TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:46 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆண்டின் சிறந்த செயலிகள்!

Go down

ஆண்டின் சிறந்த செயலிகள்! Empty ஆண்டின் சிறந்த செயலிகள்!

Post by ஜனனி Tue Jan 27, 2015 6:59 am

2014 ம் ஆண்டின் சிறந்த செயலிகள் ( ஆப்ஸ் ) பட்டியலை கூகிள் வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்ததுபோல ஆண்ட்ராய்டு பயனாளிகளின் விருப்பத்தேர்வுகள் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

கூகிள் பிளே ஸ்டாரில் , 2014 ல் முன்னணி செயலிகள் எனும் தலைப்பின் கீழ் இந்த பட்டியல் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 64 செயலிகள் பட்டியலில் உள்ளன. இசைப்பிரியர்களுக்கான ஷாசம் , டியூனின் ரேடியோ, இணைய டாக்சி சேவையான யுபேர், மற்றும் ரகசிய செய்தி சேவையான சீக்ரெட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்விப்ட்கீ கீபோர்ட், லாக்கெட் ,டைம்ஹாப்,பஸ்ஃப்பீட், ஒன்ஃபுட்பால் ஆகிய செயலிகளும் இருக்கின்றன.
ஆண்டின் சிறந்த செயலிகள்! Apps0124_1s


பட்டியலில் உள்ளவை பெரும்பாலும் இலவச செயலிகள் என்பதை சொல்லவே வேண்டாம்.எனினும் கட்டணி செயலிகளில் சிலவும் உள்ளன. கடந்த ஆண்டும் கூகிள் இதே போல பட்டியலை வெளியிட்டது.

உங்கள் அபிமான செயலிகள் இந்த பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். அல்லது பட்டியலில் இருந்து உங்களுக்கான செயலியையும் தேர்வு செய்து கொள்ளலாம்:

கூகிளின் பட்டியல்: [You must be registered and logged in to see this link.]

சோனியின் ஸ்மார்ட் வாட்ச்!

வியரபில் எனப்படும் அணி கணிணிகள் தான் தொழில்நுட்ப உலகில் அடுத்த பெரிய விஷயம் எனும் கருத்து இருக்கிறது. ஸ்மார்ட் வாட்ச் இந்த பிரிவில்தான் வருகிறது. முன்னணி நிறுவனங்கள் பல ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. இல்லை என்றால் கைவசம் அதற்கான திட்டம் வைத்துள்ளன.

இந்நிலையில் சோனியும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. சோனியின் ஸ்மார்ட் வாட்ச் பற்றிய தகவல் வெளியான விதமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
சோனியின் ஸ்மார்ட் வாட்ச் இ-பேப்பர் எனப்படும் மின் காகித நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்ட மாதிரியில் , விருப்பம் போல 24 விதங்களை தேர்வு செய்யும் வகையில் வடிவமைப்பு அமைந்துள்ளது.

சத்தம் இல்லாமல் இந்த வாட்சை வெள்ளோட்டம் விட்டுள்ளது சோனி. நிறுவனம் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் ஃபேஷன் எண்டர்டெயின்மண்ட்ஸ் எனும் திட்டத்தின் கீழ்  இந்த வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது இணைய நிதி திரட்டும் தளம் ஒன்றில் திட்டமாக முன்வைக்கப்பட்டது.

இந்த வாட்சுக்கான வரவேற்பை அறிந்து கொள்வதற்காக சோனியின் பெயர் குறிப்பிடாமல் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அப்படியிருந்தும் கேட்ட நிதிக்கு மேல் இந்த திட்டத்திற்கு கிடைத்துள்ளதாகவும் சோனி நிறுவன அதிகாரி ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த வாட்சின் சந்தை பிரேவசம் பற்றி சோனி எதுவும் கூறவில்லை. ஆனால் நிதி திரட்டும் தளத்தில் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்தில் வாட்ச் கிடைக்கும்.

அணி கணி பிரிவில் சோனிக்கு பெரிய அளவில் ஆர்வம் இருப்பதாகவும், பேஷன் துறை சார்ந்து இத்தகைய தயாரிப்புகளை உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் புதிது !

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ZTE தனது புதிய ஸ்மார்ட்போன்  கிராண்ட் எஸ் II ( Grand S II ) -ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மின்வணிக தளமான அமேசான்.இன் மூலம் இதனை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 5.5 இன்ச் எச்.டி ஸ்கீரின் கொண்டது. குவால்காம் ஸ்னேப்டிராகன் குவாட் கோர் 800 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டது. 16 ஜிபி ஸ்டோரேஜ். 32 ஜிபியாக நீட்டித்துக்கொள்ளலாம்.
ஆண்டின் சிறந்த செயலிகள்! Apps0124_1


13 பிக்சல் மற்றும் 5 பிக்சல் முன்பக்க கேமிரா கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் அடிப்படையிலானது. 2500 mAh  பேட்டரி கொண்டது. விலை ரூ.13,999,   என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்ஜெட் செய்திகள்

* சாம்சங்கின் டைசன் ஓஎஸ் ஸ்மார்ட்போன் பற்றி தொடர்து பேசப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய போன் இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. 100 டாலருக்கு கீழ் அதாவது 6,000 ரூபாய்க்கு குறைந்த விலை பிரிவில் இது அறிமுகமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த போன் இசட் 1 என்று அழைக்கப்பட இருப்பதாகவும் தென்கொரிய நாளித்ழ் ஒன்று தெரிவிக்கிறது.

*  ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான எச்டிசி தனது புதிய ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு பார்சிலோனா தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிரபலமான எச்டிசி ஒன் எம் 8 போனின் அடுத்த வடிவமாக இது இருக்கும் என்றும் மைடிரைவர்ஸ் இணையதளம் தெரிவிக்கிறது.

* சீன மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான மெய்சு ( Meizu- உபுண்டு லினஸ்க் பின்னே உள்ள நிறுவனம்) புதிய கூட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் படி இதன் புதிய பிலேம் ஓஎஸ் அடிப்படையிலான ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சீன மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகமாகலாம் என்று சொல்லப்படுகிறது. உபுண்டு டச் அடிப்படையிலானது என்பதால் செயலிகள் டெஸ்க்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் இரண்டிலும் செயல்படக்கூடியதாக இருக்கும்..

இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

ஸ்மார்ட்போன் சந்தையை பொருத்தவரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவில் தான் வேகமான வளர்ச்சி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அனைத்து விலை பிரிவிலும் அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில் இது எதிர்பார்க்க கூடியது தான்.

கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிடும் போது இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 82 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடீசி நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

4ஜி வசதி பிரபலமாகும் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று சொல்லப்படுகிற்து.
இந்தியர்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதில் ஆர்வம் காட்டுவது போலவே பேப்லெட் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஸ்மார்ட்போன் கழுத்துவலி இருக்கிறதா?

குனிந்த தலை நிமிராமல் ஸ்மார்ட்போனையே பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இதன் பாதிப்பு பற்றி யோசித்து பார்த்தாக வேண்டும் போலிருக்கிறது. அமெரிக்க மருத்துவர் ஒருவர் இப்படி தான் எச்சரிக்கிறார்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்தியுள்ள டாக்டர் கென்னத் ஹான்ஸ்ராஜ் எனும் அந்த மருத்துவர் , ஸ்மார்ட்போன்களால் கழுத்து வலி உண்டாகும் அபாயம் இருப்பதாக சொல்கிறார். ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது நாம் கழுத்தை வைத்திருக்கும் விதம், அதன் மீதான சுமையை அதிகரிக்க செய்வதாக அவர் கூறுகிறார்.
ஸ்மார்ட்போன் பயனாளிகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 மணி நேரம் ஸ்மார்ட்போனில் செலவிடுவதால் கழுத்து வலி பாதிப்பு ஏற்படலாம் என அவர் எச்சரிக்கிறார். இதற்கு டெக்ஸ்ட் நெக் என பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே பிளாக்பெரி தம்ப் , ஐபேட் தம்ப் ஆகிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்த புதிய வலி சேர்ந்திருக்கிறது. மருத்துவர்கள் சிலரும் டெக்ஸ்ட் நெக் பாதிப்பு கொண்டவர்கள் அதிக அளவில் தங்களிடம் வருதாக கூறியுள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்டின் சிறந்த யூடியூப் வீடியோக்கள்!
» "தொடுவானம்" 2010ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப சேவை
» கந்த ஆண்டின் சிறந்த நாடகமும் நடிகர்களும் படவிளக்கம்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum