TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 8:58 pm

வைகுண்ட பதவி, சிவலோக பதவி ஆகியவற்றை பற்றி அரசியல்வாதிகள் சிந்திப்பது இல்லையே ஏன்?
- ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.



அதற்கு
காரணம்- அந்த பதவிகளை அடையும்போது, அதை அனுபவிக்க அவர்கள் இருப்பது இல்லை.
யாராவது அரசியல் தலைவரிடம் சென்று உங்கள் கொள்ளுப்பேரனின் மகனுக்கு 5 கோடி
ரூபாய் தர ஏற்பாடு செய்கிறேன். எனக்கு இந்த வேலையை செய்து தாருங்கள் என்று
கேட்டு பாருங்கள். ஒப்புக்கொள்வாரா? அவர் உயிருடன் இருக்கும்போது அவர்
கையிலேயே பணம் வைத்தால் தான் ரசிப்பார். பதவியும் அப்படித்தான்.

logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 8:58 pm

பத்திரிகைகளில் சில நிருபர்கள் ப்ரீலான்சர் என்கிறார்களே அப்படி என்றால் என்ன அர்த்தம்?- சுகந்தாமோகன், சென்னை.


சுமார்
500 வருடங்களுக்கு முன்பு, யுத்தம் வரும்போது எல்லாம் மன்னர்களுக்கு நிறைய
வீரர்கள் தேவைப்படுவார்கள். ஆகவே, வெளியில் இருந்து தன் கீழே நிரந்தரமான
பணியில் இல்லாத, வீரர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டு கையில் ஈட்டியை
கொடுத்து போருக்கு அனுப்புவர்கள். அந்த போருக்காக மட்டும் தற்காலிக
வீரர்கள் அவர்கள் தான் ப்ரீலான்சர்கள் என்று அழைக்கப்பட்டனர். பிற்காடுஅந்த
பெயர் (ஈட்டிக்க பதிலாக) பேனா பிடிப்பவர்களுக்கு எப்படி வந்தது என்று
தெரியவில்லை. இப்போது பணத்துக்காக ஒரு யுத்தத்தில் போரிடும் வீரர்களுக்கு
மெர்ஸனெரி என்று பெயர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 8:59 pm

நாய்கள்அசந்து தூங்குவது இல்லையே, ஏன் சார்?
-ராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்



ஒரு
காலத்தில் நாய்கள் காட்டில் வசித்தபோது திடீர் என சிறுத்தைபோன்ற மற்ற
மிருகங்கள் அவை மீது பாயலாம். ஆகவே, அசந்துதூங்க முடியாது. இப்போது அவை
மீது மனிதன் கல் எறிகிறான். வாலை மிதிக்கிறான். திடீர் என்று நாய் வண்டியை
அனுப்புகிறான். இப்போதும் அசந்து தூங்க முடியவில்லை. பாவம். மொத்தத்தில்
நாய்களுக்கு நிம்மதியான தூக்கமே போச்சு. (உண்மையில், நாய்களுக்கு அந்த
தூக்கமே போதும்)
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:00 pm

அந்த ஆளு மூஞ்சியில முழிச்சாலே ஒண்ணும் உருப்படாது என்கிறார்களே அதுஉண்மையா, பிரமையா?


- என்.கே.ஈஸ்வரி, பெங்களூர்.


பூனை
சகுனம் மாதிரி தான் இதுவும். நாம் வெளியே கிளம்புபோது பூனை குறுக்கே
போனால் என்ன அர்த்தம்? பூனை குறுக்கே போகிறது என்று தான் அர்த்தம். போன
காரியம் நடக்கவில்லை என்றால், சற்று யோசித்து பூனை குறுக்கே போனதை நினைவு
படுத்தி கொள்கிறோம். இது போன்ற சகுனங்களுக்கு எல்லாம் விஞ்ஞான ஆதரங்கள்
கிடையாது. ஆனால் உண்டு என்கிறார் என் நண்பர் ஒருவர். நண்பரின் மனைவி அவர்
வீட்டுக்கு போனபோது புடவை ரொம் நல்லா இருக்கே என்றார்அந்த பெண்மணி.
நண்பரின் மனைவி திரும்பி சாலையை கடக்கும்போது சைக்கிள் மோதி கீழே விழுந்து
புடவை எல்லாம் சேறாகிவிட்டது. அதிலிருந்து புதுசாக ஏதாவது
உடுத்திக்கொண்டால் அவர் எட்டிப் பார்த்து, எதிர்வீட்டு பெண்மணி வாசலில்
இல்லை என்று உறுதிப்படுத்தி கொண்டு, உடனே தெருக்கோடி வரை ஓட்டம்
எடுக்கிறார். நம்பிக்கை தான் காரணம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:00 pm

இந்த
வெயிலிலும் காலில் செருப்பு அணியாமல் தெருத்தெருவாக அலைந்து வியாபாரம்
செய்கிறார்களே. அவர்களின் கால்கள் என்ன மரத்துப் போய் விடுமா? எனக்கு
எல்லாம் செருப்பு இல்லாமல் கொஞ்சம் தூரம் நடந்தாலே கொப்புளம் வருகிறதே
எப்படி?



மரத்துப் போகாது. காய்ச்சுப்
போய்விடும்! அதாவது, பாதத்தின் அடிப் பகுதியே தோலால் ஒரு "செருப்பை'த்
தயாரித்துக்கொள்கிறது! ஆனால், ரொம்ப சூடு என்றால் தாங்காது. எட்டாவது
வகுப்பு முடிக்கும் வரை நானும் செருப்பு அணிந்தது இல்லை. அப்போது செருப்பு
இல்லாமல் ஆறேழு மைல்கள் கூட நடந்து இருக்கிறேன். இப்போது, வெயிலில் ஐந்து
அடிகள் கூட நடக்க முடியாது. திடீரென்று பாதத்தைத் திகைக்கவைத்தால் எப்படி?!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:01 pm

நமது நாட்டில் மறைமுகமாக மன்னர் ஆட்சி நடப்பது போல் தெரிகிறதே?

மறைமுகமாகவா?!
அதாவது கிரீடம், யானை மேல் பவனி வருவது எல்லாம் இல்லாமல்... என்கிறீர்களா?
ஒன்றை நாம புரிஞ்சுகணும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மன்னராட்சி ஒன்றுதான்
நமக்கு தெரியும் (விக்டோரியா மகாராணி உட்பட) அது நம்ம மக்களோட ரத்தத்தில்
ஊறிப்போயிடுச்சு! நம்ம நாட்டிலே இருக்கிறவங்களில் 70 சதவிகிதத்துக்கும்
மேலே படிப்பறிவு இல்லாத கடும் வறுமையிலே தவிக்கிற "இலவசங்களால்'
மயக்கப்படுகிற ஏழை மக்கள். சும்மா ஃப்ரெண்ட்ஸ்கிட்டே அரசியல் பற்றி குறை
சொல்லிக்கொண்டு, ஓட்டுப் போடக்கூடப் போகாத நடுத்தர வர்க்கம். பிசினஸ்
நல்லபடியாக நடக்கப் பணத்தை அரசியல்வாதிகளிடம் தூக்கி எறிந்தால் போதும்
என்று நினைக்கும் பணக்கார வர்க்கம்... ஜனநாயகம் எப்படி ஓங்கித் தழைக்கும்?
எந்த அவலத்தையும் மாற்றக்கூடிய வல்லமை மக்கள் கருத்துக்கு இருந்தால்...
அதுதான் ஜனநாயகம். நம்முடையது நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஜனநாயகம். ஆகவே,
இந்தியா முழுவதும் நடப்பது உண்மையில் மன்னர் ஆட்சிதான். இதை ஆதாரங்களோடு
விவரிக்கப் பல பக்கங்கள் தேவைப்படும்! (பல முதிர்ந்த ஜனநாயக நடுகளில்
"வாழ்க' கோஷம் கூடக் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?!)
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:01 pm

வாய் இல்லாப் பிராணிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சம்பவம் முன்பு எப்போதாவது நிகழ்ந்தது உண்டா?

ஒரு
சிறுவன் மீது பெரிய பன்றி ஒன்று பாய்ந்து கடித்துக் குதறிவிட்டது. பையன்
செத்துப் போனான். பன்றி மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில்
நீதிபதி அதற்குத் தூக்குத் தண்டனை விதித்தார். இது நடந்தது. பிரான்ஸில்.
1386-ம் ஆண்டு! எனக்குத் தெரிந்தவரையில் அண்மையில் இது போன்ற "வழக்கு'
எதைப்பற்றியும் நான் படித்தது இல்லை!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:02 pm

உண்மையிலேயே கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து அவ்வளவு பெரிய வசனம் பேசினாரா?

வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆங்கிலேயர் வரி கேட்டபோது சிவாஜிகணேசன் மாதிரி வசனம் பேசினாரா?


ஆங்கிலேயர்கள்
ரொம்பத் "தெனாவட்டாக'த் திரிந்த காலம் அது. நிலைமை புரியாமல் கட்டபொம்மன்
"வெள்ளைக்காரப் பசங்களுக்கு நான் ஏன்யா வரி கட்டணும்?' என்று நிச்சயமாக
முரண்டு பிடித்திருப்பார். "என்னா மேன், திமிரா பேசறே?' என்று சொல்லி,
உடனடியாக கங்காரு கோர்ட் ஸ்டைலில் மேஜை போட்டு "நீதிபதி' ஒருவரை
உட்காரவைத்து தீர்ப்பு எழுதி, கட்டபொம்மனைக் கைது செய்து, அருகில் இந்த ஒரு
புளியமரத்தில் தூக்கில் தொங்கவிட்டார்கள். "என் கவுன்ட்டர்' மாதிரிதான்!
பிரிட்டிஷ் சிப்பாய்கள் துப்பாக்கிகளை வைத்து குறி பார்த்தால், கூடி இருந்த
மக்கள் மிரண்டு போய் நின்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்று - சிவாஜி பேசிய
வசனத்தை கட்டபொம்மனிடம் கொடுத்திருந்தால் "அட, ரொம்ப பிரமாதமா இருக்கே!'
என்று பிரமித்து, அதை அப்படியே பேசி இருப்பார். அதற்கான நேரத்தை
வெள்ளைக்காரர்கள் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:03 pm

என்
நண்பன் "நெட்' டில் நோய்களைப் பற்றி எல்லாம் படித்துவிட்டு எல்லா
நோய்களும் தனக்கு இருப்பதாகப் பயந்து போயிருக்கிறான். தினமும் டாக்டரை
ஒருமுறையாவது இவனுக்குப் பார்த்தாக வேண்டும்! இது மனோ வியாதியா?


ஒரு
வகையில் ஆமாம்! இதற்கு "ஹைப்ப காண்ட்ரீயா' என்று பெயர். அப்படிப்பட்ட
ஒருவர் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்
டாக்டரின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார். "டாக்டர்! அப்படியே நான்
இறந்துவிட்டால் ஏதாவது ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் ஓர் இடத்தில் என்னைப்
புதைத்துவிடுங்கள்... அருகில் டாக்டர்கள் இல்லாவிட்டால் என்னால் முடியாது!'
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:04 pm

மகாபாரதப் போரில் எல்லாருமே அம்பரா தூணியில் மூன்று நான்கு அம்புகளே வைத்துள்ளார்கள். 18 நாட்களுக்கு இத்தனை அம்புகள் போதுமா?


எப்படி
போதும்! ஓவியங்களில் "சிம்பாலிக்' ஆகக் காட்டுகிறார்கள்! உண்மையில்
ரதத்தின் பின்னால் கூடை கூடையாக அம்புகள் ரெடியாக இருக்கும். பியான்ஸே
நோல்ஸ் என்னும் பிரபல பாப் இசைப் பாடகி, மேடையில் டான்ஸ் ஆடும்போது
சூயிங்கம் மெல்வார். பிறகு, பாட ஆரம்பிக்கும்போது அதைத் துப்புவார்.
துப்பிய சூயிங்கத்தைக் கையில் ஏந்திக் கொள்வதற்காகவே ஒருவர் உண்டு! அப்படி
இருக்க, அர்ஜுனனுக்குத் தொடர்ந்து அம்புகள் எடுத்துக்கொடுக்க ஒரு வீரர்
அவர் பின்னாலே இருக்கமாட்டாரா என்ன? (எதையும் ஒப்பிடுவது என்பதில் ஒரு
விவஸ்தை கிடையாதா என்கிறீர்களா?!)
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:04 pm

தத்துவ ஞானிகளில் பெரும்பாலானோர் நாத்திகர்களாக இருப்பது ஏன்?

சிந்திப்பவன்
நாத்திகனாக இருக்க முடியும். சிந்திக்காதவன் மூட நம்பிக்கையில் மட்டுமே
உழன்றுகொண்டு இருப்பான். தத்துவவாதிகள் தீவிரமாகச் சிந்திப்பார்கள்.
அவர்கள் "கடவுள் யார்?' என்றுகூடக் கேட்க மாட்டார்கள். "கடவுள் என்ன?
,"கடவுள் எதற்கு?' என்றுதான் சிந்திப்பார்கள், சாக்ரடீஸ், ஸெனேகா,
மான்ட்டேய்ன், ரஸ்ஸல் எல்லோருமே நாத்திகவாதிகள்தான். அதாவது நீங்கள்
சுட்டிக்காட்டுகிற கடவுளை நம்பாத பகுத்தறிவாளர்கள்!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:05 pm

தன்னம்பிக்கை நூல்கள் வாழ்க்கைக்கு உதவாது. அவை. சோர்வாக இருக்கும்போது ஒரு டீ குடிப்பது போலத்தான் என்றால் ஒப்புக்கொள்வீர்களா?


அது
படிப்பவரைப் பொருத்து! தன்னம்பிக்கை நூல்கள் "செய்முறைப்
புத்தங்கள்'தான்.அது உங்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத்தராது. அதற்காக
ஆர்வத்தை வேண்டுமானால் ஏற்படுத்த முடியும். நீங்கள்தான் சைக்கிள் ஓட்டிப்
பழகிக்கொள்ள வேண்டும். சில சிமயம், எவரெஸ்ட் உச்சி 100 அடிகள் தொலைவில்
இருக்கும்போது, இனிமேல் முடியாது என்று நீங்கள் தி க்கும் நேரத்தில்
"ஸ்டிராங்' ஆக ஒரு டீ அடித்து விட்டு, கிடுகிடுவென்று சிகரத்தைத் தொட்டுவிட
முடியும்!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:05 pm

குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் நோய் தொற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?


குழந்தைக்கு நோய் தொற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


வியாதிகள் பரம்பரையாக வரும் போது அறிவு மட்டும் பாரம்பரியமக வராதா?



வியாதிகள்
உடல் சம்பந்தப்பட்ட. உதாரணமாக, பெற்றோரிடம் இருந்து "ஜெனடிக்' ஆக சர்க்கரை
நோய் குழந்தைக்கு வரும் வாய்ப்பு அதிகம். மூளை (மற்றும் அதன்
"கனெக்ஷன்'கள்) சம்பந்தப்பட்டது அறிவு. அது கொள்ளுத் தாத்தாவிடம்
இருந்துக்கூட பேரனுக்கு "ஜம்ப்' ஆகும். அல்லது கொள்ளுத்தாதாத்தா முட்டளாக
இருந்தால், கொள்ளுப் பேரனும் அப்படியே இருக்கக்கூடும். ஆகவேதான்,
மேதைகளுக்கு அறிவு குறைந்த பிள்ளைகள் பிறப்பது உண்டு!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:07 pm

பொதுவாக,
நாம் பூங்காவில் காண்பது; புல், மரம், செடி, மலர்கள் போன்றவையே. அவ்வாறு
இவை அனைத்தும் இருக்க எதற்காக அதை பார்க் என அழைக்கிறோம்?


அது
பண்டைய ஜெர்மானிய வார்த்தை. "பார்க்' என்றால் "பாதுகாப்பான தனி இடம்'
என்று பொருள் 19-ம் நூற்றாண்டில்தான் வாகனங்களை நிறுத்தும் இடத்துக்கு
அந்தப் பெயர் வந்தது. மற்றபடி பூங்கா என்பதும் தனி இடம்தானே?! இப்போது
சென்னையில் ஏராளமான பூங்காக்களை மாநகராட்சி உருவாக்கிக்கொண்டு இருப்பது
மகிழ்ச்சியான விஷயம். அவற்றைப் பாதுகாப்பான இடங்களாவும் எப்போதும்
வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்!
கறுப்பு விதவைச் சிலந்தியிடமிருந்து அவற்றின் கணவர்கள் தப்பித்தது உண்டா?


அநேகமாகக்
கிடையாது. கறுப்பு நிறம் கொண்ட பெண் சிலந்தி உடலுறுப்பு கொள்ளும்போதே
ஆணைச் சாப்பிட்டுவிட்டு விதவையாகவும் ஆகிவிடுவதால்தான் அதற்கு விதவைச்
சிலந்தி என்று பெயர்!


ஆங்கில அரசு ஆண்களுக்கு "சர்' பட்டம் வழங்கியதே. இதுபோல பெண்களுக்கு ஏதாவது...?



ஆகா!
"மர்ம நாவலின் மகாராணி' என்று அழைக்கப்பட்ட அகதாகிறிஸ்டி கூட அந்தப்
பட்டத்தை (பிரிட்டிஷ் மகாராணியிடம் இருந்து!) 1971-ல் வாங்கினார்.
அவ்வளவு
உறுதியான ஓட்டுக்கள் இருக்கும் ஆமைகள் எவ்வாறு செக்ஸ் வைத்துக்கொள்ளும்?
ரொம்பவும் மெதுவாக, நிதானமாக அவைகளின் செக்ஸ் வாழ்க்கை இருக்குமோ?


அதான்
நீங்களே கரெக்டா சொல்லிட்டீங்களே! ஆமைகள் சாதாரணமாகவே 100 வயதுக்கு மேல்
வாழும் என்பதால் நீண்ட கால செக்ஸ் வாழ்க்கை! ஆமைகளுக்கு ரெண்டு மூக்குகள்
உண்டு. ஒன்று முகத்தில். மற்றது, மலத்துவாரத்தில். இரண்டு பக்கங்களும் ஆமை
மூச்சுவிடும்!


விவாகரத்து விஷயத்தில் (பாதிக்கப்பட்ட, ஆணோ, பெண்ணோ) வக்கீல் இல்லாமல் வழக்கை நடத்த முடியுமா?



ரொம்ப
அவசியம் ஏற்பட்டால் ஒழிய விவாகரத்து வழக்கில் வக்கீல் ஆஜர் ஆகாமல் கணவன் -
மனைவி மட்டுமே வந்தால் போதும் என்று அண்மையில் உயர்நீதிமன்ற நீதிபதி
ஒருவர், தீர்ப்பில் கூறியிருக்கிறார். ஒரு காரணம் - இடப்பற்றாக்குறை, ஜன
நெரிசல்!


விவாகரத்து வழக்குகள் ரொம்ப அதிகமாகிவிட்டதால் புதிதாக
கோர்ட்டுகள் கட்டப்பட இருக்கின்றன. புரிதல் இல்லாமல் ஏனோதானோ என்று "கட்டி
வைப்பதால்' ஏராளமான தம்பதிகளுக்கு ஓரிரு வருஷத்திலேயே மணவாழ்க்கை கசந்து
விடுகிறது. "காதல்' திருமணங்களிலும் இப்படி ஆவதுதான் ஆச்சர்யம்!
ஒரு மாறுதலுக்காக சியர் லீடர்ஸ் நம்மூர் பரதம், குச்சுபிடி, கதகளி, மணிப்புரி ஆடினால் எப்படி இருக்கும்?


"கிரிக்கெட்'டே
இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வெள்ளைக்கார விளையாட்டு. இதை எல்லாம் எப்படி
அனுமதிப்பார்கள்? தவிர, பவுண்டரி அருகே பரதம், குச்சிப்புடி, எல்லாம்
ஆடினால் (வெறுமனே கலர் கலராக கதகளி உடையோடு அவர்கள் நின்றாலே) கவனம்
சிதறுகிறது என்று ஆட்ட வீரர்கள் ஆட்சேபிப்பார்கள். சியர் லீடர்ஸுக்கு டிரஸ்
அவசியம் இல்லை!



நடிகைகளின் அழகு எதில் இருக்கிறது?

கேமரா
லென்ஸில் அல்லது கேமரா கலைஞனின் திறமையில்! ரசிகர்களின் கண்ணோட்டம் வேறு
மாதிரியாக இருக்கும். நீங்கள் அழகைப் பார்ப்பது எதில்?!\
சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழ்மொழி
எப்படிப் பேசப்பட்டது ? மன்னர்கள் எப்படித் தமிழ் பேசினார்கள் ? எல்லோரும்
சாதாரணமாகப் படிக்க முடியுமா ?


இதில் என்ன
சந்தேகம்?! எல்லோரும் தமிழில்தான் பேசினார்கள். கரிகால் சோழன் காலத்தில்
மேலும் தூய தமிழில் உரையாடி இருக்க வேண்டும். போகப்போக, வடமொழியின்
ஊடுருவல் நிகழ்ந்து தமிழில் கலப்படம் ஏற்பட்டது. பிற்காலச் சோழர்கள்
தமிழுக்குள் ஊடுருவிவிட்ட சமஸ்க்ருத்தையும் வார்த்தைகள் கலந்த தமிழில்
பேசினார்கள் ! ( அட்சரம், ஆகாசம், ஹாஸ்யம் போன்ற சமஸ்க்கருத் தமிழ்
வார்த்தைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூடப் பயன்படுத்தப்பட்டன.) எத்தனை
தமிழ்ப்பாடல்கள் பண்டைய தமிழ் மன்னர்களைப் போற்றிப் பாடப்பட்டன. சோழர்களின்
ஆட்சியில் நடந்த பெருமையான நிகழ்ச்சிகளை விளக்கிச் சொல்லும்
""மெய்க்கீர்த்திகள்'' இனிய தமிழ் அகற்பால்வில்' பொறிக்கப்பட்டதாக தமிழ்
வரலாற்று மேதை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். ஆனால், அகம்-புறம்
பாடல்களை இப்போது படிக்கும்போது சாமான்யர்களாகிய நமக்கு அர்த்தம் புரிய
சிரமமாகவே இருக்கிறது. கரிகால் சோழனைப் போற்றி ஒரு புலவர் பாடுகிறார்...

குறும்பறை பயற்றுஞ்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் - ( அகம் )


(
அதாவது, மலைகள்மீது ஆடுகளை மேய்க்கும் குறும்பர் குடும்பங்களை கரிகால்
சோழன் ஆதரவோடு காப்பாற்றியது பற்றிய பாடல் இது !'' கரிகால் சோழன் இதன்
அர்த்தத்தைப் புரிந்துகொண்டு தலையாட்டினாரா என்று நினைக்க ஆச்சர்யமாக
இருக்கிறது!
மனைவியே பல பேருக்கு எதிரி போல் வாய்த்து விடுவதற்கு முக்கியக் காரம் என்ன ?

சம்பிரதாய
அணுகுமுறைப்படி மனைவியைத் தேர்ந்தெடுப்பது என்பது - தானாகவே நிகழ்கிற,
எதிர்பாராத விதியை அல்லது அதிர்ஷ்டத்தைப் பொறுத்த ஒரு விஷயம். ஒரு பெரிய
பானையில் வைரங்கள், முத்துக்கள், தேள், பாம்பு எல்லாம் போடப்பட்டு
இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு கரண்டியை உள்ளே விட்டு எதையாவது எடுக்க
வேண்டும் என்றால், கரண்டியில் வருவது வைரமாகவும் இருக்கலாம், பாம்பாகவும்
இருக்கலாம் இல்லையா ?!! ரேண்டம் சாய்ஸ் ! ஆகவேதான், நீங்கள் சொல்வது போல
சிலர் அமைந்து விடுகிறார்கள். இது கணவனைத் தேர்வு செய்வதிலும் நிகழலாம்.
""தேமே'' என்று சாதுவாகத் தோற்றம் அளிக்கும் மணமகன் ஒரு கொடூரமான
""சாடிஸ்ட்'' என்பது பிற்பாடு தெரிய வருவதும் நிறையவே நடக்கிறது.
இல்லையா?!!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:08 pm

இலங்கையை முழுமையாக இதற்கு முன்னர் எந்தத் தமிழ் மன்னராவது அரசாண்டது உண்டா ?

ஆகா
! ராஜராஜசோழனின் புகழ்பெற்ற கப்பற்படை ஈழத்தைச் சுலபமாகவே வென்றது. சிங்கள
மன்னன் ( ஐந்தாம் ) மகிந்தன் தப்பி ஓடி காட்டுக்குள் ஒளிந்து கொண்டான்.
ஈழத்தின் பல கிராமங்களை ( கிபி.1014-ல்) ராஜராஜசோழன் தஞ்சை பெரிய
கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தார். ஈழத்துக்கு ""மும்மூடிச் சோழ மண்டலம்''
என்று புதிய பெயர் வைக்கப்பட்டது. அனுராதபுரம் அருகில் உள்ள பொலன்னுறுவை
என்னும் ஊர் சோழர்களின் தலைநகரம் ஆனது. அங்கே பெரிய சிவாலயம் ஒன்றைக்
கட்டினார் ராஜராஜன் (இன்றும் அது உள்ளது ) இருப்பினும், இலங்கையின் தென்
கிழக்கில் இருந்த ரோகண நாட்டை மட்டும் ராஜராஜனால் கைப்பற்ற முடியவில்லை.

கிபி.1017-ல்
ராஜராஜனின் மகனான ராஜேந்திரன் ஈழ நாட்டை( ரோகணம் உட்பட) முழுவதுமாகக்
கைப்பற்றினார். சிங்களர்களின் "" மகாவம்சம்'' கூட இதை ஒப்புக் கொள்கிறது.
கூடவே, ""சோழர்களின் படை மிகவும் கொடூரமாக நடந்துகொண்டு எல்லாச்
செல்வங்களையும் கொள்ளை அடித்ததாகவும் ""மகாவம்சம்'' குற்றம் சாட்டுகிறது. (
இது எல்லாம் சரி, தமிழ்நாட்டின் பல பகுதிகளை வென்ற சிங்கள மன்னர்கர்களும்
உண்டு! )
பண்டைய ராஜாக்கள் போரில் ஈடுபடும்போது தொடர்ந்து
போரிட்டுக்கொண்டே இருப்பார்களா அல்லது உணவு இடைவேளைக்கு எல்லாம் ப்ரேக்
எடுத்துக் கொள்வார்களா ?

.
காலை 5 மணியில் இருந்து
இரவு 9 மணி வரை மன்னர்கள் போரிட்டு இருக்க வாய்ப்பு இல்லை. காலைச்
சிற்றுண்டியை முடித்துக் கொண்டு களத்தில் குதித்து, மாலையில்
இருட்டுவதற்குள் அன்றைய போரை முடித்துக் கொண்டு, இரவு கூடாரங்களில்
அமர்ந்து நன்றாகச் சாப்பிடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன். போரின் போது
குதிரையில் தண்ணீர்ப் பானைகள் கூடவே சென்று இருக்கும். ( கிரிக்கெட் மேட்ச்
மாதிரிதான் !) ஆனால், மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் மட்டும் குதிரைகளை
தண்ணீர் குடிக்கக்கூட நிறுத்தக் கூடாது என்று தன் வீரர்களுக்கு ஆணையிட்டு
இருந்தான். தாகம் எடுத்தால் குதிரையை ஓட்டிக்கொண்டு இருக்கும்போதே அதன்
கழுத்தில் லேசாகக் குறுவாளால் கீறி, சுரக்கும் ரத்தத்தை உறிஞ்சி வாயை
ஈரப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான் !
இந்திய அரசியல் ஏன் கூவம் நதி போல் ஆகி விட்டது ?

அரசியல்
கூவம் ஒரு காலத்தில் தெளிவாக, நன்றாகத்தான் இருந்தது. பிறகு மெள்ள
அசுத்தமான, கழிவுப் பொருட்களான அரசியல்வாதிகள் அதில் கலந்ததால் இப்படி ஒரு
கேள்வியை நீங்கள் கேட்கும்படி ஆகிவிட்டது !


சென்னையைச் சுற்றி உள்ள (தாம்பரம், பூந்தமல்லி, வேளச்சேரி ) வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சியா, இல்லை அழிவுக்கான வளர்ச்சியா ?

தவிர்க்க
முடியாத வளர்ச்சி, மொகலாயர்கள் ஆண்ட போது நியூடெல்லி கிடையாது. பிற்பாடு
கட்டப்பட்டது. அதேபோல ( இடப்பற்றாக்குறை காரணமாக) எதிர்காலத்தில் இரண்டு
மூன்று சென்னைகள் உருவாகும். ஆனால், தொடர்ந்து கொசு கடிக்கும்!
அளவுக்கு அதிகமாக மழை பெய்தால், ஊர் எல்லாம்
வெள்ளக்காடாகக் காட்சி தருகிறது என்று சொல்கிறார்களே... நாட்டில் மழை
பெய்தால் காட்டை ஏன் இழக்க வேண்டும்?


காடு
என்பதற்கு அடிப்படையான அர்த்தமே அளவுக்கு அதிகமான (மிகுதி,) என்பதுதான்.
உதாரணமாக, இறந்தவர்களின் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கும்
இடத்தைக்கூட இடுகாடு என்கிறோம்.

காகம் தன் பெயரின் முதல் எழுத்தைச்
சொல்லி கா... கா எனக் கத்துகிறது. கிளியும் அவ்விதமே கி.. கி என்றும்,
கோழி கோ... கோ என்றும், குயில் கு... கு... என்றும் மாடு மா... என்றும்
குரல் கொடுக்கிறதே, அது எப்படி?

காகா, கிகி. கோகோ, குகு, மா... மா
என்று அதுகள் எழுப்புகிற சத்தத்தை வைத்துத்தானுங்க மனிதன் அப்படிப்
பெயர்களையே சூட்டியிருக்க வேண்டும்!\


அகழ்வாராய்ச்சிகளில் தங்கம், வைரம் போன்றவை கிடைக்காமல், மண்பாண்டங்கள் மட்டுமே அதிகம் கிடைப்பதேன்?

பண்டைய
நாகரிங்களில் மனிதர்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தியது,
மண்பாண்டங்களைத்தான். தங்கம், வைரம், எல்லாம் குறைவாகத்தான் இருக்கும்.
ஆகவேதான், எல்லா அகழ்வாராய்ச்சிகளிலும் மண்பாண்டங்கள் அதிகமாகக்
கிடைக்கின்றன. அதுவே 1922ம் ஆண்டு எகிப்திய பாரோ மன்னன் ட்யூடான்கெமனின்
கல்லறையை ஹொவார்டு கார்ட்டர் என்கிற அகழ்வாராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு
குழு தோண்டி எடுத்தபோது, தங்கத்தால் இழைக்கப்பட்ட பெட்டியில்
ட்யூடான்கெமனின் உடலும், கூடவே மலையளவு தங்க, வைடூரிய முத்து, பவளக்
குவியலும் கிடைத்தது. சுத்தத் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட மன்னரின்
உடற்கவசம் (2.500 பவுண்டு எடை) கின்னஸ் புத்தகத்தில் தங்கத்தினால் ஆன ஒரே
மிகப் பெரிய பொருளாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஸோ எங்கு
(அதிர்ஷ்டவசமாக) தோண்டுகிறீர்கள் என்பதில் தான் விஷயம் இருக்கிறது.



காதலித்த பெண்ணுக்குத் திருமணம் ஆன பின்பும் அவரோடு நட்பைத் தொடரலாமா?

யாருடன்
திருமணம் என்பதைப் பொறுத்தது, உங்களுடன் என்றால், தாராளமாக நட்பைத்
தொடரலாம். (நட்பைக் கொச்சைப்படுத்துகிறீர்களே? என்று இளம் வாசகர் பாய
வேண்டாம். ஏதோ... கொஞ்சம் பிராக்டிகளாகச் சொன்னேனாக்கும்!)
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:10 pm

துரியோதனின் தொடையிலேதான் அவன் உயிர்
இருக்கிறது என்பதை ஸ்ரீகிருஷ்ண பகவான் மட்டுமே அறிவார். தன்னைத்
துகிலுரிந்தபோது, துரியோதனனின் தொடையைப் பிளந்து ரத்தத்தைப் பூசிய பிறகே
கூந்தலை முடிவேன் என்று திரௌபதி கூறியது, வியாசரின் கவனக்குறையைக்
காட்டுகிறதே?


துரியோதனன் எகத்தாளமாகத் தன் தொடையைத்
தட்டிக்காட்டி, திரௌபதியை அங்கு உட்காரச் சொன்னான். அந்தத் தொடையைப்
பிளந்து ரத்தத்தைப் பூசுவேன் என்று சபதம் செய்தாள் திரௌபதி. இதை எல்லாம்
பார்த்துவிட்டு திரௌபதி சொன்னதை உண்மையாக்க, துரியோதனனின் உயிர்நிலையைத்
தொடைக்குள் மாற்றிவைக்க, ஆணானப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவால் முடியாதா என்ன?!
மன்னர்கள் காலத்தில் பிராணிகள் நல அமைப்பு இருந்ததா?

சக்ரவர்த்தி அசோகர், 2,260 ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கிய கல்வெட்டில் உள்ள வாசகங்கள் இதோ.

அரண்மனைச்
சமையல் அறையில் தினமும் ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் இறைச்சிக்காகக்
கொல்லப்படுவது, வணக்க்த்துக்குரிய மேன்மை தங்கிய மன்னருக்கு மிகுந்த
வருத்தத்தைத் தருகிறது. ஆகவே இனி தினமும் இரண்டு மயில்கள், ஒரு மான்
மட்டுமே கொல்ல அனுமதி தரப்படும்!

இதுவும் மன்னர் மனதை உறுத்தவே,
பிற்பாடு எந்த உயிரினத்தையுமே கொல்லக்கூடாது என்று ஆணையிடப்பட்டது.
தொடர்ந்து வேட்டையாடுவது (அரசர் உட்பட) தடை செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக
இந்தச் சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. சக்ரவர்த்தியோ குதிரைகளுக்குச்
சூடு போடுவதுகூடக்கூடாது என்றார். போதாததற்கு
வருடத்துக்கு 65
நாட்கள்தான் மீன்விற்பனை செய்யலாம். இப்படிப்பட்டவர், நாடெங்கும் பிராணி நல
வைத்தியச்சாலைகளை (வெட்னெரி ஆஸ்பத்திரி) நிறுவாமலா இருந்திருப்பார்? அவர்
ஆரம்பித்த பிராணிகள் மருத்துவமனை ஒன்ற இப்போதும் ஆரத்நகரில் இருப்பதாகக்
கூறப்படுகிறது.
முதுமையைச் சந்தோஷமாகக் கழிக்க என்ன செய்ய வேண்டும்?

சந்தோஷம்
என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் பிரெஞ்சு தத்துவ மேதை மான்டேன்
சொன்னார்; ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வேறு எதுவும் வேண்டாம். ஒரு நூலகமும்
ஒரு தோட்டமும் இருந்தால் போதும்.



துரதிருஷ்டவசமாக
கணவன் இறந்துவிட்டாலும் மனைவிக்கு அன்புக் கணவன் கட்டிய திருமாங்கல்யம்
அவளது கழுத்திலேயே இருந்துவிட்டுப் போகட்டுமே... அவளுக்கு அது பெரிய
பாதுகாப்பு இல்லையா? ஏன் நமது சமூகம் அதை அங்கீகரிப்பது இல்லை?


ஒரு
காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறியாக வேண்டும். அந்த அளவுக்கு
ஆணின் கொடூரமான ஆளுமை இருந்தது. பெண் என்பவள் ஆணின் சொத்து (நிலம், வீடு,
ஆடு, மாடு மாதிரி)! உடன்கட்டை ஏறுவதைச் சட்டப்படி ஒழித்துக்கட்டினார்களே.
கூடவே முட்டாள்தனமான மற்ற சம்பிரதாயங்களையும் அழித்திருக்க வேண்டுமல்லவா?
இன்று வரை பல மடத்தனமான பழக்கங்கள் தொடர்கின்றன. அதில் தாலி அறுப்பதும்
ஒன்று, பல விஷயங்களில் ஆண் சமுதாயம் சாடிஸ்ட்டாகவே இருக்க விரும்புவது
உண்மை!


காட்டுத் தீயை அணைக்க எதிர்த் திசையில் தீயை மூட்டி அணைப்பதாகப் படித்தேன். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை விளக்குங்களேன்?

சினிமாவில்
வேண்டுமானால் ரஜினி டபுள் ஆக்ஷன் பண்ணிப் பிரமாதப்படுத்தலாம். அக்னி
தேவனுக்கு எதிரில் திடீரென இன்னொர அக்னி வந்தால், அவர் அந்த டபுள் ஆக்ஸனால்
கன்ஃப்யூஸ் ஆகி அடங்கிப் போய்விடுவார். ச்ச்சும்மா... சொன்னேன்; தீ
பரவுவதற்குச் செடிகள், கிளைகள், புதற்களெல்லாம் வேண்டும். சாம்பலைத் தீ
எரிக்காது இல்லையா(?) முள்ளை முள்ளால் எடுப்பது போல எதிர்த் திசையில்
மூடப்படும் தீ அதைத்தான் செய்கிறது.



பெண்களுக்கென்று தனி ரயில் வண்டிவிடுவது அவசியம்தானா?

நீங்க வேற! பெண்களுக்கென்று தனி ஊரே அமைத்தால்கூட எனக்கு ஓ.கே.தான்!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:11 pm

நமீதா, நயன்தாரா, பாவனா, ரீமாசென் என தமிழ் தெரியாத நடிகைகள் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறப்பது செம கடுப்பா இருக்கே சார்?!


இப்போது
கவர்ச்சியைப் பார்த்துதான் நடிகைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குரலைப்
பார்த்து அல்ல. உங்களுக்குக் கடுப்பாக இருக்கிறது என்பதற்காக இவர்கள்
எல்லோரும் தமிழில் பேசி நடிக்க ஆரம்பித்தால், உங்கள் கடுப்பு பல மடங்கு
அதிகமாகிவிடும். விடுங்க!'
முதல்முறையாக ஒரு பெண்ணை ஆடை இன்றி வரைந்த ஓவியார் யார்? அவர் வரைந்த ஓவியம் இப்போது இருக்கிறதா?


இருக்கிறது.
ஆனால் அந்த ஒவியருக்குப் பெயர் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. 40 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு பழைய காலத்தில் டெய்ல்களுடன் வரையப்பட்ட பிறந்த மேனிப்
பெண்ணின் ஓவியத்தை பிரான்ஸ் நாட்டில் (அப்போது கூட கலை என்றால்
பிரான்ஸ்தானா?!) ஒரு குகையில் கண்டெடுத்தார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு செதுக்கப்பட்ட வீனஸ் என்று அழைக்கப்படும் நிர்வாணப் பெண்களின்
சிலைகளம் நிறையத் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கின்றன. பிற்காலத்தில் 16ம்
நூற்றாண்டில், மறு மலர்ச்சி யுகத்தில் ஜார்ஜோனே, டிஷான் போன்ற இத்தாலிய
ஓவியர்கள் அழகுப் பெண்களை வரைவதில் புகுந்து விளையாடினார்கள்.
எந்த வயதில் பெண்ணின் அழகு ஆண்களைப் பெரிதும் பாதிக்கிறது?





யாருடைய
வயதைச் சொல்கிறீர்கள்? குறுகிய காலத்தில் கொந்தளிக்கும் அழகு
பெண்ணினுடையது! இறக்கும்வரை பெண்ணின் அழகால் பாதிக்கப்படுகிற மனம்
ஆணுடையது.


புத்திசாலிப் பெண்கள் காதல் வலையில் விழுவார்களா, மாட்டார்களா?



நிச்சயம்
விழுவார்கள். காதல் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை
செய்வது இல்லை. அதாவது, நடப்பதை (பகுத்தறிவு மூளை!) வெறுமனே வேடிக்கைதான்
பார்க்கும்! காதல் வயப்படும் ஆணும் பெண்ணும் வெவ்வேறு வேதியப் பொருட்களே.
அவை ஈர்க்கப்படும்போது நிகழும் வேதிய மாற்றங்களை எந்தச் சக்தியாலும் தடுக்க
முடியாது. அப்போது உருவாகும் (பெனைவிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள்
மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையம் பரவசத்தையும் வார்த்தைகளில்
வர்ணிக்க முடியாது. இந்த நிலை ஏற்பட்டுவிட்டால் புத்திசாலித்தனம் எல்லாம்
காற்றில் பறந்துவிடும்.
'



கில்கெமெஷ்
காப்பியம் முதல் (உங்கள் கி.மு. - கி.பி. புத்தகத்தில் படித்தேன்! இன்றைய
எல்.கே.ஜி. ஸ்டூடன்கூட “மூணு சான்ஸ்தான் குடுப்பேன் என்கிறார்களே? அது என்ன
மூணு சான்ஸ் கணக்கு?



மனிதன் நியாயமானவன்
என்பதால் மூணு சான்ஸ் தருகிறான்! ஒண்ணைத் தொடர்ந்து ரெண்டு உடனே
வந்துவிடுகிறது. ஆகவே சுதாரித்துக்கொள்ளவும், தயார்படுத்திக் கொள்ளவும்.
முடிவு எடுக்கவும் ரெண்டு பயன்படுகிறது. மூணு என்பது முடிவானது.

நான்
சின்ன வயசில் என் நண்பனுக்கு எதற்கோ மூணு சான்ஸ் கொடுத்தேன். ரெண்டு சொன்ன
பிறகும் அவன் மசிவதாகத் தெரியவில்லை. பரிதாபமாக 21, 22, 23 என்று சொல்ல
ஆரம்பித்தேன். ஊஹும்!

ஓரினச் சேர்க்கை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடா?

அப்படிச்
சொல்ல முடியாது. கலாசார, சம்பிரதாய வேலிகளைத் தாண்டி நிற்பதால்
அவர்களுக்குச் சுதந்திர .ணர்வு அதிகமாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு.
ஆண்-பெண்- திருமணம் என்கிற குறுகிய எல்லைகளைக் கடந்த வெளி மனிதனாக
இருப்பதால், நாங்கள் ஸ்பெஷல் என்றுகூட அவர்கள் கருதுகிறார்கள். கலைஞர்களாக
இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய கற்பனைகள் அதிகமாக வெளிப்படுகின்றன
என்கிறார்கள் ஆய்வாளர்கள். ப்ளேட்டோ, டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ என்று
ஆரம்பித்து ஆஸ்கர் ஒயில்ட் , டென்னசி வில்லியம்ஸ் வரை ஏராளமானவர்கள் ஹோமோ
செக்ஸுவல்ஸ்தான். அவர்களைப் பொறுத்தமட்டில் நாம் எல்லோரும்தான் வெறும்
சராசரி மனிதர்கள்!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:13 pm

நீங்கள் சொன்ன முதல் பொய் எது?


முதல்
நாள் பள்ளிக்கூடம் சேர்கிறேன். திருவல்லிக்கேணியில் சாமராவ் பள்ளி.
வேலைக்காரப் பெண்மணி பாக்கியம் என்பவர் என்னைக் கொண்டு போய் வாசல் வரை
விடுகிறார். மாலை திரும்பி வருகிறேன். ஈஸிசேரில் தாத்தா... ஸ்கூல் எப்படிடா
இருந்தது? என்று கேட்கிறார். உம்... நல்லா இருந்தது! என்றேன்.\
மனிதனுக்கு நல்லவன், கெட்டவன், வீரன், கோழை போன்ற பெயர்கள் அவசியம் தேவையா?

மனித
நடமாட்டமே இல்லாத ஒரு பெரும் காட்டில் உங்களை மட்டும் இறக்கி விட்டால்,
பிறகு இந்த அடைமொழி எதுவுமே உங்களுக்கு அவசியம் இல்லை. மனித சமுதாயத்தில்
நீங்கள் இருக்கிற வரை இந்தப் பெயர்களைத் தவிர்க்க முடியாது. அதாவது, இவை
எல்லாமே மற்றவர்கள் உங்களுக்குத் தரும் அடைமொழிகள். ஒருவருக்கு நல்லவன்,
இன்னொருவருக்குக் கெட்டவன். அதே சமயம் இந்த ""எடைபோடுதல்'' இல்லையேல், ஒரு
கோழையை ராணுவத் தளபதியாக்கும் ஆபத்து ஏற்படும். ஒரு கெட்டவன் அமைச்சராகக்
கூடும். ஆகவேதான், இவை அவசியமாகவும் இருக்கின்றன
ராக்கெட்டைச் செலுத்தும்போது ஏன் 5,4,3,2,1 என்று சொல்கிறார்கள் ? ஏன் 1,2,3,4,5 என்று சொல்லக்கூடாதா ?


முதலாவதில்
""ஜீரோ'' என்று இலக்கு உண்டு. 1,2,3 என்று முடிவே இல்லாமல் வாழ்நாள்
முழுவதும் எண்ணிக் கொண்டே போகலாம். யார் இந்த முறையைக் கண்டுபிடித்தார்கள்
என்றால், அது ஆச்சர்யம் !! விஞ்ஞானக் கதைகளின் பிதாமகரான ஆர்தர்
ஸி.க்ளார்க். அவர் எழுதிய ஒரு கதையில், ராக்கெட் கிளம்புவதற்கு முன்பு
5,4,3,2,1,0 என்று எண்ணுவதாக, புத்திசாலித்தனமாகக் கற்பனை பண்ணி
எழுதியிருந்தார். அதுவரை ஒரு விஞ்ஞானிக்கும் தோன்றாத ஐடியா!! அவ்வளவுதான்,
அப்படியே அதைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள் !
கவிதை வந்தால் காதல் வரும்'', ""காதல் வந்தால் கவிதை வளரும்'' - இரண்டில் எது உண்மை ?

இரண்டில்
எது உண்மை ! காதல் வராமலேயே கவிதைகள் எழுதிய சித்தர்கள் என்னவாம் ?
அதேபோல, காதல் வந்தால் கவிதை (ஆசை) வரும். அவ்வளவே ! (காதலனிடம் ""இனிமே
சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தாதான், நான் உங்களை மீட் பண்ண
வருவேன்'' என்று காதலி சொல்கிற ஆபத்துகூட இரண்டாவதில் உண்டு !)'


பார்வைக் குறைபாடுகளைப் போக்கும் லென்ஸ்களைக் கண்டுபிடித்தது யார் ?

இத்தாலியில்,
ஃப்ளாரன்ஸ் நகரில், அலெஸாண்டரோ ஸ்பைனா என்கிற பாதிரியார் கி.பி.1280 (
படிப்பதற்கான) லென்ஸை உருவாக்கினார். ""அதற்கான ஆதாரம்
கிடையாது.கண்டுபிடித்தவர் யார் என்பதே தெரியாது என்பதே நிஜம், என்கிறது
விஞ்ஞான உலகம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:15 pm

கலீல் ஜிப்ரானின் தத்துவங்கள் எல்லாம் காமத்தை மையப்படுத்தியே இருக்கிறன்றனவே ...அப்படியானால் காமம் என்பது ஒரு தத்துவமா ?

காமம்
என்ன என்பது இருக்கட்டும். ஒருவேளை, நீங்கள் கவிஞர் உமர்கய்யாம் பற்றிக்
கேள்வி கேட்க விரும்பி, ஜிப்ரான் என்று எழுதிவிட்டீர்களோ ?! நிஜத்தில்
இருவருமே காமத்தை மையப்படுத்தி எழுதியவர்கள் இல்லை. உமர் கய்யாம் பெரும்
சூஃபி கவிஞர். ஜிப்ரான் ( 1883-1931 ) லெபனான் நாட்டில் பிறந்து,
அமெரிக்காவில் குடியேறியவர். சாதி, மதம், நாடுகளைக் கடந்து நிற்கும் இன்றைய
ஞானிகளின் முன்னோடி அவர். புகழ்பெற்ற ஓவியரும், கவிஞருமான வில்லியம்
ப்ளேக், ஜிப்ரானின் மானசீகக் குரு, ஜிப்ரான் பிரமாதமாக ஓவியம் வரைவார்.
அவர் 1923-ல் எழுதிய கணூணிணீடஞுt என்னும் எளிமையான தத்துவ, ஆன்மீக நூல்,
ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பைத்தான் பெற்றது. அறுபதுகளில் இளைய தலைமுறைக்கு
அதே புத்தகம் ""வேதமாக'' இருந்து, கோடிக்கணக்கில் விற்பனையானது.'

உலகத்தை நேருக்கு நேர் சந்திக்கச் திராணியற்றவர்கள்தானே மதுவை நாடுகிறார்கள் ?

ஒளிந்துகொண்டு
பார்ப்பவர்களும் மதுவை நாடுகிறார்கள் ! உலகெங்கும் கொண்டாட்டங்கள்
நிகழும்போது,அங்கே மதுக்கோப்பைகளின் உரசல்கள் கேட்காமல் இருப்பதில்லை !
வெற்றிக்கொடி நாட்டும் சாம்பியன்கள் எல்லாம் ""ஷாம்பெய்''னுடன்தான் கேமரா
முன் போஸ் தருகிறார்கள்.

உலகத்தலைவர்கள் சந்திப்பு முடிந்து,
ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டவுடனே மதுக்கோப்பையை உயர்த்தி ""சியர்ஸ்''
சொல்கிறார்கள். சாதித்த பிறகு மதுவை ருசிப்பது வேறு;மதுவைக் குடித்துத்
தள்ளாடுவதே சாதனை என்று நினைப்பது வேறு !

க்ளோனிங் முறையில் இன்னொரு மதன் உருவாக்கப்பட்டால் ?

பலர்
இன்னமும் ""க்ளோனிங்''கைத் தப்பாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
க்ளோனிங் மூலம் அப்படியே என்னை ( உடற்கூறு ரீதியில் ) உருவாக்கலாம். ஆனால்,
இந்த ""என்னை'' உருவாக்க முடியாது ! என் அனுபவங்கள், உறவுகள்,சோதனைகள்,
மகிழ்ச்சிகள், சோகங்கள், காதல்கள்,நண்பர்கள்.... இதை எல்லாம் எப்படி
""க்ளோன்'' மதனுக்கு ஏற்படுத்தித் தருவீர்கள் ?

கர்ணன் செய்த தர்மங்கள் அனைத்தையும் கண்ணன்
யாசகமாகப் பெற்றபோது, அவன் உயிரைப் பறிக்கத் தர்மம் தடையாக இருந்தது
என்கிறார்களே... அப்படியெனில், தர்மத்தை எல்லாம் தர்மமாக வழங்கியபோது
கர்ணனது உயிர் காப்பாற்றப்பட்டுத் தானே இருக்க வேண்டும்?



அதனால்
தான் ""இப்போது நீ செய்யும் தர்மம், இனி நீ செய்யப் போகும் தர்மம்
எல்லாவற்றையும் தர்மமாகத் தந்து விடு'' என்று கிருஷ்ணர் கேட்கிறார். அப்படி
இருப்பினும், நீங்கள் சொல்வதுபோல இடறத்தான் செய்கிறது. செய்யும் அல்லது
செய்யப்போகும் தர்மத்தையே தானமாகக் கொடுத்தாலும், அதுவும் தர்மம்தானே ?!
தர்மதேவதை எப்படி கர்ணனைக் காப்பாற்றாமல் போக முடியும் ? கண்ணன், கடவுள்
மகாவிஷ்ணுவின் அவதாரம். தர்மதேவதையைப் பார்த்து, ""சரி, போதும்.... நீ
போகலாம் !'' என்று கிருஷ்ணரே சொல்லிவிட்டால், தர்மதேவதை ""கப்சிப்'' என்று
வெளியேறி இருப்பார்தான். அதோடு, கர்ணன் கதை முடிஞ்சது. ஆகவேதான்,
பிராயச்சித்தமாகத் தன்னுடைய விஸ்வரூபத்தைக் கர்ணனிடம் காட்டியிருக்க
வேண்டும் !

மதனுக்கு இரவு பிடிக்குமா, பகல் பிடிக்குமா ?


அகண்ட
வெளியில் இரவு,பகல் கிடையாது. பூமியையே எடுத்துக்கொண்டாலும், நமக்கு இங்கே
இரவு, அமெரிக்கர்களுக்குப் பகல். இரவு என்பது இருட்டு என்றால், ""ஃப்ளட்
லைட்ஸ்'' வெளிச்சம் பண்ணி இப்போது கிரிக்கெட்டே விளையாடுகிறோம். எனக்கு
இரவு,பகல் வித்தியாசம் எல்லாம் கிடையாது. நான் இரவு 2 மணிக்குத் தெருவில்
உலாத்துவேன். பகல் 10 மணிக்குத் தூங்கிக் கொண்டு இருப்பேன். இந்த இரவு,
பகல் சர்வாதிகார ஜோடிக்குக் கைதியாக நான் என்றுமே இருந்தது இல்லை. இந்த
விஷயத்தில் நானும், மதுரையும் (ஊர் !) ஒன்று!

உண்மையைச் சொல்லணும் ! விவாகரத்து என்பது சுதந்திரமா ? தண்டனையா ?


அது விவாதத்தைப் பொறுத்தது. விவாகமே ஒரு தண்டனையாக அமைந்து தொலைத்தால், விவாகரத்து சுதந்திரமானதே !

ஒரு தத்துவ ஞானி மறதியாளனாக மாறுவது எப்போது ? ஒரு மறதியாளன் தத்துவ ஞானியாவது எப்போது ?

யாராக
இருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தை மறக்கவே மாட்டார்கள். ஒரே விஷயத்தில்
மறக்காமல் ஈடுபடுபவர் மற்ற விஷயங்களை மறக்கத்தான் செய்வர். இது தத்துவ
ஞானிக்கும் பொருந்தும். சிலர், தாங்கள் ஒரே சமயத்தில் நாலைந்து
காரியங்களைச் செய்பவர் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மூளைக்கு அதற்கான
அமைப்பு கிடையாது. உதாரணமாக, நீங்கள் யாருக்காவது எஸ்.எம்.எஸ்.
பண்ணிக்கொண்டே உங்கள் நண்பர் பேசுவதையும் கேட்டுப் பாருங்கள்.

ஏதாவது
ஒன்றில்தான் முழு ஈடுபாடு இருக்கும். மூளையின் ""வொயரிங்'' அப்படி ! ஆகவே,
அநேகமாக எல்லா விஷயங்களிலும் மறதியாளனாக இருப்பவன் தத்துவத்தின் மீது
மட்டும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். ஆனால், தத்துவம் என்பது ""ஒரு
விஷயம்'' இல்லையே என்பதுதான் உதைக்கிறது !



நாமே நம் தலையை அளைந்து கொண்டால் தூக்கம் வருவது இல்லையே,ஏன்?


முந்தைய
கேள்விக்குப் பதிலைத்தான் நீங்கள் கேள்வியாகக் கேட்டு இருக்கிறீர்கள்!
அதாவது, நாம் ஒரே சமயத்தில் ஒன்றைத்தான் செய்ய முடியும் !




பொதுவாக, எந்தத் துறையில் இணைந்தால் சொந்தச் சோகங்களை மறக்க முடியும்?

சொந்தச்
சோகங்களை எதற்கு மறக்க வேண்டும் ? அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக
ஏற்றுக்கொண்டு, நிலைகுலையாமல் இருக்கக் கற்றுக்கொண்டால் போதும்!
இருப்பினும், நீங்கள் கேட்டுவிட்டதால் ஒரு டிப்ஸ்... எப்போதுமே
உணர்வுபூர்வமான துறைகளில் ஈடுபடுவது சோகத்தைக் குறைக்கும். இசை, ஓவியம்,
இலக்கியம் போன்றவை ! நல்ல நண்பர்களுடன் பழகுவதும் இவற்றுக்கு இணையானதே !
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:15 pm

விதி என்பது நிஜமாகவே இருக்கிறதா ?


நிறைய
உதாரணங்கள் காட்ட முடியும். ஆனால், முடியும். ஆனால், நிரூபிக்க முடியாது.
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, அஸிரியா ஒரு பெரும் சாம்ராஜ்யமாகத்
திகழ்ந்தது. (அதில் ஒரு சிறு பகுதிதான் இப்போது சிரியா !). வல்லமை
பொருந்திய மன்னர்கள் ஆட்சிபுரிந்த அஸிரியாவைக் கண்டு மற்ற நாடுகள்
நடுங்கின. அதன் தலைவர் நினேவா. அதன் கோட்டைச் சுவர் புகழ் பெற்றது. 60 அடி
தடிமன், 100 அடி உயரம் ! எந்தப் படையினாலும் அதை மீறி உள்ளே நுழைய
முடிந்தது இல்லை. கி.மு.612-ல் ஸார்டானபாலஸ் என்கிற அரசர் அஸிரியாவை
ஆண்டபோது, பாபிலோனியா உள்பட பல நாடுகள் கூட்டணி அமைத்து அஸிரியா மீது போர்
தொடுத்தன. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நினேவாவை முற்றுகையிட்டும், கோட்டைச்
சுவரை உடைக்க முடியவில்லை.

எதிரிப் படை நம்பிக்கை இழந்த சமயம்...
அருகில் ஓடிய டைக்ரிஸ் நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை
உடைத்துக்கொண்டு தண்ணீர் சுனாமியைப் போன்ற சக்தியுடன் கோட்டைச் சுவரில்
மோத, சுவரின் ஒரு பகுதி உடைந்தது. திகைப்போடும், மகிழ்ச்சியோடும்
எதிரிப்படை அந்த வழியாக உள்ளே நுழைந்தது. இரண்டு வருடக் காத்திருத்தல்
ஏற்படுத்திய கடுப்பு, ஆவேசம் ! அந்தத் தலைநகர் தீ வைத்துக்
கொளுத்தப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது. நினேவா வீழ்ந்தது கண்டு, அஸிரிய
மன்னர் தீயில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதை என்னவென்று
சொல்வீர்கள் ? விதியா... நதியின் சதியா ?!

"தத்துவவாதிகள் பலர் வறுமை,தோல்வியைச்
சந்தித்தவர்கள்தான்'' என்கிறார்களே ; தத்துவத்தின் அடிநாதம் ஏழ்மை,தோல்வி
என்று எடுத்துக் கொள்ளலாமா ?


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Ananthavikadannews_38703554869

தத்துவத்துக்கு வறுமை,செல்வம் இரண்டும் ஒன்றே !

பிளேட்டே,
ரஸ்ஸல் போன்ற மிக வசதியாக வாழ்ந்த தத்துவ மேதைகளும் உண்டு. மார்க்கஸ்
அரேலியஸ், ரோம் நாட்டின் மன்னர். அதுவே, டயாஜினீஸ்போல கோவணத்துடன் திரிந்த
தத்துவ ஞானிகளும் உண்டு. கி.மு.341-ல் பிறந்த எபிக்யூரஸ் என்கிற தத்துவ
அறிஞர் ""மனிதனுக்கு உடல்ரீதியாக மகிழ்ச்சியான, சுகமான வாழ்க்கை மிக
முக்கியம். உதாரணமாக அற்புதமான, ருசியான விருந்து என்பது உன்னதமான ஒன்று.
அதுவும் நல்ல நண்பர்களோடு அமர்ந்து விருந்து உண்பதற்கு இணையே கிடையாது !''
என்றார். இது கேட்டு மற்ற தத்துவ அறிஞர்கள் கடுப்படைந்தார்கள். எபிக்யூரஸ்
சொன்ன இன்னொரு விளக்கம் உங்களுக்குப் பதிலாக அமையும் - ""செல்வம் ஒரு
பிரச்னை அல்ல. அதற்காக கூச்சப்படவும் வேண்டியது இல்லை. ஆனால், நிறையப் பணம்
இருந்தும் சிறந்த நண்பர்கள், சுதந்திரம், ஆராயப்படாத வாழ்க்கை இல்லாமல்
போனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பணம் இல்லை என்றாலும்,
இதெல்லாம் இருந்தால் போதும், மகிழ்ச்சியாக வாழ முடியும். அதுவே, இதெல்லாம்
இல்லாமல் பணம் மட்டுமே இருந்தால், அது மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை.
மொத்தத்தில், மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டியது
ரொம்பக் குறைச்சல் !
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:16 pm

த்ரிஷா, சினேகா, நமீதா... யாருக்கு கிரிக்கெட் உடை கச்சிதமாக இருக்கும்?


த்ரிஷாவுக்குத்தான் !
சினேகாவுக்கு கோல்ஃப் உடையும்,
நமீதாவுக்கு ஃபுட்பால் உடையும் தான் பொருத்தமாக இருக்கும்!

( ""எப்படி இவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்கள் ?'' என்றெல்லாம் கேட்கக்கூடாது! )
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் மேலை நாடுகளில் உண்டா?

சாதி
என்றால் இந்தியாதான். இந்த விஷயத்தில் எந்த நாடும் நம்ம கிட்டே வரமுடியாது
! ஆனால், இன அடிப்படையிலான ஒதுக்கீடுகள் அநேகமாக எல்லா நாடுகளிலும் உண்டு.
அமெரிக்கச் செவ்விந்தியர்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் என்று
உலகெங்கும் எல்லோருமே ஏதாவது ஓர் ஒதுக்கீட்டுக்காகப் போராடிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்!



பழைய
திரைப்படப்பாடல்களைப் பார்ப்பதை விடவும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக
இருக்கிறது என்பது என் மேன்மையான கருத்து. தங்கள் தாழ்மையான கருத்து என்ன?


உங்கள் மேன்மையான கருத்துதான் என் தாழ்மை இல்லாத கருத்தும் !

அதற்காக,
பழையப் பாடல்களைப் பாடவிட்டு, இப்போதைய ( சற்றுப் பொருத்தமான )
பாடல்களுக்கான காட்சிகளை ஓடவிட்டுப் பார்த்தால், ரொம்ப காமெடியாக இருக்கும்
என்பதும் உண்மை !
''



பொய்யே பேசாத அரிச்சந்திரன், இன்றைய கலியுகத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் ?

அரிச்சந்திரன்
இன்று அரசு அதிகாரியாக இருந்தால் ஏதோ மூலையில் உள்ள பரிதாபமான, தண்ணி
இல்லாத ஊருக்குத் தூக்கியடிக்கப்பட்டு இருப்பார். அவர் ""ரிடையர்'' ஆன
கையோடு மற்ற சக பணியாளர்கள் அத்தனை பேரும் ""டாஸ்மாக்'' சரக்கு சகிதம்
காக்டெயில் பார்ட்டி வைத்துக் கொண்டாடி இருப்பார்கள் !
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:17 pm

நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துபவர்கள் பற்றி உங்கள் கருத்து ?


முதலில்
நண்பர்களின் வற்புறுத்தலுக்காக.... பிறகு வற்புறுத்தல் இல்லாமலேயே...
அதற்குப் பிறகு நண்பர்கள் இல்லாமலேயே... என்பதுதான் இதில் இருக்கிற ஆபத்தான
பிரச்னை !'

சில மேலை நாடுகளில் கணவனும், மனைவியும் ஒரே கட்டிலில் விடியும்வரை சேர்ந்து தூங்குவது இல்லையாமே ....உண்மையாமே ?


அப்படி
எல்லாம் இல்லை ! நீங்கள் கேட்பதைப் பார்த்தால், ஏதோ பாதித் தூக்கத்தில்
இருவரும் எழுந்து வேறு யாருடைய கட்டிலுக்காவது போய்ப்படுத்துக் கொண்டு
விடுவார்கள் என்பது போல அல்லவா இருக்கிறது ?!!'

பல்வேறு விதமான பயங்களுக்கும் அந்த ஃபோபியா, இந்த ஃபோபியா என்கிறார்களே ... இதுமாதிரி பயங்களைப் பற்றிய பயத்துக்கு என்ன பெயர்?

இருக்கிறதே
! ஏன் என்று தெரியவில்லை... மனிதன் மாளாமல் நூற்றுக்கணக்கான
""ஃபோபியா''க்களுக்குப் பெயர் வைத்திருக்கிறான். நீங்கள் சொல்கிற
""பயங்களைப் பற்றிய பயத்துக்கு'' ஃபோபாஃபோபியா என்று பெயர். ""ஃபோபியா''
இல்லாத ஆளே கிடையாது. ஆனானப்பட்ட விஞ்ஞான மேதை ஐசக் நியூட்டன் கடைசி வரை
உடலுறவு கொள்ளாமலே வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அவரைப் பாதித்தது
காய்ட்டோ ஃபோபியா.

ரோட்டில் கிடக்கும் "பிணம்', ரோட்டில் கிடக்கும் "பணம்' - என்ன வித்தியாசம் சார்?


முதலாவதை
எல்லாரும் பார்த்துக் கொண்டே போவார்கள். இரண்டாவதை எல்லாரும் பார்க்க
முடியாது - அதற்கு முன்பே அது எடுக்கப்பட்டுவிடும் என்பதால் !

மதன் சாருக்குக் கடைசி பெஞ்ச் அனுபவம் உண்டா... அது பற்றி?


ஆரம்பத்தில்
இருந்து கடைசி வரை கடைசி பெஞ்ச் அனுபவம்தான்... ""மற்ற உருப்படாத
பசங்களைப் போல அல்லாமல் நான் முதல் பெஞ்ச்சில் அமர்ந்து ஒழுக்கத்துடன்,
கட்டுப்பாட்டுடன், கவனமாகப் படித்து எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு மார்க்
வாங்க வந்தவன்!'' என்கிற அகந்தை எல்லாம் எப்போதுமே எனக்கு இருந்தது
கிடையாது!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:18 pm

சர்வாதிகாரிகளிலே நல்லவர் யார் ? -

உலகெங்கும்
மன்னராட்சி நடந்த காலத்தில் எல்லா மன்னர்களுமே சர்வாதிகாரிகள்தான்.
அவர்களில் அசோகர் போலவும் நல்ல சர்வாதிகாரிகளும் உண்டு. அப்படிப்பட்ட
மன்னர்களைத்தான் வள்ளுவர், ""முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்'' என்று குறிப்பிட்டார். அதாவது,
அப்படிப்பட்டவர்கள் இறைவனுக்கு இணையானவர்கள். ஆனால், வரலாற்றில் அந்த
வகையான ""சர்வாதிகாரிகள்'' மைனாரிட்டியினர்தான். வீட்டில் உள்ள சர்வாதிகார
மனைவிகள்கூட அநேகமாக நல்லவர்களே !



*
மருமகளுக்கு மாமியார் பிரச்னையாவதுபோல், மருமகனுக்கு மாமனார் பிரச்னை
ஆவதில்லையே ஏன் ?


அவர்கள் சம்பந்தப்பட்ட ""திரைக்கதை'' சுவையாக
இருப்பதில்லை என்பதால் ! மாமியார்-மருமகள் சண்டை தீதீஞூ மல்யுத்தப் போட்டி
மாதிரி ரணகளமாக இருக்கும். கேலரியில் அமர்ந்து ரசிக்கலாம். மாமனார்-மருமகன்
புரிவது மௌன யுத்தம். பேச்சுவார்த்தையே இல்லாத குழி மட்டும் பறிக்கும்
சைலண்ட் மூவி மாதிரி !




*
பகுத்தறிவைக் கொண்டு மனிதன் முதலில் தெரிந்து கொண்ட விஷயம் எது ?


அவனும்
அவளும் உடலுறவுக் கொண்டதால்தான் அவளுக்குக் குழந்தை பிறந்தது !



* ஆன்மீக நிலை அதிகம் படைத்த பாரதத்தில்,
குறிப்பாகத் தமிழகத்தில்,அன்று 63 நாயன்மார்கள் தோன்றினார்கள். பக்தி
மார்க்கத்தைப் பரப்பினார்கள். முடிவில் இறைவன் திருவடி அடைந்து சொர்க்கம்
சேர்ந்தனர். பெரியபுராணக்கூற்று இது. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாயன்மாரும்
நம் கண் முன் தோன்றவில்லையே, ஏன் ?


அது ஒரு காலகட்டம். அப்போது அவர்கள்
தேவைப்பட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மாபெரும் தலைவர்கள் நம்மை
வழிநடத்தினார்கள். இப்போது அப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்களா ?!
நாயன்மார்கள் தோன்றி மறைந்து சில நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ""அதற்குப்
பிறகு இவ்வளவு காலமாகி விட்டதே !'' என்று நம் வாழ்நாளைக் கணக்குப்
போடாதீர்கள். நமக்கு முன்னும் பின்னும் பல கோடி வருஷங்கள் உண்டு.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 63 என்ன 630 ""நாயன்மார்கள்'' கூடத்
தோன்றலாம் - காலத்தின் கட்டாயம் ஏற்பட்டால்
!



* உலகத்தில் உள்ள எல்லாருமே சைவ உணவை உட்கொண்டால்
வியாதி இல்லாமல் இருக்க முடியுமா ?


இருக்க முடியலாம் ! ஆனால், பீச்சு மணலெங்கும்
மீன்களும், தெருக்களிலும், வீட்டுக்குள்ளும் ஆடு, மாடு,கோழிகளுமாக இருக்க,
தரையில் கால்வைக்கக் கூட இடம் இல்லாமல் பீரோ மீது அமர்ந்துதான் சைவ உணவைச்
சாப்பிட வேண்டியிருக்கும் !



*
சரியாகச் சொல்லுங்கள், நாணயத்துக்கு மொத்தம் எத்தனைப் பக்கங்கள் ?


நா-நயம்
என்கிற ஒரே பக்கம்தான் ! என்ன, நீங்கள் எதிர்பார்த்த பதில்தானே ?!!



* உணர்வுகள், உணர்ச்சிகள் இரண்டு வார்த்தைகளின்
அர்த்தமும் ஒன்றா ?


உங்களுக்குக் காமம் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது.
அதை நீங்கள் உணர்கிறீர்கள். அதான் வித்தியாசம் !



* ஆபத்து நேரத்தில் ""அம்மா !'' என்று அழைக்கும்
நாம், நிம்மதிப் பெருமூச்சு விடும்போது ""அப்பா'' என்று சொல்வது, ஏன் ?


பயப்படும்போது
பெண்மையாகவும், பயம் விலகிய பிறகு ஆண்மையாகவும் உணர்வதால் அப்படி ! (
உங்களுக்காகச் சற்று வித்தியாசமாக யோசித்தேனாக்கும் !)



* கோயில்களில் பூஜை முடிந்ததும் பக்தர்களுக்குப்
பொங்கல், சுண்டல் போன்றவற்றைப் பிரசாதமாகக் கொடுக்கும் வழக்கம் எதனால்
ஏற்பட்டது ?


சாமி தரிசனம் செய்யும்போது மனசெல்லாம்
பொங்கல்,சுண்டல் மீதே இல்லாமல் இருக்கத்தான் !



* நான்தான் ""மதன்'', நீங்கள்தான் ""கேசவன்''
என்று ஒருபேச்சுக்கு வைத்துக்கொள்வோம், நீங்கள் என்னிடம் கேட்கம் கேள்வி
என்னவாக இருக்கும்

இதே கேள்வியாகத்தான் இருக்கும் !
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 17, 2013 9:19 pm

விஷ பாட்டிலிலேயே விஷம் அல்லது Poison என்று
எழுதி, மண்டை யோட்டுக் குறியீடு போட்டிருப்பதாகக் காட்டுவதைத்தானே தமிழ்
சினிமாவின் மிகப்பெரிய அபத்தக் காட்சியாகக் கருதமுடியும்?


அதை
‘பி’ காம்ப்ளெக்ஸ் டானிக் என்று நீங்கள் நினைத்து விடுவீர்களோ என்கிற கவலை
டைரக்டருக்கு! அதை, பின்னணி இசையோடு ‘க்ளோஸப்’பில் காட்டினால்தானே,
நீங்கள் பதறுவீர்கள்?! ‘தமிழ் சினிமாவின் அபத்தக் காட்சிகள்’ என்று Yellow
Pages மாதிரி தனிப் புத்தகமே போடலாம்! அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக
(ஸ்லோமோஷனில்!) அபத்தங்கள் குறைந்துகொண்டு வருவதும் உண்மை!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty ஹாய் மதன்......

Post by logu Fri May 17, 2013 9:21 pm

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Madanமதன்
இவர் ஒரு பிரபல கார்டூனிஸ்ட் .....இவரை பற்றி சுருக்கமாக ஒரு வரியில்
கூறினால் இவர் ஒரு நடமாடும் என்சைகிலோ பிடியா விகடனில் தனது 23 வது வயதில்
சேர்ந்தார் ..இரண்டு வருடங்களில் இணையாசிரியர் ஆகிவிட்டார் ..விகடனில்
இவரது ஹாய் மதன் கேள்வி பதில்கள் மிகவும் பிரபலமானவை வந்தார்கள்
வென்றார்கள் மனிதனுக்குள் ஒரு மிருகம் போன்றவை ஜூனியர் விகடனில்
தொடர்ச்சியாக வெளி வந்த தொடர்கள் ஸ்டார் விஜய்யில் மதன் திரைப்பார்வை என்ற
நிகழ்ச்சியை வழங்கியுள்ளார் ..இவர் நீண்டகாலம்(25 வருடங்கள் ) விகடனில்
பணியாற்றியதன் பின்பு விகடனில் இருந்து வெளியேறிவிட்டார் ..பின்பு
குமுதத்தில் கி.மு கி .பி என்ற தொடர்களை எழுதினார்...விகடனில் இருந்து
வெளியேறினாலும் இன்றும் இவர் கார்டூன்ஸ் ,ஹாய் மதன்போன்றவற்றை தொடர்ந்து
வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றார் எப்படியோ இவருக்கு
வாசகர்களுக்குமிடையே யான தொடர்பு எப்பொழுதும் இருந்து கொண்டேதான்
இருக்கிறது ....'அன்பே சிவம்' என்னும் திரைப்படத்தின் வசனகர்தாவாகவும் இருந்திருக்கிறார்






மதனுடன் ஆர்னிகா நாசரின் சந்திப்பின்போது ...




இவரது இயற்பெயர் -மாடபூசி கோவிந்தகுமார் ,

பிறப்பிடம் சென்னை ,

படித்தது BSC பிசிக்ஸ்

மனைவியின் பெயர் ஜெயந்தி

இரண்டு மகள்களும் உள்ளனர் ,

பெற்றோர் -கிறிஸ்ன சாமி,ராதா

பிடித்த கார்டூனிஸ்ட் -மாலி டேவிட் லோ ,கோபுலு R.K லட்சுமணன் ,கைல்ஸ்

பலமும் பலவீனமும் -எனது பலம்தான் பலவீனம் பலவீனம் தான் பலம்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 2011020352590301+%281%29




விகடனில் இருந்து மதன் விலகியதற்கு கமல்ஹாசன் தான் காரணம் என்று பலரால்
கூறப்பட்டது ...மருதநாயகம் திரைப்படத்தை மதனின் வரலாற்று அறிவை
முற்றுமுழுதாக நம்பியே எடுக்கப்படுவதாகவும்
கமல்பொய் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார் ...என்று நீள்கிறது அக்கதை
...இதைப்பற்றி மதன் குறிப்பிடுகையில் ...

"விகடனில் இருந்து நான் விலக கமல் காரணமல்ல இது என் சொந்த முடிவு

25 வருடங்கள் தொடர்ந்து பணி புரிந்தபிறகு ஒரு ஒரு stagnation வந்து விடுமோ என்று உணர்ந்தேன் விகடன் என் ஒருவனை சார்ந்து

நிற்க வில்லை நிறைய திறமைசாலி இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்

விகடனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பூரணமாக செய்துவிட்டதாக ஒரு உணர்வும் இருந்தது

வெளி உலகம் பார்க்க ஆர்வம் புதியவற்றை கற்றுக்கொள்ள ஆசை பணியிடம் என்பது

சிறிய கூடு கூட்டிலிருந்து வெளியே பறந்தேன் சுதந்திரம் என்ற பெண்ணை அடைந்ததாக உணர்கிறேன்




கமலுக்கும் எனக்கும் இடாயில் உள்ள தொடர்பு இரண்டு இளைஞர்களுக்கு இடையில் காணப்படும் நட்பு....

மருதநாயகத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது ..க்யின் எலிசபத் மருதநாயகத்தின்

பூஜைக்கு வருகை தந்த பொழுது நானும் கலந்து கொண்டேன் அவ்வளவு தான்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 277120_122586984503730_5949299_n




ஆர்னிகா நாசரின் அடுத்த கேள்வி -"ஹாய் மதனில் இடம்பெறும் நிறைய கேள்விகள் நீங்களே தயாரிக்கின்றவை

நீங்கள் படிக்கும் கடலளவு விடயங்களை செட்டப் கேள்விகளின் மூலம் வெளிப்படுத்துகின்றீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு

உள்ளதே "(மதனுக்கு கோபம் வருகிறதா என்று பார்த்தேன் மனிதர் அசரவில்லை) ஒரு கூடை கடிதங்களை என் முன்னால் காட்டி

சாம்பிளுக்கு ஒரு சில கேள்விகளை வாசித்துக்காட்டினார்

"கடவுள் ஆணா பெண்ணா ?",telekinesis பற்றி கூறுங்கள் ,ஹிட்லரிடம் இருந்த நல்ல குணம் என்ன ? தலை இல்லாமல்

கரப்பான் பூச்சி எத்தனை நாள் உயிர்வாளும்? நான் கப்சிப்ஆனேன் சரண்டர் என்பதுபோல் கையைதூக்கினேன்...




ஹாய் மதனில் நீங்கள் மனைவிக்கு பயப்படுகின்றவர் போலவும் ..பெண்களால் பிரச்சனைக்கு உள்ளாகின்றவர் போலவும்

வெளிப்படுகின்றீர்களே ..இதெல்லாம் தமாஸ்ஸுக்குதானே?




இப்படி கேள்வி கேட்டால் இந்தப்பதிலைக் கூறவேண்டும் என்றுதான் என் மனைவி சொல்லி இருக்கிறார் "ஆமாம் "







பொதுவாகவே எழுத்தாளர்களின் திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருப்பதில்லையாமே ?

பல எழுத்தாளர்கள் தங்கள் மனைவி மார் மீது புகார் தெரிவிக்கின்றார்களே ?

கிரியேட்டிவ் பீப்பிள்இற்கு ஜிப்ஸி வாழ்க்கை முறைதான் பொருந்துமா ?

செக்ஸ் அனுபவிக்காமல் ஒரு படைப்பாளி பூரணமடைய முடியாதா ?




(சற்று சீரியஸ் ஆகின்றார் ) பெண் துணை இல்லாமல் படைப்பாளிகள் மட்டுமல்ல

எந்த ஆணும் வாழ முடியாது சுயநலம் மிக்கவர்கள் தான் பெண்களை குறை கூறுவார்கள்

எல்லோருக்கும் செக்ஸ் தேவை முக மூடியை கழற்றி வைத்து விட்டு குடும்பம் நடத்தினால்

படைப்பாளிகளின் குடும்ப வாழ்க்கை ருசிக்கும் ஜெயிக்கும்




உங்களின் சினிமா கிளாமர் கூடிய அறிவு ஜீவி இமேஜ் சுகமா சுமையா ?




:எதேன்ஸ் oracle delphi கோயிலில் இருந்து அதன் தெய்வம் "கிரேக்க நாட்டின் முதல் அறிவாளி

சக்கிரட்டீஸ்" என அறிவித்தது மக்கள் குழுமி இது பற்றி சக்கிரட்டீசிடம் கேட்ட போது "கிரேக்க நாட்டின் முதல்

முட்டாள் என்பதை நான் புரிந்துகொண்டேன் அதனால்தான் தெய்வம் அப்படிக்கூறியிருக்கக்

கூடும் என்றார் ..அறிவு ஜீவி இமேஜ்

ஒரு மாயை அதில் நான் சிக்க மாட்டேன் ...இவ்வாறு மதனுடனான பேட்டி முடிகின்றது ...

மதன் தற்பொழுது ஜெயா டிவியில் Madan Talkies என்ற
சினிமா விமர்சனத் தொகுப்பை வழங்கி வருகின்றார்
...இந்நிகழ்ச்சியில் உலக சினிமாக்கள் தற்பொழுது வந்த புதிய ஹாலிவுட்
திரைப்படங்கள் அனைத்தும் பிரித்து மேயப்படும் ...


மதன் கலைஞர் டிவியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பிரதாப்புடன்




சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ...மதன் நிகழ்ச்சியை விட்டு




நீங்கியதும் அந்த நிகழ்ச்சியை பார்க்க எனக்கு பவர்ஸ்டாரின் படம் பார்ப்பது




போல் இருந்தது .... புதிய தலைமுறை இயக்குனர்கள் இந்த நிகழ்ச்சியில்




தமது திறமைகளை வெளிக்காட்டுகின்றனர் ..அனால் அதைப்புரிந்து




கொள்வதற்கு ...இப்பொழுது அந்த நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருக்கும்




சுந்தர் சி ,பாக்கிய ராஜ் போன்றோரால் ஈடுகொடுக்க முடியாமல் இருப்பது




நேரடியகத் தெரிகிறது ...




ஒரு நிகழ்ச்சியில் வெர்ச்சுவல் ஹோலோக்ரம் தொழில் நுட்பத்தை




பயன்படுத்தி interview ஒன்றை நடத்துவதாக ஒரு இளைஞர் தனது சோர்ட்




பில்மை வெளியிட்டார் பக்கியரஜ்ஜிற்கு அது என்ன இலவேன்றே புரிய




வில்லை ...சுந்தர்சி கொஞ்சம் சமாளித்து விஷயத்தை முடித்து விட்டார்கள் ..







மதனது சில கார்டூன்ஸ் ..........










ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Cartoon-madhan



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Madhan_cartoon



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 P11





















ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 391858_256242567767874_189960617729403_729954_653047674_n



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Mathancartoon1972



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Madan_ae



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Madan_cartoon-04



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Madan_toon



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Madhan+cartoon-04



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Rettai-vaal-rengudu-madan-ananda-vikadan-jokes



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Sonia-manmohan-congress-bjp_italy-foreign-mnc-nri



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Tamilmakkalkural_blogspot_cricket







ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Tamilmakkalkural_blogspot_kashmir



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Tamilmakkalkural_blogspot_madan



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Tamilmakkalkural_blogspot_madan_cartoon+%281%29



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Tamilmakkalkural_blogspot_madan_cartoon



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Tamilmakkalkural_blogspot_madancartoon+%281%29



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Tamilmakkalkural_blogspot_madancartoon



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Tamilmakkalkural_blogspot_ndeal
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by logu Fri May 24, 2013 2:39 pm

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 28284 ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum