TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

2 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Tue Jun 15, 2021 11:26 pm

உலகச் செய்திகளில் விநோதம்

பிரேசில்: Paulo Rodrigo das Neves என்ற நபர் 18 வயதான அன்றைய தினம் பொலீசாரால் கைதானார்.திருடரான அவர் திருடும் போது காமெராவில் சிக்கி கைதானார்.பொலீஸ் நிலையத்தில் அவருடைய 18 வயது பிறந்த நாளை கேக் வெட்டி பொலீசார் கொண்டாடினர்.

பொலீஸ் மீது நடவடிக்கை பாயும் என மேலிடம் அறிவித்த நிலையில்,பொலீஸ் தரப்பில் அவர் 18 வயதானதால் மைனர் எனக் கொள்ள முடியாது எனவும் பல ஆண்டுகள் சிறையில் செலவிட நேரிடும் என்பதால் மகிழ்ச்சியில் கொண்டாடியதாக சொல்லப்படுகிறது.மேஜர் என்பதால் இனி அவரால் தப்பிக்க முடியாது  என்கின்றனர்.வயதில் மைனர் என்பதைக் காட்டி தப்பித்து வந்தவர் வசமாக சிக்கினார் என பொலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார்.



இந்தியா: சாஜித்தா(18) 2010 இல் வீட்டை விட்டுக் காணாமல் போனார்.பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது குடும்பத்தினர் தேடுதலைக் கைவிட்டனர்.    
                             
[You must be registered and logged in to see this image.]

சமீபத்தில் தற்போது 34 வயதுடைய அல்லுன்சுவட்டில் ரகுமானின் சகோதரரால் அடையாளம் காணப்பட்டார்.அயலுர்,கேரளாவில் 500 மீட்டர் தொலைவில் அதே கிராமத்தில் வாடகைக்கு அறை எடுத்து வாழ்ந்துள்ளனர். 11 வருடங்களாக 500 மீட்டர் தொலைவில் மறைந்து வாழ்ந்தார் சாஜித்தா.

[You must be registered and logged in to see this image.]

எல்லா வேலைகளையும் அந்த சிறிய அறைக்குள் வைத்துக் கொண்ட சாஜித்தா தொலைக்காட்சியையும் காதில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தாராம்.வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல் வசப்பட்ட  அவர்கள் வேறு வழி தெரியாமல் அப்படி இருந்ததாகவும் பொலீசாருக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் சேர்ந்து வாழ பொலீசார் அனுமதி கொடுத்தனர்.
(தீபா குமார் உயர் அதிகாரி நென்மாரா பொலிஸ் நிலையம்)
காதலுக்கு மதம்,சாதி தடையாகலாமா?

அமெரிக்கா: புளோரிடாவில் உள்ள McGuire’s Irish Pub+ restaurant இன் மேல் தளத்தில் 2 மில்லியன் டாலர் நோட்டுகள் தொங்க விடப்பட்டுள்ளன.னோட்டில் அழியாத மை கொண்டு கையொப்பம் கொண்டுள்ளன.1977 இல் மக்கையரும் அவர் மனைவும் ஆரம்பித்த இந்த டாலர் நோட்டு தொங்க விடுவது தொடருகிறது.15,000 சதுர அடி கொண்ட தளத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் டாலர் நோட்டுகள் வருடா வருடம் கணக்கிடப்பட்டு வரி செலுத்தப்படுகிறது என்கிறார்கள்.
சிலசமயம் திருடப்படும் பணம் வேறு எங்கும் மாற்ற முடியாததால் பொலீசாரிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள் என்கின்றனர் பொலீசார்.



சீனா:Dujiangyan Zhongshuge இல் உள்ள புத்தகக் கடை ஒன்று சென்ற திறந்து வைக்கப்பட்டுள்ளது.



(South China Morning Post )

இஸ்ரெல்:Hebrew University of Jerusalem உருவாக்கிய உருளைக்கிழங்கு மரம் நிறம் மாறி ஒளிர்கிறது.

[You must be registered and logged in to see this image.]
(Alpha Galileo)

ரஸ்யா: 3டி+2டி கஃபெ (3D+2D BK cafe) கொரியா,ஜப்பான்,அமீரகம் என பல நாடுகளிலும் அமைந்துள்ள BW Kafe இப்போது மாஸ்கோ,ரஸ்ய நாட்டிலும்.



(காணொலிகள் தமிழிலும் பார்க்கலாம்)


Last edited by வாகரைமைந்தன் on Thu Jun 17, 2021 2:07 pm; edited 1 time in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Thu Jun 17, 2021 2:06 pm

[You must be registered and logged in to see this image.]      
                                   
சீனாவில் Hua Zhibing, என்ற பெண் ஏ.ஐ.கணினி (China’s first AI-powered, virtual student)  Beijing’s Tsinghua University இல் படிப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இவர் படிப்பது Computer Science and Technology.AI modeling system -Wudao 2.0 – மூலம் உருவான செயற்கை நுண்ணறிவு மெய்நிகர் மாணவி ஹுவா ,சீனாவின் முதல் மெய்நிகர் மாணவி ஆவார்.சாதாரண மாணவர்களை விட விரைவாக கற்றுக் கொள்வார் என்கிறார் முனைவர் டாங் ஜி -கணினித்துறை இயக்குனர்.



(sixthtone)

தென் ஆபிரிக்காவில் 10 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்ற 37 வயதான கொசியாமே தாமரா (Gosiame Thamara Sithole) 7 ஆண் குழந்தைகளும்,3 பெண் குழந்தைகளும் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.  ஆனாலும் இதுவரை யாரும் குழந்தைகளைப் பார்க்கவில்லை.  பெரிய வயிற்றுடன் அவரின் புகைப்படம் வெளியானது.அவர் குழந்தைகளை  பிரிரோரியாவில் உள்ள     Louis Pasteur Private Hospital  பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த மருத்துவ நிலையத்தை தொடர்பு கொண்டதில் அவர்கள் தங்கள் ஆஸ்பத்திரியில் அப்படி ஒரு நிகழ்வு நடக்க்வில்லை எனக் கூறியுள்ளனர். அதேசமயம் அரசு துறை சார்ந்தவர்கள் இதுவரை  அப்படியான    எந்தத்     தகவலும் கிடைக்கவில்லை என்கின்றனர்.

ஆக இதுவரை யாரும் அந்தக் குழந்தைகளை பார்க்காத நிலையில் .. ?இந்தச் செய்தி எங்கிருந்து வந்தது தெரியாமல் தென் ஆபிரிக்க ஊடகங்கள் திணறுகின்றன.சுகாதார அமைச்சகமும் இந்தச் செய்தியை மறுத்திருக்கிறது.

மொரொக்கோ நாட்டில் 25 வயதான ஹல்மா சிசே 9 குழந்தைகளை விட ஒரு குழந்தை பெற்று விட்டதாக கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது.  
     
(Eyewitness News /Pretoria News )


Last edited by வாகரைமைந்தன் on Sat Mar 11, 2023 8:57 pm; edited 1 time in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Wed Jun 30, 2021 11:22 am

உடல் எடையைக் குறைக்க உதவும் சுலபமான சாதனத்தை scientists at University of Otago, in New Zealand,கண்டு பிடித்துள்ளனர். இதன் பெயர் DentalSlim Diet Control



கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளில் நம்மைப் போன்றே பல விதமான மனித இனங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து வந்துள்ளனர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் நவீன மனிதர்களும் பிற மனித இனங்களும் ஒன்றாக வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உண்டு.146,000 வருடங்கள் பழமையான

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது 1933 ஆம் ஆண்டில் சீனத் தொழிலாளர்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது வடகிழக்கு சீனாவில் 1933 இல் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் ஹார்பின் நகரத்திற்கு அருகே கண்டறியப்பட்ட ஒரு மண்டையோடு , ஜப்பானியர்களிடம் சிக்காமல் இருக்க ஒரு கைவிடப்பட்ட கிணற்றில் மூடப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது, அதை மறைத்த நபர் இறப்பதற்கு சில தினங்கள் முன்பு இதைப்பற்றி தனது பேரனிடம் சொன்ன பின்னர் 2018 ஆம் ஆண்டு இது மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான புருவம், பெரிய பற்கள்,சதுர வடிவ கண் குளிகளுடன் கூடிய இந்த புதைப்படிவ மண்டை ஓட்டை தற்போது ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இது குறித்தான ஆராய்ச்சிகள் சீன, ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களின் குழுவால் மேற்கொள்ளப்பட்டு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.

[You must be registered and logged in to see this image.]

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty நான்கு நாட்கள் கோடீஸ்வரர்

Post by வாகரைமைந்தன் Thu Jul 01, 2021 1:54 pm

அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள ஒரு வங்கி தன் வாடிக்கையாளர் ஒருவரது கணக்கில் தற்செயலாக 50 பில்லியன் டாலர்களை (சுமார் 3.2 லட்சம் கோடி) டெபாசிட் செய்துள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.” அது தன்னுடைய பணம் இல்லை என்பதால் அதை நான் செலவு செய்யவில்லை” என அந்த பயனாளி தெரிவித்துள்ளார்.

லூசியானாவில் வசித்து வரும் டேரன் ஜேம்ஸ் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஆவார். 47 வயதான இவரின் மனைவியின் வங்கிக்கணக்கில் தற்செயலாக 50 மில்லியன் டாலர்கள் டெபாசிட் செய்யப்படவே உலகின் 25 வது கோடீஸ்வரர் ஆனது ஜேம்ஸ் குடும்பம். ஆனால் அந்த பதவியும், பூரிப்பும் அவர்களுக்கு நான்கு நாட்கள் மட்டுமே நிலைத்துள்ளது.

“ ஜூன் 12 அன்று நான் வேலையை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் என் மனைவி அவரது ஸ்மார்ட்போனில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டதை காட்டினார். இதை பார்த்தவுடன் நாங்கள் நினைத்ததெல்லாம் எங்கள் வீட்டின் கதவைத் யார் வந்து தட்ட போகிறார்களோ?! என்று தான்… ஏனென்றால் இவ்வளவு பணத்தை வைத்திருக்கும் யாரையும் எங்களுக்குத் தெரியாது” என இது குறித்து அளித்த பேட்டியில் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், “என் பணக்கார மாமா ஒருவர் எனக்கு இந்த பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றெல்லாம் எண்ணினேன்.. இது உண்மையாக இருந்தால் பிரபல நைக் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் நைட்டுக்கு மேல் என் குடும்பம் ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.. உங்கள் வங்கி கணக்கில் பல பூஜ்ஜியங்களைக் காண்பது என்பது அருமையான உணர்வு” என அவரது உணர்வு குறித்து கேட்கையில் வேடிக்கையான பதிலை அளித்துள்ளார் ஜேம்ஸ்.

ஏன் பணத்தை செலவு செய்யவில்லை என கேட்கையில் , “அது எங்களுடையது அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதை சம்பாரிக்கவில்லை, எனவே எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. எங்களால் அதைச் செலவிட முடியவில்லை – செலவிட்டால் அது திருட்டாகும்.

இந்த செய்தி அறிந்தவுடன் ஜேம்ஸ் உடனே தாங்கள் சேஸ் வங்கியை அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பின்பும் பணம் அவர்களது வங்கி கணக்கில் இருந்துள்ளது. “நான் நான்கு நாட்கள் கோடீஸ்வரராக இருந்தேன்.. அதை வைத்து எதுவும் செய்ய முடியாது என்றாலும் இது ஒரு நல்ல அனுபவம் ” என தெரிவித்துள்ளார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Sat Jul 10, 2021 11:31 pm

ஒல்லாந்து நாட்டில்  Robbert Jan de Veen, என்பவருடைய உணவு விடுதியில்  (Dutch diner De Daltons) The Golden Boy பர்கர் ,என்ற உணவு (Burger) உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் அரிய உணவுகளைக் கொண்டு தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.அதன் விலை ஒன்று 6000 டாலர்களாகும்.






ஈரோட்டில் தொலைபேசியில் வந்த மர்ம அழைப்பை நம்பி ரூ.73 ஆயிரம் பணத்தை கொடுத்து குடும்பத்தினர் ஏமாந்துள்ளனர். ரூ.5 லட்சம் லோன் வேண்டுமா?'-தொலைபேசி அழைப்பை நம்பி ரூ.73,500 பறிகொடுத்த பெண்

[You must be registered and logged in to see this image.]




ஜப்பான் நாட்டில் நள்ளிரவைக் கடந்து அதிகாலை 01:20 மணிக்கு திங்கள் முதல்  வியாழன் வரை 6 நிமிட நிகழ்ச்சி கடந்த 15 வருடங்களாக நடைபெற்று வருகிறது. TV Asahi தொலைக்காட்சியின்  Zenryokuzaka என்ற தொடரில் 15 வருடங்களாக நடிகைகள் மற்றும் பிரபலமான இளம் பெண்கள் 6 நிமிடங்கள் ஓடும் நிகழ்ச்சி இதுவாகும்.சமீபத்தில் ஆண்களையும் இந்த நிகழ்ச்சியில் சேர்த்துள்ளனர். மாதத்தின் முதல் மூன்றாம் வியாழனில் ஆண்கள் கலந்து கொள்கிறார்கள்.இப்படியான ஆரோக்கிய நிகழ்ச்சிகள் ஓடும்,நடக்கும்..ஜப்பானிய தொலைக்காட்சிகளில் நடப்பதுண்டு.மக்களும் அதை ரசிக்கிறார்கள்..விரும்புகிறார்கள்..நம் நாட்டு மிட்னைட் மசாலாக்கள் போல்?








வானத்தில் பறக்க விடப்படும் ட்ரோன்கள் நாம் அறிந்ததே. சீனாவில் உள்ள  Boya Gongdao நிறுவனம் ஏ.ஐ தொழில்னுட்பத்தில்  bionic arowana என்ற உண்மையில் மீங்களைப் போன்று செயல்படும் தண்ணீருக்குள் செயல்படும் ட்ரோன்களை அறிமுகப்படுத்தி உள்ளது.இது உண்மையான arowana fish  மீன்களைப் போலவே இருக்கும்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty கடவுள் நம்பிக்கை

Post by வாகரைமைந்தன் Fri Jul 16, 2021 11:29 am

நம்பிக்கை என்பது முட்டாள்த் தனமாகி விடக் கூடாது.கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியதுதான்.மூட நம்பிக்கைகள்,கடவுளை பற்றிய கதைகளையும் புனை கதைகளாகக் கொண்டு, அதில் உள்ள நீதியை மட்டும் ஏற்கும்படி விவேகானந்தர் சொல்கிறார்.

ஓகியோவில் உள்ள 31 வயதுப் பெண்ணொருவர் தனது 12 வயது மகளுடன் ஜூன் 15 நள்ளிரவு தனது காரில் 120 mph வேகத்தில் செல்கிறார். செல்லுமுன் கடவுளிடம் உனது கையில் காரை ஒப்படைக்கிறேன் என வேண்டிக் கொண்டு கடவுள் நம்பிக்கையை பரிசோதிக்க வேண்டி காரை ஓட்டினார்..முடிவு…

இரண்டு வேறு வாகனங்களுடன் மோதியதுடன் ஒரு வீட்டின் மேலும் மோதி உடைத்தார்.காயங்களுடன் மருத்துவ நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலீசார் மது மற்றும் போதைப் பொருள் சோதனை,மனநல சோதனை செய்தனர்.ஆனால் அவர் எதையும் எடுக்கவில்லை என்பதும் மனநிலை சரியாக இருந்ததையும் உறுதிப் படுத்தினர்..

சிறுமியுடன்  இவ்வளவு வேகத்தில் சாதாரண சாலையில் ஓட்டியதாகவும் பொருட் சேதம் விளைவித்தவை போன்றவையுடன்  வழக்குப் பதிந்தனர்.அந்தப் பெண் தான் செய்தது சரியெனவும்,கடவுள் நம்பிக்கையை சோதனை செய்யவே அப்படி வேகமாக ஓட்டியதாகவும் கூறினார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty உயர்ந்த பெண்

Post by வாகரைமைந்தன் Mon Jul 19, 2021 8:37 pm

[You must be registered and logged in to see this image.]

சீனாவின் ஷங்க்டொங்க் பகுதியை சேர்ந்த Zhang Ziyu என்ற 14 வயதுப் பெண் கூடைப்பந்து ஆட்டத்தில் கலந்து கொண்ட போது அவரின் உயரம் 7 அடி 5 அங்குலம் ஆகும். (2.26m)  குளோபல் டையிம்ஸ் செய்தித்தாளின் தகவலின்படி அவர் சிறுவயதிலேயே வழக்கத்துக்கு மாறான உயரம் உள்ளவராக இருந்தார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty வயிறு - stomach, colon, rectum and gallbladder- இல்லாமல் வாழும்..

Post by வாகரைமைந்தன் Thu Jul 22, 2021 3:23 pm

[You must be registered and logged in to see this image.]

ஒருவர் வயிறு, பெருங்குடல்,சிறுகுடல்  மற்றும் பித்தப்பை (stomach, colon, rectum and gallbladde ) இல்லாமல் வாழ முடியுமா? வாழ முடியும் என்று நிரூபித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய Juan Dual  .13 வயதில் அவருக்கு  familial multiple polyposis எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக வயிற்றுப் புற்றுநோய் ( hereditary diffuse gastric cancer ) வரும் எனக் கண்டார்கள்.19 வயதில் நிலைமை மோசமடையவே colon and rectum  நீக்கப்பட்டது.28 வயதில் அதுவும் சரிவராமல் மோசமடையவே வயிறும் (total gastrectomy (TG) ) நீக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து எடை 50% குறைந்தது. தொடர்ந்து சாப்பிட வேண்டும்,தொடர்ந்து ஏதாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.இல்லையேல் குருதிச் சர்க்கரை அதிகரித்து விடும்.வயிறு இல்லாததால் பசி உண்ர்வு இருக்காது.ஆனாலும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பதாவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகவும் சொல்கிறார்.

 வயிறு இல்லை என்ற எண்ணம் மிகவும் திகிலூட்டும் வாழ்க்கையாக இருக்கும் என் கிறார் அவர்.      மூளைக்கு பசி உணர்வு அனுப்பப்படாதால்,உடற்பயிற்சி மரதன் போன்ற ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ளும் போது மயக்கம் வரும்.அதனால் உணவை அடிக்கடி எடுத்தாக வேண்டும்.    
   
அவரின் பாட்டி colon adenocarcinoma நோயினாலும் தந்தையின் வயிற்றுப் பகுதி நீக்கப்பட்டதாகவும் சொல்கிறார் அவர்.CDH1 gene இன் மாற்றம் காரணமாக அவரின் குடும்பத்ஹ்டினர் பாதிக்கப்பட்டனர்.                                                                                                                                  

[You must be registered and logged in to see this image.]

மருத்துவ அறிவியல் என்ன சொல்கிறது? உங்கள் வயிறு இல்லாமல் உங்களால் வாழ முடியும். ஆனால் . நீங்கள் வயிறு இல்லாமல் வாழவும்  பல உறுப்புகள் அதைச் சரிசெய்ய உள்ளன.. சவாலானதாக இருந்தாலும் ​​நீங்கள்  சாதாரணமாக வாழலாம், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தால்..? சில உறுப்புகளை அகற்றுவது மற்றவர்களை விட மிகவும் சிக்கலானது மற்றும் ஆபத்தானது. கணையம், சிறுநீரகம் அல்லது மண்ணீரலை வெளியே எடுப்பது ஒப்பீட்டளவில் எளிதானது, மேலும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் உங்களை வழக்கமாக திட்டமிடப்பட்ட வாழ்க்கைக்குத் திருப்பித் தரும்.
( El Comercio/Spanish newspaper Marca)

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty தெருக் குப்பைகள் சேகரிக்கும்...

Post by வாகரைமைந்தன் Fri Jul 23, 2021 3:49 pm

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு இருக்கும்.முன்னர் முத்திரை சேகரித்தல்,பழைய காசுகள் சேகரித்தல் என தொடங்கி சிடி/டிவிடி,படங்கள் ...இப்படிப்பல.

[You must be registered and logged in to see this image.]

தென் கொரியாவில்  70 வயதான சொயி என்பவர் தனது மனைவி மகனுடன் வாழ்ந்து வருகிறார்.அவர் 10 வருடங்களுக்கு மேலாக குப்பைகள்,குப்பைத் தொட்டி..சாலையில் இருக்கும் பொருட்கள் என சேகரித்து வருகிறார்.அருகே உள்ளவர்கள்,தெரிந்தவர்கள் என பலர் தங்கள் வீட்டுக் குப்பைகளை அவரிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.அவரும் தெருவில் இருக்கும் ,குப்பைத் தொட்டிகளில் இருப்பதை எல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து சேகரிப்பாராம்.

[You must be registered and logged in to see this image.]

மனைவியின் உடல்நலம் பதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ,சேகரிப்பதை நிறுத்தி விடுவதாக தென் கொரிய தொலைகாட்சியிக்கு உறுதி கொடுத்துள்ளார்.
(zhuanlan.zhihu)

இதேபோல் லண்டனில்  ராமன் சுக்ளா என்ற கணினி நிரலாளர் (சென்ற ஆண்டு மறைந்தார்) 20 ஆண்டுகளாக தெருவில் இருப்பவை,குப்பைத் தொட்டியில் இருப்பவை என அனைத்தையும் சேகரித்து வந்துள்ளார்.அவர் இறந்த பின்னர் இவை  அவருடைய மகனால் கண்டு பிடிக்கப்பட்டது.

[You must be registered and logged in to see this image.]

இவர் சேமிப்பில் பழைய காமிக்ஸ் புத்தகங்கள்,அரிதான புத்தகங்கள்,பழைய இசைத்தட்டுகள்,காந்தி,கென்னடி சேர்ச்சில்..போன்ற தலைவர்களின் அரிதான படங்கள்,பொருட்கள் என மதிப்பீட்டளவில் 5.2 மில்லயன் டாலர்கள் என் கிறார்கள்.2002 இல் இருந்து சேகரிக்கப்பட்டவை பல நாட்களாக  அவற்றை பிரித்து தரம் பிரிக்க பலர் ஈடுபட்டனர்.இவற்றை 64  வயதுடைய அவரால் அனுபவிக்க முடியாமல் இதயக் கோளாரினால் திடீர் மரணம் அடைந்தார்.
(The Sun)
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty நவீன கும்பகர்ணன்

Post by வாகரைமைந்தன் Fri Jul 23, 2021 11:06 pm

ராஜஸ்தான், பட்வா கிராமத்தில் புர்காராம் 42 வயது,ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். அவர் ஒரு மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே கடையை திறந்து வைத்திருப்பார். மிகுதி 25 நாட்களும் தூக்கத்தில் இருப்பார் என ரிபப்லிக் வேர்ல்ட் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.வருடம் 300 நாட்கள் தூக்கத்தில் இருப்பதால் அவரை கும்பகர்ணன்  என கிராமத்தவர்கள் அழைக்கிறார்கள்.23 வருடங்களுக்கு முன்னர் அவருக்கு HPA Axis hypersomnia  என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அவர் தூங்கி எழுந்ததும் உடனே கடையை திறந்து வைத்திருப்பார் என புர்காராம் மனைவி லிச்மிதேவி தெரிவிக்கிறார்.



(republicworld/ /timesofindia.indiatimes)
                                                                                 
இதேபோல் Sleeping Beauty என அழைக்கப்படும் இந்தோனேசியாவைச் சேர்ந்த  Siti Raisa Miranda, called ‘Echa ,17 வயதில்  தொடர்ந்து 13 நாட்கள் தூக்கத்தில் இருந்தார்.மூன்று நாட்கள் தொடர் தூக்கத்தில் இருக்கும் இவர்,hypersomnia or Kleine Levin syndrome (KLS)  ஆல் பாதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

[You must be registered and logged in to see this image.]


(tribunnews)

இது கொலொம்பியாவைச் சேர்ந்த Sharik Tovar (17) 48 நாட்கள் தூக்கத்தின் பின்னர் எழுந்த போது அவர் தன்  சுயநினைவுகளை  இழந்து,அவர் பெயரே தெரியாமல்  இருந்ததாக கூறுகின்றனர்.

[You must be registered and logged in to see this image.]
(Caracol News, )
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty கலாச்சாரம் வேறுபடும்

Post by வாகரைமைந்தன் Sun Jul 25, 2021 9:51 pm

ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறான கலாச்சரங்கள். ஸ்பெயின் நாட்டில் தக்காளித் திருவிழா,இத்தாலியில் ஆரஞ்சுத் திருவிழா….

[You must be registered and logged in to see this image.]

இப்படி இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாணித்திருவிழா தீபாவளி முடிந்து நான்காம் நாளில்   சாணித் திருவிழா (Gorehabba - Gore Habba ) ,கர்னாடகாவில் உள்ள கும்மத்தபுரத்தில் நடக்கிறது.



.இந்துக்கள் மனிதனின் ஆண்குறியை வணங்குவது போல்,ஜப்பானில் (Kanayama Shrine in Kawasaki, Japan.) ஆண் உறுப்பை ஊர்வலமாக எடுத்துச் சென்று திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.ஆண்குறியை பெண்கள் சாமி தூக்கிச் செல்வது போல் தூக்கிச் செல்கிறார்கள்...

[You must be registered and logged in to see this image.]

இது வியட்னாமில் அக்டோபர் மாதத்தில் Chả rươi - sand worm omelet எனப்படும் மண்புழுக்களினால் செய்யப்பட்ட ரொட்டி மிகவும் விற்பனையாகிறது.விவசாய நிலங்களில் குளக்கரைகளில் காணப்படும்  Palolo  எனப்படும் மண்புழுக்கள் சேகரிக்கப்பட்டு தயாரிக்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Guoliang Tunnel

Post by வாகரைமைந்தன் Wed Jul 28, 2021 12:46 pm

பழம்பெரும் கலாச்சரம் கொண்ட சீனா எப்படி இவ்வளவு விரைவாக எந்த வெளிநாட்டு உதவியும் இன்றி வளர்ச்சிப் பாதையில் செல்கிறது?..கம்யூனிச ஆட்சி காரணமா எனக் கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.சீன மக்களின் உழைப்புத் தான் காரணம் எனச் சொல்ல வேண்டும்.தனியாகவும்,கிராமத்தவர்கள் ஒற்றுமையும்,கிராமசபையின் ஒத்துழைப்பும் காரணம் என சொல்லலாம்.

[You must be registered and logged in to see this image.]

அந்த வகையில் சீனர்கள் அரசின் உதவி எதுவும் இன்றி பல சாதனைகளை செய்திருக்கிறார்கள்.இவற்றில் ஆபத்தான எட்டாவது அதிசயம் எனச் சொல்லக்கூடிய  Guoliang Tunnel (Long Corridor in Cliffs) ம் ஒன்றாகும்.

[You must be registered and logged in to see this image.]

இயந்திரங்கள் இல்லாமல் கையால் குடைந்தது என்பதை படத்தில் காணலாம்.

தைஹங்க் ( Taihang Mountains , Huixian, Xinxiang, Henan Province of China)மலைபகுதியில் உள்ள கிராமம் Guoliang  ,சொங்க் ஆட்சிக் காலத்தில் (960-1279) இல் இருந்து 300 குடும்பங்கள் வரை வாழும் இவர்கள்  Sky Ladder  பாவித்தே மற்றப் பகுதிக்கு சென்று வந்தனர்.விளையும் பொருட்கள் கொண்டு செல்வது,சுகவீனமுற்றவர்கள்,விபத்தில் காயமடைந்தவர்கள் என மற்றப் பகுதிக்கு செல்ல இந்த முறையே  பாவனையில் இருந்தது.

[You must be registered and logged in to see this image.]

இதிலிருந்து விடுதலை பெற கிராம நிர்வாகம் மலையைக் குடைந்து சாலை அமைப்பது என முடிவு செய்தது.1972 இல் எல்லாம் மாற்றம் பெற்றது.13 கிராமத்தவர்கள் வீட்டில் இருக்கும் உளி,சுத்தி ..என ஆயுதங்களைக் கையில் எடுத்தனர்.வேலை தொடங்கியது.ஒரு மீட்டரை முடிக்க மூன்று நாட்கள் எடுத்தது.ஆனாலும் அவர்கள் சோர்வடையவில்லை.1.250 மீட்டர் (1,2 கி.மீ.)நீளமுள்ள மலையை கையால்  குடைந்து உருவான பாதையை முடிக்க 5 வருடங்கள் ஆயிற்று.1977 இல் முடிந்த அந்தச் சாலை இன்று  சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது.அதைத் தொடர்ந்து அங்கு ஹோட்டல்கள் என முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து 1700 மீட்டர் உயரத்தில் இருக்கும் Guoliang Tunnel ,  5 மீட்டர் உயரமும் 4 மீட்டர் அகலமும் கொண்டது இப்பாதை.

அயராத உழைப்பு எதையும் சாதிக்கலாம் என் கிறார்கள் கிராமத்தவர்கள்.



[You must be registered and logged in to see this image.]

36 வருடங்களாக தனி மனிதனாக மூன்று மலைகளுக்கிடையே 10 கி.மீ. நீளமுள்ள தண்ணீர் கால்வாயை வெட்டி தன் கிராமத்துக்கு நீர் வசதி செய்துள்ளார்.Huang Dafa என்பவர் Caowangba, Guizhou Province இல் 1958 -1994.

[You must be registered and logged in to see this image.]

உதவி செய்த மகனும் கிராமத்தவர்கள் சிலரும்...

[You must be registered and logged in to see this image.]



வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty மெமரி லாஸ்

Post by வாகரைமைந்தன் Thu Jul 29, 2021 9:39 pm

Cook Pine (Araucaria columnaris)  New Caledonia , Melanesia  இந்தியா இலங்கை போன்ற பல நாடுகளில் காணப்படும் உயர்ந்த மரமாகும்.இந்த மரங்கள்  பூமத்திய ரேகை பக்கம் சாய்வாக வளர்கிறது.தென் பகுதியில் வடக்குப் பக்கமாகவும்,வட பகுதியில் தெற்குப் பக்கம் 8 பாகை அளவிற்கு சாய்வாக வளர்கிறது.அதேசமயம் பூமத்திய ரேகை நாடுகளில் நேராக வானத்தை நோக்கி வளர்கிறது.உலகம் முழுவதும் பயணித்து ஆய்வு நடத்திய தாவரவியல் துறையை சேர்ந்தவர்களின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டது.      

[You must be registered and logged in to see this image.]

டெக்சாஸ் கிரன்பெரியை சேந்த 37 வயதான Daniel Porter ,என்பவர் சென்ற வருடம் ஜூலை மாதம் ஒரு நாள் காலையில் எழுந்த போது அவர் தனது 16 வயதாக உணர்ந்தார்.காலையில் எழுந்த அவர் உடனே பள்ளி செல்ல தயாரானார்.பக்கத்தில் தூங்கிய மனைவியை அடையாளம் காண அவரால் முடியவில்லை.அவருடைய  10 வயதான மகளையும் அடையாளம் காண முடியவில்லை.

[You must be registered and logged in to see this image.]

அவரின் உருவத்தையும் அவரால் நம்பமுடியவில்லை.பெற்றோர்களை அடையாளம் கண்டார்.20 வருட நினைவுகளை மறந்த அவரை மருத்துவர்கள்    பரிசோதித்து அவருக்கு Transient Global Amnesia ( short-term memory )இருப்பதாகவும் இது தற்காலிகமானது எனவும் விரைவில் வழமைக்கு திரும்பி விடுவார் எனவும் தெரிவித்தும்,ஓராண்டு கடந்தும் அவர் இழந்த 20 வருட நினைவுகளை திரும்பப் பெற் முடியவில்லை.

[You must be registered and logged in to see this image.]
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Fri Jul 30, 2021 3:48 pm

ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால்...............................

சமீபத்தில் பல நாடுகளில் புயல்-சூறாவளி-வெள்ளம் என  மக்களை துன்பப்படுத்தியது.பலர் உயிரையும் பறித்தது.

[You must be registered and logged in to see this image.]

பிலிப்பைன்ஸ் நாட்டிலும் வெள்ளம் சூறாவளி என மக்கள் துன்பத்துக்கு ஆளானார்கள்.இந்நிலையில்   Cainta, Rizal province இல் உள்ள ஒரு  Internet  cafe இல் இடுப்பளவு வெள்ளத்தில் கணினியில் விளையாட்டை நிறுத்தாமல் தொடர்ந்த விளையாட்டு அடிமைகள். உரிமையாளர் சியோ சம்ஸ்சன் எவ்வளவு வற்புறுத்தியும் கேளாமல் விளையாட்டை தொடர்ந்தனர்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Devil's Bath

Post by வாகரைமைந்தன் Fri Jul 30, 2021 11:31 pm

[You must be registered and logged in to see this image.]

நியு சீலாந்தில் உள்ள  Devil's Bath, Wai-O-Tapu, New Zealand பச்சை நிறத்தில் இருக்கிறது.Wai-O-Tapu Park இல் இருக்கும் இந்தக் குளம் கந்தகம் (sulfur) காரணமாக துர்நாற்றம் வீசும் வாவியாக உள்ளது.

[You must be registered and logged in to see this image.]

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Tue Aug 03, 2021 5:33 pm

கட்டிய வீட்டை இடித்த கட்டிட ஒப்பந்தக்காரர்

Germany’s Baden-Wurttemberg,  Blumberg,நகரில் கட்டிட ஒப்பந்தக்காரர் 47 வயதான Matija P. என்பவர் தான் கட்டிய அடுக்கு மாடிக் கட்டிட முன் பகுதி முழுவதையும் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் ஜேர்மன் பொலீசில் பதிவாகி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.தனக்கு வர வேண்டிய பணத்தை கொடுக்காமல் தாமதித்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் அரங்கேறி உள்ளது.இந்த தாக்குதலில் 30 வீடுகள் சேதமாகின.



[You must be registered and logged in to see this image.]

ஜப்பான்  Okinawa வில் உள்ள , Hoshizuna-no-Hama  கடற்கரை மணல் நட்சத்திர வடிவில் காணப்படுகிறது.



[You must be registered and logged in to see this image.]

 Spain, Canary Island    இல் உள்ள Fuerteventura  கடற்கரை மண் பாப் கோர்ன் வடிவில் இருக்கிறதாம்.அதனால் Popcorn Beach என அழைக்கப்படுகிறது.

                                                         

[You must be registered and logged in to see this image.]

ஐஸ்லாந்தில் உள்ள Breiðamerkursandur கடற்கரை மணல்  வைரக்கற்கள் போல் இருப்பதால்  Diamond Beach   என அழைக்கப்படுகிறது.        

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty அகலம் குறைந்த நகரம்

Post by வாகரைமைந்தன் Wed Aug 04, 2021 11:31 pm



உலகிலேயே அகலம் குறைந்த நகரமாக சொல்லப்படுவது சீனாவில்  உள்ள YANJIN COUNTY, ZHAOTONG CITY, YUNNAN PROVINCE ஆகும்.
30 மீட்டர் அகலமுடைய இந்த நகரின் இரு பக்கமும் ஒரு சாலை உண்டு.இருபக்கமும் மலையும் நடுவே Nanxi River நதியும் ஓடிக்கொண்டிருக்கிறது.மக்கள் தொகை 450,000 ஆகும்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Wed Aug 04, 2021 11:53 pm

[You must be registered and logged in to see this image.]

வெல்விட்சியா மிராபிலிஸ் (Welwitschia mirabilis)  ஆபிரிக்க பாலைவனத்தில் மட்டுமே காணப்படும் தாவரம்.அவுஸ்திரேலிய தாவரவியலாளர் Friedrich Welwitsch, 1859 இல் கண்டு பிடித்ததால் அவர் பெயரில் அழைக்கப்படுகிறது. ஆபிரிக்காவில்  ‘tweeblaarkanniedood’ என அழைக்கப்படுகிறது.இதன் அர்த்தம் 'என்றும் சாகாத  இரண்டு இலைத் தாவரம்' என்பதாகும்.

இது ஒரு மிகச் சிறிய மரம் ஆகும். இது தரையிலிருந்து சிறிது மட்டுமே மேல் நோக்கி வளர்ந்து உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமான தோற்றம் கொண்டுள்ளது. தண்டுப்பகுதி சில சமயங்களில் 14 அடி சுற்றளவு கொண்டிருக்கும். இவற்றிலிருந்து இரண்டு இலைகள் மட்டுமே வளர்ந்து உள்ளது. இவ்விலைகள் 20 அடி (6.5மீ) நீளத்திற்கும், 20 செ.மீ அகலத்திற்கும் இருக்கும். இது தரையை ஒட்டி கிடக்கும். இவ்விலைகள் சதைப்பற்றுடனும், தோல் வார் போன்று தடிப்பாகவும் இருக்கும். இலையின் நுனி இரண்டாக பிளவுபட்டு இருக்கும். மரத்தின் நடுவிலிருந்து பெண் கூம்பு மலர்கள் 5 செ.மீ. நீளத்திற்கு பச்சை நிறத்துடனும், ஆண் கூம்பு 3 செ.மீ. நீளத்திற்கு பழுப்பு நிறத்தில் இருக்கும். இதனின் வேர்ப்பாகம் 200 அடிகள் வரைக் காணப்படுகின்றன.




வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty கோழி

Post by வாகரைமைந்தன் Thu Aug 05, 2021 12:25 pm

மிகப்பெரிய கோழி 19 ம் நூற்றாண்டு வாக்கில் John and Thomas Black, சகோதரர்களால் உருவாக்கப்பட்டது. நியு ஜேர்சியில் (1870s’-1890s’)  வான்கோழியை ஈடுசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.முதலில் பிளாக் ஜயன்ட் எனவும் பின்னர் Jersey Giant  எனவும் அழைக்கப்படுகிறது.

[You must be registered and logged in to see this image.]

26 அங்குல உயரமும் 10 கிலோ எடையும் கொண்டதாகும்.

(அமெரிக்க உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த காலத்தில், 1863ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அந்த ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் வியாழக்கிழமை "நன்றியறிதல் நாள்" எனக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.அந்த நாள் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் நாலாவது வியாழக்கிழமை  Thanksgiving நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அமெரிக்க  நாட்டில் வான்கோழி உணவில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.)

இந்தியாவில்  Kadaknath Chicken இறைச்சிக்குப் பெயர் போனது.எம்.எஸ்.தோனியும்( MS Dhoni's Kadaknath Chicken Farm ) இப்படியான கோழி வளைப்பில் ஈடுபட்டுள்ளார்.






[You must be registered and logged in to see this image.]

El Árbol del Tule (The Tree of Tule)  மெக்சிக்கோவில் church grounds (Santa María del Tule in the Mexican state of Oaxaca) இருக்கும் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு மரமாகும். இதன் சுற்றளவு 42 மீட்டர்,30 பேர் வரை ககளை கோர்த்து சுற்றிப் பிடிப்பதற்கு சமமாகும்.3000 ஆண்டுகள் பழமையானது இம்மரம் .

[You must be registered and logged in to see this image.]

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty  Coca Cola Lagoon

Post by வாகரைமைந்தன் Sat Aug 07, 2021 6:46 pm

Coca Cola Lagoon பிரேசில்  Rio Grande do Norte தெற்கே நேத்தாலில் இருந்து 100 கி.மீ.தொலைவில் உள்ள ஒரு குளம் ஆகும்.உல்லாசப் பயணிகளை அதிகம் கவர்ந்த இந்தக் குளம் கோக்கோ கோலா நிறத்தில் இருக்கிறது.இந்த நிறத்திற்கு காரணம் அதிகமாக  iodine +  iron கலந்துள்ளதுதான்.

[You must be registered and logged in to see this image.]

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Mon Aug 16, 2021 11:53 pm

[You must be registered and logged in to see this image.]

2017 இல் கார் விபத்தில் இறந்த குருகுல அங்கி ரெட்டி யின் மனைவி பத்மாவதி (43) ஆந்திர பிரதேசம் நிம்மவனம் கிராமத்தில் கோயிக் கட்டி வழிபட்டு வருகிறார்.பளிங்கினால் சிலை செய்து  வைக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி தினம்,சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச உணவும் வழங்கப்படுகிறது.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Tue Aug 17, 2021 11:29 am

[You must be registered and logged in to see this image.]

peacock mantis shrimp (Odontodactylus scyllarus) என்ற இறால் மிகவும் வேகமாக குத்தும் (fastest punch  ) இனமாக கண்டறியப்பட்டுள்ளது.இது கைத்துப்பாக்கியில் இருந்து  .22mm bullet குண்டு பாயும் வேகத்தை ஒத்ததாகும்.ஒரு குத்து  160 கிலொ வரை எடை கொண்டது  எனவும்,அது அதன் எடையைவிட 2500 மடங்கு எடை உடையதாக் இருக்கும் எனச் சொல்கிறார்கள்.ஒரு குத்தினால் மீன்தொட்டி கண்ணாடியை  அது உடைக்கும் ஆற்றல் கொண்டது.

இது எப்படி முடிகிறது என விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆய்வு செய்து கண்டு பிடித்தது...குத்தும் பகுதி powerful clubs are coated in hydroxyapatite, a very hard crystalline calcium-phosphate ceramic material ஆல் மேல்பகுதி அமைக்கப்பட்டது எனக் கண்டார்கள்.அப்படி வேகமாக குத்தும் போது உடலை பாதிக்காத வகையில்  polysaccharide chitosan  என்ற இலாஸ்டிக் கலவையினால் ஆன பகுதி இருக்கிறது எனவும் கண்டார்கள்.குத்தும் போது அதிக வெப்பம் கொண்ட குமிழ்களை அது வெளிவிடுகிறது.

பல வண்ணங்களை உடைய இந்த இறாலை சிலர் வளர்ப்பதுண்டு.அப்படி வளர்ப்பவர்கள் பாதுகாப்பான கண்ணாடிகளை பாவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.



.........................................
[You must be registered and logged in to see this image.]

2019 இல் 59 வயதான ஒருவரின் பெருங்குடலில்  ஒரு பெண் மூட்டைப்பூச்சி, colonoscopy செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டது.கொலொன்ஸ்கோப்பி செய்யு முன்னர் முதல்நாள் polyethylene glycol, என்ற  osmotic laxative  கலந்த பானம் உடலை சுத்தம் செய்யக் கொடுக்கப்படுகிறது.

[You must be registered and logged in to see this link.]  அறிக்கையின்படி இதுவரை அதுபற்றி எதுவும் கண்டறியப்படவில்லை.எப்படி அந்த மூட்டைப்பூச்சி அங்கே சென்றது,இன்னமும் அது இறக்காமல் எப்படி உயிர் வாழ்கிறது என்பது பற்றி எதுவித விளக்கமும் இல்லை.

தூக்கத்தின் போது வாயின் மூலம் உள்நுழைந்தாலும் கூட,வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் போன்றவற்றில் இருந்து தப்பி பெருங்குடலில் (colon) சென்று இன்னமும் எப்படி உயிர் வாழ்கிறது என்பது மருத்துவர்களால் சொல்ல முடியவில்லை.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Thu Aug 19, 2021 11:35 am

[You must be registered and logged in to see this image.]

செயற்கையாக நீரூற்றுகள் அழகுக்காகவும் நீச்சல் தடாகத்திலும் அமைப்பார்கள்.

இது Afton நகரத்தில் உள்ள Wyoming என்ற மலைப்பகுதியில் இயற்கையாக உருவான நீரூற்று.இந்த நீரூற்று இயற்கையாக ஒரு இடத்தில் நிரம்பி மீண்டும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்கிறது.இப்படி அமைவது உலகில் சில இடங்களில் மட்டுமே நிகழ்கிறது.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Tue Aug 24, 2021 1:00 am

[You must be registered and logged in to see this image.]

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த Adie Timmermans என்ற பெண்ணுக்கு Antwerp Zoo மிருகக்காட்சிச்சாலை ,38 வயதான சிட்டா என்ற ஆண் சிம்பன்சி மனிதக் குரங்கை (Chita, a 38-year-old male chimpanzee )பார்க்க தடை விதித்துள்ளது.நான்கு வருடங்களாக சிட்டாவை தினமும் பார்த்து வரும் அவர் சிட்டாவிடம் நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறார் எனவும் முத்தம் கொடுக்கிறார் எனவும்,இதனால் மற்றக் குரங்குகளிடையே சேராமல் தனித்தே இருக்கிறது  எனவும் கூறப்படுகிறது.அவர் அந்தக் குரங்கின் கிட்டே வரக் கூடாது எனவும் கண்களால் எந்தவித தொடர்பையும் வைக்கக் கூடாது எனவும் தடை போட்டுள்ளார்கள்.

[You must be registered and logged in to see this image.]

நான் விலங்குகளை நேசிக்கிறேன்.மற்றவர்கள் நெருங்க அனுமதிக்கும் போது என்னை ஏன் அனுமதிக்கவில்லை என கண்ணீர் மல்க கேள்வி எழுப்புகிறார் அடி.
                                                   
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Wed Aug 25, 2021 2:35 pm

வடக்கு புளோரிடாவில் உள்ள உணவகம் Wahoo Seafood Grill  க்கு மனைவி,மகனுடன்  வந்த ஒருவர் உணவை முடித்துவிட்டு போகும் போது ,அங்கு வேலை செய்தவர்களை அழைத்து (அப்போது 10 பேர் வேலை செய்தார்கள்) வெகுமதியாக (tip) 10,000 டாலர்களை கொடுத்து உங்கள் சிறப்பான பணிக்கு எனது அன்பளிப்பு எனக் கூறிச் சென்றுள்ளார்.

உணவு வழங்குனர்-பரிமாறுபவர்- சற்று தயக்கத்துடன் உரிமையாளரை தொலைபேசியில் அணுகினார். உரிமையாளர் பண அட்டையையும் அடையாள அட்டையையும் சரிபார்க்கும்படி கூறவே,வழங்குனர் எல்லாம் சரியாக இருக்கவே அன்பளிப்பை ஏற்றுக் கொண்டார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுத்ததாக உணவக சமையல்காரர் குறிபிடுகிறார்.கொரோனா காரணமாக வேலை இல்லாமலும்,பணக் கஷ்டத்துடனும் இருக்கும் போது இப்படி ஒரு மனிதரா என ஆச்சரியத்டன்  பார்க்கும் ஷேர்லி,உணவகம் கொரோனா காரணமாக சில நாட்கள் மூடப்பட்டதால் குடும்பம் பெரும் கஷ்டத்துடன் இருந்ததாக கூறுகிறார்.அன்பளிப்பை 10 பேரும் பகிர்ந்தனர்.

[You must be registered and logged in to see this image.]
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1698
Join date : 23/05/2021

Back to top Go down

உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்) Empty Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics
» செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................
» விநோதம்-ஏமாற்றம்-எச்சரிக்கை
» வானத்தின் விநோதம், புகைப்படப்பிடிப்பாளரின் கண்ணில் சிக்கிய அரிய படங்கள் (காணொளி)
» ’தானே‘ புயலின் விளைவு: கடலில் வலை விரித்து நிலக்கரி அள்ளும் மீனவர்கள்! வட சென்னையில் விநோதம்
» பங்குச்சந்தை - தொடர் : 11

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum