TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"

Go down

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" Empty "இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"

Post by அருள் Thu Jun 14, 2012 7:03 am

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" 581042_250956598341593_1609699462_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" Empty Re: "இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"

Post by அருள் Thu Jun 14, 2012 7:04 am

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" 318048_250952315008688_1237640998_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" Empty Re: "இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"

Post by அருள் Thu Jun 14, 2012 7:05 am

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" 556587_250952458342007_146282207_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" Empty Re: "இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"

Post by அருள் Thu Jun 14, 2012 7:10 am

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" 525957_250951525008767_526424981_n"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"
1928 ஜூன்
14 , ரொசாரியோ, சாண்டா பே பிராந்தியம், அர்ஜென்டினா – எர்னஸ்டோ குவேரா
லின்ச் மற்றும் செலியா தெல செர்னா என்ற உயர் நடுத்தர குடும்பத்தை சார்ந்த
தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தது… தங்கள் இருவர் பெயரையும் இனைத்து
எர்னஸ்டோ குவேரா தெல செர்னா என பெயரிட்ட பெற்றோர், தன் மகனை சிறந்த
மருத்துவனாக்க முடிவு செய்து அப்படியே செய்தனர்.

ஆனால் வரலாறு அவனுக்கு வேறொரு பெயருடன் வேறொரு வேலையை தீர்மானித்து வைத்திருந்தது.

“சே” – உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்…. உலகை விட்டு சென்று 45
ஆண்டுகள் ஆகிறது. இன்றும் இவன் படத்தை கண்டு ஒடுக்குமுறையாளர்களும்,
சுரண்டல்வாதிகளும், பெரு முதலாளிகளும் நடுங்கத்தான் செய்கின்றனர்.

விடுதலைக்கான முழக்கம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் இவனும் இருப்பான், என்றும்
சே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசியது :

இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள்.
ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தெரியாது அல்லது தெரியாதது போல
நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களின் ஒன்று தான் அந்த செயல்வீரனின்
முகம் ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம்
கொள்ளவில்லை. உயர் நடத்தைக் கொண்ட ஒரு மனிதனை நாம் இழந்து நிற்கிறோம்.
இறக்கும்போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம்.
இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க முடியுமே என்ற ஏக்கத்தால்
துயரம் கொள்கிறோம்.

துளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள்
வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. மோதலின்போது படுகாயம் அடைந்த பின்பு
அவரைக் கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக் கொண்டுள்ளனர்.
கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக் கைதியை சுட்டுக் கொல்ல ஒரு
கூலிப் பட்டாளத்திற்கு பொறுக்கிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. சேவின்
வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும் அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத
காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக்
கூட அவர்கள் விட்டு அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை
அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகள் அழித்து விட முடியாது என்கிற பயம்
அவர்களுக்கு இருந்திருக்கிறது.
சே வேறு எதற்காகவும் இறக்கவில்லை. இந்த
கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்து விட்டார்.
இப்பூவுலகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காவும் ஏழைகளுக்காகவும்
இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக் கொள்வார்கள் இப்படிப்பட்ட
அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே
போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள்.
அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை
பின்பற்றுவார்கள். இந்தக் கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த
பின்னடைவிலிருந்து மீண்டு எழும்.

அவரது புதிய எழுத்துக்களை நாம்
மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க
முடியாதுதான். ஆனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச்
சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர
குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச்
சென்றுள்ளார்.
நாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி இருக்க
வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க வேண்டும்
என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும்
என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம்.
நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல
விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று
சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி
வேண்டுமென்றால் வருங்காலத்தைச் சார்ந்து மனிதனின் முன் மாதிரி
வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதனின் சே என்று என் இதயத்தின்
ஆழத்தில் இருந்து சொல்வேன். என்று சே குவேராவின் மறைவிற்கு இரங்கல்
தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசியது ஒரு போராளி
என்பவன் புதைக்கப்படுவதில்லை மாறாக விதைக்கப்படுகிறான் என்கிற கூற்று சே
குவேராவின் வாழ்வில் உண்மையான ஒன்றாகும் அதற்குச் சான்று இக்கூற்றேயாகும்.

மரணம் என்பது சிலருக்கு தன் வரலாற்றை தன் கொள்கையினை பிறருக்கு உணர்த்தும்
கருவியாக அமையும். இவர் கீதோபதேசங்களையோ, கடவுளின் செய்திகளையே
மக்களுக்காக கூறியரல்ல. மாறாக தன் வாழ்க்கையையே மக்களுக்கு செய்தியாக
விட்டுச் சென்றவர். எங்கேயெல்லாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம்
தேவைப்படுகிறதோ அங்கேயெல்லாம் சே குவேராவின் வாழ்க்கை புரட்டிப்
பார்க்கப்பட வேண்டிய அவசியமாகிறது.
அடிமைத்தனத்திலிருந்து போராடி
மேனிலையாக்கம் பெற்றுச் சிம்மாசனத்திற்குச் சென்றவர்கள் மீண்டும்
கீழ்நிலைக்காக குரல் கொடுத்தும் கொடுக்காமலும் இருந்த வரலாற்றினை
அறிந்தவகையில் கீழ்நிலைமையின் தேவைக்காக மீண்டும் சிம்மாசனத்திலிருந்து
கீழ்நிலைக்கு வந்த வரலாறென்பது சே குவேராவின் வரலாறு மட்டுமேயாகும். தனது
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டததை நாடு, மொழி, இனம் என்று குறுகிய
வட்டங்களுக்குள் சிறைப்படுத்திக் கொள்ளாதவர்.

39 ஆண்டுகள்
மட்டுமே வாழ்ந்தவராய் இருந்தாலும் உலக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு
பெருந்தலைவருக்கும் சளைத்தவரல்ல. அப்பேர்ப்பட்ட உலகத் தலைவர் மீதும், அவரது
போராட்டத்தின் மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஏவல் படை (சி.ஐ.ஏ)
மூலம் சேற்றை வாரி வீச நினைக்கிறது.

இந்த உதாரண புருஷன் இறந்த
பின்னும் அவர் மீதும் ஆதிக்க சக்திகளுக்கு இருக்கும் பயம் மட்டும் இன்னும்
விலகவில்லை. அந்த பயத்தின் காரணமாகவே வரலாற்றைத் திருத்தும் வேலையில்
அமெரிக்கா இறங்கியுள்ளது. இனியும் இது போன்ற ஒருவர் தோன்றக்கூடாது என்பதில்
மிகக் கவனமாக உள்ளது. அதற்கான பணிகளில் அது எப்போதும் சுறுசுறுப்பாகவே
இயங்கிக் கொண்டு இருக்கிறது. மாதவராஜின் மொழியில் சொன்னால் மனித குல
விரோதிகள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்கள்
சே குவேராவின்
உடலை சல்லடையாக துளைத்த பின்னரும், அவரது தோற்றம் விசுவரூபம் எடுத்து உலகை
வியாபித்து விடுமோ என்ற பயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிம்மதி
குலைக்கும் கொடுங்கனவென பரந்து கிடக்கிறது. அந்தப் பயத்தின் விளைவாகவே
அவரது சரித்திரத் தோற்றத்தையும் சிதைக்க முயல்கிறது.

சி.ஐ.ஏ
சற்று சாதுர்யமாகவே இதைச் செய்கிறது வெறுமனே சே குவேரா தோற்றுப் போனார்
என்று கூறாமல், அவரது கோட்பாடு தோற்றது அவரது வழிமுறைகள் தவறு என்று
கூறுவதன் மூலம் பின்வரும் சந்ததியினர் யாரும் சே குவேராவின் வழியைப்
பின்பற்ற விடாமல் செய்யப் பார்க்கிறது.

துளியும் களங்கமற்று
இருந்த பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா நட்பு மீதும் அமெரிக்க நிச்சயமாக கறை
ஏற்படுத்த முயல்கிறது. தனது ஏகாதிபத்தியத்திற்கு அடங்கி நடக்கும் பொலிவிய
அரசின் துணையோடு சே குவேராவை அமெரிக்கா சுட்டுக் கொல்கிறது. கொன்ற பின்பு
சே குவேராவின் உடல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நினைவுச் சின்னமாக மாறி
விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. பின்பு அவரது உடலை யாரும் காணாமல் ஒரு
மறைவிடத்தில் புதைக்கிறது. இந்த சம்பவங்கள் எல்லாம் அமெரிக்கா உளவுத்
துறையின் ரகசியக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சி.ஐ.ஏ.
கட்டமைக்க விரும்பும் பொய் பிம்பம் அதற்கடுத்ததாக உண்மை நிலையை
எடுத்துரைக்கும் வரலாற்று ஆதாரங்களை அடுக்கடுக்காக விவரித்துப் போகையில்
சி.ஐ.ஏ.வின் உலகளாவிய கபடத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சி.ஐ.ஏ எந்த வேலையில் இறங்கியதோ அதற்கு நேர்மாறான விளைவே இப்போது மக்களிடம்
படிந்து வருகிறது. ஆம் சே குவேரா புதைக்கப்பட்ட இடத்தின் அருகே
எழுதப்பட்டிருந்ததைப் போலவே அவர்கள் நினைத்தது போலில்லாமல் வாழ்ந்து
கொண்டிருக்கிறார் சே (தோழர் )சொல்லப்போனால் இன்னும் பிரகாசமாக.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" Empty Re: "இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"

Post by அருள் Thu Jun 14, 2012 7:12 am

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" 575701_2195021052557_1722938658_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" Empty Re: "இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"

Post by அருள் Thu Jun 14, 2012 7:17 am

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" 577471_404124372972495_1256711985_nசே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசியது :

இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள்.
ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தெரியாது அல்லது தெரியாதது போல
நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களின் ஒன்று தான் அந்த செயல்வீரனின்
முகம் ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம்
கொள்ளவில்லை. உயர் நடத்தைக் கொண்ட ஒரு மனிதனை நாம் இழந்து நிற்கிறோம்.
இறக்கும்போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம்.
இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க முடியுமே என்ற ஏக்கத்தால்
துயரம் கொள்கிறோம்.

துளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள்
வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. மோதலின்போது படுகாயம் அடைந்த பின்பு
அவரைக் கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக் கொண்டுள்ளனர்.
கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக் கைதியை சுட்டுக் கொல்ல ஒரு
கூலிப் பட்டாளத்திற்கு பொறுக்கிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. சேவின்
வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும் அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத
காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக்
கூட அவர்கள் விட்டு அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை
அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகள் அழித்து விட முடியாது என்கிற பயம்
அவர்களுக்கு இருந்திருக்கிறது.

சே வேறு எதற்காகவும் இறக்கவில்லை.
இந்த கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்து
விட்டார். இப்பூவுலகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காவும் ஏழைகளுக்காகவும்
இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக் கொள்வார்கள் இப்படிப்பட்ட
அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே
போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள்.
அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை
பின்பற்றுவார்கள். இந்தக் கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த
பின்னடைவிலிருந்து மீண்டு எழும்.

அவரது புதிய எழுத்துக்களை நாம்
மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க
முடியாதுதான். ஆனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச்
சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர
குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச்
சென்றுள்ளார்.

நாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி
இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க
வேண்டும் என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க
வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்று
சொல்வோம். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும்
என்று சொல்ல விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும்
என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி
வேண்டுமென்றால் வருங்காலத்தைச் சார்ந்து மனிதனின் முன் மாதிரி
வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதனின் சே என்று என் இதயத்தின்
ஆழத்தில் இருந்து சொல்வேன். என்று சே குவேராவின் மறைவிற்கு இரங்கல்
தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசியது ஒரு போராளி
என்பவன் புதைக்கப்படுவதில்லை மாறாக விதைக்கப்படுகிறான் என்கிற கூற்று சே
குவேராவின் வாழ்வில் உண்மையான ஒன்றாகும் அதற்குச் சான்று இக்கூற்றேயாகும்.

மரணம் என்பது சிலருக்கு தன் வரலாற்றை தன் கொள்கையினை பிறருக்கு உணர்த்தும்
கருவியாக அமையும். இவர் கீதோபதேசங்களையோ, கடவுளின் செய்திகளையே
மக்களுக்காக கூறியரல்ல. மாறாக தன் வாழ்க்கையையே மக்களுக்கு செய்தியாக
விட்டுச் சென்றவர். எங்கேயெல்லாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம்
தேவைப்படுகிறதோ அங்கேயெல்லாம் சே குவேராவின் வாழ்க்கை புரட்டிப்
பார்க்கப்பட வேண்டிய அவசியமாகிறது.

அடிமைத்தனத்திலிருந்து போராடி
மேனிலையாக்கம் பெற்றுச் சிம்மாசனத்திற்குச் சென்றவர்கள் மீண்டும்
கீழ்நிலைக்காக குரல் கொடுத்தும் கொடுக்காமலும் இருந்த வரலாற்றினை
அறிந்தவகையில் கீழ்நிலைமையின் தேவைக்காக மீண்டும் சிம்மாசனத்திலிருந்து
கீழ்நிலைக்கு வந்த வரலாறென்பது சே குவேராவின் வரலாறு மட்டுமேயாகும். தனது
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டததை நாடு, மொழி, இனம் என்று குறுகிய
வட்டங்களுக்குள் சிறைப்படுத்திக் கொள்ளாதவர்.

39 ஆண்டுகள்
மட்டுமே வாழ்ந்தவராய் இருந்தாலும் உலக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு
பெருந்தலைவருக்கும் சளைத்தவரல்ல. அப்பேர்ப்பட்ட உலகத் தலைவர் மீதும், அவரது
போராட்டத்தின் மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஏவல் படை (சி.ஐ.ஏ)
மூலம் சேற்றை வாரி வீச நினைக்கிறது.

இந்த உதாரண புருஷன் இறந்த
பின்னும் அவர் மீதும் ஆதிக்க சக்திகளுக்கு இருக்கும் பயம் மட்டும் இன்னும்
விலகவில்லை. அந்த பயத்தின் காரணமாகவே வரலாற்றைத் திருத்தும் வேலையில்
அமெரிக்கா இறங்கியுள்ளது. இனியும் இது போன்ற ஒருவர் தோன்றக்கூடாது என்பதில்
மிகக் கவனமாக உள்ளது. அதற்கான பணிகளில் அது எப்போதும் சுறுசுறுப்பாகவே
இயங்கிக் கொண்டு இருக்கிறது. மாதவராஜின் மொழியில் சொன்னால் மனித குல
விரோதிகள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்கள்.

சே
குவேராவின் உடலை சல்லடையாக துளைத்த பின்னரும், அவரது தோற்றம் விசுவரூபம்
எடுத்து உலகை வியாபித்து விடுமோ என்ற பயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
நிம்மதி குலைக்கும் கொடுங்கனவென பரந்து கிடக்கிறது. அந்தப் பயத்தின்
விளைவாகவே அவரது சரித்திரத் தோற்றத்தையும் சிதைக்க முயல்கிறது.

சி.ஐ.ஏ சற்று சாதுர்யமாகவே இதைச் செய்கிறது வெறுமனே சே குவேரா தோற்றுப்
போனார் என்று கூறாமல், அவரது கோட்பாடு தோற்றது அவரது வழிமுறைகள் தவறு என்று
கூறுவதன் மூலம் பின்வரும் சந்ததியினர் யாரும் சே குவேராவின் வழியைப்
பின்பற்ற விடாமல் செய்யப் பார்க்கிறது.

துளியும் களங்கமற்று
இருந்த பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா நட்பு மீதும் அமெரிக்க நிச்சயமாக கறை
ஏற்படுத்த முயல்கிறது. தனது ஏகாதிபத்தியத்திற்கு அடங்கி நடக்கும் பொலிவிய
அரசின் துணையோடு சே குவேராவை அமெரிக்கா சுட்டுக் கொல்கிறது. கொன்ற பின்பு
சே குவேராவின் உடல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நினைவுச் சின்னமாக மாறி
விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. பின்பு அவரது உடலை யாரும் காணாமல் ஒரு
மறைவிடத்தில் புதைக்கிறது. இந்த சம்பவங்கள் எல்லாம் அமெரிக்கா உளவுத்
துறையின் ரகசியக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சி.ஐ.ஏ. கட்டமைக்க விரும்பும் பொய் பிம்பம் அதற்கடுத்ததாக உண்மை நிலையை
எடுத்துரைக்கும் வரலாற்று ஆதாரங்களை அடுக்கடுக்காக விவரித்துப் போகையில்
சி.ஐ.ஏ.வின் உலகளாவிய கபடத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சி.ஐ.ஏ எந்த வேலையில் இறங்கியதோ அதற்கு நேர்மாறான விளைவே இப்போது மக்களிடம்
படிந்து வருகிறது. ஆம் சே குவேரா புதைக்கப்பட்ட இடத்தின் அருகே
எழுதப்பட்டிருந்ததைப் போலவே அவர்கள் நினைத்தது போலில்லாமல் வாழ்ந்து
கொண்டிருக்கிறார் சே (தோழர் )சொல்லப்போனால் இன்னும் பிரகாசமாக.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" Empty Re: "இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"

Post by அருள் Thu Jun 14, 2012 7:19 am

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" 547140_379450888780374_1930497313_nபோராளியாக மாறிய அமைச்சர்!

சே குவேரா - ஆயுதம் ஏந்திய போராளி!

ஆனந்த விகடனில் இருந்து...

அர்ஜென்டினாவின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந் தவர் சே
குவேரா. மருத்துவம் படித்த இவர், டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில்
விரும்பினார்.

ஆனால், காலம் அப்போது அவருக்கு வேறு ஒரு பாடத்தைக்
கற்றுத் தந்தது. கௌதமாலா நாட் டில் நடந்து வந்த ஓர் ஆட்சியை அமெரிக்க
அரசாங்கம் தனது சுய நலத்துக்காகத் தூக்கியெறிந்தது. இதைப் பார்த்து சே
குவேரா துடித் தார். தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கியெறிந்ததைப்
பார்த்து துணுக்குறாத அந்த நாட்டு மக்களின் மௌனம் சே குவேராவை மேலும்
துடிக்கச் செய்தது. அமெ ரிக்காவின் இந்த அட்டூழியத்தை விவரித்து சே குவேரா
புரட்சி வெடிக்கப் பேச... அவருக்கு ஆபத்து வந்தது. மெக்ஸிகோவுக்குத் தப்பி
ஓடினார். அந்தச் சமயம் கியூபா நாட்டில் ஆட்சி செய்து வந்த சர்வாதிகாரி
பாடிஸ்டாவுக்கு எதிராக கெரில்லா படை திரட்டிப் போராடி வந்த ஃபிடல் காஸ்ட்ரோ
வின் அறிமுகம் கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பலமான நட்பு
மலர்ந்தது.

காஸ்ட்ரோவின் தலைமைத் தளபதி ஆனார் சே குவேரா. இவரின்
வீரமும் கெரில்லா படை சாகசங்களும் கியூபாவை ஆண்ட சர்வாதிகாரியை வீழ்த்தி,
காஸ்ட்ரோவின் கைகளில் கியூபாவின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தன.

இதன்பின் சே குவேரா, கியூபா வின் பொருளாதார அமைச்சரா னார். கியூபாவைப்
பன்னெடுங்கால மாகச் சுரண்டி வந்த அமெரிக்க நிறுவனங்களின் உடைமைகளைப்
பறிமுதல் செய்தார். கியூபாவின் சுதந்திரத்துக்குத் தன்னோடு போராடிய ஒரு
கெரில்லா பெண் போராளியை மணந்து, இரண்டு குழந்தைகளையும் பெற்றார். இருந்
தாலும், சே குவேராவால் அந்த வாழ்க்கையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை.
காரணம், அப்போது காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடு பட்டிருந்த
கெரில்லாக்களுக்கு சே குவேராவின் வழிகாட்டுதல் தேவைப் பட்டது.

கண்ணீர் மல்க தனது நண்பர் காஸ்ட்ரோவுக்குக் கடிதம் எழுதி விட்டு திடீரென
தலைமறைவானார். தனது உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ-வை விட்டு சே குவேராவை உலகம்
முழுக்க சல்லடை போட்டுத் தேடியது அமெரிக்கா. ஆனால், காங்கோ நாட்டின்
அடர்ந்த காடு களில் கம்யூனிஸ்ட் கெரில்லா வீரர் களுக்குப் போர்ப் பயிற்சி
கொடுத் துக் கொண்டிருந்தார் சே குவேரா.

சுமார் இரண்டு வருடகாலத்தை
காங்கோ நாட்டு காடுகளில் கழித்த சே குவேரா, பொலிவியா சென்று, அங்கே ஆட்சி
செய்து வந்த அமெ ரிக்காவின் கைக்கூலி அரசுக்கு எதி ராகக் கெரில்லா யுத்தம்
நடத்தினார். அமைச்சராக இருந்த ஒருவர் மீண் டும் போராளியாக மாறி யுத்தம்
செய்தார் என்றால், அது வரலாற் றில் சே குவேரா மட்டும்தான்.

எதிரிகளுக்குத் தெரியாமல் காடு களில் அவர் ஒளிந்திருந்த சமயம், சே
குவேராவால் பயிற்சி அளிக்கப் பட்ட கெரில்லா வீரன் ஒருவன் துரோகியாக மாறி,
சி.ஐ.ஏ-வுக்குத் துப்பு கொடுக்க... பொலிவியாவின் ராணுவம் ஹெலிகாப்டரில்
வந்து இறங்கி சே குவேராவின் மார்பை தோட்டாக்களால் துளைத்தது. ஆனால், அந்த
வீரனின் கண் இமைகள் அந்தச் சமயம் கூட மூடிக் கொள்ளவில்லை. கண்கள்
திறந்தபடியேதான் அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்தது!

-வேல்ஸ்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

"இன்று ”சே குவோரா” பிறந்த நாள்" Empty Re: "இன்று ”சே குவோரா” பிறந்த நாள்"

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum