TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? எயிட்ஸ் AIDS- HIV

2 posters

Go down

முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? எயிட்ஸ் AIDS- HIV Empty முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? எயிட்ஸ் AIDS- HIV

Post by logu Thu Apr 15, 2010 9:19 am

அண்மையில் எனது ஹாய் நலமா? இணைய புளக்கில் ஒரு படம் போட்டிருந்தேன்.
இளைஞனும் யுவதியும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் படம். அது
தொடர்பாக எனக்குப் சில ஈ மெயில்கள் ஒரு சில பின்னூட்டுகளும் கேள்விகளாக
வந்திருந்தன.

காரணம் வேறொன்றும் இல்லை நான் அதற்குக் கொடுத்த விளக்க வாசகம்தான். அது பலரையும் யோசிக்க வைத்துவிட்டது.

எதிர்மாறாக மற்றொரு மரியாதைக்குரிய மனிதர் மருத்துவ ஆலோசனைக்காக வந்திருந்தார்.
அவரது கையில் ஒரு மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை
ரிப்போட் இருந்தது.
நல்ல காலம் இது நெகட்டிவ் ஆக இருந்தது.

இரண்டுமே எயிட்ஸ் பற்றியவைதான்.

அவருக்கு மணஉறவுக்கு அப்பால் ஒரு பெண் தொடர்பு இருந்தது. அவளின் கணவன் ஊரோடு இல்லாதது இவருக்கு வாசியாகிவிட்டது.
இடையிடையே தாகம் தணித்துக் கொள்வார்.

ஆயினும் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தார். ஆணுறை உபயோகிக்கத் தவறுவதேயில்லை.

நண்பர் ஒருவர் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். முத்தமிடும் போதும் தொற்றுமென!

முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? எயிட்ஸ் AIDS- HIV Extramarital-affair

"நெறிக்கட்டிக் காய்ச்சல் மட்டுமின்றி எயிட்ஸ் நோயும் முத்தமிடுவதால்
தொற்றும்" என இணையப் படத்தில் வாசகம் எழுதியதற்காகவே என்னிடம் சந்தேகம்
தீர்க்கப் பலர் தொடர்பு கொண்டார்கள்.

அக் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக்குங்கள்

உண்மையில் முத்தமிடுவதால் எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமி (HIV) தொற்றமா?

அதற்கு விடை கூறுவதற்கு முதல் HIV எவ்வாறெல்லாம் தொற்றும் என்பதைப்
பார்க்கலாம். முக்கியமாக முன்று விடயங்கள் பாதகமாக இருக்க வேண்டும்.

• HIV தொற்றுள்ளவரின், கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங்களான
இந்திரியம், பெண்ணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம், இரத்தம்,
போன்றவற்றுடன் மற்றவர் தொடர்புற வேண்டும்.
• அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண்டும்.
வெட்டுக்காயம், புண், தோல் அரிப்பு, உரசற் காயங்கள் போன்றவை சில
உதாரணங்களாகும்.
• வேறு ஊடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரைவாக நோயாளியிலிருந்து மற்றவருக்கு கிருமி கடத்தப்பட வேண்டும்.
மனித உடலுக்கு வெளியே HIV கிருமியால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதாலேயே மிக விரைவாகக் கடத்தப்பட வேண்டும்.

H1N1 புதிய இன்புளுவன்சா காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் கிருமி இதற்கு மாறாக
மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்றவற்றில் கூட நீண்டநேரம் உயிர்
பிழைத்திருந்து நோயைப் பரப்பும் வல்லமை வாய்ந்தது. எனவே வேகமாகத் தொற்றும்.

ஆனால் HIV கிருமி அவ்வாறல்ல. மனித உடலுக்கு வெளியே, தான் நீண்ட நேரம்
வாழாதிருந்து மனிதனைக் காப்பாற்ற முயல்கிறது. ஆனால் மனிதன் முறை தவறிய காம
இச்சையால் நோயைத் தேட முன்னிற்கிறான்.

HIV கிருமி தொற்றும் முக்கிய வழிமுறைகளாவன.

முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? எயிட்ஸ் AIDS- HIV Hiv+Transmission

1. நோயுற்றவருடன் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்தல்
2. நோயுற்றவருக்குப் போட்ட ஊசியை மற்றவர்கள் உபயோகிப்பது (Needles and
Syringes). இது முக்கியமாக போதை ஊசி ஏற்றுபவர்களிடையே பரவுவதற்குக்
காரணமாகிறது.
3. தாயிலிருந்து குழந்தைக்கு. பிறக்கும் நேரத்திலும் பின் பாலூட்டுவதாலும்.
4. இரத்த மாற்றீடு முன்பு ஆபத்தானதாக இருந்த போதும் இப்பொழுது எல்லா

இரத்தமும் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுவதால் பெரும்பாலும் பாதுகாப்பானதே.

ஏனைய உடற் திரவங்களான எச்சில், வியர்வை, சிறுநீர், கண்ணீர் போன்றவற்றில் மிகக் குறைந்தளவு HIV கிருமியே இருக்கிறது.

இதனால் இவற்றின் ஊடாக தொற்றுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். இதனால்தான் பலரும் என்னிடம் சந்தேகம் எழுப்பினார்கள்.

எச்சிலால் தொற்றாது என்பதை விவாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம்.

ஆனால் எச்சிலில் இரத்தம் கலந்திருந்தால் என்ன நடக்கும்?

எனவே முத்தமிடுவதால் தொற்றாது என நிச்சயமாகக் கூற முடியாது.

இப்படி ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நோயுள்ளவர் தனது நோயானது பங்காளிக்குத் தொற்றக் கூடாது என்பதற்காக அல்லது தனது வாய் நாற்றத்தை மறைப்பதற்காக,
உறவுக்கு முன் குளித்து தன்னைச் சுத்தம் செய்து கொள்கிறார்.
அத்துடன் வாயையும் பிரஸ் பண்ணிக் கொள்கிறார்.

ஆனால் அவருக்கு முரசு கரைதல் நோயிருக்கிறது.
அதனால் பிரஸ் பண்ணும்போது சிறிது இரத்தம் கசிகிறது.
உடனடியாகவே உறவுக்குச் செல்கிறார்.

அவரது பங்காளிக்கும் முரசு கரைகிறது.
அல்லது வாய்ப் புண் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நோயுற்றவரின்
இரத்தத்தில் உள்ள HIV கிருமி மற்றவரது புண் ஊடாகத் தொற்றி விடும்.

உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரம் ஒன்று மருத்துவ கோவைகளில் பதியப்பட்டுள்ளது.

HIV தொற்றும் முறைகள் பற்றி மேலும் விபரமாக அறிய இங்கே கிளிக்குங்கள்

மற்றொரு சாத்தியத்தையும் கவனியுங்கள். நோயுற்றவர் உறவின் போது உணர்ச்சி வேகத்தில் மற்றவரது உதட்டைக் கடித்துவிடுகிறார்.
நுண்ணிய சிறுகாயம்தான்,
ஆனால் அதன் ஊடாக கிருமி பரவிவிடலாம் அல்லவா?

இவ்வாறு உறவின் போதல்ல, ஆனால் கோபத்தில் கையில் கடித்ததால் HIV தொற்றியதற்கும் ஆதாரம் உண்டு.

மற்றொருவர் வந்தார்.
அவர் அடிக்கடி மேயப் போவார்.
ஆனால் அவரும் ஆணுறை அணியத் தவறுவதேயில்லை.
ஆனால் அவருக்கு மற்றொரு பழக்கம் இருந்தது.

அதுதான் வாய்ப் புணர்ச்சி. மிக ஆபத்தானது.
நல்ல காலம்! இரத்தப் பரிசோதனையில் ஏற்கனவே தொற்றியிருக்கவில்லை.

விளக்கி அனுப்பியதால் பிறகு அவதானமாக இருந்திருப்பார் என நம்பலாம்.

பாலுறவால் அன்றி வேறு காரணங்களால் கிருமி தொற்றியிருந்தாலும் அது இரத்தப்
பரிசோதனையில் வெளிக்காட்ட 2 முதல் 8 வாரங்கள் வரை தாமதமாகலாம். சிலருக்கு
3 மாதங்களுக்கு மேலும் செல்வதுண்டு. அவ்வளவு காலமும் நிச்சமான முடிவு
தெரியாது பதற்றத்திலும் பயத்திலும் மூழ்கியிருப்பதிலேயே பலருக்கு பாதி
உயிர் போய்விடுவதுண்டு.

இருந்தபோதும், பலரும் பயப்படுவதுபோல
தொட்டுப் பேசுவதாலோ,
அருகில் இருப்பதாலோ,
உடைகள், சோப், கப், கோப்பை ஆகியவற்றைப் பகிர்ந்து கொளவதாலோ HIV தொற்றுவதில்லை.

காற்றினாலும் நீரினாலும் தொற்றுவதில்லை. நுளம்பு போன்ற பூச்சிக் கடிகளாலும் தொற்றாது.

இவ்வாறேல்லாம் இலகுவில் இந்த நோய் தொற்றாமலிருக்க இயற்கை எங்களுக்கு
வாய்ப்பளித்துள்ளது. எமக்குக் கிட்டிய வரம் போன்றது. ஆனால் அடங்காத
இச்சையால் முறை தவறி நடந்து தேடித் தேடி நோயைத் தொற்ற வைக்க முயல்கிறோம்.

முத்தமிடுவதால் தொற்றுமா தொற்றாதா என்ற ஆரம்பக் கேள்விக்கு வருவோம்.

"உலகில் ஒரே ஒரு தடவைதான் இவ்வாறு தொற்றியதற்கான ஆதாரம் இருக்கிறது. எனவே
நம்பத்தகுந்தது அல்ல என்றோ அல்லது அது போதிய ஆதாரம் அல்ல" என்று நீங்கள்
கருதினால் உங்கள் தேர்வை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

சந்தோசமாக, ஆசைப்பட்டவருக்கு,
விரும்பியவருக்கு எல்லாம்
வாயால் ஆழ்
முத்தம் கொடுங்கள்.
கொடுத்துக் கொண்டேயிருங்கள்.

அதிர்ஸ்டம் உங்கள் பக்கமிருந்தால் தப்பிவிடுவீர்கள்.

இல்லையேல் ஒரு சில வருடங்களில் பாலுறாவால் தொற்றும் நோய்களுக்கான (STD) கிளினிக்கில் உங்களைக் காண வேண்டியிருக்கும்.

முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? எயிட்ஸ் AIDS- HIV Acute+HIV+infection
மேற்
கூறிய ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான பல காய்ச்சல்கள் வரும்போதும்
தோன்றுபவை. இவற்றை வைத்து ஒருவருக்கு எச்ஐவீ தொற்றியிருக்கிறதா என்பதை
உறுதியாகச் சொல்ல முடியாது.

இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை கூட செல்லலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.thanks:ஹாய் நலமாblogsspot.com
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? எயிட்ஸ் AIDS- HIV Empty Re: முத்தமிடுவதால் தொற்றுமா? தொற்றாதா? எயிட்ஸ் AIDS- HIV

Post by Rikaz Thu Apr 15, 2010 10:00 am

தகவலுக்கு நன்றி!
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum