TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உடல் பருமன் உயிருக்கு எமன்

2 posters

Go down

உடல் பருமன் உயிருக்கு எமன் Empty உடல் பருமன் உயிருக்கு எமன்

Post by ஜனனி Sun Feb 21, 2010 2:11 pm



உடல் பருமன்
என்றால் என்ன?

உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறிக்கும்.


நாம் உட்கொள்ளும்
உணவு நமது உடல் செய்யும் வேலை இந்த இரண்டுக்கும் இடையேயான வரவு - செலவு கணக்கில்
ஏற்படும் சமமின்மையே உடல் எடை அதிகரிக்க காரணம். நம் உணவில் எடுத்துக்
கொள்ளும் கலோரித்திறன் அதிகமாக இருந்து, நமது உடல் செலவழிக்கும் கலோரித்
திறன் குறைவாக இருந்தால் காலப்போக்கில் படிப்படியாக உடல் பருமனாகிறது.


உணவு கிடைக்காத போது
சமளிப்பதற்காக அதிகமாக உணவு கிடைக்கும் போது அதை கொழுப்பாக மாற்றி உடல்
டெபாசிட் செய்து கொள்ளும். ஆதி மனிதனுக்கு அவசிய தேவையாக இருந்த இந்த தந்திரம்
இன்று நமக்கு ஆபத்தாகி விட்டது. இப்போது உடலின் தேவைக்கு சற்று அதிகமாக உணவை
உட்கொண்டால் கூட அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.



உடல் பருமனை அளவிடுவது எப்படி?

சராசரி அளவைவிட பெரிதாக இருப்போரை பருமனாக இருப்பதாக
குறிப்பிடுகிறோம். உடல் பருமனை அளவிட உடல் எடை குறியீட்டு எண்

(Body Mass Index) என்ற முறையைப்
பயன்படுத்துகின்றனர். இது ஒருவரது உயரம் மற்றும் எடையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
இந்த அளவை சுருக்கமாக பி.எம்.ஐ எனக் குறிப்பிடுகிறோம்.


பி.எம்.ஐ 18.5-க்கு
கீழ் சென்றால் அவர் குறைந்த எடை உடையவர். அதுவே 25-க்கும் அதிகமானால் அதிக எடை
என்கின்றனர். 30-க்கும் மேல் என்றால் பருமன். 40-க்கும் மேல் என்றால் ஐயோ! குண்டு
பூசணிக்காய் தான், இந்தியர்களை பொருத்தவரை பி.எம்.ஐ 23-க்கு அதிகமாக
இருத்தாலே அதிக எடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு தொப்பைதான் பெரிய
எதிரி.


உலக சுகாதார
நிறுவனத்தின் கணிப்பின்படி உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான எடையுடன்
உள்ளனர். 30 கோடி பேர் உடல் பருமனால் பதிக்கப்பட்டுள்ளனர். அதிக எடையும் உடல்
பருமனும் ஏராளமான நோய்களைக் கொண்டு வருகின்றன. சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்,
இதய நோய், மூட்டு நோய்கள், சிலவகை புற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு
வழிவகுக்கிறது.


உடல் பருமன்
ஏன்?

சக்கரை, கொழுப்பு, உப்பு போன்றவற்றை அதிகம் கொண்ட அதிக
கலோரி சத்தும், குறைவான ஊட்டச்சத்தும் கொண்ட உணவு வகைகள் தான் இன்றைய உடல் பருமன்
சிக்கலுக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.


துரித உணவுகள்,
நொறுக்குத் தீனி வகைகள், மென்பானங்கள் ஆகியவைதான் இன்றைய இளம் தலைமுறை உடல்
பருமனுடன் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.


உலகின் மொத்த
இறப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 1 கோடி 66 லட்சம் இறப்புகளுக்கு
இதயம் தொடர்பான நோய்களே காரணமாகின்றன. இந்த ஆபத்துக்கு காரணமாக இருப்பது முறையற்ற
உணவு பழக்கம்தான்.


உடல் நலத்துக்கு கேடு
விளைவிக்கும் உணவுப்பழக்கம் ஒருபுறம், உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர்,
தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அதிக நேரத்தைச் செலவழிப்பது மற்றொருபுறம். இந்த
இரண்டும் சேர்ந்து உடல் பருமனுக்கு வழி செய்கிறது.


அமெரிக்காவில் 65
சதவீதத்தினர் அதிக எடையுடன் காணப்படுகின்றனர். இதற்கான மருத்துவச் செலவுகளுக்காக
மட்டும் ஆண்டுக்கு ரூ.4,600 கோடி செலவழிக்கப்படுகிறது. நாமும் அந்த ஆபத்தான நிலையை
நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.


உணவில் இரண்டு
தன்மைகள் இருக்கின்றன. ஒன்று ருசி. இன்னொன்று சத்துக்கள். ஆனால் நாகரிக உலகில் ருசி
எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டதால் சத்துக்கள் பற்றி அதிகம்
கவலைப்படுவதில்லை.


எடை கூடுவது
எப்படி:

ஒரே நாளில் எடை கூடி விடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகிறது. தொடக்கத்தில் அதை
யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரளவுக்கு மேல் பிரச்சனையான பிறகு தான், "ஐயோ"
என்று அலறுகிறார்கள். உடல் நலபாதிப்பு அல்லது உடல் அழகு கெடும்போது தான் எல்லோரும்
விழிக்கிறார்கள். அப்போதும் கண்டுகொள்ளாதவர்களும் உண்டு.


உடல் எடை கூடுவதால்
அழகு மட்டும் கெடுவதில்ல. பல்வேறு நோய்களுக்கும் அது காரணமாகிறது.


செக்ஸில் நாட்டம்
குறையும்:
உடல் எடை கூடுவதால் தாம்பத்திய உறவுக்குப் பங்கம் ஏற்பட்டு குடும்ப
உறவுகள் பதிக்கப்படும் அபாயம் உள்ளது. உடல் எடை, அளவுக்கு அதிகமாகும் போது வழக்கமான
செக்ஸில் ஈடுபட முடியாது. ஆர்வம் இருக்கும், ஆனால் உறவில் ஈடுபடும்போது உடல்
ஒத்துழைக்காது. இதனால் துன்பமே மிஞ்சும்.


உடல் எடை அதிகமான
பின் அதைக் குறைக்க கஷ்டப்படுவதை விட, எடை கூடிவிடாமல் உடல் எடையை பராமரிப்பதே
சிறந்தது.


உடல் நலத்துக்கு
டாக்டர்களின் ஆலோசனை கேட்பது போல் எந்த உணவை எவ்வளவு சாப்பிடலாம் என்று உணவு
ஆலோசகரிடம் (Dietician) கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் ஆலோசனைப்படி சாப்பிட்டால்
ஆரோக்கியமாக வாழலாம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உடல் பருமன் உயிருக்கு எமன் Empty Re: உடல் பருமன் உயிருக்கு எமன்

Post by Rikaz Sun Feb 21, 2010 5:41 pm

உடல் பருமன் உயிருக்கு எமன் நல்ல Heading பதிவிக்கு நன்றி
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum