TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


”படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” – பா. ம. க. பற்றி முதல்வர்!

Go down

”படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” – பா. ம. க. பற்றி முதல்வர்! Empty ”படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” – பா. ம. க. பற்றி முதல்வர்!

Post by ஜனனி Mon May 13, 2013 2:30 pm

”அரசியல் கட்சிகளுக்கு உள்ள பொதுவான இலக்கணங்களுக்கு மாறாக, பாட்டாளி
மக்கள் கட்சி கடந்த சில தினங்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது.
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் ஊறு
விளைவித்தல், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்தல், அரசு
அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களில்
பட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபடுவதை எனது அரசு ஒரு போதும் சகித்துக்
கொள்ளாது.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களை தூண்டுவோர் மீது மிகக்
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர்
மீது குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழும்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு
ஏற்பட்டுள்ள இழப்பு கணக்கிடப்பட்டு, அந்த இழப்பை 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு
பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தின்படி பாட்டாளி
மக்கள் கட்சியினரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.”என்று
முதல்வர் தெரிவித்துள்ளார்.

”படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” – பா. ம. க. பற்றி முதல்வர்! JAYA
வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறைச்
சம்பவங்கள் குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது பதிலுரையில், ”பாமக
நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் வன்முறை
காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து
எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது
உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள்.

பாமகவினர் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடத்திய ‘சித்திரை
முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா’-வின் போது மரக்காணத்தில் நடைபெற்ற
வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் 29.4.2013 அன்று சிறப்பு
கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்கள் தங்களது
கருத்துகளை தெரிவித்தனர்.

அதற்குப் பதில் அளித்து பேசிய போது, சுய லாபத்திற்காக அப்பாவி
பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறைச்
செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில்
ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக
இருந்தாலும் அவர்கள் மீது எந்த வித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்றும், வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு
ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்கவும் இந்த அரசு தயங்காது என்றும் தெரிவித்து இருந்தேன்.

இந்நிலையில், மரக்காணம் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்
என்று கூறி, 30.04.2013 அன்று விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில்
மிகப் பெரிய அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும்,
01.05.2013 அன்று அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலை நகரங்களில் தொடர்
முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும் டாக்டர் ராமதாஸ் ஓர் அறிக்கை
வெளியிட்டார்.

மரக்காணம் சம்பவத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள்
நடத்துவது வன்முறைக்கு வழிகோலும் என்பதாலும், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி
கொடுப்பதில்லை என்ற முடிவை காவல் துறை எடுத்தது.

இதனை அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்த தொடர் முழக்கப்
போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, அதற்கான ஆணை அக்கட்சியின் விழுப்புரம்
நகரச் செயலாளருக்கு சார்வு செய்யப்பட்டது. காவல் துறையினர் முறையாக,
பேராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்திருந்தும்
அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அம்மாவட்டத்தில் அப்போது நிலவி வந்த
சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாது, காவல் துறையினர் சட்டம் ஒழுங்கினை
பராமரிக்க ஒத்துழைப்பு அளிப்பதற்குப் பதிலாக, பொறுப்பில்லாமல் தடையை மீறி
அனுமதி மறுக்கப்பட்ட போராட்டத்தை தலைமையேற்று நடத்த 30.4.2013 அன்று
பிற்பகல் 12.15 மணியளவில், தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம்
அருகே சட்ட விரோதமாகக் கூடியதால், வேறு வழியின்றி டாக்டர் ராமதாஸ்,
ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கைது
செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, திருச்சி
மத்திய சிறையில் வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் பல இடங்களில் சாலைகளை
மறித்து, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து
வருகின்றனர்.

இதற்கிடையில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய
அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் ராமதாஸை அரசு கைது செய்து
சிறையில் அடைத்து, அரசியல் பழிவாங்கும் படலத்தை தொடங்கிவிட்டதாகவும்;
ராமதாஸ் கைது செய்யப்பட்ட பின்னர் அலைக்கழிக்கப்பட்டு, கொடுமைப்
படுத்தப்பட்டதாகவும்; கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்
என்றும் அறிக்கை வெளியிட்டார். டாக்டர் அன்புமணி ராமதாஸின் இந்த அறிக்கை
“எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார் போல்” என்ற பழமொழிக்கேற்ப வன்முறையை
தூண்டும் விதமாக அமைந்தது.

மேலும், இக்கட்சியினர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் பேருந்துகள் மீது
கற்களை வீசியதில் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் வாகனங்கள்
சேதமடைந்தன. இக்கல் வீச்சு சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளது
மட்டுமின்றி மரணங்களும் நடந்துள்ளன.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலைய சரகம், அண்ணா மடுவில் உள்ள
அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. எஸ்.எஸ்.ரமணிதரன் அவர்களது
அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சைக்கிள் டயரில் மண்ணெண்ணை ஊற்றி
தீ வைத்து விஷமிகள் உள்ளே வீசியதில், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், குளிர்
சாதன இயந்திரம், மரப் பொருட்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்துள்ளன. இது
தொடர்பாக, 5.5.2013 அன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, அந்தியூர் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய முன்னாள்
அமைப்பாளர் திரு. குருசாமி உள்ளிட்ட ஒன்பது பேர் இத்தீ வைப்பு சம்பவத்தில்
சம்பந்தப்பட்டு இருந்தது தெரிய வந்து அவர்கள் அனைவரும் கைது
செய்யப்பட்டனர். இவ்வழக்கில் திரு. குருசாமி குண்டர் தடுப்புச் சட்டத்தின்
கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தீ வைப்பு சம்பவங்கள் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு
விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் வாகனங்களை
மறித்து, அவர்களை பணி செய்யவிடாமல் பட்டாளி மக்கள் கட்சியினர்
தடுத்துள்ளனர். இதனால், அத்துறையினர் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று
தீயணைப்புப் பணிகளில் ஈடுபட இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

30.4.2013 அன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி
மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்
ராமதாஸ் உள்ளிட்டோர் அன்று சட்டவிரோதமாக தடையை மீறி கூடிய போது அவர்களை
காவல் துறையினர் கைது செய்த காரணத்திற்காக, அக்கட்சியினர் மாநிலத்தில் பல
இடங்களில் தொடர்ந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு, பேருந்துகள்
மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தீ வைத்தல், பேருந்துகள் மீது கல் வீசி
பயணிகளுக்கு காயம் விளைவித்தல், நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களை வெடி
பொருட்கள் வைத்து சேதப்படுத்துதல், நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களை வெட்டிச்
சாய்த்து சாலைகளில் தடைகள் ஏற்படுத்துதல், மரங்களை தீ வைத்து கொளுத்துதல்,
ஓடுகிற ரயில் வண்டி மீது தீப் பந்தத்தை எறிதல், அரசு அலுவலகங்கள், அரசு
கிடங்குகள், நியாய விலைக் கடைகள், பேருந்துப் பணிமனைகள் ஆகிவற்றைத் தீ
வைத்து சேதப்படுத்துதல், காவல் துறை வாகனங்களைத் தாக்கியும், தீ வைத்தும்
சேதப்படுத்துதல், பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயை
சேதப்படுத்துதல், இத்தகைய மக்கள் விரோத செயல்களைத் தடுக்க முயன்ற காவலர்களை
அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்துத் தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களில்
ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாளி மக்கள் கட்சியினர் நிகழ்த்திய இவ்வன்முறை சம்பவங்கள் காரணமாக
இரண்டு சரக்கு லாரிகள் மற்றும் 14 பேருந்துகள் உட்பட 16 வாகனங்கள் தீக்கிரை
ஆகியுள்ளதுடன், ஒரு அப்பாவி ஓட்டுநர் தீ காயம் அடைந்து இறந்துள்ளார்.
மேலும், வாகனங்கள் மீது கல் வீசி தாக்கிய சம்பவங்களில் ஒரு அப்பாவி லாரி
ஓட்டுநர் மற்றும் அப்பாவி பயணி ஒருவர் இறந்துள்ளதுடன், 111 பேர் படு காயம்
அடைந்துள்ளனர். மேலும், அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் என
மொத்தம் 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள்
கட்சியினரால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய்
ஆகும். இரண்டு பாலங்கள் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,
நெடுஞ்சாலைகளில் நிழல் தந்து வந்த 120 மரங்கள் சாலைகளில் வெட்டிச்
சாய்க்கப்பட்டும், 45 மரங்கள்எரிக்கப்பட்டும், மொத்தம் 165 மரங்கள்
அழிக்கப்பட்டுள்ளன.

பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஒரு புறம் மரங்களை நடுவதாகக் கூறிக்
கொண்டு, மறு புறம் மரங்களை வெட்டி சாய்ப்பது தீ வைத்து எரிப்பது என்பது
“படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழியைத் தான் நினைவு
படுத்துகிறது.

காவல் துறையினர், கடந்த பல நாட்களாக பட்டாளி மக்கள் கட்சியினரின்
வன்முறைச் செயல்களை தடுக்க முழு வீச்சில் தங்களது திறன் முழுவதையும்
உபயோகித்து நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டும், முக்கிய
இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும், மேலும் வன்முறைச் சம்பவங்கள்
நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் சட்டம் ஒழுங்கைப்
பராமரித்து வருகின்றனர்.

மேலும், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு
செய்து கைது செய்து வருகின்றனர். இதுவரை 5,720 நபர்கள் தடுப்பு
நடவடிக்கையாகவும், 1,744 நபர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் கைது
செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 20
நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்
கீழும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியினர், கடந்த சில நாட்களாக நிகழ்த்தி வரும்
வன்முறைச் செயல்களினால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு
நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு
உள்ளாகி உள்ளனர்.
அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளினால் தமிழகத்தில் தொழிற்சாலைகளைத் துவங்க
பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், மாநிலத்தின் மீது
அவர்கள் வைத்துள்ள நல்ல அபிப்பிராயத்திற்கு களங்கம் ஏற்படுத்தி, தொழில்
முதலீட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பாட்டாளி மக்கள்
கட்சியினரின் வன்முறை அமைந்துள்ளது.

சிறையில் இருந்து பிணையில் வெளி வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பத்திரிகையாளர்கள் இடையே பேசுகையில், பா.ம.க.வினர் மீது மேற்கொண்டுள்ள
நடவடிக்கைகளை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று
கூறியுள்ளார்.
11.5.2013 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட டாக்டர் ராமதாஸ்
பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனுமதி மறுக்கப்பட்ட
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை நியாயப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு,
“பிரதமர் வீட்டு முன்பும், சோனியா காந்தி வீட்டு முன்பும் அண்மையில்
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் ஒரு அமைச்சரும்
தாக்கப்பட்டார். அதற்கு அனுமதி வாங்கவில்லை. அடுத்தபடியாக, தமிழ்நாட்டில்
கம்யூனிஸ்ட்காரர்கள் ரயிலை மறித்தும், சாலைப் போக்குவரத்தை மறித்தும்
மறியல் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதற்கு அனுமதியா வாங்குகின்றனர்?
அவர்களை எல்லாம் அனுமதித்துவிட்டு, இந்த அரசு திட்டமிட்டு என்னை கைது
செய்து, சிறையில் அடைத்து, சிறுத்தைகள் கட்சியினரை தூண்டிவிட்டு
தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி, இது எல்லாவற்றையும் செய்வது
பா.ம.க.வினர் என்று மக்களிடம் பழி கூற திட்டமிட்டு நடத்திக்
கொண்டிருக்கிறார்கள். இது ஏன் என்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில்
ஏற்கெனவே கம்யூனிஸ்ட்களும், ம.தி.மு.க.வும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்து
கொண்டிருக்கின்றனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்துக்
கொண்டு தலித் ஓட்டுகளையும் பெற்று 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா வெற்றி
பெறலாம் என்று நினைத்திருக்கிறார்.” என்று எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத
விதண்டா வாதத்தினை டாக்டர் ராமதாஸ் முன் வைத்தது அபத்தத்தின் சிகரமாகவே
உள்ளது.

அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்தப்பட்டு ஓர் அமைச்சர் புது டெல்லியில்
தாக்கப்பட்டார் என்று சொல்லி பட்டாளி மக்கள் கட்சியினரை டாக்டர் ராமதாஸ்
தூண்டி விடுகிறாரா? பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறுகையில்,
“தமிழ்நாட்டில் நடக்கும் கலவரங்கள் அனைத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள்
கட்சி, தமிழக அரசு, காவல் துறை இவை மூன்றும் தான் காரணம். பா.ம.க. எந்த
வன்முறை செயலையும் செய்யாது” என்று கூறுவதன் மூலம் பா.ம.க.வினர் நிகழ்த்திய
வன்முறைகளிலிருந்து தப்பித்துவிடலாம் என்று டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார்.
இதைப் போன்று என் மீதும், தமிழக அரசின் மீதும், காவல் துறை மீதும்
அவதூறுகளைப் பரப்பி வரும் டாக்டர் ராமதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கைகள்
எடுக்கப்படும். அவர் மீது அரசின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல்
செய்யப்படும்.

“சிறையில் இருந்து வெளியே சென்ற உங்கள் தொண்டர்களுக்கு என்ன அறிவுரை
சொல்லப் போகிறீர்கள்?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “இது போன்ற
அடக்குமுறைகளை கண்டு நானும் எனது தொண்டர்களும் சோர்வடைய மாட்டோம். ஆகவே,
நீங்கள் எல்லாம் அமைதி காக்க வேண்டும்” என்று சொல்லி உள்ளார் டாக்டர்
ராமதாஸ். பெட்ரோல் குண்டுகளை வீசுவதிலும், கல் எறிவதிலும், பொதுச்
சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்துவதிலும், அப்பாவிகள்
உயிர் இழக்கச் செய்வதிலும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதிலும்
சோர்வு அடைய மாட்டோம் என்கிறாரா?

டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் “போராட்டம்
தொடரும்” என்று சொல்வதன் மூலம் தங்கள் கட்சியினரை மேலும் வன்முறைப்
போராட்டங்களில் ஈடுபடவே தூண்டி விடுகிறார்கள்.எனவே தான் டாக்டர் ராமதாஸ்
பிணையில் வெளி வந்த பின்பும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறை
தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றும் பேருந்துகள் மீது கல் வீசி உள்ளனர்.
வாகனங்கள் சேதப் படுத்தப்பட்டுள்ளன.

அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளின் கண்ணாடிகள் தாக்கப்படுவதால்
பேருந்துகளின் முன் கண்ணாடி உடைந்து ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்படும்
வாய்ப்புகள் உள்ளதால் பேருந்து ஓட்டுனர்களுக்கு தலைகவசம்
வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு உள்ள பொதுவான இலக்கணங்களுக்கு மாறாக, பாட்டாளி மக்கள்
கட்சி கடந்த சில தினங்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களின்
உயிருக்கும், உடைமைக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் ஊறு விளைவித்தல்,
சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்தல், அரசு அலுவலர்களை பணி
செய்ய விடாமல் தடுத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களில் பட்டாளி மக்கள்
கட்சியினர் ஈடுபடுவதை எனது அரசு ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களை தூண்டுவோர் மீது மிகக்
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர்
மீது குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழும்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுச் சொத்துக்கள், தனியார்
சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு கணக்கிடப்பட்டு, அந்த இழப்பை
1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத்
தடுத்தல்) சட்டத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் இருந்து நஷ்ட ஈடு
பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்
சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீரழிக்கும்
வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக்
கட்சியை தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிதம்பரம் நடராஜர் கோயில்,காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்,காளஹஸ்தி ஆலயம் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை விளக்கும் படம்..
» திருட்டுத்தனமாக பேஸ்புக் தனிமடல் படிப்பது எப்படி?
» முதல்வர் பொறுப்பேற்ற பின் எந்த சொத்தும் வாங்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» ராமாயணம்
» ராமாயணம் 108 வரிகளில்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum