TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?

Go down

கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? Empty கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?

Post by அருள் Wed Aug 11, 2010 6:10 pm

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம்.

1.
குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம்.
குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே
இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை
கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும்.

2.
ஹார்மோன்களின் சமநிலையில் பாதிப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப்பட்ட
பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோனின் அளவு குறைந்து விடுவது ஒரு காரணம்.
கருவானது கருப்பையினுள் ஊன்றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டிரான் சுரப்பு
அவசியமாகும். இதை கருப்பையின் உட்சுவரை திசுப்பரிசோதனை செய்வதன் மூலம்
அறிந்துக் கொள்ளலாம்.

3. சில பெண்களுக்கு கீழ் கண்ட நோயின் பாதிப்பினால் கருச்சிதைவு ஏற்படலாம். அவை

*- சாக்லேட் இரத்தக்கட்டிகள்

*-கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு குறைபாடு

*-கட்டுப்படுத்த முடியாத தைராய்டு சுரப்பி நோய்கள்

*-மோசமாக பாதிப்படைந்த இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரகங்கள்

*-உடல் திசுக்களுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தி உருவாதல் -தொற்று நோய்கள்

4.சினைப்பையில்
நீர்க்கட்டிகள் ஏற்படுவது ஒரு காரணமாகலாம். சினைப்பையில் நீர்க்கட்டிகள்
இருப்பதால் எல் எச் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால்
கருமுட்டை யின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

5.நோய் எதிர்ப்பு
சக்தியில் பாதிப்பு ஏற்படுவதால் கருச்சிதைவு உண்டாகலாம்.பாக்டீரியா, வைரஸ்
போன்ற நோய்க்கிருமிகள் உடலைத் தாக்கும்போது தாயின் நோய் எதிர்ப்புச் சக்தி
சரிவர வேலை செய்யாவிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம்,கருத்தரிக்கும் போது,
கருவிலுள்ள தந்தையின் ஜீன்கள், தாயின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு மாறாக
இருந்தாலும் கருச்சிதைவு ஏற்படலாம்.

6. தாயின் உடல் எதிர்மியங்கள்
காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். சில பெண்களுக்கு இரத்தம் உறைவதற்குக்
காரணமாக இருக்கும் அணுக்களுக்கு எதிராக, உடல் எதிர்மியங்கள்
தோன்றக்கூடும், இதன் காரணமாக தாய்க்கும் கருவிலுள்ள சிசுவிற்கும் இடையே
உள்ள இரத்த ஓட்டத்தில் இரத்த உறைவுக்கட்டிகள் உருவாகி, சிசுவிற்கு வேண்டிய
இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. இதை இரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து
கொள்ளலாம்.

7.கருப்பையில் ஏற்படும் சில பிரச்சனைகள் காரணமாக கருச்சிதைவு ஏற்படும்.

* கருப்பையில் நார்த்திசுக் கட்டிகளின் காரணமாக கருச்சிதைவு ஏற்படும்.

* பிறவியிலேயே ஏற்படும் கருப்பை பிரச்சினைகள். கருப்பை பிறவியிலேயே இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கலாம்.

*கருப்பை
உட்சுவர் சதைகள் மற்றும் கருப்பையின் உட்பாகத்தில் ஏதேனும் புண் ஏற்பட்டு
அதன் சதை கெட்டியாக வளர்ந்திருந்தால், கருப்பையில் கரு ஊன்றுவதில் சிக்கல்
ஏற்படலாம். இதை உள்நோக்கிக் கருவி மூலமோ அல்லது கதிர் வீச்சுப் படம் மூலமோ
கண்டுபிடுக்கலாம்.

* பலவீனமான கருப்பை வாய்; இப்பிரச்சினை உள்ள
நோயாளர்களின் வாய் எப்போதும் தளர்ந்தே இருக்கும். கருப்பையில் சிசு
வளர்ந்து கருப்பை வாயினை அழுத்தும் போது பலவீனமான கருப்பையின் வாய்
திறந்து கருச்சிதைவு ஏற்படுகிறது. இதை உள் நோக்கிக் கருவி அல்லது
கதிரவீச்சுப் படம் அல்லது கேளா ஒலி பரிசோதனை மூலமோ அறிந்துக் கொள்ளலாம்.

8.
சுற்றுப் புற சூழலில் உள்ள நச்சுக்களின் தாக்கம் காரணமாகவும் கருச்சிதைவு
ஏற்படலாம். பெண்கள் தொடர்ந்து நச்சு வாய்ந்த இரசாயனங்கள் மற்றும்
வாயுக்களுடன் வேலை செய்யும் பொழுது கருவுற்றால், இந்த நச்சுத் தாக்கம்
சிசுவை பாதித்து கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆண்களும் இம் மாதிரி சூழலில்
வேலை செய்யும் பொழுது, அவர்களுடைய விந்தணுக்கள் பாதிக்கப்படுகிறது.
புகைபிடித்தல், மது அருந்துதல், போதை மருந்துக்கு அடிமை போன்றவைகளும்
இதற்கு விதிவிலக்கல்ல.

9. உணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளின்
காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். தாயானவள் துக்கம், வேதனை, தனிமை,
மனச்சோர்வு போன்ற பல்வேறு உணர்ச்சிகளால் பாதிக்கப்படும்போது பாதிப்பின்
தன்மைக்கேற்ப கருச்சிதைவு ஏற்படுகிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum