TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தேர்வுகள் பலவிதம் 1 - குடிமைப் பணித் தேர்வுகள் (Civil Service Exam)

Go down

தேர்வுகள் பலவிதம் 1 - குடிமைப் பணித் தேர்வுகள் (Civil Service Exam) Empty தேர்வுகள் பலவிதம் 1 - குடிமைப் பணித் தேர்வுகள் (Civil Service Exam)

Post by மாலதி Sat May 04, 2013 8:58 pm

தேர்வுகள் பலவிதம் 1 - குடிமைப் பணித் தேர்வுகள் (Civil Service Exam)


சிறப்புத் தொடர்

[You must be registered and logged in to see this image.]ரு
காலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிகளில் சேர்வதற்காக
நுழைவுத் தேர்வுக்காக மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்
மாணவர்கள். இப்போதெல்லாம் எல்.கே.ஜி.யிலேயே துவங்கிவிடுகிறது
நுழைவுத்தேர்வுகள்.

சாதாரண எல்.கே.ஜி படிப்பில் இருந்து பி.ஹெச்டி படிப்பு வரை நுழைவுத்
தேர்வுகள். அரசு அலுவலகங்களில் கடைநிலை ஊழியர் முதலே எல்லாப் பணிகளுக்குமே
போட்டித் தேர்வுகள் மூலமே நியமனம் செய்யப்படுவதால், இன்றைய இளைஞர்களின்
உலகமே தேர்வுகள் சூழ் உலகமாகிவிட்டது.

இந்தப் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் பற்றிய அறிமுகத்தை இந்தத் தொடரில் பார்க்கலாம்.

குடிமைப் பணித் தேர்வுகள் (Civil Service Exam)

இந்தியாவில் நடைபெறும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும்
பெருமதிப்புடையதாகவும் கடினமானதாகவும் கருதப்படும் தேர்வு இது. IAS, IPS,
IFS, IRS போன்ற நிர்வாக அடுக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் 26
உயர்பதவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு(Under Graduate Degree)
படித்திருக்க வேன்டும். திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களிலும், தொலைநிலைப்
பல்கலைக் கழகங்களிலும் கூடப் படித்திருக்கலாம். இறுதியாண்டு
படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் தேர்வெழுதலாம். முதன்மைத் தேர்வு
எழுதும் காலகட்டத்திற்குள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 21 வயது முதல் 30 வயதிற்குள் நான்கு
முறையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 21-33 வயதிற்குள்
ஏழு முறையும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் 21-35
வயதிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதத் தகுதியுடையவர்கள்.

மூன்று பிரிவுகள்:

முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination),
முதன்மைத் தேர்வு (Main Examination),
நேர்முகத் தேர்வு (Interview)

தேர்வுக்கான அறிவிப்புகள் நவம்பர்/டிசம்பர் மாதத்தில் upscயால்
வெளியிடப்படும். முதல்நிலைத் தேர்வுகள் மே மாதத்தில் நடைபெறும். முதன்மைத்
தேர்வுகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும். நேர்முகத் தேர்வு
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இவ்வாறு இத்தேர்வானது ஓராண்டு
முழுவதும் நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே முதன்மைத் தேர்வை ஒரு
தேர்வர் எழுத முடியும், இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகத்
தேர்வுக்குச் செல்ல முடியும்.

முதல்நிலைத் தேர்வில், பொதுஅறிவுத் தாள் மற்றும் CSAT எனப்படும் திறனறியும்
தேர்வு என இரண்டு தாள்களைக் கொண்டது. ஒவ்வொரு தாளும் 200 மதிப்பெண்களைக்
கொண்டது.

முதன்மைத் தேர்வில், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை ஒவ்வொன்றும் 300
மதிப்பெண்கள் கொண்டது, கட்டுரைத் தாள் 250 மதிப்பெண்கள் கொண்டது, நான்கு
பொது அறிவுத்தாள்கள் ஒவ்வொன்றும் 300 மதிப்பெண்கள் கொண்டது, விருப்பப்
பாடம் இரண்டு தாள்களைக் கொண்டது, ஒவ்வொரு தாளும் தலா 250 மதிப்பெண்கள்
கொண்டது. ஆக, முதன்மைத் தேர்வு மொத்தமாக 1750 மதிப்பெண்கள் கொண்டது.

தேர்வருடைய ஆளுமைத் தன்மையைச் சோதிக்கும் நேர்முகத் தேர்வு 275
மதிப்பெண்களைக் கொண்டது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
இரண்டிலும் மொத்தம் 2025 மதிப்பெண்களில் தேர்வர் பெறும் மதிப்பெண்ணைக்
கொண்டே பணிகள் அளிக்கப்படுகிறது.

இத்தேர்வின் மூன்று படிநிலைகளில் மாணவர்கள்
தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதைவிட, மாணவர்கள் ஒவ்வொரு படிநிலையிலும்
வடிகட்டப்படுகிறார்கள். பணியிடங்களின் எண்ணிக்கையை விட பத்திலிருந்து 12
மடங்கு எண்ணிக்கையிலானவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் செல்வார்கள்.
அதிலிருந்து இரு மடங்கு தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு
அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தேர்வர்களிம் எண்ணிக்கை மாறுபடுமே
ஒழிய இந்த விகிதத்தில் பெருமளவு மாற்றம் இருக்காது.

குடிமைப் பணித் தேர்வுகளுக்கு டெல்லிக்குச் சென்று பயிற்சி மேற்கொண்டால்
மட்டுமே தேர்வடைய முடியும் என்ற மாயைகள் உடைந்து சென்னையில் இருந்த படியே
படிக்க முடியும் என்பதும், தேர்வடைய முடியும் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக
நிரூபணம் ஆகிவருகிறது. அதிக அளவிலான பயிற்சி மையங்களும், சிறந்த நூலக
வசதிகளும் மாணவர்களுக்கு பெரிய வாய்ப்பினை உண்டாக்கித் தந்திருக்கிறது.
சென்னை மட்டுமல்லாது எல்லா மாவட்ட மைய நூலகங்களிலும் போட்டித்
தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவும் இயங்கி வருகிறது. தேவை
விடாமுயற்சியும் மன உறுதியும் மட்டுமே.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்நிலைத் தேர்வில் விருப்பப் பாடத்தை நீக்கி
திறனறித் தேர்வைக் கொண்டு வந்ததைப் போல, முதன்மைத் தேர்வில் சில
மாற்றங்களைக் கொன்டு வர UPSC முடிவு செய்தது. இரண்டு விருப்பப் பாடங்களை
ஒன்றாகக் குறைத்து, அந்த மதிப்பெண்களை ஈடு செய்யும் பொருட்டு பொது அறிவுத்
தாள்களின் எண்ணிக்கையை நான்காக கூட்டுவதாகவும், மொழிப்பாடங்களில்
பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே இலக்கியப் பாடங்களை விருப்பப் பாடமாக
எடுக்க முடியும் போன்ற விருப்ப மொழி சார்ந்த தேர்வுகளில்(Choices) சில
மாற்றங்களை முன்வைத்தார்கள்.

இந்த மாற்றங்கள் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்துவதோடு, ஆங்கிலம் அல்லது இந்திக்கு கூடுதல்
முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கும் பெரும் எதிர்ப்புகள் எழுந்ததாலும் இந்த
ஆண்டு பழைய முறைப்படியே தேர்வுகள் நடைபெறுகின்றன. இனிவரும் காலங்களில் இது
போன்ற மாற்றங்களையே தேர்வுகளில் எதிர்பார்க்கலாம், அல்லது என்ன முடிவை
UPSC எடுக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், பல சமயங்களில்,
UPSC என்பது Un Predictable Service Commission ஆகவே செயல்பட்டு
வந்திருக்கிறது.

குடிமைப் பணித் தேர்வுகள் தொடர்புடைய பயனுள்ள இணைப்புகள்:

[You must be registered and logged in to see this link.]

- சுப. தமிழினியன்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum