TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மறக்கப்படும் மனிதராக மாறிவரும் பொன்சேகா?

Go down

மறக்கப்படும் மனிதராக மாறிவரும் பொன்சேகா? Empty மறக்கப்படும் மனிதராக மாறிவரும் பொன்சேகா?

Post by ஜனனி Mon Mar 29, 2010 12:32 pm

இது எதிர்பாராத ஒரு விடயம் அல்ல. ஆனால், நிச்சயம் அவர் இதை எதிர்பார்த்தி
ருக்க வாய்ப்பில்லை. அப்படி எதிர்பார்த்திருந்திருப்பாரேயானால் அரசியலில்
அவசர அவசரமாகக் குதிக்கும் முடிவை எடுத்திருக்கமாட்டார்.

கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தடுத்து
வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை
மெல்ல மெல்ல அரசாங்கம் சாகடித்துக் கொண்டிருப்பதாக ஜே.வி.பி.
குற்றம்சாட்டியுள்ளது.

அரசியல் ரீதியாக அவர் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறார் என்பதே உண்மை.
கடந்த வருட இறுதியில் பாதுகாப்புத் தலைமை அதிகாரி என்ற பதவியை உதறித்தள்ளி
விட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்திருந்தார்.

அப்போதே அவர் அரசியல் ரீதியான தற்கொலைக்குத் தயாராகி விட்டார் என்பது தெரிந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் சரி தோற்றால் அவரது எதிர்காலம் பாழாகிவிடும் என்பதை தெளிவாகவே உணரமுடிந்தது.

ஆனால், இராணுவ அதிகாயாக இருக்கும் போது எது நடந்தாலும் அதற்கேற்ப செயற்பட
வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு அமைய அரசியலில் அவர் செயற்படவில்லை.

வெற்றி ஒன்றையிட்டே சிந்தித்தாரே தவிர தோல்வி ஒன்றின் பின்னால் இருக்கக் கூடிய அபா யங்களையிட்டு கணிக்கத் தவறிவிட்டார் போலும்.

அதைவிட அவர் விரும்பியோ விரும்பாமலோ செய்த சில ஏற்பாடுகளும்
சுற்றியிருந்தவர்களின் நடவடிக்கைகளும் சரத் பொன்சேகாவை பெரும்
நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று சினமன் லேக் சைட் விடுதியில் இடம்பெற்ற
நிகழ்வுகளும், அதனை ஒட்டிய சில சம்பவங்களும் தான் சரத் பொன்சேகாவின்
அரசியல் எதிர்காலத்துக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.

இதன் காரணமாகவே அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படும் நிலையை அடைந்துள்ளார்.
அதுமட்டுமன்றி இரண்டு இராணுவ நீதிமன் றங்களின் விசாரணைகளையும் அவர் சந்திக்க வேண்டியுள்ளது.

இராணுவ நீதிமன்ற விசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே இருந்தாலும் அது எப்படித் தொடரப் போகிறது என்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன.

காரணம் இரண்டாவது நீதிமன்றத்துக்கான புதிய நீதிபதிகள் நியமனம் கடந்த பத்து
நாட்களாக இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த விடயத்தை எப்படிக்
கொண்டு செல்வது என்பதைத் தீர்மானிப் பதில் சற்றுத் தயக்கம் காட்டுகிறது.

இது ஒருபுறத்தில் இருக்க, ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுடன்
ஒட்டியிருந்த கட்சிகள் எதுவும் இப்போது அவருக்குத் துணையாக இல்லை என்பது
தான் வேடிக்கை.

உண்ணாவிரதம் இருப்பதாகவும், மதிய உணவை புறக்கணிப்பதாகவும், உணவு கொண்டு
செல்வதற்கு தடை ஏற்படுத்தப் படுவதாகவும் சரத் பொன்சேகா விடயத்தில் ஒரு
பரபரப்பான செய்தியை அவிழ்த்து விடுவதிலேயே ஜே.வி.பி.னர் குறியாக
இருக்கின்றனர்.

காரணம் வெறும் அரசியல் இலாபம் மட்டுமே.

ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன் சேகா போட்டியில் இறங்கியது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவருக்காக பலரும் ஆதரவு தெவித்திருந் தனர்.
ஆனால், இன்று அவருக்காக வீதியில் இறங்க எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர்
என்பதைக் கொழும்பில் நடக்கின்ற அவ ருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில்
பங்கேற்போன் எண்ணிக்கையைக் கொண்டே உறுதி செய்து கொள்ள முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவின் பக்கம் இருந்த தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு முதலில் விலகிக் கொண்டது. பின்னர் ஐ.தே.க,வும் அதனோடு
சேர்ந்த கட் சிகளும் ஒதுங்கிக் கொண்டன. இப்போது சரத் பொன்சேகாவின் பெயரை
வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருப்பது ஜே,வி,பி, மட்டும் தான்.
ஜே,வி,பி,யைப் பொறுத்தவரையில் பெரிதும் பலவீனமானதொரு கட்டத்தில்
இருக்கிறது.

ஐ,தே,க,வுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற அதன் கனவு தகர்ந்து போனபோது சரத்
பொன்சேகா என்ற புளியங்கொம்பைப் பிடிப்பதை விட அதற்கு வேறு தெரிவே
இருக்கவில்லை. அதனால் பொதுத்தேர்தல் வரைக்கும் சரத் பொன்சேகாவை
முன்வைத்துப் போராட்டங்களை நடத்தும்.

அதற்குப் பிறகும் ஜே,வி,பி, சரத் பொன்சேகாவுக்காக எந்தளவுக்குப்
போராட்டங்களை நடத்தும் என்பது சந்தேகமே. சரத் பொன்சேகா விடயத்தில் அவருடன்
ஒட்டிக் கொள்ள முனையும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துகிறது அரசாங்கம்.

இதனால் அனைத்து அரசியல் சக்திகளுமே வில்லங்கத்தை எதற்கு விலை கொடுத்து
வாங்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொள் ளவே விரும்புகின்றன. இது சரத்
பொன்சேகாவின் நிலையைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விட் டது.

சரத் பொன்சேகாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்க அரசாங்கம் தயாராக இல்லை.
அதேவேளை அவரை சட்டப்படியாக வெளியே கொண்டு வருவதும் இலகுவான காரியமாக
இருக்கப் போவதில்லை.

இந்தக் கட்டத்தில் அவருக்காகக் குரல் கொடுத்து வந்த அரசியல் வட்டம்
சுருங்கிப் போய்க் கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் அவர் யாருமே
துணைக்கில்லாத ஒருவராக மாறிவிடக் கூடும்.

வரலாற்றில் புலிகளை அழித்த தளபதி என்ற பெயருடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்கிறது.

அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ சேவைப் பதக்கங்களைப் பறிக்கின்ற திட்டம் கூட அரசாங்கத்திடம் இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

இப்போதெல்லாம் அவர் பற்றிய செய்திகள் குறைவடையத் தொடங்கியுள்ளன.
வெளியாகும் செய்திகளின் மீதான மக்களின் ஆர்வம் குன்றத் தொடங்கி விட்டது.

சரத் பொன்சேகா விவகாரம் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருவதையே இது உணர்த்து கிறது.
சரத் பொன்சேகாவின் நிலையை அறியும் ஆர்வம் மக்களிடத்தில் மறையத்
தொடங்கியிருப்பதால் ஊடகங்களும் அவரைப் பற்றிய செய்திகளை குறைத்துக்
கொள்ளத் தொடங்கி விட்டன.

இது அரசாங்கத்துக்கு இன்னம் வாய்ப்பாகவே அமையப் போகிறது. இந்த நிலை
நீடிக்குமானால் வெகு விரைவிலேயே சரத் பொன்சேகா யார் என்ற கேள்வி
எழுப்பப்பட்டாலும் ஆச்சயப்பட முடியாது.

இந்த நிலைக்குக் காரணம் அவரைத் தவிர வேறெவராகவும் இருக்க முடியாது.
அரசியல் ஆசை அவரை படுகுழிக்குள் கொண்டு போய்த் தள்ளிவிட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அரசியல் நடத்துவதோ அல்லது நடத்த முனைவதோ
தவறென்று கூறவரவில்லை. ஆனால், அவர் அரசியல் நடத்துவதற்குத் தெவு செய்த
பாதைகளும் அதற்கான வழி முறைகளும் ஒரு இராணுவ அதிகாரி என்ற தோரணையில்
இருந்ததே தவிர அரசியல்வாதி என்ற வகையில் அமைந்திருக்கவில்லை.

ஒரு தேர்ச்சிமிக்க அரசியல்வாதி சொல்லக் கூடாததை அவர் சொல்லத் தொடங்கியதும்
செய்யக் கூடாததை அவர் செய்யத் தொடங்கியதும் தான் அவரது இந்த
வீழ்ச்சிக்குக் காரணம்.

இந்தத் தவறுகள் தான் அவரை வரலாற்றின் பக்கங்களில் கைவிடப்பட்ட ஒருவராக மாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum