TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"2ஜி' வழக்கில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது: நீதிபதிகள் கண்டிப்பு

Go down

"2ஜி' வழக்கில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது: நீதிபதிகள் கண்டிப்பு Empty "2ஜி' வழக்கில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது: நீதிபதிகள் கண்டிப்பு

Post by mmani Fri May 06, 2011 7:23 am

புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்குடன் தொடர்புடைய வரி ஏய்ப்பு
வழக்குகளில், வருமான வரித்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக இல்லை;
விசாரணையில் வேகம் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய எவரும் தப்ப முடியாது என்றும் கோர்ட்
கண்டிப்பாக தெரிவித்தது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, அரசின் பல்வேறு
நிறுவனங்கள் நடத்தி வரும் விசாரணையை கண்காணிப்பதில் அரசுக்கு உதவ இரண்டு
தனிநபர்களை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி, பொது நல அமைப்பு ஒன்று
சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று நீதிபதிகள்
சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன்
விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி
வழக்குடன் தொடர்புடைய வரி ஏய்ப்பு வழக்குகளில், வருமான வரித்துறையின்
விசாரணை திருப்தி அளிப்பதாக இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக புகார் மனு
பெற்றது, கம்பெனிகளின் தொடர்பு அதிகாரி நிரா ராடியாவின் தொலைபேசி
உரையாடல்களை பதிவு செய்தது முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் குறித்து வருமான வரித்துறையினர் விரிவான அறிக்கை தாக்கல்
செய்ய வேண்டும். இந்த வழக்கு சாதாரண வரி ஏய்ப்பு வழக்கு அல்ல. அதனால், இது
தொடர்பான விசாரணையை மிக விரைவாக நடத்த வேண்டும். சாதாரண வழக்குகளைப் போல,
இந்த வழக்கையும் சாதாரணமாக கையாளக் கூடாது. விசாரணையை துரிதப்படுத்தி,
வருமான வரித்துறையினர் விரைவில் முடிவை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு
நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த வருமான வரித்துறையினர், "வரி ஏய்ப்பு தொடர்பான
விசாரணைகள் ஐந்தாவது கட்டத்தை எட்டியுள்ளன. மெதுவாக நடக்கின்றன என்ற
பேச்சுக்கே இடமில்லை' என்றனர். இந்தப் பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள்
கூறியதாவது: உங்களின் பதில் எங்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. விசாரணை
எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.
விசாரணையில் கிடைத்த முடிவுகள் தான் எங்களுக்கு அவசியம். ஸ்பெக்ட்ரம்
மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கம்பெனிகளின்
அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் தனி
நீதிபதியை வருமான வரித்துறையினர் அணுக வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அரசின் பல்வேறு நிறுவனங்கள் நடத்தும்
விசாரணையை கண்காணிக்க, கோர்ட்டிற்கு உதவியாக இரண்டு தனி நபர்களை நியமிக்க
வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பொது நல மனுவை நாங்கள் விசாரணைக்கு
ஏற்கிறோம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் எந்த அதிகாரத்தில்,
பதவியில், வசதி வாய்ப்புடன் இருந்தாலும், அவர்கள் நீதியின் முன்
நிறுத்தப்படுவர். அதை கோர்ட் உறுதி செய்யும். இவ்வாறு நீதிபதிகள்
தெரிவித்தனர்.
தப்ப முடியாது: இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த
சி.பி.ஐ., "ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய யாரும் தண்டனையில் இருந்து தப்ப
முடியாது. ரிலையன்ஸ் மற்றும் டாடா நிறுவனங்களுக்கும் ஊழலில் உள்ள தொடர்பு
குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி
தொடர்பான புதிய விசாரணை அறிக்கை, கோடை விடுமுறைக்குப் பின் தாக்கல்
செய்யப்படும்' என தெரிவித்தது. பொது நல அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல்
பிரசாந்த் பூஷன், ""2ஜி லைசென்ஸ் பெற ரிலையன்ஸ் காம் நிறுவனத்திற்கு
தகுதியில்லை. அதனால், சுவான் டெலிகாம் நிறுவனம் மூலம் இதைப் பெற்றுள்ளது.
""ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு இந்த நிறுவனத்தில் 50 சதவீத பங்கு
உள்ளது. இவரை காப்பாற்ற சி.பி.ஐ., முற்படுகிறது. அவரது நிறுவனத்தின்
ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது,'' என்றார். வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு
வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும்
13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். வழக்கு விசாரணையை கண்காணிக்க இரண்டு
தனிநபர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அன்றைய தினம்
உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் தப்ப முடியாது : பாகிஸ்தானுக்கு ஒபாமா எச்சரிக்கை
» இலங்கை அரசு தப்ப முடியாது - அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
» பாஸ்போர்ட் முடக்கம்: உதயகுமார் கும்பல் வெளிநாடு தப்ப முடியாது
» புல்லருக்கு மரண தண்டனை: ராஜீவ் கொலை குற்றவாளிகளும் தப்ப முடியாது - உச்ச நீதிமன்றம்
» மனித உரிமைகள் சட்டங்களை உதாசீனப்படுத்துவதை அனுமதிக்க முடியாது! - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum