TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திய அணிக்கு கடின இலக்கு * இயான் பெல் அபார சதம்* வலுவான நிலையில் இங்கிலாந்து

Go down

இந்திய அணிக்கு கடின இலக்கு * இயான் பெல் அபார சதம்* வலுவான நிலையில் இங்கிலாந்து Empty இந்திய அணிக்கு கடின இலக்கு * இயான் பெல் அபார சதம்* வலுவான நிலையில் இங்கிலாந்து

Post by piraba Mon Aug 01, 2011 7:28 am

இந்திய அணிக்கு கடின இலக்கு * இயான் பெல் அபார சதம்* வலுவான நிலையில் இங்கிலாந்து Bel-b



நாட்டிங்காம்:
நாட்டிங்காம் டெஸ்டில் இந்திய அணிக்கு கடின இலக்கு காத்திருக்கிறது. இயான்
பெல் அசத்தல் சதம் அடிக்க, இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை நோக்கி
முன்னேறுகிறது. இந்திய பவுலர்கள் விரைவாக விக்கெட் வீழ்த்த முடியாமல்
திணறினர்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு டெஸ்ட் போட்டிகள்
கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி,
தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி,
நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 221, இந்தியா 288
ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி,
இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று
மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரீசாந்த் வேகத்தில் கேப்டன்
ஸ்டிராஸ்(16) அவுட்டானார். இதற்கு பின் இயான் பெல், கெவின் பீட்டர்சன்
இணைந்து பொறுப்பாக பேட் செய்தனர். இந்திய பந்துவீச்சை சிதறடித்த இவர்கள்,
மிக விரைவாக ரன் சேர்த்தனர். டெஸ்ட் போட்டிகளில் பீட்டர்சன் தனது 24வது
அரைசதம் கடந்தார். மறுபக்கம் ஸ்ரீசாந்த் பந்தை 2 ரன்களுக்கு தட்டி விட்ட
பெல், டெஸ்ட் அரங்கில் தனது 15வது சதம் அடித்தார். இது இந்தியாவுக்கு
எதிராக இவர் அடிக்கும் முதலாவது சதமாக அமைந்தது. இந்த நேரத்தில் ஸ்ரீசாந்த்
பந்தில் பீட்டர்சன்(63) வெளியேற, இந்திய வீரர்கள் நிம்மதி அடைந்தனர்.
மார்கன் அதிரடி:
அடுத்து
வந்த இயான் மார்கன் "கம்பெனி கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார்
இயான் பெல். 137 ரன்களில் சர்ச்சைக்குரிய ரன் அவுட் வாய்ப்பில் இருந்து
தப்பிய பெல்(159) ஒருவழியாக யுவராஜ் சுழலில் சிக்கினார். அதிரடியாக ஆடிய
மார்கன் பவுண்டரி மழை பொழிந்தார். ஹர்பஜன் பந்தில் ஒரு சிக்சர் அடித்த
இவர், இங்கிலாந்தின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினார். அரைசதம் கடந்த
மார்கன்(70), பிரவீண் குமார் வேகத்தில் வீழ்ந்தார். டிராட்(2) ஏமாற்றினார்.
கடைசி
கட்டத்தில் மாட் பிரையர், டிம் பிரஸ்னன் இணைந்து அசத்தலாக ஆடினர். ஆட்ட
நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு
441 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 374 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான
நிலையில் இருந்தது. அரைசதம் கடந்த பிரையர்(64), பிரஸ்னன்(47) அவுட்டாகாமல்
இருந்தனர்.
இன்று மேலும் ரன்களை சேர்த்து இந்தியாவுக்கு கடின இலக்கை
இங்கிலாந்து நிர்ணயிக்கும். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமிருப்பதால்,
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடின சவால் காத்திருக்கிறது.



பெல் "ரன் அவுட் சர்ச்சை
விளையாட்டு
உணர்வுடன் நடந்து கொண்ட இந்திய கேப்டன் தோனி, இங்கிலாந்து வீரர் இயான்
பெல்லுக்கு எதிரான "ரன் அவுட்டை வாபஸ் பெற்று, ரசிகர்களின் இதயங்களை
கவர்ந்தார்.
நேற்றைய இரண்டாவது இன்னிங்சின் 66வது ஓவரை இஷாந்த் சர்மா
வீசினார். பந்தை மார்கன் அடித்தார். இதனை எல்லைக் கோட்டு அருகே
தட்டுத்தடுமாறி தடுத்த பிரவீண் குமார், தோனி வசம் எறிந்தார். இதற்குள்
மூன்றாவது ரன்னை ஓடி முடித்த இயான் பெல், பந்து பவுண்டரிக்கு சென்று
விட்டதாக நினைத்தார். தவிர, அம்பயர் தேநீர் இடைவேளை அறிவித்து விட்டதாக
எண்ணி, மறுமுனை நோக்கி மெதுவாக நடந்து வந்தார். இந்த நேரத்தில் பந்தை
முகுந்த் வசம் கொடுத்தார் தோனி. முகுந்ந் "பெயில்சை தகர்க்க, இந்திய
வீரர்கள் "ரன் அவுட் கோரினர். உடனே மூன்றாவது அம்பயரிடம் கேட்கப்பட்டது.
அவரும் "அவுட் கொடுத்தார். தேநீர் இடைவேளை என நினைத்து தான் நடந்து வந்ததாக
பெல் வாதிட்டும் பலன் கிடைக்கவில்லை. 137 ரன்களுக்கு வெளியேற நேர்ந்தது.
இதனால் ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள், இந்திய வீரர்களை நோக்கி
கூச்சலிட்டனர்.
பின் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணியின் "டிரஸ்சிங்
ரூமிற்கு இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் மற்றும் பயிற்சியாளர் ஆண்டி பிளவர்
சென்றுள்ளனர். "பெல்லுக்கு எதிரான "ரன் அவுட்டை திரும்ப பெற
விரும்புகிறீர்களா? என தோனியிடம் கேட்டுள்ளனர். சக வீரர்களுடன் ஆலோசித்த
தோனி மிகுந்த பெருந்தன்மையுடன் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து
மீண்டும் பெல் களமிறங்க, முன்பு கூச்சலிட்ட அதே ரசிகர்கள், இந்திய அணிக்கு
பாராட்டு தெரிவித்தனர்.
இந்த முடிவால் பெரிய அளவில் பாதிப்பு
ஏற்படவில்லை. கூடுதலாக 22 ரன்கள் சேர்த்த நிலையில் யுவராஜ் சுழலில் பெல்
159 ரன்களுக்கு அவுட்டானார்.



ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 221

இந்தியா 288
இரண்டாவது இன்னிங்ஸ்
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 16(52)
குக்(கே)யுவராஜ்(ப)இஷாந்த் 5(11)
பெல்(கே)லட்சுமண்(ப)யுவராஜ் 159(206)
பீட்டர்சன்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 63(120)
மார்கன்(கே)தோனி(ப)பிரவீண் 70(88)
பிரையர்-அவுட் இல்லை- 64(55)
டிராட்(கே)டிராவிட்(ப)பிரவீண் 2(10)
பிரஸ்னன்-அவுட் இல்லை- 47(66)
உதிரிகள் 15
மொத்தம்(101 ஓவரில் 6 விக்.,) 441
விக்கெட் வீழ்ச்சி: 1-6(குக்), 2-57(ஸ்டிராஸ்), 3-219(பீட்டர்சன்), 4-323(பெல்), 5-329(மார்கன்), 6-339(டிராட்).
பந்துவீச்சு:
பிரவீண் 29-5-93-2, இஷாந்த் 24-3-115-1, ஸ்ரீசாந்த் 22-5-103-2, யுவராஜ்
10-0-41-1, ஹர்பஜன் 9-1-47-0, ரெய்னா 7-0-30-0.


இந்திய அணிக்கு கடின இலக்கு * இயான் பெல் அபார சதம்* வலுவான நிலையில் இங்கிலாந்து NEWIM_zps788c3e8e
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பீட்டர்சன், இயான் பெல் சதம்: இங்கிலாந்து அணி ஆதிக்கம்! * இந்திய பவுலர்கள் சொதப்பல்
» புஜாரா ஜோர்! * இரட்டை சதம் விளாசினார் * இந்திய "சுழலில்' சிக்கியது இங்கிலாந்து
» லட்சுமண், தோனி அசத்தல் சதம்! *வலுவான நிலையில் இந்தியா *வெ.இண்டீஸ் ஏமாற்றம்
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி...
» இந்திய அணிக்கு மீண்டும் "அடி': இங்கிலாந்து அசத்தல் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum