TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரு விதவையின் கேள்வி

3 posters

Go down

ஒரு விதவையின் கேள்வி Empty ஒரு விதவையின் கேள்வி

Post by sriramanandaguruji Tue Nov 23, 2010 11:13 am

ஒரு விதவையின் கேள்வி Ujiladevi.blogpost.com+%25281%2529 நான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிராமணப் பெண் எனக்குத்தற்போது 86 வயதாகிறகிறது இத்தனை வயதில் நான் பட்டக் கஷ்டங்களுக்கு அளவே இல்லை அவைகளை யெல்லாம் எழுதினால் நிறையப் பக்கங்களில் மற்றவர்களை அழவைக்க வேண்டிவரும் என்பதினால் சொல்லாமல் ஒன்றைமட்டும் உங்களூடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்
எனக்கு 15 வயதில் திருமணம் நடந்தது அப்போது இது தாமதமாக நடந்த கல்யாணம் பதினாறு வயதில் பையனையும் பதினேழு வயதில் பெண்ணையும் பெற்றேன் என் அம்மா மாதிரி சுமார் அரைடசன் குழந்தையாவது பிறக்கும் என்ற கனவில் இருந்தபோது மூனே நாள் குளிர்காய்ச்சலில் ஆம்படையான் போய் சேர்ந்துட்டார் எனக்கு உலகமே இருண்டு போனாப் போல் ஆயிட்டது



ஒரு விதவையின் கேள்வி Ujiladevi.blogpost.com+%25282%2529

என்புத்தாத்து மனுஷா ரொம்ப நல்லவா நீ கைபிடிச்சி வந்த நேரம்தான் கிழங்கு கணக்கா இருந்த புள்ளையாண்டான் போயிட்டான் இன்னும் ஏன்டி துக்கிரித்தனமா ஆத்துல நடமாடுறே எங்கையாச்சும் இந்தக் குழந்தை கருமங்களை தூக்கிட்டுப் போக வேண்டியது தானேன்னு பேசினா
நான் என்னப் பண்ணுவேன் அழுகையும் கண்ணுமா எங்காத்துக்கு வந்தேன் என் அப்பாவும் நான் பிறந்த வுடனே போயிட்டாராம் அண்ணாத்தான் எனக்கு எல்லாம் உடன் பிறந்தாள தெருவிலவிட மனம் வருமோ ஆனா மன்னி நாக்குல கருந்தேள்தான் குடியிருக்கும் எப்பவாச்சும் நடக்கும் தவறுக்கு நாள் கணக்கில் பேசுவாள்
என்ன செய்யிறது நான் ஒத்த மனுஷீன்னா ஒருமொளக்கயிறு போரும் இரண்டு பிஞ்சுகள் கையில் இருக்கே எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன் ஆனா பதினேழு வயசில தலையை மொட்டை அடிச்சி ருத்ராட்சம் மாட்டி பாக்கிறதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியலே



ஒரு விதவையின் கேள்வி Ujiladevi.blogpost.com

ஏன் குருஜி ஐயா சின்ன வயசில் புருஷன் செத்துப்போனா பொம்மனாட்டி என்ன செய்வாள்? இதில் பெண்களின் குற்றம் ஏங்கே இருக்கிறது ?நாங்களாகவே விரும்பியா இந்தக் கோலம் போட்டுக்கிறோம்? இல்லையே! சாஸ்திரம் தர்மன்னு சொல்லி மற்ற மனுஷா தருகின்ற கோலத்திற்கு எங்களை ஏன் பழிவாங்குகிறார்கள்?
கல்யாண வீட்டுக்கு வராதே மங்களப் பொருட்களை தொடாதே தெருவில் கூட இறங்காதே என்று கொடுமைப் படுத்துவது ஏன் கைம்பெண்களை ஒதுக்கி வையின்னு சாஸ்திரம் சொல்கிறதா? மதம் சொல்கிறதா? அப்படியென்றா கைம்பெண்கள் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்கள் இல்லையா?
வெகு நாட்களாக உங்களைப் போன்ற விபரம் அறிந்த மற்றவர்களின் எண்ங்களை புரிந்துக் கொள்ளக்கூடிய சந்நியாசிகளிடம் இந்தக் கேள்வியை கேட்க வேண்டுமென்றிருந்தேன் என் பேரன் தான் உங்கள்ளைப்பற்றி சொல்லி உன்கேள்வியை இவரிடம் கேளு என்றான் கேட்டுவிட்டேன் பதில் சொல்லுங்கள் விதவைகளை ஹிந்து மதத்தினர் ஒதுக்குவது ஏன் ?



ஒரு விதவையின் கேள்வி Ujiladevi.blogpost.com+%252810%2529+copy



ங்கள் கேள்வியில் உள்ள ஆதங்கமும் தெரிகிறது ஆக்ரோஷமும் புரிகிறது பிரம்மாவின் படைப்பில் எல்லா உயிர்களும் சமமென்றுதான் நமது மதம் சொல்கிறதே தவிற பேதங்களுடையதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை ஆனால் நமது மதத்துக்கே உரிய ஒரு சாபக்கேடு இதில் உள்ளவர்கள் செய்கின்ற தப்புக்கு மதம் பலியாக்கப் பட்டுவிடுகிறது
உலகிலுள்ள எந்த மதமும் பெண்ணுக்கு கொடுக்காத சிறப்பை அங்கிகாரத்தை இந்து மதம் கொடுத்துள்ளது படைப்பின் அஸ்திவாரமே பெண்மையென்று அவளை அகிலாண்டக்கோடி பிரமாண்ட நாயகியாக்கி வழிபாடு நடத்துவது நம் மதம்தான் சக்தி இருந்தால்தான் சிவம் அவள் இல்லையெற்றால் அவன் வெறும் சவம் என்று கடவுளை விட வலிமையாக்கி காட்டியது நம்மதம் ஆனால் பெண்மையின் மகத்துவத்தை குழிதோண்டி புதைத்து ஆனந்தக் கூத்தாட்டம் நடப்பதும் நம் மதத்தில்தான்
நல்லவேளை மற்ற மதத்தார் வேண்டுவது போல பெண்களுக்கு ஆடை அடிமைத்தனமும் தனி வழிபாட்டு இடமும் இன்னும் நமது மதத்தில் ஒதுக்கப்பட வில்லை அவ்வளவுதான் மற்றப்படி மனிதனின் சரிபாதியான பெண்மை உலகம் முழுவதும் எத்தகைய துயரங்ஙளைஅனுபவிக்கிறார்களோ அதையேத்தான் இந்தியப்பண்பாட்டிற்கு உட்பட்டு அனுபவித்து வருகிறார்கள்
ஆனால் ஒன்று மட்டும் உண்மையம்மா! நம் மதத்தின் ஆதார நூல்களான நான்கு வேதங்கள் நூற்றிப்பத்து உபநிஷதங்கள் பிரம்ம சூத்திரம் ஸ்ரீமத் பகவத்கீதை போன்ற எதிலும் விதவைகளை புறம்தள்ளு மொட்டையடி மூலையில் உட்கார வை என எதிலும் சொல்லப்பட வில்லை
பிற்காலத்தில் உருவான பழக்கமே இது சில குருட்டு மனிதர்களின் வக்கிர புத்தியில் தோன்றிய சாஸ்திரம் இது இதற்கு சமய அங்கிகாரம் எப்போதுமே கிடையாது ஆனால் சில சமயவாதிகள் இதை வாய்கிழிய பேசுகிறார்கள் செயல்படுத்தவும் செய்கிறார்கள் அவர்களை உங்களைப்போன்ற நல்லாத்மாக்கள்தான் மன்னிக்க வேண்டும் ஆனாலும் ஒரு நல்ல விஷயம் அம்மா இப்போது நமது இந்துமக்கள் இந்த விவகாரங்களில் சற்று மென்மையாகவே நடக்கிறார்கள் அதை நினைத்து ஆறுதலடையுங்கள் இன்னும் காலம் செல்ல செல்ல நல்லது பலவும் நடக்கும்



ஒரு விதவையின் கேள்வி Blue_arrow_icon மேலும் வாசகர் சந்தேகம் படிக்க இங்கு செல்லவும்

source http://ujiladevi.blogspot.com/2010/11/blog-post_22.html








ஒரு விதவையின் கேள்வி Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji
உதய நிலா
உதய நிலா

Posts : 133
Join date : 02/08/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

ஒரு விதவையின் கேள்வி Empty Re: ஒரு விதவையின் கேள்வி

Post by sakthy Tue Nov 23, 2010 1:48 pm

இந்தியா போல் இந்து மதமும் பல மதங்களின் ஒரு கூட்டு. இந்து மதத்தில் ஆரிய வேதங்களை படிப்பதற்கு கூட முன்னர் பெண்களை அனுமதிப்பதில்லை. இந்துஸ்தானி இசையில் பெண்கள் பாடக் கூடாத ராகங்கள் கூட இருந்தன. பார்ப்பனர் வேறு,பிராமணர் வேறு.இவற்றுக்கு எல்லாம் ஆரிய மத கலாச்சார திணிப்பே காரணம்.எப்போது நாம் சிந்திக்கப் போகிறோம்?விடுதலை ஆகப் போகிறோம்?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஒரு விதவையின் கேள்வி Empty Re: ஒரு விதவையின் கேள்வி

Post by ஜனனி Tue Nov 23, 2010 2:11 pm

ஒரு விதவையின் கேள்வி 917304
sakthy wrote:இந்தியா போல் இந்து மதமும் பல மதங்களின் ஒரு கூட்டு. இந்து மதத்தில் ஆரிய வேதங்களை படிப்பதற்கு கூட முன்னர் பெண்களை அனுமதிப்பதில்லை. இந்துஸ்தானி இசையில் பெண்கள் பாடக் கூடாத ராகங்கள் கூட இருந்தன. பார்ப்பனர் வேறு,பிராமணர் வேறு.இவற்றுக்கு எல்லாம் ஆரிய மத கலாச்சார திணிப்பே காரணம்.எப்போது நாம் சிந்திக்கப் போகிறோம்?விடுதலை ஆகப் போகிறோம்?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஒரு விதவையின் கேள்வி Empty Re: ஒரு விதவையின் கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum