TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...

2 posters

Go down

ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை... Empty ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...

Post by மாலதி Thu Jan 24, 2013 6:59 am

ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை... 69666_553708811307814_1657235205_n
மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை...

இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான்
வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே?’’ -
கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்...’’ என்றார்
ரூசோ! ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான
வாழ்க்கை... கை நிறைய பணம்... இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற
அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க்
எடுத்தேன்!’’ - சிரிக்கிறார் ரூசோ.

சிவகங்கை மாவட்டம் கல்லலை
ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரூசோ. ‘மரைன் டெக்னாலஜி’
படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்தவர், இயற்கை விவசாயம் செய்வதற்காக வேலையை
விட்டுவிட்டு வந்து நின்றார். இன்று சென்னையில் திருவான்மியூர், பெசன்ட்
நகர், நீலாங்கரை ஆகிய இடங்களில் ‘தி நேச்சுரல் ஸ்டோர்’ என்ற இயற்கை வேளாண்
பொருட்கள் விற்பனை மையத்தை நடத்துகிறார். மாதம் ரூ.15 லட்சத்துக்கு மேல்
பரிவர்த்தனை நடக்கும் இவரது கடைகளில் 30க்கும் அதிகமானோர் வேலை
செய்கிறார்கள்.

‘‘அப்பாவுக்கு என்னை எஞ்சினியர் ஆக்கிப்
பாக்கணும்னு ஆசை. என் கனவு வேற... வித்தியாசமா ஏதாவது பிசினஸ் பண்ணணும்.
கடைசியில அப்பாதான் ஜெயிச்சார். படிப்பு முடிச்சவுடனே ‘ஷிப்பிங்
கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வில ஜூனியர் எஞ்சினியரா வேலை கிடைச்சுச்சு. 40
ஆயிரம் ரூபா சம்பளம். பாம்பே பறந்துட்டேன். கப்பல்ல ஜெனரேட்டரை இயக்குறது,
எஞ்சின் மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளை பராமரிக்கிறது... இதுதான் வேலை.
கடலாறு மாதம், நாடாறு மாதம்!’’ - மெல்லிய புன்னகை படர பேசுகிறார் ரூசோ.

இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர் ராஜரீஹா, எம்.பி.ஏ படித்தவர். மா, பலா,
நெல்லி என 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். இளையவர் ஜோஸ்பினுக்கு
தேனீ வளர்ப்புதான் தொழில். அப்பா ஓய்வுபெற்ற பிறகு, மூத்த அக்காவின்
விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.

“வேலைக்குச் சேர்ந்து
ரெண்டாவது வருஷம் சீனியர் எஞ்சினியரா ஆகிட்டேன். 1 லட்சம் ரூபா சம்பளம்.
எல்லா வசதிகளும் இருந்தும் மனசு மட்டும் வேலையில ஒட்டலே. எந்த சவாலும்
இல்லாத வேலை. தினமும் அதே கடல்... அதே கப்பல்... அதே எஞ்சின்...
வெறுப்பாயிடுச்சு. ‘இதில என்ன சாதிக்கப் போறேன்’னு மனசு கேட்குது. இன்னும்
மூணு வருஷத்தில தலைமைப் பொறியாளர் ஆகலாம். மாசம் 5 லட்சம் ரூபா சம்பளம்
கிடைக்கும். ஆனா, இதே கப்பல்தான்... இதே கடல் தான்... இதே எஞ்சின்தான்...
கற்பனை பண்ணவே கஷ்டமா இருந்துச்சு...

ஒருமுறை முத்துப்பட்டிக்கு
வந்திருந்தப்போ இயற்கை விவசாயிகள் கூட்டத்துக்கு அக்காகூட போயிருந்தேன்.
கப்பல் வேலையை விட்டுட்டு விவசாயத்தில இறங்கணும்னு முடிவெடுத்தது
அங்கேதான். இன்னைக்கு சந்தைக்கு வர்ற எல்லா உணவுப்பொருளும் ரசாயனத்துல
குளிச்சுத்தான் வருது. நிலமும் ரசாயனத்துக்குப் பழகிருச்சு. நிலத்தை மீட்டு
இயற்கை விவசாயம் செய்றது சாதாரணமில்லை. ஆனா, அப்படி விளைவிக்கிற
பொருட்களுக்கு எங்க பகுதியில மரியாதை கிடைக்கலே. பளபளப்பும் கலரும்தான்
மக்களுக்கு பெரிசா தெரியுது. அந்தக் கூட்டத்தில விவசாயிகள் இந்த விஷயங்களை
ஆதங்கமா பேசினாங்க. அப்போதான் எனக்குள்ள ஒரு பொறி கிளம்புச்சு. நாம ஏன்
இந்தப் பொருட்களை மார்க்கெட் பண்ணக்கூடாது?
செயல்ல இறங்கிட்டேன்.
முதல்ல ஆர்கானிக் பொருட்களை விற்கறதுல இருக்கற பிரச்னைகளை அலசுனேன்.
சென்னையில் ஆரம்பிச்ச வேகத்திலேயே நிறைய கடைகளை மூடிட்டாங்க. அதுக்கு சில
காரணங்கள் இருந்துச்சு. நாட்டு மருந்துக்கடை மாதிரி இறுக்கமா கடைகளை
வச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம் வச்சு பிரமாண்டமா யாரும் செய்யலே.
அதனால நமக்கு தொடர்பில்லாத இடம்னு மக்கள் நினைச்சாங்க.

கடுகுல
இருந்து வெங்காயம் வரைக்கும் எல்லாப் பொருளும் அந்தக் கடையில கிடைக்கணும்.
அப்போதான் தேடி வருவாங்க. ரசாயனத்தில விளையுற பொருட்களைவிட
இயற்கைப்பொருட்களோட விலை 20 சதவீதம் அதிகமா இருக்கும். அதனால இதை வாங்கற
மக்கள் வசிக்கிற பகுதிகள்லதான் கடை தொடங்கணும். எல்லாத்தையும் அலசி ஒரு
புராஜெக்ட் ரெடி பண்ணினேன். கையோட ராஜினாமா லெட்டரையும் அனுப்பிட்டேன்!’’ -
விளக்குகிறார் தைரியமான முடிவெடுத்த அந்தத் தருணத்தை.

முதலில்
வயலில் இறங்கி இயற்கை விவசாயம் முழுமையாகக் கற்றபிறகே அடுத்த அடி எடுத்து
வைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப் போய் அங்கு இயற்கை விவசாயம்
செய்றவங்களைப் பாத்து பிசினஸ் பேசுனேன். தமிழ்நாட்டுலயும் தேடிப் பிடிச்சு
ஒப்பந்தம் போட்டேன். சென்னை எனக்குப் புதுசுங்கிறதால கல்லூரி நண்பர்கள்
அருள்ராஜ், ஜான் ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்தில முதல்
கடையைத் திறந்தேன். 5 லட்சம் ரூபா முதலீடு.

வெறும் வறட்டு
வியாபாரமா இல்லாம நிறைய புதுமைகள் செஞ்சோம். இயற்கை தானியங்கள்ல இனிப்புகள்
செஞ்சு வாடிக்கையாளர்களுக்கு இலவசமா கொடுத்தோம். பாரம்பரிய அரிசி ரகங்கள்ல
செய்யப்பட்ட உணவுகளை வச்சு ‘ஃபுட் ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்ல ஸ்டால்
போட்டு சாம்பிள் கொடுத்தோம். கஸ்டமர்கள் மொபைல் நம்பரை வாங்கிவச்சு புதிய
பொருட்கள் வரும்போது எஸ்எம்எஸ் அனுப்பினோம். முடக்கத்தான்,
முள்ளுமுருங்கைன்னு கிடைக்காத பொருளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தோம். ஒரே
வருஷத்தில நாங்க எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு!’’ - மகிழ்கிறார் ரூசோ.

இப்போது தனியாக 3 கடைகளை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு
மொத்த சப்ளை செய்கிறார். நகரத்து வெம்மையை போக்கி வீடுகள்தோறும் பசுமை
பூக்கச்செய்யும் அரிய பணியையும் செய்கிறார். கான்க்ரீட்டுக்குத் தப்பி
மிஞ்சியிருக்கும் இடங்களிலும் மாடியிலும் இயற்கை முறைப்படி தோட்டம்
அமைத்துத் தருகிறார். விதைகளும் பயிற்சியும் அளிக்கிறார். ஈகோ டூரிஸம் என்ற
பெயரில் பசுமைச்சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.

‘‘இப்போ நிக்க
நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியா வேலை செய்றேன்.
தலைமைப் பொறியாளரா ஆகியிருந்தா என்ன சம்பாதிப்பேனோ, அதைவிட அதிகமா
சம்பாதிக்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமில்லாம மண்ணுக்கும் சேவை செய்ற
திருப்தி இருக்கு...’’

உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் உற்சாகத்தைக் கிளறிவிட்டு நிறைவுசெய்கிறார் ரூசோ!

நன்றி :- தினகரன் கட்டுரை Via சத்தியானந்தன் சுப்பிரமணியன் பானுமதி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை... Empty Re: ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...

Post by ஜனனி Thu Jan 24, 2013 8:44 pm

ஆம் கண்டிப்பாக பின்பற்றாலாம் ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை... 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புக்ல (BOOK)நீங்க படிப்பிங்க ஆனா இவங்களை பாருங்க
» வாழ் நாள் முழுவதும் ஃபாலோ செய்யும் கேமரா! video
» காதலியின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்க ஆசையா? இத ஃபாலோ பண்ணுங்க...
» மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி? ஃபாலோ பண்ண வேண்டிய ஃபார்முலாக்கள்
» நீங்கள் எப்போதும் அழகாய் இருக்க இந்த மார்னிங்க் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum