TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Chicken recipes

Go down

Chicken recipes Empty Chicken recipes

Post by Tamil Tue Jan 05, 2010 10:31 pm

அசைவ உணவு உண்போரால் அதிகம்
விரும்பிச் சாப்பிடப்படுவது கோழி இறைச்சிதான். இதற்கு முக்கியக் காரணம்,
இதனுடைய சுவை. கோழி இறைச்சிக் கொண்டு ஆயிரக்கணக்கில், அறுசுவையிலும்
உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. கோழிக்கறி புரதச்சத்து மிகுந்த
உணவாகும். கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. கோழி முட்டையில்தான் கொழுப்பு
அதிகம். அதிகம் எண்ணெய் சேர்க்காமல், தந்தூரி முறையில் செய்யப்படும்
கோழிக்கறி உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. கொழுப்பை தவிர்க்க
நினைப்பவர்கள், மற்ற இறைச்சிகளை ஒதுக்கிவிட்டு கோழி இறைச்சியை
சாப்பிடலாம்.

Chicken recipes Chicken_foods

Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty KFC சிக்கன்

Post by Tamil Tue Jan 05, 2010 10:33 pm

தேவையானப் பொருட்கள்





  • ஊற வைக்க:
  • எலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது) (அ) லெக் பீஸ் - ஒரு கிலோ
  • வெங்காயம் - ஒன்று (பெரியது)
  • தக்காளி- ஒன்று (பெரியது)
  • இஞ்சி - மூன்று அங்குல துண்டு
  • பூண்டு - ஆறு பல்
  • பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • டிப் செய்து பொரிக்க:
  • மைதா - ஒரு கப்
  • கார்ன் ப்ளார் - கால் கப்
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் + பட்டர் - பொரிக்க தேவையான அளவு



வெங்காயம்
மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல்
சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து
எடுத்துக் கொள்ளவும்.


இஞ்சி,
பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த
சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த விழுது மற்றும் பேக்கிங்
பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற
வைக்கவும். ஊறியதும் எடுத்து நன்கு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.


டிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கலந்து அதில் தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி டிப் செய்யவும்.


வாணலியில்
எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து
எடுக்கவும். பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய
விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும்.


மொறுமொறு
சுவையான KFC சிக்கன் ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல்
குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென
ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக
செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இந்த குறிப்பினை அவர் நான்கு ஐந்து முறை
செய்து பார்த்து அனைவருக்கும் பிடித்திருந்ததால் இதை நம்முடனும் பகிர்ந்து
கொண்டுள்ளார்.


















இது
கடையில் கிடைப்பது போல் இல்லை என்றாலும் ஓரளவிற்கு சுவை கிடைக்கும்,
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பருப்பு சாதத்திற்கு தொட்டுகொள்ள
பொருத்தமாக இருக்கும். குபூஸுடனும் சாப்பிடலாம். மசாலா வகைகள் அவரவர்
விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்து கொள்ளலாம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty ஈசி சிக்கன் கிரேவி(பச்சை நிறம்)

Post by Tamil Tue Jan 05, 2010 10:35 pm

தேவையான பொருட்கள்




  • சிக்கன் - 1 கிலோ
  • எண்ணெய் - சிறிது
  • இஞ்சி,பூண்டு விழுது - தேவைக்கேற்ப
  • ___________________________________
  • அரைக்க தேவையானவை
  • ___________________________________
  • வெங்காயம் - 2
  • புதினா இலை - 1 கப்
  • மல்லி இலை - 1 கப்
  • பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
  • பெப்பர் - சிறிது
  • உப்பு - தேவைக்கேற்ப




செய்முறை




  • கடாய் அல்லது நான் ஸ்டிக்கில் எண்ணெய் விட்டு சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  • பின் அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பின் அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து நன்கு வதக்கி பரிமாறவும்.





வழங்கியவர்


காந்தி - மஸ்கட்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty வறுத்த கோழி குழம்பு

Post by Tamil Tue Jan 05, 2010 10:36 pm

தேவையானப் பொருட்கள்





  • கோழி - அரைக் கிலோ
  • வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள்:
  • வர மிளகாய் - 8
  • மல்லி - 4 தேக்கரண்டி
  • சோம்பு - 2 தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி - 3 இன்ச் அளவு
  • பூண்டு - 10 பல்
  • சின்ன வெங்காயம் - 10
  • தேங்காய் - ஒரு கப்
  • தாளிக்க தேவையான பொருட்கள்:
  • பட்டை - 2 துண்டு
  • கிராம்பு - 2
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - 3



கோழியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.



வாணலியில்
2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு,
சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.


இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.



பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.


அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த கோழியை சேர்த்து கொதிக்க விடவும்.



குழம்பு
கொதித்து, கோழி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து
விடவும். சுவையான வறுத்த கோழி குழம்பு ரெடி. இந்த குறிப்பை செய்து
காட்டியவர் அறுசுவை உறுப்பினரான திருமதி. மாலதி மோகன் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty நாட்டு கோழி கொழம்பு

Post by Tamil Tue Jan 05, 2010 10:36 pm

தேவையான பொருட்கள்




  • சிக்கன் - 1/2 kg
  • மிளகாய் தூள் - 2 1/2 tsp
  • தனியா தூள் - 1/2 tsp
  • மஞ்சள் தூள் - 1/2 tsp
  • எலுமிச்சை - 1 1/2
  • இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
  • பச்சை மிளகாய் - 4
  • காய்ந்த மிளகாய் - 4
  • தக்காளி - 200 g
  • வெங்காயம் - 200 g
  • ஏலக்காய் - 6
  • தேங்காய் - 1/2 கப்
  • பூண்டு - 8 பல்
  • இஞ்சி - 50 g
  • சீரகம் - 1 tsp
  • மிளகு - 1 tsp
  • பிரிஞ்சி இலை - 1
  • சோம்பு - 1/2 tsp
  • எண்ணெய் - 1 tbsp
  • கருவேப்பிலை - 1 இணுக்கு
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • சிக்கனை
    சுத்தம் செய்து மிளகாய் தூள் (1/2 tsp), தனியா தூள் (1/2 tsp), மஞ்சள்
    தூள் (1/2 tsp), எலுமிச்சை சாறு (1) சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  • தேங்காயை
    துருவி சோம்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி,
    பூண்டு, கருவேப்பிலை சேர்த்து மைய அரைத்து கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும் ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
  • ஊறிய சிக்கன் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.
  • வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.





குறிப்பு:


நாட்டு கோழி வைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.



வழங்கியவர்


Ms. Moorthy, USA





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

20 நிமிடம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty சிக்கன் தொக்கு

Post by Tamil Tue Jan 05, 2010 10:37 pm

தேவையான பொருட்கள்




  • சிக்கன் - 1/2 kg
  • மிளகாய் தூள் - 2 tsp
  • தனியா தூள் - 3 tsp
  • மஞ்சள் தூள் - 1/2 tsp
  • தக்காளி - 350 gm
  • கடுகு - 1 tsp
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
  • எண்ணெய் - 1 tbsp
  • கருவேப்பிலை - 1 இணுக்கு
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • தக்காளியை சுடு தண்ணீரில் போட்டு தோலுரித்து கூழாகி தனியே வைத்து கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் சூடாகி கடுகு கருவேப்பிலை கீறிய பச்சை மிளகாய் தாளிக்கவும்.
  • பின்பு நசுக்கிய தக்காளியை சேர்த்து எல்லா பொடியையும் சேர்த்து ஒரு கிளறு கிளர வேண்டும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும்.
  • சுவையான கோழி தொக்கு ரெடி.





குறிப்பு:


நாட்டு கோழியாக இருந்தால் சுவை அதிகம்.



வழங்கியவர்


Ms. Moorthy, USA





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

10 நிமிடம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty கோழி உருளைக் கிழங்கு குழம்பு

Post by Tamil Tue Jan 05, 2010 10:38 pm

தேவையான பொருட்கள்




  • கோழி-1 கிலோ
  • உருளைக் கிழங்கு-2(பெரியது)
  • வெங்காயம்-2
  • தக்காளி- 1 அ 2
  • பூண்டு-4 பல்
  • பச்சை மிளகாய்-4
  • மிளகாய்த்தூள்-1 மே.க
  • கறுவா-1 துண்டு
  • கராம்பு-4
  • கடுகு-1/2 தே.க
  • பெருஞ்சீரகம்-1 தே.க
  • இறைச்சி சரக்கு தூள் -11/2 தே.க
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • எண்ணெய்
  • எலுமிச்சம் பழப்புளி-1/2 (விரும்பினால்)




செய்முறை




  • கோழியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • உருளைக் கிழங்கின் தோலை சீவி பெரிய துண்டுகளாக வெட்டவும்.
  • வெங்காயம், பூண்டு, தக்காளியை நறுக்கி வைக்கவும்.
  • பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
  • ஒரு
    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம்,
    கறிவேப்பிலை, கறுவா,கராம்பு, பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது வதங்கியதும் பூண்டைப் போட்டு வதக்கவும்.
  • பூண்டு வதங்கியதும் கோழியைச் சேர்த்து வதக்கவும்.
  • கோழி சிறிதளவு வதங்கியதும் உப்பு, தக்காளிச் சேர்த்து ஒரு முறை கிளறி மூடி வேகவிடவும்.
  • 5நிமிடத்தின் பின்பு மூடியை திறந்து மிளகாய்த்தூளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர் விடவும்.
  • பின்பு பச்சை மிளகாய், உருளைக் கிழங்கை சேர்த்து மூடி வேகவிடவும்.
  • கோழி, உருளைக் கிழங்கு வெந்து, குழம்பு தடிப்பாக வந்ததும் இறைச்சி சரக்குத்தூளை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
  • பின்பு விரும்பினால் எலுமிச்சம்பழ புளியைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சுவையான கோழி உருளைக் கிழங்கு குழம்பு தயார்.
  • இது சோறு, புட்டு, இடியப்பம், பாண், சப்பாத்திக்கு மிகவும் நல்லது.





வழங்கியவர்


திருமதி வத்சலா நற்குணம்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6 நபர்களுக்கு

20 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty சிக்கன் பிரியாணி - 3

Post by Tamil Tue Jan 05, 2010 10:38 pm

தேவையானப் பொருட்கள்





  • கோழிக்கால் - ஒரு கிலோ
  • பாசுமதி அரிசி - 750 கிராம்
  • வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 5
  • புதினா இலை - ஒரு கட்டு
  • கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
  • தக்காளி - ஒன்று
  • முழுப்பூண்டு - ஒன்று
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • கரம் மசாலா பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
  • எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
  • பிரியாணி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
  • தக்காளிப் பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
  • ஏலக்காய் - 4
  • கறுவா (பட்டை) - ஒரு துண்டு
  • கிராம்பு - 4
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1 - 1 1/2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய், வெண்ணெய் அல்லது நெய் - ஒரு மேசைக்கரண்டி



கோழிக்காலை
நான்கு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம்,
பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா,
கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து அலசி வைக்கவும். பூண்டு மற்றும்
இஞ்சியின் தோலை நீக்கி வைக்கவும்.



அரிசி
மற்றும் மசாலாப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசுமதி
அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு அரிசியை முக்கால்
பதத்திற்கு சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.


சுத்தம்
செய்து வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சி, பூண்டு
ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.



ஒரு
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு
வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து
வதக்கவும்.



வெங்காயம்
வதங்கியதும் கோழியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் உப்பு,
தக்காளிப்பழம் சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும்.



5
நிமிடம் கழித்து அரைத்த கொத்தமல்லி, புதினா விழுதைச் சேர்த்து பச்சை வாசனை
போக 3 நிமிடம் வதக்கவும். அடுத்து தக்காளி விழுது, மிளகாய்த்தூள்,
பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் 3 கப்
தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.


கொதி
வந்ததும் அதில் கரம் மசாலா பேஸ்ட், பிரியாணி பேஸ்ட், எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட்
சேர்த்து மூடி வேகவிடவும். கோழி நன்கு வெந்ததும் குழம்பாக இருக்கும்பொழுது
இறக்கி வைத்துவிடவும்.


ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அது உருகியதும் முதலில் சாதத்தைப் போடவும்.



அதன்
மேல் இறக்கிவைத்திருக்கும் சிக்கன் குழம்பு கறியை விடவும். மீண்டும் அதன்
மேல் சாதத்தை போட்டு அடுத்து குழம்பு கறி என்று இதுப்போல் மாறிமாறி
செய்யவும்.



பிறகு ஒரு முறை சாதத்தை கிளறி மூடி வைத்து அடுப்பை சிம்மில் விடவும். ஐந்து நிமிடம் கழித்து பிறகு இறக்கவும்.



இப்பொழுது
சுவையான சிக்கன் பிரியாணி தயார். இதனுடன் முட்டை அல்லது ஏதாவது ஒரு
பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த சிக்கன் பிரியாணி குறிப்பினை
அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.





மேலே குறிப்பிட்டது போல் கறியை வைத்து எல்லாப் பேஸ்ட்டுக்களும் சேர்த்த பின்பு அரிசியைப் போட்டு மூடி வேகவைத்தும் சமைக்கலாம்.

Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty சிந்தாதி சிக்கன் குருமா

Post by Tamil Tue Jan 05, 2010 10:39 pm

தேவையான பொருட்கள்




  • கோழிக்கறி - 1/2 கிலோ (நடுத்தர துண்டுகள்)
  • வெங்காயம் - 1/4 கிலோ
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 3
  • மிளகாய்த்தூள் - 2 டீ ஸ்பூன்
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 7 பல்
  • கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
  • தயிர் - 1 கப்
  • கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி - 10
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • பட்டை - 1 துண்டு
  • கிராம்பு - 3
  • ம்ஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி
  • எண்ணை - 4 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப




செய்முறை




  • குக்கரில் எண்ணய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, கீறிய பச்சை மிளகாய் போட்டு, மிளகாய் வெள்ளையாக வரும் வரை வதக்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்கு வதக்கவும்.
  • இத்துடன்
    இஞ்சி, பூண்டு விழுது, கோழி கறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்
    மசாலாத்தூள் மற்றும் தயிறையும் சேர்த்து, நன்கு வதக்கி, ஒரு டம்ளர்
    தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
  • கசகசா, முந்திரியை சிறிது வெந்நீரில் ஊரவைத்து, தேங்காயை சேர்த்து அரைத்து, கொதித்துக்கொண்டிருக்கும் குழம்புடன் சேர்க்கவும்.
  • நன்கு கொதித்தவுடன், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
  • சுவையான சிந்தாதி குருமா தயார்.





வழங்கியவர்


Kanthimathi





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6

20 நிமிடங்கள்

20 நிமிடங்கள்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty முழு கோழி வறுவல்(மற்றொரு சுலப முறை)

Post by Tamil Tue Jan 05, 2010 10:40 pm

தேவையான பொருட்கள்




  • கோழி - 1
  • இஞ்சி,பூண்டு விழுது - தேவைக்கேற்ப
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • சீரக தூள் - 1/2 தேக்கரண்டி




செய்முறை




  • ஒரு பாத்திரத்தில் இஞ்சி,பூண்டு விழுது,மிளகாய் தூள்,மல்லித்தூள்,உப்பு,மஞ்சள் தூள்,சீரக தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் கோழியின் மேல் நன்றாக தடவவும்.
  • 5 மணி நேரம் நன்றாக ஊறிய பின் கடாயில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.
  • அவனிலும் செய்யலாம்.





குறிப்பு:


கடாயில் செய்யும் போது கார்ன்ஃபலார் மாவு 1/2 தேக்கரண்டி சேர்க்கவும்,அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

5 மணி நேரம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty சிக்கன் பிரியாணி(குக்கரில்)

Post by Tamil Tue Jan 05, 2010 10:41 pm

தேவையான பொருட்கள்




  • பாசுமதி(அ)பொன்னி அரிசி -2கப்
  • சிக்கன் -300கிராம்
  • வெங்காயம் -2
  • இஞ்சி பூண்டு விழுது -2ஸ்பூன்
  • தக்காளி -2
  • பச்சைமிளகாய் -2
  • பிரியாணிமசாலா -2ஸ்பூன்
  • சிக்கன்மசாலா -2ஸ்பூன்
  • மஞ்சள்தூள் -1/2ஸ்பூன்(அ)கேசரிகலர்
  • கொத்தமல்லிகீரை -1/2கட்டு
  • புதினா -1/2கட்டு
  • உப்பு -தேவையான அளவு
  • தண்ணீர் -31/4கப்
  • தாளிக்க:
  • நெய் -1ஸ்பூன்
  • எண்ணை -2ஸ்பூன்
  • பிரியணி இலை -1
  • பட்டை,கிராம்பு,ஏலக்காய் -2
  • அன்னாசிமொக்கு -2




செய்முறை




  • அரிசியை 20நிமிடம் ஊறவைத்து தண்ணீர் வடித்துவைக்கவும்.சிக்கனை சுத்தம்செய்துவைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளி நீளவாக்கில் பொடியாக நறுக்கவும்.மிளகாய் இரண்டாக கீறிவைக்கவும்.
  • கொத்தமல்லி,புதினாவை அலசி பொடியாக நறுக்கவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து நெய்,எண்ணை ஊற்றி தாளிக்க குடுத்தவற்றை போட்டு வெங்காயம்,மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
  • இஞ்சிபூண்டுவிழுது போட்டு நன்கு பச்சைவாசனை போக வதக்கி நறுக்கிய தக்காளி போடவும்.
  • தக்காளி நன்கு வதங்கியவுடன் சிக்கனை போட்டு தண்ணீர்விடும்வரை நன்கு வதக்கவும்.
  • பிரியாணிமசாலா,சிக்கன்மசாலா,மஞ்சள்தூள்(அ)கேசரிகலர்
    சேர்த்து நன்கு கிளறி உப்பு,கொத்தமல்லி,புதினா சேர்த்து நன்கு எல்லாம்
    கலக்கும்படி கிளறவும்.
  • 1டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவைத்து வெயிட்போட்டு 1விசில்வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
  • சற்று
    ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து நன்கு கிளறிவிட்டு அரிசியை
    போடவும்.மீதம் உள்ள தண்ணிரை ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து நன்கு
    கலந்துவிட்டு குக்கரை மூடி அடுப்பை ஆன்செய்து வெயிட் போட்டு வேகவிடவும்.
  • 2விசில்
    வந்தவுடன் 5நிமிடம் அடுப்பை சிம்மில்வைத்து இறக்கவும்.சிறிதுநேரம் கழித்து
    குக்கரை திறந்து நன்கு எல்லாம் சேரும்படி கலந்துவிட்டு வேரு ஒரு
    பாத்திரத்தில் மாற்றிவைக்கவும்.
  • சுவையான சிக்கன்பிரியாணிரெடி.





குறிப்பு:


தயிர்பச்சடி,குருமாவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
தண்ணிர் அளவு உபயோகிக்கும் அரிசியைபொருத்து மாறுபடும்.



வழங்கியவர்


செல்வி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty மலேசியன் சிக்கன் டிரைகறி

Post by Tamil Tue Jan 05, 2010 10:46 pm

தேவையான பொருட்கள்




  • எலும்பில்லாத சிக்கன் துண்டு - 1/4 கிலோ
  • வெங்காயம் - 1 (mikap பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • காய்ந்த மிளகாய் - 3 (thuNtukaLaakkiyathu)
  • கெட்டித்தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
  • தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  • நல்லமிளகுத்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
  • சில்லிப்பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சைச்சாறு - 1/2 மூடி
  • எண்ணெய் - தேவைக்கேற்ப
  • உப்பு - தேவைக்கேற்ப்ப
  • கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)




செய்முறை




  • சிக்கனை
    நன்றாக சுத்தம் செய்து அதில் நல்லமிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும்
    சிறிது உப்பு கலந்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஒரு
    கடாயில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் விட்டு அதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம்,
    காய்ந்த மிளாகயை பிச்சுப்போட்டு, சில்லிப்பேஸ்ட்ம் போட்டு நன்றாக
    கிண்டவும்.
  • ஊறவைத்துள்ள சிக்கன் துண்டுகளைப்போட்டு சுருள வதக்கவும். 5 நிமிடம் கழித்தப்பின்னர் மஞ்சள்த்தூள் தூவவும்.
  • தேங்காய்ப்பால் ஊற்றி சிக்கனை வேகவைக்கவும். மிதமான தீயில் சிக்கன் வேகவைக்க சிறிது தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • சிக்கன் வெந்து வரும் வேளையில் தேவையான அளவு உப்பு போடவும்.
  • சிக்கன் வெந்து உப்பு எல்லாம் சரியாக இருக்கும் போது தேங்காய்த்துருவலைத்தூவி நன்றாக் சுருள வதக்கவும்.
  • எல்லாமும் கலந்து கறி டிரைஆகி வரும் போது கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.





குறிப்பு:


இந்த மலேசியன் சிக்கன் டிரை கறி சப்பாத்தி, நாண், ரஸம்சாதம் இவற்றிக்கும் நல்ல ஒரு பொருத்தம்.



வழங்கியவர்


மஹாபிரகதீஸ், China





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



2

45 min

20 min
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty சாஃப்ட் அண்ட் க்ரிஸ்பி கிட்ஸ் லாலி பாப்

Post by Tamil Tue Jan 05, 2010 10:47 pm

இது
நான் செய்யும் ப‌ல‌ வகையான‌ சிக்க‌ன் ப்ரையில் இதுவும் ஒன்று. எல்லா
குழந்தைகளுக்கும் பிடித்தது லாலி பாப்பும், சிக்க‌ன் விங்க்ஸும் தான்.இந்த
முறையிலும் பொரித்து பாருங்கள்.







தேவையான பொருட்கள்




  • லெக் பீஸ் - 900 கிராம் (ஒரு பாக்கெட்)
  • வினிக‌ர் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி
  • காஷ்மீரி சில்லி ப‌வுட‌ர் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி
  • ரெட் க‌ல‌ர் பொடி - கால் தேக்க‌ர‌ண்டி
  • உப்பு தூள் - 1 1/2 தேக்க‌ர‌ண்டி
  • மிள‌கு தூள் -‍ ஒரு தேக்க‌ர‌ண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • எலுமிச்சை - ஒன்று (சிறிய‌து)
  • த‌யிர் ‍- ஒரு மேசைக்க‌ர‌ண்டி
  • முட்டை - ஒன்று
  • மைதா - ஒரு குழிக்க‌ரண்டி
  • எண்ணெய் - பொரிக்க‌ தேவையான‌ அளவு
  • அல‌ங்க‌ரிக்க‌
  • ***************
  • கேர‌ட்
  • வெள்ள‌ரி
  • த‌க்காளி
  • எலுமிச்சை
  • கொத்தம‌ல்லி த‌ழை




செய்முறை




  • சிக்க‌ன்
    லெக் பீஸை தோலெடுத்து வினிக‌ர் சேர்த்து ஊற‌ வைத்து 5, 6 முறை நன்கு
    க‌ழுவிக் கொள்ளவும். லெக் பீஸ் அனைத்தையும் குறுக்காக‌ ஆழ‌மாக‌ கீறி
    விட்டு த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும்.
  • சுவையான‌ சாஃப்ட் அண்ட் க்ரிஸ்பி கிட்ஸ் லாலி பாப் ரெடி
  • ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த லெக் பீஸை போட்டு அதனுடன் முட்டை, மைதா மாவு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
  • எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  • சிக்கன் துண்டுகள் ஊறியதும் அதனுடன் முட்டை மற்றும் மைதா மாவை சேர்த்து பிசையவும்.
  • முட்டை, மைதா மாவு சேர்த்த சிக்கன் கலவையை ப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து ஊற விடவும்.
  • சிக்கன் ஊறியதும் எடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நான்கு நான்கு துண்டுகளாக போட்டு பொரிக்கவும்
  • அடுப்பின் தீயின் அளவை மிதமாக வைத்து மூடி போட்டு வேக விடவும்.
  • சிக்கன் வெந்ததும் தீயின் அளவை அதிகப்படுத்தி நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெயை வடித்து வைக்கவும்.





குறிப்பு:

சில‌
வ‌கை சிக்க‌ன் பொரிக்கும் போது எண்ணெயில் ம‌சாலா அனைத்தும் ச‌ட்டியின்
அடியில் போய் ஒட்டி கொள்ளும். இதைப் போல் பொரிப்ப‌தால் எண்ணெய் க்ளிய‌ராக‌
இருக்கும். குழ‌ந்தைக‌ளுக்கு சிக்க‌ன் தான் ரொம்ப‌ பிடிக்கும். இதில்
முட்டை மைதா சேர்த்து ஊற‌ வைப்ப‌தால் உள்ளே ந‌ல்ல‌ சாஃப்டாக‌வும் வெளியில்
க்ரிஸ்பியாக‌வும் இருக்கும்.
Chicken recipes Aa230



வழங்கியவர்


ஜ‌லீலா பானு, துபாய்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Chicken recipes Empty Re: Chicken recipes

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum