TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


களைப்பு பெலயீனத்திற்கு உடல்தான் காரணமா?

Go down

களைப்பு பெலயீனத்திற்கு உடல்தான் காரணமா? Empty களைப்பு பெலயீனத்திற்கு உடல்தான் காரணமா?

Post by Tamil Fri May 10, 2013 7:35 am

[You must be registered and logged in to see this image.]உடம்பு
நல்ல வாட்டசாட்டமாக இருக்கும். இரத்தசோகை, பிரஸர், சீனி வருத்தம் ஏதும்
இருக்காது, ஆனாலும் முகத்தில் சோர்வுடன் வருபவர்கள் பலர்.
‘உடம்பு பெலயீனமாகக் கிடக்கு. களைப்பாக இருக்கு. பெலத்திற்கு என்ன
சாப்பிடலாம்? என்ன சத்து மா கரைச்சுக் குடிக்கலாம்?’ எனக் கேட்பார்கள்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் இவர்களுக்கும் ஏன் களைப்பு வருகிறது. ஊட்டக் குறைவுதான் இவர்களது களைப்பிற்குக் காரணமா?

இத்தகைய களைப்பிற்கு பெரும்பாலும் கடுமையான நோய்கள் காரணமாக
இருப்பதில்லை. ஒருவரது தவறான பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமற்ற
உணவுமுறைகளும் கூடக் காரணமாக இருக்கலாம்.

தூக்கக் குறைபாடு
[You must be registered and logged in to see this image.]
முக்கிய பிரச்சனை போதிய தூக்கம் கிடைக்காததாக இருக்கக் கூடும். சிவராத்திரி
முழிப்புப் போல இரவிரவாக விழிப்பிருந்தால்தான் மறுநாள் களைப்பு வரும்
என்றில்லை. உங்களுக்கு தினமும் தேவைப்படும் தூக்கத்தில் ஒருமணி நேரம்
குறைந்தால் கூட மறுநாள் சக்தி இழந்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.

உங்கள் தூக்கம் குறைந்ததற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். *உதாரணமாக
வேலைப்பழு காரணமாக சரியான நேரத்திற்கு படுக்கைக்க்குப் போக
முடியாதிருக்கலாம்.
*படுக்கைக்குப் போனாலும் மனஅழுத்தங்கள் காரணமாக நிம்மதியாகத் தூங்க முடியாது போயிருக்கலாம்.
*வயதாகும்போது பலருக்கு குழப்பமற்ற தூக்கம் வராதிருக்கலாம்.
*அல்லது வேளையோடு எழுந்திருக்க முடியாதிருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கமின்மை மறுநாள் சோர்வைக் கொண்டுவரும்.

சோம்பேறி வாழக்கை முறை
[You must be registered and logged in to see this image.]
உடலுழைப்பற்ற சோம்போறித்தனமான வாழ்க்கை முறையும் இயலாமையைக் கொண்டு வரும்.
போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிக
அவசியமாகும்.

உடற் பயிற்சி செய்வதற்கு நேரமில்லை அல்லது களைப்பாக இருக்கிறது என அதைத்
தவிர்ப்பது தவறு. ஏனெனில் பயிற்சி இல்லையேல் உங்கள் உடலாரோக்கியம்
கெட்டுவிடும். சிறு வேலை செய்வது கூடக் களைப்பைக் கொண்டுவரும்.
[You must be registered and logged in to see this image.]
இதைத் தவிர்பதற்கு தினமும் அரை மணிநேரம் ஆயினும் உடலுழைப்பில் ஈடுபடுங்கள்.
வேகமாக நடக்கலாம், நீந்தலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். எதுவானாலும்
ஒரேயடியாக 30 நிமிடங்களை ஒதுக்குவது முடியாது எனில் அதனை இரண்டு தடவைகளாகப்
பிரித்துச் செய்யுங்கள். உடல் உறுதியானால் களைப்பு வராது.

போஸாக்கான உணவு

போஸாக்கான உணவையும், நீராகாரத்தையும் எடுக்காவிட்டால் உங்கள் நாளாந்த
வேலைக்கான எரிபொருளை உங்கள் உடல் கொண்டிருக்காது. காலை உணவு முதற்கொண்டு
போஸாக்காக எடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

எண்ணெய், பட்டர், மார்ஜரீன் போன்ற கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள
உணவுகளைத் தவிருங்கள். நார்ப்பொருட்கள் விற்றமின், தாதுப்பொருட்கள் அதிகமான
உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள். தீட்டாத அரிசி, அரிசிமா, ஆட்டாமா, குரக்கன்
போன்றவை நல்லது. பழவகைகளையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறிய உணவுகள்

இனிப்புச் செறிந்த பழச்சாறுகள், மென்பானங்கள் போன்றவை நல்லதல்ல. பால், உடன் தயாரித்த பழச்சாறு போன்றவை விரும்பத்தக்கவை.

அதிகமாக வயிறு கொள்ளாமல் உண்பதைத் தவிருங்கள். சிறிய உணவுகளாக, அதுவும்
கலோரிச் சத்துக் குறைந்த உணவுகளாக உண்ணுங்கள். வேண்டுமானால் 4-5 மணி
நேரத்திற்கு ஒரு முறை அவ்வாறான உணவை எடுக்கலாம்.

மதுபானம்

[You must be registered and logged in to see this image.]

மதுபானம் உட்கொள்ளும்போது உற்சாகம் அளிப்பதுபோலத் தோன்றினாலும்
உண்மையில் நரம்பு மண்டலத்தைச் சோர்வுறச் செய்கிறது. உட்கொண்டு பல
மணிநேரத்திற்கு ஒருவரைச் சோர்வுறச் செய்யலாம். அத்துடன் படுக்கைக்குச்
செல்லமுன் மதுபானம் எடுத்தால் தூக்கத்தைக் கெடுத்து அடுத்த நாளையும்
சோர்வுறச் செய்துவிடலாம்.

நெருக்கீடும் மனப்பதற்றமும்

[You must be registered and logged in to see this image.]
ஆயினும் இன்றைய காலகட்டத்தில் பலரின் சோர்விற்கும் களைப்பிற்கும் காரணமாக
இருப்பது நெருக்கீடு நிறைந்த வாழ்க்கையும், மனப்பதற்றமும்தான். ஓய்விற்கு
நேரமின்றி ஒரு பணியிலிருந்து மற்றொரு வேலைக்கு இடைவெளியின்றி
ஓடிக்கொண்ருப்பவர்களுக்கு களைப்பு ஏற்படவே செய்யும்.


நேர முகாமைத்துவம்


மனத்தில் நிறைவும் சந்தோசமும் இருந்தால் களைப்பு நெருங்காது.
இதனைத் தவிர்ப்பதற்கு நேர முகாமைத்துவம் முக்கியமானதாகும்.


  • செய்து முடிப்பதற்கு சிரமமான பணிகளை பொறுப்பு ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
  • முக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள்.
    *குழப்பங்கள் ஏற்படாமல் பணிகளை ஒழுங்கு முறையில் செய்து முடிக்க
    திட்டமிட்டுச் செயலாற்றுங்கள்.
  • பணிகளின் இடைவெளிகளில் சற்று நிதானித்து மூச்சுவிட்டுக் களைப்பாறுங்கள்.
  • தினசரிக் கடமைகளுக்கு மேலாக உங்களை மகிழ்வுறுத்தும் பொழுதுபோக்கில் அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்.
  • மதிய உணவின் பின் மீதி வேலைகளைத் தொடங்கு முன் முடியுமானால் குட்டித் தூக்கம் செய்யுங்கள். அல்லது சற்றுக் காலாற உலாவுங்கள்.
  • அவசியமானால் காலையில் 15 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கை விட்டெழுந்து நாளாந்தக் கடமைகளை ஆரம்பியுங்கள்.

வேலைத்தள நெருக்கடி

உங்கள் வேலைத்தளத்திலும் களைப்பு ஏற்படுகிறது எனில் அது உங்கள் தொழில்
சார்ந்ததாக இருக்கக் கூடும். நெருக்கடி மிக்க வேலையாக இருக்கலாம் அல்லது
தொழிலில் அதிருப்தி அல்லது ஈடுபாடு குறைந்த வேலையாகவும் இருக்கலாம். திறந்த
மனத்தோடு சுயமதிப்பீடு செய்து நிவர்த்தி செய்வது அவசியம்.

சகஊழியர்களுடன் நல் உறவை

சகஊழியர்களுடன் நல் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடனான உறவில்
ஏதாவது உரசல் அல்லது நெருக்கடி இருந்தால் அதனைத் தீர்பதற்கு முன்னுரிமை
கொடுங்கள்.

மேலதிகாரியுடனான உறவு

உங்கள் மேலதிகாரியுடனான உறவைப் பலப்படுத்துங்கள்.

அவர் உங்களிடம் எதனை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து செயற்படுங்கள்.

உங்கள் திறமைகளின் எல்லைகளைப் புரிந்து கொள்ளுங்கள். தொழில் சார்ந்த
உங்கள் பலவீனங்களை திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டு அதனை நிவர்த்தி செய்ய
முயலுங்கள்.

மருந்துகள்

வேறு நோய்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளும் களைப்பிற்குக்
காரணமாகலாம். உதாரணமாக தடிமன் தும்மலுக்கு உபயோகிக்கும் பிரிட்டோன்,
செட்ரிசின் போன்றவை, தூக்க மருந்துகள், பிரஸருக்கு உபயோகிக்கும் பீட்டா
புளக்கர் மருந்துகளும் காரணமாகலாம். இருமலுக்கு உபயோகிக்கும் மருந்துகளில்
உள்ள கொடேன் போன்ற வேறு பல மருந்துகளையும் சொல்லலாம்.

டொனிக், சத்துமா, விற்றமின்

எனவே களைப்பு என்றவுடன் சத்து மருந்துகள், டொனிக், சத்துமா, விற்றமின்
மருந்து ஊசி எனத் தேடி அலையாமல் காரணத்தைக் கண்டு அதனை நீக்க முயலுங்கள்.

உங்களால் முடியாவிட்டால் உங்கள் மருத்துவரை நாடுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப மருத்துவர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum