TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆஸி., மண்ணில் அசத்துமா இந்தியா: முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

Go down

ஆஸி., மண்ணில் அசத்துமா இந்தியா: முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் Empty ஆஸி., மண்ணில் அசத்துமா இந்தியா: முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

Post by ஜனனி Mon Dec 26, 2011 7:24 am









ஆஸி., மண்ணில் அசத்துமா இந்தியா: முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் Dravid-Langer


மெல்போர்ன்:
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மெல்போர்னில் இன்று
துவங்குகிறது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை வெற்றியுடன்
துவக்க இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள
இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்
டெஸ்ட், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது.
அனுபவம் அதிகம்:
பலமான
பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியில், அனுபவ வீரர்கள் இருப்பது சாதகமான
விஷயம். சேவக், காம்பிர் ஜோடி சிறந்த துவக்கம் கொடுக்கும் பட்சத்தில்,
இமாலய இலக்கை எளிதில் பெறலாம். ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவ வாய்ந்த
சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' நம்பிக்கை
அளிக்கின்றனர். இவர்களுடன் கேப்டன் தோனியும் அசத்த தயாராக உள்ளார். ஆறாவது
வீரராக களமிறங்க விராத் கோஹ்லி, ரோகித் சர்மாவுக்கு இடையே போட்டி
நிலவுகிறது. இதில் பயிற்சி போட்டியில் சதம் அடித்த கோஹ்லிக்கு அதிக
வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஜாகிர் நம்பிக்கை:
அனுபவ
வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், நீண்ட நாட்களுக்கு பின் சர்வதேச
போட்டியில் விளையாட இருப்பது பவுலிங்கில் பலம் சேர்க்கிறது. இவருக்கு
இஷாந்த் சர்மா ஒத்துழைப்பு தந்தால் நல்லது. சமீபத்தில் இவர்கள்
இருவருக்கும் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால், மிகுந்த
எச்சரிக்கையுடன் பந்துவீச வேண்டும். மீண்டும் காயம், உடற்தகுதி உள்ளிட்ட
பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மெல்போர்ன் ஆடுகளத்தில் இளம்
வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் மிரட்டலாம். "சுழலில்' தமிழக வீரர்
அஷ்வின் சாதிக்கலாம்.
பாண்டிங் எதிர்பார்ப்பு:
ஆஸ்திரேலிய
அணியில், அனுபவ வீரர்கள் குறைவாக இருப்பது பின்னடைவானது. இருப்பினும்
சொந்த மண்ணில் விளையாட இருப்பது சாதகமான விஷயம். கடுமையான போராட்டத்துக்கு
பின், டெஸ்ட் அணியில் இடம் பிடித்த பாண்டிங், மைக்கேல் ஹசி கிடைத்த
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. இவர்களுடன் கேப்டன் மைக்கேல்
கிளார்க், பிராட் ஹாடின் உள்ளிட்டோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த
வேண்டும். பயிற்சி போட்டியில் சதம் அடித்த கோவன், காயத்தில் இருந்து மீண்ட
ஷேன் மார்ஷ், அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னர் ஆகியோர், துவக்க
வீரர்களாக சாதிக்கும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை பெறலாம்.
பட்டின்சன் மிரட்டல்:
ஆஸ்திரேலிய
அணியில் மிட்சல் ஜான்சன், பிரட் லீ உள்ளிட்ட அனுபவ வேகங்கள் இல்லாதது
ஏமாற்றமான விஷயம். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வேகத்தில்
மிரட்டிய இளம் வீரர் ஜேம்ஸ் பட்டின்சன் மீது அதிக எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது. ஓரளவு அனுபவம் பெற்றுள்ள பீட்டர் சிடில் (27 டெஸ்ட்), பென்
ஹில்பெனாஸ் (17 டெஸ்ட்) இருப்பது வேகத்தில் நம்பிக்கை அளிக்கிறது. சுழலில்
நாதன் லியான் சாதிக்க வாய்ப்பு உள்ளது.
முதல் முறையாக ஆஸ்திரேலிய
மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவும், சொந்த மண்ணில் இளம் வீரர்களை
கொண்டு சாதிக்க ஆஸ்திரேலியாவும் காத்திருப்பதால், சவாலான போட்டியை
எதிர்பார்க்கலாம்.

இம்மைதானத்தில் இதுவரை...
மெல்போர்ன்
கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை பத்து டெஸ்ட்
போட்டியில் விளையாடியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா ஏழு (1948, 48, 67, 91, 99,
2003, 07), இந்தியா இரண்டு (1978, 81) போட்டியில் வெற்றி பெற்றன. ஒரு
போட்டி (1985) "டிரா' ஆனது.
* கடந்த 1948ல், இங்கு நடந்த டெஸ்டில்,
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள்
எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக,
இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
* கடந்த 1985ல், இங்கு நடந்த
டெஸ்டில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இதன்மூலம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இம்மைதானத்தில், அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது.
64 ஆண்டில் ... 5 வெற்றி
கடந்த
64 ஆண்டுகளில் 9 முறை ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, 36 டெஸ்ட் போட்டியில்
விளையாடியது. இதில் மெல்போர்னில் இரண்டு (1977-78, 1981), சிட்னி
(1977-78), அடிலெய்டு (2003-04) மற்றும் பெர்த்தில் தலா ஒன்று (2007-08)
என, மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் இந்தியா வென்றுள்ளது.
ஒருமுறை கூட தொடரை வென்றதில்லை.
மழை வருமா?
மெல்போர்னில்,
இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக, அங்குள்ள
வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் முதல் நாள் ஆட்டம்
பாதிக்கப்படலாம். எனவே "டாஸ்' வெல்லும் பட்சத்தில், முதலில் "பீல்டிங்'
தேர்வு செய்தால் நல்லது.
சாதிப்பாரா சச்சின்
மெல்போர்ன்
டெஸ்டில், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தனது 100வது சர்வதேச சதம்
அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 99 சதம் (51 டெஸ்ட் +
48 ஒருநாள்) அடித்துள்ள இவர், இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால்,
"சதத்தில் சதம்' காணலாம். கடந்த மார்ச் மாதம், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக
சதம் அடித்தார். அதன்பின் 4 ஒருநாள், 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய
இவரால், ஒருமுறை கூட சதம் அடிக்க முடியவில்லை.
"பாக்சிங் டே' மோதல்
கிறிஸ்துமஸ்
பண்டிகைக்கு அடுத்த நாள் (டிச.26) "பாக்சிங் டே' என்று அழைக்கப்படும்.
அதாவது ஐரோப்பிய நாடுகளில் ஏழைகளுக்கு உதவ, அங்குள்ள தேவாலயங்களில்,
மரத்திலான பெட்டியை (பாக்ஸ்) வைப்பர். வசதி படைத்தவர்கள் தங்களது
காணிக்கைகளை இந்த பெட்டியில் செலுத்துவர். கிறிஸ்துமசுக்கு மறுநாள் இந்த
பெட்டி திறக்கப்படும். இதிலுள்ள பொருட்களை கொண்டு, ஏழைகளுக்கு உதவுவர்.
பண்டைய
காலத்தில் கப்பல்களில் "கிறிஸ்துமஸ் பாக்ஸ்' வைக்கப்படும். பின் கப்பல்
கரை திரும்பியதும், இந்த பெட்டி பாதிரியாரிடம் தரப்படும். இதிலுள்ள பணம்,
பொருட்கள் ஏழைகளுக்கு அளிக்கப்படும். "பாக்சிங் டே' குறித்து இதுபோல பல
கதைகள் உண்டு. அன்றைய தினம் விடுமுறை என்பதால், விளையாட்டு போட்டிகளை
மக்கள் ஆர்வத்துடன் கண்டு களிப்பார்களாம். இந்த அடிப்படையில் தான்
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில், ஒவ்வொரு ஆண்டும் "பாக்சிங் டே' டெஸ்ட்
நடத்தப்படுகிறது.
இந்திய அணி விவரம்:
தோனி
(கேப்டன்), சேவக் (துணைக் கேப்டன்), காம்பிர், டிராவிட், சச்சின்,
லட்சுமண், விராத் கோஹ்லி, அஷ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அபிமன்யு
மிதுன், ரோகித் சர்மா, பிரக்யான் ஓஜா, வினய் குமார், ரகானே, சகா, ஜாகிர்
கான்.
ஆஸி., அணி விவரம்:
மைக்கேல்
கிளார்க் (கேப்டன்), பாண்டிங், மைக்கேல் ஹசி, பிராட் ஹாடின் (விக்கெட்
கீப்பர்), டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், கோவன், கிறிஸ்டியன், பீட்டர்
சிடில், ஹில்பெனாஸ், பட்டின்சன், மிட்சல் ஸ்டார்க், நாதன் லியான்.
இந்தியா "705'
சிட்னியில்,
2004ல் நடந்த டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,
முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 705 ரன்கள் எடுத்து "டிக்ளேர்'
செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு
செய்தது.
* டெஸ்ட் அரங்கில் இந்திய அணி, இதுவரை 12 முறை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 500 அல்லது அதற்குமேல் ரன்
எடுத்துள்ளது. இதில் ஆறு முறை, ஆஸ்திரேலிய மண்ணில் இம்மைல்கல்லை
எட்டியுள்ளது.
ஆஸ்திரேலியா "674'
அடிலெய்டில்,
1948ல் நடந்த டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி,
முதல் இன்னிங்சில் 674 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக
தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
* டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலிய அணி,
இதுவரை 12 முறை இந்தியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 500 அல்லது
அதற்குமேல் ரன் எடுத்துள்ளது. இதில் ஆறு முறை, ஆஸ்திரேலிய மண்ணில்
இம்மைல்கல்லை எட்டியுள்ளது. இதில் ஒன்பது முறை, சொந்த மண்ணில் இம்மைல்கல்லை
எட்டியுள்ளது.
58 "ஆல்-அவுட்'
பிரிஸ்பேனில்,
1947ல் நடந்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 58
ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது மோசமான
ஸ்கோரை பெற்றது.
* டெஸ்ட் அரங்கில் இந்திய அணி, இதுவரை மூன்று முறை (58,
67, 98 ரன்), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 ரன்களுக்கு குறைவாக சுருண்டது.
இந்த மூன்று மோசமான ஸ்கோர், ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்யப்பட்டது.
83 "ஆல்-அவுட்'
மெல்போர்னில்,
1981ல் நடந்த டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 83
ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், இந்தியாவுக்கு எதிராக தனது மோசமான
ஸ்கோரை பெற்றது.
* டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலிய அணி, இதுவரை இரண்டு முறை
(83, 93 ரன்), இந்தியாவுக்கு எதிராக 100 ரன்களுக்கு குறைவாக சுருண்டது.
இந்த சோகம், ஒரு முறை இந்திய மண்ணிலும், ஒரு முறை சொந்த மண்ணிலும்
நிகழ்ந்தது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தோனி மண்ணில் இந்தியா! * இன்று இங்கிலாந்துடன் 3வது சவால்
» வெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்தியா * இன்று நியூசி.,யுடன் முதல் டெஸ்ட் துவக்கம்
» ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா தோல்வி
» இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட்: இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் டிரா ஆன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum