TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"நல்ல காரியங்களை விளம்பரம் செய்யக்கூடாது' : ஆர்.டி.ஓ., சங்கீதா

Go down

"நல்ல காரியங்களை விளம்பரம் செய்யக்கூடாது' : ஆர்.டி.ஓ., சங்கீதா Empty "நல்ல காரியங்களை விளம்பரம் செய்யக்கூடாது' : ஆர்.டி.ஓ., சங்கீதா

Post by mmani Thu Aug 18, 2011 8:51 am

"நல்ல காரியங்களை விளம்பரம் செய்யக்கூடாது' : ஆர்.டி.ஓ., சங்கீதா Large_296323
திருச்சி: துணிச்சலுக்காக கிடைத்த "கல்பனா சாவ்லா' விருது தொகையான ஐந்து
லட்சத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு செலவிட திட்டமிட்டுள்ள
துணிச்சல் ஆர்.டி.ஓ., சங்கீதா, "நாம் செய்யும் நல்லகாரியங்களை விளம்பரம்
செய்யக்கூடாது. விளம்பரம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை' என்றார். கடந்த
ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது தமிழகம்
முழுவதும், தேர்தல் கமிஷன் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஆர்.டி.ஓ.,
சங்கீதா, துணிச்சலாக செயல்பட்டு, பல சாகசங்களை செய்தார். ஏப்., 4ம் தேதி
அதிகாலை திருச்சி, பொன்னகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஜே.டி., என்ற
தனியார் ஆம்னி பஸ்சின் மேற்கூரையில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக
பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை
பறிமுதல் செய்தார். இது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே மிகப்பெரும் தொகை.
இதையடுத்து, ஆர்.டி.ஓ., சங்கீதா தேசிய அளவில் பிரபலமானார். அதோடு அவரது
அதிரடி நிற்கவில்லை! பணம் பட்டுவாடா செய்ததாக வந்த தகவலையடுத்து, குமரன்
நகரில் வீடு வீடாக சென்று ரெய்டு நடத்தி, பல ஆயிரங்களை பறிமுதல் செய்தார்.
ஆக்ரமிப்பில்
உள்ள அரசுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை
மீட்டது, மணல் மற்றும் ஏரி, குளத்து மண் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை
பறிமுதல் செய்வது என அதிரடி தொடர்கிறது.
இவரது துணிச்சல் மற்றும் சாகச
செயல்களை பாராட்டி, தமிழக அரசு சார்பில், ஆக., 15 சுதந்திர தினத்தன்று
துணிச்சல் மற்றும் சாகசங்களுக்கான "கல்பனா சாவ்லா' விருதை தமிழக முதல்வர்
ஜெயலலிதா வழங்கினார்.

விருது பெற்ற சந்தோஷத்தில் இருந்த ஆர்.டி.ஓ., சங்கீதாவுடன் ஒரு சந்திப்பு:

கேள்வி: "கல்பனா சாவ்லா' விருது வாங்குவோம் என்று நினைத்தீர்களா?
ப:
தமிழக முதல்வர் ஜெயலலிதா கரங்களால் விருது வாங்கியது எனக்கு மிகவும்
மகிழ்ச்சி. விருது வாங்குவேன் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. விருதை
எதிர்நோக்கி நான் பணியாற்றவில்லை.

கே: உங்கள் அதிரடி எல்லா நேரங்களிலும் தொடருமா?
ப:
எனது பணியைத் தான் செய்கிறேன். அதிரடியெல்லாம் ஒன்றுமல்ல. "காம்பர்மைஸ்'
என்ற பேச்சுக்கே இடமில்லை. புத்திசாலித்தனமாக வேலை பார்க்க வேண்டும். எல்லா
இடத்திலும் துணிச்சல், "ஒர்க்-அவுட்' ஆகாது. பிரச்னை என்று தெரிந்தால்,
சற்று விலகியிருந்து என்ன நடக்கிறது என்று ஆராய வேண்டும். அதன்பின் அடுத்த
கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

கே: திருச்சி எப்படி உள்ளது?
ப: திருச்சி வளர்ந்து வரும் அழகான நகரம். வேகமான ஊர்...வேகமான மக்கள். அதற்கேற்றார்போல பணியாற்ற வேண்டும்.

கே: விருது வாங்கியதும் என்ன செய்தீர்கள்? குடும்பத்தாரின் மனநிலை எப்படி உள்ளது?
ப:
விருது வாங்கியதும் முதலில் எனது அம்மாவிடம் காட்டினேன். அவர் எப்போதும்
போல, "எங்கிருந்தாலும் ஜாக்கிரதையா இரும்மா' என்று ஆசிர்வதித்தார்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். கணவர் மிகவும்
பாராட்டினார். அதன்பின் கலெக்டர் ஜெயஸ்ரீ மேடத்திடம் காட்டினேன். என்னை
மிகவும் பாராட்டி, விருந்து வைத்து, பரிசு கொடுத்தார்.

கே: சித்தா டாக்டர், ஆர்.டி.ஓ., ஆனது எப்படி?
ப:
சென்னை சித்தா மெடிக்கல் கல்லூரியில் படித்து டாக்டர் ஆனேன். எனது
பெயருக்கு முன், "டாக்டர்' பட்டம் போட வேண்டும் என்பது எனது
குடும்பத்தாரின் ஆசை. எனக்கு வேலைக்கு செல்ல ஆசை. எனது குடும்பத்திலேயே
நான் தான் வேலைக்கு வந்துள்ளேன். மற்ற அனைவரும் "பிசினஸ்' செய்கின்றனர்.

கே: விருது பணம் ஐந்து லட்சம் ரூபாயை என்ன செய்ய திட்டம்?
ப:
அதைப்பற்றி இன்னும் யோசிக்கவில்லை. எடுத்தோம்; கவிழ்த்தோம் என்று
செலவிடக்கூடாது. திட்டமிட்டு செலவிட வேண்டும். விருது பணத்திலிருந்து ஒரு
பகுதியை ஆதரவற்றோர் அல்லது குழந்தைகள் இல்லத்துக்கு ஒதுக்கலாம் என
திட்டமிட்டுள்ளேன். யாருக்கென்று கேட்காதீர்கள். நல்ல காரியங்களை விளம்பரம்
செய்யக்கூடாது. விளம்பரம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை.

கே: பிடித்த விளையாட்டு? செயல்?
ப: "செஸ்' விளையாடவும், புத்தகம், பேப்பர் படிக்கவும் பிடிக்கும்.

கே: அமைச்சர் மரியம்பிச்சை இறந்தது பற்றி?
ப: நல்ல மனிதர். அவரது மறைவு அவரது குடும்பத்துக்கு பேரிழப்பு. இதற்கு மேல் எது சொன்னாலும் அரசியலாகிவிடும்.

கே: மேட்டூர் அணையில் கலக்கும் கழிவுகள் பற்றி?
ப: நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். அது பெரிய விஷயம். அரசு பதவியில் உள்ளதால், இந்த விஷயத்தில் நான் எந்த கருத்தும் கூற இயலாது.
dinamalar
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வரலாற்றில் முதல் முறையாக - ஆண்கள் பற்றிய ஒரு நல்ல விளம்பரம் ♥ :)
» சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டால் அனுமதியின்றி கைது செய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» எடை குறைய எதை செய்யக்கூடாது ?
» கமல் சார் எப்படி? -சிலாகிக்கிறார் சங்கீதா!
» மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum