TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கலைஞரின் குடுமி சும்மா ஆடாது

Go down

கலைஞரின் குடுமி சும்மா ஆடாது Empty கலைஞரின் குடுமி சும்மா ஆடாது

Post by Tamil Tue Feb 16, 2010 10:03 pm

கலைஞரின் குடுமி சும்மா ஆடாது!உதயன் ஆசிரியர் தலையங்கம்

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில்
தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர்
கருணாநிதி.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அரசு
தவறுமானால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இராது என மிரட்
டல் விட்டிருக்கின்றார் அவர்.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விவகாரம்தான். இனிமேல் இதையும் விட மேலும் தீவிரமாக அவர் எகிறிக் குதிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடூர யுத்தம் கட்டவிழ்ந்து, பல்லாயிரக்
கணக்கான அப்பாவித் தமிழர் கள் அநியாயமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதே அதைத்
தடுக்க வக்கற்றவராக இருந்துகொண்டு பல் வேறு அரசியல் திருகுதாள நாடகங்களை
வெற்றிகரமாக அரங்கேற்றிய பெரும் கலைஞர் அவர்.
தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் கூண்டோடு இராஜிநாமாச்
செய்வர் என்ற மிரட்டல் நாடாகத்தோடு தொடங்கி, மாபெரும் மனித சங்கிலிப்
போராட்டம், புதுடில்லி அரசை எச்சரிக்கும் விதத்தில் அனைத்துக் கட்சிக்
குழுவினருடனும் புதுடில்லி படை யெடுப்பு (விஜயம்), உப்புச்சப்பற்ற வகையில்
தமிழக சட்டசபையில் பிரயோசனமற்ற தீர்மானங்கள், "ஐயகோ! தமிழினம்
அழிகின்றதே!' என்னும் சாரப்பட அழுது வடியும் அறிக்கைகள் என்று தொடர்ந்து,
கடைசியாக சுமார் நான்கு மணி நேரம் நடத்திய சாகும்வரையான(?) உண்ணாவிரதப்
போராட்டம் வரை இந்த நாடகங்களின் வரிசை நீண்டது.
இறுதியாக, ஈழத் தமிழருக்கான தமது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை
சில மணி நேரம் கூட நீடிக்கமுடியாத அவர் ஈழத்தில் யுத்தநிறுத்தம்
வந்துவிட்ட தாக அறிவித்துவிட்டு தமது உண்ணாவிரதக் கதையை முடித்துக்
கொண்டமைதான் மிக மோசமான ஈழத் துரோக நடவடிக்கையாகும்.
அவரது அந்த யுத்த நிறுத்தப் பிரகடனம் பற்றிய அறி விப்பின் பின்னர்தான்
வன்னியில் மக்கள் பேரழிவு மிக உச்சத்தை எட்டியது. அந்த அழிவுகள் பற்றிய
சர்வதேசத் தின் கவனத்தைத் திசை திருப்பி, தவறாக வழி நடத்தும் விதத்தில்
கருணாநிதியின் அந்த அறிவிப்பு அமைந்தது. தமது அரசியல் சுயலாபச்
செயற்பாட்டுக்காக, ஈழத் தமி ழர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த கொடூர
யுத்தம் தொடர் பில் சர்வதேசத்தின் கவனத்தை அந்த இக்கட்டான சம யத்தில்
இவ்வாறு தவறான திசைக்குத் திருப்பிவிட்டு "யுத்தம் நின்றுவிட்டது,
தமிழர்கள் அழிவு தடுத்து நிறுத் தப்பட்டுவிட்டது' என்ற தவறான கருத்தியலை
சர்வ தேசத்துக்கும் ஏற்படுத்தி வரலாற்றுத் துரோகமிழைத் தவர் கருணாநிதி
என்பதை உலகத் தமிழினம் மறக்காது.
கடந்த மே மாதத்தில் நடந்த இந்தியப் பொதுத் தேர்த லுக்கு முன்னர்,
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, தனது பெரும்பான்மைக்கு
தி.மு.க. போன்ற தோழ மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருந்தது. அந்தச் சமயத்
தில் கூட ஈழத் தமிழினத்துக்காக மத்திய அரசைக் கொண்டு ஆக்கபூர்வமாக எதையுமே
செய்ய வைப்ப தற்கு லாயக்கற்றவராகவே கருணாநிதி இருந்தார். அச்சம யம்
இலங்கையில் நடந்த யுத்தம் தொடர்பில் ஈழத் தமி ழருக்கு ஆதரவாகச் செயற்பட
வைக்க அல்ல குறைந்த பட்சம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படாமல்
மத்திய அரசைத் தடுக்கக் கூட அவரால் இயலாமல் போயிற்று.
இப்போது கடந்த மே மாதத்துடன் இந்திய அரசியல் நிலைமை இன்னும் மாறிவிட்டது.
புதுடில்லியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தனது கூட் டணிக் கட்சியான தி.மு.க.
போன்றவற்றின் உதவியோ, தயவோ இன்றியே தனித்து தன் சொந்தக் காலில் உறுதியாக
ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட் டது.
ஆனால், மறுபுறமாகத் தமிழகத்தில் கலைஞர் கரு ணாநிதியின் பெரும்பான்மைப்பலம்
இல்லாத தி.மு.க. அரசோ, தனது ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குத் தொடர்ந்தும்
காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆதரவில் தங்கிநிற்க வேண்டிய கட்டாயம்.
இந்த நிலையால் ஈழத் தமிழர் விடயத்தில் கலைஞர் கருணாநிதியின் கூத்தெல்லாம்
வெறுமனே இலங்கை அரசுக்கு எதிராக மட்டுமே இருக்கமுடியும். மத்தியில்
ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசுடன் முட்டுப்படாமல் தான் அவர் எதையும்
செய்யமுடியும்.
சரி. இவ்வளவு நீண்ட மௌனத்துக்குப் பின்னர் மீண் டும் இப்போது ஏன் கொழும்பு
அரசு மீது காட்டமாகப் பாய முயன்றிருக்கின்றார் கலைஞர்? சோழியன் குடுமி
சும்மா ஆடாது என்பார்கள். அதே கதைதான் இங்கும்!
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க வுக்கும் காங்கிரஸுக்கும்
இடையே நல்லுறவு மீண்டும் அரும்ப மலர தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்
றது. அத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டால் மறுபுறத் தில் தமது தி.மு.க. அரசியல்
நடத்துவதற்குப் பொருத்தமான கோஷங்கள் அரசியல் சர்ச்சைகள் அக்கட்சிக்குத்
தேவை. அத்தகைய ஒன்று ஈழத் தமிழர்களுக்கு நியாயம் பெற் றுக்கொடுக்கும்
விவகாரம். அதனால் முற்கூட்டியே களத் தைத் தயார் படுத்துகின்றார் பழுத்த
அரசியல் நடிகரான கலைஞர் கருணாநிதி. அவ்வளவுதான்!

நன்றி - உதயன் இணையம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum