TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

Go down

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Empty கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

Post by Tamil Sun Dec 29, 2013 10:01 pm

( Dr.குருசாமி சுஜாகரன்
மகப்பேற்று பெண் நோயியல் சத்திரசிகிச்சை நிபுனர்)

கேள்வி- கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய இடுப்பின் அடிப்பகுதி தசைகளுக்கான உடற்பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்? இதன் முக்கியத்துவம் என்ன?
பதில்- கர்ப்பிணிப் பெண்ணில் இடுப்பின் அடிப்பகுதி தசைகள் என்பது அடிவயிற்றில் குறுக்காக இருக்கும் தசைகள் கர்ப்பப்பையையும் சிறுநீர்ப்பையையும் மற்றும் மலக்குடல் பகுதியையும் தாங்கி உள்ளது. இத்தசையானது இவ்வுறுப்புகளை ஒரு பஞ்சு மெத்தையில் தாங்குவதுபோல் தாங்கி பெண்கள் துள்ளும் போதும் தும்மும் போதும் இருமும் போதும் பாரமான பொருட்களை தூக்கும்போதும் பிரசவத்தின் போதும் குழந்தை வெளியே வருவதற்கு முக்கும் போதும் ஒரு பலமான அடித்தளமாக இருந்து உள் உறுப்புகளை தாங்குகின்றது. கர்ப்ப காலத்தில் ஹோர்மோன்களின் மாற்றத்தினால் இத்தசையானது மென்மையடைவதுடன் சிசுவைத் தாங்கும் கர்ப்பப்பைஇ சிறுநீர்ப்பையை அமுக்குவதனாலும் கர்ப்பிணிப்பெண் இருமும் போதும் தும்மும் போதும் சிறுநீர் வெளியேற்றம் ஏற்படும். இத்தசைகளை கர்ப்ப காலத்தில் முறையான உடற்பயிற்சி மூலம் பலமாக்கி இறுக்கமடையச் செய்வதன் மூலம் இவ்வாறான சிறுநீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதுடன் பிரசவ நேரத்திலும் குழந்தை இலகுவாக பிரசவ வாசல் வழியாக வருவதிலும் உதவியாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Untitled-1_8இடுப்பின் அடிப்பகுதி தசைகளை முதலில் நீங்கள் கண்டறிய வேண்டும். பின்னர்தான் அதற்கான உடற்பயிற்சியை சரியாக மேற்கொள்ள வேண்டும். நீங்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது அதனை நிறுத்துவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள். இவ்வாறு சிறுநீரை சடுதியாக நிறுத்த உதவும் அடிவயிற்று தசைகள்தான் இடுப்பின் அடிப்பகுதி தசைகள் . இவ்வாறு இத்தசைகளை நீங்கள் எந்நேரத்திலும் எங்கு வேண்டுமென்றாலும் கற்பனையில் சிறுநீர் கழிப்பதை இடையில் நிறுத்துவது போன்ற அடிப்பகுதி தசைகளை இறுக்குவதன் மூலம் உடற் பயிற்சியை செய்யலாம். இவ்வாறு இத்தசைகளை இறுக்கி நான்கு விநாடிகள் வைத்திருந்து பின்னர் விட வேண்டும். இவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இடையிடையே இவ்வகை உடற்பயிற்சியை செய்யும்போது இடுப்பின் அடிவயிற்று தசைகள் இறுக்கமடைந்து கட்டுப்பாடின்றி வெளியேறும் சிறுநீரை கட்டுப்படுத்துவதுடன் பிரசவத்தையும் இலகுவாக மேற்கொள்ள முடியும்.
கேள்வி : கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய சந்தர்ப்பங்களில் எவ்வாறான புதிய முறைகள் பின்பற்றப்படும்?
கர்ப்பப்பையை அகற்றும்போது கடந்த காலங்களில் சூலகங்களையும் சேர்த்து அகற்றினார்கள். சூலகங்கள் அகற்றப்பட்ட பின்னர் பெண்கள் ஓமோன் குறைபாட்டால் அவதிப்பட்டனர். துன்பப்பட்டனர். இதற்கு தீர்வாக ஓமோன் மாத்திரைகளை வழங்காது அம்மாத்திரையை உட்கொண்டால் புற்றுநோய்கள் பக்க விளைவுகள் என பல அச்சங்களையும் குழப்பங்களையும் வெளியிட்டனர். ஆனால்இ இறுதியில் துன்பப்பட்டது பெண்களும் அவர்களது குடும்பத்தினரும். எனவே இப்பிரச்சினையை வெற்றிகொள்ள புதிய அணுகுமுறையாக கர்ப்பப்பையை அகற்றும்போது தேவையில்லாமல் நாம் சூலகங்களை அகற்றுவதில்லை. மேலும் சூலகங்கள் அகற்றப்பட்டாலும் பெண்களின் மெனோபாஸ் வயது வரை ஒமோன் மாத்திரைகள் கொடுப்பது அவசியமாகின்றது.
அத்துடன் கர்ப்பப்பையுடன் கூடிய வெட்டுக்காயங்களைக் குறைத்து சிறிய துளைகள் மூலமான லப்ரஸ்கோப்பி மூலமாகவும் அகற்றக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு பெண்நோயியல் சிகிச்சை முறைகள் புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதனால் பழைய சிகிச்சை முறையில் இருந்த துன்பம் நீங்கி நன்மைகள் பல உள்ளதாக மாறியுள்ளது.

கேள்வி- கர்ப்பகாலத்தில் 37 வாரங்களின் பின்னர் சிசுவானது தலைமேலே,  கால் கீழே இருக்கும் போது எவ்வகையான தீர்வு உள்ளது.
பதில்- 37 வாரங்களின் பின்னர் சிசுவானது தலைமேலே அதாவது Breech ஆக இருந்தால் மேற்குறிப்பிட்டவாறு திருப்ப முடியாது. எனவே, பிரசவமானது சிசேரியன் பிரசவமாக அல்லது சாதாரண உதவிப் பிரசவமாக இருக்க முடியும். இந்நிலையில் சர்வதேச ஆய்வுகளின் முடிவுகளால் தலைமேலே உள்ள சிசுவை சாதாரண பிரசவத்திற்கு அனுமதிக்கும்போது சிக்கல்கள் பல சிசுவிற்கு ஏற்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமேலேயுள்ள சிசுக்களுக்கு சாதாரண பிரசவம் செய்வது குறைவடைந்து போகின்றது. இதனால் கூடுதலான சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும், எனது அனுபவங்களைப் பொறுத்தவரையில் கர்ப்பவதி ஒருவருக்கு முதல் குழந்தை இவ்வாறு தலைமேலேயுள்ளபோது சிசேரியன் செய்வது அவசியம். ஆனால், கர்ப்பவதிக்கு 2 ஆம் அல்லது 3 ஆம் குழந்தைகள் சாதாரண சராசரி எடையில் உள்ளபோது சாதாரண சுகப்பிரசவம் தலை மேலேயுள்ள சிசுவிற்கு சிக்கல்கள் இல்லாது மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது. எனினும், இவை யாவும் பெண்களுடன் கதைத்து, சரியான விளக்கமளித்து அவர்கள் திருப்திப்படக்கூடிய அவர்களது தெரிவுகளையே நாம் நிறைவேற்றி வைப்போம்.

கேள்வி- எனது வயது 30. எனக்கு ஒரு குழந்தை உண்டு. எனக்கு கூடுதலாக வெள்ளைபடுதல் உள்ளது. எத்தனையோ முறை மருந்துகள் எடுத்து களைத்துவிட்டேன். ஆனால், இது ஒரு தீராத பிரச்சினையாகவே உள்ளது. இதற்கு நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்?
பதில்- பெண்களில் வெள்ளைபடுதல் ஒரு பொதுவான பிரச்சினை. இவ்வாறு வெள்ளை படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது சாதாரண உடற்றொழிற்பாட்டு மாற்றங்களினால் ஏற்படும் திரவம் வடிதல் போன்றவையும் வெள்ளைபடுதலில் ஒரு வகை. இது ஒரு நோயல்ல. வெள்ளைபடுதல் ஒரு நோய்க்குரிய அறிகுறியாக நாம் எடுத்துக்கொள்வது எப்போதெனின், கடி அல்லது சொறிதல் உள்ள போது, துர்நாற்றம் உடையதாக இருக்கும்போது, இரத்தம் கலந்த திரவமாக இருக்கும்போது, தயிர் போன்ற கட்டி, கட்டியாக உள்ள போதாகும். இவ்வாறு இருப்பின் இதற்கான காரணியை அல்லது நோய்க்கிருமியை கண்டறிந்து சிகிச்சை வழங்குவது அவசியம். இவை எதுவும் இல்லாவிடின் இவ்வாறு வெள்ளைபடுதல் நோயாக எடுப்பதில்லை. மேலும், நீங்கள் நீரிழிவு நோய் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதனையும் பார்க்க வேண்டும். இலிங்க உறுப்புப் பகுதிகளை சோப் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் கழுவுவதனை தவிர்க்க வேண்டும். சாதாரண நீரினால் கழுவுதல் போதுமானது. மேலும், இறுக்கமான நைலோன் உள்ளாடைகள் அணிதல் தவிர்க்கப்பட வேண்டும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Empty Re: கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

Post by Tamil Sun Dec 29, 2013 10:02 pm

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcTIls15Kne17gVNgFJ5hehn4goqYhQwBF6w5EabnRAmXAEdY2zwNllcAwsஅன்பான உறவுகள், சுற்றத்தார் என் றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிக ளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடு வார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம்.

எந்த நிலையில் வயிற்றில் குழந்தை யைத் தாங்கி இருக்கும் பெண் ணுக்கு எப்போதுமே மற்ற உறவுக ள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற் றெல்லா உறவுகளையும் பின்னுக்குத்தள்ளி குழந்தை முதல் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.
எதைச் சாப்பிடுவதென்றாலும் அடடா இது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளுமா! என்று யோசித்துவிட்டே சாப்பிட வேண்டியதாகிவிகர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcTlcC12f2b0YUtPsn7eOEBwXUib3w_xlidOhquXAO43V1DRiRZYPAடுகிறது. இது அம்மாவுக்கும் குழ ந்தைக்குமான ‘எமோஷனல் பா ண்டிங்’ என் பதோடு குழந்தையின் நலனுக்கும் அவசியமானது என்ப தால் வயிற்றில் குழந்தை இருக் கும்போது சூடாக காபி, டீ சாப்பி டலாமா ?  ஹெர்பல் டீ குடிக்கலா மா? மசாலா உணவுகளை ஒரு கட்டுக் கட்டலாமா, கூடாதா? நெய்யில் செய்த பலகாரங்களை சாப்பிடலாமா? தேன் சாப்பிடலாமா? போன்ற சந்தேகங்களுக்கு உலக அழகி அம்மா க்கள், உள்ளூர் அழகி  அம்மாக்கள் என் ற வரை யறைகள் எல்லாம் எதுவுமி ல்லை. கர்ப்ப கால டயட் சந்தேகங்கள் அம்மாவாகப் போகும் யா ருக்கு வேணாலும் வரலாம்.) இது போன் ற சில பொதுவான கர்ப்ப கால டயட் சந்தேகங்களுக்கு சென்னை ம ருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் ரமாதேவி இங்கு பதில் அளிக்கிறார்.
(சமீபத்துல குழந்தை பெற்ற உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் பிரகர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcQy6zjYoQc2XPgXUeAJy6dPC_1IOjnrlc1B63ojlpzf8h0V3LZOசவத்துக்கு முன்பு இதே சந்தேகங்கள் இருந்தி ருக்கலாம் இப்ப அவ ங்களுக்கு சுகப் பிரசவத்துல அழகா ஒரு குட்டி ஐஸ் பிறந்தாச்சு.)
இனி கேள்விகளுக்குப் போவோமா…
கர்ப்பமாய் இருக்கும் போது சூடான பா னங்கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக் கும் குழந்தைக்குச் சுடுமா?
டாக்டர் பதில்:   “அம்மா சூடான பானங் கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சுடும் என்ப தெல்லாம் கற்பனை. குழந் தைக்குச் சுடாது.
கர்ப்பிணிகள் என்றில்லை, பொதுவாகவே மிதமிஞ்சிய சூட்டில் பா னங்களையும், உணவுப் பொருட்களையும் சாப்பிடும்  பழக்கம் சிலகர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcTbikDEYs6dnf_TIxnwUlphMvm31-kQ08fFHbtARuU9BifAKVsqMQருக்கு இருக்கலாம். அப்படி சாப்பி டும்போது உணவுக் குழாய் புண் ணாகி அல்சர் வர வாய்ப்பிருப்பதா ல் சூடாக சாப்பிடக் கூடாது என்பது தான் மருத்துவரீதியான காரண ம்.’’
கர்ப்பிணிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாதா?
டாக்டர் பதில்:  “ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். சளி பிடிக்காமல் இருக்கு ம் வரை பிரச்சினை இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்குகர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcQ7fO93JfB_KFm_dD-TfJmHmKPXihBwzfiuxGmjtATXdbQOKZZjஇதமாக இருக்கிறதென்று ஆசை ஆசை யாக தினமும் ஐஸ்க்ரீம், ஜில்லென்று ஜூஸ் வகைகளாக சாப்பிட்டுப் பழகினா ல் அது கடு மையான சளி, இருமலில் கொண்டு விடும்.கர்ப்ப காலங்களில் சா தாரண நாட்களில் நாம் எடுத்துக் கொள் ளும் இருமல், சளி மரு ந்துகளை எடுத் துக்கொள்ள முடியாது. அந்த மருந்துகள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதி க்க வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் பெரியவர்கள் கர்ப்பிணிகளை அதிக குளிர்ச்சியான, அதிக சூடான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள அனு மதிப்பதில் லை.’’
கர்ப்பிணிகள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா ?
டாக்டர் பதில்: “ப்ளட் சுகர் லெவலில் (Blood Sugar ) இன்சுலின்கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcSKcAfy903P4KjCxq2PLB_GOntpcgn_0TFXfEQ0QgABG_xUHEupகுறைவாக இருப்பவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் பயன்படுத் தலாம். ப்ளட் சு கர் லெவலில் இன்சுலின் அதிகமாக இருப் பவர்கள் தேன் சாப்பிடுவதைக் குறைப்பது நல்லது. இல்லாவிட்டால் ரத்தத் தில் சர் க்கரையின் அளவு அதிகரித்து வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கக்கூ டும். தேனில் ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் அதி கமிருப்பதால் ஆக்சிஜன் ஃப்ரீரேடிக்கிள்க ளை கட்டுப்படுத்தி மூளை மற்றும் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் செயல்படும் செல்களை ஒழுங்காக இயங்க வைக்கும் சக்தி அதற் குண்டு.”
கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcSwFIj7Yby6cU88AiMwcLZbR3sH0dtMQubFqWIOT4NM1Q3NhxsL4wகர்ப்ப காலத்தில் எடை கூடி விடக் கூடாது என்பதற்காக கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகளவில் இருக்கும்  உண வுப் பொருட்களை பெருமள வில் குறைத்து விட்டு புரோ ட்டின்கள் அதிகமிருக்கும் உணவுப் பொருட்களை மட் டும் எடுத்துக்கொள்ளலாமா?
டாக்டர் பதில்:  “இது முற்றிலும் தவறு. கர்ப்ப காலம் என்பது வயிற் றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத் துக்குத் தேவையானசகர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcQ_8H-uJ5iMqm5Dry3Tl0fZ9O7YiiAfhgSUXotrCu0_1bC26Q0_pQத்தான உணவுகளை சாப்பி ட வேண்டிய காலமே தவிர சாப்பாட்டைக் குறைத்து டயட்டில் இருக்கும் காலம் அல்ல.  வயிற்றிலிரு க்கும் குழந்தையின் போஷாக்கி ற்கு கார்போஹைட்ரேட்டு கள் மிகவும் அவசியம். மே லும் நமது உடலின் ரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் மூ ளைச் செல்கள் தங்களது இயங்கு சக்திக்கான சத்துக்க ளுக்கு பெரு மளவில் கார்போஹைட்ரேட்டுகளையே நம்பி இருக் கின்றன.கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcSy4f7VRRj2ALiY1mUHrnYCjkwzk8AOU87KrEjM3wywFa7DlGfsமுற்றிலுமாக கார்போஹைட்ரேட்டுக ளைத் தவிர்த்து விட்டு, நீங் களாக ஒரு டயட் பின்பற்றத் தொடங்கினீர்கள் என் றால் உடலில் மாவுச் சத்து  பற்றாக் குறை ஏற்பட்டு கர்ப்ப கால மல ச்சிக் கல், மார்னிங் சிக்னஸ் போன்ற அவதி களுக்கு உள்ளாவீர்கள். உடல் எடை யை குறைப்பதெல்லாம் குழந்தை பிற ந்த பிறகு பார் த்துக் கொள்ளலாம். கர் ப்ப காலம் குழந்தையின் ஆரோக்கியத் துக்குத் தேவையான அனைத்து உண வுப்பொருட்களையும் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டிய காலம் என்பதை அம்மாக்கள் மற க்கக் கூடாது.’’
கர்ப்ப காலத்தில் ஹெர்பல் டீ, ஹெர்பல் ஹெல்த் டிரிங்குகள் சாப்பிடலாமா?
கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcRvHDHmPV5_feOOG1hz1oKdMC-iPhmRtfldoErwn1kAjY9NnpioAwடாக்டர் பதில் : “ஹெர்பல் ஹெ ல்த் டிரிங்குகள் மற்றும் டீ எது வானாலும் சரி உங்களது உட ல்நிலை ஏற்றுக் கொள்கிறதா? என் பதைப் பொறுத்து நீங்கள் வழக்கமாக செக்-அப் செய்து கொள்ளும் மகப்பேறு மருத்து வரின் ஆலோசனையின் பேரி ல் ஹெர்பல் டிரிங்குகள் எடு த்துக் கொள்ளலாம். சிலருக்கு சில மூலிகைகளால் ஒவ்வா மை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் ஹெர்பல் என்ற வார்த்தை யை மட்டுமே நம்பி மருத்துவரை ஆலோசிக்காமல் எதையும் கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcShnrz1OnrXqwVjA0WoDbyK8AG8EhIP3oQoHY3XjLGDfbSLGW6VIgசெய்யாமலிருப்பது நல்லது.
“கர்ப்பிணிகள் கிரீன் டீ சாப்பி டலாமா?
டாக்டர் பதில்: “கர்ப்ப காலத்தி ல் கிரீன் டீ சாப்பிடலாம். தே னைப் போல இதிலும் ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் அதிகமிருப்ப தால் வயிற்றில் இருக்கும் கரு வின் இதயம் மற்றும் மூளை செல்களின் வளர்ச்சிக்கு நல் லது.”
கர்ப்ப காலத்தில் ஸ்பைசி பிரியாணி, பெப்பர் சிக்கன் போன்ற கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcS6z8pCRy8Il1X_6ZL1j77RqAcfk7HmLWe1Q8E98HxslySkbHUxமசாலா சேர்த்த கார சாரமான உணவுப் பொருட்களை உண்ப து சரியா?
டாக்டர் பதில்:  “கார சாரமான உணவுப் பொருட்களை சாப்பி டக் கூடாது என்று எந்த டாக் டரும் சொல்வதில்லை.  இப்ப டிச் சாப்பிடுவதால் நெஞ்செரி ச்சல். மலச்சிக்கல் போன்ற பிர ச்சினைகள் வராமல் இருப்பின் தாராளமாய் சாப்பிடலாம். இந்த உணவுப் பொருட்களில் வாசனை க்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்க ளான மிளகு, சீரகம்,  சோ கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcQRIYNJrjeZw9e1xDYA2MIcfaHM9x9GBD1cTLyzwKKc42Wna2Tuம்பு போன்ற வாசனைப் பொருட்களில் விட்டமின் சி அதிகளவில் இருப்பதால் ஒரு வகையில் ஆரோக்கியமானதே. ஆனால் அதிக காரமும் எண்ணெயும் அசிடிட்டி ஏற்படுத்தும் என்பதால் கூடு மான அளவிற்கு எண்ணெய் மற்றும் கா ரத்தைக் குறைப்பது உத்தமம்.”
கர்ப்பிணியாய் இருக்கும்போது ஹோட் டலில் வாங்கிய உணவு ஒத்துக்கொள் ளாமல் ஃபுட் பாய்சனிங் ஆகக் கூடும்  என்று உணர்ந்ததும் அந்த உணவைத் தூ க்கி குப்பையில் வீசி விட்டேன், கொஞ் சமாய்தான் சாப்பிட்டேன்  வயிற்றுக் குள் போன அந்த உணவால் வயிற்றிலி ருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வருமா?
கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcQbS-g2u0wYofbW8S4nVIl8Qldspnnjg1jd1C5wWUjyXqbxVj69டாக்டர் பதில்:  “ஃபுட் பாய்ச னிங் வயிற்றிலிருக்கும் குழ ந்தையை விட சாப்பிட்ட உங்களுக்குத்தான் அதிக பா திப்பை ஏற்படுத்தும். தொட ர்ந்த வயிற்றுப் போக்கோ, வாந்தியோ இருந்து உங்கள து உடலில் இருந்து அதிகள வில் நீர் வெளியேறி டி ஹை ட்ரேஷன் ஆக வாய்ப்பிருப் பதால் நிறைய தண்ணீர், பழச்சாறுகள் அருந்து ங்கள், இப்படி யான சூழலில் எதற்கும் உங்களது மகப்பேறு மருத்துவரை அணுகி உட னடியாக ஆலோசனை பெறுவது நல்லது.”
கர்ப்ப காலத்தில் ப்ளட் சுகரில் இன்சுலின் அளவு அல்லது உப்பின்கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcQlxrUs-6oE3TQcFbJc248rb9DlCkUWO67OCGfdsFl3rut3gFPyஅளவு திடீரென்று கூடுவது ஏன் ?
டாக்டர் பதில்:  “சிலருக்கு ஒபி சிட்டி காரணமாக இப்படி நிகழ லாம், சிலருக்கு மரபியல் கார ணங்களால் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு கூடலாம் அல் லது குறையலாம். அப்பாவு க்கோ, தாத்தாவுக்கோ சர்க்க ரைச் சத்தோ, உப்புச்சத்தோ இருந்து அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந் தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. கருவில் இருக்கும் குழந்தைக்குப் பரவும்போதுதான் குறைப் பிரசவம், அல்லது கருப்பையில் குழ ந்கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcQN-7J8qWT-hX1XcFEXAU8cnVCd07Yq_oE7w0PzOlYN9oXi2pA2lgதை இறந்து போதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக ரத்தத்தில் இருக்கும் உப்பின் அள வு அதி கரிக்கும்போது கு றைப்பிரசவம் ஏற் பட வாய்ப்பு உண்டு. அப்படி நிகழ்வதை மருத் துவ மொழியில் இன்ட்ராயூட்டரின் குரோத்ரி டார்டேஷன் என்பார் கள். மேலும் துரதிருஷ்டவசமாக கருவிலேயே உப்பின் அளவு அதி கரிப்பதால் குழந்தை இறந்தே பிறக்கும் நிலையை இன்ட்ரா யூட் டரின் டெத்கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Images?q=tbn:ANd9GcTD2YxpB2xP4c7_6dlq2kZVKOdiAkam3ObS3d2Hd1ItsfzToaKEqgஎன்பார்கள். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளி களில் தொடர்ந்து செக் -அப் செ ல்ல தயங்கக்கூடாது. வயிற்றில் இருக்கும் குழந்தை யின் நலனுக்காக அம்மா எப்போதும் தான் சாப்பிடும் உணவுப் பொ ருட்களின் மீதான விழிப்புணர்வைத் தவி ர்க்காமல் இரு ப்பது குழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Empty Re: கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

Post by Tamil Sun Dec 29, 2013 10:03 pm

கர்ப்ப காலத்தில் தாயின் கர்ப்பப்பை - அதுவும் கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் 32 செ.மீ. நீளமாகவும், 22 செ.மீ. ஆழமாகவும் 24 செ.மீ. அகலமாகவும் பெரியதாகும். பேரிக்காய் வடிவில் 3.5-லிருந்து 5 செ.மீ. அளவே இருக்கக்கூடிய கருப்பை, கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் மேற்சொன்ன பெரிய அளவினை அடைந்துவிடும்.

கர்ப்ப காலத்தில் உடலின் மொத்த இரத்தக் கொள்ளவு முப்பது சதவீதம் அதிகரிக்கம். இருதய இரத்த வெளியேற்றம் கர்ப்ப காலத்தில் அதிகரித்துவிடும். இருதய இரத்த வெளியேற்றம் பன்னிரண்டிலிருந்து பதினாறு வாரத்தில் 5.5 லிட்டர் ஒரு நிமிடத்திற்கு இது கர்ப்பத்தின் மத்திய கட்டத்தில் ஒரு நிமிடத்திற்கு 6 லிட்டராயிருக்கும். 

பின்னர் கடைசி எட்டு வாரங்களில் ஒரு நிமிடத்திற்கு 5-லிருந்து 5  லிட்டரயிருக்கும். இந்த அதிகரித்த இருதய இரத்த வெளியேற்றத்தால் இருதயத் துடிப்பு அதிகரிக்கம். சாதாரணமாக ஒரு நிமிடத்திற்குப் பதினைந்திலிருந்து இருபது நாடித் துடிப்புகள் அதிகமாக இருக்கும். அதேபோல இரத்த அழுத்தமும் கர்ப்ப காலத்தில் சிறிது அதிகமாகி இருக்கும். கர்ப்ப காலத்தில் உடலின் புரதச்சத்து குறைந்து காணப்படவதோடு இரும்புச்சத்தும் இருபத்தி நான்காவது வாரத்திற்குப் பின் குறைந்துவிடும்.

மார்பக மாற்றங்கள்

மார்பகத்தில் கர்ப்ப காலத்தில் நிறைய மாறதல்கள் ஏற்படும். அவை இரண்டாவது மாதமும், ஐந்தாவது மாதமும்தான் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் மார்பகம் பெருத்து மிகவும் உணர்ச்சி மிகுந்ததாகவும் நிலநிற வண்ண மாறுதல் உடையதாகவும் இருக்கும். காம்பு நீண்டும், காம்பைச் சுற்றிய பாகம் மிகவும் கறுப்பாகவும் மாறும். ஆரம்ப கட்ட சில மாதங்களுக்குப் பின்னர் மார்பிலிருந்து உற்பத்தியாகக் கூடிய திரவம் அழுத்தினால் வரக்கூடும். பின்னர், அது மஞ்சள்நிறத் திரவமாக மாறிவிடும். இதைத்தான் ‘சீம்பால்’ என்போம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் Empty Re: கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum