுரையில்
திருவள்ளுவர் சிலையை தோற்றுவித்தத் தலைவர். அதனால் ஏராளமான தமிழ்
அறிஞர்கள் அப்பாவை சந்திக்க வீட்டுக்கு வந்து கொண்டே இருப்பார்கள். எங்கள்
வீட்டில் எப்பொழுதும் தமிழ் அறிஞர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
அப்பாவுக்கு அரசியல் ஈடுபாடு கிடையாது. அவர் தமிழ்த் தொண்டோடு நிறுத்திக்
கொண்டார். அப்பா தமிழ் சங்கத் தொண்டராக இருந்தபோது பி.டி.ராஜன் (பத்து
நாள்) விழாவை சிறப்பாக நடத்தினார். மற்ற எல்லா செயல்பாடுகளிலும்
பி.டி.ராஜனும், அப்பாவும் ஒன்றாகவே இருப்பார்கள்.

இதனால் வீட்டுக்கு வரும் தமிழ் தொண்டர்களுக்கு அனுக்க தொண்டு செய்யும்
வாய்ப்பு எனக்கு சிறுவயதிலே கிடைத்தது. அதன் பின் நான் அண்ணாமலை
பல்கலைகழகத்தில் ஹானர்ஸ் படிக்கச்சென்றேன். அங்கு எனக்கு பேராசிரியர்
கா.கா.செங்கோணணார், மி.ப. மீனாட்சி சுந்தரனார் ஆசிரியராக இருந்தனர். அன்று
அண்ணாமலை பல்கலைக்கழகமே தமிழ் உணர்வுக்கு ஓர் நிலைக்களனாக இருந்தது.

அரசியல் அறிமுகம்

அதில் தான் எனக்கு அரசியல் ஈடுபாடு வந்தது. திமுகவில் சம்பத்து இருந்த
காலத்தில் அவருக்கு ஆதரவாளராக தான் இருந்தேன். அதன்பின் அவர் காங்கிரசில்
சேர்ந்தார். அன்றைக்கு இருந்த காலக்கட்டத்தில் (64-ல்) பெருந்தலைவர்
காமராஜர் தான் இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக இருந்தார்.
அன்றைக்கு நேரு, பின் சாஸ்திரி, பின்னர் இந்திரா, அதற்கு பின் காமராஜர்
தான். ஒரு தமிழன் உலக அளவில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அவருக்கு
துணையாக நான் இருக்க வேண்டும் என எண்ணினேன். அதன்பின் அவருடைய இறுதி
காலத்தில் இந்திராவும் காமராஜரும் சேர்ந்து பேசி இணைந்து செயல்பட வேண்டும்
என்ற முடிவு எடுத்தனர். அத்திட்டத்தை நிறைவேற்றும் முன்பே அவர் காலமானார்.
பின்னர் நிலைபாடுகளிலும் மாறுபாடுகள் ஏற்பட்டன.

காங்கிரசில் இந்தி வெறி

காங்கிரசின் நிலைபாடுகளில் மாறுபாடு இருந்த போதிலும், என் நிலைப்பாட்டில்
மாறுதல் இல்லை. மத்திய பிரதேசத்தில் பச்சைமாரி என்ற ஓர் மலைப்பகுதியில்
இளைஞர் காங்கிரஸ் முகாம் நடந்தது. அப்போது அர்ஜுன்சிங் அகில இந்திய இளைஞர்
காங்கிரசுக்கு தலைவராக இருந்தார். 66-ல் இங்கிருந்து நான், குமரி ஆனந்தன்,
சோ.பாலகிருஷ்ணன் ஆகியோர் இளைஞர்கள் சார்பில் பத்து நாள் பயிற்சி முகாம்
சென்றோம். இந்திரா காந்தி அப்போது தான் பிரதமரான நேரம். அவர்தான் அந்த
பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஆங்கிலத்தில் பேசத்
தொடங்கினார். இந்தி வெறியர்கள் எல்லோரும் எழுந்து இந்தியில் பேச வேண்டும்
என்று ஒரே எதிர்ப்பு. நாங்கள் திடுக்கிட்டுப் போனோம். என்ன இது பிரதமர்
பேசும்போதே இப்படிப்பட்ட நிலையா? என்று எண்ணினோம். அவர் கூறினார், நான்
முதலில் ஆங்கிலத்தில் பேசிவிட்டு பின்னர் இந்தியிலும் பேசுகிறேன் என்றார்.
முடியாது முதலில் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் எதிர்குரல்
கொடுத்ததனர்.

அதன் பின்னர் அவர் இந்தியில் பேசிய பின், ஆங்கிலத்தில் பேசினார். அந்த
உரையுடன் அன்றைய காலை நிகழ்ச்சிகள் முடிந்தன. பிற்பகல் நிகழ்ச்சி 3
மணிக்கு தொடங்க வேண்டும். தென்னாட்டில் இருந்து சென்றவர்கள் பிற்பகல்
உணவிற்கு பின்னர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது
கேரளாவில் இருந்து வந்த ஏ.கே.அந்தோனி, கர்நாடகாவில் நிஜலிங்கப்பாவின்
மருமகன் ராஜசேகரன் தான் மத்திய துறையில் நிதி அமைச்சராக உள்ளார். என்ன
செய்யலாம் என்றபோது, இராஜசேகர் ஆகியோர் இணைந்து என்ன செய்யலாம் என்று
ஒன்றாக அமர்ந்து பேசினோம். நாம் நம்முடைய மொழியிலே பேச வேண்டும் என்று
முடிவெடுத்தோம்.

நாமும் நம் மொழியிலேயே பேச வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதனால் அர்ஜுன்
சிங்கிடம் சொன்னோம். நாங்கள் வெகு தொலைவில் இருந்து வந்துள்ளோம். ஆகையால்
எங்களை முதலில் பேச அழைக்குமாறு கேட்டோம். அவரும் சரி என்றார். ஒவ்வொரு
மாநிலத்திலும் ஒருவர் பேச வேண் டும் என்று அந்த மாநாட்டில்
முடிவெடுத்தனர். கர்நாடகாவில் இருந்து வந்த குண்டுராவ் முதலில் பேசினார்.
அவருக்கு இந்தி சரளமாக தெரியும். ஆனால் நான் இந்தியில் பேசப்போவது இல்லை
என் தாய்மொழியில் தான் பேசுவேன் என்று கன்னடத்தில் கடகடவென்று 5 நிமிடம்
பேசினார். அதன் பின் நான், முதலில் ஆங்கிலத்தில் எனது மொழி தமிழ். நான்
தமிழில் பேசுவேன் என்று கூறிவிட்டு, தமிழில் பேசினேன். இப்படி வரிசையாக
பேசினோம். பரபரப்பாகி விட்டது மாநாட்டில் என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஆனால் அர்ஜூன்சிங் புத்திசாலிதனத்துடன் எங்க நான்கு பேர் உரையுடன் அந்த
அமர்வு முடிந்துவிட்டது என்று அறிவித்தார். அன்று மாலை மத்திய பிரதேச
முதலமைச்சர் மிஸ்ரா அவர்கள் மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு
விருந்தளிப்பதற்காக மாலை அமர்வு இல்லையென்று அறிவித்தார். இந்திரா
காந்திக்கு தகவல் தெரிந்தது. பிரதமரையே பேச விட வில்லை. பிரதமருக்கே இந்த
நிலை என்றால் எங்கள் நிலைமை என்ன? மாலை நாங்கள் டெல்லிக்கு சென்றோம்.
அதற்கு முன்னரே காமராஜருக்கு எல்லா செய்திகளும் சென்று விட்டன. அப்போது
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தார்.

அன்று மாலை டெல்லியில் அவர் என்னப்பா கலவரம் செய்து விட்டீர்கள் என்றார்.
நாங்கள் அங்கு நடந்தவைகளை விளக்கிச் சொன்னோம். செய்த வரை சரி, அவர்களுக்கு
அப்போது தான் புத்தி வரும் என்றார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
அதன் பின் நாங்கள் வந்து சேர்ந்தோம். என்ன கூறுகிறேன் என்றால், நான் என்
உணர்வுகளை விடவில்லை.

காந்தி காங்கிரஸ் தலைவரானார்

மொழிவாரி மாகாணத்தை மகாத்மா காந்தி உணர்ந்திருந்தார். அதன்பின் மகாத்மா
காந்தி 1920ல் காங்கிரஸ் தலைவர் ஆனார். அப்போது காங்கிரஸ் இப்படி
இருக்கவில்லை. பம்பாய் மாகாணம் என்றால் மகாராஸ்டிரம் எல்லாம் சேர்ந்து ஒரு
மாகாணம். சென்னை மாகாண காங்கிரஸ் என்று அவர் தான் ஒவ்வொரு மொழிவாரியாக
பிரித்தார். வாக்குறுதி என்ன கொடுத்தாரென்றால் விடுதலை கிடைத்தப்பின்
மொழிவாரியாக மாகாணங்கள் தொடர்ச்சியாக பிரிக்கப்படும் என்றார். ஆனால் அந்த
வாக்குறுதி நடைபெறவில்லை. காந்தியடிகள் இறப்பதற்கு முன் 1946ல் ஒரு மத்திய
பிரிட்டிஷ் மந்திரி சபை தூதுகுழு இந்தியாவுக்கு வந்தது. இந்தியாவுக்கு
விடுதலை தருவதைப் பற்றி பேச வந்தது. அப்பொழுது காங்கிரஸ் தலைவராக இருந்த
அபுல்கலாம் ஆசாத் ஒரு திட்டம் தயாரித்தார். அதை மகாத்மா காந்தி
கேட்டறிந்தார். அதாவது பாகிஸ்தானை பிரிக்காமல் தடுக்க வேண்டும் என்றால்
இரண்டாக பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முழு அதிகாரம் தந்துவிட வேண்டும்.
அதில் 4 அதிகாரங்கள் மட்டும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும். அவை:-

1) வெளிநாட்டு உறவு
2) ராணுவம்
3) தபால் தலை அச்சிடுதல்
4) ரூபாய் நோட்டு அச்சிடுதல்

இவைகள் மட்டும். மற்றவை அனைத்தும் மாநிலங்களுக்குத் தந்து விட வேண்டும்.

இதைக் கண்ட உடனேயே காந்தியடிகளும் முக்கால பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு
கண்டு விட்டீர்கள் என்று அபுல்கலாம் ஆசாத் அவர்களை மிகவும் பாராட்டினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தது. அதில் இதற்கு ஒப்புதல்
கொடுத்து விடலாம் என்று இதை காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமான திட்டமாக
கொண்டு போய் பிரிட்டிஷ் கேபினெட் மிஸனுக்கு காங்கிரஸ் தலைவர் அபுல்கலாம்
ஆசாம் கொடுத்தார். இதுதான் காங்கிரசின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு என்று
கூறினார். பின்னர் ஜின்னா யோசிக்கிறார். இப்படி வந்தால் கூட ஒத்துக்
கொள்ளலாம். ஆனால் நடந்தது என்னவென்றால், ஆசாத் அவர்களுடைய பதவிக் காலம்
முடிந்தவுடனேயே அவருடைய பதவி ஓராண்டு நீடித்திருந்தால் அதை
நிடைமுறைப்படுத்தி இருக்கலாம். அதன் பின் தலைவரான நேரு அவர்கள் என்ன
செய்தார் என்றால், பம்பாயில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இது
நல்ல திட்டமாக இருந்தால் கூட அரசியல் நிர்ணயசபை தான் இறுதி முடிவு
செய்யும் என்று கூறிவிட்டார். ஜின்னா உடனே கேட்டார். இன்றைக்கு இதை
ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நாளைக்கு அடுத்து வரும் அரசு நிர்ணய சபையில்
உங்களுக்குத் தானே மெஜாரிட்டி வரும். இதை பின்னால் தூக்கி போட்டு
விட்டீர்கள் என்றால், என்றுகூறி அவர் பின் வாங்கிவிட்டார். இவைகள் ஏதோ
வாய் தவறிவிட்டது என்றெல்லாம் கூறி பார்த்தார்கள். ஆனால் ஜின்னா
ஒத்துக்கொள்ளவில்லை. சமாதானம் என்றாலும், இது அனைத்தும் ஏமாற்று வேலை
என்று அவர் நினைத்தார். அபுல்கலாம் ஆசாத் என்ன சொன்னாரோ அதையே தான் நானும்
சொல்கிறேன்.

மாநில சுய நிர்ணய அரசுகளுக்கு அதிகாரம் கொடுங்கள். ஆனால் மத்தியில் இந்த
நான்கு திட்டங்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். இது இந்தியா ஒற்றுமையாக
உள்ளது என்பதை வலியுறுத்தும்.

தமிழ் இயக்கம்

1920ல் மறைமலை அடிகளார் இருந்த அன்றைய கால கட்டத்தில் வடமொழி கலந்த தமிழ்
கல்விமுறைதான் பயிற்றுவிக்கப்பட்டது. அப்போதைய குடியரசு இதழ்களில் எல்லாம்
பார்த்தால் உங்களுக்குத் தெரியும். 1924, 25-களில் வந்த குடியரசு
இதழ்களில் அட்டாசன அதிபதி அவர்களே என்று போட்டு விட்டு ஆரம்பம் ஆகும். ஒரு
வணக்கம் கிடையாது. நமஸ்காரம் என்று எழுதிவிட்டு பின்னர் கடைசியில் வந்தனம்
உச்சாசம், சுபமுகூர்த்த தினம் தான். திருமணம் என்ற சொல் எல்லாம் கிடையாது.
வடமொழியின் மரணப்பிடியில் அன்றைக்கு தமிழ் சிக்கி தவித்த கால கட்டத்தில்
மறைமலை அடிகளார்தான் வடமொழியின் மரணப்பிடியில் இருந்து தமிழை மீட்க
வேண்டும் என்று தோண்டி எடுத்து தனித்தமிழ் என்று ஒன்றை 1920ல்
ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் அதில் ஒவ்வொருவராக இணைந்தனர். அதன்பின்பு
தான் தேவநேய பாவாணர் சேர்ந்து பின்னர் பிரிந்து இப்படி நிறைய தமிழறிஞர்கள்
அதை ஓர் இயக்கமாகவே செயல்படுத்தினர். அது இயக்கமாகவே வளர்ந்தது.

காமராஜரின் கல்விப் பணி

சுதந்திரம் கிடைத்த பின்னர் காமராஜர் முதலமைச்சராக ஆனபின்னர் அவர் அதை
நடைமுறைப்படுத்தினார். அவர் தான் முதல்முதலாக 10ஆம் வகுப்பு வரை
தமிழ்வழிக் கல்வியை கொண்டு வந்தார். அவர் பதவியை விட்டு செல்வதற்கு முன்பு
பட்டப்படிப்பு வரை தமிழில் சொல்லித்தர வேண்டுமென்று புத்தகங்களெல்லாம்
போட்டு, குழுக்கள் அமைத்து அதைக் கொண்டும் வந்தார். கோயம்புத்தூரில்
பி.எச்.டி. கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை தமிழில் கொண்டுவர சோதனை
களமாக்கப்பட்டு அதைக் கொண்டு வந்தார். காமராஜர் காலத்தில்தான் தமிழ்
வளர்ச்சி கழகம் என்று ஒன்றை அமைத்தார். ஆங்கிலத்தில் என்சைக்ளோபிடியா
மாதிரி தமிழிலும் இருக்க வேண்டுமென்று அதற்கு கலைக்களஞ்சியம் என்று பெயர்
வைத்தார். பெரியசாமிதூரன் தலைவராக்கப்பட்டு எல்லா அறிவியல் சொற்களும்,
கலைச்சொற்களும் மொழியாக்கம் செய்ய அறிஞர்களை அமைத்து ஆராய்ச்சி
செய்யப்பட்டது. அவை முழுமையாக நடைப்பெற்று இருந்தால் எம்.ஏ., பி.ஏ.,
எம்.எஸ்.சி., வரை ஏன் பொறியியல், மருத்துவம் கூட தமிழிலே
கற்றுத்தரப்பட்டிருக்கும்.

தி.மு.கழக ஆட்சி

1967-ல் ஆட்சி மாறிய உடன் திமுகவினருக்கு தமிழ் மீது நம்பிக்கை இல்லை.
ஆகையால் அவர்கள் இராஜாஜி கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டார்கள்.
இந்தியை எதிர்க்க வேண்டும் என்றால் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று
இராஜாஜி சொன்னார். `இந்தி நெவர் இங்கிலீஸ் எவர்' என்று கூறினார். அதன்
பின்னர் அண்ணா காலத்தில் அவர் ஒரு உத்தரவுபோட்டார். அந்த உத்தரவுதான்
இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். அதாவது தாய்மொழிக் கல்வி எப்படி
இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உத்தரவு போட்டுள்ளார். தமிழ் முதலாவது
மொழி. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கவேண்டுமென்று தான் அவர்
உத்தரவிட்டிக்க வேண்டும்.

ஆனால் அவர் என்ன உத்தரவு போட்டாரென்றால், ஆங்கிலம் முதலாவது மொழியாகவும்,
இரண்டாவதாக தாய்மொழி என்று பொதுப்படையாக கூறிவிட்டார். சிறுபான்மையினர்கள்
என்ன செய்துவிட்டார்கள். எங்களது தாய்மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம்
என்று ஆளுக்கு ஒரு நிலை உருவாகியது. தாய்மொழி தமிழ் தான் கற்க வேண்டும்
என்ற நிலை இல்லாமல் போய் விட்டது. இதற்கு முன்னரே பக்தவச்சலம் ஒரு தவறு
செய்தார். அண்ணாவிற்கு முன்னர் எல்லாமே தமிழில் தான் இருந்தது. பிறமொழி
கல்வி கற்போரும் உள்ளனர். எனவே, ஓர் வகுப்பு ஆங்கிலம் என்று கூறினார்.
ஒன்று இரண்டாகியது, இரண்டு மூன்றாகியது, பின்பு அனைத்துமே ஆங்கிலமானது.
இதற்கு முதலில் வழி வகுத்தவர் பக்தவச்சலம். பின் அண்ணா. கலைஞர் முதல்வரான
பின் கல்வியை அரசு துறையில் இருந்து தனியார் துறைக்கு விடுவதுதான் நல்லது
என்றும், கல்விக்குப் போய் இவ்வளவு செலவு செய்வதா என்று கூறினார். 1967
காங்கிரஸ் ஆட்சி இருந்த காலக்கட்டத்தில் மூன்றே மூன்று மெட்ரிக்குலேசன்
பள்ளிகள் தான் இருந்தது. தமிழ்நாட்டில் ஆங்கிலோ-இந்தியர்கள் கற்பதற்கு
மட்டும் அந்த ஆங்கில பள்ளிகள். ஆனால் இன்றோ 60,000 பள்ளிகளுக்கு மேல்
வந்து விட்டது. இது எப்படி என்றால் இரண்டு காரணம் தான். முதலில் கல்வியை
தனியார் துறைக்கு கொடுப்பது, இரண்டாவது பணம்.

மெட்ரிகுலேசன் தொடங்க வேண்டும் என்றால் ஓர் குறிப்பிட்ட பணம் செலுத்த
வேண்டும். பின் நீங்கள் கல்விமுறையில் எதைவேண்டுமானாலும்
பயிற்றுவிக்கலாம். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் பெறலாம். இவர்களின்
கையூட்டுப் பெரும் நோக்கில் இவை ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில்
என்ன சட்டம் இருந்தது என்றால், அனைத்து தொடக்கப் பள்ளியிலும் 1 முதல் 5
வரை தொடக்கக்கல்வி தமிழில் தான் இருக்க வேண்டும் என சட்டம் இருந்தது.
நர்சரி பள்ளி தொடங்கியவர்கள் அச்சட்டத்தின்படி பதிவு செய்தால் தமிழில்
தான் கற்பிக்க வேண்டும். எனவே இதில் பதிவு செய்யவே இல்லை. அரசும் இதைக்
கண்டு கொள்ளவில்லை. இதனால் இந்த 40 ஆண்டு காலத்தில் என்ன கொடுமை ஏற்பட்டது
என்றால், சின்னச் சின்ன கிராமங்களில் கூட நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேசன்
பள்ளிகள் தொடங்கி ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டது. இந்த 40 ஆண்டுகள் வரை
இரண்டு கழகங்கள் தான் ஆட்சியில் இருந்தது.

இவ்வாறு மாறி மாறி இவர்கள் 1 முதல் 5 வரைக் கூட தமிழை பயிற்றுவிக்கவில்லை.
காமராஜர் காலத்தில் இயற்றிய ஆட்சி மொழி சட்டத்தைக்கூட இவர்கள் அமுல்படுத்த
நினைக்கவில்லை. இன்றைக்கு நிலை என்னவாயிற்று என்றால், இன்றைக்கு கோயிலில்
கூட தமிழ் கிடையாது. வடமொழி அர்ச்சனை தான். இசை அரங்குகளில்கூட தெலுங்கு
கீர்த்தனைகள் தான். இப்படி தமிழ், தமிழ் என்று ஆட்சிக்கு வந்துவிட்டு
தமிழையே இல்லாமல் செய்துவிட்டார்கள்.

செம்மொழி என்றால் என்ன?

இன்றைய தலைவர்கள் தங்களை பெரிய தமிழ் உணர்வாளர்கள் என்று மேடையில்
காட்டிக் கொள்கின்றனர். மக்களை ஏமாற்றுகிறார்கள். உலகத்தின் தலைசிறந்த
தமிழின் செம்மொழி திட்டம் என்ன ஆச்சு? சமஸ்கிருதம் செம்மொழியாக்கப்பட்டது.
அதன்பின்னர் இரண்டாயிரம்ஆண்டுகள் ஒரு மொழி இருக்கும்போது அதை செம்மொழி
ஆக்கலாம் என்றனர். ஆனால் தமிழை செம்மொழி ஆக்க வேண்டும் என்றால், அதற்கு
ஆயிரம் ஆண்டுகள் தான் என்று மத்திய அரசு உத்தரவுபோட்டு இருந்தது.

அப்போது மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அர்ஜுன் சிங் அமைச்சர். ஆனால்
இத்துறையில் அதை சேர்க்காமல் பண்பாட்டுத்துறையிலிருந்து அறிவிப்பு
செய்தார்கள். மத்தியில் இதை ஏற்கவில்லை. தமிழை கல்வி துறையில் செம்மொழியாக
அறிவிக்கவில்லை. தமிழை செம்மொழியாக அறிவித்த துறை எது என்றால் பண்பாட்டுத்
துறை. ஆயிரம் ஆண்டுகளாக அறிவித்ததன் நோக்கம் என்னெவன்றால் வங்காளம்
குஜராத்தி, கன்னடம், தெலுங்கு என ஆயிரம் ஆண்டுகளாக உள்ள எல்லா மொழிகளையும்
ஒன்றுசேர்த்து இதை இரண்டாம் தர செம்மொழியாக ஆக்குவதற்கான திட்டம்.

மணவை முஸ்தபா தான் அதை (தமிழை செம்மொழியாக) கொண்டு வர எதிர்த்து பெரும்
குரல் கொடுத்தார். அவர் தினமணியில் ஓர் கட்டுரை எழுதி, அதன் பின்னர் தான்
எல்லோ ருக்கும் தெரிந்து அதிர்ச்சியடைந்தார்கள். அதன் எல்லா தலைவர்களும்
கண்டித்தார்கள், போனார்கள். பிரச்சனை ஆனது. முஸ்தபாமீது கோபப்பட்டு என்ன
செய்ய முடியும் எல்லா வெட்ட வெளியாக ஆகிவிட்டது. அதன்பின் என்னென்னவோ பேசி
பின் 1500 ஆண்டுகள் என்று அறிவித்தார்கள். அதன் பின் கன்னடர்கள்
தம்மொழியையும் 1500 ஆண்டுகள் என்று அறிவிக்க வேண்டும் என்கின்றனர். இதில்
ஒன்றும் சந்தேகம் இல்லை. இப்போது என்ன பத்தோடு ஒன்று பதினொன்றாக தமிழ்
உள்ளது. சமஸ்கிருதத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள்.
ஆனால் தமிழுக்கு வெறும் 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். பேருக்கு
செம்மொழி என்று அறிவித்து விட்டு இதை காட்டி மக்களை ஏமாற்றும் போக்கு இது.
அது செம்மொழி என்று அறிவிப்பு டெல்லியில் இருந்து வந்த மறு வாரமே அவருக்கு
மதுரையில் ஒரு மாபெரும் பாராட்டு விழா. அதற்கு 10 தமிழ் அறிஞர்களை
அழைத்தனர்.

ஆனால் மணவை முஸ்தபா தான் தைரியமாக வர மாட்டேன் என்று அறிவிப்பு செய்தார்.
ஆனால் மற்றவர்கள் எல்லாம் போனார்கள். இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும்
போக்கு. உண்மையிலே செம் மொழி என்று முழுமையிலே ஆகவில்லை. தமிழுக்கு அந்த
அந்தஸ்து முழுமையாகக் கிடைக்கவில்லை. சமஸ்கிருதத்துக்கு சரிசமமாக கூட
தமிழை வைக்க தயாராக இல்லை டெல்லியில். ஆனால் இங்கு அவர்கள் மக்களை திசை
திருப்பி ஏமாற்றி தமிழை இந்திய அரசு செம்மொழியாக ஆக்கிவிட்டது என்று ஒரு
தோற்றத்தை ஏற்படுத்தி பாராட்டு விழாவெல்லாம் நடத்தினார்கள். எனக்குக் கூட
சந்தேகம் தான். ஏனென்றால் செம்மொழி அறிவிப்பு வந்த அடுத்த வாரமே மதுரையில்
பாராட்டு விழா. ஓர் மாதத்திற்கு முன்னரே அவர்களுக்கு செய்தி
தெரிந்திருக்கும். எனவே பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து கொண்டு
பின்னர்தான் இதைஅறிவித்து விட்டார்களோ என்னவோ! இவ்வளவு கேவலமான நிலை
உள்ளது. இது மட்டும் இல்லை பல துறைகளில் உள்ளது. கடந்த முறை கருனாநிதி
முதல்வராக இருந்த போது என்ன உத்தரவு போட்டர் தமிழிலும் அர்ச்சனை
செய்யப்படும் என அறிவிப்பு செய்தார்கள். இப்போது கோவில்களில்
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு சமஸ்கிருதத்தை
நேரடியாக எதிர்ப்பதற்கு தைரியம் கிடையாது.

களப்பணி

மக்களிடம் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும். இது தான் இப்போதைய
களப்பணி.அதற்காக தடா, பொடாபோன்ற எந்த அடக்குமுறையையும் ஏற்க நாம் தயாராக
இருக்க வேண்டும். சிறை செல்வதற்கோ வேறு எதற்கும் நாம் அஞ்சக் கூடாது.
காரணம் இவர்கள் அனைவருமே ஓர் 40 ஆண்டு காலமாக மேடையில் வீர முழக்கம்
செய்து கொண்டு இருந்தார்கள் தமிழ், தமிழ் என்று. இதைக் கேட்டுக் கேட்டு
மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். இப்போது நாமும் போய் தமிழ் என்று
பேசும்போது மக்கள் நம்ப மறுக்கிறார்கள்.

ஏனென்றால் தமிழ், தமிழ் என்று பேசி அவர்கள் இந்த 40 ஆண்டு காலத்தில்
செய்யாததை இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று எண்ணுகிறார்கள். அதனால்
நாம் செய்யும் தொண்டுகள் மற்றும் தியாகங்கள் மூலம் தான் மக்களுக்கு
தெரிவிக்க முடியும். மக்களை சொல்லியும் தவறில்லை. ஏனென்றால் மக்களை
இவர்கள் ஏமாற்றி உள்ளனர். அதனால் இப்போது மேடையில் யார் தமிழ் என்று
பேசினாலும் நம்ப மறுக்கிறார்கள். இதை உடைத்தெறிய நாம் மக்களோடு இணைந்து
போராட வேண்டும். இதற்காக சிறை தண்டனை அனுபவிக்கவும் தயாராக இருக்க
வேண்டும். அப்போது தான் மக்கள் நம்புவார்கள்.

இளைஞர்களை நம்பி நாம்

இதை ஒரு ரிலே ரேஸ் மனம் என்றுதான் கூறவேண்டும். இதிலே நான்கு பேர்
இருப்பார்கள். முதல் வட்டம் நான் சென்று விட்டு பின் இரண்டாவது ஒருவர்
என்று மாறி மாறி எல்லோருக்கும் வாய்ப்பு தரவேண்டும். ஆனால் 4 வட்டமும்
நானே தான் செல்வேன் என்றால் சரிவராது. இப்போது இதை நாம் தடகளம் மாதிரி
செயல்பட்டு இந்த தலைமுறையில் சரியாக வேண்டும் அல்லது அடுத்த தலைமுறை
இளைஞர்களாவது சரி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையோடு இளைஞர்களை உருவாக்க
வேண்டும். இன்றைக்கு உள்ள காலக்கட்டத்தில் நாங்கள் அதைத்தான் செய்கிறோம்.
எங்கள் தலைமுறையிலே அது முடிய வேண்டும். முடிந்தால் மகிழ்ச்சி இல்லை
என்றாலும், அதைத் தலைமுறையிலாவது முடிக்க வேண்டும். அதைத் தான் நாம் செய்ய
வேண்டும். மறைமலை அடிகளார் காலம் முதல் 100 ஆண்டு காலமாக எத்தனையோ
அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் தமிழ் தேசிய உணர்வை மக்களிடம்
ஊட்டுவதற்கு விடாமுயற்சி செய்து வருகின்றனர். மறைமலை அடிகளார், பாவாணர்
போன்றோர் தமிழுக்காக எழுதி எழுதி கரைந்துப் போனார்கள். எந்த ஒரு
இனத்திலேயும் மக்களிடம் இன உணர்ச்சியை ஊட்டுவதற்காக 100 ஆண்டு காலம்
போராடும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. எந்த மொழி எடுத்தாலும், 20, 30
ஆண்டுகளில் அது முடிந்துவிடும். ஆனால் இங்கே 100 ஆண்டு காலம் உணர்ச்சி
ஊட்டிய பிறகும் கூட அது திசைத் திருப்பப்பட்டு, பின் ஒவ்வொரு
காலக்கட்டத்திலும் திணிக்கப்பட்டு உள்ளது. அப்படியும் மீறி தான் அது
வளர்ந்து கொண்டே உள்ளது. இப்படி நாம் அந்த அறிஞர்களாலும், தலைவர்களாலும்
உணர்வூட்டப்பட்ட மக்களாக மீதமிருக்கிறோம். இவர்களின் காலத்திலே நாம்
அடுத்தத் தலைமுறைைய நாம் உருவாக்கி விட்டுச் செல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் இதை பின்னால் செய்ய ஆள் இல்லாமல் போய்விடுவார்கள். எனவே,
அதை நாம் கட்டாயம் செய்தே தீர வேண்டும்.

இந்தி எதிர்ப்பு போர்

1965 ல் இந்தி எதிர்ப்பு விடுதலை போராட்டம் நடந்தது. அப்போது மாணவர்கள்
நாம் பாதிக்கப்படுவோம், நம் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற உணர்வில்
கொதித்தெழுந்து போராடினார்கள். அப்போது இப்போராட்டத்தை யாரும் கண்டு
கொள்ளவில்லை. அந்த போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை என்றார்கள். மாணவர்கள் கொதித்து போராடினார்கள். தமிழகம் முழுவதும்
கொதித்தெழுந்தது. இதுபோன்ற ஓர் போராட்டம் இதற்கு முன்பும் இல்லை, பின்பும்
இல்லை. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் என்ன ஆயிற்று என்றால் 1967
ல்ஆட்சிக்கு வருவதற்கு அதை ஒரு காரணமாக அந்தப் போராட்டத்தை அறுவடை செய்து
கொண்டார்கள். அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு இந்தப் போராட்டத்தை
பயன்படுத்திக் கொண்டனர். ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன செய்தார்கள்.
ஒன்றுமே செய்யவில்லை.நினைவுப்படுத்திக் கொள்ளுஙட்கள் இரயில்வே நிலைய பெயர்
பலகைகளில் இந்தி இருக்கக் கூடாது என்று அழித்தார்கள் தி.மு.க.வினர். இன்று
தி.மு.கவைச் சார்ந்த டி.ஆர்.பாலு தான் மத்தியிலே நெடுஞ்சாலைத்துறை
அமைச்சர். இப்போது தமிழ்நாட்டின் மைல் கல்லில் எல்லாம் இந்தி
வந்துவிட்டது. ஏன்? இரயில்வே பெயர் பலகையில் கூட இந்தி வரக்கூடாது
என்றவர், இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது மைல்கல்லில் கூட இந்தி
வருகின்றதே அது எப்படி? இப்படி ஒவ்வொன்றையும் அவர்கள் திசை
திருப்புகிறார்கள். சுயநலத்தோடு செயல்பட்டு நம்முடைய போர் குணத்தையும்
மழுங்கடிக்கிறார்கள்.

தியாகத் தலைவர்கள்

நாட்டில் இவர்களால் ஏற்பட்டுள்ளது அரசியல் சீரழிவு மட்டுமல்ல, மொழி
சீரழிவு, நாட்டு சீரழிவு என எல்லாமும் செய்தார்கள். முன்பு நீங்கள்
பார்த்தீர்களானால் இராஜாஜி, பெரியார், காயிதேமில்லத், ஜீவானந்தம் போன்றோர்
மிகப் பெரிய தலைவர்கள் தியாகம் செய்தவர்கள். அதில் ஒன்றும் சந்தேகம்
கிடையாது. இவர்களுக்குள் எத்தனையோ விசயங்களில் கருத்து வேறுபாடு உள்ளது.
ஆனால் தமிழ், தமிழ்நாட்டு பிரச்சனை என்னும்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து
கொண்டனர். அப்போது மாநிலம் பிரியும்போது சென்னை மாநகரம் மனதே என்று ஆந்திர
மக்கள் சென்னையில் ஊர்வலம் வந்து விட்டனர். நேரு இரு மாநிலங்களுக்கும்
சென்னை பொதுத் தலைநகரமாக இருக்கட்டும் என்றார். அப்படி நாம் சரி என்று
ஏற்றுக் கொண்டு இருந்தோமேயானால் இன்று அரியானாவும், பஞ்சாபும் குடுமி
பிடித்து சண்டிகர் பிரச்சினையில் அடித்துக் கொள்வது போல் நாமும்
இருந்திருப்போம். 1954ல் இராஜாஜி தான் முதல் அமைச்சர். அவர் நேருவுக்கு
ஓர் கடிதம் எழுதினார். எப்போது அவர்கள் தனி மாநிலம் என்று, பிரிந்து
போனர்களோ அதற்கு பின் இருவருக்கும் தனி தலைநகரம் தான் வேண்டும். இதை
நீங்கள் ஏற்க மாட்டீர்கள். வற்புறுத்தினால் இந்த கடிதமே என் இராஜினாமா
கடிதமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தார். இராஜாஜி அவ்வாறு
அறிக்கை கொடுத்தவுடன் இராஜாஜி என்ன அறிக்கை கொடுத்தாலும் எதிர்த்து
அறிக்கை கொடுக்கும் தந்தை பெரியார், ராஜாஜியை ஆதரித்து அறிக்கைக்
கொடுத்தார். அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த
காமராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டி ஒரு தீர்மானம்
போட்டார். சென்னை தமிழனுக்கு தான் சொந்தம் என்று. ஜீவானந்தம்
கொடியுயர்த்தினார். அப்போது காயிதேமில்லத்தும் சென்னை தமிழனுக்கு தான்
சொந்தம் என்று அறிக்கையிட்டார்.அவர் அரசியல் நிர்ணய சபையிலே பேசியவர்.
நாட்டுக்கு ஆட்சிமொழி என்று ஒரு மொழிக்கு தகுதியிருக்குமேயானால் என்னுடைய
தாய் மொழி தமிழ்தான் என்று கூறினார். இப்படி அவர்களுக்குள் எவ்வளவு
கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் அடிப்படை பிரச்சனையில் ஒன்றிணையும்
பண்பாடு அவர்களிடம் இருந்தது.

ஆனால் இப்போது என்ன நிலை உள்ளது? காவிரிப் பிரச்சனையில் கருணாநிதி ஓர்
நிலைப்பாடு எடுத்தால் ஜெயலலிதா ஓர் நிலைப்பாட்டைக் கூறுகிறார். அந்த அம்மா
டெல்லிக்குப் போய் பேசலாம் என்று கூறினால், அவர் வர மாட்டேன் என்கிறார்.
முன்பு தமிழ்நாட்டில் இருந்த சுமுகமான அரசியல் சூழ்நிலையைக்
கெடுத்தார்கள். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதி தான். ஏனென்றால் எதை
எடுத்தாலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவது, யாரானாலும் என்ன
வேண்டுமானாலும் பேசுவது, இவர் கருத்துக்கு மாறுபட்ட கருத்துக் கூறினால்,
அவர்களை கன்னா பின்னாவென்று திட்டுவது, பிறகு எப்படி ஒத்துழைப்பார்கள்.
இப்படியோர் மோசமான சூழல், சீர்கேடு அடைந்த அரசியல் உருவாகி விட்டது.
இதனால் ஒகேனக்கல், காவேரிப் பிரச்சினை, பெரியார் பிரச்சினை, பாலாறு போன்ற
பிரச்சினையில் சேது கால்வாய் பிரச்சினையில், கச்சத்தீவு பிரச்சினைகளில்
ஒருமித்த கருத்து என்ற அத்தியாயத்தையே தமிழ் நாட்டில் உருவாக்க
முடியவில்லை. அதை டில்லி பயன்படுத்திக் கொண்டது. காவேரி பிரச்சினையில்
அப்போது நடுவர் மன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது. 205 டிம்சி தண்ணீர்
கொடுக்க வேண்டும் என்று உடனடியாக கர்நாடகத்தில் இருந்து முதலமைச்சரும்
முன்னால் முதலமைச்சர் நான்கு பேரும் மொத்தம் ஐந்து பேரும் ஒன்றாக
டெல்லிக்கு பறந்தார்கள். எதிர் கட்சித் தலைவர்களானாலும் பிரதமரை பார்த்து
இதை நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று 5 பேரும் இணைந்து கூறினர்.
அவர்களால் சொல்ல முடிகிறது. எதிரும் புதிருமான கட்சி பி.ஜே.பி.,
காங்கிரஸ், ஜனதா எல்லா கட்சியும் ஒன்று கூடி தானே சென்றார்கள்.
இன்றைக்கும் ஒன்று சேர்ந்து தானே நிற்கிறார்கள். முல்லை பெரியாறு அணையில்
தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று காங்கிரசும் சொல்கிறது. கம்யூனிஸ்டும்
சொல்கிறது. ஏன் இங்கு மட்டும் தனித்து நிற்கிறார்கள். இங்கு முல்லை
பெரியார் அணை பிரச்சினையால் பாதிப்படைந்துள்ளோம். ஏதாவது செய்யுங்கள்
என்று சொல்வதற்குக் கூட ஒற்றுமையில்லை. இந்தசீரழிவினால் என்ன நடந்தது
என்றால் நமக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ அது கூட டெல்லியில்
இருந்து கிடைக்காமல் போகிறது. டெல்லியில் உள்ளவர்கள் நம்மைப் பற்றி
கவலைப்பட வேண்டியது இல்லை. அவர்கள் ஒற்றுமை யாக நின்று பேசுகிறார்கள்.
எனவே அவர்கள் பிரச்சனையைத் தான் முதலில் பார்ப்போம். இவர்கள் ஒற்றுமையாகி
வரும் போது பார்க்கலாம். அரசியல் பிரச்சினையை விடுங்கள். மீனவர்களை தினசரி
சுடுகிறார்கள் சார்க் மாநாடு அங்கு நடந்துக் கொண்டு இருக்கும் போதே இரண்டு
பேரை சுட்டு விடுகிறார் கள். இதில் இருந்து என்ன தெரிகிறது. நமக்கும்
மரியாதை இல்லை. நம்முடைய சொல்லுக்கும் மரியாதை இல்லை. இதற்கு காரணம்
என்னவென்றால் நம்மிடம் ஒற்றுமை இல்லை.

சிபுசோரன் மலைவாசிகளின் தலைவன். அவருக்கு ஜார்கன்ட் மாநிலத்தில் ஆறு ஓட்டு
இருக்கு மக்களவையில் இந்த நெருக்கடியில் அவர் வைத்த நிபந்தனை என்னவென்றால்
அகண்ட ஜார்கண்ட் வேண்டும். மத்திய பிரதேசத்தில் ஒரிஸா உள்ள ஜார்கண்ட்
பிரதேசம் எல்லாவற்றையும் இணைக்க வேண்டும்.அப்போது தான் ஓட்டுப் போடுவேன்
என்று கூறுகிறார். காவேரி பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சனை,
உச்சநீதிமன்ற தீர்ப்பை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் எங்கள் ஆதரவு
உங்களுக்கு இல்லை என்று கருணாநிதி சொல்லட்டுமே.

டெல்லியில் வேட்டிக் கட்டிய தமிழனின் ஆட்சி என்று கூறும்போது எங்கள் ஆதரவு
இல்லாமல் உங்கள் ஆட்சி நடைபெறாது என்று இங்கு மேடையில் பேசுகிறீர்கள்
அல்லவா? அதை போய் அங்கு கூறுங்கள். மன்மோகன் சிங்கிடம் இவர் வைத்த ஒரே
கோரிக்கை அந்த நெருக்கடியான சூழ்நிலையில் காவேரி பிரச்சனையோ, கச்சத்தீவு
பிரச்சனையோ, ஒகேனக்கல் பிரச்சனையோ, மீனவர் பிரச்சனையோ அல்ல. மகளுக்கு
மந்திரி பதவி. அந்த ஒரே கோரிக்கை தான். அதுவும் நடைறெவில்லையே.

தமிழீழப் பிரச்சினையும், இந்திராவும்

இந்திரா காந்தி அவர் ஆட்சியில் இருந்தபோது அவருக்கு தொலைநோக்கு பார்வை
இருந் தது. அதனுடன் ஆளுமை திறன் இருந்தது. 1983 கொழும்பில் ஓர் பெரிய
இனக்கலவரம் ஏற்பட்ட போது 3,000 பேர் படுகொலை செய்யப்பட்ட போது இந்திரா
அவர்கள் உடனடியாக என்ன செய்தார்கள் என்றால் ஜினோசைடு என்ற வார்த்தையைப்
பயன்படுத்தினார்கள். இனப்படு கொலை அங்கு நடைப்பெறுகிறது. அதைப் பார்த்துக்
கொண்டு இந்தியா அமைதியாக இருக்காது என்றார். அடுத்த நிமிடமே கலவரம் நின்று
விட்டது. அது மட்டும் அல்ல சீனியர் மோஸ்டு டிப்ளமேட் ஜி.பார்த்தசாரதியை
அங்கு அனுப்பி வைத்தார். எங்கேயோ ஓர் சின்ன நாடு. அதில் ஓர் பிரச்சினை.
அதற்கு எதற்கு சீனியர் மோஸ்ட் டிப்ளமேட் அனுப்ப வேண்டும் என்று
நினைக்கவில்லை.

முக்கியமான பிரச்சனைக்கு தான் அவர் வருவார். இல்லையென்ற
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  இன்னும் ஆறு ஆண்டுகளில் அமெரிக்காவை மிஞ்சப் போகும் சீனா!
» Facebook இல்லாத உலகம் இன்னும் 8 ஆண்டுகளில் நிச்சயமாம்?
»  பத்து ஆண்டுகளில் 650 கோடி ரூபாவைக் கரைத்த மன்மோகன்சிங்! - வெளிநாட்டுப் பயணச் செலவுகளை பட்டியல் போடுகிறது இந்தியா டுடே.
» 13 வது சீர்திருத்தத்தினை இந்தியா ஆதரிக்கும்! வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி இந்தியா மெளனம்
» நம்புங்க! * இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு * விராத் விளாசினார் "வீர' சதம் * இந்தியா "சூப்பர்' வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum