TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

2 posters

Go down

கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.  Empty கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

Post by sakthy Thu Aug 28, 2014 8:46 pm

கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

விண்டோஸ் கணினிகளில் Basic Disk ,Dynamic Disk என்றால் என்ன?

system reserved partition என்றால் என்ன?

மடிக்கணினிகள் சிலவற்றில் அனேகமாக தமிழக அரசுக் கணினிகளில் வரும் Q Drive பிரச்சனை என்றால் என்ன?

அலுவலகத்தில் அல்லது கல்லூரியில் ஒரே இணையத் தொடர்பில் வேறு கணினிகள் இணைக்கப்படும் போது IP இலக்கம் ஒவ்வொரு கணினிக்கும் எப்படிக் கொடுக்கப்பட வேண்டும்?
Submask இலக்கம் எப்படிக் கொடுக்க வேண்டும்?
சரிபார்க்க Ping எப்படிக் கொடுக்க வேண்டும்?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.  Empty Re: கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

Post by அருள் Thu Aug 28, 2014 9:06 pm

எதுவும் நமக்கு அறியலை
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.  Empty Re: கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

Post by sakthy Fri Aug 29, 2014 12:58 am

வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதி சொல்வது போல் யாரும் பதில் சொல்லாத நிலையில்,முதல் கேள்விக்கு விடை...........

வந்தட்டில் சேமிப்பு (disk storage)- basic , dynamic என இரண்டு முறை உள்ளது.MSDos தொடக்கம் XP Home வரை Basic , பின்னர் டைனமிக் முறை ஆரம்பித்தது.  இந்த Basic இல் basic volumes - primary partitions, extended partition, logical partitions என இருக்கும்.Basic Partition இல் பிரிவுகளை குறைக்க, கூட்ட,நகர்த்த(shrink,extend,move) முடியும்.இதை உங்கள் கணினிகளில் Disk management சென்று பார்க்க முடியும். பொதுவாக உங்கள் கணினி Basic Volume ஆகவே இருக்கும்.

Basic முறை எல்லா கணினிகளிலும் பயன்படுத்த முடிந்தாலும்,XP க்குப் பின்னரான கணினிகளில் தான் dynamic முறை கொண்டு வரப்பட்டது.Dynamic Disk இல் dynamic volumes -simple volumes ,Raid, stripping, span multiple disks  என partition பிரிக்கும் முறை உண்டு.

Basic ஐ குறைக்க கூட்ட நகர்த்த(extend,shrink,move) முடிந்தாலும்,Dynamic volume இல் அது போல் செய்ய முடியாது. Basic  இல் இருந்து Dynamic volume ற்கு மாற்றினால், மீண்டும் Basic Partition ற்கு திருப்ப வேண்டுமாயின், முற்றாக volume ஐ அழித்து விட்டு(கோப்புகள் அழிக்கப்பட்டு விடும்) பின்னர் basic ற்கு மாற்ற முடியும்.இல்லையேல் மூன்றாம் தரப்பு மென்பொருளைப் பாவிக்க வேண்டும்.

கொண்டு செல்லக் கூடிய(Portable computers) கணினிகளில் Dynamic disks ஆக மாற்ற முடியாது என நினைக்கின்றேன்.Basic இல் partition அதி கூடிய அளவு 2TB ஆகவும், Dynamic இல் 2 TB க்கு மேல் எந்த அளவிலும் simple,raid போன்ற முறையில் பிரிக்கலாம்.Basic Disks இல் னா நான்கு primary partition (3 primary partitions + 1 extended partition.) பிரிக்க முடியும். ஆனால் Dynamic Disks இல் நமக்கு வேண்டிய அளவு எத்தனை volume-partition ஆகவும் பிரிக்கலாம்.

Basics இல் எல்லா OS களையும் இன்ஸ்டால் செய்யலாம். Dynamics பின்னர் வந்த முறை என்பதால்  சில OS முடியாது.
Basics இல் கோப்புகளை சிறு பிரிவுகளாகப் பிரித்து மற்ற partition களில் சேமிக்க முடியாது.அதாவது ஒரு கோப்பை பிரித்து அரைவாசியை ஒரு partition இலும்,மற்ற அரைவாசியை வேறு partition இலும் சேமிக்க முடியாது.

ஆனால் டைனமிக்கில் கோப்புகளை பிரித்து மற்றைய partition களில் சேமிக்க முடியும்.பல டைனமிக் முறையில் உருவாக்கிய வந்தட்டுகளைக் -dynamic hard disks- கூட இணைத்து ஒரே volume ஆகவும், வைத்திருக்க முடியும். அதாவது 5 TB கொண்ட இரு வந்தட்டுகளை இணைத்து ஒரே வந்தட்டுப் போல் பாவிக்க முடியும்.இப்படி டைனமிக் வந்தட்டுகளை இணைப்பது-spanning-, கோப்புகளை பிரித்து சேமிப்பது - striping-, performance ஐ அதிகரிக்க duplicate data களை  வேறு வந்தட்டுகளில் சேமிப்பது - mirroring- என்றும் சொல்லப்படுகிறது. இவை எல்லாம் டைனமிக் இல் முடியும்.

partition என்பது  volume என்றும் சொல்லப்படுகிறது. வழமையாக நாம் பாவிக்கும் Basic Disk ஐ Disk Management இல் 4 partition களாகப் பிரிக்க முடியும். முதல் 3 primary partition என்றும் நான்காவது extended partition எனவும் சொல்லப்படுகிறது.இந்த மூன்று primary partition களிலும் OS ஐ இன்ஸ்டால் செய்ய முடியும். நான்காவது extended partition இல் சில பிரிவுகளாகப் பிரித்தும் வைத்திருக்க முடியும்.இந்தப் பிரிவுகள் Logical drives எனச் சொல்லப்படுகிறது. இந்த logical drives கள் primary partition போலவே செயல்பட்டாலும், OS ஐ இன்ஸ்டால் செய்து,அதிலிருந்து கணினியை தொடக்க-start,boot- முடியாது என்பதே இரண்டிற்கும் உள்ள வேறுபாடாகும்.இது பொதுவான முறை.

நாம் ஒரு டிஸ்க்கில் partition களைப் பிரித்து இரண்டு OS-Dual Boot ஆக இன்ஸ்டால் செய்யும் போது, அந்த இரண்டும் Primary Partition களாக இயங்கும். மூன்றாவது ஒன்று உருவாக்கினால் அது extended ஆக மாறும். அந்த extended -logical ஆகி அதை மேலும் இரண்டாகப் பிரித்தால், இரண்டு Logical Drive ஆகும். இப்போது அந்த டிஸ்க்கில் இரண்டு primary+ இரண்டு logical drive ஆக இருக்கும்.

குழப்புகிறேனா? Basic என்பது நாம் இப்போது பாவிக்கும் வந்தட்டு முறை.இதில் ஆகக் கூடியது நான்கு Partition களாகப் பிரிக்க முடியும்.டைனமிக்கில் எத்தனை partition களாகவும் பிரிக்க முடியும். டைனமிக் முறை சிறந்தது என்றாலும்,பலர் அறிந்திராததால்  மாற்றுவதில்லை.
உதாரணமாக, வந்தட்டை ஃபொர்மட் செய்யும் போது முன்னைய முறை FAT என்றும் தற்போது NTFS எனவும் சொல்லப்படுகிறது. NTFS என்பது சிறந்த முறை என்பது போல், Basic ஐ விட Dynamic முறை பல வசதிகளைக் கொண்டது. அவ்வளவுதான்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.  Empty Re: கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

Post by sakthy Fri Aug 29, 2014 3:44 pm

இரண்டாவது கேள்விக்கான பதில்.

System Reserved என்பது நாம் OS ஐ நிறுவும் போது எந்த டிஸ்க்கில் இன்ஸ்டால் ஆக வேண்டும் என்பதைக் கேட்கும் போது நாம் ஒரு டிஸ்க்கை தெரிவு செய்கிறோம்.

அனேகமாக Partition பிரிக்காமல் இருந்தால் நாம் எதையும் தெரிவு செய்யாமல் OK கொடுப்போம். அப்படிக் கொடுக்கும் போது OS Setup தானாகவே ஒரு system reserved partition ஐ உருவாக்கி அந்தக் கோப்புகளை சேமிக்கும். பொதுவாக இதற்காக 100 MB வரை எடுத்துக் கொள்ளும்.

Folder Option இல் சென்று show hidden files என்பதை தெரிவு செய்து, My Computer சென்றால் அங்கே OS இன்ஸ்டால் செய்யப்பட்ட -C- டிஸ்க்கை கிளிக் செய்தால் Boot, Boot mgr,boot.bak, System Volume Information,$RECYCLE.BIN  இப்படிக் காட்டும்.இவை சில system files களாகும்.
சில மறைக்கப்பட்டிருக்கும். தனியாக system reserved partition உருவாக்கப்பட்டு இருந்தால் அதை நீக்கக் கூடாது. அதில் சிஸ்டம் கோப்புகள் இருக்கின்றன. அப்படி அந்த partition தேவை இல்லை என்றால், format செய்து வின் 7 ஐ திரும்ப இன்ஸ்டால் செய்து வரும் ஆப்சனில்-F10- இல்லாமல் செய்ய வேண்டும்.

பொதுவாக ஒரு partition களும் இல்லாமல் தனி டிஸ்க்காக இருக்கும் போது,வின் இன்ஸ்டால் செய்யும் போது system files களை தனியாக partition இல் வைத்திருப்பதா என கேள்வி கேட்கப்படும். அப்போது OK கொடுத்தால் இந்த system reserved தானாகவே வரும்.

HP போன்ற சில மடிக்கணினிகளில் system, BIOS போன்ற சில சிஸ்டம் கோப்புகளை மறைக்கப்பட்ட D: என்ற partition drive இல் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியில் பிரச்சனைகள், இயங்குதளம் அல்லாத பிரச்சனைகள் வரும் போது சுலபமாக சரி செய்து கொள்ளலாம். இந்த வசதி HP போன்ற சில கணினிகளில் உண்டு.

எல்லாவற்றையும்  படியுங்கள். ஒருவர் தவறாக சொல்லும் போது திருத்திக் கொள்ளலாம். தெரியாத ஒருவருக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
இணையப் பிரச்சனை, அதற்கான செலவு பற்றிய பிரச்சனை இருப்பவர்கள் Pocket போன்றவற்றில் தற்காலிகமாக சேமித்து பின்னர் படிக்கலாம். படித்த பின் நீக்கி விடலாம்.

இதோ ஒரு நிமிடத்தில் இணையப் பாவனையாளர்கள் செய்யும் வேலைகளை....
கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.  2m5ia7t
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.  Empty Re: கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

Post by sakthy Fri Aug 29, 2014 9:02 pm

இரண்டாவது கேள்விக்கான பதிலின் தொடர்ச்சி.......

HP கணினிகளில் HP System Recovery -D – தானாகவே உருவாக்கப்படுகிறது. கணினி System தவறுகள் ஏற்படும் போது சரி செய்வதற்காக உருவாக்கப்படுகிறது. அதை நீக்கினால்,வரும் தவறுகளை சரி செய்ய முடியாமல் போகலாம்.அப்படி நீக்க வேண்டுமானால்  Recovery Manager இல் சென்று நீக்க வேண்டும்.

HP factory recovery பிளேஸ், System Tool என்பதால் அதில் உள்ள கோப்புகள் பல image files களாகவே சேமிக்கப்படுகிறது.OS  இல் தவறு என்றால் திருத்திக் கொள்ளலாம்.திரும்ப இன்ஸ்டால் செய்யலாம். BIOS போன்றவை என்றால் ஓரளவு கணினி அறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதனால் தான் D:Recovery ஐ பொதுவாக யாரும் அழிப்பதில்லை. வேறு சில லாப்டொப் களில் இந்த recovery drive மறைக்கப்பட்டிருக்கும்.

மூன்றாவது கேள்விக்கான பதில்..........

முதலில் Q: Disk Management இல் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். கணினியில் MS Office உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.இது பொதுவான முறை.
அடுத்து, தமிழக அரச மடிக் கணினிகளில் பொதுவாக வரும் ஒரு சிறிய பிரச்சனை Q: Disk சில சமயங்களில் வந்து நம்மை யோசிக்கச் செய்வதாகும். அது தவறல்ல். MS Office இல் Q: என்பது Click to run ஆக இருக்கிறது.

இந்த Click to Run என்பது மிக விரைவில் இன்ஸ்டால் செய்யும் வசதி. இதுவே இந்த Q: error ற்குக் காரணம் ஆகும். MSOffice மட்டுமல்ல, சில மென்பொருள்களை லாப்டொப் நிறுவனம் Click to Run முறையில் இன்ஸ்டால் செய்கிறார்கள் .

அவ்வளவுதான்.சில சிஸ்டம்களில் இது R: ஆக இருக்கும். அப்படி இருந்தால் அந்த Q/R ஐ drive எழுத்தாகப் பாவிக்காமல் விடலாம்.இந்த Click to Run முறை மூலம் குறைந்த இடத்தில் சேமிக்கப்படுவதுடன்,விரைவாக இன்ஸ்டால் செய்வதும்,update கள் auto முறையிலும் தரவிறக்கப்படுகிறது.

இந்த Click to Run முக்கியமாக அரச கணினிகள் போல் தொகையாக விற்பனை செய்யும் போது, நேரடியாக குறிப்பிட்ட நிறுவனங்களில் -(Microsoft) இருந்து தரவிறக்கம் செய்வார்கள். இந்த முறையால் குறைந்த இடத்தில் சேமிக்கவும், வேகமாக இன்ஸ்டால் செய்யவும் முடிகிறது.

அதாவது இந்த click to run முறையால் ஒரே சமயத்தில் எல்லாக் கணினிகளிலும் இயங்குதளம்,MS office போன்ற மென்பொருளை எந்தச் சிரமமும் இன்றி, தானாகவே(auto-automatic install) இன்ஸ்டால் செய்து விடலாம்.

எனவே Q: error பற்றி கவலைப்படத் தேவையில்லை.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.  Empty Re: கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

Post by sakthy Sat Aug 30, 2014 1:27 pm

ஒரு குட்டித் தகவலுடன்........................

சில சமயம் கணினிகளில் Partition பிரிக்கும் போது, அல்லது குறைக்கும் போது-Shrink- 512MB அல்ல்து அப்படியான ஒரு அளவுக்கு மேல் குறைக்க பிரிக்க முடியாதிருக்கும்.இதற்கு மேல் டைப் செய்ய முடியவில்லை, value கொடுத்தால் கிழே 0 இல் வந்து நிற்கிறது, ஏன் என்று சிலர் சந்தேகம் கொள்வதுண்டு.

பொதுவாக shrink பண்ண முடியாதத்ற்கு காரணம்,அந்த disk இல் மறைக்கப்பட்ட கோப்புகள் இருப்பது தான். அந்த MFT - hidden files டிஸ்க்கின் கடைசிப் பகுதியில் இருந்தால் shrink செயல்படாது.hibernation file ,System Restore ,pagefile போன்றவற்றை disable செய்த பின் defrag செய்து பின்னர் shrink  செய்யலாம்.அதற்கு முன்னர் disk clean (வின் 7 இல் இருக்கும்)மூலம் clean செய்யலாம்.

chkdsk /r   உம் செய்யலாம்.
cmd – diskpart -list volume என்பதைக் கொடுத்தால் volume பற்றிய சில விபரங்கள் கிடைக்கும்.


நான்காவது கேள்விக்கான விடை.................

சிலரிடம் பல கணினிகள் இருக்கலாம். வீட்டில் உள்ள சிலரிடம் இருக்கலாம். அலுவலகம்,பள்ளிகள்,Internet Cafe போன்ற இடங்களில் பல கணினிகள் இருக்கும். ஒரே இணையத் தொடர்பு-பல கணினிகள். இப்படியான இடங்களில் ஒவ்வொரு கணினிக்கும் IP இலக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

இதோ செய்முறை.

Adhoc முறையில் அல்லது Virtual Router மென்பொருள் மூலம் கணினியிலும், மொபைலில் Settings- Wireless and networks-Wi-Fi settings- enable WiFi

கணினிகளில் -.Local Area Connection-Properties - Internet Protocol (TCP/IP) - Properties
Use the following IP address -என்பதில் முதல் கணினி  192.168.0.1 / 255.255.255.0
இரண்டாவதில் 192.168.0.2  /  255.255.255.0

அடுத்து,
System-Computer name- workgroup இரண்டு கணினிகளுக்கும் ஒரே பெயர் கொடுக்க வேண்டும்.பெயர் 15 ற்குள் இருக்க வேண்டும்.

IP -  192.168.0.1 …....... இணைக்கப்படும் கணினிகளின் இலக்கம் கடைசி இலக்கம், 1,2,3 ….......என வரும்.Submask ஒன்றாக இருக்கும்.வேறெதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

(Default gateway /DNS server சரிவரா விட்டால்,இவை இரண்டிற்கும்  192.168.0.1 எனக் கொடுத்துப் பார்க்கலாம்.)

ஏதெர்னெட் மூலம் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
முடிந்ததும், சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்க,

PC-1, Start - Run - CMD - ping 192.168.0.2
PC-2, Start - Run - CMD - ping 192.168.0.1

PC-3,4,5 …... என மாற்றிக் கொடுக்கலாம்.
இப்படி மாற்றிக் கொடுத்து கண்டறியலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.  Empty Re: கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum