TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கேபிள் டிவி கட்டணம் தமிழ்நாட்டில் அதிகமா

2 posters

Go down

கேபிள் டிவி கட்டணம் தமிழ்நாட்டில் அதிகமா Empty கேபிள் டிவி கட்டணம் தமிழ்நாட்டில் அதிகமா

Post by logu Fri Jun 24, 2011 1:18 pm

கேபிள் டிவி அமைப்பும் கட்டுமானமும்
கேபிள்
டிவி ஆபரேட்டர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் அதிக
கட்டணத்தை வாங்குவது போலவும் மீடியாவில் பல அரசியல்வாதிகள் பேசி
வருகிறார்கள். தா.பாண்டியன் கருத்தை கேட்க்க இங்கு
கிளிக் செய்யவும். ஒரு அமைப்பை பற்றி கருத்து தெரிவிக்கும் போது அவர்கள் அந்த அமைப்பை பற்றி முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
ஒன்றை
பற்றி கருத்து சொல்லும் போது, அவர்களின் கருத்தால் மக்களுக்கு நன்மை
நடந்தால் சரி. அந்த கருத்து தவறாக இருந்து, அதனால் ஏற்ப்படும் பாதிப்பு
நாளை அவர்கள் மீதே திரும்பும் வாய்ப்பு உண்டு என்பதை அவர்கள் மறக்கலாகாது.

கேபிள்
டிவி ஆபரேட்டர்களின் கட்டண குறைப்பால் என்ன நடக்கும். இப்போது
ஆபரேட்டர்கள் வசூலிக்கும் கட்டணம் அதிகமா? என்று பார்ப்போம். தமிழ் நாடு
முழுவதும் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் சராசரியாக 150 ரூபாய் மாத கட்டணமாக
வசூலித்து வருகிறார்கள். சுமார் 300 இணைப்புக்கள் வைத்திருக்கும் ஒரு
கேபிள் ஆபரேட்டரின் செலவு விகிதாச்சாரம் கீழ் காணும்படி இருக்கும்.



செலவுகள்
கிராமத்து ஆபரேட்டர்கள்
நகரத்து ஆபரேட்டர்கள்
பெரு நகர
ஆபரேட்டர்கள்
லிங்க்
கட்டணம்
40 Rs
45 Rs
55 Rs
மின்சார
கட்டணம்
7 Rs
5 Rs
3.50 Rs
பராமரிப்பு
செலவுகள்
35 Rs
25 Rs
20 Rs
இதர
செலவுகள்
10 Rs
5 Rs
5 Rs
பணியாளர்கள்
ஊதியம்
33 Rs
25 Rs
18 Rs
வாகன
செலவுகள்
10 Rs
7 Rs
5 Rs
மொத்தம்
135 Rs
112 Rs
106.50 Rs

மேலே
நீங்கள் காணும் பட்டியலில் கிராமத்து ஆபரேட்டர்கள், நகரத்து ஆபரேட்டர்கள்
மற்றும் பெருநகரத்து ஆபரேட்டர்களுக்கு இடையே செலவுகள் பட்டியலில் பெரும்
வித்தியாசம் இருப்பதை காணலாம். இந்த வித்தியாசங்களுக்கான காரணங்களை
ஒவ்வொன்றாக காண்போம்.

லிங்க் கட்டணம்
கேபிள் ஆபரேட்டர்கள் சிக்னலை MSO களிடம் இருந்து பெறுவதற்காக அல்லது பெற்றதற்காக செலுத்தும் தொகை Link Amount எனப்படும். பெறுவதற்காக அல்லது பெற்றதற்காக என்று சொல்லுவதற்கு காரணம், சில MSO க்கள் ஒவ்வொரு மாதத்திற்கான Link Amount ஐயும் முன்
பணமாகவே பெற்றுவிடுவார்கள். கிராமத்து ஆபறேட்டர்களுக்கு நிறுவுதல் மற்றும்
பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருப்பதாலும், மின்சாரம் மற்றும் பணியாளர்
செலவுகளும் அதிகம் என்பதாலும், பெருநகரம், நகரத்து ஆபறேட்டர்களிடம்
வசூலிப்பதைவிட சற்று குறைவாகவே கிராமத்து ஆபரேட்டர்களிடம் வசூலிப்பார்கள்.
MSO க்கள்
வழங்கும் கட்டண சானல்களின் எண்ணிக்கைகளும் இந்த வேறுபாட்டிற்க்கு
முக்கியமான காரணமாகும். கிராமப்புற மக்கள் அதிகமான சில கட்டண சேனல்களை (
Discovery, NGC மற்றும் சிலவற்றை) கேட்பதில்லை. ஆகையால் Link Amount ல் மேற்படி வித்தியாசங்களை காணலாம்.
மின்சார கட்டணம்
கேபிள்
டிவி அமைப்பே முழுவதுமாக எலக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு தான்
செயல்படுகிறது. ஆண்டு முழுவதும், அதுவும் 24 மணி நேரமும் மின்சார
இணைப்பிலேயே இருக்கும். கேபிள் ஆபரேட்டர்களின் கட்டுப்பாட்டு
அறையிலிருந்து வெளிவரும்
RF சிக்னல்களை Cable Trunk வயர்கள் வழியாக Trunk Amplifier கள்
மூலம் பூஸ்ட் செய்து கொண்டு வீடுகளுக்கு கொண்டு செல்வர்கள். இவ்வாறு
கொண்டு செல்லப்படும் சிக்னலை தரமாக கொண்டு செல்ல 150 மீட்டர் தொலைவுக்கு
ஒரு
Trunk Amplifier தேவைப்படும்.
நகரங்களில் வீடுகள் மிக அருகாமையிலும் அடுக்கு மாடிவீடுகளாகவும்
இருக்கும். கிராமங்களில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் 100 முதல் 150
வீடுகள் தான் இருக்கும். மேலும் சில வீடுகள் ஒற்றையாக 200 மீட்டர் முதல்
500 மீட்டர் தொலைவிலும் இருக்கும். இந்த ஒற்றை வீடுகளுக்காகவே பல நூறு
மீட்டர் வயரையும் கம்பங்கள் வழியாக பதித்து சில
Boosting Amplifier களையும்
அவைகளில் இணைத்து சிக்னலை கொண்டு சேர்ப்பார்கள். ஆகையால் மின்சார செலவு
அதிகமாகிறது. இந்தமாதிரியான சிக்கல்கள் நகரத்து மற்றும் பெருநகரத்து
ஆபரேட்டர்களுக்கு இருப்பதில்லை. அதாவது கிராமத்து ஆபரேட்டர்கள் 200
இணைப்பிற்கு பயன் படுத்தும் தளவாடங்களை கொண்டு நகரத்தில் சுமார் 600
இல்லங்களுக்கு இணைப்பு கொடுக்க முடியும். இதனால்
கிராமங்களின் கேபிள் டிவி நடத்தும் ஆபரேட்டர்களின் மின் செலவை விட
நகரங்களில் கேபிள் டிவி நடத்துவதற்கு குறைவாகவே ஆகும். இதுவே அவர்களின்
மின்சார செலவின் வித்தியாசத்திற்க்கான காரணமாகும்.

பராமரிப்புசெலவுகள்
ஏற்க்கனவே
முந்தய பத்தியில் நான் சொன்னது, போல கிராமத்து ஆபரேட்டர்கள் 200
இணைப்பிற்கு பயன் படுத்தும் தளவாடங்களை கொண்டு நகரத்தில் சுமார் 600
இல்லங்களுக்கு இணைப்பு கொடுக்க முடியும். அது போலவே அவைகளின் பராமரிப்பு
செலவும் அதிகமாக தானே இருக்கும்.

நமது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க உபயோகப்படும் மின் கடத்திகள் (Electric Wire) அருந்துவிட்டால் அதை அப்படியே இணைத்து விடலாம் அந்த வயர்கள் சுமார் 15 முதல் 20 வருடங்கள் வரை, அதற்க்கு மேலும் உழைக்கும், இந்திய
டெலிபோன் இணைப்புக்கு பயன் படுத்தும் கேபிளும் அப்படித்தான். இவைகள்
அருந்தாலும் உடனே செலவின்றி இணைத்து விடலாம். ஆனால் கேபிள் டிவி வயர்கள்
அப்படி இல்லை. கேபிள் டிவி வயர்கள் சாதாரணமாக இரண்டரை வருடங்கள் தான்
உழைக்கும். காற்று அதிகமாக வீசும் இடங்கள் மற்றும் கடற்க்கரை அருகில் உள்ள
இடங்கள் என்றாலோ சொல்லவே வேண்டாம். ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் அவை
உழைப்பதே அதிசயம். மேலும் அந்த வயர்கள் எங்காவது இழுபட்டு விட்டதென்றால்
சொல்லவே வேண்டாம். வயர் வெளிப்பக்கம்
PVC கவரில் பாதிப்பு இல்லாதது போலதான் இருக்கும் வயர் துண்டாகாமல் தான் இருக்கும். ஆனால் PVC கவரின் உள்ளிருக்கும் வலை கடத்தி (Outer Conductor )நுண்ணிய வலை பின்னலாக இருக்கும்.


கேபிள் டிவி கட்டணம் தமிழ்நாட்டில் அதிகமா Coaxial+Cable கேபிள் டிவி கட்டணம் தமிழ்நாட்டில் அதிகமா Coaxial+Cable+1


அவற்றில் 50% சிதைந்து விட்டாலோ அல்லது வலை பின்னலில் உள்ள சில கம்பிகள் அருந்துவிட்டாலோ கூட அந்த வயரின் RF சிக்னலை
கடத்தும் திறன் குறைந்து விடும். அந்த பாதிப்பு வயரில் எந்த இடத்தில்
உள்ளது என்று கண்டறிய முடியாது. அந்த முழுவயரையும் மாற்றித்தான்
ஆகவேண்டும். இதில்தான் கிராமத்து ஆபரேட்டர்களின் சிரமமே உள்ளது. நகர்பகுதி
ஆபரேட்டர்கள் இணைப்பு வழங்கியுள்ள வீடுகள் பெரும்பாலும் அருகருகில்
உள்ளதால் அவர்கள் 10 முதல் 25 மீட்டர் வயர்களை மாற்றினால் போதும் ஆனால்
கிராமங்களிலோ குறைந்தது 50 முதல் 100 மீட்டர் வயரையாவது மாற்ற வேண்டும்.

சிக்னலை பூஸ்ட் செய்ய பயன்படும் Trunk Amplifier கள்
நகரத்தில் 100 இணைப்புக்களுக்கு 2 முதல் 3 வரை தேவைப்படும். ஆனால்
கிராமத்திலோ 100 இணைப்புக்களுக்கு சிக்னல் வழங்க 5 முதல் 6 வரை தேவை
படும். மேலும் இப்போது ஆபரேட்டர்களின் கண்ட்ரோல் ரூமிற்கு வரும்
சிக்னலானது, பைபர் ஆப்டிக் கேபிள் வழியாக ஆப்டிகல் தொழில் நுட்பத்தில்
வருகிறது. அந்த பைபர் ஆப்டிக் கேபிள்கள் அறுந்து விட்டால், அதை
Electric Wire ஐ போல முறுக்கி விட முடியாது. அதை இணைப்பதற்கு ஒரு பொறியாளரை வரவளைத்து, சுமார் மூன்றரை லட்சம் மதிப்புள்ள கருவி மூலம் Splicing செய்து
இணைக்க வேண்டும், ஒரு இணைப்பிற்கு மட்டுமே 600 முதல் 1000 ரூபாய் வரையில்
ஆகும். இதுபோல சொல்லி கொண்டே போகலாம். இதெல்லாம் தா.பாண்டியன் அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை.

பணியாளர்கள் ஊதியம்
பணியாளர்களின்
ஊதியங்கள் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
2000 மாம் ஆண்டு வாக்கில் 1500 முதல் 2500 சம்பளத்தில் எங்களிடம் ஆட்கள்
வேலை பார்த்தார்கள். இன்றோ சுமார் 6000முதல்
Technician கள் 10000 வரையிலும்
வாங்குகிறார்கள். இதிலும் கூட கிராமத்தை விட நகரங்களில் தொழில் செய்யும்
ஆபரேட்டர்களுக்கு இணைப்புகளின் எண்ணிக்கையை பொருத்து குறைந்த பணியாளர்கள்
போதும். இன்றும் பல இடங்களில் வேலைக்கு ஆட்களை வைக்க ஏற்ற வருவாய்
வராததால், 50 வயதிற்கு பிறகும் துணையின்றி கம்பங்களில் ஏறி பழுது
பார்க்கும் கேபிள் ஆபரேட்டர்களை பார்க்கலாம்.

வாகன செலவுகள்
வாகன
செலவுகளை பற்றி சொல்லவே வேண்டாம். முன்பு கேபிள் டிவி ஆரம்பிக்குபோது
அனைத்து ஆபரேட்டர்களும் இளமையானவர்கள். அவர்கள் நடந்தும், அதிக பட்சம்
சைக்கிளில் சென்றோ தான் பணிகளை செய்தார்கள். இப்போது இதில் பலருக்கும்
வயதாகிவிட்டது. அவர்களால் கம்ம்பங்களில் ஏறி பழுதுகளை பர்ர்க்க முடியாது.
அதற்காக இன்று வேலை பார்க்கும் ஊழியர்களை நடந்தோ
சைக்கிளிலோ சென்று வேலை பார்க்க சொன்னால், அவர்கள் அதன் பிறகு வேலைக்கு
வரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். மேலும் வாகனங்கள்
இப்போது அனைத்து செயல்களுக்கும் அதிமுக்கியமாகிவிட்டது என்பது அனைவரும்
அறிந்தது தான். அவைகளுக்கான பெட்ரோல் விலை நிலவரமும் அனைவரும் அறிந்ததே.

சொல்லுங்கள்
பொது மக்களே, நாங்கள் உங்களிடம் அதிக கட்டணமா வசூலிக்கிறோம். பெரியவர்
தா.பாண்டியன் சொல்லுவது போல எங்களை கத்தரித்து விடவேண்டுமா. இந்த தொழிலால்
உரிமையாளர்கள் நாங்கள் மட்டுமல்ல, எங்களின் பணியாளர்கள் குடும்பங்களுமாக
சுமார் இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம்பேர் வாழ்ந்து வருகிறோம்.
தமிழ்நாட்டிலுள்ள தொழில்களில் விலை உயர்த்தப்படாத சர்வீஸ் எங்களுடையது
தான். மாத கட்டணம்
100 லிருந்து 150 ஆக ஆனது கூட கட்டண சேனல்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்காகதான். நாங்கள் அதிக லாபம் அடைவதற்காக அல்ல.
நாங்கள் இப்போது வழங்கும் சேனல்கள் அனைத்தையும் DTH மூலம்
நீங்கள் கண்டுகளிக்க மாதம் 350 ரூபாய் செலுத்த வேண்டும். நாங்களும்
கட்டணம் உயர்த்தும் சூழ்நிலை வந்த பிறகும் கட்டணம் உயர்த்தாமல் இருப்பது
DTH சர்வீஸ்கள் எங்களுக்கு போட்டி நிலையில் இருப்பதுதான். DTH சர்வீஸ்
கம்பெனிகளும் குறைந்தபட்ச சேவைக்கு கட்டணம் 135 என நிர்ணயித்து, மேலும்
கட்டணம் அதிகரிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு
போட்டியாளர்களாக நாங்கள் இருப்பதுதான்.

தா.பாண்டியன்
அரசியலில் தூய்மையானவர்தான். அதற்காக வியாபார நுணுக்கங்கள் பயின்றவர்
அல்ல. அதில் புத்திசாலியும் அல்ல. கேபிள் டிவியை அரசுடைமை ஆக்கிவிட்டு
எங்களை வெளியேற்றியதாக வையுங்கள். நாங்களும் அதன் பிறகு வேறு தொழில்களை
பார்க்க போய்விட்டோம் என்று வையுங்கள். சில வருடங்களுக்கு பிறகு ஆட்சி
மாற்றம் வருகிறது என்றும் வைத்துக்கொள்ளுங்கள்.
உடனே தயாநிதி மாறன அடுத்த முதல்வருடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதாக
வைத்துக்கொள்ளுங்கள். என்ன நடக்கும்?, அந்த அரசு சொல்லும், இதுவரை கேபிள்
டிவி நடத்தியதில் அரசுக்கு பலகோடி நஷ்டம் எனவே அரசு கேபிள் நிறுவனத்தை
அரசு நிறுத்துகிறது என்று தீர்மானம் போட்டு மூடுவிழா நடத்திவிட்டால் என்ன
ஆகும் தா.பாண்டியன் அவர்களே!!!. பொது மக்கள்
DTH கம்பெனிகளை தான் நம்ப வேண்டிவரும். போட்டியாக நாங்களும் இல்லாததால், அவர்கள் 5
அல்லது 6 DTH நிறுவனங்கள் இணைந்து, அவர்களே கூட்டாக நிர்ணயித்து சொல்லும்
கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு பொது மக்கள் தள்ளப்படுவார்கள். அப்போது
மக்களிடம் என்ன கட்டணம் கேட்ப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்.
இப்போது சொல்லுங்கள் எங்களை கத்தரிக்க வேண்டுமா?...!!!.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

கேபிள் டிவி கட்டணம் தமிழ்நாட்டில் அதிகமா Empty Re: கேபிள் டிவி கட்டணம் தமிழ்நாட்டில் அதிகமா

Post by அருள் Fri Jun 24, 2011 3:48 pm

தா.பாண்டியன்
அரசியலில் தூய்மையானவர்தான். அதற்காக வியாபார நுணுக்கங்கள் பயின்றவர்
அல்ல. அதில் புத்திசாலியும் அல்ல. கேபிள் டிவியை அரசுடைமை ஆக்கிவிட்டு
எங்களை வெளியேற்றியதாக வையுங்கள். நாங்களும் அதன் பிறகு வேறு தொழில்களை
பார்க்க போய்விட்டோம் என்று வையுங்கள். சில வருடங்களுக்கு பிறகு ஆட்சி
மாற்றம் வருகிறது என்றும் வைத்துக்கொள்ளுங்கள்.
உடனே தயாநிதி மாறன அடுத்த முதல்வருடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதாக
வைத்துக்கொள்ளுங்கள். என்ன நடக்கும்?, அந்த அரசு சொல்லும், இதுவரை கேபிள்
டிவி நடத்தியதில் அரசுக்கு பலகோடி நஷ்டம் எனவே அரசு கேபிள் நிறுவனத்தை
அரசு நிறுத்துகிறது என்று தீர்மானம் போட்டு மூடுவிழா நடத்திவிட்டால் என்ன
ஆகும் தா.பாண்டியன் அவர்களே!!!. பொது மக்கள்
DTH கம்பெனிகளை தான் நம்ப வேண்டிவரும். போட்டியாக நாங்களும் இல்லாததால், அவர்கள் 5
அல்லது 6 DTH நிறுவனங்கள் இணைந்து, அவர்களே கூட்டாக நிர்ணயித்து சொல்லும்
கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு பொது மக்கள் தள்ளப்படுவார்கள். அப்போது
மக்களிடம் என்ன கட்டணம் கேட்ப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்.
இப்போது சொல்லுங்கள் எங்களை கத்தரிக்க வேண்டுமா?...!!!. கேபிள் டிவி கட்டணம் தமிழ்நாட்டில் அதிகமா 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum