TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆடை பாதி,ஆபாசம் பாதி.

2 posters

Go down

ஆடை பாதி,ஆபாசம் பாதி.  Empty ஆடை பாதி,ஆபாசம் பாதி.

Post by sakthy Sat Aug 18, 2012 3:54 pm

ஆடை பாதி,ஆபாசம் பாதி.

இன்று ஆடைக் கலாச்சாரம் உலகைப் படாது படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்,தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளில் பல கேள்விகளையும் வாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வந்த திருமண முறிவு வழக்கில்,இந்த ஆடையும் சேர்ந்து கொண்டது. எனக்கு இஸ்டமான ஆடைகளை உடுத்த என் கணவர் தடையாக இருக்கிறார் என்று பெண் குற்றம் சாட்ட, கணவனோ நான் தடை விதிக்கவில்லை, கோயிலுக்கும் திருமண வைபவங்களிலும் சேலை உடுத்தி வரும்படியே கூறியதாகவும் சொல்ல இந்த சிறிய காரணமா விவாகரத்து வரை சென்றுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வாயில் கையை வைக்க, மணப் பொருத்தம் பார்த்தோம்,மனப் பொருத்தத்தை மறந்து விட்டோமே என பெற்றோர்கள் ஏங்க சந்திக்கு வந்து விட்டது வழக்கு.

நடுத்தர பாடகி ஒருவர் தமிழ் கலாச்சாரம் பற்றி பேச சுடிதாருடன் வர,எதிரணியினர் கேலியாக குத்திக் காட்ட அன்று முதல் சுடிதாரை தூக்கிப் போட்டு விட்டு சேலையில் பேச்சு அரங்கத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறார் அவர்.இப்படி ஆடை படுத்துகிறது பாடு.

தமிழ் நாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய அமெரிக்கப் பெண் ஒருவர்,தமிழ்நாடா என்று கேட்க,அதற்கு நான் ஆமா போட,அங்கும் ஆடைப் பிரச்சைனை தலையை நுழைத்து விடுகிறது. சென்னை சுட்டெரிக்கிறது என்றாலும்,அந்த கொடும் வெய்யிலில் இளம் பெண்கள் நம்மைப் போல் ஆண்கள் அணியும் உடைகளில் அதுவும் இறுக்கமான உடைகளுடன் செல்ல, நான் உற்றுப் பார்த்து ஆச்சரியப்பட, என்று அந்த அமெரிக்கப் பெண் ஆடை கலாச்சாரத்திற்கு நீண்ட விளக்கம் கொடுத்தார்.
இப்படி இருக்கும் நிலையில் எப்படி பெண்களால் இந்தக் கொடும் வெய்யிலில் ஆண்களைப் போல் ஆடை அணிய முடிகிறது ஒரு கேள்வியை வைக்கிறார் அந்த அம்மையார்.

நான் வாழும் நாட்டில் இப்போது கோடை காலம்.இந்த நாட்களில் பெண்களில் ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் கோடைகால உடைகளுக்கு மாறி விட்டார்கள். பட்டாம் பூச்சிகள் போல் குட்டைப் பாவாடை, ஒரு முறை திரும்பிப் பார்க்க வைக்கிறது. இன்னமும் மூன்று மாதங்களில் அந்த சுதந்திரம் அவர்களிடமிருந்து விடை பெற, ஆடைக்கு மேல் ஆடையாக அடுக்கி குளிரிலிருந்து தப்ப வெப்பமூட்டும் சாதனங்களை சரணடைவார்கள்.
ஆக உடைகள் காலம்,இடம்,சூழலுக்கு ஏற்பவே மாறுபடும் போது....
கண்ணை மூடிக் கொண்டு மேற்கத்தைய நாகரீகத்தை பின் பற்றும் நாம் ஒரு முறையாவது காரணம் தெரிந்து பின்பற்றக் கூடாதா என்ற கேள்வியை வைத்து விட்டு..............

இந்த ஆடைப் பழக்கம் எப்போது ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு வருவோமானால், பல ஆயிரம் வருடங்கள் பின் நோக்கி செல்ல வேண்டி உள்ளது.
1988 ல் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் படி 30.000 ஆண்டுகளுக்கு முன் அன்றைய மக்கள் எலும்புகளை ஊசிகளால் சேர்த்து ஆடைகளை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. ( Archeologists have identified very early sewing needles of bone and ivory from about 30,000 BCE, found near Kostenki,Russia in 1988 , Dyed flax fibers that could have been used in clothing have been found in a prehistoric cave in the Georgia that date back to 36,000). 170,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் Kevin Johnson. (an evolutionary biologist with the Illinois Natural History Survey)
இந்த ஆடைகளின் தொடக்கம்,அது ஏன் ஏற்பட்டது என்ற ஆரய்ச்சியில் பயன் படுத்தப்பட்ட ஒரு ஜீவன் யார் தெரியுமா? தலையில் பலரை தொந்தரவுக்கு உள்ளாக்கும் பேன் தான்.(Study Uses Lice DNA) ஏன்?
ஆதி மனிதனுக்கு உடல் முழுவதும் அடர்த்தியாக உரோமம் இருந்ததென்றும்,பின்னர் படிப்படியாக அவை குறைந்து வந்து இன்றைய நிலைக்கு வந்ததென்றும் சொல்கிறார்கள்.அதன் காரணமாக மனிதனின் உடலில் இருந்தும் தலையில் இருந்து கொண்டும் போராட்டம் நடத்திய அந்த ஜீவன்களை வைத்து ஆய்வை தொடங்கினார்கள்.

இன்று இந்த ஆடைகள் ஒருவரை இலகுவாக அடையாளம் காட்டுவதற்கும்,(காவல்துறை, மருத்துவத்துறை போன்றவற்றில் பாவிக்கப்படும் சீருடைகள்,) அழகாக இருப்பதற்கு, உடலின் சில பகுதிகளை மறைப்பதற்கு, குளிர் மழை போன்றவற்றில் இருந்து காப்பதற்கு,யுத்தம்,ஆய்வுகள் போன்றவற்றுக்கும் என வேறுபடுகிறது. ஆரம்ப காலத்தில் குளிரில் இருந்து பாதுகாக்கவே உருவானது என, protect against cold weather, said study leader Mark Stoneking of the Max Planck Institute for Evolutionary Anthropology in Leipzig, Germany. சொல்கிறார்.

ஆனாலும் எப்படி மனிதன் ஆடையின் அவசியத்தை கண்டறிந்தான்? அவன் உடலில் காயம் குருதி ஏற்பட்டது. அதை மறைக்க,பாதுகாக்க கையால் மூடுகிறான். மழை வருகிறது,குளிர் வாட்டுகிறது,கைகளால் தன் உடலை சுற்றி வளைத்து மூடுகிறான்.இது நன்றாக இருப்பதை கண்ட அவனுக்கு இலை போன்றவை உதவுகிறது. இப்படி அவன் தன்னைப் பாதுகாக்க ஆரம்பித்த மனிதன் நாளடைவில் பாவிக்கப்பட்ட பொருட்களை பண்படுத்தி மாற்றிக் கொள்கிறான். ஆக அந்த மனிதனுக்கு, உடலின் சில பகுதிகளை மறைக்க வேண்டும் என்றோ,அது மானம் சம்பந்தப்பட்டது என்றோ தெரிந்திருக்க வில்லை. தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்த அவன், தன் உடலில் அந்த பாதுகாப்பு உடை இல்லை என்ற போது,தான் எந்த இடங்களை உடைகளால் பாதுகாக்க மறைத்தானோ அந்த இடங்களை தன் கைகளால் மூடிக் கொள்கிறான். அந்த இடங்களில் பாதுகாப்பு பொருள் இல்லை என்றதும்,கூனிக் குறுகினான்,வெட்கப்பட ஆரம்பித்தான்.ஒருவனின் உடலில் உடை,இன்னொருவனின் உடலில் உடை இல்லை என்ற உணர்வு, அதுவே அவனுக்கு மானம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. எனவே தான் ஆடையின் ஆரம்பம், நாகரீகத்தின் வளர்ச்சியோ அல்லது மானம் சம்பந்தப்பட்டதோ அல்ல,பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மனிதனின் சிந்தனை வளர வளர,அவன் பாதுகாப்புக்காக ஏற்படுத்திய ஆடைகளை சூழல்,சூழ்நிலை,வாழ்ந்த இடம்,காலம் இவற்றிற்கு ஏற்ப வடிவமைக்க ஆரம்பிக்கத் தொடங்கும் போது அது நாகரீக வளர்ச்சியாக புதிய ஆடைக் கலாச்சாரமாக மாறியது.குளிர்,வெப்பம்,பருவகாலம் போன்றவற்றிற்கு ஏற்ப மனிதனின் உடை வடிவமைப்பும் மாறத் தொடங்கியது.

தமிழர் நாகரீகத்தில் பல வேற்பட்ட ஆடைகள் பாவனையில் இருந்தன.(Jacket-வடகம்,Petticoat – பாவாடை,surithar,Salwar Kamees –தழை,midi –வட்டுடை,mini -சிதர்,gown –கொய்யகம்,nighty –இரவணி,wedding Dress -கூறை,pant -கச்சம்,Baniyan –குப்பாயம்,tie -கிழி,shirt -மெய்ப்பை,swimming dress –புட்டகம் இப்படிப் பல. இப்படி தொடங்கிய உடை அமைப்பு உலகெங்கும்,அங்குள்ள சூழல்,சூழ்நிலை,கால அமைப்புக்கு ஏற்ப மாறுபடவும் ஆரம்பித்தது.
அராபிய-இஸ்லாமிய நாடுகளில் இந்த உடை மாற்றம் மதத்திலும் பெரும் பங்காற்றத் தொடங்கியது. திருக்குரான், பெண்களின் மட்டுமல்ல ஆண்களின் ஆடை முறையையும் எடுத்துக் கூறியது. இதை நான் சமீபத்தில் குரானைப் படித்த போது கண்டு கொண்டேன்( 33.59, 24.31 ).hajaba – jibaab -hijab இவற்றில் இருந்து இஸ்லாமிய உடைக் கலாச்சாரம் தொடங்கியது. இது வெவ்வேறு வடிவங்களில், Abaya, Amira , ,boshya (niqab,yashmak ) ,burga , chador , djellaba ,ghutra என சில மாறுபாடுகளுடன் வடிவம் பெற்றது. ஆனாலும் இஸ்லாத்தை தழுவிய பலர் மேற்கத்திய நாடுகளுக்கு குடி பெயர ஆரம்பித்த போது சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. சில மேற்கத்திய நாடுகள் பொது இடங்களில் பயன்படுத்த தடையை கொண்டு வந்ததும், அவர்களே அந்த உடைகளில் இருந்து மேற்கத்தைய உடைகளுக்கு மாறியதையும் காண முடிகிறது.
இதே சமயம் கணவர்களாலும் உறவினர்களாலும், இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணியத் தவறிய முஸ்லிம் பெண்கள் ஆசிட் முகங்களில் வீசப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் சிலரை சிந்திக்க வைக்கிறது.ஜீன்ஸ் அணிவோரும் துப்பட்டா அணியாதவர்களும் ஆசிட் திராவக வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்று சமீபத்தில் வந்த செய்தியும், குரானில் சொல்லப்பட்ட விதிகளை மீறும் செயலாகவே உள்ளது.(வெளியார் இருக்கும் சம்யங்களில் தலையில் இருக்கும் துணியால் மார்பகங்களை மூடிக் கொள்ளும்படி கூறுகிறது குரான் ..33.59 )

தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் இந்த உடைகள் இங்கு ஏற்புடையதா என்ற கேள்விக்கு,ஒரு இஸ்லாமிய நண்பர், சுடிதார் போன்ற ஆபாசத்தை தூண்டாத உடைகள் குரானில் சொல்லப்பட்டதற்கு எதிரானது அல்ல என்ற கருத்தை தந்தார்.அதே சமயம் இஸ்லாம் தோன்று முன்னரே இப்படியான உடைகள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன.அராபிய மண் புயலும் கொடும் வெய்யிலில் இருந்து காக்கவும் இந்த மாதிரியான உடைகள் தேவைப்பட்டன,என்று விடை தருகிறார். ஆனால் தமிழ் நாட்டில்?

உடைகள் ஆபாசமாக,காமத்தை தூண்டும் வகையில் இல்லாமல் இருந்தால் சுடிதார் என்ன சேலை என்ன அவரவர் விருப்பம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? பாதுகாப்பிற்காக உருவான உடை அன்று ஆபாசமாக இருக்கவில்லை,காமத்தை தூண்டுவதாக இருக்கவில்லை.இன்றோ திசை மாறி செல்கிறது. சுய நலத்திற்காக எதையும் செய்ய இன்றைய நடிகர், நடிகைகள், மாடல்கள்,சில பெண்கள் துணிந்து விட்ட போது,அது ஆபாசமாக,காமமாக உருவெடுக்கும் போது, நாட்டில் பாலியல் பலாத்காரம், கடத்தல், கொலை, வன்முறைகள் தலைதூக்கி தனி மனிதன் முதல் சமூகம் நாடு என விரிவடைந்து சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கிறது.

ஆபாச உடைகள் அதனால் தூண்டப்படும் காம வன்முறைகளுக்கு யார் காரணம்? ஆபாசமாக உடை அணியும் நவநாகரீக பெண்களின் மீது மட்டும் குற்றம் சுமத்தி விட்டு நாம் நல்லவர்களாக காட்டிக் கொள்வது சரியானதா? ஆபாச உடைகள்,அதனால் தூண்டப்படும் காம எண்ணங்களுக்கும்,வன் முறைகளுக்கும் நம் மனமே பெரிய அளவில் காரணமாகி விடுகிறது.

பள்ளிகளில் ஓவியம் வரைய பழகுவோம்.மத்தியில் ஒரு பொருள்,அதை சுற்றி மாணவர்கள். படம் வரைவார்கள்.அவர்கள் எந்த இடத்தில் இருந்து வரைகிறார்களோ அதற்கு ஏற்ப வரையப்படும் ஓவியம் அமையும். முன்னால் இருப்பவரின் ஓவியமும்,பின்னால் இருப்பவரின் ஓவியமும் ஒன்றாக இருப்பதில்லை. அவர்கள் பார்வையைப் பொறுத்து இவை மாற்படுகிறது. தடகளப் போட்டியில் ஓடும் ஒரு பெண் அணியும் உடை,குட்டைப் பாவாடையுடன் டென்னிஸ் விளையாடும் ஒரு பெண், அவர்கள் அணியும் உடை நமக்கு ஆபாசமாக தெரிவதில்லை. மாடலாக ஓவியம் வரைவதற்கு நிர்வாணமாக உட்கர்ர்ந்திருக்கும் அழகிய பெண்ணைப் பார்க்கும் அந்த ஓவியனுக்கு அவள் ஆபாசமாக தெரிவதில்லை. பெண் மருத்துவர் இல்லாத போது நோய்வாய்ப்பட்டு வந்திருக்கும் ஒரு பெண்ணின் மார்பகங்களை பரிசோதிக்கும் ஆண் மருத்துவருக்கு அங்கே அவள் ஆபாசமாக அல்லது காமத்தை தூண்டுவதாக தெரிவதில்லை.(இன்று ஒரு சில மருத்துவர்களின் கீழ்த்தரமான செயல்களை வைத்து எல்லோரையும் எடை போட முடியாது)

ஆனால் சினிமாவில், தொலைக்காட்சிகளில்,இணையத் தளங்களில் அரை குறை ஆடைகளுடன் வரும் நடிகைகளும், மாடல்களும்,பெண்களும், கிரிக்கெட்டில் சாமரை வீசும் குட்டைப் பாவாடைகளும் ஆபாசமாக,காமத்தை தூண்டுவதாக தெரிகிறது.அந்த சாமரை வீசும் குட்டைப் பாவாடைகளுக்காக கிரிக்கெட்டிற்கு பணம் கொடுத்து செல்லும் சிறிசுகளும் பெரிசுகளும் இருக்கத் தான் செய்கிறார்கள். வயல்காட்டில் மேலாடை இன்றி வேலை பார்க்கும், சேலையால் மூடிக் கொள்ளும் கிராமத்து விவசாயப் பெண்ணின் உடை காமத்தை தூண்டும் உடையாக இருப்பதும் இல்லை,கோயில் நிர்வாண சிலைகள் ஆபாசமாக தெரிவதும் இல்லை. ஆனால் தொலைக்காட்சியில் சினிமாவில் அரைத்துண்டுடன் வரும் நடிகை ஆபாசமாக தெரிகிறாள். உணர்வுகளை தூண்டி வேறு திசைக்கு கொண்டும் செல்கிறாள். ஆக ஆபாசம் என்பது இடம்,காலம்,மனத்தைப் பொறுத்தே நம் கண்களுக்கு வேறுபட்டு அமைகிறது. எனவே இடம்,காலத்திற்கு ஏற்ப உடைகள் அமைவதும்,எந்த சமயத்திலும் மற்றவர்களைக் காயப்படுத்தாத வகையில், சமூகக் குற்றங்களுக்கு தூண்டுதலாக இல்லாதிருப்பதுமே அவசியம்.சுடிதார் என்னடா,சேலை என்னடா கண்ணில் தானடா காமம்.

பெண் உடலளவில் வலிமை குன்றி இருந்தாலும், மனவலிமையில் ஆண்களை விட உயர்ந்தே இருக்கிறாள். இருப்பினும்,பெண்மைக்கும்,மென்மைக்கும்,தாய்மைக்கும் மதிப்பளிக்கும் நாம் பெண்களை அடிமைகளாக போதைப் பொருளாகவே அன்று முதல் இன்று வரை பார்த்து வருகிறோம்.இதற்கு பெண்களும் ஒரு வகையில் துணை போய் விடுகிறார்கள்.அது ஏன்? தவறான வழியில் கொண்டு செல்லப்படும் பெண் விடுதலையா? அந்த அடிமைத் தனத்தில் இனிமை காணும் பெண்களா? ஒன்றும் புரியவில்லை பராபரனே.

பெண்களே! மனவலிமை பெற்ற நீங்கள், தமிழ் நாட்டின் சாக்கடை சினிமாவிலும், முகநூல் போன்ற சமூகத் தளத்திலும்,சாமியார்களிடமும் வாழ்க்கையை தொலைத்து விடாது படியுங்கள்,படியுங்கள், படியுங்கள்....இது ஐயா நெல்லை மணீயன் சொன்னது.

சக்தி.

























avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஆடை பாதி,ஆபாசம் பாதி.  Empty Re: ஆடை பாதி,ஆபாசம் பாதி.

Post by ஜனனி Sat Aug 18, 2012 3:57 pm

பெண்களே! மனவலிமை பெற்ற நீங்கள், தமிழ் நாட்டின் சாக்கடை சினிமாவிலும்,
முகநூல் போன்ற சமூகத் தளத்திலும்,சாமியார்களிடமும் வாழ்க்கையை தொலைத்து
விடாது படியுங்கள்,படியுங்கள், படியுங்கள்....இது ஐயா நெல்லை மணீயன்
சொன்னது. ஆடை பாதி,ஆபாசம் பாதி.  917304 ஆடை பாதி,ஆபாசம் பாதி.  917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ராகுல் காந்தி கூட தான் பாதி இந்தியர், பாதி இத்தாலியர் : கத்ரீனா கைப்
» இளமை பாதி முதுமை பாதி கலந்த வந்த பிரபலங்கள் - வித்தியாசமான புகைப்படங்கள்
» மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான்!
» 'பெண் பாதி - பாம்பு பாதி'யாக தோற்றமளிக்கும் விசித்திர சிறுமி: பார்ப்பதற்கு அலைமோதும் மக்கள் வெள்ளம்(VIDEO)
» செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல... ரசித்து அனுபவியுங்கள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum