TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திமுக கடந்து வந்த பாதையும் தொலையப் போகும் அதன் எதிர்காலமும்

Go down

திமுக கடந்து வந்த பாதையும் தொலையப் போகும் அதன் எதிர்காலமும் Empty திமுக கடந்து வந்த பாதையும் தொலையப் போகும் அதன் எதிர்காலமும்

Post by அருள் Sun Aug 26, 2012 12:14 pm

திமுக கடந்து வந்த பாதையும் தொலையப் போகும் அதன் எதிர்காலமும்

திமுக கடந்து வந்த பாதையும் தொலையப் போகும் அதன் எதிர்காலமும் 549614_347932795292546_928548218_n
திமுக கடந்து வந்த பாதையும் தொலையப் போகும் அதன் எதிர்காலமும்

கடந்த 15 வருடங்களாக இந்திய ஆட்சி மன்றத்தில் ஆளும் அரசு மாறினாலும்
தமிழகத்தின் சார்பில் தி.மு.க கட்சியின் இருப்பு முக்கிய பதவிகளில்
இருந்து கொண்டு தான் வந்துள்ளது. 1999 -ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில்
முரசொலி மாறனுக்கு மிக முக்கிய பதவியான "வர்த்தகம் மற்றும் தொழில்"
முதற்கொண்டு அடுத்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி மாறி 2004 -இல் அன்றைய
நிலையில் வளர்ச்சி அடையும் துறையான "தகவல் தொடர்பு மற்றும்
தொழில்நுட்பம்", "கப்பல், தரைவழிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்" ,
2009 -இல் தனது மகனுக்கு உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் துறைகள் வரை
இந்தியாவின் மற்ற கூட்டணி கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி , ஆளும் அரசையும்
மீறி பெற்றது கருணாநிதியின் இத்தனை வருட அரசியல் முதிர்ச்சி,
சாணக்கியத்தனம், தந்திரம் என்றால் அது மிகையாகாது.

எம்.ஜி.ஆர்
இருந்தவரை அரசியலில் ஓரம்கட்டப்பட்ட கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை அவர்
மறைவுக்கு பிறகு தமிழகத்தில் வலுவான அரசியல் தலைவர்கள் இல்லாததால் மீண்டும்
புத்துயிர் பெற்றது, அவ்வாறாக தமிழகத்தின் அடிப்படை பிரச்னைகளையும்,தமிழ்
மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வலுவான தலைவர்கள் உருவாகாதவாறு
தனக்கு எதிராக ஜெயலலிதாவை முன்னிருத்தியே குடும்ப அரசியல் செய்கிறார்
என்று பலரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை.

1999 -பொது தேர்தல்:
1999 -இல் ஜெயலலிதாவின் மத்திய அரசை ஓராண்டிலேயே கவிழ்ப்பு,தன்னிச்சையான
செயல்கள் போன்ற ஆணவ போக்கினால் அந்த கூட்டணியில் இருந்து விலகி வந்த
பா.ஜ.க,பா.ம.க, ம.தி.மு.க மற்றும் தமிழகத்தின் பிராந்திய கட்சிகளுடன்
பலமான கூட்டணி போன்றவை மற்றும் தமிழகத்தின் வலுவான தலைவர்கள் இல்லாத குறை
கருணாநிதிக்கு சாதகமா அமைகிறது.

அமைச்சர்கள்:
முரசொலி மாறன் - வர்த்தகம் மற்றும் தொழில்
டி. ஆர். பாலு - சுற்றுப்புறசூழல் மற்றும் வனங்கள்
இணை அமைச்சர்கள்: ஆ. ராசா - கிராமப்புற வளர்ச்சி

2004 -பொது தேர்தல்:
2004 - ஆம் ஆண்டு பொது தேர்தல், மறுபடியும் இங்கே ஜெயலலிதா கருணாநிதியின்
நன்றிக்கு உரியவர் ஆகிறார்.அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை, மதமாற்ற
தடை சட்டம், இலவசங்கள் ரத்து, பொடா சட்டம், கிராமங்களில் மக்களின் இந்து
மதத்தில் பார்ப்பனியத்தை தந்திரமாக உள்நுழைத்து ஆடு, கிடா வெட்ட தடை
போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தமிழகத்து மக்கள் மத்தியில் ஜெயலலிதாவிற்கு
எதிராக மாபெரும் அதிருப்தியை உண்டாக்கியது. இதன் விளைவாக மறுபடியும்
ம.தி.மு.க, பா.ம.க , கம்யூனிஸ்ட்கள், காங்கிரேசுடன் கூட்டு போன்றவை
கருணாநிதிக்கு சாதகமாக அமைகிறது.

அமைச்சர்கள்:
டி. ஆர். பாலு - கப்பல், தரைவழிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
தயாநிதி மாறன் - தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்
ஆ. ராசா - சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனங்கள் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்

இணை அமைச்சர்கள்:
எஸ். எஸ். பழனிமாணிக்கம் - நிதி
எஸ். ரகுபதி - சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனங்கள்
கே. வெங்கடபதி - நீதி மற்றும் சட்டம்
சுப்புலட்சுமி ஜகதீசன் - சமூக நீதி.

2009 -பொது தேர்தல்
தி.மு.க என்ற திராவிட கட்சியின் தமிழ் மக்களுக்கு எதிரான நயவஞ்சக, சுயநல
போக்கை தமிழ் ஆர்வளர்கள், படித்த தமிழ் இளைஞர்கள், கிராமப்புற தமிழ்
மக்களிடையேயும் அப்பட்டமாக தோலுறுத்தி காட்டிய ஆண்டு, கடந்த 50
ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் விரும்பி அணிந்த திராவிட போர்வையை
அச்சத்துடன் பார்க்க வேண்டிய நிலை, பெரியார் , அண்ணா போன்ற தலைவர்கள் வழி
வந்த திராவிட முன்னேற்ற கழகம் கருணாநிதி அவர்களால் மொத்தமாக குழி தோண்டி
புதைத்த ஆண்டு என்று வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஆண்டு.

10
ஆண்டுகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் போன்ற கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி
வைத்து மத்திய அரசில் முக்கிய பதவிகளில் அங்கம் வகித்து ஊழலின் போதையில்
ஊறிய தி.மு.க கட்சி, போதையில் அடுத்து தொடர்ந்து பதவி பிடிக்கும் ஆசையில்
சொந்த மக்களயும் , நம்பிய மக்களையுமே காவு கொடுக்க துணிந்த தேர்தல்-2009
என்றே சொல்ல வேண்டும். 2G போன்ற மிதமிஞ்சிய ஊழலின் பணத்தை கொண்டு அதுவரை
மக்களின் எண்ணிக்கை குறைவு என்ற அளவில் சட்டமன்ற தேர்தலில் மட்டுமே
புழங்கிய "ஓட்டுக்கு பணம்" என்ற முறையை,மிகப்பெரிய தொகுதிகுக்கு 10
இலட்சம் வாக்காளர்கள் என்று இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே ஒரு
ஓட்டுக்கு 100 ,200 ரூபாய் என்று இந்தியாவிற்கே புது ஜனநாயகத்தை
அறிமுகபடுதியவர் கருணாநிதி அவர்கள்.

காங்கிரஸ் சோனியாவுடன்
இணைந்து கொண்டு, அதுவரை தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல் கொடுத்து கொண்டு
வந்த பல தமிழ் அமைப்புகளையும் சேர்த்து கொண்டு , கூடவே மிதமிஞ்சிய ஊழலின்
பணத்தை கொண்டும் தேர்தலை சந்தித்து தனது கோர, நயவஞ்சக முகத்தை அப்படமாக
வெளிகாட்டினார் கருணாநிதி அவர்கள்.

2011 - சட்டமன்ற தேர்தல்:

எம்மக்கள் கருவறுக்க தொடங்கிய காலம் .மிகப்பெரிய பண பலம், மீடியா பலம்
என்று வந்தும் தமிழ் மக்கள் முற்றாக ஒதுக்கி மூலையில் வைத்தார்கள்,
கருணாநிதியின் மீது கொண்ட கோபத்தால் நேற்று வந்த நடிகர்களின் கட்சியை
ஆதரித்த தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட
கொடுக்க மனம் ஒப்பவில்லை, 1999 - பாரதிய ஜனதா கூட்டணி, 2004 காங்கிரஸ்
கூட்டணி என்று தன்னுடன் இருந்த ம.தி.மு.க, பா.ம.க , கம்யூனிஸ்ட்கள் போன்ற
கட்சிகளும் கருணாநிதியை இன்று ஒதுக்கி வைத்துள்ள நிலையில் , காங்கிரஸ்
என்ற கட்சியே செல்லா காசாகி போன தி.மு.க வை இன்று எட்ட தூரத்தில்
வைத்திருக்கும் நிலை, தமிழகத்தில் ஓட்டுவன்கியே இல்லாத பா.ஜனதா கட்சியும்
தனித்து நின்று தோல்வியுற்றாலும் கூட பராவில்லை,தேர்தல் முடிந்து வெற்றி
பெரும் கட்சியுடன் சேரலாம் ஆனால் தி.மு.க மட்டும் கூட்டணி வேண்டாம்
என்ற நிலை.

ஆடிய காலும் , பாடிய வாயும் சும்மா இருக்குமா, மத்திய
அரசில் தனது இப்படிப்பட்ட இருப்பை ருசி கொண்ட தி.மு.க விடுமா ? இழந்த
செல்வாக்கை ஓரளவாது மீட்டு வெளிவர துடிக்கிறது இன்றைய தி.முக. நேற்று வந்த
விஜயகாந்த் , ராமதாஸ் போன்றவர்கள் தமிழக பிரச்சனைகளான மது ஒழிப்பு,
மின்சாரம் பிரச்னை, விலை வாசி உயர்வு என்று குரல் கொடுத்து வரும் நிலையில்
தி.மு.க என்ற கட்சி ஊழலில் சிறைக்கு செல்லும் கட்சியினரை காப்பாற்ற சிறை
நிரப்பும் போராட்டம், ஈழ மக்களுக்கு புரிந்த துரோகங்கள் எம் தோழர்கள்
தோலுரித்து காட்டியதின் விளைவு, மீண்டும் டெசோ , இணையத்தில் தமிழ்
ஆர்வலர்கள் தி.முக வையே முடக்கும் நிலை அதன் தலைவரை இணையத்தை நோக்கி
அலறியடித்து வர செய்துள்ளது. எம் தோழர்கள் முகநூலில் (பேஸ் புக் )
துரத்துகிறார்கள் , ட்விட்டருக்கு ஓடினார், அங்கேயும் எம் தோழர்கள்
துரத்துவார்கள், உங்கள் வசனத்தின் படி வாழ்க்கையின் ஓரத்திற்கே உங்களை
துரத்தாமல் எம் தோழர்கள் விட போவதில்லை.

நன்றி : சுப்பு மணி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு: கடந்து வந்த சட்டப்போராட்டங்கள்..!
» டீக்கடையில் இருந்து பிரதமர் நாற்காலி வரை: மோடி கடந்து வந்த பாதை..
» 2012 இல் திமுக காணாமல் போகும்?
» திருச்சியைச் சேர்ந்த பார்வை இழந்த இளைஞர் கண்ணப்பன், டூ-வீலர் மெக்கானிக் தொழில் செய்து பலரையும் வியக்கவைக்கிறார். நமக்குத் தன்னம்பிக்கைப் பாடமாகும் அவரது கடந்து வந்த பாதை
» A9 பாதையும் அதை சார்ந்த நினைவுப்பதிவுகளும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum