TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ராஜாவை குற்றவாளியாக சேர்க்கக் கோரிய மனு ஏற்பு : சிக்கலை ஏற்படுத்தினார் சாமி

Go down

ராஜாவை குற்றவாளியாக சேர்க்கக் கோரிய மனு ஏற்பு : சிக்கலை ஏற்படுத்தினார் சாமி Empty ராஜாவை குற்றவாளியாக சேர்க்கக் கோரிய மனு ஏற்பு : சிக்கலை ஏற்படுத்தினார் சாமி

Post by அருள் Sat Jan 08, 2011 7:33 am

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக,
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர்
சுப்ரமணியசாமி தாக்கல் செய்த புகார் மனு ஏற்கத்தக்கதே' என, டில்லி
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி மோசடி
வழக்கில் ராஜாவை ஒரு குற்றவாளியாக சேர்க்கலாம் என்றும், அவருக்கு எதிராக
டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி,
டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் கடந்த மாதம் 15ம் தேதி, மனு ஒன்றை
தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில்
அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த
விவகாரம் தொடர்பாக நான் கொடுக்கும் புகாரை வழக்காக ஏற்று, ராஜாவுக்கு
சம்மன் அனுப்பி மோசடி தொடர்பாக விசாரிக்க வேண்டும்.மேலும், ஊழல் தடுப்புச்
சட்டத்தின் கீழ், இந்த வழக்கில் என்னை அரசு வக்கீலாகவும் கோர்ட் நியமிக்க
வேண்டும். அத்துடன் இவ்வழக்கு விசாரணைக்கும், ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பான
மேல் விசாரணைக்கும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு போன்ற விசாரணை
அமைப்புகள், எனது உதவியை பயன்படுத்திக் கொள்ளவும் உத்தரவிட
வேண்டும்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக சி.பி.ஐ., முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்திருந்தாலும், அதில் யாருடைய பெயரும்
குறிப்பிடப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற
அடிப்படையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததன் மூலம் ராஜா மிகப் பெரிய
மோசடி செய்துள்ளார்.பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122
லைசென்சுகளில் 85 லைசென்சுகள் சட்ட விரோதமானவை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்
நடந்த மோசடியால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக
ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு
உடந்தையாக இருந்த சதிகாரர்கள் மற்றும் இதர குற்றவாளிகளையும் கண்டறிய
வேண்டும்.இவ்வாறு சாமி தன் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி பிரதீப் சத்தா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறியதாவது:சாமியின் புகார் மனுவையும், அதற்கு
ஆதாரமாக அவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களையும் நான் பார்வையிட்டேன்.
அதிலிருந்தே, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிரான
சுப்ரமணியசாமியின் புகார் ஏற்கத்தக்கதே என, முடிவு செய்துள்ளேன். இதன்
மீதான விசாரணை தொடரும். மேலோட்டமாக பார்த்த மாத்திரத்திலேயே சாமியின்
புகார் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இருப்பது தெரியவந்துள்ளதால்,
அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க நாம் தயங்கக் கூடாது.இந்த வழக்கில் புகார்
தாரராகவும், வக்கீலாகவும் ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போட சாமி
நினைக்கிறார். அதை அனுமதிக்க முடியாது. முதல்கட்டமாக சாமி தன்
சாட்சியங்களை அளிக்க வேண்டும். அதன்பின் வழக்கு தொடர்பான இதர சாட்சிகள்
மற்றும் குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பது தொடர்பாக முடிவு
செய்யப்படும். அரசு வக்கீலாக செயல்படுவது குறித்து பின்னர்
முடிவெடுக்கலாம்.ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் ராஜாவை ஒரு முக்கிய
குற்றவாளியாக சாமி சேர்க்கலாம். அவருக்கு எதிரான கிரிமினல் வழக்கையும்
டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம்.இவ்வாறு நீதிபதி
குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணை நடந்த போது கோர்ட்டில் ஆஜராகியிருந்த சுப்ரமணியசாமி கூறியதாவது:
நான் இரட்டை வேடம் போட விரும்பவில்லை. புகார்தாரர் என்ற முறையில் முதலில்
நான் சாட்சியங்களைப் பதிவு செய்கிறேன். பின்னர் மோசடியில்
தொடர்புடையவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் கோர்ட்டுக்கு உதவுவேன்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
ஏற்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்,
ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தேவையான முறையான
மனுவையும் தாக்கல் செய்வேன்.இவ்வாறு சாமி கூறினார்.
அத்துடன் தனது புகார் மனுவுக்கு ஆதாரமாக பல ஆவணங்களையும் கோர்ட்டில்
தாக்கல் செய்தார். இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு சம்மனோ
அல்லது அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்டோ பிறப்பிக்க
வேண்டும் என்றும் கோரினார்.பின்னர் ஒரு புகார்தாரராக தனது சாட்சியத்தை
பதிவு செய்தார். அப்போது, "ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக ராஜாவுக்கு சம்மன்
அனுப்பி விசாரிக்க வேண்டும்' என்றார்.கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி
122 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கியது தொடர்பான
நிகழ்வுகள் மற்றும் அதில் நடந்துள்ள கிரிமினல் குற்றங்கள் போன்றவை
குறித்தும் விவரித்தார். கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள 375 பக்க புகார்
மனுவில், ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர பலமான ஆதாரங்கள் உள்ளன என்றும்
தெரிவித்தார். சாமியின் சாட்சியத்தை தொடர்ந்து, வழக்கின் அடுத்த கட்ட
விசாரணை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 2ஜி ஸ்பெக்ரம் வழக்கில் ப.சிதம்பரம் பெயரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் : சுப்பிரமணிய சாமி
» 2ஜி ஊழல் வழக்கில் அனில் அம்பானியை சேர்க்கக் கோரி பொதுநல மனு
» எம்.எல்.ஏ. பதவியேற்பில் தாமதம்: சிக்கலை ஏற்படுத்துமா?
» ராஜாவை கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்
» இஷ்டப்படி ஒதுக்கீடு செய்து நஷ்டத்தை ஏற்படுத்தினார் ராஜா:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum