TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தோனி சதம் : இந்தியா வெற்றி : வங்கதேசம் பரிதாபம்

Go down

தோனி சதம் : இந்தியா வெற்றி : வங்கதேசம் பரிதாபம் Empty தோனி சதம் : இந்தியா வெற்றி : வங்கதேசம் பரிதாபம்

Post by Tamil Fri Jan 08, 2010 6:45 am



தோனி சதம் : இந்தியா வெற்றி : வங்கதேசம் பரிதாபம் Tblfpnnews_9563410283

மிர்புர்
: முத்தரப்பு லீக் போட்டியில் "சூப்பராக' ஆடிய கேப்டன் தோனி சதம் விளாச,
இந்திய அணி, வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தியது. இளம்
விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னாவின் துடிப்பான ஆட்டமும் இந்திய வெற்றிக்கு
பக்கபலமாக அமைந்தது.


வங்கதேசத்தில்
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்திய அணி தனது முதல்
போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது. நேற்று மிர்புரில் நடந்த மிக
முக்கியமான லீக் போட்டியில்(பகலிரவு) இந்திய அணி, வங்கதேசத்தை
எதிர்கொண்டது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ்
வென்ற வங்கதேச கேப்டன் சகிப் அல் ஹசன், பேட்டிங் தேர்வு செய்தார்.


இக்பால் அதிரடி:
வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் இணைந்து சூப்பர் துவக்கம்
தந்தனர். அதிரடியாக ஆடிய தமிம் இக்பால், இந்திய "வேகங்களை' ஒருகை
பார்த்தார். நெஹ்ரா பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த இவர், ஸ்ரீசாந்த்,
ஜாகிர் பந்துவீச்சில் பவுண்டரிகளாக விளாசினார். ஒரு நாள் அரங்கில் 12வது
அரைசதம் கடந்த இக்பால் 60 ரன்களுக்கு(10 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்ரீசாந்த்
பந்தில் வெளியேறினார். ரவிந்திர ஜடேஜா சுழலில் அஷ்ரபுல்(29) சிக்கினார்.
ஜாகிரின் நேரடி "த்ரோவில்' கேப்டன் சகிப் அல் ஹசன்(0) ரன் அவுட்டானார்.
அபார ஆட்டத்தை தொடர்ந்த இம்ருல் கெய்ஸ் 70 ரன்களுக்கு நெஹ்ரா பந்தில்
அவுட்டானார். முஷ்பிகுர் ரஹிம்(6) ஏமாற்றினார்.


10 ஓவரில் 88 ரன்: பின்னர்
ரகிபுல் ஹசன், மகமதுல்லா இணைந்து பொறுப்பாக ஆடினர். ரகிபுல் 32 ரன்கள்
எடுத்தார். கடைசி கட்டத்தில் மகமதுல்லா, நயீம் இஸ்லாம் சேர்ந்து அதிரடியாக
ரன் சேர்த்தனர். பேட்டிங் "பவர் பிளேயை' அருமையாக பயன்படுத்திய இவர்கள்
ரன் மழை பொழிய, கடைசி 10 ஓவர்களில் 88 ரன்கள் எடுக்கப்பட்டன. வங்கதேச அணி
50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. மகமதுல்லா 60(8
பவுண்டரி), நயீம் 14 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.


விக்கெட் மடமட:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி மோசமான துவக்கம் கண்டது. ஒரு
ரன்னுக்காக வீணாக ஓடிய சேவக்(13), அப்துர் ரசாக்கின் துல்லிய "த்ரோவில்'
பரிதாபமாக ரன் அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்
ருபல் ஹூசைன் பந்தில் காம்பிர் (18) போல்டானார். அடுத்து வந்த யுவராஜ்(1),
சயத் ரேசல் பந்தில் போல்டாக, இந்திய அணி 8.1 ஓவரில் 3 விக்கெட் டுக்கு 51
ரன்கள் எடுத்து திணறியது.


கோஹ்லி அபாரம்: இதற்கு
பின் கேப்டன் தோனி, விராத் கோஹ்லி இணைந்து விவேகமாக ஆடினர். அதிக "ரிஸ்க்'
எடுக்காமல் பேட் செய்த இவர்கள், மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்
கொண்டனர். அசத்தலாக விளையாடிய 21 வயது இளம் கோஹ்லி, ஒரு நாள் போட்டிகளில்
தனது நான்காவது அரைசதம் கடந்தார். தசைப்பிடிப்பால் இவர் அவதிப்பட,
"ரன்னராக' காம்பிர் செயல்பட்டார். சிறிது நேரத்தில் சகிப் அல் ஹசன்
பந்தில் கோஹ்லி சிக்கினார். இவர் 91 ரன்கள்(7 பவுண்டரி) எடுத்து மீண்டும்
திறமை நிரூபித்தார். தோனி-கோஹ்லி 4வது விக்கெட் டுக்கு 152 ரன்கள்
சேர்த்தனர்.


தோனி சதம்:
அடுத்து வந்த ரெய்னா "கம்பெனி' கொடுக்க, தோனி தனது அபார ஆட்டத்தை
தொடர்ந்தார். சயத் ரேசல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த தோனி, ஒரு நாள்
அரங்கில் தனது 7வது சதம் எட்டினார். தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்த
ரெய்னா, தனது 14வது அரைதம் கடந்தார். இந்திய அணி 47.3 ஓவரில் 4
விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. தோனி 101(9
பவுண்டரி), ரெய்னா 51(5 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந் தனர்.
ஆட்ட நாயகன் விருதை தோனி தட்டிச் சென்றார்.


இது அதிகம்:
நேற்று 296/6 ரன்கள் எடுத்த வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிராக தனது
அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. முன்னதாக 2008ல் கராச்சியில் நடந்த போட்டியில்
283/6 ரன்கள் எடுத்திருந்தது. தவிர, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு
எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது. இதற்கு முன் 2008ல்
பாகிஸ்தானுக்கு எதிராக 285/7 ரன்கள் எடுத்திருந்தது.


இக்பால்-ஜாகிர் மோதல்:
ஏழாவது ஓவரில் ஒரு ரன் எடுக்க ஓடி வந்த தமிம் இக்பால் மற்றும் ஜாகிர் கான்
எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டனர். இதையடுத்து இக்பால் ஏதோ சொல்ல, பதட்டம்
ஏற்பட்டது. பின்னர் அம்பயர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.


*
அதிரடியாக ஆடிய தமிம் இக்பால் 33 பந்து களில் 50 ரன்கள் எடுத்தார். இதன்
மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த வங்கதேச வீரர் என்ற
பெருமை பெற்றார்.


பீல்டிங் சொதப்பல்:
இந்திய வீரர்கள் மீண்டும் ஒரு முறை பீல்டிங்கில் சொதப்பினர். நெஹ்ரா
ஓவரில் இம்ருல் கெய்ஸ் கொடுத்த சுலப "கேட்ச்' வாய்ப்பை முதலில் ஹர்பஜன்
கோட்டை விட்டார். அப்போது அவர் 3 ரன்கள் தான் எடுத்திருந்தார். பின்னர் 67
ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் தோனியின் கைநழுவியது. இதனை பயன்படுத்திய
கெய்ஸ் 70 ரன்கள் எடுத்தார். பந்தை துடிப்பாக பீல்டிங் செய்யவும்
நம்மவர்கள் தவறினர். நெஹ்ரா உள்ளிட்டோர் சரியாக தடுக்காததால் பந்து பல
முறை பவுண்டரிக்கு பறந்தது.


இனி 1.30 மணிக்கு:
முத்தரப்பு தொடரில் பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்துவதால் போட்டிகளை
முன்னதாக துவக்க வேண்டுமென இந்திய கேப்டன் தோனி, இலங்கை கேப்டன் சங்ககரா
வலியுறுத்தினர். இதனை வங்கதேச கிரிக்கெட் போர்டு ஏற்றுக் கொண்டு உள்ளது.
இனி போட்டிகள் அரைமணி நேரம் முன்னதாக துவங்கும். பிற்பகல் 2 மணிக்கு
பதிலாக 1.30 மணிக்கு ஆட்டம் துவங்கும்.


உதிரி மழை:
நேற்று இந்திய பவுலர்கள் படுமோசமாக செயல்பட்டனர். ரன்களை வாரி வழங்கிய
இவர்கள், 25 உதிரிகளையும் விட்டுக் கொடுத்தனர். நெஹ்ரா, ஸ்ரீசாந்த்
ஆகியோர் "நோ-பால்' வீச.... "பிரி-ஹிட்' மூலம் வங்கதேச வீரர்கள் சிக்சர்கள்
அடிக்க, இந்திய ரசிகர்கள் நொந்து போயினர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி!
» இலங்கை அசத்தல் வெற்றி ஜெயவர்தனா சதம் கனடா பரிதாபம்
» சதம் விளாசினார் வார்னர்! * டில்லி அணி அசத்தல் வெற்றி * டெக்கான் மீண்டும் பரிதாபம்
» லட்சுமண், தோனி அசத்தல் சதம்! *வலுவான நிலையில் இந்தியா *வெ.இண்டீஸ் ஏமாற்றம்
» தோனி "சிக்சர்': இந்தியா "டென்ஷன் வெற்றி! * ஆஸி.,க்கு விழுந்தது "அடி'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum