TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)

Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Wed Nov 17, 2021 9:27 pm

வெளிய -அ.வெண்ணிலா

முள் தோப்பெங்கும் மலநாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மா தான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் ராத்திரி முழுக்க தண்ணீர் மெல்லிசாகச் சொட்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்துடும். தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதே பறவைகள் சத்தம் கேட்கிறதா எனப் பார்க்கும். பறவைகள் சத்தம் கேட்டால் பூச்சி. பொட்டெல்லாம் போய்விடும்னு பெரியம்மா சொல்லும்.

தோட்டத்துக் கதவைத் திறந்து முதல் ஆளாகப் பெரியம்மா குப்பைப் பள்ளத்திற்குப் போகும். குப்பைப் பள்ளத்தைவிட்டுத் தள்ளிப்போய் உட்காராது. முன்னாடியே உட்கார்ந்துவிடும். பெரியம்மா போன உடனே அடுத்தடுத்து அக்காக்கள் மூன்று பேரும் போவார்கள். கடைசியாய் அம்மா போகும்.

நான் போகும்போது கால் வைக்க இடமிருக்காது. கட்டை விரலை ஊன்ற வைத்து எம்பிக் குதித்து, நல்ல இடம் தேடி உட்காருவதற்குள் போதுமென்றிருக்கும். அந்நேரத்திற்குள் எல்லோர் வீட்டுக் குப்பைப் பள்ளத்தையும் சுற்றிச் சுற்றி இருந்து வைத்திருப்பார்கள். பன்றிகள் வரும்வரை கால் வைக்க முடியாது. நாற்றம் குடலை முறுக்கும். மழைப் பெய்கின்ற நேரம் என்றால் பொழுது விடியவே கூடாது என்று வேண்டிக் கொள்வேன். யாரும் குப்பைப் பள்ளத்திற்குக் கிட்டக்கூடப் போக மாட்டார்கள். வழி முழுக்க தண்ணீர் தேங்கும். நான் வரும்போது தண்ணீரும் மலமும் சேர்ந்து ‘வ்வா……’

நான் குப்பைப் பள்ளத்துக்கு அருகில் உட்காந்துபோக மாட்டேன். எனக்குன்னு குப்பைப் பள்ளத்தைத் தாண்டி ஒரு முள்ளு மரம் இருக்கு. குடை பிடிச்ச மாதிரி படர்ந்திருக்கும். அந்த முள்ளு மரத்துக்குப் பின்னால் இரண்டு பேர்கூட உட்காரலாம். வெளியே தெரியாது. வேர் அவ்வளவு தடிமன். அந்த மரத்துப் பின்னால் உட்கார்ந்து போனால்தான் பயமில்லாமல் இருக்கும். பின்னாடியும் நிறைய மரமிருக்கும். யாருக்கும் தெரியாது. மரத்துப் பின்னால் உட்கார்ந்து கொண்டு வேரின் ஓரத்தில் சாய்ந்து பார்த்தால் யார் வீட்டுத் தோட்டத்துக் கதவு திறந்திருக்கிறது, யார் வெளியெ வருகிறார்கள்… எல்லாம் பார்க்கலாம். எட்டு மணிக்கு மேல் போனால் பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆண்கள் மட்டும் வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு குப்பைக்கிட்ட நின்றிப்பார்கள். “எந்தப் பொட்டச்சி எந்த முள்ளு மரத்துக்குக்கீழ் உட்கார்ந்திருக்காள்”ன்னு கண்ணு அலஞ்சிக்கிட்டிருக்கும்.

வாயில் வைத்த பல்பொடி நுரை போய், பிறகு வெறும் எச்சிலைத் துப்பி, வராத சளியைக் காறித் துப்பிக்கொண்டு கண்களால் முள் மரத்தை மேய்ந்து கொண்டிருப்பார்கள். மூணாவது வீட்டு வடிவேலு அண்ணனுக்கு இதுதான் வேலையே. மரத்துச் சந்திலிருந்து அவன் வருவதைப் பார்த்தால் வேகமாக வீட்டுக்குள் ஓடிவிடலாம்.

சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டவுடன் தினமும் வீட்டுக்குள் பையைத் தூக்கிப்போட்டுவிட்டு நானும் சங்கரியும் நேராகத் தோட்டத்திற்கு ஓடும். எனக்கொரு மரம்டி அவளுக்கொரு மரம். பாவாடையை நல்லா சுருட்டிவிட்டுக்கொள்வோம். மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பேசுவோம். கையில் ஆளுக்கொரு குச்சி. இருந்து கொண்டே பள்ளம் தோண்டுவோம். சின்னச் சின்ன நட்சத்திரம் வரைவோம். சில சமயம் குச்சியைப் போட்டுவிட்டு மண்ணை அள்ளி, சின்னச் சின்ன நிலாக் கும்பல் வைப்போம். நிலாக் கும்பல் வைத்துக் கொண்டே நகர்வோம். அவள் என் பக்கம் நகர்வாள் நான் அவள் பக்கம். நிலா கும்பல் சுவாரசியத்தில் நகர்ந்து வந்து முட்டிக் கொள்வோம். ‘அய்ய’ என ஓர் அசட்டு சிரிப்பு. மீண்டும் நகர்ந்து அவரவர் மரத்தடிக்குப் போவோம். சங்கரி காலையில் என்னுடன் வரமாட்டாள். அவங்க அம்மா விடமாட்டாங்க.

காலையில் பெரியம்மா, அம்மா, பக்கத்து வீட்டு மீரா சித்தி யாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க மாட்டாங்க. அவசரத்துக்கு வெளிய போயிட்டு வேலையைப் பார்க்கத் திரும்பிடுவாங்க. சாயந்திரம் பேசுவதற்காகத்தான் குப்பைப் பள்ளத்திற்கு வருவார்கள். பக்கம் பக்கமாய் உட்கார்ந்துகொண்டு குசுகுசுவென பேசுவார்கள் அம்மாவும் மீரா சித்தியும். இருட்டினாத்தான் எழுந்து வருவார்கள். எழுந்து நின்றுகொண்டு கொஞ்ச நேரம் பேசுவார்கள். நடந்து தோட்டத்துக்கு வந்து அங்கு நின்றும் பேசிக் கொள்வார்கள். பேசும்போது மீரா சித்தியின் முகத்தைப் பார்க்க வேண்டும். கண்கள் பக்கத்து வீட்டுக் கதவுகளைப் பார்த்துக் கொண்டே இருக்கும். முகம் தீவிரமாக இருக்கும். அடிக்குரல். உதடுகள் இடைவெளியின்றி அசைந்து கொண்டிருக்கும். அம்மா ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லும். சித்தி பேசிக் கொண்டேயிருக்கும். தலையைச் சுற்றி கொசு மொய்க்கும். வாய்க்குள் ஒன்றிரண்டு பூச்சிகள் நுழையும். காறித் துப்பிவிட்டு, “கண்ணு, வாங்கடி போலாம். பொழுது போச்சி. பூச்சி பொட்டு வரும்” என்று சொல்லிக் கொண்டே தோட்டத்து வாசற்படியில் வைத்திருக்கும் ஒரு டப்பா தண்ணீரில் கால் கழுவிக் கொள்ளும்.

மண்ணு வீட்டுக் கன்னியம்மா கிழவி நல்ல வெயில் நேரத்தில்தான் சுள்ளி பொறுக்கப் போகும். கிழவிக்கு எந்த முள்ளு மரம் காஞ்சிருக்கு, எந்த மரத்துல காய் பழுத்து விழற மாதிரி இருக்கு, வேர் பட்டுப்போன மரத்தை எப்படி பொளந்துகிட்டு வர்றது எல்லாம் தெரியும். எல்லா மரத்துக்குக் கீழேயும் யார் வெளிய போவாங்கன்னும் தெரியும். அந்தத் தெருவில் யார் யாருக்குத் தீட்டுன்னு மதியத்திற்குள் குழாயடியில் கிழவி சொல்லிவிடும். “ஏழு புள்ள பெத்திருக்கேன்… எனக்குக் கூடத்தான் உதிரம் பட்டிருக்கு. ஆனா இந்த காஞ்சூர்த்தாளுக்கு மட்டும் ஒன்னுக்குப் போற மாதிரி போதே. குறுக்கு விண்ணுன்னு தெரிச்சுப் போயிடும்” என்பாள். எல்லார் பத்தியும் தெரியும்.

“சின்ன பசங்கதான கீது. வாய சும்மா வெச்சிட்டிரு மாமி” என்பாள் அம்மா.

“ஆமாம். இவள்லாம் குடிசையில ஒக்காரப் போறதில்ல. வூட்டுக்காரன் கூட படுத்துப் புள்ளப் பெத்துக்கப் போறதில்ல. ரொம்பத்தான்டி அதிசயம் காட்றீங்க.”

நொடிக்கும் அம்மா இடத்தைக் காலி செய்யும். சங்கரி இரண்டு நாட்களாகப் பள்ளிக்கூடம் வரவில்லை. வெளிய போகவும், சாயந்திரம் வரவில்லை. தோட்டத்தில்போய் பின்கதவைத் தட்டினேன். சங்கரி அம்மா தான் திறந்தார்கள்.

“அக்கா, சங்கரியக் கூப்பிடுக்கா.”

“அவ இப்பத்தாண்டிப் போயிட்டு வந்தா. நீ போயிட்டு வா.”

கதவைச் சாத்திவிட்டுப் போய்விட்டாங்க. அவளுக்கு அவசரமாக வந்துவிட்டிருக்கும். அதுதான் போயிட்டுப் போய்விட்டாள். நான் மட்டும் போனேன். சங்கரியின் மரத்தடி சுத்தமாக இருந்தது. இந்நேரத்திற்குப் பன்றி வராதே என்று யோசனையாய் இருந்தது.

நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டன. சங்கரி பள்ளிக்கூடமும் வரவில்லை. கண்ணிலும் படவில்லை. ஒருநாள் சாயந்திரம் இவள் வெளிய போகப் போனாள். சங்கரி வெளிய போகும் இடத்தில் நிலா கும்பல் வைப்பதுபோல் சின்னச் சின்ன மண் குவியல்கள் இருந்தன. காலால் லேசாகக் கீறிப் பார்த்தேன். ரத்தமாய் இருந்தது. அவளுக்கு உடம்பு சரியில்லைப் போலிருக்கிறது. அதுதான் என்கூட வெளிய போக வரவில்லை. அவளுக்கு உடம்புக்கு என்னன்னு பயமாக இருந்தது. ராத்திரியானால் கரண்ட் கம்பத்திற்குக் கீழே உருளைக்கிழங்கு விளையாட்டு விளையாடுவோம். சங்கரி அங்கும் வரவில்லை. போய்க் கூப்பிட்டேன். “ஏய், அவளுக்கு பேதியாகுதுடி. ஒரு வாரத்திற்கு எங்கும் வரமாட்டா.”

சங்கரியம்மா என்னை உள்ளேயே கூப்பிடவில்லை.

ஒரு வாரம் கழித்துத் தான் சங்கரி வெளிய போக வந்தாள். “ஏம்ப்பா, இத்தன நாள் வரல?”ன்னு கேட்டவுடனே, ”எங்க அம்மாகிட்ட கேட்கக் கூடாது என்ன? நான் வயசுக்கு வந்துட்டன்டி. எங்கம்மா சும்மான்னாலும் பேதியாச்சுன்னு சொன்னாங்க. யார்ட்டயும் சொல்லாதப்பா என்ன?” என்றாள் சங்கரி. குச்சியைக் கீழே போட்டு சங்கரியைப் பார்த்தேன். முகத்தில் மஞ்சள் பூசியிருந்தாள். பாவாடையை நன்றாக விரித்து முன்னால் கீழே இறக்கிவிட்டுக் கொண்டிருந்தாள். பின்னால் இடக்கையால் பாவாடையைப் பின்புறத்தை மறைக்குமாறு நீட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

ஒன்னுக்கு பெல்லடிச்ச உடனே குழாயில் தண்ணீர் குடிக்க ஓடி வந்தேன். கன்னியம்மா கிழவி இருந்தது. என்னைப் பார்த்தவுடன், “என்னாடி, ஒன் கூட்டாளி குடிசையில் ஒக்காந்துட்டாளா? சூத்துத் துணியைத் தூக்கிக்கினு கதை பேசிக்கிட்டிருக்கிறதெல்லாம் இனிம கூடாது. அவ ஆத்தா என்னமோ கோழிய கவுத்துப் போட்ற மாதிரி கவுத்துப் போட்டிருக்கா. விடிஞ்சா தெறந்து விட்டுத் தானே ஆகணும். எல்லா வேசம் காட்றாங்க” என்றது.

…..

கைகள் பாவாடையை மெல்ல கீழே இறக்கின. சங்கரியின் மரத்திற்குப் பக்கத்தில் வெள்ளையாய் ஒன்று அசைந்தது. சங்கரியின் மரத்தில் ஜோட்டான். ஜோட்டானாய் மஞ்சள் காய்கள் தொங்கின. பச்சை மரத்தில் மஞ்சள் காய்கள். இடையில் வெள்ளையாய் ஏதோ ஒன்று.

வீணான துணியை யாராவது தூக்கிப் போட்டிருப்பார்கள். முள்ளில் மாட்டி காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது. நினைத்துக் கொண்டே விரித்தப் பாவாடையைச் சுருட்டிப் பிடித்தேன்.

குச்சியால் நட்சத்திரம் வரைந்துவிட்டுச் சங்கரியின் மரத்தைத் திரும்பிப் பார்த்தேன். வெள்ளைத் துணியைக் காணவில்லை. “எங்கே போயிருக்கும்? கீழே விழுந்திருக்குமோ?” சமாதானத்துடன் எழுந்தேன்.

குப்பைப் பள்ளத்தில் கறுப்பு-சிவப்பு கோடுடன் குச்சி போன்ற பொருள் கிடந்தது. குச்சியால் கிளறினேன். பென்சில். அட, இந்தப் பென்சிலைத் தானே இரண்டு நாளாகத் தேடிக் கொண்டிருந்தோம்? அம்மா தான் பெருக்கி வாரிக் கொட்டியிருக்கும். திட்டிக் கொண்டே பென்சிலைப் பீச்சாங்கையில் எடுத்தேன்.

தோட்டத்து வாசற்படியில் தண்ணீர் டப்பா இருந்தது. சங்கரி வீட்டில் இருக்கிற மாதிரி பிளாஸ்டிக் குவளை வேண்டும் என்று ஆசையாய் இருக்கும். ஆனால். அம்மா காசு கொடுத்து குவளை வாங்காது. ஒவ்வொரு டப்பாவாய்த் தொலையத் தொலைய யார் வீட்டில் இருந்தாவது ஒரு பெயின்ட் டப்பா வாங்கி வந்துவிடும். பிடியும் இல்லாமல், மேலெல்லாம் பெயின்ட் ஊத்தி, வாந்தி எடுத்த மாதிரி இருக்கும். குளிக்க, தோட்டத்திற்குப் போக, கை கழுவுகிற தொட்டிக்கு… எல்லாத்துக்கும் டப்பாதான்.

ஒரு டப்பா தண்ணீரில்தான் கால் கழுவ வேண்டும். அம்மா, பெரியம்மா, மீரா சித்தி எல்லாம் அந்த ஒரு டப்பாவில்தான் கழுவிக் கொள்வார்கள். வீட்டிற்கு உள்ளே போய், தொட்டித் தண்ணீரில் கையையும் காலையும் கழுவுவார்கள். எனக்கு மட்டும் எப்பவும் தண்ணீர் பற்றாது. அம்மா திட்டும். “அரிசி, பருப்பு செலவு செய்யற மாதிரிதான் தண்ணீரையும் செலவு செய்யணும். காசு கொடுத்து வாங்கலேன்றதுக்காக மானாவாரியா ஊத்தக் கூடாது.”

பென்சிலைக் கழுவினேன். அரை டப்பா தீர்ந்துவிட்டது. “அய்யய்யோ, பென்சிலை உள்ளே போய்க் கழுவியிருக்கலாமே?” தலையில் கொட்டிக் கொண்டேன். அரை டப்பா தண்ணீர்தான் மீதி இருந்தது. என்ன செய்வது? பத்தாதே! காலில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு வெளி வாசலில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்கு நடந்தேன்.

அம்மா உள்வாசலில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தது. அப்பா, தம்பி யாரும் இல்லை. வெளிவாசலை ஒட்டியிருந்த பெரியம்மா வீட்டைப் பார்த்தேன். ஒருவரும் கண்ணில் படவில்லை. சட்டென்றுத் தொட்டிப் பக்கத்தில் உட்கார்ந்து நான்கைந்து டப்பாக்கள் தண்ணீர் மொண்டு கால் கழுவினேன். “இப்படி போற வர்ற வழியில் கால் கழுவினா. நாங்கள்லாம் நடக்கிறதா இல்லயா? வெளிய போனா தோட்டத்தில் கால கழுவிட்டு வர வேண்டியதுதானே? சின்ன பப்பா பாரு? உள்ள வர?” பெரியம்மா வாசல் கழுவித் தள்ளிய துடைப்பத்துடன் கூச்சல் போட்டது.

பக்கத்தில் பெரியம்மாவைப் பார்த்தது தூக்கி வாரிப் போட்டது. இதையொட்டி அம்மாவுக்கும். பெரியம்மாவுக்கும் நடக்கப் போகிற சண்டையை நினைத்தேன். தாராளமாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவிய சந்தோஷம் போனது. உடம்பு ஆடியது.

அம்மா வெளியே வந்தது. சாமான் கழுவிக் கொண்டிருந்த கையோடு என் முடியைக் கொத்தாகப் பிடித்தது. பெரியம்மா கையிலிருந்த துடைப்பத்தைப் பிடுங்கி முதுகிலும் காலிலும் தொடையிலும் என வசதியாக அகப்பட்ட இடங்களில் எல்லாம் அடி விழுந்தது. “அய்யோ, அடிக்காதம்மா, அடிக்காதம்மா. இனிமே தோட்டத்துல கழுவுறம்மா, வலிக்குதும்மா…” கத்தினேன்.

”அவ அவ பல்லுக்கு நிக்காதன்னு சொன்னா கேட்டாத்தானே. இங்க தான் எப்ப எப்பன்னு நிக்கறாங்களே? தண்ணீய ஊத்துனா ஒரு சண்ட. ஊத்தலன்னா ஒரு சண்ட. வெடிஞ்சா ஒரு சண்ட. பொழுதுபோனா ஒரு சண்டன்னு தெனம் ராமாயணம். போதாததுக்கு நீ வேற.”

“இப்ப என்னா சொன்னன்னு அந்தப் பொண்ணப் போட்டு இந்த அடி அடிக்கிற. வெளிய போயிட்டு வந்து கால கழுவுறா. பின்னாடியே கழுவிக்கிட்டு வர வேண்டியது தானேன்னு கேட்டதுக்கு இந்த அடி அடிக்கிற? போற வர்ற வழியில் மெறிச்சு மெறிச்சு நடக்கணுமா? தூங்கி எழுந்தா நல்லா அவலை வறுக்கிற! நல்லாயில்ல சொல்லிட்டன்.”

“நானா அவல வறுக்கிறது? யார் வறுக்கிறாங்கன்னு அவங்கங்களுக்கு தெரியும்.”

வெற்றுடம்பில் தோளில் துண்டுடன் அப்பா உள்ளே வருவது தெரிந்தது. அம்மா துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டுச் சாமான் தேய்க்கப் போனது. பெரியம்மா இறைந்து கிடந்த துடைப்பக்குச்சியை ஒவ்வொன்றாகப் பொறுக்கி துடைப்பத்துள் செருகியது. வீட்டுச் சண்டை ஆம்பளைங்க வரைக்கும் போனால் பெரிசாகிவிடும். கை கலப்பு ஏற்படும். அம்மாவும். பெரியம்மாவும் என்ன சண்டைன்னாலும் அவங்களுக்குள்ள வைத்துக் கொள்வார்கள். காலையில் சண்டை போடுவார்கள். சாயந்திரம் திண்ணையில் உட்கார்ந்து யாரிடமோ பேசுவதுபோல் ஜாடையாகப் பேசிக் கொள்வார்கள். அப்பாவும் பெரியப்பாவும் சண்டை போட்டால் இதெல்லாம் முடியாது.

அப்பா செருப்புக் காலை ஒருக்களித்து வைத்து நடந்து வந்தார். தொட்டிக்கருகில் வந்தவுடன். செருப்பை கழட்டினார். “டப்பா எடும்மா!” டப்பாவை நீட்டினேன். “கருமம் – நாய் கண்ட எடத்தில போய் வைக்குது!” தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி செருப்புக்குள் காலை விட்டு வேகவேகமாயத் தேய்த்தார். நாறியது.

அம்மா சாமானைக் கழுவித் தண்ணீரை ஊற்றியது. பெரியம்மா ஒரு நிமிடம் நின்று அப்பாவைப் பார்த்துவிட்டுத் தண்ணீரை வாசலில் விசிறி ஊற்றிவிட்டுச் சென்றது.

முதுகிலும் தொடையிலும் வீங்கிப் போயிருந்தது. தொட்டுப் பார்த்தேன். பாவாடையை லேசாகத் தூக்கிப் பார்த்தேன். வீங்கியிருந்தது. பென்சில் எங்கே? தேடினேன். தண்ணீர் போகும் சாக்கடை வாயிலில் கிடந்தது. அப்பா செருப்பைக் கழுவிய தண்ணீர் தேங்கியிருந்தது.” “சீசீ… வேணாம்…” தொடையைத் தேய்த்தபடி ஓடினேன். ஒன்னாம் பெல் அடிச்சது. பையைத் தேடினேன். சாப்பிடவில்லை.

*

“ஒன்னுக்குப் பெல் எப்ப அடிப்பாங்கன்னு தெரியலையே?” வயிறு கலக்கியது. காலையில் ஒழுங்காகப் போகவில்லை. முள்ளு மரத்தின்மேல் கிடந்த துணியைப் பார்த்து பயந்த பிறகு வெளிய வரவேயில்லை. இப்ப கலக்குது. பத்து நிமிசம் இருக்கும். அதுக்குள்ள ஓடிப்போய் வந்துரலாம். லேட்டானாலும் டிரில் டீச்சர் மொத கேட்லதான் நிப்பாங்க. நாம பின்னாடி பக்கமா உள்ள வந்துடலாம்.”

சங்கரியைப் பார்த்தேன். எழுதிக் கொண்டிருந்தாள். கணக்கு வாத்தியார் போர்டில் எழுதிப் போட்டிருந்ததை எழுதவில்லை. அவள் வாய்ப்பாடு எழுதிக் கொண்டிருந்தாள். தினம் வாய்ப்பாடு எழுதிவிட்டால் போதும், வாத்தியார் வேறொன்னும் கேட்க மாட்டார். “வாய்ப்பாடு படிங்கடா, தானா கணக்கு வரும். என்னையப் பாருங்க. காலரிக்கா என்ன, அரையரிக்கா என்ன, ரெண்டையும் கூட்டினா என்ன, கழிச்சா என்ன, பெருக்கனா என்ன, எல்லாஞ் சொல்வேன். யோசிக்கிற வேலையே கிடையாது. தண்ணீயா வரும். நா பன்னென்டு என்னன்னா ஒருத்தஞ் சொல்லு பார்ப்போம். ஒருத்தனும் சொல்ல மாட்டாங்க. மனப்பாடம் பண்ணத்தான் வணங்க மாட்டேங்குதே? பின்ன எப்படி கணக்கு வரும்”னு தினம் சொல்வார். அவர் என்ன நடத்தினாலும் வாய்ப்பாடு எழுதினால் போதும். அடிக்க மாட்டார்.

சங்கரியின் தொடையைச் சுரண்டினேன். “என்ன?” கண்ணால் கேட்டாள். ரெண்டு விரலைக் காட்டினேன். “அய்யோ, இப்ப எப்படி போறது? நான் வரலை.”

“வயிறு வலிக்குதுப்பா. இப்ப வேணாம். பெல்லடிச்சப் பிறகு போகலாம். பத்து நிமிஷத்துக்குள்ள ஓடியாந்திடலாம். வாப்பா.”

“எங்க அம்மா பார்த்தா தொடப்பக்கட்ட தான். கண்ட நேரத்தில் எல்லாம் தோட்டத்துக்குப் போகக் கூடாதுன்னு சொல்லியிருங்காங்க.”

“வயிறு வலிக்குதுப்பா.”

“இப்ப முள்ளு மரத்துக்குக் கீழ் நிறையப் பேர் குடிச்சிட்டு சீட்டாடுவாங்க. அப்புறம் நம்ம குப்ப பள்ளத்தாண்ட இந்நேரத்துக்கு நிறைய பன்னிங்க இருக்கும். ஒரு பன்னி வேற குட்டிப் போட்டிருக்கு. அதப் பார்த்தாலே பயம். நான் வர மாட்டேம்ப்பா.”

எனக்கும் தெரியும். வெயில் வந்தா போதும். எல்லார் வீட்டுத் தோட்டத்துக் கதவையும் ஒருக்களித்து வைப்பது தெரிந்தால் போதும். முள்ளு மரத்திற்குக் கீழே ஒரு கும்பல் வந்துவிடும். வாயில் பீடியை சொருகிக் கொண்டு சீட்டு ஆட்டம் நடக்கும். சில்லறையும், ரூபாயுமாக நடுவில் கிடக்கும். மஞ்சள் சிவப்புக் கலரில்தான் பனியன் போட்டிருப்பார்கள். பனியன் கலரும் பீடி நாற்றமும் பயமாக இருக்கும். பகலில் யாருமே தோட்டத்துப் பக்கம் போக முடியாது. “ஏன்டா இங்க வந்து விளையாட்றீங்க”ன்னு யாராவது கேட்டால் போதும். அன்றைக்கு ராத்திரிக்குள் பொதை பொதையாய் இருக்கிற அவங்க முள்ளு மரத்தில் ஒரு சுள்ளி இருக்காது. அடி வேர் வரைக்கும் வெட்டி எடுத்துவிடுவார்கள். காலையில் பார்த்தால் மறைப்பே இல்லாமல் முழு வெளிச்சமாக இருக்கும் அவர்கள் தோட்டம்.

தோட்டத்தில் வைக்கிற அலுமினிய அன்னக்கூடை, குடம், பக்கெட், வராண்டாவில் விடுகிற சைக்கிள் எல்லாம் காணாமல் போகும். யாரையும் ஒன்றும் கேட்க முடியாது. “அந்த பொறம்போக்குக்கிட்டல்லாம் நம்மால பேச முடியாது. நீங்க ஒழுங்கா இருங்க. வேலையா போனமா, வந்தமான்னு நடந்துக்கங்க. அவஞ் சீட்டு வெளையாட்றான், சிகரெட் பிடிக்கிறான்னு சொல்லிக்கிட்டிருக்காம. நம்ம வேலையைப் பாருங்க…” சொல்லிவிட்டுப் போய்விடுவார் அப்பா.

பத்துமணி ஆனால் போதும். முள்ளுக் காய்களுக்காகப் பன்றிகள் வந்துவிடும். பெரிய பெரிய பன்றிகள். பார்க்கவே பயமாக இருக்கும். ஒரு பெரிய பன்றி போனால் சிறியதும் பெரியதுமாக இருபது பன்றிகள் கூட ஓடும். ஒரு பன்றியின் காலில் மற்றொன்று காலைவிட்டுச் சிக்கிச் சிக்கி அவை ஓடும் நேரத்தில் தூசு கிளம்பும். மல நாற்றமடிக்கும். வாலைத் தூக்கி பன்றி உறுமிக் கொண்டு ஓடும் சப்தத்தில் பயம் உச்சிமயிரைப் பிளக்கும்.

நிறைய பன்றிகளுக்கு பயமே இருக்காது. உட்கார்ந்து வெளிய போய்க் கொண்டிருக்கிற நேரத்திலேயே பக்கத்தில் வரும். அம்மா பெரியம்மால்லாம் கையில் குச்சியை வைத்துக்கொண்டு, “ச்சு… ஓடு” என்று விரட்டிவிடுவார்கள். கன்னிம்மா கிழவி, ”வா.. என்… இருந்தே எடுத்துக்க” என்று பல்லை இளித்துக் காட்டும். ஈ என்று கிழவி பல்லை இளித்துப் போடும் சப்தத்திற்குப் பன்றி பயந்து அடுத்தத் தோட்டத்திற்கு ஓடிப் போகும்.

எனக்குப் பன்றியைப் பார்த்தாலே நடுக்கம் வந்துவிடும். “உர் உர்” ரென்று மண்ணை முகர்ந்து பார்த்துக்கொண்டு அது நடக்க நடக்க சர்வ நாடியும் ஒடுங்கும். நான் பயந்து உட்கார்த்திருப்பதைப் பன்றி கண்டுபிடித்துவிடும். நான், “ஏய் போ” என மெதுவாகச் சொல்வேன். எனக்கே கேட்காது. “வா” என கூப்பிட்ட மாதிரி பன்றி நெருங்கி வரும். நான் பயந்து எழுந்திருப்பேன். அடிக்க வருவேன் எனப் பயந்து இரண்டடி பின்னுக்குப் போகும். நானும் இரண்டடி பின்னால் வைத்தவுடன், பன்றி முன்னுக்கு வரும். அலறியடித்து நான் வீட்டை நோக்கி ஓடினால் போதும். பன்றியும் எதிர்த்திசையில் ஓடிக் கொண்டிருக்கும்.

பன்றிகள் வராத பகல் நேரங்களில் மட்டுமே நான் கூட்டாளிகளுடன் வெளிய போவேன். அவசரமா வந்தாலும் அம்மாவைக் கூப்பிட்டால் வராது. தறியை விட்டு இறங்காது. “கெக்கலனுக்கு காக் குழிக்குள்ள கால வுட்டாத்தான் கால் வயிறு கஞ்சி. எண்ணிப் பார்க்கிறதுக்குள்ள எட்டு எழை குறைஞ்சிடும்”னு எதையாவது சொல்லும். கன்னிம்மா கிழவிதான் பகல் பூரா தோட்டத்துல நடமாடும். சீட்டாடுகிறவன், குட்டிப் போட்ட பன்றி, எந்த பயமும் கிடையாது. கிழவி இருக்கிற தைரியத்தில் போகலாம். ஆனால், அது கண்ணில் படும்படி வெளிய போனால் அடுத்த நாள் குழாயடியில் என் பேச்சு தான் நாறும்.

வயிறு கீழே இறங்கி வருவதுபோல் மீண்டும் கனத்தது. சங்கரியின் கையை மீண்டும் சுரண்டினேன்.

“போப்பா, அம்மா திட்டும்ப்பா. வயசுக்கு வந்துட்ட பிறகு காத்துக் கறுப்பு அண்டும். வெயில் நேரத்தில் எங்கும் போகக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கு. இப்ப நான் வந்தன்னு தெரிஞ்சா, சாயங்காலம் துடைப்பக்கட்ட பிச்சுக்கும்.”

கோபம் வந்தது. நாமே போகலாம் என்று வெளியே வந்தேன். பீடி நாற்றமும் பன்றியின் உறுமலும் கேட்டது. பயத்தில் நெஞ்சடைத்தது. ஒன்னுக்கு பெல் அடிக்க பியூன் அண்ணன் மணிக்கட்டையை எடுத்துக்கொண்டு போனார்.

பள்ளிக்கூடத்திற்குப் பின்னால் போனேன். மஞ்சள் கனகாம்பரம் செடி மண்டிக் கிடக்கும் முள்ளுத் தோப்பு. முள்ளு கனகாம்பரம் பூவே எனக்குப் பிடிக்காது. தொடும்போதே விரல் முழுதும் மஞ்சளாய் மகரந்தம் அப்பிக் கொள்ளும். தலையில் வைத்தவுடன், தலை முழுக்க மஞ்சள் தூள் தேய்த்தது மாதிரி இருக்கும். கட்டிச் சந்தனம் மாதிரி அந்தக் கலர் மட்டும் அழகாக இருக்கும். அப்புறம் முள்ளு கனகாம்பரத்தை வேகமாக பறிக்க முடியாது. நெறிஞ்சி முள்ளு மாதிரி, முள்ளு கொத்துக் கொத்தா இருக்கும். ஒவ்வொரு பூவா பறிச்சி எடுக்கறதுக்குள்ள கையில் அங்கங்கே ரத்தம் வரும். பெரிய பயம். முள்ளு கனகாம்புரம் புதருக்குள்ளே பன்றி நிறைய இருக்கும். பெரிய பெரிய பள்ளம் போட்டு இருக்கும். ஒரு பன்றி தானே இருக்கிறது என்று பார்த்தால் பெரிய பன்றி எழுந்தவுடன் அடியிலிருந்து பத்துப் பனிரெண்டு குட்டிகள் எழுந்து ஓடும். பன்றிக்காகவே முள்ளு கனகாம்பரம் புதர்ப் பக்கம் போகமாட்டேன்.

ஒன்னுக்கு பெல் முடியறதுக்குள்ள போகணும். பயந்துகொண்டே புதர்களை விலக்கினேன். “முள்ளு கனகாம்பரப் புதருக்குள்ள கட்டாயம் பாம்பு இருக்கும்” அம்மா சொன்னது, ஞாபகம் வந்தது. உடல் வேர்த்தது. வயிற்றுக் கனமும் அதிகமானது. கால் வழியே வந்துவிடும்போல் இருந்தது. மெல்ல நடந்தேன். வெளிச்சம் இல்லை. கண்கள் பழகியிருந்த குறைந்த வெளிச்சத்தில் ஓர் இடம் தேடினேன். ரொம்ப உள்ளப் போய்விடக் கூடாது. பயந்து கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன்.

நிறைய பேர் போய் வைத்திருந்தார்கள். காலைக் கவனமாகப் பார்த்து வைத்தேன். மிதித்துவிடப் போகிறோம் என்ற அருவருப்பு. உள்பக்கமாய் நகர்ந்தேன். நல்ல இடமாய்த் தேடியதில் புதரின் உள்ளே வந்துவிட்டிருந்தேன். பெருக்கி வைத்ததுபோல் ஓர் இடம் இருட்டிலும் வெள்ளையாய் தெரிந்தது. அப்பாடா… சட்டென்று உட்கார்ந்தேன்.

கண்களில் இருந்து தண்ணீர் வழிந்தது. வயிற்றின் கனம் குறைந்தது. இடது கையால் கண்ணைத் துடைத்தேன். வலது கையால் குச்சியொன்றை எடுத்து மண்ணைக் கீறினேன். பாவாடையைச் சுருட்டி இடுப்புக்குமேல் ஏற்றிக் கொண்டேன்.

மண்ணைக் கீறி நட்சத்திரம் வரைந்தேன். சிறிய நட்சத்திரம், பெரிய நட்சத்திரம் என்று முள்காட்டில் நட்சத்திரங்களை வரைந்தேன். நட்சத்திரங்களைச் சுற்றி வட்டம் வரைந்தேன். வட்டத்திற்குள் அடைபட்ட நட்சத்திரங்கள். சின்னச் சின்ன நட்சத்திரங்களை மண்ணில் உருவாக்கிக் கொண்டு மெல்ல நகர்ந்தேன். எழுந்திருக்காமலேயெ நகர்ந்து சென்று கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி நட்சத்திரங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. மண் காடெங்கும் புதுப்புது நட்சத்திரங்கள் முளைத்தன. காலடியில் துவங்கி, முட்டிபோட்டு, கை எட்டும் தொலைவு வரை நட்சத்திரங்கள் முளைத்தன. நட்சத்திர மண்டலமாய் முள் புதர் ஒளிர்ந்தது.

முன்னும் பின்னும் இடமும் வலமுமாக நகர்ந்து கொண்டிருந்தேன். மேகங்களுக்கிடையில் நட்சத்திரங்களைத் தேடிப் பொறுக்கி குவித்து வைப்பது போல் உற்சாகத்துடன் தொடர்ந்தேன். கனமான மேகம் என்று நினைத்து கால் வைக்கப் பஞ்சு பொதிபோல் உள்ளிழுத்தது ஒரு மேகம். கால் சறுக்கியது. லேசாக நினைவு இடற, பள்ளத்திற்குள் காலை விட்டிருந்தேன். பள்ளத்தில் கால். மேட்டில் நான். நிதானித்தேன். சுற்றி அடர்ந்த இருள். நட்சத்திரம் வரைந்து கொண்டே முள் புதருக்குள் நிறைய தூரம் வந்துவிட்டிருந்தேன். வயிறு கலங்கியது. அழுகை வந்தது.

இருட்டுக்குக் கண்ணைப் பழக்கினேன். குட்டையான அடர்ந்த முள்ளு கனகாம்பரம் செடியில் மஞ்சளாக அடர்ந்து பூக்கள் தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை. சுற்றிப் பார்த்தேன். எழுந்து போகலாம். அசைந்தேன். பக்கத்தில் “உர்” ரென்று உறுமல். தூக்கிவாரிப் போட்டது. திரும்பிப் பார்க்க முடியாமல் கழுத்துப் பிடித்துக் கொண்டதுபோல் இழுத்தது. மறுபடியும் “உர்” கால்கள் நடுங்கின. கண்களை மட்டும் தோள்பட்டை வரை திருப்பி, பின்னால் பார்த்தேன். அம்மா… சத்தமாய்க் கத்தினேன். பெரிய பன்றி. தலைமேல் யாரோ ஓங்கிக் கொட்டினார்கள். மீண்டும் திரும்பினேன். பன்றி தலையை மட்டும் மெல்லத் தூக்கியிருந்தது. பன்றி உடல் முழுவதும் மேலேறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் பத்துப் பனிரெண்டுக் குட்டிகள். ரொம்பக் குட்டி. ஒரு நாள், இரண்டு நாள் தான் ஆகியிருக்கும், குட்டிப் போட்டு.

“குட்டிப் போட்ட பன்றி யாரையும் கிட்ட சேர்க்காது. விரட்டி கடிக்கும்.” அம்மா சொன்னதெல்லாம் முதுகில் அடியாய் விழுந்தது. என்னால் அசைய முடியவில்லை. பன்றி அரை மயக்கத்தில் என் அசைவைக் கணித்தபடி அசையாதிருந்தது. நான் காலை நகர்த்த மெதுவாக அசையும்போது, பன்றியின் உடம்பு மெல்ல உயர்ந்தது. காது மடல்கள் நேராகி விரைத்து நின்றன. வேர்த்தது. நெஞ்சடைத்தது. தொடைகள் கனத்தன.

அழுகையாய் வந்தது. சங்கரியை திட்டினேன். அம்மாவை வெறுத்தேன். கன்னியம்மா கிழவியின் கையைக் கடிக்க நினைத்தேன். இன்று பன்றியால் கடிபடப் போகிறோம் என்று தெரிந்துவிட்டது. ஒன்னுக்கு பெல் அடிச்ச சத்தமே கேட்கவில்லை. கேட்டுத் தொலைச்சிருந்தா அப்பவே போயிருக்கலாம் என்னைத் திட்டிக் கொண்டேன்.

பன்றி அசையாமல் இருந்தது. நான் அசைந்தால் அதுவும் அசைந்தது. யாராவது வருவார்களா இந்த முள்காட்டிற்குள்? பார்வையால் துழாவினேன். பெரிய புதருக்குப் பின்னால் மஞ்சள் பூக்களுக்கு மத்தியில் சிகப்பாய் ஒரு புள்ளி. இன்னும் பயம் கூடியது. அப்போதுதான் பீடி நாற்றத்தை உணர்ந்தேன். ”அய்யய்யோ… யாரொ ஆள் மறைஞ்சிருக்கான்… நம்மை பார்த்துட்டிருக்கான்… ”உயிர் நரம்பை உருவி எடுத்ததைப்போல் வாய்விட்டு அலறினேன். அம்மா … சிகப்புப் புள்ளி லேசாக அசைந்து இடம் மாறியது. “சங்கரி” கத்தினேன். வார்த்தை என் தொண்டைக்குள்ளேயே முடிந்துபோனது.

திரும்பிப் பார்த்தேன்… பன்றி அமைதியாய்த் தலையைக் கீழே சாய்த்திருந்தது. தேம்பித் தேம்பி அழுதேன். யாரை நினைத்துக்கொண்டு அழுவது என்று தெரியவில்லை. வாய்விட்டு அழுதேன். அழுது அழுது இப்பொழுது சத்தம் மட்டம் வந்தது. கண்ணீர் வரவில்லை. தலை சுற்றுவதுபோல் இருந்தது. சாப்பாட்டு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. மணிச் சத்தம் கேட்டவுடன் வீட்டுக்கு ஓடிப்போக வேகமாக எழுந்தேன்.

சட்டென்று நான் எழுந்தவுடன் பன்றி ‘உர்’ரென்று உறுமி, குட்டிகளை உதறித் தள்ளி எழுந்து நின்றது. என்னைப் பார்த்துச் சீறியது. வேகமாக எழுந்ததில் தலைமுடி முள்ளுச் செடியில் கொத்தாக மாட்டிக் கொண்டது. அம்மா… என்று அலறியபடியே தலைமுடியைப் பிடித்துக் கொண்டேன். எதிரே பார்த்தேன். சிகப்பு புள்ளி மறைந்து போயிருந்தது. யாரோ நடக்கும் சத்தம். பச்சை பனியன் புதரில் இருந்து பிள்ளைகள் ஓடிவரும் திசை நோக்கி நகர்ந்தது.

பயத்தில் எனக்குச் சிறுநீர் வருவதுபோல இருந்தது. தலைமுடியை இழுத்துப் பார்த்தேன். முள்ளில் பின்னலோடு மாட்டியிருந்ததில் அசைக்க முடியவில்லை. பன்றி எதிரில் உறுமியபடி நின்றிருந்தது. பாவாடை நனைந்தது.’ஒன்னுக்குப் போயிட்டமோ?’ அம்மாவிடம் பாவாடையை நனைத்துக் கொண்டுபோய் உதைவாங்க போகிறோம் என்ற பயம் வந்தது.

தொடையிடுக்கில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.



கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Uaa1bm10


அ.வெண்ணிலா
தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார்.பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty புத்த மணியோசை

Post by வாகரைமைந்தன் Thu Nov 18, 2021 4:56 pm

புத்த மணியோசை


பேங்காக்கின் புத்த தேவாலயங்கள் இடைவிடாமல் மணியோசையை எழுப்பிக் கொண்டிருந்தன, ‘நீ வெளியேறு, நீ வெளியேறு’ என்று. பேங்காக் என்ற புத்த நாட்டில் அவனால் வெகு நேரம் நிற்க முடியவில்லை. அலைந்து திரிந்து பட்டாங் பீச்சுக்கு வந்திருந்தான்.

பட்டாங்-இன் நீலக்கடல் அவனுக்கு நஞ்சுபோலத் தெரிந்தது. பாவங்களும் அதன் உணர்வுகளும் அவனை ஒவ்வொரு நொடியும் வதைத்தனவே! ஆன்காங்க் என்ற அந்தப் பெண் வேசியா, தத்துவ ஞானியா, சிந்தனையாளரா? அசைந்தாடும் பொன் வண்ண நெல் வயல்களின் ஊரிலிருந்து வந்த அவளும் கூட தங்க நிற முடியை உடையவள். பட்டாங் கடற்கரை எல்லாம் நீல வண்ணமாக இருந்ததால், அங்கே பிரதிபலனுக்கு அது தடையாக இருந்ததால் பட்டாங்-கை பிரதிபலன் இல்லாத நாடு என்கிறார்கள் என்று கூறியிருந்தாள் ஆன்காங்க்.

ஆனால் மனக் கண்ணாடியின் அரூபம் அது, விஷ விஷயங்கள் பிரதிபலிப்பின் இரைச்சலான நீர்வீழ்ச்சி. அங்கே பேங்காக்-இல் சாந்தி தேவனின் முன்னால் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் போது என்னென்ன வேண்டிக்கொண்டேன். எனக்கு நல்ல வியாபாரம் நடக்க வேண்டும் என்றா? வியாபாரம் என்றால் என்ன? இன்னும் இந்த விவசாயிகளைக் கொல்லும் கிருமி நாசினிகள் அதிக விற்பனையாக வேண்டும் என்றா அல்லது வேறென்ன? புத்தன் முன்னால் வேண்டிக்கொள்ள மட்டுமல்ல, அமரக்கூட உரிமை தனக்கில்லை. அப்போது புத்த மணி ஓசை.

அவனுக்கு பேங்காக் விருப்பமாகவில்லை. அங்கே அமைதி தூதனின் விக்கிரகங்களின் கண்ணில் கண் வைத்து பிரார்த்தனை செய்ய முடியவே இல்லை. பிரார்த்தனைக்கு அமர்ந்தால் வியாபாரம், டார்கெட் பெயரில் இலக்குகள், விவசாயியின் வாழ்க்கை மீது சமாதி கட்டும் காட்சிகள், பக்கத்தில் இருப்பவனை மீறி வெல்லும் ஆசைகள், இந்தக் காலனின் தேர் ஓட்டத்திற்கு இம்சை சக்கரங்கள். அந்த சக்கரம் முன்னால் உருள கட்டிடங்கள், கார்கள், பூமியின் பரப்பளவும் வளருமல்லவா?

அந்த புத்தனும் கூட அரசன், பணக்காரன். அதை எல்லாம் துறந்து ஐந்து வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்ந்தானே? அப்படியான வாழ்க்கையின் சிறிய நோக்கமும் தனக்குக் கிட்டாமல் போனதே? ஆசை துயரமாகும் காலம் மற்றும் செல்வத்தைச் சேர்க்கும் நேரங்கள் இந்த எதிர்மறைகள் இரண்டும் இன்று நேருக்கு நேர் நின்றது ஏன்? ஆசை துன்பத்திற்குக் காரணம் என்ற மந்திரத்தைச் சொல்பவர்கள் இன்று உலகத்தில் யார் இருக்கிறார்கள்? புத்தனின் புன்னகையைப் பற்றிப் பேசுபவர்கள் யார்? அவன் சொல்கிறான் – “நீ இவ்வளவு கிருமி நாசினி திராவகம் விற்றால், உனக்கு ஒரு வெளிநாட்டுக் கார்!” இவன் வருகிறான்-“நீங்கள் இவ்வளவு விற்றால் உங்களுக்காக வெளிநாட்டுப் பயணம்”. மற்றொருவன்- “அதே திராவகம் அரை விலையில்” என்கிறான்.

இவன் விற்றால் மற்றொருவன் விற்கிறான். இன்னொருவன் விற்காவிட்டால் மற்றொருவன். எல்லோரும் சந்தையைப் பற்றியே பேசுபவர்கள். யாரும் ஆசை துன்பத்தின் காரணம் என்று பேசுபவர்கள் இல்லை. தன்னையும் சேர்த்து. அதுபோல முதலீடும் வெள்ளத்தைப்போல ஆசையே துன்பத்தின் காரணம் என்பது வாழ்க்கையின் பகுதியாகவே இல்லை என்று நினைத்தான். கனிஷ்கன் கட்டினான் என்று சொல்லப்படும் கோவிலில் மலர்ந்து நின்ற புத்த சிலையின் சிரிப்பு. இவனைப் பார்த்துச் சிரித்ததா அல்லது இவனுடைய பச்சோந்தி நிறத்தைப் பார்த்துச் சிரித்ததா? தெரியவில்லை.

புத்தனின் தூய தத்துவங்கள் இவனுக்கு முன்பே அறிமுகமாகாமலிருந்தால் இவ்வளவு சிந்தனையும் கிடைத்திருக்காது. முதலீடு ஈட்டும் தனிப்பட்ட சொத்துக்களின் முதலாளித்துவத்திற்கு எதிரான இயக்கங்களில் சில காலம் போராடியதால் தனக்கு ஒரு நேர்மறை அல்லது எதிர்மறை கருத்துக்களோ தெரியாமல் போனது.

முதலீடு விரிவாக்கம் எதையும் பொருட்படுத்தாது. அது மனிதர்களின் இரத்தக் கால்வாய் வழியாகப் பாயும் என்று பெரியவர்கள் சொன்னார்களே. அந்தப் பட்டறையிலேயே பழகி அதைக் கையில் ஏந்தி வந்திருக்கிறான் அவன். என்றால் எல்லாம் புரிந்தாலும் முடிவில் வெற்றி பெற்றது முதலீடு. அந்த சில கால ஆய்வால் பின்தொடர்ந்து அவனை வாட்டுவது அந்த குற்ற உணர்வுகளே என்று அவன் உணர்ந்தான்.

பேங்காக் புத்த ஆலயங்கள் இவனுக்கு நிரந்தர எச்சரிக்கை மணிகளை ஒலித்தன. நீ வெளியேறு, உனக்கு இங்கே இடமில்லை. இரவு படுத்தால் அந்த இரு இடதுசாரி வாரிசுகள் மேனிபெஸ்ட்டோவின் ஒவ்வொரு வரியின் பொருளையும் காதில் ஊதி ஊதி தூக்கத்தை அனாமத்துக் கணக்கில் வைத்தார்கள்.
அப்படிச் சொன்னவர் யார்?

வியாபாரம் செய்யும் பகுதியின் ஒவ்வொரு கிராமத்திற்கும் போய் கேளுங்கள், தன்னைப் பற்றி அவர்கள் சொல்லுவார்கள் – இவன் எங்களுக்குக் கடன் கொடுக்கும் கடவுள் என்பார்கள். ஆனால், புத்த ஆலயங்களின் அலாரங்கள், இடது சாரிகளின் அந்தப் பெரியவர்கள், ”பேங்காக்கில் உங்களுக்கு இடமில்லை வெளியே போ” என்கிறார்கள்.
உண்மை எனக்கும் தெரியும். என்ன மறைக்கும் ஆலோசனை. எதிரி முன்னால் இருக்கிறானா, பின்னால் இருக்கிறானா என்று யாருக்கும் தெரியாது. என்னை எதிரி என்றால் அவர்களே சிரிக்கிறார்கள்.

எதிரியும் இப்படி அருவுருவமாகி கண்கட்டுபோல இருப்பான் என்று இன்று தெரிந்த உண்மையல்ல. வியாபாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அறிந்த உண்மை. அந்த விவசாயிகளுக்கும் வெகுளிகளுக்கும் அந்த மனிதர்களுக்கும் முன்னால் நின்று சண்டை போடுபவர்கள் மட்டுமே எதிரிகள். நல்ல விளைச்சல் வரும் விதைகள் என்று விதைக்கக் கொடுத்த விதைகள் எல்லாம் முளை விடாமல் சுருண்டு போயின. விதைகளுடன் நொடிந்துபோயின அந்த ஜீவன்கள். அது தன் மீது எழுதிய குற்றமாகி, அது அவரவர் தலை எழுத்து என்ற விளக்கம் பெற்று அந்தத் தலையெழுத்துக்களே என்னைப் போன்றவனைக் காப்பாற்றியது.

ஆம், கோவில் மணி அலாரங்கள் அடிக்கடி சொல்லி இருந்தன- நீ தொலைந்து போ.. நீ வெளியேறு…. என்று.

பேங்காக் ஏனோ தீர்வு காணாத நாடு என்று அவனுக்குப் புரியத் தொடங்கியது. உலகில் போதுமான அளவு திருடர்கள் இருக்கிறார்கள். மோசமானவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் சுகமாக இருக்கிறார்கள். ஆனால், புத்தனின் மணியோசை ஒருமுறையாவது அவர்களுக்குக் கேட்டிருக்கிறதா? என்று நினைத்தான்.

பேங்காக் என்றால் சொர்க்கம் என்று பலருடைய கருத்து அவன் பார்வையில் இன்று தலைகீழ் நிலைமைக்கு மாறியிருக்கிறது.

ஆம், தாய்லாந்தில் இந்த பேங்காக்-கை விடவேண்டும். இல்லாவிட்டால் அந்த மணியின் அலாரங்கள் அவன் செவிப்பறையை கிழிப்பதன் வழியாகத் தன்னைக் கொன்றுவிடும் என்று நினைத்தான்.

பத்துநாள் இந்த பேக்கேஜ் பயணத்தில் முக்கியமாக பேங்காக், பட்டாங், மை கர்டி, ஹுயா ஹின், புகெட்டான், கஹோல்லாக், கரோன் என்ற அழகான இடங்களைப் பார்க்க ஜார்கிபாஷின் என்ற நிறுவனம் இங்கே அழைத்து வந்தது. ஜார்கிபாஷின் கிருமிநாசினி மற்றும் உரம் தயாரிக்கும் உலகின் முக்கிய 25 நிறுவனங்களில் ஒன்று என்று பெயர்பெற்றது. உலகம் முழுவதும் இதன் கிளைகள் பரவி இருக்கின்றன.

அதன் முக்கிய உற்பத்திப் பொருளான “சாகேன்” என்ற கிருமி நாசினியை விற்பது நிறுவனத்தின் முக்கிய செயல்பாடு. நிரந்தரமாக பத்து ஆண்டுகள் சந்தையை அலங்கரிக்கும் இந்த “சாகேன்” உலகத்தின் நம்பர் ஒன் விற்பனையாகும் திராவணம் என்ற இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடத் தொடங்கியது. முதல் எட்டு ஆண்டுகள் கிருமி நாசினி விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எந்த பேக்கேஜ்-ம் இருக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க, அதன் இலாபமும் கூடச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை.

வெறும் 8 சதவிகிதம் மார்ஜினில் வியாபாரம் செய்யவேண்டி இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாகச் சந்தையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த ஏகபோக சக்ரவர்த்தியாக ஜார்கிபாஷின் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கியமாக “லோகோஆன்” நிறுவனம் மிக நெருக்கமான போட்டியாளராக வளர்ந்தது. அதற்குக் காரணம், தரமான அம்சங்களாலும், அதிகமான சந்தைத் தேவைகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்ததாலும், ஜார்கிபாஷின் – லோகோஆன் நிறுவனங்கள் சரி சமனாக இருந்தன.

ஜார்கிபாஷின் பழைய நிறுவனமானாலும் இன்னும் சில நாட்களில் லோகோஆன்-க்கு முதல் இடத்தை விட்டுக்கொடுக்கத் தவிர்க்கமுடியாமல் மானசீகமாகத் தயாராக இருந்தது. ஆனாலும் முந்தைய காரிய தந்திரங்களில் சிறிய மாற்றங்களைச் செய்து உற்பத்தித் தரத்திலும் சந்தை வளர்ச்சியின் பக்கம் அதிக கவனம் செலுத்தும் தந்திரத்தின் பகுதியாகவும் “சாகேன்”- பொருளைச் சந்தையின் பின்னணியில் மறு நிலைநாட்ட முக்கியமானது. என்றால் கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், ஹை டெக் வேசிகள் என்று வியாபாரிகளை எடுத்துச் செல்வதன் வழியாகத் திரும்பவும் சந்தையின் தலைமையை நிலைநாட்ட ஏதுவாக இருந்தது. அதன் தேவைக்குத் தக்கபடி நிறுவனத்தில் கட்டாய விற்பனை கருத்து நடைமுறைக்கு வந்தது.

அதற்காக கர்நாடகா முழுவதும் இருக்கும் அதிக விற்பனை செய்த 15 வியாபரிகளை தாய்லாந்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அந்தப் பின்னணியில் அவன் இங்கே வந்திருந்தான்.

சந்தை என்னும் மாயாவி தன்னுடைய வலுவான கரங்கள் வழியாகப் பலருடைய இரத்தம், மாமிசம், சதைகளை வாங்குகிறது. பெண்களை எங்கெங்கோ தள்ளுகிறது என்ற பெரியவரின் சிந்தனைகள் இன்று உண்மையாக உள்ளதே! சந்தையின் பாகமாக இருக்கும் இங்குள்ள பெண்களுக்கு ஜீவன் இருக்கிறதா, இல்லையா அல்லது அது ஒரு கற்பாறையா என்று எண்ணும் போதே தப்பித்துக் கொள்ளுவதிலேயே வாழ்க்கை கழிந்தன. எவ்வளவு தப்பித்துக்கொள்வது? தப்பித்துக்கொண்டு பட்டாங் வந்து சேர்ந்ததும் ஆனது. இங்கே எல்லாம் இருக்கின்றது – கடல், மது, மாமிசம், அவளும்….


ஆனாலும் அது அழகாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பேங்காக்–இன் அந்த மணிகளின் ஓசையால் தற்காலிகமாக நிம்மதி என்னமோ கிடைத்தது. இரண்டு நாள் முடிந்திருந்தது. மனதின் சங்கடங்களுக்குப் பரிகார வழியாக ஆன் காங்கும் கிடத்தாளே? இரண்டு நாட்களாக அவளுடன் பேசிப் பேசி, பேங்காக்-இன் மணியோசை மறந்துபோனது. ஆன்காங்க் என்ற அந்தப் பெண்ணை வியாக்கியானம் செய்யவேண்டும் என்பதே பிரச்சினையாக இருந்தது. இவள் வெறும் வேசியா? இவள் பேங்காக் பல்கலைக் கழகத்தில் தத்துவம் கற்ற பெண்ணோ அல்லது விவசாயத்தைப் பற்றிப் பேசும் விவசாய விஞ்ஞானியா?

இரண்டு நாள் அனுபவத்தில் நான் எல்லாம் மறந்துவிட்டேனா? ஆம், மனிதனின் அடிப்படை குணங்களில் ஒரு மாறுதலைத் தேடுவது ஒரு முக்கியமான குணம். ஆன்காங்க் துயரத்திற்கு எதிரான மாறுதலாக மகிழ்ச்சியாகவே கிடைத்திருக்கிறாள் என்று நினைத்தால் அவள் பொருளாகத்தானே கிடைத்தது – commodity-யாகத்தானே? நான் இவ்வளவு விற்பனை செய்ததற்கு நீ இவ்வளவு சுகங்களைக் கொடுத்தாய்- என்ற கொடுக்கல், வாங்கல் பரிமாற்றத்தால் தானே? என்றால், அவள் சொல்லும் “தாய்” என்றால் ஃப்ரீடம், சுதந்திரம் என்ற பொருள். அவள் உண்மையாகவும் சுதந்திரமாக இருக்கிறாளா?

தாய் என்றால் ஃப்ரீடம், ஃப்ரீடம்…. என்று சொல்லும் ஆன்காங்க் என்ற செல்ல முகத்து அழகிக்கு தான் எதற்காக வந்திருக்கிறேன், அவள் பாட்டுகள் பேச்சுக்கள் தன் ஒருவனுக்காகவா அல்லது தன்னைப்போல தின வாடிக்கையாளர்களுக்காகவும் இருக்கலாமோ…. யோசித்தான். அவள் தொழிலே அப்படிப்பட்டது. தினமும் வாடிக்கையாளர்களிடம் அவள் செயல் இப்படித்தான் இருக்கவேண்டும்.

கனஷியாம் என்ற மனித வள அதிகாரி இந்தப் பயணத்தின் தலைமையை வகித்திருந்தார். அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். நீங்கள் ஏன் பயணத்தின் மகிழ்ச்சியைப் பெறவில்லை. எதற்காக வருத்தமாக இருக்கிறீர்கள்? இந்தியாவின் 15 டாப் விற்பனையாளர்களில் ஒருவர் நீங்கள் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. ஒரு வெளிநாட்டுக் கார் மற்றும் இந்த அற்புதமான பயணப் பரிசை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அடுத்த ஆண்டிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு உல்லாசப் பயணம் இருக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் அடுத்த ஆண்டு இதைவிட இரண்டு மடங்கு விற்பனை செய்யவேண்டும். உங்களுடைய தற்காலிக கம்பானியன் ஆன்காங்க் என்றார்.


தாய்லாந்தின் ஒரு பெருமை என்றால் வேசித் தொழிலைச் சட்டமாக்கி இருக்கிறார்கள். “நாம் ஃப்ரஷ் வெஜிடபல் என்று சொல்வோமே, அதே போல இங்கே பெண்கள். அடுத்த ஆண்டு ஐரோப்பா பயணத்திற்கு தற்காலிக கம்பானியன் ஆக உங்களுக்கு ரஷ்யப் பெண்கள் கிடைப்பார்கள். அதன் சுகமே தனி. ஒரு பழமொழி இருக்கிறது, நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? என்று சிரித்தார். “கடவுள் வோட்காவுடன் ரஷ்ய அழகிகளையும் கொடுத்தால் நான் சொர்க்கத்தை நிராகரிக்கவும் தயார்” என்று. ரஷ்ய அழகி, வோட்கா, ஆரஞ்சு இவை நன்றாகப் பொருந்தும். இவற்றை ருசிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு உங்களுக்கு அந்த அதிருஷ்டம் வரும். அதற்காக நீங்கள் உங்கள் டார்கெட்டை அடையவேண்டும். இந்தப் பெண் இருக்கிறாளே, ஆன்காங்க் அவளை ரஷ்யப் பெண்களுக்கு முன்னால் திருஷ்டி சுத்திப் போடவேண்டும். எப்படிப்பட்ட அழகிகள் அவர்கள்!” என்றார் கனஷியாம். இருக்கட்டும், உங்கள் மூட் சரியாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் பேங்காக் இருக்கலாம். உங்களுக்காகவே நாங்கள் பட்டாங் வந்திருக்கிறோம்.

“பட்டாங்” துறைமுகங்களின் நாடு, இன்பமாக இருக்க அழகான நகரம் என்றார். கேர்புல் அபௌட் யுவர் சேஃப்டி என்று கூறி தன் அறைக்குச் சென்றார். உண்மையாகவும் பட்டாங் அவர் கூறியது போல அப்படி பயப்படக்கூடிய நகரமல்ல. இடதுசாரி பெரியவர்கள் கூறிய வார்த்தை சந்தையின் ஏகபோக உரிமைக்கான போராட்டம் வெறும் போராட்டமாகாமல், முழுமையாக அங்கே இருக்கும் ஏழைப் பெண்களை கமாடிடியாக பயன்படுத்துகின்றன என்பது திடீர் என்று நினைவிற்கு வந்தது.

தான் இதன் நுகர்பவனா அல்லது உற்பத்தியாளனா? என்ற கேள்விகளுடன் அதன் உற்பத்தியாளனாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இது தவறு என்று தெரிந்திருக்கிறது. ஆனாலும் அந்த வாளைப் பிடித்து நின்றிருக்கிறேன். எல்லோரைவிடவும் தான் மிகவும் அபாயகரமான மனிதன் என்ற ஆலோசனை வரும்போது சன்னலுக்கு வெளியே நின்றான்.
கடல் ஆர்ப்பரிக்கிறது.

ஒரு நொடி சிந்தனைகளின் ஓடை நின்றதுபோல இருக்கிறது.
மீள, மீள கடலின் ஆர்ப்பரிப்பு.

புத்தனின் நிலையற்ற தத்துவம், பெரியவர்களின் கமாடிடி பற்றிய வியாக்கியானங்கள் உண்மையாகவும் அவனைப் பிழிந்து சக்கையாக்கி விட்டது. முதலீடு வெட்கமற்ற குற்ற உணர்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குகிறது என்று முணங்கினான். அவள் புன்னகை செய்து மௌனமானாள். பிறகு இவன் பக்கம் பார்த்து –
“என் அப்பா கொள்ளைக்காரனாக இருந்தார்” என்றாள்.
அவனுக்குப் பயமானது.

“பயப்படவேண்டாம், இருந்தான், இப்போது இல்லை. அது மட்டுமல்ல, அவன் இந்த பூமி மீதே இல்லை” என்றாள். “தர்மகுரு ஒருவர் அவனை மாற்றுகிறேன் என்று அழைத்துச்சென்று தினமும் புத்தனின் ஜாதகக் கதைகள், திரிபிடகத்தின் வரிகளைச் சொன்னார். வாழ்க்கை என்றால் திருடுவது என்றே தெரிந்திருந்த அவன், திருடுவதை நிறுத்தியவுடன் தனிமையானான், வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்பதுபோல உணவை விட்டான், பேச்சை விட்டான், ஒருநாள் கடலில் குதித்து இறந்து விட்டான்” என்று கண்ணீரானாள். என்றால் கொள்ளையடிப்பதற்கும் வெளியே, வாழ்க்கை?

இது தன் கதை போலவும் தோன்றியது அவனுக்கு. கொள்ளைக்காரனின் மாற்றத்திற்கு மாற்று இருக்கவில்லையா? என்று நினைத்துக்கொண்டு அந்தப் பின்னணியில் தன்னைத்தான் நினைத்து அச்சமானது அவனுக்கு. அவள் சும்மா இருப்பவளே அல்ல. இவனுக்காக சைனீஸ் டிஷ் தயார் செய்தாள். மீனுக்கு மசாலா தடவி வறுத்து உணவு மேசை மீது வைத்தாள்.
சிரித்துக்கொண்டே சொன்னாள்

“இந்தியர்கள் இங்கே உல்லாசமாக இருக்க வருகிறீர்களே, உங்கள் மனைவிகள் சரியாக இல்லையோ அல்லது அவர்களுக்குத் தெரியாதோ?”

என்றதும் உடனே நாக்கைக் கடித்து, “இல்லை, சும்மா கேட்டேன், நீ தவறாக எண்ண வேண்டாம்” என்றாள். “ஒருவேளை அவர்கள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டால் எங்களைக் காப்பாற்றுபவர்கள் யார்?” என்று மறுபடியும் சிரித்தாள். இருட்டு சூழத் தொடங்கியது. பேங்காக்கில் புத்த ஆலயங்கள் செய்த காயங்களுக்கு அவள் பேச்சு மருந்துபோல என்று நினைத்தான். உண்மையோ இல்லையோ தெரியவில்லை.


“நாளை நீங்கள் புறப்படுகிறீர்களா?” என்று கைகூப்பினாள்.
“நான் சில விஷயங்களை உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று மேலே தொடர்ந்தாள். “வருடத்திற்கு நான்கு இலட்சம் தாய் பாத் சம்பாதிக்கிறேன். அதில் இருபது பர்சன்ட் அரசாங்கத்திற்கு வரி கொடுக்கிறேன். இருபது சதவிகிதம் ஏழை விவசாயிகளுக்காக ஒதுக்கிவைக்கிறேன். பத்து சதவிகிதம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்கிறேன்” என்றாள்.

“இது நான் மட்டுமல்ல. தாய்லாந்தின் அநேக வேசிகளின் சாதாரண பொருளாதார அஜெண்டா இவை. மற்றொரு விஷயம், எனக்குச் சாப்பாடு போடுபவர்களே இந்தியர்கள். அதனால் எனக்கு இந்தியர்கள் என்றால் மரியாதை. அது புத்தனின் கர்ம பூமியும் கூட” என்றாள். “வி லீட் அ கம்ஃபர்டபல் லைஃப் ஃப்ரம் யூ” என்றாள். “இல்லாவிட்டால் என் அம்மா, இரண்டு தங்கைகள் இதே கடலில் விழுந்து இறந்து போயிருப்பார்கள்.

இந்தியர்கள் தங்கள் வருடாந்திரக் கணக்கை முடித்த கையோடு இந்தப் பக்கம் அடி எடுத்து வைக்கிறார்கள். அவர்கள் ஈட்டிய இலாபப் பணத்தை தாய்லாந்தின் பீச்களுக்களில் செலவு செய்கிறார்கள். நான் இதைத் தவறு என்று சொல்லவில்லை. இது எங்களைப் போன்றவர்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு வழியாகிறது” என்று சூடான தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். தேநீர் அருந்திக்கொண்டே வானத்தைப் பார்த்தான். நீல வானம் மற்றும் கடல் ஒன்றானதுபோல தெரிந்தது.

அவள் மீள பேசத் தொடங்கினாள். “அதில் உங்கள் பெஸ்டிசைட் கிருமிநாசினி உர நிறுவனங்களால் தாய் டூரிசம் செழிப்படைந்திருக்கிறது” என்றாள். அவளிடம் இடதுசாரி பெரியவர்களைப் பற்றிக் கேட்டேன், அவர்கள் அவளுக்குத் தெரிந்திருப்பதாகத் தெரியவில்லை. புத்தன் மட்டும் அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தான். “தர்மமல்லாத, சங்கமல்லாத வழிகள் அவன் விரும்புவதே இல்லை. தவறு செய்தால் புத்த மணி ஓசை எச்சரிக்கும்” என்றாள் அவள். “அதற்காக நான் எப்போதும் ஆன் டிராக் மீதே இருக்கிறேன்” என்று கைக்கு உறை அணிந்து காண்டோம்களின் உறைகளை கிழித்து, ஓகே உங்களுக்கு மசாஜ் செய்யலாம் வாருங்கள் என்று அழைத்தாள்.

“முதலீடு செயல்பாட்டுத் தன்மைக்குப் போகாமல், சேகரிப்பின் அளவுக்கு வந்தால் கமாடிடியாக மனிதத் தன்மையே நாசமாகிவிடும்” என்றான். அவளுக்குப் புரியாமல், “படு, தண்ணீர் சூடாக இருக்கிறது, அதில் ஒரு பௌடர் கலந்திருக்கிறேன். அது உன் ஆசைகளை இருமடங்காக்கும்” என்று சொன்னாலும் அவன் அசையவில்லை. “இருக்கட்டும் நீ அந்த நாற்காலியின் மீது உட்கார். நான் இங்கே அமர்கிறேன்.

பேங்காக்கின் அந்த மணிகள் செய்த காயத்தின் அடையாளங்களை நிவர்த்தி செய்யும் வலு உனக்கு மட்டும் இருக்கலாம். வா சும்மா பேசலாம்” என்றான். “இங்கே வந்திருக்கிறானே கனஷியாம் என்ற லோஃபர், இவன் பெரிய தரகன்” என்றான். அவள் கனஷியாம் என்றால் சோறு போடுபவன் என்று எண்ணியிருந்தாள். “ஏன் என்ன ஆனது?” என்றாள். “தரகர்கள் இல்லாதவர்கள் மற்றும் இருப்பவர்களின் இடையே இணைப்பாக வேலை செய்தாலும் கூட அவர்கள் செயல்பாடு இருப்பவனின் பெருமையையே காக்கிறது” என்றான். அவளுக்குப் புரியாமல், “ஐ டோன்ட் நோ” என்றாள்.

மற்றவர்களைப் பற்றிப் பேசுவதை விட நான், என்றான். நானும் அவன் தானே? ஆம் நானும் அவன்தான் என்று நினைத்தான். பிறகு அவள் வேசித் தொழில் பாவமா என்று சிரித்தாள். உங்கள் விவசாயிகளின் சேவையில் புண்ணியப் பணமும் பாவத்தைக் கழுவ உதவி செய்யலாம் என்றாள்.
“நீங்கள் விவசாயிகளைக் காப்பாற்றுபவர்கள். அவர்களுடைய விளைச்சலைக் காப்பாற்றுபவர்கள். அந்தப் புண்ணியமும் எங்களுடன் இருக்கிறது” என்றாள் ஆன்காங்க்.
அவள் கண்ணீர் அணை உடைந்தது.

“ஒவ்வொரு பன்னிரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அங்கே ஒரு விவசாயி சாகிறான். அவனைக் கொல்பவர்களே நாங்கள். அவனுக்குப் பொய்யான கிருமிநாசினி கொடுத்திருக்கிறோம். அவனிடமிருந்து மூன்று மடங்கு அதிகம் பணம் கறந்திருக்கிறோம். அவன் வாழ்க்கையைத் துவம்சம் செய்திருக்கிறோம் நாங்கள் இங்கே வந்தது அவன் பணத்தால்தான். உல்லாசமாக இருந்ததும் அவன் பணத்தில்” என்று கன்னடத்தில் சொன்னான்.

இவனுடைய கன்னடத்தைக் கேட்டு, அவளுக்கு அதிர்ச்சியானது. “வாட்” என்றாள். “நத்திங்க்” என்றான். மாலை இருளாகத் தொடங்கியது. நீலக் கடல் நஞ்சாகத் தெரிந்தது. நான் தியானத்திற்காக இங்கே பூயி என்ற ஊருக்குப் போய் வருகிறேன். நீங்கள் அந்த இரண்டு மணி நேரம் ஓய்வெடுங்கள் என்றாலும் அவளை இரண்டு மணி நேரம் விட்டிருக்க முடியவில்லை. “இங்கேயே தியானம் செய்யலாமே? ப்ளீஸ் நீ போகவேண்டாம். நான் தனியாக இருக்க முடியாது” என்றான்.

சரி, இங்கேயே செய்கிறேன் என்று சிரித்தாள். சூட்கேசைத் திறந்து அதிலிருந்த புத்த விக்கிரகத்தை எடுத்து மேசை மீது வைத்து தியான நிலையில் அமர்ந்தாள். அவன் அந்த விக்கிரகத்தைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான். மறுபடியும் சூட்கேசிலிருந்து இரண்டு சின்ன மணிகளைக் கையில் பிடித்து அசைத்தாள். பேங்காக்-இன் ஆலயங்களை விடவும் அதி பயங்கரமாக ஓசை எழுப்பியது அந்த சிறு மணிகளின் ஒலி. அவனுக்கு மரண மிருதங்கத்தைப் போல கேட்டது. உடனே சன்னலுக்கு அருகே ஓடினான். சன்னலைத் திறந்தான். நீலக் கடல் எதிரே உடலை விரித்துப் படுத்திருந்தது.

“கொள்ளைக்காரர்களுக்கு வாழ மாற்று வழிகள் இல்லை. அவர்கள் தேர்வு கடல் ஒன்றே”

என்ற ஆன்காங்க் கூறிய வார்த்தை அந்த இருட்டு உடலிலிருந்து வெடித்தது.


கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) 41010
2013- பிரஜாவாணி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.

கன்னடத்தில்: மஹந்தேஷ் நவல்கல்

தமிழில்: கே,நல்லதம்பி  

மஹந்தேஷ் நவல்கல் :24 நவம்பர் 1970-இல் கர்நாடகா ராயச்சூர் மாவட்ட மானவி தலூகாவின் நவல்கல் என்ற கிறாமத்தைல பிறந்தவர். விவசாயக் குடும்பப் பின்னணியில் அவர் கதைகள் விவசாயிகளின் பிரச்சினைகளையும், உலகமயமானலின்  விளைவுகளின் உள்ளோட்டங்களை சிறப்பாகப் பார்க்கின்றன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், ஒரு நாடகத்தையும், 30 வயதுக்குள்ளான எழுத்தாளர்களின் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தற்போது கல்புர்கி என்ற ஊரில் வசிக்கிறார்.

பிறப்பு 1949. மைசூரில். படிப்பு B.A.வரை. ஒரு தனியார் கம்பெனியில் வியாபாரப் பிரிவின் அகில
இந்திய மேலாளராக 35 வருடங்கள் வேலை பார்த்து, ஓய்வுபெற்றவர். நிழற்படக் கலையில்
ஆர்வமிக்கவர். பல உலக மற்றும் தேசிய கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு
வைக்கப்பட்டு, பல பரிசுகளும் பெற்றிருக்கின்றன. இந்தியா லலித கலா அகாடெமியில் இவரது 6
புகைப்படங்கள் நிரந்தர அருங்காட்சியகத்தில் இருக்கிறது. கன்னடத்திலிருந்து தமிழுக்கும்,
தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கவிதைகள் ,சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்த்து, பல கன்னட
மற்றும் தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty இந்திர நீலம்

Post by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 11:54 pm

காலையில் இருந்து நிதானம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை. உடம்பு வலி இல்லை. சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் இல்லை. மாதவிலக்கு முடிந்து ஒரு வாரம் ஆகிறது. உடம்பு எப்பொழுதும் இப்படித்தான். என்ன செய்கிறது என்பதைக்கூட புரிந்துகொள்ள விடாது.

நானும் புரியாமல்தான் இருக்கிறேன். இயல்பில் இல்லை என்பது மட்டும் புரியும். லேசாக அனலில் வறுபடுவதுபோல் தவிப்பாக இருக்கும். இதுதான் செய்கிறது என்று புரிந்துகொண்டால் பரவாயில்லை. உடம்புத் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வது இல்லை. அல்லது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா?

மார்பகங்கள் கனத்தன. மாதவிலக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக உடல் இப்படித்தான் முறுக்கியெடுக்கும். கண்களில் வெப்பம் தெரியும். தொடை கனக்கும். கால்கள் இரண்டும் துவண்டு விழும். உடம்பைச் சுமப்பது வேதனையானது என்பதை அந்த நாட்கள் சொல்லும். இப்பொழுதெல்லாம் எல்லா நேரமும் உடம்பு இப்படி இருப்பதற்குக் காரணம் என்ன?

பொருட்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்து வேலைகளில் மனத்தைத் திருப்பினேன். மனத்தை அடக்குவதுதான் கடினம். உடம்பு நன்றாக இருந்தால், மனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு இயல்பாக இருந்து கொள்ளலாம். உடம்பு கொஞ்சம் முரண்டு செய்தால்கூட, மனமும் சோர்ந்துபோய், வண்டி எங்காவது நின்றுவிடுகிறது. ஏற்கனவே வீட்டில் டயர் வண்டி என்று பெயர்.

உடம்பில் எங்குமே வலி இல்லை. உடம்பின் எந்த பாகத்திலும் அசாதாரணத்தன்மை இல்லை. புது நோய் எதுவும் இருக்குமோ? மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு வேலைகளில் மனம் செலுத்தினேன். வேலைகளுக்கு இடையிலும் உடம்பை முழுமையாக மறந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. சிறு வயதில் புதுப் பூந்தொடப்பத்தால் வீடு பெருக்கும்போது, அதிலிருக்கும் ஊமுள் ஆடைகளுக்குள் எங்காவது ஒட்டிக்கொள்ளும். எங்கிருக்கிறது என்று தெரியாது.

நடக்கும்போதும், உட்காரும்போதும், உடம்பில் ஏற்படும் அசைவுகளுக்கெல்லாம் உடனசையும் ஊமுள் உடம்பில் குத்திக் கொண்டே இருக்கும். கண்டுபிடித்துத் தூக்கியெறிவதற்குள் போதுமென்றாகிவிடும். உடம்பின் உள்ளே ஊமுள்ளை வைத்துத் தைத்ததுபோல் இருக்கிறது. எப்படிக் கண்டுபிடித்துத் தூக்கிப்போடுவது? இதற்கு ஸ்கேன் வசதி இருக்கிறதா?

நாள் முழுக்க வேலைகளில் ஓடிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் சிறு மின்னல், அலைபோல் நெளிந்து கொண்டிருந்தது. மனம் நிதானமாகச் சிறு அலையைப் பின் தொடர்ந்தது. உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைக்குச் சில நேரங்களில் பரவியது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் ஒருமுறை. மார்பகங்களுக்கு இடையில் ஒருமுறை. இதயத்தின் ஆழத்திற்குள்ளிருந்து ஒருமுறை. வெவ்வேறு இடங்களில் தொடங்கிய அலைகள் உடம்பிற்குள் குறுக்கு நரம்புகளைப்போல் ஓடிக் கொண்டிருந்தன.

ஒன்பதாம் வகுப்பில் ரத்த நாளங்கள் பற்றி முதன்முதலில் பார்த்த வரைபடம் கண்முன் நின்றது. ரத்த நாளங்கள் சிடுக்கு விழுந்த நூற்கண்டுகளைப்போல் உடல் முழுக்கப் பின்னப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாளமும் எங்கிருந்து எங்கு போகிறது? எது தொடக்கம்? எது முடிவு? மேலிருந்து கீழாகச் செல்கிறதா? கீழிருந்து மேலாகச் செல்கிறதா? படித்து முடிக்கும் வரை புரிந்து கொண்டதில்லை. தசைகளற்ற ரத்த மண்டலத்தில் நாளங்களின் ஓட்டம்தான் எனக்கு உடம்பின் வலியாகத் தெரிகிறதோ?

சிறு ஊசி குத்தினால்கூட தனி வலியாக அடையாளம் காட்டிவிடும் உடம்பு, பிசைந்து வைத்த மாவு உருண்டையைப்போல் ஒன்றையும் வெளிக்காட்டாமல் இருக்கிறது. கவனத்தை இன்னும் குவித்தேன்.

இந்த உடம்பை எத்தனை முறை முழுமையாகப் பார்த்திருக்கிறேன்? பதினைந்து வயது வரை வீட்டில் குளியலறை கிடையாது. வீட்டுக்குள்ளே இருக்கும் நடு வாசலில்தான் குளிக்க வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் எப்பொழுதும் ஆட்கள் நடமாடிக் கொண்டே இருப்பார்கள். அம்மா, சித்தி, அக்கா எல்லாம் வாசலை ஒட்டியிருக்கும் அடுப்படியில் வேலை செய்வார்கள். பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும். அக்கம்பக்கத்துப் பெண்களும் கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை கடன் வாங்க வந்து போவார்கள்.

அத்தனைப் பேர் முன்னிலையிலும்தான் குளிக்க வேண்டும். தொட்டியில் இருந்து பெரிய கூடையில் தண்ணீர் எடுத்து, மார்புக்குமேலே பாவாடையை ஏற்றிவிட்டு, குளிக்க உட்காரும்போது உடம்பு கூசிப் போகும். பெரிய தண்ணீர் அன்ன கூடைக்குப் பின்னால் மறைந்து கொள்ளலாமா எனத் தவிப்பாக இருக்கும். எல்லாரும் வேலை செய்வதுபோல் தோற்றம் இருக்கும். கண்கள் குளிக்கும் ஆளை ஒரு பார்வைப் பார்த்துக் கொள்ளும். பக்கத்து வீட்டுப் பையன்கள் அந்த நேரத்தில் கட்டாயம் ஒன்றிரண்டு முறை வீட்டுக்குள் வந்து வெளியே போவான்கள். ஏன் வந்தான்கள், வந்தபடியே எதற்கு வெளியே போகிறான்கள்? யாருக்கும் கேள்வியே எழாது.

“கழுத்துல்லாம் பாரு கருப்பா இருக்கு, நல்லா தேச்சிக் குளி” சத்தமாகச் சொல்வாள் அம்மா. தினம் இந்த வசனத்தை மறக்க மாட்டாள். குத்தங்கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் உடம்பில் மார்புக்குமேல் உள்ள பகுதியே வெளியில் தெரியும். அவசரமாகக் கழுத்திற்கும் முகத்திற்கும் கைகளுக்கும் சோப்பைப் போட்டுத் தேய்த்துக் கொள்வேன். கால் பாதங்களை வெளியில் நீட்டி, பேருக்குத் தேய்த்துவிட்டு, தண்ணீர் ஊற்றிக் கொள்வேன்.

உடம்பை முழுமையாகத் தேய்த்துக் குளிக்கும் பழக்கம், தனி குளியலறை வந்தபிறகுதான். வளர்ச்சியடைந்த உடம்பை குளியலறையில்தான் முதன்முறைப் பார்த்தேன். “இனிமே பெட்டிக்கோட்டு போடக்கூடாது. உள்பாடி போடு. மாரு தொங்கிப் போச்சுன்னா கிழவி மாதிரி இருக்கும்” என்று சித்தி முன்னாலேயே அம்மா சத்தமாகச் சொல்வாள். வளர்ந்த மார்பகங்களைப் பார்த்தேன். காய் மாங்காயாகக் கல்லு மாதிரி இருந்தது. தொடுவதற்குக் கூச்சமாக இருந்தது.

‘கண்ணகிக்கு வெளியவே தெரியாது. எந்தச் சட்டைப் போட்டாலும், முன்னுக்குத் துருத்திக்கிட்டு நிக்காது. எனக்கு ஏன் இவ்வளவு பெருசா வளர்ந்ததோ?’ திட்டிக்கொண்டே தான் தினம் குளிப்பேன். நன்றாகத் தேய்த்துக்கூட குளித்ததில்லை. அருவருப்பான ஒரு வஸ்துவைப்போல் மார்பகத்தைத் தொடக் கூசுவேன். நான் இருக்கிறேன் என்று முந்திக்கொண்டு நிற்கும் மார்பகங்கள் எதிரிபோல் நின்றன. திருமணத்திற்குப் பின், கண்ணா கை வைக்க வந்தபோது கைகளைத் தட்டிவிடுவேன்.

“எவ்வளவு அழகான மார்பகம் உனக்கு. அமுதக் கலசம் மாதிரி, எதுக்குத் தொட விட மாட்றே” என்று கோபித்துக் கொள்வான். ஸ்ரீரங்கம் போனபோது, கையில் கண்ணாடியுடன், மேடிட்ட முலைகளுடன் இருந்த பெண் சிற்பத்தைப் பார்த்தவுடன் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். தூங்கும்போது எப்பொழுதும் கையில் பிடித்துக் கொள்வான். “இந்தக் கதகதப்பு இருந்தாத்தான் தூக்கம் வருது” என்பான்.

குளியலறைக்குள்ளும் நிம்மதியாகக் குளிக்க விடமாட்டாள் அம்மா. “ஏன் கதவைத் தாழ்ப்பாள் போட்ற, இங்க யார் கெடக்குறாங்க பாக்க” எனத் தாழ்ப்பாள் போட்டாலே நான்கு வீட்டுக்குக் கேட்பதுபோல் கத்துவாள். “தாழ்ப்பாள் போடாததுக்கு எதுக்கு பாத்ரூம்” என்று கோபம் வந்தாலும் வெளிக்காட்ட முடியாது. முதுகுத் தேய்த்துவிடுகிறேன் என்று வருவாள். “நீ தேய்ச்சா எண்ணெயே போகாது. திரும்பு இப்படி, நான் நல்லா தேய்ச்சு விடுறேன்” எனத் தலையில் சியக்காய் தேய்த்துவிடுவாள்.

குளியலறை கட்டியதும் நடமாடும் ஆண்கள் பார்வையில் இருந்து தப்பித்தாலும், ஒரு நாள்கூட என் விருப்பப்படி உடம்பைப் பார்த்துக் குளிக்க அம்மா அனுமதித்ததே இல்லை. கல்யாணம் முடிந்து மறுவீடு வந்தபோதுகூட, “எங்கெங்க வலி இருக்கோ, சூடா தண்ணிய ஊத்து” என உள்ளே நுழைந்துவிட்டாள்.

உடம்பை முழுமையாகக் கவனித்துப் பார்த்தபோது இருபத்து மூன்று வயதாகிவிட்டது. ஆளுயர கண்ணாடி வைத்த பீரோ தான் வாங்க வேண்டும் என்று அப்பாவிடம் அடம் பிடித்து வாங்கினேன். “அது எதுக்கு, ஒரு வருசத்துல ரசம் போயிடுச்சுன்னா, பாக்க நல்லாவே இருக்காது” என்று மறுத்தவரிடம் “பரவாயில்லை, எனக்கு பீரோ வாங்குனா கண்ணாடி வச்சுத்தான்” என்று கண்டிப்பாகச் சொன்னேன். “மூஞ்சியப் பாக்கத்தான் சின்னக் கண்ணாடி இருக்கே, பீரோவுல எதுக்குக் கண்ணாடி” என்று அம்மா மறுத்துப் பார்த்தாள். அப்பா கண்ணாடி விசயத்தில் என் பேச்சைக் கேட்டார்.

அம்மாவிடம் ஒரு கையகல கண்ணாடி இருக்கிறது. சாயந்திரமானால், தெருத் திண்ணையில் உட்கார்ந்து, தலையைச் சீவி, உச்சியில் கொண்டை போடுவாள். கழுத்து, நெற்றியில் மினுமினுக்கும் எண்ணெய்யை முந்தானையால் துடைத்துக் கொண்டே அந்தக் கையகல கண்ணாடியை எடுப்பாள். முகம் முழுமையாகத் தெரியாது. ஓரடி தள்ளி வைத்துப் பார்த்தால், நெற்றி வரை தெரியும். அம்மா நெற்றியில் வைத்திருக்கும் பெரிய குங்குமத்தை, கண்ணாடியைச் சாய்த்துப் பிடித்தபடி சரி பார்ப்பாள்.

வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் முகத்தைத் திருப்பிப் பார்த்துக் கொள்வாள். முழுக்க ரசம் போய்விட்ட அந்தக் கண்ணாடியில் அம்மா என்ன பார்க்கிறாள் என்று தெரியாது. அதுதான் அம்மா தன்னைப் பார்த்துக் கொள்ளும் நேரம். குளித்துவிட்டு வரும்போதே, மாடத்தில் இருக்கும் குங்குமத்தை எடுத்து, கண்ணாடிப் பார்க்காமல் நெற்றியில் சரியாக வைத்துக் கொள்வாள். பேருக்குத்தான் கண்ணாடிப் பார்ப்பது. என் கல்யாண சீரிலும் கையகல கண்ணாடி ஒன்று இருந்தது.

ஆளுயர கண்ணாடி பொருத்தப்பட்ட பீரோ என்னுடன் வந்தபோது, திருட்டுத்தனத்தை மறைத்துக் கொண்ட மகிழ்ச்சிதான் இருந்தது. படுக்கையறையில் கட்டிலுக்கு எதிர்ப்பக்கத்தில் பீரோவை வைக்கச் சொன்னேன். பீரோவைத் திறக்கும்போதும், மூடும்போதும், அந்த அறைக்குள் நடமாடும்போதும் ஆளுயர கண்ணாடியில் தெரியும் என் முழு பிம்பத்தைப் பார்ப்பேன். ஒவ்வொரு முறையும் என் உருவத்தைப் பார்க்கும்போதும் நின்று ரசிக்கத் தோன்றும். நான் அழகா? அழகில்லையா? கேள்வியே இல்லை. உடம்பின் முழுமை ரசிக்கத் தூண்டியது.

கண்ணாடிப் பார்க்கும்போது, முகத்தைத் திருப்பிப் பார்த்துக்கொண்டு ஆடையை சரி செய்து கொள்ளும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். நள்ளிரவில் அறையின் குறைந்த வெளிச்சத்தில் கண்ணாவுடன் பார்த்த முதல் நிர்வாணம், கோயில் சிற்பம்போல் மனதில் இருக்கிறது. கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஆடை மாற்றிக் கொள்ளும் நேரங்களிலும் பதற்றமாகத்தான் உடம்பைப் பார்த்துக் கொள்ள முடிந்தது. தப்புக் காரியம் செய்யும் குற்றவுணர்ச்சி இருக்கும். கண்ணாடி முன்னால் நிற்கும் நேரம் பார்த்து, யாராவது கதவைத் தட்டினால் பயத்தில் உயிர் போய்விடும். வியர்வையில் முதுகு நனையும். “வர்றேன்” என்று சொல்லும் குரலில் லேசான நடுக்கம் தெரியும். “என் உடம்புதானே, நான் பார்த்தால் என்ன தப்பு” என்று மனதில் தைரியம் வரப் பார்த்தாலும், ஒருமுறைகூட வந்ததே கிடையாது.

யாழினி வயிற்றில் இருக்கும்போதுதான் பெரும்பாடு. டாக்டரிடம் போக வேண்டும் என்றால், முதல் நாளில் இருந்தே எனக்கு மயக்கம் வரும். நானே முழுமையாகப் பார்த்துக் கொள்ளாத என் உடம்பை, ஒரு பேப்பரைப் போல் புரட்டிப் பார்த்துவிடுவார்கள். டாக்டர் வரும்முன், அங்கிருக்கும் உதவியாள், “மேலே ஏறிப் படுங்க, பாவாடையை லூஸ் பண்ணுங்க, புடவையை மேலே ஏத்துங்க, காலை விரிச்சு வைங்க” என்று கட்டளைகளால் என்னை விரட்டும்போது அவமானமாக இருக்கும். கூச்சத்தில் உடம்பு நத்தைபோல் சுருங்கிக் கொள்ளும்.

“ஃபிரியா விட்டா தாம்மா, என்னால் பார்க்க முடியும்” என கிளவுஸ் அணிந்த கைகளால் டாக்டர் எனக்குள் துழாவும்போது, மூச்சு நின்றுவிடும். குழந்தை உண்டாகி, பிறக்கும் வரை, என் உடம்பை எத்தனைப் பேர் பார்த்திருப்பார்கள்? பிரசவ வலியில் கத்தியபோது, செவிலிப் பெண், என் தொடையில் ஓங்கி குத்தினாள். “படுக்கும்போது தெரியலையா, இப்ப வாயப் பொளக்கற” என்றாள்.

குழந்தை பிறந்த அன்று கழிப்பறைக்குச் சென்றேன். சிறுநீர் போலவே ரத்தம் வெளியேறியது. அவ்வளவு ரத்தம் பார்த்தவுடன் தலை சுற்றியது. தடுமாறி விழப் போன என்னை, மருத்துவமனை ஆயா ஒருவர் தாங்கிப் பிடித்தார். “இரு” என்று சொல்லிவிட்டுப் போனவர் சின்ன வாளியில் வெந்நீரைத் தூக்கி வந்தார். “காலை அகட்டி வச்சு நில்லு. புடவையைத் தூக்கு மேலே” என்று கரகரத்த குரலில் சொன்னார். அன்றுதான் உடம்பு கூச்சம் விட்டுப்போனது. கை பொறுக்கும் சூட்டில் இருந்த வெந்நீரை குவளையில் எடுத்து, அங்கு விசிறியடித்தார். வலியில் கடுத்துக் கொண்டிருந்த இடத்தில் பட்ட வெந்நீர், மருந்துபோல் இதமாக இருந்தது.

தொடைகளை இன்னும் அகற்றினேன். வெந்நீர் ஊற்ற ஊற்ற வலி காணாமல் போனது. இரண்டாம் நபர் முன்னால் நிர்வாணமாக நிற்கிறோமே என்ற தயக்கம் எழவில்லை. ரத்தத்தில் மிதந்த என் உடம்பு மருத்துவமனை ஆயாவுக்கு அருவருப்புக் கொடுக்கவில்லை. வலி கண்ட இடத்திற்கு வைத்தியம் பார்க்கும் முதிர்ச்சியுடன் அவர் எனக்குப் பணிவிடை செய்துவிட்டுப் போனார். வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு, வெளியில் உட்கார்ந்திருந்த அவரை மருத்துவமனையில் இருந்த மூன்று நாளும் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒரு குழந்தை பெற்ற பிறகுதான், எனக்கு உடல் கூச்சம் போனது.

நீலா அத்தைக்கு கனத்த மார்புகள் தொங்கிக் கொண்டிருக்கும். ஒருநாள்கூட மாராப்பை இழுத்து மூடியதில்லை. சின்ன வயதில் அத்தையைப் பார்த்தாலே பிடிக்காது. எதுக்கு இப்படி திறந்துபோட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது என்று கோபமாக வரும். போகிறவர்கள், வருகிறவர்கள், கீரைக்காரி, கோலமாவுக்காரி, தள்ளுவண்டி ஆள், வளையல் பாய், எண்ணெய் செட்டி, நீலா அத்தையிடம் எத்தனைப் பேர் பேச்சுக் கொடுத்தாலும், மாராப்பு, பூணூல்போல் இரண்டு மார்புகளுக்கு நடுவில்தான் கிடக்கும். புடவை எப்பொழுதும் முழங்காலுக்கு மேலேதான் ஏறி இருக்கும்.

“ஏன் அத்தை இப்படி உட்கார்றே” என்றால் போதும், “யார்கிட்டயும் இல்லாத அதிசயமா என்ன? பார்த்துட்டுப் போறானுங்க” என இடையில் இருக்கும் முந்தானையையும் ஒருமுறை தூக்கிக் காட்டுவாள். அதற்குமேல், பேச்சு வளர்ந்தால் அத்தைப் பேசுவதைக் காது கொடுத்து கேட்க முடியாது. கீழ்ப் புடவையையும் தூக்கிக் காட்டும். “நீ பொறந்த பொச்சுதானே” என்று நடுத் தெருவில் கத்திக் கூச்சல் போடுவாள். மருத்துவமனை ஆயா முன்னால், காலை அகட்டிக் கொண்டு நின்றபோதுதான், நீலா அத்தைக்கு எப்படி உடல் கூச்சம் போயிருக்கும் எனப் புரிந்தது.

என் பெயர் சொன்னால் நினைவுக்கு வருவது உடம்புதான். அந்த உடம்பின் வெளித் தோற்றத்தை முழுமையாகப் பார்க்கவே இருபத்து மூன்று வருஷம் ஆனது. குழந்தை பெற்ற பிறகுகூட, இன்னும் உடம்பின் உள் சூட்சுமம் புரிபடவில்லை. உடம்பு என்ன செய்கிறது என்று உணர முடியவில்லை. பசித்தால் புரிகிறது. இடித்துக் கொண்டால் வலிக்கிறது. உடம்பைப் பற்றி வேறென்ன எனக்குத் தெரியும்?

உடலெங்கும் ஓடி நடுக்கமுண்டாக்கும் அலையை என்ன செய்வது? ஐம்பது வயதில் நிற்கும் எனக்கு, என் உடம்பைப் புரியவில்லையென்பது சோகமல்லவா? உடலின் தசைகள் லேசாகச் சுருக்கம் விழுந்திருக்கின்றன. கண்களுக்குக் கீழே கருவளையம் கூடிவிட்டது. பார்க்கும் ஆண்கள் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கும் கவர்ச்சியை உடல் கடந்துவிட்டது.

பருவம் கடந்த காய்ப்பைப்போல், உடம்பு எதற்காக இப்படித் தத்தளிக்கிறது? டாக்டர்கள் எல்லாம் சொல்லும் ஒரே வார்த்தை மெனோபாஸ் பிராப்ளம். மெனோபாஸ் ஆரம்பிக்கும்போதும் பிராப்ளம். முடியும்போதும் பிராப்ளம்.

உடம்பின் கோளாறைச் சொல்ல உகந்த நபர் யார்? கண்ணாவா? டாக்டரா? அலுவலகத் தோழிகளா? ஆண் நண்பர்களா? அப்படி யாரும் தனக்கு இருக்கிறார்களா? பிள்ளைகளா?

மற்றவர்களிடம் சொல்லும்முன், எனக்கு நான் சொல்லிக்கொள்ள, என்னையே ஆராய்கிறேன்.

என் உடம்புக்கு என்ன? ஏன் இந்த தத்தளிப்பு? உள்ளிருந்து உருக்கும் நோய் என்ன?

நாள் முழுக்க வேலைகளில் இருந்தாலும், உடம்பின்மீதான கவனம் இடம் மாறவில்லை. உடம்புக்குள் என்ன நடக்கிறது என்பதை நானே கவனிக்கத் தொடங்கினேன். உடம்புக்கு என்ன என்று டாக்டர்கள் நம்மைத்தான் கேட்கிறார்கள். காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி என்றால் மாத்திரை கொடுத்து, ஊசி போடுவார்கள். “என்ன செய்யுதுன்னு தெரியல, என்னமோ செய்யுது என்றால்”, மேலும் கீழும் பார்த்துவிட்டு, “என்ன செய்யுதுன்னு சொன்னாத்தானே தெரியும்” என்று கோபப்படுவார்கள்.

நம் வாயிலிருந்துதான் என்ன நோய் என்பதைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் டாக்டர் முன்னால் நின்று என்ன செய்கிறது என்பதைச் சொல்லத் தெரியாமல் அசிங்கப்பட வேண்டியிருக்கிறது. கண்ணாவுக்கு மற்றவர்கள் முன்னால்தான் கோபம் வரும். “என்ன பண்ணுதுன்னு எப்படிப்பா தெரியாது?” என்று கண்ணை உருட்டுவான். இந்தமுறை யாரிடமும் சொல்லவில்லை. காலையில் இருந்து உடம்பை நானே என் கண்காணிப்பில் வைத்திருக்கிறேன்.

வெளித்தோற்றத்தில் தெரியும் உடம்பை உற்றுப் பார்ப்பது எளிது. கால் நகங்களைப் பார்க்கலாம். முகத்தைப் பார்க்கலாம். கழுத்தைப் பார்க்கலாம். பார்க்க முடியாத முதுகுப் பக்கத்தைக்கூட முன்பக்கம் ஒரு கண்ணாடி வைத்துக்கொண்டு, அப்படி இப்படித் திரும்பி, அரைகுறையாகப் பார்த்துவிடலாம். உடலின் உள்ளே நடப்பதை எப்படிக் கண்காணிப்பது? ஸ்கேன் மெஷின்போல், மனம் வேலை செய்யுமா?

விடாப்பிடியாகக் கண்காணிப்பில் ஈடுபட்டேன். நரம்புத் துடிப்பில் இருந்து இதயத் துடிப்பு வரை நிதானமாக கவனித்தேன். குறிப்பிட்ட எந்த உறுப்பிலும் வலி இல்லை. உணர்ச்சிப் பந்து மட்டும் வயிற்றுக்குக் கீழே உருள்வதைப்போல் இருந்தது. வீட்டில் பிரச்சனை என்றால், வயிற்றுக்குள் பய உருண்டை சுற்றும். சின்ன வயதில், சைக்கிள் கற்றுக்கொண்ட போது, பின்னால் ஓடி வந்த சுந்தரி தடுமாறி கீழே விழுந்துவிட்டாள். அவளுக்குத் தோள்பட்டை எலும்பு உடைந்துவிட்டது. வலியில் அவள் போட்ட கூச்சலில் தெருவே கூடிவிட்டது.

சைக்கிளைப் போட்டுவிட்டு பயத்தில், சண்முகம் பெரியப்பா வைக்கோல் போருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அம்மா அடிக்குப் பயம் இருந்தது. சுந்தரியின் அம்மா, அப்பா அடிப்பார்களோ என்ற பயத்தில், நெஞ்சுக் குழிக்கும் வயிற்றுக்கும் இடையில் ஏதோ உருள்வது போலவே இருந்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. வீட்டில் பிரச்சனை என்றாலே பய உருண்டை உருளத் தொடங்கிவிடும். ஒரு விநாடியில் எப்படி வயிற்றுக்குள் வந்துவிடுகிறது? வளர்ந்த பிறகும் அந்த பய உருண்டை சுற்றுவது நிற்கவில்லை.

இப்பொழுது உருள்வது பய உருண்டையில்லை. பய உருண்டை வயிற்றுக்கும் மார்புக்கும் இடையில் சுற்றும். இது, வயிற்றுக்குக் கீழே சுற்றுகிறது. வயிற்றுக் கோளாறாக இருக்குமா? இருக்காதே? இரண்டு நிமிடங்களுக்குமேல், கழிப்பறையில் எப்பொழுதுமே இருப்பதில்லை. உடம்பைப் பராமரிப்பதில்லை என்றாலும், அது தொந்தரவு செய்ததில்லை.

மாதவிலக்கு நாள்களில்கூட வயிற்று வலி வராது. அடிவயிறு மட்டும் லேசாக பிசைவதுபோல் இருக்கும். அவ்வளவுதான். வயிற்றுக்கும்கீழே அவஸ்தையின் கதிர்கள் நீண்டன. கவனிப்பைக் கூர்மையாக்கி, இன்னும் பின்தொடர்ந்ததில் அவஸ்தையின் முடிச்சு, கீழே இறங்கியது. தேடிச் சென்ற இடத்தைப் பளிச்சென்று கண்டடைந்தேன். இதயத்தில் இருந்து உடலெங்கும் ரத்தம் பரவுவதைப்போல், இந்த முடிச்சில் இருந்தே உணர்வுப் பந்து பரவிக் கொண்டிருக்கிறது.

ஊமுள்ளாக உடம்பை உறுத்திக் கொண்டிருக்கும் உணர்வுப் பந்து இருக்குமிடத்தைப் புரிந்து கொண்டவுடன் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சிறுநீரும், மலமும் வெளியேற்ற முடியாமல் அடக்கி வைக்கும் அவஸ்தையாக இல்லை. திறப்பதற்காகக் காத்திருக்கும் ஊற்றின் தளதளப்பாக இருந்தது. வயிற்றுப் பசியைப் போல் உடற்பசியும் உள்ளிருந்து உணற்றுகிறதா? ஒன்றாக என்றிருந்தோம்? நாள் கணக்கைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டே போனால், பத்து நாளுக்கு முன்னால் நின்றது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு, மாதத்திற்கொரு முறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோதான் வாய்ப்புக் கிடைக்கிறது.

ஐந்து நிமிடங்களுக்குள் எல்லாம் முடித்து கண்ணா எழுந்துபோய் விடுவான். உடம்புத் தயாராவதற்குள் முடிந்து போயிருக்கும். கண்ணாவுக்கு நன்றாகத் தூக்கம் வரும். எனக்குத் தூக்கம் போகும். உடம்பின் தடுமாற்றத்தை மறைக்க, வேறு வேலைகள் செய்வேன். சமநிலைக்கு வர அரைமணி நேரமாகிவிடும். இல்லாமல் இருந்தாலே பரவாயில்லை. அவசரத்திற்குச் சோறள்ளி விழுங்கிவிட்டுப் போவது எதற்கு? மறுக்கவும் முடியாது. முகம் சுண்டிப் போகும். நாளெல்லாம் சுள்ளென்று தடித்த வார்த்தைகள் வந்துவிழும். ஐந்து நிமிடங்கள் பொறுத்துக் கொள்வதும் மனைவியாய் இருப்பதின் கடமையாகிவிட்டது.

கல்யாணமான புதிதில் வேறு மாதிரி. நான்கு சுவர்களுக்குள் கிடைத்த சுதந்திரம், ஒருவர் உடலை, ஒருவர் அறிந்து கொள்ளும் வேட்கையைக் கொடுத்தது. நேரம், காலமெல்லாம் கிடையாது. எண்ணிக்கைக் கிடையாது. பேசிக் கொண்டிருக்கும்போது விநாடியில் கண்ணா மாறிவிடுவான். ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கான யுத்தம். முதன்முறையாகச் சேரும் ரசவாதத்தை ருசிப்பதற்கான யுத்தம். இருவருமே தயாராக இருப்போம். ஈர்ப்பதற்கான வழியாக உடல் இருந்தது. உடல் கவர்ச்சியை நாங்கள் கடப்பதற்குள், யாழினி பிறந்துவிட்டாள்.

குழந்தை பிறந்து மூன்றாவது நாள் வீட்டுக்கு வந்தவுடன், கண்ணா, “இப்பல்லாம் முடியாதா பாமா?” என்று கேட்டான். பரிதாபமாக இருந்ததால், ஒரு வாரம் கழித்து, கண்ணாவுடன் தூங்கினேன். ஆதி பிறந்தவுடன் பழைய ஈர்ப்பு இல்லை. அவசியம் வேண்டும் என்ற நேரத்தில் மட்டுமே கண்ணா வருவான். வாரத்திற்கொரு முறை, மாதத்திற்கு இரண்டு முறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. மறந்துவிடாமல் இருக்கப் பழகுவதாயிற்று.

சமையல் செய்து கொடுப்பது, துணி துவைத்துக் கொடுப்பது, விசேச வீடுகளுக்கு அலங்காரம் செய்து கொண்டு கண்ணாவின் பெருமைக்காகப் போவதுபோல், உடம்பைப் பகிர்ந்து கொள்வதும் ஒரு கடமையாக இருந்தது. கண்ணாவாக கேட்காத சமயங்களில் எனக்குத் தோன்றியதே இல்லை. நானாக விரும்பிச் சென்றதில்லை. எல்லாம் கேட்டு வாங்கலாம். கணவனிடம் காமத்தைக் கேட்டு வாங்கினால் அசிங்கம் என்று தோன்றும். ஒருமுறைகூட நானாகச் சென்றதில்லை. இதில் பெருமிதம் இருக்கிறதா என யோசிப்பேன். கண்ணாவுக்கு மன உளைச்சல் இல்லாமல் இருக்கும்.

இருவரும் சேர்ந்திருக்கும் நேரங்களில் ஒருமுறைகூட கண்ணா நான் எப்படி இருக்கிறேன் எனப் பார்க்க மாட்டான். முடிந்தால் எழுந்து போய்விடுவான். நிறைவடைந்தேனா, கரையேற முடியாமல் தத்தளிக்கிறேனா என்ற கவலையெல்லாம் அவனுக்கு இருக்காது. தண்ணீர்க் குடித்துவிட்டு, கைக்குக் கிடைக்கும் நொறுக்குத் தீனியை எடுத்து வைத்துக்கொண்டு தின்பான். பழங்கள் இருந்தால், குரங்குகள் பிய்த்துத் தின்பதைப்போல் தின்பான்.

கட்டாயம் அவனுக்குத் தின்பதற்கு ஏதேனும் வேண்டும். எதுவும் இல்லையென்றால், சமையலறை டப்பாக்களைத் திறந்து ஆராய்வான். முந்திரி, உலர்ந்த திராட்சை, பொட்டுக்கடலை, எதையாவது தின்றாக வேண்டுமவனுக்கு. உடம்பில் குறைந்த சக்தியை உடனே ஏற்றிக் கொள்வதுபோல் இருக்கும் அவனது நடவடிக்கை. கையில் கிடைத்ததைத் தின்றுவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அசந்து தூங்கிவிடுவான்.

ஆர்வம் இல்லாமல் போனதற்குக் காரணம், கரையேற முடியாமல் அரைகுறையாக விடப்படுவதுதான். கரியாக்க, விறகைப் பற்ற வைத்துவிட்டு, பாதி விறகு எரிந்திருக்கும்போதே, தண்ணீர்விட்டு அணைத்துவிட்டால் எப்படி இருக்கும்? பாதி விறகு, பாதி கரி. ஓரத்தில் ஒதுக்கி வைப்பதுபோல்தான் இந்த உடம்பும். தீய்ந்த வாடையை ஒருமுறைகூட வெளிக்காட்டியது இல்லை.

திடீரென்று இந்த மோகமுள் உருத்திரண்டு உருள்வது ஏன்? ஒரு வருடம் முன்பாக, மகப்பேறு மருத்துவரிடம் சென்று வந்தேன். மாதாந்திர தொந்தரவு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே உடல் கொதிக்கிறது. கை கால் நடுங்குகிறது என்றேன். “மாத விலக்கு நிற்கும் நேரத்தில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட, கொஞ்சம் சமாளித்துக்கொண்டு கடந்துவிட்டால் நல்லது. அதிக ரத்தப்போக்கு, வேறு உடல் பிரச்சனைகள் இருந்தால் மாத்திரைப் போடலாம். எமோஷனல் இம்பேலன்ஸ்தான் உங்கள் பிரச்சனை. நீங்கள் தைரியமாகக் கையாண்டால் சரியாகிவிடும். வீட்டில் இருப்பவர்களுக்கும் சொல்லுங்கள்” என்றார்.

கண்ணாவும் உடன் வந்தான். உள்ளே வரவில்லை. வண்டியில் வீட்டுக்கு வரும்போது டாக்டர் சொன்னதைச் சொன்னவுடன், “காசு பிடுங்க எல்லா டாக்டரும் வழி தெரிஞ்சு வச்சிருக்கானுங்க. மெனோபாஸ் டென்ஷன், ஒபிசிட்டி, மைண்ட் ரிலாக்ஸ் இதுக்கெல்லாம் அப்போ என்ன வைத்தியம் பாத்தாங்க? யோகா, எக்சஸைஸ்னு இப்போ, உடம்பை வச்சு பொழைக்கிறாங்க. உடம்பு ஒண்ணுக்குத்தானே நாம பயப்படுவோம்?” என உலக அரசியல் பேசினான்.

படபடப்பு அதிகமானது எனக்கு. மாத விலக்கு வருவதற்கு முன்பாக ஒரு வாரம், பின்னால் ஒரு வாரம், மாத விலக்கு நேரம் என மாதத்தில் முக்கால் பங்கு படபடப்பிலேயே கழிகிறது. “நீயா ஏன் பெருசு பண்ணிக்கிற?” என கண்ணா கேட்கப் போகும் கேள்வியின் எரிச்சலில் நான் மீண்டும் அந்த மகப்பேறு மருத்துவரைப் பார்க்கச் செல்லவில்லை. ‘எப்போ நின்றுத் தொலையுமோ?’ என்ற எதிர்பார்ப்பில் இருக்கும்போது, புதிதாக இந்த ஊமுள் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அவ்வளவுதானே? தூக்கி எறிந்துவிட்டுப் போக வேண்டியதுதான். சோற்று உலை கொதிப்பதுபோல் இரண்டு நிமிடம் கொதித்துவிட்டுத் தானாக அடங்கிவிடப் போகிறது. ...........................தொடருகிறது................
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty Re: கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 11:58 pm

............................................நினைத்ததுபோல், தானாக அடங்கவில்லை. பாறையிடுக்கில் இருந்து கண்ணுக்குத் தெரியாமல் சுரந்து கொண்டிருக்கும் சுனை நீரைப்போல், உடம்பிற்குள் ஊற்று பரவிக் கொண்டிருந்தது. குளிர்ச்சியும் வெம்மையும் சரிவிகிதத்தில் கலந்த மெல்லுணர்வு மனத்தையும் மென்மையாக்கியது. உடம்பை இன்னும் கூர்ந்து பார்க்கச் செய்தது.

ஆளுயரக் கண்ணாடியில் நிதானமாக முகம் பார்த்து வருடங்கள் ஓடிவிட்டன. யாழினியும் ஆதியும் அவர்கள் உயரத்திற்கு கை வைத்துத் தேய்த்து, கிறுக்கி, பாதி வரை கண்ணாடி ரசம் போயிருந்தது. புடவை கட்டும்போது, முகத்தை முன்னுக்குச் சாய்த்து, பொட்டு நேராக இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வதோடு சரி.

இன்று கண்ணாடி பார்க்கத் தோன்றியது. ரசம் குறைந்த கண்ணாடி போலவே முகத்திலும் பொலிவு குறைந்திருந்தது. முன்நெற்றியில் நிறையவே நரை தெரிந்தது. முடியைச் சீராக்க உயர்த்திய வலது கையின் தசைகள் சுருங்கி, நரம்புப் புடைத்திருந்தது. பாத்திரங்கள் தேய்க்கும் சோப்பும், துணி சோப்பும் கைகளின் பொலிவை குறைத்திருந்தன. சமையலறைக்கு வரும் முன் தான் பெண்களின் கைகள் பளபளப்பாக இருக்கும்.

தினம் சமைக்கத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள் கைகள் மட்டும், நிறம் மங்கித் தனியாகத் தெரியும். ரேவதியும், உஷாவும் நன்றாக அலங்காரம் செய்து கொண்டுதான் வருவார்கள். முகத்தைப் பளிச்சென்று வைத்திருப்பார்கள். நேர்த்தியான புடவை, தலைக்கு டை என்று வயதை மறைக்கும் எல்லா உத்திகளையும் கையாண்டார்கள். நாற்காலியில் உட்கார்ந்து, கம்ப்யூட்டரை தட்டத் தொடங்கும் கைகள் கருத்து, நரம்புகள் மேலே துருத்திக்கொண்டு, தசைகள் சுருங்கிப்போய் இருக்கும். அவர்கள் என்ன செய்வார்கள்? வீட்டு வேலையின் தன்மை அப்படி. கால்களைப் பற்றிச் சொல்லவே வேண்டும்.

கல் வைத்துப் பளபளப்பாக இருக்கும் மிதியடிகள், வெடித்துப்போன கால்களுக்குப் பொருந்தாமல் பல்லிளிக்கும். அலுவலகத்தில் மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள். நான் அவர்களுக்கு ஆதரவாகவே இருப்பேன். கை கறுத்துப் போவதற்கும், கால் வெடிப்பு விழுவதற்கும் அவர்கள் காரணமல்ல என்பேன். தங்களை அழகாக, புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்வதில் என்ன தவறு என்று பரிந்து பேசுவேன். நானும் நன்றாக அலங்காரம் செய்துகொள்ள வேண்டும் என்று இப்பொழுது விருப்பமாக இருந்தது. சுருக்கம் விழுந்த கைகளை எப்படியாவது சரிசெய்துவிட வேண்டும்.

மனசுக்குள் ஒரு ரோஜா தோட்டம் மலர்ந்தது. நாட்டு ரோஜாவில் இருந்து கசியும் மென்மையான வாசம் மனசுக்குள் சுரந்தது. எனக்கே நான் வித்தியாசமாகத் தெரிந்தேன். நடையில் ஓர் அமைதி வந்தது. எரிந்து விழாமல் பிள்ளைகளிடம் பேசினேன். கண்ணாவுக்குப் போன் செய்து, “எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருகிறாய்?” என்று கேட்டேன். எட்டு மணிக்கு வீட்டுக்குள் இருப்பான் என்று தெரிந்திருந்தாலும் அவனிடம் பேச வேண்டும் எனப் பேசினேன்.

கண்ணா உள்ளே நுழைந்தவுடன், “குளிக்கிறியா?” என அவன் முன்னால் நின்றேன். அலுவலகம் முடித்து வீடு திரும்பியவுடன் நானும் குளித்துவிடுவேன். குளித்ததுடன் இன்று மீண்டும் தலைவாரி, லேசாகப் பவுடர் அடித்து, கண்ணுக்கு மை வைத்திருந்தேன். கண்ணா கண்டுபிடித்துக் கேட்பான் என்று அவன் முன்னால் நின்றேன். வண்டி சாவியை ஹாங்கரில் மாட்டிவிட்டு, செல்போனில் இருந்த மிஸ்ட் காலுக்கு அழைத்துப் பேசியபடியே உள்ளே போய்விட்டான். யாழினியும், ஆதியும் “என்னம்மா இன்னைக்கு ஃபிரெஷா இருக்கே?” என்றார்கள். “இல்லையே, எப்பவும் போலத்தானே” என்று சொன்னாலும் அவர்கள் கண்டுபிடித்துக் கேட்டது பிடித்திருந்தது.

கண்ணா எப்பவும் இப்படித்தான். அவன் வேலைகளில் மட்டும்தான் கவனமாக இருப்பான். அவனிடம் இருந்துதான் நான் பழைய புத்தகங்கள் வாங்குவேன். அவன் ஒன்பதாவது. நான் எட்டாவது. அவனுக்கு எழுத்து வேலை இருந்தது என்றால் நேராக வீட்டுக்கு வருவான். “அத்த, பாமாவ எழுதி வைக்கச் சொல்லுங்க” என்பான். எனக்குக் கணக்கில் சந்தேகம் என்று நான் போனால், “எனக்கே நிறையப் படிக்கணும்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்வான். அவனைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று மாமா கேட்டபோது, நான் உடனே தலையாட்டினேன். “நீ தான் அவனை இழுத்துப் பறிச்சுக்குனு போகணும், தலையாட்டாம யோசிச்சிக்கோ” என்று அம்மா சொன்னாள்.

இரவு தூங்கப் போகும் வரை கண்ணா என்னைப் பார்க்கவில்லை. சாப்பிட்டோம். டி.வி.பார்த்தோம். பேருக்கு ஏதோ பேசிக் கொண்டோம். கண்ணாவுக்கு என்னை நிமிர்ந்து பார்க்கும் சந்தர்ப்பமே வரவில்லை. தினம் இப்படித்தான் இருக்கிறோமா? இன்று நான் வித்தியாசமாக இருப்பதால் எனக்குத் தோன்றுகிறதா? கண்ணாவுக்கும் என்றாவது மனதிற்குள் ரோஜா தோட்டம் பூத்திருக்குமா? அவன் எதிர்பார்த்திருந்த நாளில் நான் நிமிர்ந்து பார்த்திருக்காமல் இருந்திருப்பேனா? சின்னக் கவலை நுழையப் பார்த்தது. “ச்சே, ச்சே, பாமா, இங்க வந்து பாருடி” எனச் சத்தம் போட்டுச் சொல்லியிருப்பான். அன்பாக இருக்கின்ற நேரத்தில் மட்டும் கண்ணாவின் வாயிலிருந்து ‘டி’ வரும்.

யாழினியும் ஆதியும் ஒருவர்மேல் ஒருவர் கால்போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கண்ணா படுக்கையில் உட்கார்வதுதான் தெரியும். எப்பொழுது படுப்பான், எப்படித் தூங்குவான் என்று சொல்ல முடியாது. இரண்டு நிமிடத்திற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான். கண்ணாவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும், அவன் கையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் என்று விருப்பமாக இருந்தது. மீசைக்குக் கீழே அச்சுபோல் அவன் உதடுகள் இருந்தன. முத்தமிட்டு எத்தனை நாளாச்சு? நாளா? மாதமாகியிருக்கும். மாதமா? வருடங்கள் ஆகியிருக்கும். முத்தமே கொடுத்துக் கொள்ளாமல்தான் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறோமா?

காலேஜில் இருந்து திரும்பி வந்தவுடன் சைக்கிளைத் தோட்டத்திற்குப் பின்னால் தான் நிறுத்த வேண்டும். கண்ணா எப்படித்தான் அங்கு நின்றிருப்பானோ? சைக்கிளைப் பூட்டிவிட்டுத் திரும்பியவுடன் பின்னலைப் பிடித்து இழுப்பான். சுதாரிக்கும் முன்னால், உதட்டைக் கவ்விக் கொள்வான். கை, கால்களை உதறி, வேகமாகத் தள்ளப்பார்த்தாலும், உதட்டை விட மாட்டான். மூச்சுத் திணற முத்தம் கொடுத்த பிறகுதான் விடுவான். காலடிச் சத்தம் கேட்கும் நேரத்தில் மனசே இல்லாமல் பாதியில் விட்டு, தோட்டத்து மரங்களுக்குள் மறைந்து விடுவான். எங்கள் இரண்டு வீட்டிலும், அவன் எனக்கு முத்தம் கொடுக்காத மறைவிடங்களே இல்லை.

ஒருமுறை எல்லாரும் கோயிலுக்குப் போயிருந்தார்கள். நான் மட்டும் வீட்டில் இருந்தேன். பீரியட் டைம். நல்ல மழை. வீட்டில் யாரும் இல்லை. எப்படியோ வந்துவிட்டான். கையைப் பிடித்து இழுத்து வந்து, நடுவாசலில் நிறுத்தினான். மழைநீர் முகத்தில் வழிய வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை அப்படியே அணைத்துக் கொண்டான். மழைநீருடன் சேர்த்து முத்தமிட்டான். எவ்வளவு நேரம் முத்தம் கொடுத்துக் கொண்டோம் என்று நினைவில் இல்லை. அன்று இரவே காய்ச்சல் வரும் அளவிற்கு இருவரும் நனைந்திருந்தோம்.

ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் என்று நேரம் வைத்துக்கொண்டு முத்தம் கொடுக்கும் கண்ணா, என்றிலிருந்து முத்தம் கொடுக்காமல் இருக்கிறான்? எனக்கும் மறந்து போச்சே? இத்தனை நாளாக எனக்கும் ஏன் தோன்றவில்லை?

முத்தம் நினைவுக்கு வந்தவுடன் உள்ளுக்குள் உருண்டு கொண்டிருந்த உணர்வுப் பந்து வேகமாக உருண்டது. பிள்ளைப் பூச்சி உடம்புக்குள் ஓடியது. முழுமையாகக் கனன்ற அனலின் உருக்கம் உள்ளே பரவியது. அனலில் இருந்து சந்தன வாசம் கமழ்ந்தது. உடம்பு ஏற்றுக்கொண்ட ரசவாதத்தை மாற்றுவது எப்படி? விரல் நுனிகள் குளிர்ந்தன. உள்ளங்கால்களில் சூடு பரவியது. முலைகள் கனத்தன. தொடைகள் இறுக்கம் தளர்ந்தன. காமத்திற்காகத் தயாராகி நிற்கும் உடலின் ரூபம் கண்ணுக்குள் திரண்டு நின்றது. ஒருநாளும் தானாய் எழுந்த காமத்தை உணர்ந்ததே இல்லை. நூறு முறையில் ஒருமுறை, உடம்பு நெகிழ்ந்து தளர்ந்திருக்கும்.

கடவுளின் முன்னால் ஒப்புக்கொடுத்து, மனமுருகி நிற்பதைப்போல் நின்றிருந்தேன். அணைக்கப்பட வேண்டிய நெருப்பாக என்னைத் தீய்க்கவில்லை. தப்பித்துப் போகச் சொல்லும் கடுங்குளிராக விரட்டவில்லை. இருகை விரித்து, உள்வாங்கி, கரைந்து போக அழைப்பு விடுக்கும் அருவிபோல் என்னை அழைத்தது. திறக்கும் காமத்தின் கதவில் நுழைய என்னுடன் கண்ணா வேண்டுமே? பறக்கும் நிலையில் இருந்த உடலுடன் கண்ணாவைத் திரும்பிப் பார்த்தேன். முழங்கால்களுக்குள் கைகளைக் கோர்த்தபடி சுருண்டு தூங்கும் அவனுக்குள் காற்றுகூட நுழைய முடியாது.

உடலின் விஸ்வரூப தரிசனம் மீண்டும் கிடைக்குமோ? சிறு முத்தம் போதும். உடலின் ரகசியக் கதவுகளைத் திறந்து பார்க்க. கண்ணா விழித்துவிட்டால், இத்தனை நாள் என்னிடம் தேடி கண்ணா தோற்றுவிட்ட சுரங்கத்தின் சாவி கிடைக்கும். “எழுந்திரு கண்ணா” என்று மனசுக்குள் அழுத்திச் சொன்னேன். அழுத்திச் சொன்னாலும் மென்மையாகவே ஒலித்தன வார்த்தைகள்.

“ நானே ஏன் கண்ணாவை எழுப்பக்கூடாது?” சத்தமில்லாமல் அவனுக்கு ஒரு முத்தம் தந்தால் எப்படி இருக்கும்? பயந்து கத்துவானோ? கையைத் தட்டி விடுவானோ? “ச்சூ” என்று சொல்லிவிட்டால்? கட்டிலில் கண்ணாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன். மின்விசிறியின் இலைகள், அவன் முகத்தில் சுற்றி சுற்றி வந்தன. நிழலும் வெளிச்சமும் மாறி மாறி பட்டதில் வித்தியாசமாக இருந்தது முகம். இன்னும் நெருங்கி உட்கார்ந்தேன். தலையில் கையை வைத்து, முடியைக் கோதிவிட்டேன். விரல்கள் தயக்கத்துடன்தான் கோதின. நெற்றியில் கை வைத்தேன். கண்ணாவிடம் எந்த அசைவும் இல்லை. விரல்கள் முடிக்குள் அலைந்து கொண்டிருந்தன.

நீலநிற விளக்கு, அறையை, இரவு வெளிச்சத்தில் மங்கலாக ஒளிரும் வெட்ட வெளியாகக் காண்பித்தது. காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் மாத நாட்காட்டி மட்டும் மேலும் கீழும் ஆடிக் கொண்டிருந்தது. சுழலும் மின் விசிறி, அறை முழுக்கக் காற்றை வாரி வீசினாலும், அறை அசைவின்றி இருந்தது.

கண்ணா எழுந்து கேட்டால் என்ன சொல்வது? “நீ எனக்குத் தேவை என்றா?” கண்ணா என்றைக்காவது என்னிடம் இறைஞ்சுதலோடு நின்றதுண்டா? அவனுக்கு உரிமையானதை எடுத்துக்கொள்ளும் தெளிவு அவன் நடவடிக்கைகளில் இருக்கும். அவன் நினைத்தால் நடத்திக் கொள்வான். பழகிய தாம்பத்தியம், எனக்குப் பிடித்த என்னுடைய கண்ணா. நான் ஏன் தயங்க வேண்டும்? எனக்கு நீ வேண்டும் என்று சொன்னால், என்னைக் கேவலமாக நினைப்பானோ? உடம்புத் தயாராக இருக்கிறது என்று சொல்ல என்ன பயம்?

கண்ணாவைப்போல் நானும் ஏன், எனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. மறந்துபோன முத்தம் கொடுத்து, அவனை எழுப்பி விடுவோமா? “என்னாச்சு” என்பானோ? கண்ணாவின் முதுகில் சாய்ந்து படுத்தேன். என் சுமை அவன் முதுகில் ஏறியவுடன் லேசாக அசைந்தான். உடம்பு குப்பென்று விரைத்து தயாரானது. கொசுக்கடிப்பதாக நினைத்தானோ? பிள்ளைகள் கால் தூக்கிப் போடுவதாக நினைத்தானோ? கொஞ்சம் முன்நகர்ந்து காலில் கிடந்தப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான். அடுத்த நொடி, அவன் மூச்சு விடும் சத்தம் சீராகக் கேட்டது.

சாய்ந்திருந்த நான் சுதாரித்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். மணி பனிரெண்டை கடந்து, அரை மணியாகி இருந்தது. கண்களில் எரிச்சல் இல்லை. உடம்பில் சோர்வில்லை. அந்த நள்ளிரவு எனக்கொரு புதையலைக் கண்டுபிடித்துக் கொடுக்கக் காத்திருப்பதைப்போல், என்னைத் தயார் செய்திருந்தது. எடையில்லாத உடம்பு. பறக்க வசதியாகச் செய்யப்பட்டதுபோல் இருந்தது.

மெனோபாஸ் நேரத்தில், விதவிதமான உணர்வெழுச்சிகள் வரும் என்று டாக்டர் சொன்னது இதைத்தானோ? காமம் அதிகமாகும், உடலை ஆக்கிரமிக்கும் என்று சொல்லவில்லையே? கண்ணாவிடம் பேசியிருக்கலாமே? அவனுக்கும் சொல்லியிருந்தால், நான் கேட்காமலேயே கொடுத்திருப்பானோ? காக்காய் கடி கடிக்கும் அவன், மதகுடைத்துப் பாயக் காத்திருக்கும் பெரு வெள்ளம்போல் இருக்கும் இந்த உடம்பை அறிவானா?

விரும்பியேற்றுக் கொண்ட கணவனிடம் தேடிப் போவதில் என்ன தவறு? கண்ணாவின் குணம் இதுதான் என்று சொல்ல முடியாது. சுதந்திரம் கொடுப்பான். கொடுக்கிறானே என எடுத்துக் கொண்டால் பிடுங்கிக் கொள்வான். அவன் விரும்பி உடன் இருக்கும் நேரங்களில், எனக்கும் உடம்புத் தயாராகிவிட்டால், நெளிந்து வளைந்துவிடக் கூடாது. இறுக்கிப் பிடித்துக் கொள்வான். முடிந்தவுடன் எழுந்து போகிறவனை கையைப் பிடித்து இழுத்தால், தட்டிவிட்டுப் போய்விடுவான். அவன் விருப்பம் மட்டுமே எனக்குக் காமம். என் உடம்பிற்கென்று தனியாகக் காமம் கிடையாது. நிறைந்த நீர் நிலைபோல் உடம்பு இரவு முழுக்கத் தளும்பிக் கொண்டிருந்தது.

தவிப்பின் வலி புரியாத இரவு, இரண்டு மணி, மூன்று மணியாகக் கடந்து கொண்டிருந்தது. வாசனை மலரைப்போல் மணம் பரப்பிய உடம்பின் மலர்ச்சியை நான் முழுமையாகத் தரிசித்தேன். கண்ணாவை மறந்து போனேன். காமத்தில் திரண்டு நிற்கும் உடம்பு இயற்கையின் பேரதிசயம். படம் விரித்தாடும் நாகத்தைப்போல், உடம்பு விரும்பி காமத்திற்குத் தயாராகி நின்ற அதிசயத்தை நான் இன்றிரவு தரிசித்தேன்.
.............................................தொடருகிறது.......................
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty Re: கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Sat Nov 20, 2021 12:00 am

பொழுது விடிந்தது.

அருள் வந்த உடம்பாகத் தளர்ந்து விடவில்லை. அருளாசி பெற்ற உடம்பாக, தெளிச்சியாக இருந்தது. உடம்பு மிக முக்கியமாகப் பட்டது. நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மிகுந்தது. இந்த உடம்பிற்கென்று தான் ஒன்றும் செய்யவில்லையே. பசிக்கிற வயிறுக்குச் சோறு. மரியாதைக்கு ஆடை. எந்த பாகமாவது பழுதடைந்தால் மருத்துவம்.

உயிருக்கு உருவம் கொடுத்தாலும், உடலுக்குத்தானே உணர்வுகள். மனம் துயரப்படுகிறது. கண்கள்தானே கண்ணீராய் வெளிப்படுத்துகிறது? நிமிடத்திற்கொரு அவதாரம் எடுக்கும் மனத்தின் அவஸ்தைகளை உடல் தாங்குகிறது. மூளை இடும் கட்டளைகளை நாள் முழுக்கக் கேட்கிறது. நடக்கிறது. உட்காருகிறது. குனிகிறது. சிரிக்கிறது. பசியாறுகிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. சோர்வு நீங்க உறங்குகிறது. முடுக்கிய கனப் பொருத்தமான இயந்திரம். மனம், மூளை எனும் இரண்டு ராட்சதர்களின் வேலையாளாக அல்லாடும் உடம்பு தனக்கென எதையாவது கேட்கிறதா? சிரிப்பு உதட்டுடன் நின்று போகிறது. அழுகை கண்களுடன் முடிந்து போகிறது. வெளித்தோற்றத்தில் பிறரை கவனிக்கச் செய்கிறது.

முழு உடம்பும் பூ போல் மலர்ந்து நின்று மகிழ்ச்சி கொள்ள காமம்தான் உடலுக்குத் தேவை. கருவறையில் அலங்காரப்பூஷிதையாக இருக்கும் குழல்வாய் மொழியின் ரூபம்போல், காமம் பூரணத்துவமாக நேற்று என்னுள் வெளிப்பட்டது. கருவறையின் இருளும், நெய் விளக்கின் மணமும், திருநீற்றின் வாசனையும், அபிஷேகப் பொருட்களின் கலவையான நறுமணமும், குழல்வாய் மொழியின் இதழ்க்கடையில் ஒளிரும் புன்னகையும் என்னை மறக்கச் செய்யும். சில கணங்கள் தடுமாறுவேன். எங்கிருக்கிறோம் எனத் தெரியாத அநாதியான ஒரு காலத்திற்குள் நுழைவேன். காமத்தின் கதவும் அவ்விதமே திறந்திருக்கிறது.

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாள், அரங்கனுடன் தன் இளமைப் பொங்கும் உடலுடன் அடைக்கலம் புகுந்தாளே? காமத்தின் சுவை நாக்குகள் அவளைத் தீண்டி, அரங்கனிடம் உடம்புடன் அழைத்துச் சென்றதோ? கடவுளைத் திருமணம் செய்துகொண்டால், தன் தேவைக்கு அவனை அழைக்க வேண்டாமோ? எல்லாம் அறிந்த கடவுள் தன் சகியின் காமத்தையும் அறிந்து ஆவண செய்வானோ? கண்ணாவைப்போல், அரங்கன் பாதியில் எழுந்துபோக மாட்டான். அரைகுறையாக முடித்துக்கொள்ள மாட்டான். என்னுடைய நிறைவைப் பற்றிக் கேட்பான்.

ஆண்டாள் அரங்கனிடம் கண்டது எல்லையற்ற காமத்தைத்தானோ? அவள் சூடிக் கொடுத்த பூமாலைகள் மூலம், தன் உடல் வாசனையை அவனுக்கு அனுப்பி வைத்தாளோ? பூமாலைப் போலவே அவள் உடலையும் அவன் முழுமையாகச் சூடிக் கொண்டானோ? அரங்கனின் கருவறை ஆண்டாளுக்குப் பள்ளியறை. ஆண்டாளின் விம்மி எழுந்த கொங்கைகள் அரங்கனின் கை பட்டு அடங்கினவா?

காமத்தின் சுவையை அறிய உதடுகள் முதலில் தயாரானாலும், கொங்கைகளே தாபத்தைத் தாங்கி மேலெழும்புகின்றன. தளர்ந்து வதங்கியிருந்த மார்பகம், நேற்றிலிருந்து நிமிர்ந்து நிற்கின்றது. கனம்கூடி தொடுகைக்கான வேட்கையுடன் காத்திருக்கின்றது. கண்ணா லேசாக ஒரு அழுத்து அழுத்துவான். யாழினி பிறந்தபோதுதான், வெறியாய் இருப்பான். ஒரு பக்கம் யாழினி பால் குடித்தால், இவன் ஒரு பக்கம். எனக்குத் தானே முதலில் என்பான்.

“அம்மாவிடம் பால் குடித்தது நினைவில் இல்லை. எங்க அப்பா எட்டு வயசு வரை பால் குடித்தார். எங்க பாட்டி எங்க நின்றாலும் நேராக வந்து முந்தானையை விலக்கிவிட்டு வாய் வைத்துவிடுவாராம். பாட்டி வெட்கப்படுமாம். கோபமும் படுமாம். புடவையை விலக்கிவிட்டு மானத்தை வாங்குறானே என்று முதுகில் இரண்டு அடி போடுமாம். ஆனாலும் அப்பா, வைத்த வாயை எடுக்க மாட்டாராம். எட்டு வயது வரை அம்மாவின் முலைப் பால் குடித்த அப்பா, மறக்க முடியாமல் திணறி இருக்கிறார். இரவு தூங்கும்போது, அம்மாவின் புடவைக்குள் கையை விட்டு, முலையைப் பிடித்துக் கொண்டுதான் தூங்குவாராம்” என்பான்.

“ஒரு வயது வரை பால் குடித்த எனக்கு என்ன நினைவில் இருக்கும். அதனால் நீதான் எனக்கு இரண்டாவது அம்மா” என்று முட்டுவான். அன்று அவன் முகத்தில் என்னுடைய இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது. மனைவி வழியாகத் தான் கணவனும் பெண் உடம்பை அறிந்து கொள்கிறான், அனுபவிக்கிறான். சீக்கிரம் அலுத்தும் போகிறான்.

உடல் சேர்க்கைக்குப் பிறகு, உதடு, முலை, கை, கால் எல்லாம் இரண்டாம்பட்சமாகி விடுகிறது. தூங்குவதற்கு முன் செய்ய வேண்டிய உடற்பயிற்சியாகிறது. கண்ணாவும் அப்படிப் பழகிவிட்டான். நானும்தான் காரணம். வேலை, யாழினி, ஆதி என்று எல்லாவற்றுக்கும் கவனிப்பைக் கொடுக்கிறேன். எனக்கும் கண்ணாவுக்கும் என்று தனியாக நேரம் ஒதுக்கியது இல்லை. சேர்ந்து வாழ்கிறோம் என்று பெயர். சின்ன அந்நியோன்யமும் இல்லை. இரவு முழுக்க கண்ணாவுக்கு ஒரு முத்தம் கொடுக்க தயக்கம். கடைசிவரை கொடுக்கவில்லை. ஆயிரம் முறையாவது ஒன்றுடன் ஒன்று சேர்ந்த உடல். தன்னிச்சையாக ஒரு முத்தம் கொடுக்கப் பலமணி நேர காத்திருப்பு.

யாழினியும் ஆதியும் எழுந்திருக்கும் முன்பாகவே, பாசி பருப்பை அரைத்து, தயிருடன் குழைத்து முகத்தில் தேய்த்தேன். கண்ணாடியில் ஒரு நிமிடம் நின்று முகம் பார்த்து எத்தனை நாளாச்சு! அழகாகப் பராமரிக்க வேண்டும். ஃபேஸ்பேக் போட்டுக்கொண்டு டி.வி.யில் காட்டுவதைப்போல் ஓரிடத்தில் உட்கார முடியவில்லை. கண்களுக்கு அருகில் வழித்துவிட்டுக் கொண்டு சமையலைத் தொடங்கிவிட்டேன்.

“அய்யோ, என்னம்மா பூதம் மாதிரி” என்று அதிசயமாய் முதலில் எழுந்துவந்த ஆதி கத்தினான்.

“பூதம்தான், ஆண்டாள் பூதம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“எதுக்கும்மா இது, என்ன பூசியிருக்க?”

“பாசி பருப்புடா, முகம் பளபளப்பா இருக்கும்.”

“நீ நல்லாத்தான்ம்மா இருக்கே. கேசவனோட அம்மா முகம் முழுக்க பிளாக் மார்க்ஸ் இருக்கும். நீ ஃபேர் அன் லவ்லி போடேன்ம்மா.”

“இதான் நேச்சுரல் கண்ணு.”

பல் தேய்க்க வெளியில் சென்றுவிட்டான்.

யாழினி வந்தவுடன் வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தாள்.

“ஏம்மா உனக்கு இந்த வேலை? கிழவியாயிட்ட. ஃபேஸ்பேக் போட்டு நீ எந்த ப்யூட்டி காம்பிட்டிஷனுக்குப் போகப் போற?”

“ஏன் காம்பிட்டிஷனுக்குப் போனால்தான் அழகா இருக்கணுமா?”

“நீ காம்பிட்டிஷனுக்குப் போனாலும்…” என்று இழுத்தாள்.

“எனக்கு நான் நல்லா இருக்கணும். அழகா இருக்கணும்னு அர்த்தமில்ல.”

“அப்பா பாவம். காலையிலேயே அவருக்கு ஷாக் இருக்கு.”

கண்ணா எட்டு மணிக்குத்தான் எழுந்து வருவான். பாசி பருப்புப் போட்டு அரை மணி நேரம்தான் ஆகியிருந்தது. யாழினி சொன்னதுபோல், கண்ணா காலையிலேயே மனசு கஷ்டப்படும்படி எதாவது சொல்லிவிட்டால்?

துண்டை எடுத்துக்கொண்டு குளியறைக்குள் நுழைந்தேன். புதிதாக உடம்பை அன்றுதான் பார்ப்பதுபோல், ஒவ்வொரு பகுதியாக அதிகக் கவனம் செலுத்தித் தேய்த்துக் குளித்தேன். கால் விரல் நகங்களை இரண்டு முறை தேய்த்துப் பளபளப்பாக்கினேன். முழங்கை, முழங்கால்களில் லேசாகக் கருத்த பகுதிகளில் பிரஷ் வைத்துத் தேய்த்தேன். மார்பகங்களை எப்படித் தேய்த்துக் குளிப்பேன் என்றே நினைவில் இல்லை. கனத்திருந்த மார்பகங்களை குழந்தையைத் தூக்கித் தேய்த்துவிடுவதுபோல் கவனமாகத் தேய்த்தேன். ஏக்கத்தில் விம்மித் தவித்திருந்தன.

குறிஞ்சி பூக்கும் காலம்போல், உடம்புக்குக் காமம் பூக்கும் காலம் இருக்கோ? எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்? மாத விலக்கு நிற்கும் காலம் என டாக்டர் சொன்னாரே? உடல் மலர்வதை நிறுத்தும் காலமோ? அடங்குவதற்குமுன் தீபம் பிரகாசமாக எரியும் என்பார்களே? உடலும் காமத்தின் இறுதி வேட்கையில் இருக்கிறதா? களிப்பின் உச்சத்தைக் கண்டடைந்து அமைதியடைந்து விடுமா? ஐம்பது வயதிற்குமேல், காமத்தின் மிச்சம் இருக்காதா? வெளிநாடுகளில் அறுபது வயதில் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண்களைப் பற்றிப் படிக்கிறோமே? அவர்களின் உடல் மட்டும் காமத்திற்கு எப்பொழுதும் எப்படித் தயாராக இருக்கிறது? குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதற்குக் காமம்? தப்பு தப்பு. காமமற்ற சேர்க்கையிலும் எக்ஸ் குரோமோசோம்களும், ஒய் குரோமோசோம்களும் ஒன்று சேரும்.

மாத விலக்கு நின்று போனால் காய்ப்பை நிறுத்திய மரம்போல் ஆகிவிடுமா உடம்பு? இறக்கும் வரை பசி இருக்கிறது. இறக்கும் வரை உடம்பின் வலிகள் இருக்கின்றன. காமம் மட்டும் ஏன் இல்லாமல் போகிறது? இருக்கக் கூடாது என்று நாமே முடிவு செய்து கொள்கிறோமா?

“உள்ளேயே தூங்கிட்டயா? மணி என்ன ஆச்சுத் தெரியுமா? அரைமணி நேரமா குளிக்கிற. நீ குளிக்கிறயா? பாத்ரூம் குளிக்குதா?” கண்ணாவின் காட்டுக் கூச்சல் கேட்டது.

அவசரமாகத் தண்ணீரை ஊற்றிக்கொண்டு வெளியேறினேன்.

“இன்னும் டீ கொடுக்கலை. எப்ப டிபன் சாப்பிட்றது? நீராடல் பெருசா இருக்கே?” மீண்டும் சீண்டினான்.

குளித்த ஈரம் போகாமல் அவனை இழுத்து வைத்து முத்தம் கொடுக்க வேண்டும்போல் இருந்தது. முத்தம் கொடுப்பதான நினைப்பில் சிரித்துக்கொண்டே கடந்த என்னை, கண்ணா வித்தியாசமாய்ப் பார்த்தான்.

அலுவலகத்தில் நான் சொன்ன ‘குட்மார்னிங்’ புதிதாக இருந்தது. மலர்ச்சியாகச் சிரித்தேன். தோழிகளைத் தொட்டுப் பேசினேன். சுறுசுறுப்பாக வேலை செய்தேன். என் உடம்பு லேசாக இருப்பது, எல்லோரின் கண்ணுக்கும் பளிச்சென்றுத் தெரிவதாக நானே நினைத்துக் கொண்டேன். சத்யா மட்டும் அருகில் வந்து கேட்டாள்.

“மேம், ஐ லைனர் போட்டிருக்கீங்களா? அழகா இருக்கு மேம். கண்ணு பெருசா இருக்கிறவங்க போட்டாதான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. பட், அவங்க மை போட்ட கண்ண உருட்டி பாத்தாங்கன்னு பயமா இருக்கும். சின்ன கண்ணுக்கு மை போட்டாத்தான் எடுப்பா இருக்கும். டெய்லி போடுங்க மேம்” என்றாள்.

ரேவதி சாப்பாட்டு நேரம் வரை பக்கத்திலேயே வரவில்லை.

“என்ன பாமா, வெட்டிங் டேவா? விசேசமா வந்திருக்கே?” என்றாள் உணவு இடைவேளையில்.

“வெட்டிங் டேனா ஆபிஸ் வருவாங்களா? பிறந்த நாளா இருக்கும்” என்றாள் உஷா.

“பிள்ளைங்க பிறந்த நாள் மட்டும்தான் கொண்டாடுவேன்னு உங்களுக்குத் தெரியாதா?”

“இல்லையே, இன்னைக்கு என்னவோ கூட இருக்கே. புளி போட்டுத் தேய்ச்ச விளக்கு மாதிரி பளிச்சுனு இருக்க” என்றாள் ரேவதி.

என் மலர்ச்சியை அவர்கள் கவனித்ததில், முகத்தில் பெருமை கூடியது.

“இப்படித்தான் வரணும். நாற்பது வயசானாலே எழவு வீட்டுக்குப் போற மாதிரியேவா இருக்கணும்? என் பசங்க கூட சொல்லுவானுங்க. இந்தப் புடவை கட்டாதம்மா, அந்தப் புடவை கட்டாதம்மான்னு. எனக்குப் புடிச்சத நான் கட்டுவேன்னு சொல்லிடுவேன்” என்றாள் ரேவதி.

“உனக்குப் பிடிக்கும்போது உன் வீட்டுக்காரரை கூப்பிட்டிருக்கியா?” என்று கேட்க வாய் வந்தது.

புடவைக் கதை வரை பேசலாம் அலுவலகத் தோழிகளிடம். அந்தரங்கம் வரை போக முடியாது. வாயைக் கட்டிக் கொண்டேன்.

பேருந்துக்கு நிற்கும்போதும், பேருந்தில் ஏறிய பின்னும் என் வயது பெண்களை உற்று கவனித்தேன். சோகம் கவிந்த முகங்கள். உடம்பைப் பற்றிய அக்கறையற்ற முகங்கள். பேசுவதற்கும் சிரிப்பதற்கும் ஒன்றுமில்லை என அறிவிப்பு செய்துவிட்ட முகங்கள். கால்கள் மங்கிக் கிடந்தன. எண்ணெய் பிசுக்குடன் கழுத்து. அரிதாகச் சில பெண்கள் பளிச்சென்று இருந்தார்கள். இள வயது பெண்கள் காரணமே இல்லாமல் பேசி சிரிக்க, தெரிவை வயதுப் பெண்களோ வீட்டில் காத்திருக்கும் வேலைகளுக்காகப் பேருந்திலேயே கவலை கொண்டார்கள்.

வேலைகளைத் தவிர அவர்களின் சிந்தனையில் வேறொன்றுமே இல்லை. இவர்களிடம் ஒரு நாளாவது தனக்குப் பிடித்த காமத்தைக் கொடு என்று உடம்பு கேட்டிருக்குமா? உடம்பு கேட்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு நிதானமாக இருக்கிறார்களா? எண்ணெயின்றி தீய்ந்துபோய் நிற்கும் திரிபோன்ற மங்கிய கூட்டத்தின் பிரதிநிதியாகத் தானே நானும் இருந்தேன்? இருந்தேன் என்ன, இருந்தேன்? இருக்கிறேன்? கண்ணாவிடம் ஒரு முத்தம் கேட்க முடியவில்லை? தானாக ஒரு முத்தம் கொடுக்க முடியவில்லை? நான் சுதந்திரப் பறவையா?

வீடு தனிமையில் இருந்தது. என்றும் இருப்பதுதான். இன்றுதான் பார்க்கிறேன். யாழினியும் ஆதியும் வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. கதவைத் தாழ் போட்டுவிட்டுப் படுக்கையறைக்குள் நுழைந்தேன். தூங்கலாமா என்ற எண்ணம். தூக்கம் வருவதுபோல் இல்லை. பையைக் கட்டிலின்மேல் போட்டுவிட்டு, ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றேன். கண்ணாடியில் தெரிந்த உருவத்தைப் பார்த்தேன். எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

“உனக்கு என்ன வேண்டும், ஏன் என்னைப் படுத்துகிறாய்?” உடம்பு மௌனமாக இருந்தது. எல்லாருக்கும் காமம் இல்லையா? தீர்ந்தாலும் தீரவில்லையென்றாலும் அவரவர் ஓடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்? வயிற்றுப் பசிக்கு சோறு இல்லையென்றால் கவலைப்படலாம். பிறரிடம் பரிதாபம்கூட சம்பாதிக்கலாம். உடம்பு பசியா இருக்கிறது என்றால்? உடம்பு பசியாக இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன? சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார்கள்? எனக்கென்ன பெயர் வைப்பார்கள்? உடம்பு கொழுப்பு எடுத்தவள் என்பார்களோ? பிறர் சொல்வது இருக்கட்டும். கண்ணா என்ன சொல்வான்? நான் குடும்பத்திற்கு லாயக்கில்லை என்று தள்ளி வைப்பானோ? உன்னுடன் இருந்தால் பிள்ளைகளும் கெட்டுப் போவார்கள் என்று என்னைப் பிரித்து விடுவானோ?

கண்ணாவிடம் நான் என்ன கேட்டுவிடப் போகிறேன்? தானாக மலர்ந்து நிற்கிற உடம்பை மகிழ்விக்கச் சொல்கிறேன். எண்ணெய் ஊற்றி, திரிபோட்டு, ஏற்றி வைக்கிற தீபத்தினை, இன்னும் ஒளிர தூண்டிவிட வேண்டும். கனன்ற அனலை நீர்விட்டு அணைக்க வேண்டும். உடம்பு அகல் விளக்கா? கனலும் அனலா? முதலைகளும் சுறாக்களும் ஆழ் கடலில் நீந்துவது தெரியாமல் நீந்துவதைப்போல், உடம்புக்குள் காமம் அமைதி காக்கிறது. காமத்தை அடையாளம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அமைதியாக இருக்குமா? அப்படித்தானே பதினைந்தாண்டுகளாக இருந்தேன். உடல் சேர்க்கைக்குக் காமம் என்று பெயர் வைத்துக்கூட நான் அழைத்ததில்லை.

பிள்ளைகள் வரும்முன் கண்ணா வந்தால் நன்றாக இருக்கும். காத்திருப்பில் இருக்கும் முத்தம் கொடுக்கலாம். நானாக விரும்பிச் செல்ல வாய்ப்பு அமையும். மலர்ந்த உடம்பு எப்படி இருக்கு என்று கண்ணாவிடம் கேட்க வேண்டும். அவசரம் இல்லாமல் அனுபவித்துச் செய்ய வேண்டும். கண்ணா எப்பவும் எட்டு மணிக்குத்தானே வருவான்?

கண்ணாவை நினைக்க நினைக்க உடல் முழுக்கப் பரவசக் கீற்றுகள் ஓடின. கழுத்துவரை உணர்வுப் பந்து மோதி நின்றது. கால்களில் சூடு பரவியது. அணைப்பிற்குத் தவித்த முலைகள் மேலெழும்பின. முகத்திற்கு மொத்த ரத்தமும் ஏறி பலூன்போல் ஊதி நின்றது. கண்ணாடியில் மீண்டும் பார்த்தேன். உடம்பு முதலில் பார்த்ததுபோலவே நின்றிருந்தது. வெளியில் சிறு அடையாளமும் தெரியாமல், உள்ளுக்குள் ஒரு எரிமலையே உருகி வழிந்து கொண்டிருக்கிறதே. மனசு உடம்பைத் தயார் செய்கிறதா? உடம்பு தானாகத் தயாராகிறதா? மாத விலக்கு உடம்புக்குத் தானே? உடம்புத் தானாக தயாராக முடியுமா? மூளையும் மனசும் சேர்ந்து கட்டளையிட்டால்தானே முடியும்? மனசு உடம்பைக் கட்டிப் போடுகிறதே? இதெல்லாம் தவறு என்று தலையில் தட்டிக் கொண்டிருக்கிறதே? கணவனின் அன்னியோன்யத்திற்கு ஏங்குவது தவறா? அவனுடன் விருப்பப்படி இருக்க வேண்டும் என்ற விழைவு தவறா?

மேலும் மனத்தை அனுமதிக்க விரும்பவில்லை நான். கொதித்துத் தளும்பும் உடலை, சிந்தனைகள் நீர்விட்டு அணைக்கின்றன. எனக்குள் பீறிடும் உணர்வுகளுடன் இருக்கவே பிடிக்கிறது. அபூர்வமாய்ப் பூக்கும் பூக்களை, கை விரல்களின் சூடுகூட வாடச் செய்யாமல், இறைவனுக்குச் சாத்துவதைப்போல், என் மலர்ச்சியை அப்படியே ஒப்படைக்க வேண்டும். தலைமுடிகூட காமத்தில் விகசிக்க வேண்டும். ஒவ்வொரு அங்கமும் அதனதன் பூரணத்துவத்துடன் மலர்ந்திருக்கிறது. காமத்தை இத்தனை நாளாய், பசிக்குச் சோறு போல் சாப்பிட்டிருக்கிறேன். கடவுளுக்குப் படையல் போடும் சடங்குபோல், கண்ணா வந்தால் படையல் போட்டிருக்கிறேன். கருவறை தரிசனத்திற்காக, கோயிலின் பெருங்கதவுகள் திறந்து வைக்கப்படுவதுபோல் உடலின் கதவுகள் திறந்து வைத்திருக்கிறேன். “கண்ணா நீ எந்தக் கதவின் வழியாக உள் நுழையப் போகிறாய்?”

அழைப்பு மணி அடித்தது. தூக்கிவாரிப் போட்டது மனசு. கையும் களவுமாக பிடிபட்டதுபோல் தடுமாற்றம். வியர்த்தது. ‘என்ன தப்பு செய்தோம்? ஏன் பயப்படுகிறோம்?’ என்று ஆசுவாசம் கொண்டேன். படபடப்பு குறையவில்லை. அதற்குள் இரண்டாவது அழைப்பு மணி கேட்டது. முகத்தில் எதுவும் தெரிகிறதா என்று கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன். ஒன்றும் வித்தியாசமாக இல்லையென்று திருப்தியானவுடன் சரியாக இருந்த ஆடைகளை மீண்டும் சரி செய்துகொண்டு கதவை நோக்கி ஓடினேன். தாழ்ப்பாள் திறந்தவுடன், மீண்டும் உடம்பு விர்ரென்று காற்றில் பறந்தது. கண்ணா நின்று கொண்டிருந்தான். கோயில் மணியோசை இனிமையாக மனத்திற்குள் ஒலித்தது.

கதவைத் தாழ்ப்பாள் போட்டுத் திரும்பிய நொடியில், கண்ணாவைப் பின்னாடி இருந்து அப்படியே இறுக்கிக் கட்டிக் கொண்டேன். வியர்வையில் சட்டை முதுகுடன் நனைந்திருந்தது. வியர்வை வாசம் இன்னும் அவனை இறுக்கிக் கொள்ள வைத்தது. கொஞ்சமும் எதிர்பார்க்காத கண்ணா நிற்பதற்குத் தடுமாறினான். அலுவலகப் பையை ஒரு கையில் பிடித்துக் கொண்டே, மறு கையால் என்னை முன்னுக்கு இழுத்தான்.

காற்றின் லேசான அசைவிற்குக் காத்திருக்கும் கனிந்த பழம்போல், அவன் மார்பில் சரிந்தேன். உடலில் திகுதிகுவென்று அனல் பரவியது. கழுத்தைச் சுற்றிக் கொண்ட கைகள் அவனை எனக்குள் சிறைப்படுத்தின. உதட்டைக் கவ்விக் கொண்டேன். இரு உதடுகளையும் சேர்த்துக் கவ்விக் கொண்டதில் கண்ணா மூச்சுத் திணறினான்.

பொக்கிஷங்கள் நிரம்பிய கோயிலின் சாவி உதட்டுக்குள்தான் இருந்திருக்கிறது. சாறூறும் கனியாக சுவைத்தது. கண்ணாவின் மூச்சுத் தகிப்பை என் மூச்சு உணர்ந்தது. அவனின் சுவாசம் சீராக்க, என் மூச்சுக் காற்றை அவனுக்குள் செலுத்தினேன். இறுகி மூடிய கண்களுக்குள் சிவப்பும் நீலமும் கலந்த துகள்கள் மிதந்தன. முத்தத்தின் ஈரத்தில் புதிய உயிர் துளிர்த்தது. காடு, மேடு, மலை, கடல், அருவி எல்லாம் காலடியில் நழுவியது. வானத்தில் பறந்தேன்.

முத்தம் இரு சிறகுகளாக மாறியிருந்தது. கண்ணாவின் உதடுகள் கண்ணிலிருந்து மறைந்தன. உயிர்க் கோளமாக சுழலும் பூமிப்பந்தின் நாவினை நான் சுவைத்துக் கொண்டிருந்தேன். உடலின் கதவுகள் திறக்கத் திறக்க, பிரபஞ்சத்தின் கருவறைக்குள் நுழைந்தேன்.

காட்டுப் பூக்களின் வாசம் வந்தது. மண்ணிலிருந்து தோண்டியெடுத்த பச்சைக் கிழங்குகளின் ஈர மண்வாசம். கறந்த பாலில் கொப்பளிக்கும் நுரை. கடல் நீரின் உப்பு. சுனை நீரின் இனிப்பு. செம்மண் குட்டையின் கரிப்பு. அகல திறந்த மாயக் கண்ணனின் வாய்க்குள் சுழலும் பிரபஞ்சம். ஒன்றையொன்று கவ்விக் கொண்டு இறுக மூடிய நான்கு உதட்டிற்குள் சுழன்றது பிரபஞ்சம். புவி உதடுகளுக்கு உள்ளே சுழன்றது. பருவங்களைக் கடந்த மலர்ச்சி.

“விடு டீ, மூச்சடைக்குது” நெஞ்சில் கை வைத்து, முன்னுக்குத் தள்ளினான்.

கண்ணாவின் உதடுகளை விட முடியாமலேயே முன்னுக்கு நகர்ந்தேன். உடம்பு உதட்டில் மையம் கொண்டிருந்தது. சிறு அசைவில்லை உடம்பில்.

“ம்ம்ம்ம்ம். லூசு, என்னாச்சு, விடு டீ” வேகமாக முகத்தில் கைவைத்து விலக்கினான்.

முலைப்பால் குடிக்கும் குழந்தையிடம் மார்புக் காம்புகளை விலக்கிக் கொண்டால், வீறிட்டழுவதுபோல், அழுகை வந்தது.

“ கண்ணா, ப்ளீஸ்.” மீண்டும் உதடுகளைக் கவ்வப் போனேன். வலுவான கைகளால், பின்னுக்கு இழுத்து, தோள்களுக்குள் என்னை அடக்கியபடி, படுக்கையறை நோக்கி நடந்தான். பை அதே இடத்தில் கீழே கிடந்தது.

சட்டையை கழட்டவில்லை. பேன்ட்டை மட்டும் அவசர அவசரமாகக் கழட்டினான். என் ஆடைகளை கண்ணா கழட்டி விடுவான் என்று காத்திருந்தேன். உடம்பின் ஒவ்வொரு அங்கமும் எப்படி மாறி இருக்கிறது என்று காட்ட விரும்பினேன்.

பூவில் தங்கியிருக்கும் பனித்துளியை ருசிப்பது, கனிந்த பழத்தின் சாறுறிஞ்சுவது, நீருக்குள் ஆழ ஆழ மூழ்கி சுவை நீரை பருகுவது என்று ஒவ்வொரு பகுதியாக அவனைக் கடக்கச் செய்ய வேண்டும். சட்டென்று கனம் தெரிந்ததுமேலே. கண்ணா படர்ந்திருந்தான்.

“கண்ணா, இரு இரு” என்றேன். அதற்குள் பாதி கடந்திருந்தான்.

“கொஞ்சம் பொறு, சொல்றதக் கேளு” என்றேன் கெஞ்சலாக.

புடவைகூட களையவில்லை. மூச்சு வாங்க மேலேயே சரிந்தான். கண்ணாவின் வியர்வை பிசுபிசுத்தது. மலையேற தொடங்கிய பயணம், சமவெளியிலேயே நின்று போனது. அன்போடு இருக்கும் நொடியில் தெரியாத உடலின் கனம் இப்போது அதிகம் கனத்தது.

வியர்வை அடங்கிய பின், துண்டுடன் குளிக்கச் சென்றான்.

போருக்கு முரசறிவித்து, தயாரான படைகளைக் கலைந்து செல்லச் சொல்வதுபோல் மனம் குன்றியது. அம்மனுக்குத் திருநீராட்டு செய்ய அபிஷேகப் பொருள்கள் தயார் செய்துவிட்டு, திருநீராட்டு செய்யாமல், கற்பூர ஆரத்தி மட்டும் காட்டிவிட்டுச் சென்றதுபோல், வெறுமை.

கருஞ்சிலை போல், உடம்பில் எண்ணெய் சிடுக்கின் நெடி பரவியது.

“எழுந்து, ஒழுங்கா படு” சொல்லிவிட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியே சென்றான் கண்ணா.

........................................................தொடருகிறது......................
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty Re: கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Sat Nov 20, 2021 12:02 am

மணல் வீடு கட்டி சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். வெயில் பளபளவென்று ஏறிக் கொண்டிருந்தது. இளம் வெயில் முற்றினாலே அம்மா கூச்சல் போடுவாள். “பாம்பு சட்டையை உரிக்கிற மாதிரி வெயில் தோல் உரிக்குது. வெயில்ல என்ன விளையாட்டு?” என்று தெருவுக்கே கேட்கும்படி கத்துவாள். எனக்கு உச்சி வெயிலில் வெளியில் விளையாடுவதுதான் பிடிக்கும்.

வெயிலின் கதிர்கள் சுள்ளென்று அடிக்கும். பட்ட நொடியில் எரியும். வெயிலையே கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த கதிர், அதற்கடுத்த கதிர், அதற்குமடுத்த கதிர் என்று வெயிலின் கதிர்கள் உடம்பில் ஊடுருவும்போது இதமாக இருக்கும். அதிகச் சூட்டில் உடலுக்குள் பரவும் குளுமை தனியாகத் தெரியும். உடம்பு முழுக்க வியர்வையில் குளிக்கும். உள்ளுக்குள் இதமான குளிர்ச்சி பரவும். சோறு பொங்கி, கறிகாய் செய்து, சாப்பிட்டு, மர நிழலில் படுக்கும்போதும், வெயிலின் கதிர்கள் உடலைத் தைப்பதைப் போலவே இருக்கும். உச்சந்தலையில் படும் வெயில் உள்ளே ஊடுருவியபோது, உடல் முழுக்கச் சிலிர்ப்பு பரவியது. சுற்றிலும் எல்லோரும் இருந்தாலும், என் உடல் மட்டும் தனியாக மிதந்தது.

விளையாட்டில் எப்பொழுதும் மணியும் இருப்பான். சுந்தரி அடித்து விரட்டுவாள். “ச்சூ, பாவம். குட்டிடி அது, அடிக்காதே” என்றவுடன், வாலையாட்டிக் கொண்டு என் பக்கம் நகர்ந்து வரும். நான் மணியை ஆதரிக்கிறேன் என்பதை மோப்பம் பிடித்துவிடும். காலடியில் உரசிக் கொண்டே உட்கார்ந்திருக்கும். வெயிலின் இதத்திற்கு நாங்கள் காய்ந்து கொண்டிருந்தால், மணி அனல் தாங்காமல், முனகும். என்னுடைய பாவாடைக்குள் தலையை நுழைத்துத் தப்பிக்கப் பார்க்கும். வால் வெயிலின் தாக்கத்தால் கால்களுக்கிடையில் மடங்கிக் கிடக்க, பாவாடையில் முண்டிக் கொண்டிருக்கும். “நாய் உண்ணி ஏறுச்சுன்னா அவ்வளவுதாண்டி, ரத்தத்தை உறிஞ்சிடும்” என்றாள் சுந்தரி. “நாய் ரத்தம்தான் குடிக்கும். மனுசங்க ரத்தத்தைக் குடிக்காது” என்று சொல்லிவிட்டு, மணியை இழுத்து வெளியே விட்டேன். ‘வவ்வவ்’ என்று கத்திக்கொண்டு, மீண்டும் பாவாடைக்குள் நுழைந்தான்.

தும்பைச் செடியை கொத்துக் கொத்தாகப் பறித்து வந்திருந்தோம். பூக்களை மட்டும் பிரித்துக் கொண்டிருந்தேன். மண் சட்டியில் ஒவ்வொரு பூவாகப் பிரித்துப் போட்டேன். ஒன்றுக்குப் போகும் இடத்தில், பிசுபிசுவென்று ஈரம் தெரிந்தது.

“ஒன்னுக்குப் போயிட்டமோ” என்று பயந்து போனேன். ஏதோ கடிப்பதுபோல் இருந்தது. சுந்தரி சொன்னதுபோல், நாய் உண்ணி கடிக்குதோ? உடம்பு முழுக்க விறுவிறுவென்று ஏதோ பரவியது. என்னவென்று புரியவில்லை. ஆனால், பிடித்திருந்தது. சுந்தரியும் சுமதியும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்குள் நடப்பதை அவர்கள் பார்க்கவில்லை. அந்த இடத்தில் எதுவோ முட்டி முட்டி சப்புவதுபோல் இருந்தது. யாரும் பார்க்காமல், பாவாடைமேல் மெதுவாக கை வைத்துப் பார்த்தேன். மணி இருந்தான். அவன் அம்மாவிடம் பால் குடிப்பதுபோல், முட்டி முட்டிக் குடித்தான். நெஞ்சடைப்பதுபோல் இருந்தது. மணியை வெளியே இழுத்துவிடத் துணிவில்லை. சப்பக்கால் போட்டு உட்கார்ந்திருந்த நான், குத்தக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டேன். கண்கள் சொருக மயங்கினேன். உடம்பு தள்ளாடியது. அந்த உணர்வைக் கடக்க முடியவில்லை. கிறுக்குப் பிடித்ததுபோல் இருந்தது.

“இந்த வெயில்லயா விளையாடுவிங்க?” பெரியம்மாவின் குரல் தூரத்தில் கேட்டவுன் தூக்கிவாரிப் போட்டது. பயந்து எழுந்தேன். மடியில் இருந்த மண் சட்டி கீழே விழுந்து உடைந்தது. தும்பைப் பூக்கள் சிதறின. உடம்பு கிடுகிடுவென்று ஆடியது. ரங்கராட்டினத்தில் வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரே இழுப்பில் நிறுத்தி இறக்கிவிட்டதைப்போல் நிலைகுலைந்து நின்றேன்.

“இந்தப் பல்லுக் கிழவி வீட்ல சொல்லிக் கொடுத்துடுவாடீ, சாயங்காலம் வர்றோம்” சுந்தரியும் சுமதியும் கிளம்பினார்கள். பதில் சொல்ல முடியவில்லை. உடல் இன்னும் தரை இறங்கவில்லை. இரண்டடி நடந்த சுந்தரி திரும்பிப் பார்த்தாள். என் காலடியில் வாயைக் குழைத்து நின்ற மணியைப் பார்த்தாள். “மணி இவ்வளவு நேரம் எங்கடி இருந்துச்சு?” “பாக்கலையேடீ நான்” என்றேன். “எங்கியோ கண்ட எடத்துல வாய வச்சுட்டு வந்திருக்கு. வாயக் குழைச்சிக்கிட்டு நிக்குது பாரு” திட்டிக் கொண்டே நடந்தாள்.

உச்சத்தில் சுற்றிக் கொண்டிருந்த ரங்கராட்டினத்தை, ஒரே இழுப்பில் நிறுத்திவிட்டான் கண்ணா. கால்கள் தரையில் இறங்கி நின்றன. மனசு இறங்காமல் உச்சியில் சுற்றிக் கொண்டிருந்தது.

ஊர்ந்து கொண்டிருந்த சிறு வண்டை குறி வைத்துக் காத்திருந்தது பல்லி. உயிரற்ற ஜந்துபோல் சுவரில் ஒட்டிக் கிடந்த பல்லியின் அருகே வண்டு நகர்ந்தது. முன்னால் பல்லி இருக்கும் எச்சரிக்கையில் திரும்பிப் போனது. மீண்டும் திரும்பியது. அப்பொழுதும் பல்லி அசையாமல் இருந்தது. வண்டுக்கு என்ன தோன்றியதோ, மீண்டும் திரும்பியது. பல்லியை நோக்கி மெதுவாக நகர்ந்தது. பல்லி கொஞ்சமும் அசைவின்றி இருந்தது.

தயக்கத்துடன் வண்டு முன்னேறியது. பல்லிக்கும் வண்டுக்கும் இடைவெளி குறைந்தது. வண்டு நிமிர்ந்து பல்லியைப் பார்த்தது. பல்லியிடம் அசைவில்லை. கண்கள் அரை விழியில் அப்படியே இருந்தன. வண்டு தன் இறக்கையை லேசாக விரித்து மூடியது. சில விநாடிகள் தாமதித்தது. வந்த வழியில் போகத் திரும்பியது வண்டு. திரும்பிய கணத்தில் பல்லியின் நாக்கு நீண்டது. வண்டிருந்த இடம் வெற்றிடமாகியது. நாக்கு வெளியில் நீண்டதும், வண்டு உள்ளே சென்றதும் இமைப்பதற்குள் முடிந்துவிட்டது.

அறையில் துயர் நிரம்பியது. இரவின் அமைதி துயரத்தை அதிகரித்தது. இரவை வேடிக்கைப் பார்ப்பது அச்சம் தந்தது. தூரத்தில் கேட்கும் பூனையின் குரல் இரவுக்கு அசாதாரணத்தைத் தந்தது. பூனையின் மென்மையான குரலை கேட்டிருக்கிறேன். கடுமையான குரலில் பூனையின் சீறல் இதுவரை கேட்டறியாதது. நாயின் ஊளையும் பூனையின் சீறலும் இரவுக்குக் கொடூர முகத்தைக் கொடுத்தன. இருட்டு தரும் அமானுஷ்யத்திற்கு அஞ்சிதான் இரவில் எல்லோரும் தூங்கக் கற்றுக் கொண்டார்களோ?

இருட்டு ஏன் அச்சமூட்டுகிறது? பகலைப் போலவே இருட்டிலும் வேலைகள் செய்து கொண்டிருந்தால், இருட்டின் அச்சம் விலகிவிடுமே? இரவுப் பணிகளுக்குச் சென்று வருகிறவர்கள் தினம் இருட்டைப் பார்த்து அச்சப்பட்டுக் கொண்டிருப்பார்களா? இயந்திரங்கள் இரவு, பகல் இல்லாமல் ஓடுவதைப்போல் மனித இயந்திரங்களும் இயங்க முடியாதா?

அமைதியானது இரவு என்கிறோம். இரவில்தான் ஆயிரம் சத்தங்கள் கேட்கின்றன. சிறு ஒலியும் தெளிவாகக் கேட்கிறது. பூனையின் மென் பாதங்களின் ஒலிகூட அருகில் கேட்கிறது. கரப்பான் பூச்சி படபடப்பது, தும்பிகளின் இறெக்கைச் சத்தம் எல்லாம் தெளிவாகக் கேட்கிறது.

இரவை வாழ்நாளில் கவனித்ததே இல்லை. திருமணமான புதிதில் இரவு முழுக்க விழித்திருந்திருக்கிறேன். கண்ணாவுடன் பேசுவதும் கூடுவதுமாக இரவு கழிந்திருக்கிறது. இரவின் சத்தங்களோடு எங்கள் சத்தம் கலந்திருக்கிறது. இரவின் சத்தங்களை நாங்கள் கேட்டதே இல்லை. இப்பொழுதுதான் விழித்திருக்கிறேன். இந்த ஒரு வாரத்தில் எனக்குள் எத்தனை மாற்றங்கள்?

நல்லதா? கெட்டதா? எனக்கு நன்மை செய்யப் போகிறதா? படுகுழியில் தள்ளப் போகிறதா? உடம்பு சுகம் வேண்டும் என்று ஒரு குடும்பப் பெண் காத்திருக்கிறாள் என்றால் ஊர் காறித் துப்பாதா?

அம்மா கிளம்பி வந்துவிடுவாள். “உன்னைப் பெத்து வளத்ததுக்கு, இதான் நீ எனக்கு வாங்கிக் கொடுக்கிற நல்ல பேரா? ரெண்டு புள்ளைப் பெத்த பிறகு உடம்பு சுகம் கேக்குதா? புள்ளைங்கள வளத்தமா, படிக்க வச்சமா, அதுகள ஆளாக்குனமான்னு இல்லாம, புருசன்கூட எப்பவும் படுக்கணும்னு கேக்கிற? என் வயித்துலதான் பொறந்தியா? அக்கம்பக்கத்துல விசயம் கசிஞ்சுது, தூத்திடுவாளுங்க தூத்தி. தேவடியா கூட காசுக்குத்தான் நாள் முழுக்கப் படுக்கிறா. அவ என்ன வர்றவன் கூடல்லாம் சந்தோசமாவா படுக்கிறா? பாவம். பொழப்புன்னு பல்லக் கடிச்சுக்கிட்டு படுப்பா. குடும்பத்துல எவளாவது புருசன்கூட படுக்கணும், எழுந்துக்கணும்னு வெளிய சொல்லிக்கிட்டு இருப்பாளா? தேடி வந்தான்னா இல்லன்னு திருப்பியனுப்பாமா படுத்துக்கிடக்கணும். அதானே பொம்பள. காசு பணம் சேத்தமா, செட்டா குடும்பம் பண்ணனுமான்னா இல்லாமா, ஊர்ல இல்லாத அதிசயமா கிளம்பிட்டா” என என்னை நாற அடித்துவிடுவாள்.

“பொம்பளன்னா ஒடம்பக் கட்டிப் போடணும். மனச அடக்கி வைக்கணும்” ஒவ்வொரு கை வேலைக்கும் ஒரு பேச்சு பேசுவாள்.

“நான் போறவன் வர்றவன்கூடவா இருக்கணும்னு கேட்கிறேன். கண்ணாகூட தானே கேட்கிறேன்? இத்தனை வருசம் கேட்டேனா? எனக்கே என்னைப் புரியலையே? நான் பொருட்படுத்தாமல் இருந்தாலும் உடம்பு என்னை இம்சிக்கிறதே? நானும் எல்லாப் பெண்களையும் போலத்தானே இருந்தேன். உடம்பிற்குள் சாமி இறங்கியதுபோல் இருக்கிறதே.”

உடம்பைப் பார்த்து மிரண்டுதான் துறவறம் மேற்கொண்டார்களோ? உள்ளிருந்து படமெடுத்தாடும் நாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், காயத்தைத் துறக்க துறவிகள் விரும்பினார்களோ? சிற்றின்பம் என்று குறைத்துக் கூறினால், யாரும் அதனிடம் மயங்க மாட்டார்கள் என்ற முன்திட்டமா?

இன்பத்தில் சிறியது பெரியது உண்டா? சிற்றின்பம் என்று எப்படிச் சொல்லியிருப்பார்கள்? கொஞ்ச நேரத்திற்கே நீடிக்கும் என்பதினாலா? ஆணும் பெண்ணும் சேர்வதினால் சிற்றின்பமா? ஆணும் பெண்ணும் சேர்வதினாலேயே கீழானதாக இருக்க முடியுமா?

பிற இன்பங்களைத் தனித்தனியாக அனுபவித்துக் கொள்ளலாம். தனியாகச் சிரிக்கலாம். அழலாம். கோபப்படலாம். பசி போக்கிக் கொள்ளலாம். காமத்தை சுவைக்க மட்டுமே இருவர் தேவை. சுய இன்பம் செய்பவர்களும் இருக்கிறார்களாம். நம் ஊரில் தெருவில் இருக்கிறார்களா? கேள்விப்பட்டதில்லை. இயற்கையில் சேர்க்கை என்றாலே இருபால்தானே? இனப்பெருக்கத்தின் அடிப்படையான இன்பத்தை சிற்றின்பம் என்பார்களா? மனிதர்களுக்குள் நிகழ்வதால் சிற்றின்பமா?

பேரின்பம் இருக்கிறதா? கடவுளை நினைத்தல் பேரின்பமா? கடவுளை நினைத்திருக்கிறார்கள். கடவுளை அடைந்திருக்கிறார்களா? கடவுளின் திருப்பாதங்களை அடைந்தால், பேரின்பம் என்று சொல்லலாம். அடைந்ததாக எவரும் சொல்லவில்லை. சொன்னவர் எவரும் அடையவில்லை.

அமைதியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் ஏனிந்த வண்டின் குடைச்சல்? உடம்பை என்னுடைய அறிவுக் கட்டுப்படுத்தும் திறனை இழந்ததா? ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று மனம் முரண்டு பிடிக்கிறதா? குடும்பத்திற்குள் உடலின்பத்திற்கு என்ன இடம் இருக்கிறது? வாழ்வின் அமைதியை நானே குலைக்கிறேனா?

மலர்ந்த உடல்? இன்பம் சேர்த்த ஊற்று? கிளர்ந்த மன எழுச்சி? நான் கேட்கவில்லையே? மறைத்துக் கொண்டு பொய்யாய் இருக்க வேண்டுமா? என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வது குடும்பத்திற்குள் சாத்தியமற்ற ஒன்றா? மனைவியின்மீது நம்பிக்கைத் தொலைத்த அரசர்கள் வேட்டைக்குச் செல்லும்போது, இரும்புக் கவசத்தில் மனைவியின் உடலைப் பூட்டி, கையுடன் சாவியைக் கொண்டு சென்றார்களாமே? என் உடலுக்கும் நானே ஒரு இரும்புக் கவசம் போட்டுக் கொள்ள வேண்டுமா? எனக்கு நானே ஒரு முகமூடி போட்டுக் கொள்ள வேண்டும். போட்டுக் கொண்டால் தப்பிக்கலாம்.

வண்டினை விழுங்கிய அடையாளமற்று பல்லி அடுத்த இரைக்காகக் காத்திருந்தது. குறைந்த ஒளியில், யாழினியும் ஆதியும் பேரழகோடு தெரிந்தார்கள். அவர்களின் அமைதி எனக்குள்ளும் பற்றியது. உறக்கம் தொலைத்து, அமைதி குலைந்து, என்ன அவஸ்தை இது.

மெத்தைக்கு வெளியில் நீண்டிருந்த கண்ணனின் கால்களைப் பிடித்தவாறு மெத்தையில் சாய்ந்தேன். குழப்பமா, பயமா உணர்வைப் பிரிக்க முடியவில்லை. அன்பான இரு கைகள் மடியில் புதைத்து அணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். தலையைக் கோதி, ‘நான் இருக்கிறேன்’ என்று செய்கையால் உணரச் செய்தால் நிதானமாகலாம். “என்ன தூங்கலையா?” என்று கேட்டால்கூட போதும்.

கண்களில் நீர் கோர்த்தது. கண்ணனுடன் வாழ்ந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் தெரியும் கண்ணன் அந்நியமாகத் தெரிந்தான்.

பாமா ஆதிக்கும் யாழினிக்கும் இடையில் இருந்த சிறு இடைவெளியில் ஒடுங்கிப் படுத்தாள். இரு கைகளையும் விரித்து இருவர் மேலும் போட்டாள். கண்ணீர் இமையை நனைத்து, கன்னத்தை நனைத்து, கழுத்து வரை வழிந்தோடி இருந்தது..................................................தொடருகிறது.......
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty Re: கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Sat Nov 20, 2021 12:05 am

சுருட்டிப் போட்ட கொண்டையுடன் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். ஆதி பல் தேய்த்துக் கொண்டிருந்தான். வாயில் நுரையுடன் திரும்பியவன் சத்தமாக, “பாசிப் பருப்பு ஃபேஸ் ஃபேக் இன்னைக்குக் கிடையாதாம்மா?” என்று கேட்டான்.

அ.வெண்ணிலா

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Vennila-a-jun
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty கிழவியும் பிக்காஸோவும் புறாக்களும்...

Post by வாகரைமைந்தன் Sun Nov 21, 2021 1:06 pm

நான் முதலில் புறாக்களைக் காணவில்லை. இரண்டு இளைஞர்களை மட்டும்தான். அழகாகவும், ஆடியபடியும் அவைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுதலில் ஓர் கவித்துவம் இருந்தது. அவர்களது முன் பக்கம் எனக்குத் தெரியாதபோதும், பின் பக்கத்தின் அசைவுகள் ரசிப்பைத் தந்தன. என்னைப் போல இவர்களும் புறாக்களில் விருப்பம் கொண்டவர்கள்போல இருக்கலாமென  நினைத்துக்கொண்டேன்.

ஆம், அந்தத் தினத்தில், அந்த வீதியில் நிறையவும்  நெருக்கமாகவும்   நிறையப் புறாக்கள். எப்போதும் இந்தத் தொகையில் இவற்றைப் பார்த்ததேயில்லை. எனக்கு மயக்கம் வரும்போல இருந்தது. இரைகளைத் தேடின அவைகளது வேகங்கள். வேகங்கள்! நிறைய வேகங்கள்!! இந்த வேகங்கள்  சிலவேளைகளில் மனித நடமாட்டங்கள் தரும்   பயத்தால்  அறுந்தும் அறுபடாமலும்…

பாரிஸில் நீண்ட காலமாக வாழ்வதால் இங்கு  நிறையப் புறாக்கள்  உள்ளன என்பது எனக்குத் தெரியும். இவை  Pigeons de Paris (பாரிஸ் புறாக்கள்) என அழைக்கப்படுகின்றன. கட்டிடங்களில் வசிப்போர்களால் இவை   வெறுக்கப்படுவன என்பதுவும் பின்னர்   எனக்குத் தெரியும். இந்த வெள்ளைப் பறவைகள்  எந்தப் பலகணிகளையும் ஆக்கிரமிக்கும் சக்தியைக் கொண்டன. துரத்தினாலும் சில நிமிடங்களில் திரும்பி வரும் எனும் ரகசியத்தை எப்படி இவை  கற்றன என்பது எனக்குத் தெரியாது.

நான் வசிக்கும் இடத்தில்  பலகணி இல்லாதிருந்ததால் தொடக்கத்தில்  அவைகளை  வேறு கட்டிடங்களின் பலகணிகளில்தான் கண்டேன். இவற்றின் துடிப்பும், வேகமும் என்னை அப்போதே கவர்ந்தன. இவற்றின்  அசைவுகளில் மந்திரங்கள் உள்ளன எனவும் நினைத்தேன். ஏன் மனிதனாகப் பிறந்தேன், புறாவாக ஏன்  பிறக்கவில்லை என்ற கேள்வி சில வேளைகளில் என்னிடம்   எழுந்தது.

மனிதப் பிறவியில் லாபம் என்னவாம்? சிறுவனாக இருந்தால் பெற்றோர் என்னைக் கவனமெடுப்பர். என்னைச் சுதந்திரமாகப் பறக்க விடுவார்களா? வளர்ந்தவுடன் நான் அவர்களை முதியவர்களாகப் பார்ப்பேன். பெற்றோரைக் கவனிக்க வேண்டியது எனது கடமையுமாகும். இந்த இடைவெளிக்குள்  கல்யாணம் நடந்தால் எனக்கு முக்கியமானவர்கள் மனைவியும் பிள்ளைகளும்…. தான். இவர்களைக் கவனிக்க வேலை தேடவேண்டும், உழைக்க வேண்டும்…. வாழ்வு சிலவேளைகளில்  ஓர் கொடுமைதான் ! இதனை மிதித்துக் கொண்டிருப்பன  கனவுகளே.

பறவைகள் மனிதர்கள் அல்ல. இவற்றுக்குள் சாதிகள் இல்லாதது ஓர் சிறப்பான விஷயம். எங்களது  உலகம் ஓர் ஆய்வாளர்களது உலகமாக இருப்பதால் பறவைகளுக்கும் சாதிகள் உள்ளன என்று ஓர் ஆய்வாளர் சொல்ல வருவார். என்னால் இவற்றைச்   சாதி எதிர்ப்பின் கருவிகளாகவே காண்கின்றேன். இதுவும் நான்  இவற்றை விரும்புவதற்குக் காரணம்.

எனது றூமிலிருந்து மறு கட்டிடங்களில் இருக்கும், அசையும், சாப்பிடும் பறவைகளைப் படம் பிடிக்க முனைந்துள்ளேன். இவற்றின் பறக்கும்  வேகத்தினால் பல படங்கள் மோசம். பின்பு  கட்டிடவாசிகள் பறவைகளைத் துரத்துவதையும் கண்டேன். காரணம் விளங்கவில்லை. அவர்களை எனது விரோதிகளாக நினைத்துக் கொண்டேன். இந்த அழகிய பறவைகளை ஏன் துரத்துவதாம்? கொடுமை! இந்த உலகில் நித்தியங்கள் குறைவு, அநித்தியங்களே அதிகம்.

எனது பிரான்ஸ் வருகையின் தொடக்கத்தில் நான் லூவர் மியூசியத்துக்குச் சென்றதுண்டு. அது மோனா லிசாவை லவ் பண்ணுவதற்காக அல்ல. என்னை ஓர் ஓவிய ரசிகன் எனக் கருதிவிட வேண்டாம்.  எனது இலங்கை இலக்கிய வாசிப்புகளுள் டாவின்சி என்பவரையும், அவரால் தயாரிக்கப்பட்ட மோனா லிசா எனும் பெண் அல்லது ஆண்மீதும் கேள்விப்பட்டுள்ளேன். பலர் லிசாவை மிகவும் உலகின் மிகப் பெரும் ஓவியம் என மொழிந்ததால்….. நான் ஓர் படத்தை, லிசாவின் படத்தை இலங்கையில் பார்த்தேன்…… எனக்குப்  பிடிக்கவில்லை.  எனது அருகிலிருந்த ஊமைக் கடலின் கரையில் மண் மீது ஓர் மீனவன் வரைந்த ஓவியம் லிசாவைக் காட்டிலும்  மிகவும் பிடித்திருந்தது.

இந்த மீனவனை எனக்கு அதிகமாகத் தெரியும். எனது அம்மா அவனிடம்தான் மீன்கள் வாங்குவார். எனது அம்மாவும் அல்ல, நிறைய அம்மாக்கள். அவரிடம் வாங்கும் மீன்கள் துடிப்பானவை, சுவையானவை. அவர் சில மீன்களை இலவசமாகவும் தருவார்.

துடிக்கும் மீன்களை அம்மாக்கள் வாங்கியது எனக்குள்  வெறுப்பை ஊட்டியது. இவற்றைத்  தண்ணீருக்குள் வாழவிட்டால் என்ன? நான் மீன்களைச்  சாப்பிட வெறுத்தேன். எனது  பெற்றோர்கள் இவற்றைச் சாப்பிடு! சாப்பிடு என்று தூண்டாததால்  எனது உடலுக்குள் மரக்கறிகள். இவை  உடலுக்குச் சுவையானதாம்….. மீன்கள் இல்லையாம்…. இறைச்சிகள் இல்லையாம்….

அன்று இந்த மீனவன் வரைந்த படத்தைப் பார்க்க நான் கடலுக்குச்  சென்றேன்.  மீனவனும் இல்லை,  மீனவர்களும் இல்லை, படகுகளும் இல்லை, நிலத்தில் படங்களும் இல்லை.

இல்லை, இல்லை, இல்லை ………………………… பல இல்லைகள்.

நான் கரையில்.  வெடித்துக் காய்ந்த மட்டிகளதும்,  அவமாத்தாகக் கரையில் வந்து மரணித்த கடல் பிராணிகளின் அருகிலிருந்தேன். அந்தக் கடலின் தூரத்தில் அசைந்தன சில வெள்ளைக் கொக்குகள். அவை எனக்குப் பரிதாபத்தைத் தந்தன.

எனது மாமா கொக்குகளை விரும்புகின்றவர் என்பது அப்போது எனது ஞாபகத்திற்கு வந்தது. எவ்வளவு கொக்குகள் அவரிடம் பலியாகியிருக்கும்? மாலை வேளைகளில் தனது சிறிய துப்பாக்கியுடன் கடற்கரைக்குச் செல்வதை நான் வியப்புடனும், பயத்துடனும் பார்த்துள்ளேன். ஒருபோதும் அவர் உதிரம் கொட்டும்  கொக்குகள் இல்லாமல் வீட்டுக்குத் திரும்பியதில்லை. இந்தக் கடல் பறவைகளின் சுவை அவரது நாவுக்குத்தான் தெரியும். பலதடவைகள் சமையல் செய்யப்பட்ட கொக்குத் துண்டுகளை என்னிடம் நீட்டி “சாப்பிடு! ஒருதடவை சாப்பிடு! உனக்கு அதன் சுவை தெரியும்!” என எனக்குத் தந்த அவரது வலியுறுத்தல்களை நான் நாகரீகமாக எரித்தேன்.

எனது வீட்டின் முன்னேயுள்ள கட்டிடங்களின்  பலகணிகளில்  தங்கும்  புறாக்களைப் பார்க்கும் போதும், ரசிக்கும் வேளையிலும்  கடலின் அலைகளைச் சுவாசித்த கொக்குகள் என் முன் வரும்.

எனக்கு முன்  லூவர் மியூசியம். அதன் அருகில்தான் பல பிராணிகளை உயிருடன் விற்பனை செய்யும் கடைகள், உண்மையிலேயே “மியூசியங்கள்” ஆக  உள்ளன. நாய்கள், பூனைகள், பல நிறங்களிலான நிறையப் பறவைகள், மீன்கள் போன்றவற்றை உயிருடன் காணலாம். ஆனால் ஒருபோதுமே அங்கு கொக்குகளைக் கண்டதில்லை. அங்கு அனைத்துப் பிராணிகளும்  மிகவும் கவனிப்புள். கண்ணாடிப் பெட்டிகளின் முன்னால்  அவைகளைக் கரிசனை செய்யும் சட்டங்களை  வாசிக்கலாம். தொட முடியாது. வாங்கும் முத்தத்தை முதலாளிக்கு வழங்கினால் சில வேளைகளில் தொடலாம், பிராணிகள் மீதான அவரது அன்பையும் பண்பையும் கேட்கலாம்.

இந்தக் கடைகளின் பிராணிகளை ரசிப்பதற்காகவே அங்கு செல்வேன். நான் அங்கு  செல்வது பார்ப்பதற்காகவே. விலைகள்  அதிகமானதால்   வாங்குதல் கஷ்டம். சொகுசோடு வாழ்வோர்தாம் வாங்கவருவார்கள்… என்னைப் போன்றோர் பார்ப்பதற்காகவே.

பார்த்தால்  இலாபம். ஆனால்  விருப்புகள் பார்த்தலினால் விளையும் வேளைகளில் நோவைக் கொஞ்சும் எமது இதயங்கள். எது கிடைக்கின்றதோ அதனால் மகிழ்வைத் தேடுவது வாழ்வல்லவா?

இந்தக் கடை ஒன்றில் நான் பல மணி நேரங்களைக் கழித்துவிட்டு வெளியே வரும்போது சிறிய  வெள்ளைக் கிழவியை ஓர் பெரிய கறுப்பு நாயுடன் கண்டேன். நாயும் கிழவியும் அழகிய ஓவியங்கள்போல பட்டனர்.

“மேடம்! உங்களது நாய் பெரியதாகவும், அழகியதாகவும் உள்ளது! இது எந்த நாட்டின் நாய்?” எனத் தொடங்கினேன்.

நான்  ஒரு புதிராக   அவளின் பார்வையில்.

“நீங்கள் இந்தியரா?”

“நான் இலங்கையன், எமது கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரமே!”

“நீங்கள் இலங்கையரா? பல ஆண்டுகளாக நான் ஓர் இலங்கையரைச் சந்திப்பதில் விருப்பமாக உள்ளேன்.”

“ஏன்?”

“என்னோடு கோப்பி குடிக்க நேரம் உள்ளதா?”

“மேடம்! அழைப்புக்கு நன்றி. கோப்பிக் கடைக்குள் இந்தப் பெரியதும் அழகியதுமான  நாயை அனுமதிப்பார்களா?”

பதிலைத் தராமல்  “எவ்வளவு காலம் இங்கு வாழ்கின்றீர்கள்?” எனக் கேட்டாள்.

“5 வருடங்களாக!”

“சரி! குறுகிய காலங்கள் வாழ்வதால் உங்களுக்கு இந்த நாடு மிகவும் விளங்கியிருக்காது என  நினைக்கின்றேன். இந்த நாடு பிராணிகளை விரும்புவது. உங்கள் நாட்டில் ….?”

“நாங்கள் பிராணிகளை அடிப்பதுண்டு! நாய்களைக் கற்களால் எறிவது எமது கிராமங்களில் நிகழும் குரூரமான கலாச்சாரமும்  விளையாட்டுமாகும். மேடம்! நான் நாய்களை விரும்பினேன். சிறுவனாக இருந்தபோது எனது வீட்டுக்கு ஓர் சின்ன நாய் வந்தது. அதற்கு நான் சீசர் எனப் பெயர் கொடுத்தேன். அது இளம் வயதில் நான் விரும்பும் ஒருவரின்  வாகனத்தால் அடிபட்டு இறந்தது.”

நான் அழுதேன். மேடம் எனது துக்கத்தை இதமான மொழிகளால் அழித்தாள்.

நாம் கோப்பிக் கடைக்குள் நுழைந்தோம். சேவகன்  எங்களையல்ல நாயை வரவேற்றார், அதற்கு ஓர் கதிரையும் தரப்பட்டது.

“மேடம்! நீங்கள் எதற்காக இலங்கையரைச் சந்திக்கும் விருப்பம் ஏற்பட்டது?”

அவளது விழிகள் பிரகாசித்தன.

“உங்கள் தேசத்தில் நிறையப் புலிகள் உள்ளனவாம். எனக்கு ஓர் புலி தேவை.”

எனது இதயம் பதைத்தது.

“மேடம்! எனது தேசத்தில் நான் கொக்குகளையும், காகங்களையும் பார்த்துள்ளேன், நான் ஒரு போதுமே   புலிகளைப் பார்த்ததில்லை.”

“உங்களுக்கு உங்கள் நாடு தெரியாதா? அனைத்து பிரெஞ்சுப் பத்திரிகைகளும்  உங்கள் நாட்டில் நிறையப் புலிகள் உள்ளன எனச் சொல்கின்றன……”

“மேடம்! அவை மிருகங்கள் அல்ல. அவை எனது நாட்டைப் பிரிக்க ஆயுதம் ஏந்தியவை!  அவைகளது அரசியல் இயக்கத்தின் பெயர் புலி எனும் சொல்லுடன் சம்பந்தப்பட்டது.”

“உங்கள் நாட்டில் புலிகள்  காடுகளில்  இல்லையா?”

“மிருகக்காட்சி சாலைகளில் சில காட்டுப்  புலிகள் உள்ளன என்று கேள்விப்பட்டு உள்ளேன் ”

கோப்பி கசந்தது. இந்தக் கசப்பை நான் இங்கு குடித்துப்  பழகியுள்ளேன். மேடம் போல குடித்தேன் சீனி போடாமல்.

நாய் அமைதியாக இருந்தது. சிறுவனாக இருந்தபோது எனக்கு நாய்களில் பயம். எனது ஓட்டைச் சயிக்கிளை பல வீதி நாய்கள் துரத்தியுள்ளன. ஆனால்  எனது அருகிலிருந்த நாய் தியானம் செய்வதுபோல பட்டது. நான் அதன் தலையைத் தடவினேன். மிருதுவாக இருந்தது.

“உங்களிடம் ஓர் உதவியைக் கேட்கலாமா?”

“கேளுங்கள் மேடம்!”

“என்னால் டாக்ஸியில் இந்த நாயை வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியும். பல வருடங்களாக நான் மெத்ரோவில் பயணம் செய்ததில்லை. எனது வீடுவரை நீங்கள் மெத்ரோவில் வரமுடியுமா?”

அந்த வயோதிகப்  பெண்ணுடனும், நாயுடனும் பயணம் செய்வது அழகியதாகப் பட்டது. மெத்ரோவில் பல இளம் பெண்களை நான் வித்தியாசமான நாய்களுடன் பார்த்துள்ளேன். அந்தப் பெண்களைப் பார்த்து மென் சிரிப்புகளை விட்டதால்  அவர்கள் தமது நாய்களின் கரிசனையால்தான் தமக்குச்  சிரிப்புகள் கிடைத்தன என்று கருதிக் கொண்டதை நான் அறியத் தவறியதில்லை. எனது மெத்ரோப் பயணங்களில் பூனைகளைப் பார்த்தது குறைவு. முன்பு நிறைய எலிகள் இளசுகளின் கைகளிலும், கழுத்துகளிலும் இருப்பது மொடலாக இருந்தது. இப்போது எலிகளின் இடத்தை நாய்கள் பறித்து விட்டனபோலும்.

மேடத்துக்கு 80 வயது தாண்டியிருக்கும் என நினைத்தேன். ஆனால் அவளிடம் செழிப்பும், உறுதியும் இருந்தது. காதுகளில் கண்களைப்  பிரகாசிக்க வைக்கும் தோடுகள், தங்க நிறத்தில். உதடுகள் சிவப்பு நிறத்தால் கவ்வப்பட்டிருந்தன. அவள் எனது அம்மம்மா போல.

“என்னிடம்  நாயைத் தாருங்கள்!” என மெத்ரோ  இறங்கு வழியின் முன் கேட்டேன்.

“நீங்கள் என்னைக் கிழவியென நினைக்கின்றீர்கள் போலும் ….” எனப் பொன் சிரிப்புடன் சொன்னாள்.

அவளது கால்களில் வேகம் குறைவு. நாய் அவளது வேகத்தைத் தெரிந்திருப்பதைப் போல மெல்ல, மெல்லமாக இறங்கியது.

“நாய்களுக்கும் மெத்ரோக்கள் வைக்கவேண்டும்!” என ஒருவர் கோபத்தில் கத்திச் சென்றார்.

“ஆகா! இது ஓர் அழகிய நாய்! இதற்கு எவ்வளவு வயது?”.  ஓர் இளம் பெண் மேடத்தை அண்மித்துக் கேட்டாள்.

“இது புதிய நாய்! இப்போதுதான் வாங்கப்பட்டது. இதன் வயது நான்கு மாதங்களே. இது பெண் நாய். ஆம்! இவள் எனது பேத்திகளில் ஒருத்தியாகின்றாள்.”

“என்னிடம் ஓர் சிறிய நாய் உள்ளது. வயது 6. இந்த நாய் பெரிய உருவத்தில் உள்ளது. எனக்குப் பிடித்தமானது இந்த வடிவம்.”

மெத்ரோவில் நாய்க்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் இருந்தார்கள். எமது  யுகத்தில் மனிதர்களை மனிதர்கள் வெறுக்கும் நிலை இருக்கும்போது, நாய்களுக்கு எப்படித்தான்  வரவேற்பு இருக்கும்? இந்த பிரான்ஸ் நாட்டிலோ  நாய்களுக்கு நிறையக் கவனம். வீதிகளில்  மனிதர்கள் அனாதைகளாகக் கிடப்பதைக் காணலாம், நாய்களைக் காணமுடியாது.

பெரியது மேடத்தின் வீடு. கதவு திறபட்டதும் எங்களை வரவேற்றன நிறைய நாய்கள். சிலதுகள் கத்தின, வேறு சிலதுகள் எமது கால்களை முத்தமிட்டன. அந்த வீடு நாய்களின் அரண்மனையாக  இருந்தது.

இருப்பு. இந்தக் கணத்தின் இருப்பு எனக்குள் ஓர் மௌனத் தியானத்தைத் தந்தது. நாய்கள். அவைகள் ஓர் அமைதியான இருப்போடு. நாங்கள்? எமது மனித வீடுகளும் கூடுகளும்  இந்தத் தியானத்தைத் தருவனவா? எங்கள் இல்லங்களுள் போரின் முறுமுறுப்புகள் இல்லையென்று சொல்லலாமா ?

எனது பழைய சினேகிதி  “ஒவ்வொரு வீடும், போர் மேடையே !”  எனச் சொல்லும் மொழி எனக்குள் கேட்டது.

மேடம் என்னை மறந்ததுபோல் நாய்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கவனிப்பு என்னைக் கவர்ந்தது. ஆம்!  அவளும்,  அவளது நாய்களும்.

“உங்களது உபசரிப்புக்கு மிகவும் நன்றி, உங்களது வீடு நாய்களது ராச்சியமாக உள்ளது. இதனைப் பெரிதான அழகென்பேன். உங்களைச் சந்தித்ததற்கு நன்றி.!”

“உங்களுக்கும்  மிகவும் நன்றி. உங்களைத் தொல்லைப் படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்கின்றேன்.”

“மன்னிப்புக் கேட்க வேண்டாம். இந்த அழைப்பு எனது மனதுக்கும் விழிகளுக்கும் சோதானது.”

“போதலின் முன் நான் உங்களுக்கு ஓர் பரிசைத் தரப்போகின்றேன். பொறுத்திருங்கள்…..” என்றபடி சின்ன நாயுடன் ஓர் அறைக்குள் நுழைந்தாள்.

நான் எனது மனைவிக்குச் சில பரிசுகளை அவளது பிறந்தநாள் தினங்களில் கொடுத்துள்ளேன். பரிசுகளை வாங்குவதில் எனக்கு   விருப்பமே  இல்லை. எனது மனைவியிடம் எனக்கு எந்தப்  பரிசுகளையும் வாங்கித் தராதேயெனப்  பல தடைவைகள் அன்புடன் கேட்டாலும் … அவள் அங்கீகரிப்பதில்லை என்பது எனக்குத் தெரியும்.

பரிசை வேண்டாம் என்பதா? அது தரப்படும்  கணத்தில்  நாகரீகமற்றது என்பது என் நினைப்பு. பிரெஞ்சு மக்கள் பரிசுக் கலாச்சாரத்தில் வெறியர்கள். இங்கு நத்தார்கள் என்றால் பரிசுக் கடைகளில்  மக்களின் படைதான்.

அவள் ஓர் சிறிய கண்ணாடிப் பெட்டியுடன் என் முன் வருகின்றாள். அது வெறுமையான கண்ணாடிப் பெட்டியாக என் முன் பட்டது. ஆனால் அது ஓர் அழகிய பெட்டி.

“மேடம்! நீங்கள் தரும் அழகிய பெட்டிக்கு நன்றி.”

“இது பெட்டி மட்டுமா?”

“ஆம்! இது பெட்டிதான்!”

“அதனுள் இருப்பது உங்களுக்குத் தெரிய வில்லையா?”

“மேடம்! அது எனக்குத் தெரியவில்லை.”

“இந்தியர்களது அவதானிப்பு ஆழமானது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.”

“எனக்குச் சில நிமிடங்கள் தரமுடியுமா?”

“ஆம்!”

மீண்டும் சின்ன, அழகியதுமான பெட்டியை ஆழமாகப் பார்க்கின்றேன். ஒரு சிறிய பிராணி அசைவதுபோலத் தெரிந்தது.

“ஆம்! கண்டுவிட்டேன்.”

“அது என்ன?”

“அதன் வடிவம் எனக்குப் புரியவில்லை. ஆனால் அது சிறிது.”

“அது ஓர் சிறிய சிலந்தி, பெரிதாக வளருவதில்லை.”

“சிலந்தியா?”

“உங்களுக்குச் சிலந்தியில் பயம் உள்ளது என நினைக்கின்றேன்.”

“மேடம்! நீங்கள் சொல்வது சரி.”

“இந்தச்  சிலந்திக்கு நீங்கள்  பயப்படத் தேவையில்லை. இது கடிக்கும் சிலந்தியல்ல.” எனச் சொல்லிவிட்டு, பெட்டியைத் திறந்து தனது கையில் எடுத்தாள். அது அவளது உள்ளங்கையில் அமைதியான உலாவை நடத்தியது. பின் அவள் எனது கையை விரிக்குமாறு சொன்னாள்.

எனது பயத்தை ஒழித்துக்  கையை விரித்தேன். சிலந்தி ஏறியது. அது என் கையைக் கடிக்கவில்லை, முத்தமிட்டது. பின்  அமைதியாக, அசையாமல் என் கையில். சிந்திக்கும் சிலந்தியோ?  மேடம் அதனை அதனது பெட்டிக்குள் வைத்தபின் அவளுக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டு நான் வெளியே வந்தேன்.

எனது மனைவிக்கும் சிலந்திகளில்  பயம். வீட்டுக்குள் அவ்வப்போது அவை  வந்தால் எனக்குக் கிடைப்பது அழிப்புத் தொழில். எனக்குள் நடுக்கத்தைத்தரும் தொழில் எனலாம்.

எப்படி இந்தச்  சின்ன, அமைதிக்கான நோபெல் பரிசைப் பெறும்  சிலந்தியை வீட்டுக்குக் கொண்டு செல்வது?

அது மாலை. எனது வீட்டுக்குப் போவதின் முன்னர் ஓர் பொதுத் தோட்டத்தைக் கடக்கவேண்டும். நான் சில வேளைகளில் அங்குப் போவது புறாக்களைப் பார்ப்பதற்காகவே.

இந்தத்   தினத்திலும் அவைகள் அசைந்தன. நிறையப் பேர் இருந்தனர். நான் ஒரு முதியவரின் அருகிலிருந்தேன். எங்களுக்கு மத்தியில் எனது  பெட்டி, சிலந்திப் பெட்டி.

முதியவர்:  “ஆ!  இவை அழகான புறாக்கள்!” என்றார்.

“நானும் புறாக்களை விரும்புவதுண்டு. எனது வீட்டின் முன்னுள்ள கட்டிடத்தில் அழகிய புறாக்கள் உள்ளன.”

“பாரிஸ் நாடு அழகியது, ஆனால் இங்கு வாழும் புறாக்களை நிறையப் பேர் வெறுக்கின்றனர். இந்தப் புறாக்களை ‘பாரிஸ் புறாக்கள்’ என்பது உங்களுக்குத் தெரியுமா?”.

“நான் இங்கு சில வருடங்கள் வாழ்ந்தாலும் அது எனக்குத் தெரியும்.”

“எத்தனை வருடங்கள்?”

“கிட்டத்தட்ட 5 வருடங்கள் என நினைக்கின்றேன்.”

“உங்களது பிரெஞ்சு மொழி அழகியதாக உள்ளது. நீங்கள் பெரிய பள்ளியில் படித்ததுண்டா?”

“இல்லை. இங்கு வந்து 6 மாதத்தின் பின்னர் ஓர் பிரெஞ்சுப் பெண்தான்  இந்த அழகிய மொழியை எனக்குப் படிப்பித்தார். சில மாதங்களின் பின்னர் அவளுடன் எனக்குக் காதல் வந்தது. எனது மொழித்திறன் காதலால்  வந்ததெனலாம்.”

“நீங்கள் அவளுடன் வாழ்வது நல்லது. நான் ஓர் போலந்து நாட்டுக்காரன். உங்களைப் போல எனக்கும் பிரெஞ்சுக் காதலி கிடைத்ததால்தான் நான் இப்படித் தெளிவாகப்  பிரெஞ்சு மொழியைப் பேசுகின்றேன். எங்களுக்கு 8 பிள்ளைகள் உள்ளன. உங்களுக்கு எவ்வளவு பிள்ளைகள்?”

“நான் இப்போது அவளுடன் வாழ்வதில்லை. அவள் பிள்ளை கேட்கும்போது, நான் தொழிலில் இருக்காது விட்டதால் மறுத்துவிட்டேன். இந்த மறுப்பு எமது பிரிவுக்குக் காரணமாகியது.”

“இப்போது நீங்கள் பெரிய தொழிலில் இருப்பீர்கள் எனக் கருதுகின்றேன்.”

“தொழில் இல்லை. எனது மனைவிதான் ஓர் தொழிலில் உள்ளார்.”

நான் புறாக்களின் அசைவுகளைப் பார்த்தேன். எனக்கு இலக்கிய வாசம் தெரியாதபோதும் இவற்றின் மீது கவிதைகள், கட்டுரைகள் எழுதலாம் என்ற நினைப்பு வந்தது. தோட்டத்தில் புறாக்களது நடனக் கோலங்கள். சில சிறிய கற்கள் எறியப்பட்டாலும் அவை தமது இருப்பை நடத்தின.

“இனியவை இந்தப் புறாக்கள்

இவற்றைக் கொண்டு செல்வேன்

எனது நாட்டுக்கு

கடலின் அலைகளை அவைகள்

முத்தமிடவேண்டும்

இந்த முத்தங்கள்

நிலத்தில் கோலமாகவேண்டும்  ….” என்று இப்படி ஒன்று கவிதைபோல  எனக்குள் வெடித்தது. முதியவரைப் பார்க்கத் திரும்பினேன். அவரும் இல்லை, சிலந்திப் பெட்டியும் இல்லை.

பெட்டி இல்லாததால் எனக்குச் சந்தோசம் வந்தது. நான் பெட்டியைக் குப்பைத் தொட்டியில் போடாதிருந்தேன் என்பதற்காக.

இரண்டு வருடங்களின் பின்பு

எனக்கு வேலையே கிடைக்கவில்லை. காலையிலும்  மத்தியானத்திலும் மாலையிலும் புறாக்களைப் பார்த்தும், அவைகள் மீது எழுதியும் கொண்டிருந்தால்  எப்படி வேலை கிடைக்கும்? எனது இருத்தலிடம் சிறியது. ஆனால் அது புறாக்களைப் பார்ப்பதற்கு வசதியான இடம். என் புறா ரசனை   எனது மனைவிக்குப்    பிடிக்காது இருந்ததும், என் தொழிலின்மையில் அவளுக்கு  வெறுப்பு இருந்ததும் என்பது  ரகசியமாக எனக்குத் தெரியும்.

எனது மனைவிக்கு இரண்டு தொழில்கள். எப்போதும் அவள் வீட்டில் இருப்பதில்லை. மிகவும் சிறப்பாகப்  பிரெஞ்சு பேசினாள். அவள் பிரெஞ்சுக்காரனைக்  கள்ளப் புருசனாக வைத்துக் கொண்டுள்ளாளோ?  இந்தக் கேள்வி எனக்குள் எழுந்தாலும் எனது காதல் புறாக்கள் மீதுதான் இருந்தது.

“கடிதத்தைப் பார்த்தீர்களா?”

ஓர் மாலை தினத்தில் எனது மனைவி என்னைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி வந்தது.

“கடிதமா? எனக்கா?”

நான் ஒருபோதும் கடிதப் பெட்டியைத் திறப்பதில்லை.

“எனது அம்மாவிடம் இருந்துதான் கடிதம் வந்ததா?”

அவளது முகத்தில் கோபம் தெரிந்தது.

“இது எமது மாநகர சபையின் கடிதம். நேற்றுதான் வழமைபோல சமையலறையில் வைத்தேன்.  காலையிலிருந்து வாசிக்க நேரம் இல்லையா? புறாக்களைப் பார்ப்பதுதான் உங்கள் வேலையா?”

“மன்னிக்கவும். கடிதத்தைத் தா! எனது அன்பே! “

“சமையல் அறைக்குள் உள்ளது.” முக வாட்டத்துடன் சொன்னாள்.

கடிதத்தை வாசித்தேன். ஆம்! எங்களுக்கு மூன்று அறையில் புதிய கட்டிடம் கிடைக்கப் போகின்றது. வாடகை மிகவும் குறைவு.  இந்த முயற்சிக்குக் காரணம் எனது மனைவியே.

“என்னை நீ மன்னி!”

“ஏன் இதனைச் சொல்கின்றீர்கள்?”

“எனக்கு வேலை இல்லை, நீ ஓர் வேலையை அல்ல, இரண்டு வேலைகளைச்  செய்கின்றாய். எனது வேலை புறாக்களைப் பார்ப்பதுதான். நான் புறாக்களைத் தினம் தினம் பார்க்கும்   விருப்பத்தைக்  குறைத்து  நிச்சயம் ஓர் தொழிலைத்  தேடவேண்டும்.”

“நீங்கள் புறாக்களை விரும்புவது உங்களது ஆன்ம சுகத்துடன் தொடர்புடையது. எமது இருத்தல்களின் நெருக்கடிகளை  மறந்து, உங்களது  விருப்பில் நீங்கள் உங்களை இழப்பதில்  அர்த்தம் உள்ளதா? பல  வருடங்கள் உங்களுக்கு வேலை இல்லை, அரச உதவியும் குறைவானது. புறாக்களின் விருப்பால்  நீங்கள் என்னையும் மறந்துகொண்டது போலத்தான் எனக்குப் படுகின்றது. ஆனால் எமக்குள் தொடங்கியது சுத்தமான காதல் என்பதால்தான், எனக்குள் உங்கள் மீது தொடங்கும் எதிர்ப்பு விரைவில் கரைந்து போகின்றது.”

...........தொடருகிறது............
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty Re: கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Sun Nov 21, 2021 1:07 pm

முதல் தடவையாக இன்றுதான் அவள் என் முன் இப்படிக் கதைக்கின்றாள். என்னைப் பெரிதாகச் சிந்திக்க வைத்தன அவளது மொழிகள். நான் அவள் முன் மௌனம் ஆனேன்.

“நான் உங்கள் மீது சுமத்திய குறைகளை  மன்னிக்கவும். உங்களுக்கு மனத்தொல்லைகள் தர எனக்கு எப்போதும் விருப்பமே  இல்லை.”

“உனது முயற்சிகளால்தான்  எங்களுக்கு மூன்று அறைகளோடு வதிவிடம் கிடைத்திருக்கிறது. மிகவும் நன்றி. இன்று நான் என் தவறுகளை உணருகின்றேன். புறாக்களிடம் இருந்து விடுதலை பெற்று, ஓர் தொழிலைத் தேடுவதுதான் எனது திட்டம். புதிய வதிவிடத்தில் வசித்தால்  புறாக்களது நினைவு  நிச்சயமாக மறந்து போய்விடும், நீதான் எனது புறாவாக இருப்பாய்.” என்றேன்.

அவள் விழிகள் சிவந்தன. இந்த நிறத்துள் போதை மணிகளைக் கண்டேன். எனது உடலைத் தீ முட்டியது. நாம் எமது கட்டிலில். எரிதலில் எமது உடல்கள்.

சில தினங்களின் பின்னர்

நாங்கள் புதிய வீட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் இருவருக்கும் அது  மிகவும் பெரிதானது. 3 அறைகள். பெரிதான சமையல் அறை. பத்துபேர் சாப்பிடக்கூடிய பலகணி. ஆம், முதலாவது தடவையாக நான் ஓர் பலகணியில். சில அசைவுகள் எனது காதைத் தொட்டன. ஓர் புறாவையும் எனது விழிகள் காணவில்லை. இந்தப் பறவைகளை மறக்கவேண்டும். எப்படி மறப்பது?

இதற்கு  முன் பதினெட்டு  மாடிகளைக் கொண்ட கட்டிடம். சுகத்தை எமக்கு எப்போதும் தந்ததில்லை. பகலிலும் இரவிலும் நிறையச் சத்தங்கள் கேட்கும். அந்தக்  கட்டிடத்தில் நிறையப் பிள்ளைகளோடு சேர்ந்த குடும்பங்கள் இருப்பதே காரணம் என நினைத்தேன். நாங்கள் சத்தம்போடாத தூய பிறவிகள் எனச் சொல்லிவிடமுடியாது. எனது மனைவி தமிழ் இசையைப் பெரிதாகவே கேட்பாள். இந்த இசை வேகத்தைக் குறைக்கும்படி கட்டிடத்தின் தலைமை நிறுவனத்திலிருந்து  கடிதம் கூட  ஒரு தடவை வந்தது.

இந்த வீட்டிலேயோ நிசப்தம். நாம் பெரிதாக இசையை விடலாம், ஆனால் வெளியே அமைதியாகத்தான் கேட்கும். இதன் காரணம் எதுவென நான் தேடத்துடிக்கவில்லை.

எமது பலகணி நிச்சயமாக எனக்குப்  பிடித்திருந்ததற்கு ஓர் வேறு காரணமும் உள்ளது. அதில் பலரோடு சாப்பிடுவதற்கு அல்ல. நான் வீதிகளில் எறியப்பட்ட உபயோகமான பொருள்களின் வெறியன், அவைகளை எடுத்து வருபவன்.  பழைய வீட்டிலிருந்து எடுத்து வந்த பல பொருள்களை அங்கு வைத்தேன். அவைகளுள் இரண்டு சயிக்கிளும், 3 மைக்ரோ ஓண்டுகளும், ஓர் தையல் மெசினும்…. இன்னும் பல, பல.

எனக்குள் வீடு சொர்க்கமாகப் பட்டது. பல பிளாஸ்டிக் படங்களை வாங்கிச்  சுவர்களில், மனைவியின் அனுமதியோடு ஓட்டினேன்.  ஒவ்வொரு அறைகளையும் அழகு படுத்தத் தொடங்கியதால்  தொழில் தேடும் இலக்கு எனக்குள் மறைந்து போயிற்று. மனைவி கூட எனது தொழில்மீது பேசாமல், அறைகளுள் நான் ஒட்டிய கலைத்துவத்தையே ரசித்தாள். “ம்! நீங்கள் பிக்காசோ போல!” என்று பல தடவைகள் சொல்லத் தவறவில்லை.

பிக்காஸோ  புறாக்களைக் காண்கின்றார்…

அழகியவளும், கவர்ச்சிகரமானவளுமான   எனது மனைவி இன்று இரவில் என்னுடன் இருக்கமாட்டாளாம். அவள் போவது வேறு ஆணைத் தேடியல்ல, ஓர் பெண்ணைத் தேடியே.  லெஸ்பியனா? அவள் அவ்வாறு இருந்தால் அது ஓர் உடல் தத்துவம் என நினைத்துக் கொள்வேன். அவள் தனது சினேகிதியைத் தேடிச் செல்கின்றாள். தூரமாக அவள் இருப்பதாலும், பெண்களது சுய சம்பாசனைகளை இடையூறு செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பதாலும், நான் இன்று தனியே.

நான் எல்லா அறைகளின் கலைத்துவத்தையும் பார்த்தேன். எமது கட்டிலின்   முன்  ஒட்டப்பட்டிருந்த இந்தி நடிகையின் படத்தை, வரவேற்பு ஹோலின் கதவில் ஒட்டுவது சிறப்பாகப் பட்டது. எனது மனைவி என்னைக் கடிக்கமாட்டாளென நினைத்துக் கொண்டேன். அவள்  பார்ப்பது நிறையத்   தமிழ்ப் படங்களை, நான் இந்தி மொழிப் படங்களையே.  சில வேளைகளில் ஏன் இந்தி மொழியைக் கற்காது உள்ளேன் என்று  நான் என்னிடம் கேட்பதுண்டு.

கதவு தட்டப்பட்டது.

நிச்சயமாக மனைவி அல்ல. சில நிமிடங்களின் முன்தான் நான் அவளிடம் போனில் பேசினேன்.

தட்டுவது ஆணா? பெண்ணா?

எமது பொதுக் கதவில் வெளியில் உள்ளோரைப் பார்ப்பதற்கான சிறிய வட்டமான கண்ணாடி இல்லை. பழைய வீட்டில் அது இருந்தது.

மீண்டும் கதவு தட்டப்பட்டது.

“யார் நீங்கள்?” பலமாகக் கேட்டேன்.

“மன்னிக்கவும், நான் தபால் ஆபீசில் வேலை செய்கின்றவள் , கலண்டர் விற்க வந்துள்ளேன்.”

அவளது பதில் சில தினங்களின் பின் புதுவருடமாகும் என அறிவித்தது. இந்த ஆபீசில் வேலை செய்பவர்களில் பலர் வருடா வருடம் கலண்டர்களை  விற்பதை அறிவேன். விற்போர் பெரிய சம்பளங்களை எடுப்பவர்கள் அல்லர். ஆம்,  இந்த ஆபீசுகளில் குப்பைகளை நீக்குபவர்கள் என்பதை நான் அறிவேன்.

திறக்கப்பட்டது கதவு.  ஓர் பெண். அவள் ப்ரிஜித் பார்டோ இளம் வயதில் இருந்தது போல.  நிறையக் கலண்டர்கள். புன்னகைப் பூக்கள் உதட்டில்.

ஒன்றை வாங்கியதும், கதவைப் பூட்ட வெளிக்கிட்டேன்.

அவள் என்னைப் பார்த்தாள்.

பூட்ட முடியவில்லை.

“இன்னும் ஓர் கலண்டர் வாங்க மாட்டீர்களா?”

இரண்டாவதை வாங்கியபின் கதவை மூடினேன்.

நான் தொழில் செய்யாது விட்டாலும் எனக்கு அன்று களைப்பு. பின்  கட்டிலில். தூக்கம் ஈசியாக வந்தது.

தூக்கம்.

பின்பு சில முனகல்கள் என்னை எழுப்பின. இவை குழந்தைகளிடமிருந்து வருவதுபோல. மெலிதாகக் கேட்டவை பின்பு பெரிதாக. பலகணியில் இருந்துதான் இது  வருகின்றதா? அதில்  பிள்ளைகள் உள்ளனவா? மந்திர வித்தைகளில் பயமே இல்லாத எனக்குள் நடுக்கம், உடல் சிறிது ஆடியது. மீண்டும் கேள்வி. இவை எனது பலகணியில் இருந்துதான் வருகின்றனவா? ஆம்! எப்படிக் கதவைத் திறந்து அங்கு போவது?

இந்த முனகல்கள் எனக்குத் திகிலூட்டும் கதைகளை நினைவு படுத்தின. என் மனம் முன் தோன்றின ஸ்டீபன் கிங்கின் கதையை வைத்துத் தொடங்கிய  படங்கள்.

ஒவ்வொரு படங்களிலும், ஒவ்வொரு வாழ்விலும் ஹீரோக்கள் இருப்பது தவிர்க்க முடியாது.

நான் என்னை ஹீரோவாக்கினேன்.

பலகணியில் வெளிச்சம் இல்லை. எனது டோர்சைத்  தேடினேன். அதனைக் கண்டுபிடிப்பது சுலபமான விசயமா? இந்த வாழ்வில் தேடினால்  கிடைக்காது, தேடாதது கிடைக்கும். பலகணியில் இருந்து வரும், பெருகும் முனகல்கள் யாரிடம் இருந்து வருகின்றது  என்பதைக் காண ஒளி தேவையானதா? இந்த முனகல்கள் இப்போது காம முனகல்கலாகவும் பட்டன. எனது பலகணியில் ஓர் குடும்பம் எமக்குத் தெரியாமல் வந்து விட்டதா?

எனக்குள் சிறிய பயம். எப்படி அந்த முனகல்கள் தோன்றும்  இடத்துக்குப் போவது?

இரவு 12.10.

இந்த நேரத்தில்  எப்படி மனைவிக்குப் போன் பண்ணுவது? ஒருவேளை சம்பாஷிப்புகளால் அவர்கள் தூங்கமாட்டார்கள் என நினைத்தேன்.

முனகல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது  அவள் எடுத்தாள்?

“எனது அன்பே! உங்களுக்குத் தனிமையில் இருக்கப் பயமா?”

“பயமில்லை… உன்னிடம்….”

“சகுந்தலா உங்களுக்கு மாலை வணக்கம் செலுத்தவுள்ளாள் … அவளிடம் கொடுக்கின்றேன்…..”

“மாலை வணக்கம் கீர்த்தி! “

“மாலை வணக்கம் சகுந்தலா.”

“உங்களது மனைவியை இங்கு இந்த இரவு பிடித்து வைத்திருப்பதற்கு மன்னிக்கவும்….”

“பல தினங்கள் அவளை வைத்திருக்கலாம். உங்கள் கணவன் சுகமாக உள்ளாரா?”

“நான் உங்கள் அன்பியினுடனும்   சில கணங்களின் முன்தான் சொன்னேன்… எனக்கும் அவருக்கும் பிரிவு நடந்துவிட்டது.”

“வருந்துகின்றேன்.”

“வருத்தப்பட வேண்டாம். வாழ்வு தொடர்புகளதும் பிரிவுகளதும் நிகழ்வாகச் சிலவேளைகளில் இருக்கலாம்  என்பது என் நினைப்பு.”

சகுந்தலாவின் நினைப்பு எனது மனைவியின் நினைப்பாக இருக்க முடியுமா?  இருந்தால் என்னவாம்?

“உங்கள் குறிப்பு சரியாகவும் இருக்கலாம். மாலதியுடன் பேசலாமா?”

“கொடுக்கின்றேன்.”

“மாலதி! இந்த வேளையில் உனக்குப்  போன் செய்வதற்காக மன்னிக்கவும்.”

“ஏன் மன்னிப்பு? நீங்கள் எப்போதும் போன் செய்யலாம்  என்பது உங்களுக்குத் தெரியாதா? இங்கு சிறப்பான சாப்பாடு. கோழித் துண்டுகளை மெதுவாகப் பொரித்து சகுந்தலா ஓர் குழம்பு செய்துள்ளாள். அது மிகவும் சுவையானது. அவள் எங்களுக்காக ஒரு பிளாஸ்டிக் பெட்டியுள் அதனைப் போட்டு வைத்துள்ளாள். “

“அது நல்லது.  நான் உனக்கு போன் செய்தது…… முனகல்கள்……”

“முனகல்களா ?”

“ஆம்! முனகல்கள்……. அவை பலகணியில் இருந்து வருகின்றன……”

அவள் சிரித்தாள்.

“ஏன் சிரிப்பு?”

“உங்களைப் பற்றியதுதான்.”

“ஏன் என் மீது என்று கூறுகின்றாய்?”

“நீங்கள் தூங்கும்போதும் தூங்காதபோதும் கனவுகளைக் காண்பவர். இது நீங்கள் உங்கள்  கனவுகளில்  கேட்ட முனகல்களாக இருக்கலாம் என்பது  எனது எளிமையான கருத்து.”

“என் சொற்களைப் பொய்கள் என்கின்றாயா?”

“நான் அப்படி…………………..”

போனைக் கட் பண்ணினேன்.

அவளது தொடர்பு அறுபட்டதும்  முனகல்கள் மீண்டும்  கேட்டன. அவை இப்போது எனது பயத்தை எரிக்கும்  காமச் சத்தங்களாக.  அவைகள் இதமானவை. விவிலிய வேதத்தின் பாம்பினது மொழியெனவும்  சொல்லப்படலாம்.

பிக்காஸோ  போர்னோகிராபி படத்தின் முன்…..

சில வேளைகளில் எனக்குத்  தனியே  இருக்க விருப்பம் உண்டு. எனது மனைவி நிறையக் கவர்ச்சியானவள்தான். அவளுடன் செக்ஸ் வைத்தபின் மீண்டும் எனக்கு முன்னும்  பின்னும்  விவிலியப்  பாம்புகள் தெரிவதுண்டு. நிறையப் பாம்புகள் எனது கனவாக இருந்தன என்பதைத்  தமிழ் கலாச்சாரத்தை “மதித்து” நான் அவளுக்குக் காட்டவில்லை. சில தினங்களில் எனது மனைவி என்னை விட்டுத் தனித்திருக்கவேண்டும் என விரும்பினேன். இது செக்ஸ் படங்களைச் சுதந்திரமாகவும் தனிமையிலும்  பார்க்கும் கணங்களாகலாம்.

செக்ஸ் படங்களா, போர்களா எம்மை எதிர்ப்பன என எனக்குள் சிலவேளைகளில் வருவன தத்துவக் கேள்விகள். தத்துவம் செக்ஸ், செக்ஸ் தத்துவம்.

நான்  இணைய  மலையின் முன்.

“Fuck” என எழுதினேன்.

இணையம் சுவைகளது அரண்மனை. வாத்ஸாயனரையும் அது விரட்டக்கூடியது. செக்ஸ் விளையாட்டுகள் எப்படி நடந்தாலும் அவைகளைத் தணிக்கை செய்யாமல் காட்டுவது  இணையம்.

தொடக்கத்தில் ஓர் நாயும் பெண்ணும்.

படத்தில் முதலில் நாய் வருகின்றது. அது பயங்கரமான நாய். அதற்குப் பெரிய பற்கள். அது கொடூரமாகக் குரைக்கின்றது. அவள், அழகிய வெள்ளைப் பெண் அதன் முன் சிரிக்கின்றாள். காம மணிகள் சிறிய சங்கீதத்தோடு  அவளது சிரிப்புக்குள் இருந்து வெளியே  வருகின்றன.

மனிதர்கள் மிருகங்களோடும், பிராணிகளோடும், தாவரங்களோடும் செக்ஸ்ஸினை  வைத்துக் கொண்டார்கள் எனப் பல பத்திரிகைகளில் வாசித்துள்ளேன். ஆனால் அவைகளை நான் ஒருபோதும் படமாகப் பார்த்ததில்லை.

கொடூரமாகக் குரைத்த நாய் இப்போது அவளது தொடைகளை நக்குகின்றது. அவளிடமிருந்து முனகல்கள். அவள் தனது இரு தொடைகளையும் மூடுவதில், ஆனால் நாயோ திறப்பதில்.

அவளது மூடல் இயற்கையானதா? செயற்கையானதா? இரு இயல்புகளிலும் இன்பம் இருக்கலாமென நான் நினைத்துக் கொண்டேன்.

கணங்கள் வேறு கணங்களைத் தேடியதுள் …. தொடைகளை நாய் பிரித்தது….  அவள் கத்தினாள்……  காதல் இன்பத்தை எமது நிலத்துக்கு வழங்கின அவளது கத்தல்கள்… இப்போது நாய் குரைக்கவில்லை. அவளது உடல் முழுவதையும் அழகாகத் தடவியது……

சூடாக இருந்தது படம்.

இந்தப் படத்தை எனது மனைவியோடு பார்க்கமுடியுமா? பார்த்தால் எனது தலை வெட்டப்படும். அவள் திருநீறு உருவாக்கப்படும் கோலங்களை நிறைய ரசிப்பாள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என அவளுக்குத் தெரியும். அவளது நம்பிக்கைகளை உடைத்தல் எனது நோக்காக இல்லாததால் எங்களுக்குள் அன்பு, காதல்…. பின்பு காமக் கலைகள்.

எனது இச்சை முறிபட்டது. பலகணி தரும்  முனகல்களால்.

போன் கத்தியது. படத்தைப் போஸ் இல் விட்டபின் போனைப்  பார்த்தேன். எனது மனைவியின் முகம்.

“மன்னிக்கவும்!” அவளின் சொல்லில் நடனமாடத் துடித்தது ஓர் இதம்.

“நீ ஏன் என்னிடம் மன்னிப்பைக் கேட்கின்றாய்?”

“அது உங்களுக்குத் தெரியும்….முனகல்கள் மீது சகுந்தலா என்னிடம் பேசினாள்……”

“நீ அவளுடனும் அவைமீது பேசிவிட்டாயா?”

“அவள் எனது மிகப் பெரும் சினேகிதி. அவளுடன்  எல்லாம் பேசலாம், ஆனால்  நான் எல்லாவற்றையும்  அவளுடன் பேசுவதில்லை. எங்களைவிட அவள் பெரிய வீட்டில் இருக்கின்றாள்.  அவளுக்குச் சில விசயங்கள் எங்களைக் காட்டிலும் தெரியும் என்கின்ற நினைப்பால்தான் முனகல்கள் பற்றிப் பேசினேன்…..”

“அவள் என்ன சொன்னாள்?”

“எங்களது பலகணியில் புறாக்கள் இருக்கின்றதா என்று கேட்டாள். பாருங்கள் தயவு செய்து……”

“சரி… பார்க்கின்றேன்…”  போனோடு மெல்லமெல்லமாக எனது கால்கள் பலகணியை நோக்கி… அறையின் வெளிச்சம் கொஞ்சமாக வெளியைக் காட்டும் என்பது என் நினைப்பு.

முனகல்கள் மெதுவாக.

திறக்கின்றேன்.

கதவுத் திறப்பின் சாதுவான ஒலியைக் கேட்டு, போரிற்கு முகம் கொடுப்பதைப் போல ஓடின…. அவைகள் வெள்ளைப் பறவைகள்…. பாரிஸ் பறவைகள். Pigeons de Paris.

இன்று… முதல் தடவையாக  என் முன், என் அருகில்  பறவைகள்…. நிறைய… அவைகள் ஓடுகின்றன. ஒலியைக் கண்டு பயமா? அல்லது எனது அசைவைக் கண்டு பயமா?  அவைகளது ஓட்டத்தால் விழுந்த சில சிறகுகள் பலகணித்  தரையில்…  சிறிதான  வெள்ளை  ஈட்டிகளாக என் விழிகளின் முன்.

நான் பறவைகளை விரும்பியதுண்டு…. ஏன்  இவை எனது பலகணியை விட்டு ஓடின? இவை என்னை விரும்பவில்லையா? சில சிறகுகளுடன் எமது படுக்கை அறைக்கு வந்தேன்…

எனது மனைவி போனில் இருக்கின்றாள் என்பதும் எனக்கு மறந்து விட்டது. அதனைப் பார்த்தேன். அவள் இல்லை.

மீண்டும் அடித்தேன்.

“பார்த்தீர்களா?” அது எனது மனைவியின் குரலாக இருக்கவில்லை.

“சகுந்தலா! உங்களது நினைப்பே சரி. அங்கு புறாக்கள் இருந்தன, திறந்ததும்  ஓடிவிட்டன.”

“நீங்கள் அவற்றை விரும்புபவர் என்பதை நான் அறிவேன்.”

“ஆனால் அவை ஓடி விட்டன. எனது தூக்கம் அழிபட்டு துக்கம் நெருக்குகின்றது.”

“உங்களது துக்கத்தின் காரணம் புறாக்களின் பிரிவாக இருக்கலாம்…. என நான் நினைக்கின்றேன்.”

“உங்களது  நினைப்புச் சரி…”

“உங்களுக்கு என்னுடன் பேச நேரமிருக்கிறதா?”

“மாலதியுடன்  நீங்கள் பேச நிறைய இருக்கலாம்…”

“அவள்தான் என்னை உங்களுடன் பேசச் சொன்னாள்….  ஓர் சிறிய கதை சொல்கின்றேன்… இதனைக் கேட்பீர்களா?”

“நான் உங்களது கதைகளை ஓர் வெளியீடுகளிலும் பார்த்ததில்லை.”

“கதைகள் வெளியீட்டு நிறுவனங்களின் அடிமைகளா?”

அவள் சொன்னதின் பிரகாரம்  எனது குழந்தைப் பருவத்தில் எனக்குக்  கதைகளைச் சொல்லித் தந்தவை வெளியீடுகள் அல்ல எனும்  நினைவு என் முன் வந்தது. எனது அம்மம்மாவும், அப்பாவும், அம்மாவும். இவர்களது கதைகளுக்குள் நான் வாழ்ந்தேன்.

“உங்களது கதையைச் சொல்லுங்கள்.”

பிக்காஸோவின் செவிகள் திறபடுகின்றன

அவள் என்னிடம் கதை சொல்லும் முன்பு என் முன்னே  இளவரசிகளின் படங்கள். பார்வைகளால் கவ்வியவை. நிறையப் பெண்களைப் பார்க்கின்றேன்… அவர்கள்  இளவரசிகளாக இருக்கின்றார்கள்… இந்த விழி ரசிப்பில்லாமல் வாழ்வு என்னவாம்? குறைவு வாழ்வு! ரசிப்பையும் குறைப்பதா?

சில நாடுகளில் பெண்களைப் பார்க்கவே முடியாது. ஆம்! அவர்களது முகங்கள் முக்காடுகளுள் அடிமைகளாக உள்ளன  என்பது என் நினைப்பு. சில வேளைகளில் நிலவை உரித்து அதன் நிர்வாணத்தைப் புசிக்கும் எண்ணம் எனக்குள். இது எனது கவிதை வெறியின் துடிப்பான எண்ணமா?

வீதியில் கிடந்த ஓர் வெள்ளைப் புலவன் சில மாதங்களின் முன் என்னிடம் சொன்னான்: “ரசித்தல் புரட்சியின் எதிர் நோக்கு அல்ல.”

இவனது மொழி என்னுள் எப்போதும். இவன் தாடியில்லாத கிழவனாக இருந்தான். அவனோடு பேசவேண்டும் என்று எனக்குள் எப்போதும் விருப்பு இருந்தது. நான் பேசத்  தொடங்கிய  வேளைகளில் அவனது விழிகள் மூடப்பட்டபடி. அவனை நோக்கும் வேளையிலே ரசித்தல் என் முன் ஓர் வட்டமான படமாகும்.

அவள்…  அவளின் கதையைக் கேட்க எனது செவிகள்   பெரிதாகத் திறபடுகின்றன.

“எனது கதை பெரியது! நான் சுருக்கமாகவே உங்களுக்குச் சொல்வேன்.”

“இது இரவு நேரம். உங்களதும் எனது மனைவியினதும் விழிகள் தூக்கத்தால் முத்தமிடப்படலாம்… நான் சுருக்கமான கதைகளை வெறுப்பவன் அல்லன்.”

“தூக்கம் எங்களுக்குப் பிரச்சினையில்லை. நாங்கள் மீண்டும் நிறையப் பேசவேண்டும்…”

“வேறு நாளில் சொல்லலாமே?”

“இதை இந்தத் தினத்தில் சொல்வதுதான் என் விருப்பு…..  கேளுங்கள்….”

அவளது குரல்  எனது கதை ரசிப்பை ஊக்குவித்தது.

“எனது கதை இதுதான்… இது புறாவினதும், நான் பிரிந்த கணவனதும் கதையாக இருக்கலாம்….”

அவள் என்னைப் போலப் புறாக்களை விரும்புகின்றாளா? அவளா அவனா இந்த வெள்ளைப் பறவைகளை  விரும்பினர்? அல்லது இருவரும் அவைகளை விரும்பவில்லையா?

“நானும் அவரும் பெரிய கட்டிடத்தின் சில சிறு  அறைகளுள் தாம் ஒரு வருடம் வாழ்ந்தோம். பின்பு அவர் பேராசிரியர் ஆகியபின், நான் கேட்காமலேயே  பெரிய இருப்பிடத்தை எடுத்தார்… அங்கு பெரிய அறைகள்… நான் இப்போது சின்ன அறையுள்…,

“எமது அன்பு காதலில் தொடங்கியது. எனது சாதியும் அவரதும் ஒன்றல்ல. எமது சாதி எதிர்ப்பு எங்களது காதலில் உள்ளது. இந்த எதிர்ப்புகளில்தாம் எமது இதயங்கள் ஒட்டிக்கொண்டன. என்மீது அவர் சில கவிதைகளை எழுதியுள்ளார். அவை புரட்சிக் கவிதைகள்….”

சகுந்தலா எப்போது புறாமீது பேசுவாள் என்பதைக் கேட்க அவதியாக இருந்தேன்.

“புதிய இருப்பிடத்தின் முதலாவது பலகணிக் குரல்களை நான் கேட்டபோது காதுக்குள் இனிமை பாய்ந்தது. அவை புறாக்களின் குரல்கள். குளிர் தின மாலை நிறத்தை இருட்டெனப் புறாக்கள் கருதினவா? அவைகள் முனகின. இந்த முனகல்கள் எமது இரவு முனகல்கள் போல…  நான் பலகணியை மிகவும் ரகசியமாகத் திறந்தேன்… அவைகள்  ஓடிவிட்டன….,

“நான்  பலகணியில் நின்று இருட்டில் மறைந்த வெள்ளை நிறங்களை அவதானித்தேன். அவைகள் திடுதிப்பென ஓடியது  என்னைக் கவலைக்குள் தள்ளின…. நான் உள்ளே வந்தபோது அவர் என்னை முத்தமிட்டார்…

“சில கணங்களின் பின்னர் எமது பலகணிப் புறாக்கள்மீதும், அவைகள் வெளிப்படுத்திய முனகல்கள் மீதும், பின் எனக்குப் புறாக்களைப் பிடிக்கும் என்றும் சொன்னேன்….‘நல்ல விஷயம்’ எனும் பதில் அவரிடமிருந்து தூங்கலாக வந்தது….

“மறு நாள் நாம் கட்டிலுக்குச் சென்றோம்… ‘நீ பெரிய அழகி’ என்றார். இரவும் பகலும் என்னைப் பெருமைப் படுத்தும் போக்கு அவருக்குள்  உள்ளது. அந்தப் போக்கை நான் விரும்பாவிட்டாலும் வெளியே சொல்வதில்லை. இந்த இரவு என்னை எரித்தது. அவர் தூக்கத்தில். ஆம்! நான் அவரது உடலைத் தழுவினேன்… அசைவில்லை… பின் எனக்கும் தூக்கம்…..

“எனது தூக்கத்தை உடைத்தன முனகல்கள். பலகணியின் அருகில் மறைவாக நின்று புறாக்களின் தவிப்புகளைக் கேட்டேன். இந்தக் கணத்தில் எனது உடல் எரிந்தது. எனது கணவன் நான் கேட்கும் முனகல்களைக் கேட்கவேண்டும் என்ற வெறி… ஆம்! நாம்  புறாக்களாக ஆக வேண்டும்… முனகல்களைத்   தரவேண்டும்…

“உள்ளே வந்ததும்  முதலில் அவரது குறட்டையைத்தான்  கேட்டேன்.  எழுப்பவே முடியாது. அவரது இரவுகள் நிறையத்  தூங்குவதில் கழியும். அழிவன எனது உடல் விருப்புகள்……..”

அவளது கதை நீளமானது . அவளது துயரம் எனக்குள் பெரிய மழையின் கண்ணீராய் வீழ்ந்தன.

“அவருக்குப் புறாக்களில் விருப்பம் இல்லையா?” அமைதியாகக் கேட்டேன்.

“வேலைக்குப் போவதும், வருவதும், தனது ஆய்வு வேலைகளைக் கவனிப்பதும், பின் சாப்பிடுவதும், அதன் பின் ‘நீ அழகின் தேவதை’ என்றுவிட்டுக்  கட்டிலை முத்தமிடுவார். காமம் குடும்ப சாத்திரமாக உள்ளது என்பது அவருக்குத் தெரியாது. தூக்கமே அவரது மனைவி. அவரைப்  பிரியும் வரை அவர் பலகணிக்குள்  சென்றதில்லை. நான் இரவில் எனது  விருப்பத்துக்காகக் கத்துவதையும் அவர் கேட்டதில்லை……  உடல் அழியும்….. ஆனால் தற்காலிக இருத்தலில் அது  அழியவேண்டுமா?  மீண்டும் எனது பிரிவு மீது உங்களுக்குச் சொல்லவேண்டும் என நான் நினைக்கவில்லை.”

“நன்றி சகுந்தலா! உங்களது வாழ்வின் கொடுமையை விளங்க முடிகின்றது.  பிரிவின் பின் கொடுமையானது தனிமை வாழ்வு.”

“பிரிவு நீங்கள் சொல்வதுபோல கொடுமை. நான் இப்போது தனிமையில் இல்லை.”

“சிறப்பானது! நீங்களும் உங்கள் புதிய நண்பரும் எங்களது வீட்டுக்கு வரவேண்டும்…”

“புதிய நண்பரல்ல, நண்பி. அவள் இப்போது கனடாவில் தனது அண்ணனைக் காணச் சென்றுள்ளாள்!”

“அவள் வந்ததும் அவளுடன்  நீங்கள் எங்களது வீட்டுக்கு வரவேண்டும்!”

“மிகவும் நன்றி! வாழ்வு குறுகியது, எமது வாழ்வின் நிலைகள் பலவீனமானவை. நன்றி”.

தொடர்பு துண்டிக்கப்பட்டது

பிக்காஸோவும் பலகணியும்

காலை 3 மணி போல இருக்கும். எனது மனைவியும் அவளது சிநேகிதியும் விடியும்வரை பேசுவார்கள் போல இருந்தது.

எனக்குள் களைப்பு.  என்னைத் தூக்கம் அழைத்தது.

ஓர் சிறிய முனகல்…… பலகணியில்….

புறாக்களின் முதல் தொடர்புகளில் படங்களை எடுத்தேன். இப்போது கமெரா தேவை இல்லை. அவைகளைப் பார்க்க விரும்பினேன்.

முனகல்கள் பெருத்தன.

நான் கதவின் முன்.

திறப்பதா?

அவைகளது காம சங்கீதங்களை எனது பார்வை கெடுக்கும்.

அமைதியாக நான் வீழ்கின்றேன் எனது கட்டிலில்.

எனது தூக்கத்தைத் தடவுகின்றன முனகல்கள்.

(பின் குறிப்பு: இந்த முனகல்கள் பின்பு கத்தல்களாகி  எனது நித்திரையையும் பல வேளைகளில் குழப்புகின்றன.)


கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Kalamohan

(பி.1960) ஒரு தமிழ் எழுத்தாளர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.

இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.பிரஞ்சுமொழியில் புலமையுடையவர். இவரின் சில ஒட்டோவியம் புகலிட இதழ்களில் வெளிவந்துள்ளன. “தாயகம்”  சஞ்சிகையில் இவரின் பல கதைகள் வந்துள்ளன. அதே இதழில் பிரஞ்சுக் கவிதைகள் சிலவும் உள்ள
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty தோல்வியுற்ற ராஜ்ஜியம்

Post by வாகரைமைந்தன் Tue Nov 23, 2021 1:50 am

தோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு நதி இருந்தது.  தெளிவான நீரோடை அது. நிறைய மீன்களும் அதில் இருந்தன. பலவிதமான நீர்த்தாவரங்களும் அதில் வளர்ந்திருந்தன. மீன்கள் அத்தாவரங்களை உண்டன. அந்த மீன்கள் அங்கிருந்த ராஜ்ஜியம் தோல்வியடைந்ததா இல்லையாவென்பதைப் பற்றியெல்லாம் அக்கறை கொண்டிருக்கவில்லை. அது முடியாட்சியா அல்லது குடியாட்சியா என்பதெல்லாம் அவற்றுக்குத் தெரியாது. அவை வாக்களிப்பதுமில்லை, வரி செலுத்துவதுமில்லை. அதைப் பற்றி நமக்கும் எந்த அக்கறையுமில்லை. அவை அங்கு இருந்தன. அவ்வளவுதான்.

ஓடையில் என் பாதங்களைக் கழுவினேன். பனிக்கட்டி போல சில்லிட்டிருந்த தண்ணீரில் நொடிநேரத்துக்கு அமிழ்த்தி எடுத்ததற்கே பாதங்கள் சிவந்துவிட்டன. ஓடை நீரில் தோல்வியடைந்திருந்த அந்த ராஜ்ஜியத்தின் கோட்டைச் சுவர்களும் கோபுரமும் பிரதிபலித்தன. கோபுரத்தில் இன்னமும் பறந்துகொண்டிருந்த இருவண்ணக்கொடி காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. ஓடையைக் கடந்து செல்பவர்கள் அந்தக் கொடியைப் பார்த்து, “ஹே, அங்கே பார். அது தோல்வியடைந்த ராஜ்ஜியத்தின் கொடி“ என்று சொல்லிக்கொண்டு சென்றனர்.

க்யூவும் நானும் நண்பர்கள். அதாவது  கல்லூரி காலத்தில்  நண்பர்களாக இருந்தோம். நட்புத் தொடர்பு விட்டுப்போய் பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதனால்தான் இறந்தகாலத்தில் குறிப்பிடுகிறேன். எப்படியிருந்தாலும் நாங்கள் நண்பர்களாக இருந்தவர்கள்.

க்யூவைப் பற்றி யாரிடமாவது சொல்வதாக இருந்தால் – அதாவது, அவன் எப்படிப்பட்டவன் என்று விளக்குவதாக இருந்தால் – என்னால் பேசமுடியாமல் போய்விடும்.  எதையும் விவரித்துச் சொல்வதற்கு எப்போதுமே என்னால் முடிவதில்லை. இப்படியொரு குறை என்னிடம் இருந்திருக்காவிட்டாலும்கூட க்யூவைப் பற்றி சரியாக வர்ணிப்பதென்பது பெரும் சவாலாகவே இருந்திருக்கும். அவனைப் பற்றி விளக்கத்தொடங்கினாலே எனக்குள் ஆழத்திலிருந்து எழும் மனமுறிவுணர்ச்சி என்னை முடக்கிப்போட்டுவிடுகிறது.

என்னால் இயன்றளவுக்கு எளிமையாக விளக்க முயல்கிறேன்.

க்யூவுக்கும் எனக்கும் ஒரே வயது. ஆனால் அவன் என்னைவிட ஐநூற்றி எழுபது மடங்கு அழகானவன். அவனுடைய குணாம்சங்களும் இனிமையானவை. தன்னகங்காரமோ தற்பெருமையோ அவனிடம் எப்போதுமே இருந்ததில்லை. அவனிடம் யாராவது அறியாமல் தவறிழைத்துவிட்டாலும் அவன் கோபப்பட்டதில்லை. “ஓ, அதனாலென்ன பரவாயில்லை. இதைப்போல நானே தவறு செய்திருக்கிறேன், “ என்பான். ஆனால் அவன் யாருக்கும் எந்தத் தவறும் இழைத்ததாக நான் கேள்விப்பட்டதேயில்லை.

அவன் மிகவும் ஒழுங்காக வளர்க்கப்பட்டவன். அவனுடைய தந்தை ஒரு மருத்துவர். ஷிகோகு தீவில் அவருக்கு சொந்தமாக மருத்துவமனை இருந்தது. அதனால் அவனுக்கு பாக்கெட் மணிக்குப் பஞ்சமே இருந்ததில்லை. ஆனால் அவன் வீணாகச் செலவழிப்பவனுமில்லை. அழகாக உடையணிவான். மிகச் சிறந்த விளையாட்டு வீரன். பள்ளிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டிகளில் உயர்நிலைப் பள்ளிக்காக விளையாடினான்.

நீச்சல் அவனுக்குப் பிடிக்கும். வாரத்துக்கு இருமுறை நீச்சல் குளத்துக்குச் செல்வான். அரசியலைப் பொறுத்தவரை அவன் ஒரு மிதமான தாராளவாதி. அவன் வாங்குகின்ற மதிப்பெண்கள் முதல்தரமானவையாக இல்லாவிட்டாலும் திருப்திகரமாகவே இருக்கும். தேர்வுகளுக்காக அவன் தீவிரமாகப் படிக்க மாட்டான். ஆனாலும் எந்த வருடத்திலும் அவன் தோல்வியடைந்ததேயில்லை. வகுப்பில் பாடம் நடக்கும்போது அதை ஒழுங்காக கவனிப்பவன் அவன்.

பியானோ வாசிப்பதில் ஆச்சரியகரமான திறமை கொண்டவன். பில் ஈவான்ஸ், மொஸார்ட் இசைத்தட்டுகள் நிறைய வைத்திருந்தான். அவனுக்கு பால்ஸாக், மாப்பசான் என்று பிரெஞ்சு எழுத்தாளர்களைப் பிடிக்கும்.   எப்போதாவது கென்ஸாபுரோ ஓ வின் நாவலையோ, அல்லது மற்றவர்களுடைய புத்தகங்களையோ படிப்பான். அவனுடைய விமர்சனங்கள் எப்போதுமே மிகத் துல்லியமாக இருக்கும்.

பெண்கள் மத்தியில் அவன் பிரபலமாக இருந்தது வியப்பல்ல. ஆனால் அவன் “யாரை வேண்டுமானாலும் என் வலையில் வீழ்த்திவிடுவேன்’ என்கிற ரகமல்ல. அவனுக்கு நிரந்தரமாக ஒரு சினேகிதி இருந்தாள். நகரத்தில் இருந்த ஒரு நவநாகரிகக் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படிக்கும் ஓர் அழகான பெண்ணான அவளோடு ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் வெளியே செல்வான்.

கல்லுரியில் நான் அறிந்திருந்த க்யூவைப் பற்றி எனக்குத் தெரிந்தவை இவ்வளவுதான். சுருக்கமாகச்சொன்னால் குறைகளேயற்ற பிரகிருதி அவன். அப்போது நாங்கள் வசித்துவந்த அடுக்ககத்தில் எங்கள் வீட்டுக்கு அடுத்ததில் க்யூ இருந்தான். பக்கத்து வீட்டிலிருந்து உப்பு, சாலட்டுக்கு டிரஸ்ஸிங் என்று கடன் வாங்குவதில் ஆரம்பித்த நட்பு சீக்கிரமே பலப்பட்டு எப்போதும் ஒருவர் வீட்டில் மற்றவர் என்று எல்லா நேரமும் இசைத் தட்டுகள் கேட்டுக்கொண்டு, பியர் அருந்திக்கொண்டு  ஆட்டம் போட்டுக்கொண்டிருப்போம்.

ஒருமுறை நான், என் சினேகிதி, க்யூ, அவனுடைய சினேகிதி எல்லோரும் ஒன்றாக கமாகுரா கடற்கரைக்குச் சென்றோம். அவ்வளவு இணக்கமாக எல்லோரும் ஒன்றாக இனிமையாகப் பொழுதைக் கழித்தோம். பிறகு, எனது கடைசி வருடப் படிப்பின்போது கோடை விடுமுறையில் நாங்கள் வீடு மாற்றிச் சென்றோம். அத்துடன் தொடர்பு அறுந்தது.

அடுத்தமுறை அவனைப் பார்த்தபோது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்திருந்தன. அலாஸ்கா மாவட்டத்தில் இருக்கும் ஒரு பகட்டான ஹோட்டலின் நீச்சல் குளத்தின் ஓரத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்திலிருந்த மடக்கு நாற்காலியில் க்யூ உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் நீச்சல் உடையில் ஒரு மிக அழகான பெண்.

பார்த்தவுடனே அது க்யூ என்று தெரிந்துவிட்டது.  எப்போதும்போல அழகாகவே இருந்தான். முப்பது வயதை கடந்திருப்பதால் முன்பு அவனிடம் தென்படாத ஒரு கண்ணியத் தோற்றம் இப்போது வந்திருந்தது. அவனைக் கடந்து செல்லும் இளம் பெண்கள்  திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தனர்.

அவனுக்கருகில் நான் உட்கார்ந்திருப்பதை அவன் கவனிக்கவில்லை. நான் ஒரு சாதாரணத் தோற்றம் கொண்ட ஒருவன். போதாக்குறைக்கு வெயில்கண்ணாடியும் அணிந்திருந்தேன். அவனிடம் பேச்சு கொடுக்கவேண்டுமாவென்று உறுதியாக முடிவெடுக்க இயலவில்லை. கடைசியில் வேண்டாமென்று தீர்மானித்தேன். அவனும் அந்தப் பெண்ணும் தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தனர்.

அதில் குறுக்கிடுவதற்கு தயக்கமாக இருந்தது. மேலும் அவனும் நானும் பேசிக்கொள்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை. “உனக்கு உப்பு கடன்  தந்திருக்கிறேன், ஞாபகம் இருக்கிறதா?” “ஏய், ஆமாம். நான் ஸாலட் டிரெஸ்ஸிங் ஒரு பாட்டில் கடன் வாங்கியிருக்கிறேன்.” அதற்குமேல் பேசுவதற்கு விஷயம் இருக்காது.  எனவே வாயை மூடிக்கொண்டு புத்தகத்தில் ஆழ்ந்தேன்.

ஆனாலும் க்யூவும் அவனுடைய அழகான சினேகிதியும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்கும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதோ சிக்கலான விஷயம் என்றுமட்டும் புரிந்தது. படிப்பதைத் துறந்துவிட்டு காதுகளைத் தீட்டிக்கொண்டேன்.

“அதெல்லாம் முடியாது,” என்றாள் அந்தப் பெண். “விளையாடுகிறாயா?”

”சரி, சரி, “ என்றான் க்யூ. “ நீ என்ன சொல்கிறாயென்று எனக்குத் தெரிகிறது. ஆனால் என் பக்கத்திலிருந்தும் இதை நீ பார்க்கவேண்டும். என் விருப்பத்தின் பேரில் இதை நான் செய்யவில்லை. மாடியில் இருக்கிறார்களே அவர்கள்தான் காரணம். அவர்கள் முடிவெடுத்திருப்பதைத்தான் நான் உன்னிடம் சொல்கிறேன். அதனால், நீ என்னை அப்படிப் பார்க்கவேண்டாம்.”

“ஆம், சரிதான்,” என்றாள்.

க்யூ நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.

அவர்களுடைய நீண்ட உரையாடலை – புரியாத இடங்களை என் கற்பனையால் நிரப்பி – தொகுத்துச் சொல்கிறேன். க்யூ ஏதோவொரு தொலைக்காட்சி நிலைத்துக்கோ, அல்லது வேறெந்த நிறுவனத்துக்கோ இயக்குனராக இருப்பதாகத் தெரிந்தது. அந்தப் பெண் ஓரளவுக்குப் பிரபலமான பாடகியோ, நடிகையோ போல. அவளை எந்த நிகழ்ச்சியிலிருந்தோ, அவள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்லது அவதூறு காரணமாக நீக்கிவிட்டிருக்கிறார்கள். அல்லது அவளுடைய புகழ் சரிந்துவிட்டிருப்பதாலும் இருக்கலாம்.

அவளிடம் இத்தகவலைத் தெரிவிக்கும் சங்கடமான வேலையை தினசரி நிர்வாகப் பொறுப்பை கவனித்துக்கொள்பவன் என்ற முறையில் க்யூவின் தலையில் கட்டியிருக்கிறார்கள். கேளிக்கை ஊடங்களின் செயல்பாடுகள் பற்றி அதிகம் எனக்குத் தெரியாது. அதனால் உண்மையில் நடந்தது என்னவாக இருக்குமென்று நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஓரளவுக்கு நான் சரியாகவே ஊகித்திருப்பதாக நினைத்தேன்.

என் காதில் விழுந்ததை வைத்துப் பார்க்கும்போது க்யூ அவனிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை நேர்மையாக நிறைவேற்றியிருப்பதாகவே கருதினேன்.

“விளம்பரதாரர்கள் இல்லாமல் நம்மால் பிழைத்திருக்க முடியாது. இதை நான் சொல்லி நீ தெரிந்துகொள்ளவேண்டியதில்லை,” என்றான்.

’’அதாவது இந்த விஷயத்தில் உங்களுக்கு எந்தவிதமான பங்கும், பொறுப்பும் இல்லை என்கிறீர்களா?”

“இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் உண்மையில் என்னால்  செய்யக்கூடியது அதிகம் இல்லை.”

அதன் பிறகு அவர்களின் உரையாடல் வேறொரு முட்டுச்சந்துக்குத் திரும்பியது. அவளுக்காக அவன் எந்தளவுக்கு சிபாரிசு செய்திருக்கிறான் என்று கேட்டாள். க்யூ தன்னால் முடிந்த அளவுக்கு அவளுக்காகப் பேசிப்பார்த்ததாகச் சொன்னான். ஆனால் அதையெல்லாம் இப்போது அவனால் நிரூபித்துக்கொண்டிருக்க முடியாதென்றான். அவள் நம்ப மறுத்தாள்.

அவன் சொல்வதை என்னாலும் நம்ப முடியவில்லைதான். அவன் விஸ்தாரமாக தனது முயற்சிகளை எடுத்துச் சொல்லச்சொல்ல அவற்றின்மீது பொய்யின் புகைமூட்டம் கவிந்துகொண்டே வந்தது. க்யூவைச் சொல்லிக் குற்றமில்லை. இதற்காக யாரையும் குற்றம் சொல்லமுடியாதுதான். அதனால்தான் இந்த விவாதம் முடிவேயில்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது.

அந்தப் பெண்ணுக்கு க்யூவின் மீது எப்போதுமே பிரியம் இருந்துவந்திருப்பதாகத் தெரிந்தது. இந்தப் பிரச்சனை தலையெடுப்பதற்கு முன்புவரை அவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருந்திருக்கவேண்டும். அதனால்தான் இப்போது அவளுக்கு இந்தளவுக்கு கோபம் வந்திருக்கிறது. கடைசியில், அவளே சமாதானத்துக்கு இறங்கி வந்தாள்.

“ஓ.கே. போகட்டும். எனக்கு ஒரு கோக் வாங்கித் தருவீர்களா?”

அதை கேட்டதும் க்யூ நிம்மதிப் பெருமூச்சோடு எழுந்து குளிர்பானங்கள் விற்கும் இடத்தை நோக்கிச் சென்றான். அந்தப் பெண் வெயில் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு விறைப்பாக உட்கார்ந்துகொண்டாள். நான் கையிலிருந்த புத்தகத்தில் ஒரே வரியை அதற்குள் சில நூறு முறை திரும்பத் திரும்ப படித்துவிட்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் க்யூ கையில் இரண்டு பெரிய காகிதக் கோப்பைகளுடன் திரும்பி வந்தான். ஒன்றை அவளிடம் தந்துவிட்டு, தனது மடக்கு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். “இதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதே. விரைவிலேயே உனக்கு _ “

அவன் அந்த வாக்கியத்தை முடிப்பதற்கு முன், அந்தப் பெண் தன் கையிலிருந்த கோக்கை அப்படியே அவன் முகத்தில் விசிறியெறிந்தாள். மூன்றில் இரண்டு பங்கு கோக் அவன் முகத்திலும் ஒரு பங்கு என் மீதும் விழுந்து வழிந்தது. எதுவும் பேசாமல் அவள் எழுந்து நின்றாள். தன் பிகினியின் அடிப்பாகத்தை சற்று இழுத்துவிட்டுக் கொண்டாள். இலேசாகக்கூட பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றாள். க்யூவும் நானும் அடுத்த பதினைந்து விநாடிகளுக்கு திகைத்து, உறைந்து, அமர்ந்திருந்தோம். அருகிலிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியோடு எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

க்யூதான் முதலில் சமாளித்துக்கொண்டான். “ஸாரி,” என்று ஒரு டவலை என்னிடம் நீட்டினான்.

“பரவாயில்லை,” என்றேன். “போய் குளித்துக்கொள்கிறேன்.”

சற்று எரிச்சலோடு டவலை எடுத்துக்கொண்டு தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“உங்கள் புத்தகத்துக்கான தொகையாவது தந்துவிடுகிறேன்,” என்றான். உண்மையில் புத்தகம் முழுசாகவே நனைந்துவிட்டிருந்தது. ஆனால் அது ஒரு மலிவுப்பதிப்பு புத்தகம்தான். அப்படியொன்றும் சுவாரஸ்யமான புத்தகமும் அல்ல. இந்தப் புத்தகத்தின் மீது யாராவது கோக்கைக் கொட்டி என்னை படிக்கவிடாமல் செய்துவிட்டால், அது அவர்கள் எனக்கு செய்த பெரிய உபகாரம் என்றே சொல்வேன். இதை அவனிடம் சொன்னபோது அவன் முகம் தெளிந்தது.. எப்போதும்போல அவனது அபாரமான புன்னகை முகத்தில் மலர்ந்தது.

க்யூ அத்துடன் பேச்சை முடித்துக்கொண்டு, மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்டு கிளம்புவதற்கு எழுந்தான். என்னை கடைசிவரை அடையாளம் கண்டுகொள்ளவேயில்லை.

இந்தக் கதைக்கு ‘தோல்வியடைந்த ராஜ்ஜியம்’ என்று தலைப்பிட்டதற்குக் காரணம், அன்று மாலை செய்தித் தாள்களில் தோல்வியடைந்த ஆப்பிரிக்க சாம்ராஜ்ஜியம் ஒன்றைப் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்ததுதான். “ஒரு மகத்தான சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதென்பது ஒரு இரண்டாந்தரக் குடியரசு வீழ்வதைக் காட்டிலும் துயரமானது” என்றது அக்கட்டுரை.

–  ஹாருகி முரகாமி-

ஹாருகி முரகாமி ( பிறப்பு:  ஜனவரி 12, 1949 ) ஜப்பானிய எழுத்தாளர்.  சிறுகதை, நாவல்.கட்டுரை,மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பலவடிவங்களிலும் பன்முகம் கொண்டவராக திகழ்கிறார்.  ஜப்பானியப் பண்பாட்டின் வெளிப்பாடாக மட்டுமின்றி அவர் படைப்புகளின் பார்வை உலகளாவியதாக இருக்கிறது. தனிமனித சுயத்தின் இயல்பு என்ன? வெற்றி, மகிழ்ச்சி ஆகியவைகளுக்கு உலகளாவிய விளக்கம் என்ன? என்று இது போன்ற வினாக்களை எழுப்பிச் சிந்திக்க வைப்பதாக அவர் படைப்புகள் அமைகின்றன. Norwegian Wood , Kafka on the Shore,  South of the Border West of the Sun ஆகியவை இவருடைய படைப்புகளில் சிலவாகும். Franz Kafka Prize ,Hans Christian Andersen Literature Award. Jerusalem Prize  உள்ளிட்ட பல  சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார்.  இவரது புத்தகங்கள் மற்றும் கதைகள் ஜப்பானிலும் சர்வதேச அளவிலும் சிறந்த விற்பனையாகும் நூல்களாக உள்ளன, இவரது படைப்புகள் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான பிரதிகள் அவரது சொந்த நாட்டிற்கு வெளியே விற்கப்படுகின்றன.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty புதிய கோணங்கி

Post by வாகரைமைந்தன் Fri Nov 26, 2021 9:40 pm

ராமானுஜம் அலுவலகம் கிளம்ப சைக்கிளை சாய்த்து வலதுகாலால் பெடலைத் திருப்பி வசதியாக ஏறி அமர்ந்தபோது அவர் மனம் ’ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…’ என்றது.

இது மட்டுந்தானா இன்னும்
இருக்குது சாமி…

கமலா, டேப் ரிகார்டரை சின்னதா வெச்சுக்கச் சொல்லு ரமாவை! தெரு முழுக்க அலர்றது.”

“சரின்னா. நீங்க சகுனம் பார்த்து ஜாக்ரதையா கிளம்புங்கோ. அமாவாசை. மத்யானம் சாப்பாட்டுக்கு வழக்கம்போல வந்துருவேள்ல? இல்ல ஏதாவது லோன் இன்ஸ்பெக்*ஷன் அதுஇதுன்னு–”

“இன்னிக்கு அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது. ரெண்டு மணிக்கு பாங்க் முடிஞ்சதும் நேரே வரவேண்டியதுதான். வரட்டுமா?”

தெருமுனையில் திரும்பி நாலைந்து டீக்கடைகளையும் ஒன்றிரண்டு பரோட்டா விடுதிகளையும் கடந்து ’தம்’ பிடித்து தார் ரோட்டுக்கு ஏறி வசதியாக நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு இருபுறமும் பின்னுக்கு விரையும் மரங்களையும் பின்னால் மெல்ல நெளியும் வயல்வெளிகளையும் காலடியில் நழுவும் தார் ரோட்டின் செழுமையையும் ரசித்தபடி வழுக்கிக்கொண்டு முன்னேறியபோது மனம் மீண்டும் அந்தப் பாடலை முணுமுணுத்தது.

சென்ற வாரம் ஈச்சங்குடி கீற்றுக் கொட்டகையில் சாய்வு நாற்காலியில் வசதியாக அமர்ந்து பார்த்த அந்தப் படத்தின் குறிப்பிட்ட பாடல் காட்சி மனத்திரையில் விரவியது.

சப்பாணியின் அபிநயங்களும் ஶ்ரீதேவியின் சிரிப்பலைகளும் அவர் உற்சாகத்தைத் தூண்ட, ’கிட்டத்தட்ட பாரப்பா பழனியப்பா மெட்ட மாத்திப்போட்ட மாதிரி இருக்கு’ என்று நினைத்துக்கொண்டார்.

நீண்டநாள் கழித்து ஒரு மாறுதலுக்காகப் பார்த்த அந்தப் படத்தின் பாதிப்பில் மனதில் புதிய கோணங்கள் விரிய,

“பாரப்பா பழனியப்பா,
பட்டணமாம் பட்டணமாம்!
ஊரப்பா பெரியதப்பா
உள்ளந்தான் சிறியதப்பா
கதையில்ல சாமி இப்போ
காணுது பூமி!”

என்று இலங்கை வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெள்ளவத்தை சுப்பிரமனியன்போல் குரல்கொடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடம் வந்ததும் சைக்கிள் தானாக இடப்புறம் ஈச்சங்குடி செல்லும் ஒற்றையடிப் பாதையில் திரும்ப, மணல் பாதையின் சரிவில் அனிச்சையாக இறங்கியவர் எதிரில் சட்டென்று விஸ்வரூபம் எடுத்த இரண்டு கழுதைகள்மேல் மோதவிருந்து சமாளித்து ஹாண்டில்பாரை ஒடித்து பிரேக் பிடிக்காமல் தடுமாறி விழுந்தார்.

கழுதைகள் மிரண்டு நாலுகால் பாய்ச்சலிட, ஒட்டிவந்த சிறுவன் திகைத்துநின்று, “என்ன சாமி, பாத்து வரக்கூடாது?” என்றான்.

புழுதியைத் தட்டியபடி எழுந்து தன் பஞ்சகச்ச வேஷ்டியையும் சைக்கிளையும் ஒரே சமயத்தில் சரிசெய்ய முயன்றவர் குழப்பத்தில், “ஏண்டா, நீயும் பாத்து வந்திருக்கலாமில்ல?” என்றவாறே தலையை உயர்த்தியபோது பையன் கழுதைகள் பின்னால் இரண்டுகால் பாய்ச்சலிட்டுக்கொண்டிருந்தான்.

ஈச்சங்குடியின் சிக்கனமான கடைத்தெருவின் முனையிலிருந்த வங்கியின்முன் அவர் நின்றபோது கதவு பூட்டியிருந்தது.

’எங்க போய்ட்டான் இந்த வடிவேலு? கார்த்தால ஏழுமணிக்கே வந்து சாவியை வாங்கிண்டுபோனானே?’ என்ற நினைவுடன் அவர் வங்கியைத் திறந்தபோது கைக்கடிகாரம் எட்டு-நாற்பது காட்ட, அந்தப் பாடலின் கடைசி அடிகள் காற்றில் மிதந்து வந்தன.

மெயினைப்போட்டுவிட்டு அவர் ஹால் கதவைத் திறந்தபோது மின்விசிறிகள் இரண்டு வேகம்பிடித்துச் சுழல, தரையில் சிதறியிருந்த கசங்கிய காகிதங்கள் வட்டமடித்து சலசலக்க, கவுண்டர்மேலிருந்த படிவங்களும் ஸ்பைக்கில் செருகியிருந்த அடிக்கட்டைகளும் காற்றில் படபடத்தன.

மனம் அலுத்துக்கொண்டாலும் கைகள் பொறுமையாக ஒவ்வொரு ஸ்விட்ச்சாக அணைக்க, காஷியர் மேசைமேல் திறந்தபடி இருந்த ஜெனரல் லெட்ஜர் வகையறாக்களை சுமந்தபடி தன் அறைக்கு வந்தார்.

மேசையில் படிந்திருந்த ஒருநாள் புழுதிப்படலத்தை சட்டை செய்யாமல் அமர்ந்து அவர் லெட்ஜர்களைப் பிரித்தபோது மலேசியா வாசுதேவன், ’தன ததரின ததரின’ என்றார். கூடவே கழுதை ஒன்று கத்தியது.

மீண்டும் வாசுதேவன், ’தன ததரின ததரின’ என்க, மீண்டும் கழுதை கத்தியது. கடைசியில் ’ப்ரூ…’ என்று முடித்தது. தொடர்ந்து விவிதபாரதியின் மணி ஒலிக்க ஓர் அரசு வங்கி தன் விளம்பரத்தைத் தொடங்கியது.

ராமானுஜம் அனிச்சையாக இவற்றைக்கேட்டு ரசித்தபடி ’டோட்டலை’ சரிபார்த்தபோது மறுபடியும் கழுதை கத்தியது. ’சரிதான், பாடலை யாரோ டேப் செய்துவிட்டு மறுபடியும் போட்டுப் பார்க்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டார்.

இம்முறை கழுதையின் குரல் கொஞ்சம் பலமாக, அதுவும் மிக அருகில் ஒலித்தபோது திடீரென்று நினைவுக்குவந்து திடுக்கிட்டார்!

ஓசையுடன் பூட்டுக்களைத் திறந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக பின்கட்டுக்குச் சென்று பார்த்தபோது அந்தத்தூண் வெறுமையாக் காட்சியளித்தது.

’இதென்ன சோதனை!’ என்று திரும்பியபோது ’ஸ்ட்ராங் ரூம்’ எதிரில் ’ரெகார்ட் ரூமி’லிருந்து அந்த ஒலி வருவதைக் கவனித்தார்.

பரபரப்புடன் விளக்கைப்போட்டுப் பார்த்தபோது பூட்டிய அறையின் உள்ளிருந்து ஜன்னல் கம்பிகளின் வழியே மூக்கை நீட்டியபடி ஒரு கழுதை இவரைப்பார்த்து ’ப்ரூ…’ என்றது! தோழமையுடன் கால்களைப் பரப்பிக் காதுகளை உயர்த்தியது.

கண்களில் பயத்துடன் கனக்கும் இதயத்துடன் அவர் கழுதையைத் தாண்டிப் பார்வையை ஓடவிட்டார்.

வழக்கமாத் தரையில் படிவங்களும், சலான்களும், அவிழ்க்கப்பட்ட வவுச்சர் கட்டுகளும், இன்னபிற காகிதங்களும் இறைந்து காணப்படும் ’ரெகார்ட் ரூம்’ துடைத்து மெழுகியதுபோல் காட்சியளித்தது! ஓரத்தில் கள்ளிப் பெட்டிகலின்மேல் அடுக்கியுருந்த பழைய லெட்ஜர்களில் ஒன்றிரண்டு பிரிந்துகொண்டு இவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கும்போதும் பக்கங்கள் குறைந்து கிழிந்து காணப்பட்டன.

சட்டென்று மூண்ட கோபாக்னியில் அந்தக் கழுதையை எரித்துவிடுபர்போல் பார்த்தவர், சாவியைத்தேடிக் கிடைக்காமல், சாவியை அவர் வீட்டு அலமாரியில் மறதியாக இடம்மாறி வைத்தது நினைவுக்கு வர, ராமானுஜம் ஓர் உத்வேகத்துடன் பாய்ந்து ஜன்னல் கம்பிகளில் கைவிட்டுக் கழுதையின் தலையைப்பற்ற முயன்று காதுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

பின்னர் அவர் ஒரு தேர்ந்த மல்யுத்த வீரர்போல் சட்டென்று கையை விலக்கிக் கழுதையின் பிடரியில் பற்றி அங்குக் குறுக்கிட்ட கயிற்றைப் பிடித்திழுத்து ஜன்னல் கம்பிகளில் தறிநெய்து இறுக்கமாகக் கட்டினார்.

கழுதையால் ஏற்பட்ட கோபம் ’அந்த மடக்கழுதை’ வடிவேலு பக்கம் திரும்ப அவர் மூச்சுவாங்க ஹாலுக்கு வந்தபோது சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களில் அதே கழுதை ’போஸ்’ கொடுத்துக்கொண்டிருக்க, சலவைத்தொழிலாளி ராஜு ஓர் அசட்டுப் புன்னகையுடன் மத்திய மக்கள் நலத்துறை அமைச்சரிடம் கடன் உதவிக்கான காசோலையை வாங்கிக்கொண்டிருந்தான். அருகில் வாயத்திறந்துகொண்டு ராமானுஜம்.

அப்போதய அவசர நிலையிலும் அந்தக் காட்சி மனதில் சில வினாடிகள் ஓட அவர் தனக்குள் புன்னகைத்துக்கொண்டார்.

“…அதிலும் குறிப்பாக இந்த வங்கிக்கிளையின் மேலாளர் திரு. ராமானுஜம் அவர்கள் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கருதி, சலவைத்தொழிலாளர்கள் மிகுந்துள்ள இந்தக் கிராமத்தில், கறவை மாடுகளுக்கும் காளை மாடுகளுக்குமே கடன் வழங்கி அனுபவப்பட்ட வங்கியில் இப்போது கழுதைகள் வாங்கவும் கடனுதவி அளிக்க முன்வந்து மேற்கோண்ட முயற்சிகள் பல்லாண்டுகாலம் நினைவுகூரத்தக்கன…” என்று தொகுதி எம்.எல்.ஏ. முகவுரை கூறி ஆரம்பித்துவைக்க,

அடுத்துப் பேசிய ராமானுஜம் அந்தக் கிராமத்தை பாரதியாரின் ’புதிய கோணங்கி’ பாடலில் உள்ள வேதபுரத்துக்கு ஒப்பிட்டு, அரசாங்க ஆதரவில் அவருடைய வங்கி மேற்கொண்ட முயற்சிகளால் “தரித்திரம் போகுது; செல்வம் வருகுது; … வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்; சாத்திரம் வளருது; சாதி குறையுது; நேத்திரம் திறக்குது; நியாயம் தெரியுது” என்றெல்லாம் மளையாள பகவதியை விளித்துக் குறிகூறிக் கரவொலிகள் பெற,

அந்தக் கடன் வழங்கு விழா கோலாகலமாக நடைபெற்று, மத்திய அமைச்சர் கழுதைகளையும் காசோலைகளையும் கடன்தாரர்களுக்குத் தாரைவார்க்க, தொழிலாளி ராஜு மேடைக்குத் தன் மனைவி மற்றும் கழுதையுடன் வந்து காசோலையைப் பெற்றுக்கோண்டபோது ராமானுஜம் அடித்த ’ஜோக்’கில் பந்தல் அதிர்ந்தது.

“ராஜு, செக்கை ஜாக்கிரதையா வாங்கி பக்கத்தில உன் சம்சாரத்துக்கிட்ட கொடு. நீ பாட்டுக்கு ஞாபகமறதியா கழுதைகிட்ட கொடுத்திடாதே!”

மத்திய அமைச்சர் அந்த ’ஜோக்’கை மொழிபெயர்ப்பில் அறிந்து (“…மிலான்கோ அப்னி பத்னிகேபாஸ் தேனா…கத்தேகேபாஸ் நஹி!) ’வாவ், வாவ்!’ என்று உரக்கச் சிரித்தது ராமானுஜத்துக்குப் பெருமையாக இருந்தது.”

இப்போது வெறுப்பாக இருந்தது. இன்று அதே ராஜுவும் அவன் சகாக்கள் பலரும் தாம் வாங்கிய கடன்தொகையில் பெரும்பகுதியைத் தவணைக்காலம் முடிந்தும் திரும்பச் செலுத்தாமல் நாள் கடத்த, வங்கி நடவடிக்கைகளின் முதல்படியாக அவர் அவனுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் விட்டும் பயனில்லாது போகவே, ராஜுவின் கழுதையைப் பறிமுதல் செய்து வங்கியில் கட்ட ஏற்பாடு செய்தார்.

நேற்று மாலை அவர் மேற்பார்வையில் மெஸஞ்ஜர் வடிவேலு தாழ்வாரத்தூணில் கட்டிய கழுதை எப்படி ரெகார்ட் அறைக்குள் நுழைந்தது என்று புரியவில்லை.

ஏற்கனவே அவரிடம் பலமுறை தகராறு செய்துவிட்டு யூனியன் தயவால் அந்தக் கிளையில் ஒட்டிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு இம்முறை சரியான பாடம் கற்பிக்கத் தீர்மானித்து அவர் ஒரு ’மெமோ டைப்’ செய்யத்தொடங்கினார்…

“ஏண்டா அறிவுகெட்ட கழுதை!” என்றான் யூனியன் செகரட்டரி மாணிக்கம்.

“என்னையாண்ணே?” என்றான் வடிவேலு.

“இல்ல, ஒம்பக்கத்துல நிக்கிற அந்த நாலுகால் ஜந்துவை! மடையா, அப்பிடி என்னாடா ஞாபகமறதி? ரெகார்ட் ரூம்குள்ளாற கழுதை இருக்கறதுகூடத் தெரியாம எப்பிடிப் பூட்டிக்கிட்டுப்போவே? இல்ல வேணும்ட்டே செஞ்சியா?”

“நான் ஏன்ணே வேணும்ட்டு செய்யறேன்? இந்தக் கழுதயத் தாவாரத்லதாண்ணே கட்டிப்போட்டேன்! எப்படியோ கயித்த அறுத்துக்கிட்டுவந்து இந்த ரூம்ல நுழைஞ்சிருச்சு, நானும் கவனிக்கலே! இப்பப் பாருங்க அவ்வளவு வவுச்சரும் காலி! எஸ்.பி., கரண்ட் அகவுண்ட் லெட்ஜர்லாம்கூட வாய்வெச்சிருச்சு அண்ணே! அய்யரு என்னத் தொலச்சிட்டாரு! ஏற்கனவே அவருக்கு எம்மேல ஒரு கண்ணு…”

மாணிக்கம் கழுதையின்மேல் விழிகளை நிறுத்தி சில வினாடிகள் யோசித்தான். பின் சந்தேகத்துடன் கூடத்துக்கு நகர வடிவேலு பின்தொடர்ந்தான்.

“இங்க பாருங்கண்ணே, அய்யரு மேசைமேல ஜீயெல்! ஏற்கனவே வந்துட்டாரு போல! கழுதையை அவர்தான் கண்டுபிடிச்சு ஜன்னலோட கட்டியிருக்கணும். ஏன்னா ஸ்வீப்பரம்மா இன்னிக்கும் வந்தமாதிரித் தெரியல, பாருங்க தரையெல்லாம் குப்பை. ரெகார்ட் ரூம் சாவியைக் கொண்டார மறந்துட்டுத்தான் வூட்டுக்குத் திரும்பப்போயிருக்காரோ என்னமோ? நல்லவேளை, நாம அவர் இருக்கும்போது வந்து மாட்டிக்கல! இப்ப அவர் மறுபடி வர்றதுக்குள்ளாற ஏதாச்சும் செய்யுங்கண்ணே!” என்று கூறிவிட்டுத் திரும்பிய வடிவேலு, மாணிக்கம் கையில் ஒரு புதிய ’டைப்ரைட்டர் கார்பனை’ வைத்துக்கொண்டு குழல் விளக்கொளியில் படித்துக்கொண்டிருப்பதுகண்டு திடுக்கிட்டான்.

“அய்யரு ரொம்பக் காட்டமாத்தான் எழுதியிருக்காரு”, என்றான் மாணிக்கம்.

“என்னண்ணே மெமோவா?”

“இல்ல வாழ்த்துமடல்! உன்மேல ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு கேட்டிருக்கார்.”

“இப்ப என்ன செய்யறது மாணிக்கண்ணே?”

மாணிக்கம் சிகரெட் பற்றவைத்துக்கொண்டு உற்சாகமாகப் புகையை அவன்மேல் ஊதிவிட்டுக் கூறினான்.

“ஒண்ணும் செய்யவாணாம். இந்தக் கழுதையை உடனே அவுத்து பின் வழியா ஆத்துப்பக்கம் ஓட்டிவுட்ரு, யாருக்கும் தெரியாம! நான் பழையபடி கதவெல்லாம் பூட்டிட்டு வாரேன். பத்துமணி வாக்கில ஆபீசுக்கு வழக்கம்போல வருவோம். பாக்கிய நான் பாத்துக்கறேன்.”

*** *** ***

’தன ததரின ததரின’ என்றார் மலேசியா வாசுதேவன்.

“டேப்பை சின்னதா வைடி ரமா-னுஜம்! அப்பா மூட்ல இல்லை, ஒதை வாஙப்போறே!” என்றான் ஶ்ரீதர்.

“இன்னொரு தடவை ரமா-னுஜம்னு சொன்னே, பல்லை உடைப்பேன் படவா! அப்பாவைக் கேலியா பண்றே?”

ஶ்ரீதர் சட்டென்று கோபமாகி அவள் கையைப் பிறாண்ட அவள் அவனைத் தாடையில் அறைய, அவன் சட்டென்று தாவி டேப்ரிகார்டர் ஒலியைச் சின்னதாக்க முனந்தபோது அது மேலும் பெரிதாகிவிட, அவன் பயந்து புழக்கடைப்பக்கம் ஓடிவிட, வாசுதேவனின் உரத்த சங்கதிகளில் ஶ்ரீதேவி கலகலக்க, கழுதையொன்று குரல் விரக்க, ராமானுஜம் வெளிப்பட்டு ஆத்திரத்துடன் மகளைத் தலையில் குட்டி இழுத்துத் தள்ளிவிட்டு, டேப்ரிகார்டர் ஒலியைக் குறைக்க முற்பட்டபோது வாசலில் கோரஸாகக் கழுதைகள் கத்துவது கேட்டுத் திடுக்கிட்டார்!

கலவரத்துடன் அவர் வாசலுக்கு வந்தபோது அந்தத் தெருவை அடைத்துக்கொண்டு கழுதைப் பட்டாளம் ஒன்று நின்றிருந்தது! அவரைக் கண்டதும் கச்சேரி களைகட்டிவிட, கழுதைகள் தம் யஜமானர்களின் கையசைவில் விடலைப் பையன்கள் கையில் கிடத்த மௌத் ஆர்கன்கள்போல் வினோத ஒலிகள் எழுப்பின! சட்டென்று அடங்கி மென்மையாக விர்ரித்தன. உள்ளே ரமாவின் அழுகுரல் கேட்டது.

கடன் பட்டுவாடா செய்யப்பட்டபோது இருந்த ஆர்வமும் பணிவும் நட்பும் அறவே விடைபெற்றுக்கொள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட அந்த சலவைத் தொழிலாளர்கள் ராமானுஜத்துக்கெதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கோஷங்கள் அடங்கியதும் முன்னணியில் இருந்த ஒருவன் ராமானுஜத்தைப் பார்த்துக் கூறினான்.

“நீங்க செய்யறது கொஞ்சம்கூட நல்லா இல்லை சார்! நாங்க ஏதோ ஏழைத் தொழிலாளிங்க, கிடைக்கற பணத்துல அப்பப்ப கொஞ்சம் கட்டறோம். அதுகூட ஒருசில பேரால முடியறதில்லை. காரணம் தக்க வருமானம் இல்லை. நீங்க ஏதோ ஒங்க சொந்தப் பணத்துல கடன் கொடுத்தாப்பல சட்டநடவடிக்கைகள் அதுஇதுன்னு இறங்கினீங்கன்னா நாங்க ஒட்டுமொத்தமா தவணைத் தொகைகளை நிறுத்திக்கறதத் தவிர வேற வழியில்லை. தயவுசெய்து ராஜுவோட கழுதையை வெளில விட்டிடுங்க. அவர் முடிஞ்சப்ப கடனைக் கட்டிடுவார்.”

“ஆறுமுகம், பேசறதைக் கொஞ்சம் யோசித்துப் பேசணும். என் சொந்தப் பணத்தைக்கூட நான் வசூலிக்காம விட்டுடலாம். ஆனா, எங்க வங்கிலேருந்து கடனாக் கொடுத்திருப்பது மக்களோட பணம். நீங்க எவ்வளவு தூரம் கஷ்டப்படறீங்களோ அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உழைச்சு சேர்த்துவெச்சு எங்க வங்கியை நம்பிப் பணம் போட்டிருக்கற டெபாஸிட் கஸ்டமர்களுக்கு உங்களைப்போன்ற கடன்தாரர்கள் வாங்கின பணத்தைத் திரும்பத் தரலேன்னா நாங்க என்ன பதில் சொல்லறது? சலவைத் தொழிலாளி ராஜு போன்ற சிலர் வேண்டுமென்றே காலம்கடத்தறனாலதான் நாங்க சட்ட–”

கூட்டம் அவரை முடிக்க விடவில்லை. கோஷங்கள் ஓய்ந்ததும் ஆறுமுகம் முடிவாக, “நாங்க சொல்லவேண்டியதச் சொல்லிட்டங்க. இன்னிக்கு மதியம் மூணு மணிக்குள்ளாற ராஜுவோட கழுதையை நீங்க விடுதலை செய்யாங்காட்டி நாங்களும் எங்க கழுதைகளும் உங்க வங்கி முன்னால உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறோங்க. அப்பால உங்க விருப்பம்” என்று கூறிவிட, புழுதியைக் கிளப்பிக்கொண்டு கழுதைப் பட்டாளம் கலைந்தது.

“சார், இந்த மெமோவை வடிவேலு கையெழுத்து போட்டு வாங்கறதுக்கு முன்ன, அவர் செஞ்ச தப்பு என்னன்னு கொஞ்சம் விளக்கி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்” என்றான் யூ.செ. மாணிக்கம்.

“மிஸ்டர் மாணிக்கம், நீங்க இப்படி எதுக்கெடுத்தாலும் ’டிஃபென்ட்’ பண்ணித்தான் இன்னிக்கு இந்த நிலைமையில இருக்கு. யாரா இருந்தாலும் ஒரு காரியத்தை ஒப்படைச்சா பொறுப்பா செய்ய வேணாம்? வடிவேலு அஜாக்ரதையா அந்தக் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டு பூட்டிட்டுபோனதால இன்னிக்கு–”

“எக்ச்சுஸ் மி சார், ஒரு நிமிஷம்! வடிவேலுதான் அந்தக் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டார்னு எப்படிச் சொறீங்க?”

“என்னய்யா இது பேத்தல்? ’ரெகார்ட் ரூமை’ப் பூட்டறச்ச உள்ளே கழுதை இருக்கறதுகூடவா தெரியாது ஒரு மனுஷனுக்கு? தாழ்வாரத்தில கட்டியிருந்த அந்தக் கழுதை எப்படி ’ரெகார்ட் ரூம்’குள்ள நுழைஞ்சது? அப்படியே நுழைஞ்சிருஞ்சாலும் ஏன் அதை அவர் பாக்கலை? செய்யறதையும் செஞ்சிட்டு இப்ப நான் வரதுக்குள்ள கழுதையை அவுத்து வெளியில விட்டுட்டாரு! கார்த்தால எங்க வீட்டு முன்னால ஒரே ஆர்ப்பாட்டம்! இப்ப நான் இந்த ஜனங்களுக்கு என்ன பதில் சொல்றது? நம்ம ’ஹெட் ஆஃபீஸ்’க்கு என்ன பதில் சொல்றது? ’ஐ யாம் ஸாரி மிஸ்டர் மாணிக்கம். ஐ கேன்னாட் டாலரேட் சச் இன்டிஸிப்ளின் இன் மை ஆஃபீஸ் எனி லாங்கர்!”

“ஸோ, வடிவேலுதான் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டுப் பூட்டிட்டுப் போய்ட்டார், வடிவேலுதான் கழுதையை அவுத்து வெளியில விட்டுட்டார்னு சொல்றீங்க?”

“சொல்றது என்ன, அதானே உண்மை!”

“உண்மைன்னு நீங்க சொல்றீங்க சார். நாங்க சொல்றதுலயும் கொஞ்சம் உண்மை இருக்கலாமில்ல?”

“’வாட் நான்சென்ஸ்!’ நீங்க என்ன சொல்லப் போறீங்க புதுசா?”

“இன்னும் ஒருமணி நேரத்தில எங்க உதவிப் பொதுச்செயலாளர் வந்ததும் சொல்றோம் சார். இப்போதைக்கு நான் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல விரும்பறேன். காலையில ஏழு மணிக்கு வடிவேலு உங்ககிட்ட சாவி வாங்கிட்டுப்போனதுக்கு அப்பறம் இப்பதான் பாங்க் உள்ளாற நுழையறார். ஊருக்குப்போன ஸ்வீப்பரம்மா இன்னும் வரலைபோல. ஏன்னா அவங்க வடிவேலுகிட்ட சாவி வாங்கிக்க வரலை. தவிர, ’ரெகார்ட் ரூம்’ சாவி உஙகிட்டேயும் ஒண்ணு இருக்குங்கற உண்மையை ஞாபகம் வெச்சுக்குவோம் சார்.”

“வாட்டுயு மீன்?”

இந்த சமயத்தில் “குட் மார்னிங் மிஸ்டர் ராமானுஜம்!” என்று ஒருவர் அறைக்குள் நுழைய, அவரை ஒருகணம் முறத்துப் பார்த்து அடையாளம் தெரிந்துகொண்ட ராமானுஜத்துக்குத் தலை சுற்றியது. ஹெட் ஆஃபீஸ் இன்ஸ்பெக்*ஷன்!

அடுத்த சில நாட்கள் அங்கு ஏற்பட்ட பிரளயத்தை இந்தச் சிறுகதையில் வர்ணிக்கமுடியாது. தொழிற் சங்கம், நிர்வாகம் மற்றும் பொதுஜனம் இவற்றின் மும்முனைத் தாக்குதலில் ராமானுஜம் துணை யாருமின்றித் தனியே போரிட முயன்று தோற்றார்.

அவர் மலைபோல் நம்பியிருந்த சட்டம், ஒழுங்கு, நியாயம், உண்மை முதலிய துணைவர்கள் ஒவ்வொருவராகப் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்துகொள்ள, பாரதப் போரின் கர்ணன்போல் அவர் ஒவ்வொரு கணையாக மார்பில் ஏற்று, வாய்மை எப்படியும் இறுதியில் வென்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் போராடி, முடிவில் தன்னைக் கல்கி அவதாரமாக நினத்துக்கொண்டு விஸ்வரூபம் எடுக்க முனைந்து தோற்று, ஓர் அரக்கனாகக் கணிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார்.

ஓர் ஏழைத் தொழிலாளியின் கழுதையைப் பறிமுதல் செய்யப் பரிந்துரைத்து செயல்பட்டது மக்கள் நலனுக்கெதிரான மகத்தான குற்றமாகக் கருதப்பட்டது.

அந்தப் பறிமுதல் செய்யப்பட்ட கழுதையையும் சரிவரப் பாதுகாக்கமுடியாமல் இழந்தது அவருடைய அஜாக்ரதையைக் காட்டியது. கடைசியில் கழுதை கிடைத்தும் தொழிலாளி ராஜுவிடம் சல்லிக்காசு பெயராதது அவருடைய திறமையின்மையைக் காட்டியது.

’ரெகார்ட் ரூமில்’ கழுதை புகுந்து நாசம் விளைவித்ததற்கான பொறுப்பு சரிவர நிரூபிக்கப்படாமல் அவர் தலையில் விழுந்தது. வங்கியின் முக்கிய தஸ்தாவேஜ்களை சரிவர்ப் பாதுகாக்கமுடியாமல் இழக்க நேரிட்டது நிர்வாகத்தால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.

தொழிற்சங்கத் தலைவர்கள் குழப்பிய குட்டையில் அவர்மீது கணக்குகள் சரிவர நேர்செய்யப் படவில்லை, நேர்செய்வதற்கான வவுச்சர்களை இழந்தது போன்ற ஆதாரங்களின்பேரில் கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதிகாரிகள் சங்கம் தலையிட்டு அத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்த்து, அவர் நாலைந்து நாட்கள் மற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் இரவும் பகலும் பாடுபட்டுக் கணக்குகளை நேர்செய்து கொடுத்து ஒருவழியாகத் தப்பினார்.

கடன்களைப் பட்டுவாடா செய்வதில் காட்டப்படவேண்டிய வேகத்தை அவற்றைப் பராமரிப்பதில் காட்டாதிருப்பது விவேகம் என்ற கசப்பான உண்மையை விழுங்கமுடியாமல், ராமானுஜம் அந்த ஊரிலிருந்து மற்றொரு குக்கிராமத்துக்கு மாற்றப்பட்டபோது, தன் ஆறுமாத சர்வீஸை விடுமுறையாக மாற்றிக்கொண்டு முன்னதாகவே ஓய்வுபெற்றார்.

கதையாசிரியர்: குருநாதன் ரமணி
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

Post by வாகரைமைந்தன் Sat Nov 27, 2021 3:51 pm

(இந்த நவீனத்தில் வரும் ‘ நிஜப் பெயர்களுடன் – கற்பனைப் பெயர்களும் கலந்திருக்கின்றன.)

டோக்கியோவில் நடைபெறப்போகும் தேரோட்ட விழா ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுள்ள முதல் குழுவில் திரு கணபதி. ஸ்தபதி, திருமதி மானோரமா, வீழா வேந்தன் முத்து, புலவர் நன்னன், புள்ளி சுப்புடு ஆகிய ஐவரும் முக்கியமானவர்கள்.

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) VadamPidikka-pic2-215x300
திருக்குறள் ஷோஜோவும் ஜப்பானியப் பெண் கோமோச்சியும் இந்த ஐவரையும் இம்பீரியல் பாலஸ் – கிழக்கு வாசல் மைதானத்துக்கு அழைத்துச் சென்று, “இங்கிருந்துதான் தேரோட்டம் தொடங்கப் போகிறது” என்றார்கள்.

“அடேயப்பா! எவ்வளவு விசாலமான இடம்! ஏழெட்டு ஃபுட்பால் கிரவுண்ட் போடலாம் போலிருக்கே” என்று வியந்தார் விழாவேந்தன் முத்து.

“நம் விழாவுக்கு மிகப் பொருத்தமான இடம். இந்த இடத்தை யாருங்க தேர்ந்தெடுத்தது?” – கணபதி ஸ்தபதி கேட்டார்.

“சாவி ஸார் தான். அவருக்குத்தான் ஜப்பான்ல ஒவ்வொரு இடமும் அத்துபடியாச்சே’

“உங்க பேர் என்ன சொன்னீங்க?” ஐப்பான் தமிழறிஞர் ஷோஜோ கேட்டார்.

“முத்து!”

“எங்க நாட்டிலே கூட நிறைய முத்து உண்டு”-ஷோஜோ

“முத்துக் குளிக்க வாரீகளா?” என்று முணுமுணுப்பாய்ப பாடினார் மனோரமா.

“நீங்க நல்லாத் தமிழ் பேசறீங்களே” என்றார் நன்னன்.

“நான் தமிழ்நாட்டில் அஞ்சு வருஷம் தங்கிக் குறள் படிச்சேன். திருக்குறள் முனுசாமிதான் எனக்கு வாத்தியார்”

“அப்படியா! ஒரு குறள் சொல்லுங்க பார்க்கலாம்.” ஷோஜோ தமது கட்டைக் குரலில் சொன்னார் :

தேறினுந் தேறாவிடினு மழிவின்கட்
டேறான் பகா அன் விடல்.

“குறள் நல்லாயிருக்குங்க; உங்க குரல்தான் சரியாயில்லை. குறளை சரியாப் பதம் பிரிச்சு சொல்லத் தெரியணும். நாளைக்கு ஒரு கறும்பலகையும் சாக்பீஸும் கொண்டாங்க. நான் பதம் பிரிச்சு எழுதி விளக்கம் சொல்றேன்” என்றார் நன்னன்.

“தேர் விடறதைப் பத்தி எங்க வள்ளுவர் அந்தக் காலத்திலேயே. எவ்வளவு அழகாச் சொல்லிட்டார் பார்த்தீங்களா?” என்று மகிழ்ந்தார் புள்ளி சுப்புடு.

...............தொடர்ந்து படிக்க........வடம் பிடிக்க........பதிவிறக்கி படிக்கலாம்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty கிணறு

Post by வாகரைமைந்தன் Mon Nov 29, 2021 3:57 pm

அந்தக் கிணறு எனக்குத் தெரிஞ்ச காலத்திலிருந்தே அங்க தான் இருக்கிறது. கவர்மெண்ட் கெணறு என்டு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கவர்மெண்ட் என்றால் அரசாங்கம் என்று அப்ப தெரியாது. எங்கட ஊட்டுக்கு முன்னால் ஒரு பேக்கரி இருந்தது அப்போது. சுவரெல்லாம் கருப்பு அப்பிக் கிடக்கும்.மேலே தகரக் கூரை. உள்ள சுடச்சுடப் பாண் வேகும்.

வெறும் மேலோட பாண் சுடும் ஆக்கள் வேர்வை ஊத்த ஊத்த வேலை செய்வார்கள்.அனேகமாக சிங்கள ஆக்கள் தான் ஊர்ல இந்த மாதிரி வேலைகளுக்கு வாரது. பேக்கரிச் சுவர்ல கரிக்கட்டையால, கொட்டை கொட்டையாக தமிழ்லயும் சிங்களத்திலயும் கிறுக்கியிருப்பார்கள்.படங்களும் அம்பு குத்தின இதயங்களும் இன்னுமென்னனவெல்லாம் இருக்கும். அதெல்லாம் முழுசா வாசிக்கிறதுக்கு ஊட்டுல உட மாட்டாங்க. சின்னப் புள்ளகள் பார்க்கக் கூடாத சமாச்சாரம் போல.

அந்த பேக்கரியின் ஒரு பக்கம் ஒட்டினது போல நிஸாரா மாமி வீடு. மத்தப் பக்கம் கீழிறங்கிப் போகும் ஒரு ஒற்றையடிப் பாதை. அதில பத்துப் பதினஞ்சு எட்டு வைத்தால் அந்தக் கிணறு வரும்.

எங்கட ஊட்டுக்கு வேறயா தனியா ஒரு கிணறு. அழகான பச்சைச் செழும்பு படர்ந்திருக்கும். வாளியை உள்ளே விட்டு தண்ணீர் அள்ளும் போது உள்ளுக்குள் உயிர் ததும்பும் ஜீவகிணறு. ஆழத்தில பெயர் தெரியாத தாவரங்களும் மீன்களும். நல்ல ஜின்கள் கூட இருந்திருக்கலாம். ஊட்டில ஏதாவது மனஸ்தாபம் என்டா நான் ஓடி வந்து அந்தக் கிணற்றுக் கட்டுல தான் தொத்தி ஏறி உக்கார்ந்து கொள்வேன். கொஞ்ச நேரம் உள்ளுக்கு எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். வளையம் வளையமாச் சுற்றி இறங்குகிற கல்லுகளுக்கிடையே கொடிகள் பிணைந்து கனத்துக் கிடக்கும்.

அதன் இருள் ஆழத்துக்குள் வெறுங்கண்களுக்குப் புலப்படாத மர்மங்கள் இருப்பதாகப் பலமுறை நினைத்திருக்கிறேன்.அதுக்குள்ள இறங்கினா முடிவுறாத பாதாளம் போல இன்னொரு உலகத்துக்கு இட்டுச் சென்று விடும் என்ற எண்ணம் இப்பவும் எனக்குள்ள இருக்குது. கைக்குள்ள கிணறு இருந்தாலும் நாங்க குளிக்கிறது அனேகமாக ஊட்டுக்குள்ள இருக்கிற பாத்ரூம்ல தான்.அது ஊட்டுக்கு முன்ன இருந்தததால சுத்தி இருந்த கொங்க்ரீட் மதிலுக்கு அங்கால இருந்து எம்பினா குளிக்கிறது கொள்ரது தெளிவாக விளங்கும். இந்த ஒரு காரணத்தினால கிணற்றுத் தண்ணீர் அதுக்கு கிட்ட இருந்த கறிவேப்பிலை,மருதாணிச் செடிகளைக் குளிப்பாட்டத் தான் அதிகம் பயன்பட்டது.

சொந்தமா கம்பீரமா எங்க கிணறு இருந்தாலும் அந்தக் கவுமன்ட் கெணறைப் பார்க்க வேணும் என்று தான் உள்ளுக்குள் ஆசை கொப்புளிக்கும். எங்களுக்கெல்லாம் அங்க போக அனுமதி கிடையாது.அங்க என்னதான் மர்மம் இருக்கிறதோ என்று மனசு கிடந்து அடித்துக் கொள்ளும்.

நோன்பு காலம் தான் இதற்கெல்லாம் ஒரே வாசல். ரமழானில நாங்க பிள்ளைகள் ஸஹர் செஞ்ச பிறகு தூங்குறதில்ல.பென்ஸில் கலர எடுத்து  வித விதமா மனிச ரூபங்கள் வரைவோம். இதில ஆண்கள வரைஞ்சா சரியா வராது, பொம்புளக்கி மீச வச்சா மாதிரி ஜோக்கா வரும். அப்பவெல்லாம் உருவம் வரையுரது பாவம் என்று சொல்ல ஒத்தரும் இருக்கல்ல. பின்னாளயில் தான் இந்த அரப்படிச்ச கதையெல்லாம் பெரியாக்கள் கதைக்க தொடங்கினது.

பெருநாளைக்கு கூட்டாளிமார்களுக்கு அனுப்ப பேப்பர்கள வெட்டி ஒட்டி கார்ட் செய்யுறது,அல்லாட்டி ஊட்டுல இருந்த கீஸ்கீஸ் போனிக்காவ வெச்சுக் கத சொல்றது இந்த மாதிரி வேலைகள் அந்த நேரத்தில் தான் நடக்கும். அமுக்கினா ‘கீஸ் கீஸ்’ என்று சத்தம் வாரதால தான் அந்தப் பெயர் அந்த ரப்பர் பொம்மைகளுக்கு. அதுல ரெண்டு ஒட்டகச்சிவிங்கி இருக்கும். அதுல உயரமான பிங்க் நிறச் சிவிங்கி வாப்பா,குட்டையான ப்ரெளன் சிவிங்கி உம்மா என்றும் மற்ற நாய்,பூனை,கரடி பொம்மைகள் பிள்ளைகள் என்றும் கத போகும்.

சுபஹுக்குப் பின்னால ஊரே அமைதியடைஞ்சிருக்கும். சில ஊடுகளுக்குக் கிட்டப் போனா கொறட்டை சத்தம் கூடக் கேட்கும்.

அப்ப தான் ரோட்டில கொஞ்ச தூரம் நடந்து பார்ப்போம். பாதை அப்படியே ‘ஹோ’ என்று விரிச்சுப் போட்டு வெறிச்சோடிக் கிடக்கும். ஒரு ஈ காக்கா இருக்காது. மீன்காரன் அந்த நாளைகளில் வரவே மாட்டான். போஸ்ட்மேன் ஒம்பது மணி தாண்டித்தான் ‘கிணு கிணு’ வென்ற சைக்கிள் மணி ஒலிக்க வருவார்.  டியூசனுக்குப் போகும் பிள்ளைகள் இடைக்கிடை தென்படுவார்கள். அப்படி ஒரு நாளில் தான் அந்த மகா பெரிய மர்மக் கிணற்றைப் பார்க்கப் போகிற வாய்ப்புக் கிடைத்தது.

ஊட்டில எல்லாரும் நல்ல தூக்கம். நான் கிணற்றுக் கிட்டப் போவமா வாணாமா என்டு ரெண்டு மனசோடு ஊட்டு முன்னுக்கு குறுக்கும் நெடுக்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் தைரியமான வினாடியில் போவது என்று முடிவு  தீர்க்கமாய் முளைத்தது.முன் ரோட்டத் தாண்டினேன்.சாலி நானாட கடை பலகைக் கதவில் பூட்டுத் தொங்கியது.பேக்கரியில் சந்தடி இல்லை. பேக்கரிப் பக்கத்து ஒற்றையடிப்பாதை.

அங்குமிங்கும் பார்த்தவாறு படபடப்போடு போய் அந்த மர்ம நீருடம்பப் பார்த்தாகி விட்டது. அதிக நேரம் தாமதிப்பது ஆபத்து.சிட்டெனப் பறந்து ஊட்டு முற்றத்துக்கே திரும்பி வந்திட்டேன்.  எங்க ஊட்டுக் கிணற்றை விட அது கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருந்தது.

கிணறு நல்ல அகலம்.நீள்சதுர வடிவம். சுற்று மதில் அவ்வளவு உயரமா இல்ல. ஆண்கள் பெண்களுக்கிடையில் சின்னத் தடுப்பு. ஆனா எட்டிப் பார்க்குமளவான உயரம் தான்.

கையால அள்ளித் தண்ணி சேர்ந்தலாம் போல கிணறு கொள்ளாத தெளிந்த தண்ணீர். இரண்டு பக்கமும் இரண்டு சுற்றிலும் பச்சைப் பசேலென நிலமெங்கும் அடர்ந்து முறுகிய செடிகொடிகள். முறுக்கிய நைலோன் கயிற்றில்  என்று கட்டி வைக்கப்பட்ட இரண்டு  அலுமீனியம் வாளிகள் ‘தேமே’ என்று உட்காரவைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மட்டும் வாயிருந்தால் ஆயிரத்தொரு இரவுகளை விட சுவாரஸ்யமான கதைகள் கிடைத்திருக்கும்.

இங்க தான் மனாஸிர் நானாவுக்கும் தேவயாணி அக்காவுக்கும் பயங்கரச் சண்டை மூண்டது. மனாஸிர் நானாவின் ஊர் அக்கரைப்பற்றோ அட்டாளச்சேனையோ எனக்கு சரியாக ஞாபகம் இல்ல, கிழக்குப் பக்கம். இங்க படிக்க வந்து பக்கத்துல  ஒரு ஊட்டில போர்ட் ஆகியிருந்தார். அவருக்கு தமிழ் ஆக்கள் என்டால்  கண்ணில காட்டக்கூடாது. அவர்ட ஊட்டில ரொம்ப நெருக்கமான யாரையோ புலிகள் சுட்டுக் கொன்ற வெஞ்சினம், பார்க்கிற எல்லாத் தமிழரையும் எதிரியாகப் பார்க்க வச்சிருந்தது.

தேவயாணி குடும்பம் முஸ்லிம்கள அண்டி வாழ்றவங்க. வசதியில்லாத வறுமைப்பட்ட ஆக்கள். தேவயாணி அக்காவுக்கு மிருகக் காட்சிசாலை புலி மட்டும் தான் தெரியும். ஒரு வாளியில் ஆரம்பித்த சின்னச் சண்டையில் மனாஸிர் நானா தேவயாணி அக்காவை தூஷணத்தால் தாறு மாறாய் ஏச அவவும் திருப்பிப் பேச பிறகென்ன. தேத்தண்ணிக் கோப்பைக்குள்ள புயல் அடிச்ச மாதிரி பெரும் சண்டை.  அது முடிய, பிறகு அதைவிடப் பெரும் பிரச்சினை.

எரிமலையாய் ஆரம்பித்த சண்டை  இறுகிப் பனிக்கட்டியாகிக் கனிய அதிக நாட்கள் எடுக்கவில்லை. கெணற்றடிச் சண்டை காதலா மாறிட்டுது. அந்தக் காதலுக்கு மனாஸிர் வீட்டிலயோ சுற்றியிருந்த சமூகத்திடமிருந்தோ எந்த அங்கீகாரமும் இல்லை. இப்போ தேவயாணி அக்கா,  ஊடுகள்ள சமையலுக்கும் எடுபுடி வேலைக்கும் போறா. மனாஸிர் நானா எங்கயோ ஒரு கடல் கடந்த தேசத்தில் மனைவி பிள்ளைகளோடு இருப்பதாகக் கேள்வி, சரியாகத் தெரியல்ல.

கவர்மெண்ட் கிணற்றுக்குக் குளிக்கப் போகும் ஆக்களின் தொகை காலப் போக்கில் குறைந்து போய்விட்டது. பேக்கரி இடுக்கால் தலையத் துவட்டிக் கொண்டு வரும் ஆண்களையோ, வாளியில் கழுவி முறுக்கிய துணித்துண்டுகளோடு வரும் பெண்களையோ இப்போ மருந்துக்கு மாதிரி தான் காணலாம்.

நிஸாரா மாமிக்கும் வயசாகி விட்டது.அவங்க வீட்டுப் பின்புறம் இறங்கினா அதே வளவுக்குள்ள தான் கிணறு. எல்லோரும் வீடுகளை உடைத்துக் கட்டுவது போல் அவங்களும் , தங்கட சின்ன ஊட்ட கொஞ்சம் அங்கால இங்கால ஒடச்சிக் கட்டியிருக்கிறாங்க. அவட பிள்ளைகள் மூணு பேரும் வளர்ந்து கலியாணமும் முடிச்சிக் கொடுத்தாயிற்று. நாலஞ்சி பேரப்பிள்ளைகள் வேறு.

சின்னச் சின்ன ஊடுகள் இருந்த தெருவில், மடமடவென்று பெரிய மாடி ஊடுகள், கடைகள் எல்லாம் முளைத்து ஊரே மாறி விட்டது.மேல தூவின சீனியோட பியானரோல் சுடச்சுட வரும் முன்னுக்கு பேக்கரியை மூடி மிச்சம் காலமாகிறது. அந்தப் பக்கத்துக்கே அடையாளமாக இருந்த சாலி நானாவின் கடை அவர் மெளத்தானதிற்குப் பிறகு எவரெவரோ செஞ்சி பார்த்தார்கள். சரிவரவில்லை, இப்ப அங்க கடை இருந்த அடையாளமே இல்ல. சாலி நானா இருக்கிற நேரம் சொல்லுவார் ‘உம்மா வாப்பாவத் தவிர வேற எதுண்டாலும் கேளுங்க, தாரன்’ என்டு. சாலி நானாக் கடை குட்டி ரொட்டி.

பச்சைக்கொச்சிக்காயும் சின்ன வெங்காயமும் போட்டு அவித்த மாவில செய்த தேங்கா ரொட்டியும் கட்டசம்பலும் நினைக்கவே வாய் ஊறுது. முன்னுக்கு தொங்க விட்டிருக்கும் புளி வாழைக் குலையும் பக்கத்தில் கத கத வென கொதிச்சுக் கொண்டிருக்கும் டீ பொயிலரும் அதுக்கிட்ட நிக்கிற சாலி நானா முகமும் இன்னமும் கண்ணுக்குள்ள அப்படியே சித்திரம் மாதிரி இருக்கிறது.

இந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் எல்லாமே மாறிப் போயிருக்க ஊர் மட்டும் அப்படியே இருக்க வேணுமா என்ன?  

ஊடுகளில் தனிக்குளியலறைகள், வெந்நீர் வசதியோடு வந்த பின்னர் கிணற்றுக்கு வருபவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் அல்லது கட்டுமானப் பணிக்கு வரும் சிங்கள பாஸ் உன்னஹேகள் தான்.

நிஸாரா மாமி அப்படி ஒரு அதிரடி வேலை மட்டும் செய்யவில்லை என்றால் எல்லோருக்கும் அந்தக் கிணறு இருப்பதே கிட்டத்தட்ட மறந்து போயிருக்கும்.

அவட மூத்த மகள் ஹுசைனா, மாமி வீட்டுக்குப் பின்னால உள்ள கையகல இடத்தில கொஞ்சம் பெரிசா வீட்டைக் கட்டி குடிவந்திருக்கிறா. இரண்டு வீட்டுக்கும் இடையில மூச்சு எடுக்கிறதுக்கு மட்டும் ஒரு குட்டியூன்டு நிலத்துண்டு. நிலம் விக்கிற விலையில் அவங்கள குறை சொல்லவும் முடியாது. வீட்டுக்கு இடது பக்கத்தில் ஒட்டியது மாதிரி அந்தக் கிணறு.

கிணறு தனித்திருந்தது.

எல்லாருக்கும் எல்லாத்துக்கும் தேவையாயிருந்த கிணறு இப்போது ஒரு இடைஞ்சலாக மாறிப் போய்விட்டது. கிணற்றிலிருந்து வடிந்தோடும் கழுவி விட்ட தண்ணீ அப்படியே வீட்டுக்குள்ள வருகிறது. சோப்புத்தண்ணீர் நிஸாரா மாமி ஆசையா வச்சிருக்கும் கறிவேப்பிலைச் செடி வரை ஓடி வந்து நுரை தள்ளுகிறது.கொல்லைப் புறம்  காய்கறி கழுவிய தண்ணீரை வீச வந்தால்  தடித்தடியாய்க் குளிப்பவன்களது உடம்பு வந்து கண்ணுக்குள் விழுகிறது.

ஊரில டெங்குப் பிரச்சினை வேறு தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.தண்ணீர் தேங்குமிடமெல்லாம் ஆபத்தும்  தேங்கிக் கிடந்தது. ஆஸ்பத்திரியில் ஒரே கட்டிலில் ரெண்டு மூன்று நோயாளி என்று சொல்லுகிறார்கள். பீ .எச். ஐ பொலிஸையும் கூட்டிக் கொண்டு வந்து  ஊடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லா இடமும்  நுளம்புக் குடம்பிகளைத்தேடிக் கொண்டிருக்கிறார்கள். யாரென்ன செய்து தான் என்ன, அனேகமாக தெரிஞ்ச எல்லாக் குடும்பங்களிலும் யாராவது ஒருத்தருக்காவது டெங்கு.ஊருக்குள்ளே மையத்துக்களும் விழுந்து கொண்டிருக்கின்றன. நுளம்புக் குடம்பிகளச் செக் பண்ண வந்த சிங்களப் பொம்புள ஒன்றுக்கும் டெங்கு வந்து செத்ததா வதந்தி வேறு. ரினாஸ் டொக்டரும் ஐஸீயூ ல என்று சொல்றாங்க.

இந்தக் களேபரம் போய்க் கொண்டிருக்கையில் தான் நிஸாரா மாமி ஒரு நாள் எங்கட ஊட்டுக்கு வந்திருக்கிறா.

‘ கிணறு  அங்கின ஈக்கிரதால சரியான நெலும்பு, டெங்கும் அதால தான் வார, பொய்யோ நான் செல்ரது, அத மூடச் சொல்லி  டீஸீயாலேம் சொன்ன’  

எங்கட ஊட்டுக்கு மேல்ப் பக்கம் இருக்கிற காணி ஒன்டுல இருந்து மண் கொஞ்சம் டிப்பர்ல வெட்டி தந்தா கிணற்றை மூடி விடலாம் என்று நிஸாரா மாமி சொல்றா.

எங்கட உம்மா நாலு விசயம் தெரிஞ்சவ. நாட்டுல நடக்குற செய்திகள் எங்களுக்குத் தெரியாட்டியும் அவக்கு நல்லாத் தெரியும் .செய்திக் கண்ணோட்டம் எல்லாம் சீரியஸா உட்கார்ந்து பார்த்து விளங்க எடுக்கிறவ. ஏதாவது தெரிஞ்சுக் கொள்ளணும் என்டா நாங்களே அவகிட்ட கேட்டுத் தெரிஞ்சு கொள்றது அதிகம்.

‘நீங்க தனியா இத செய்ய வாணம். இது டீஸிட வேல. ஊர்ல எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டியத தனியா நீங்க மட்டும் செய்றது சரியில்ல,  கடசீல குத்தம் ஒங்களுக்குத் தான் வந்து சேரும்’  என்று உம்மா ஒரு மாதிரியா மாமிய சமாளிச்சு அனுப்பிட்டா.

எல்லாம் அமைதியாத் தான் போய்க்கொண்டிருந்தது.

மாமி திடீரென இப்படியொரு குண்டத் தூக்கிப் போடுவா என்று யாருக்குத்தெரியும். சரியாப் பார்த்தா குண்டை அல்ல. அவ அவங்கட மகள்ட வீடு கட்டி மிஞ்ச சமான்கள், ஒடச்சிப் போட்ட செங்கல் துண்டு கொங்கிரீட் துணுக்கு,கலு தெல்,கம்பு கட்டைகள் எல்லாத்தையும் கிணற்றுல கொட்டி  கழுத்து வரைக்கும் இறுக்கி நெறச்சிட்டு சத்தமில்லாம இருந்திட்டாங்க.

அடுத்த நாள் பின்னேரம் ஒரு பாஸ் உன்னஹே வேலைக் களைப்பு போக  கவர்மெண்ட் கிணற்றுக்குக் குளிக்க வந்திருக்கிறான். சிங்கள ஆக்கள் காலையில் குளிக்கிறல்ல, எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு அந்தியாகித் தான் குளிக்கிற என்று சொல்லுவாங்க.

வந்து பார்த்தா கெணறு மூடிக் கிடந்திருக்கு. ஒரு சொட்டுத் தண்ணீர் வெளியே தெரியல்ல. அவன் ஈரக்குலை நடுங்கியிருக்கு, பதறிப் போய் பக்கத்துல உள்ள ரெண்டு மூன்று ஆக்களிடம் சொல்லி இருக்கிறான்.

கொஞ்ச நேரம் போகல்ல. திபு திபுவென ஆக்கள் சேர்ந்துட்டாங்க. கிணற்றுக்கருகில் தண்ணீருக்குப் பதில் ஆட்கள் வெள்ளம்.குய்யோ முறையோ என்று சப்தங்கள். நிஸாரா மாமிக்கு நல்ல நல்ல பாசைகளில் பயான் நடந்து கொண்டிருந்தது.

மாமி நல்ல உறுதியான மனுசி. வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே அதிகம் கண்டவ. அவவும் விடல்ல. டீஸியால வந்த ஒருத்தன் சொல்லித் தான் அவங்க கிணற்றை மூடினதாச் சொல்ல அவசர அவசரமாக ஒரு குழு டீஸிக்கு கிளம்பிப் போனது.

நகரசபையில் ‘நாங்க  அப்படி தனியா ஒருத்தருக்கு மூடச் சொல்ல மாட்டோம், அப்படியிருந்தா கடிதம் அனுப்பியிருப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். போன வேகத்தில்  மடமடவெனத் திரும்பி வந்த ஆக்கள்’ உங்களுக்கு வந்த கடிதத்த காட்டுங்க’ என்று  மல்லுக்கு நின்றது.

மாமியிடம் கடிதம் இல்ல, அவனுகள் தான் சொன்னான்கள் என்று அவ திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறா.யாரும் அவ சொன்னத காதில வாங்கினதாத் தெரியல்ல.

டொல்பின் வேன் ஒன்று வந்து பேக்கரிக் கிட்ட நிற்கிறது. அதிலிருந்து வெள்ளைச் சேர்ட் வெள்ளைச் சாரத்தோட போகிறார் பள்ளிக் கொமிட்டி மெம்பர் முஸீன் ஹாஜியார். இன்னும் கூட்டம் அதிகரிக்கிறது.

இங்கிருந்து நாங்க பாக்கிறது அவங்களுக்கு விளங்காம ஜன்னலுக்குள்ளால எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

‘இவ்வளவு பெரிய பெரிய ஆம்புளகள், இளந்தாரிப் பொடியங்கள் எல்லாம் இவ்ளோ காலம் எங்கிருந்தாங்க’ உம்மா புதினப்பட்டு சொல்றா. அவ சொல்லுவதில் நூறு வீதம் நியாயம் இருக்குது. அந்த பேக்கரிக்குப் பக்கத்துல தான் ஊரில அரைவாசி  குப்பை கிடக்கும். ஊத்த பேக் ஒவ்வொரு கலர்ல கட்டி  அந்த இடத்துக்கு முன்னால கொண்டு வந்து வீசிட்டுப் போயிடுவாங்க. நாத்தம் மூக்கைப் பிய்த்து மண்டைக்குள் ஏறி  உட்கார்ந்து கொள்ளும். அவங்கவட முற்றம் சுத்தமா இருக்க ஊத்தப் பேக்கள் அந்த ரோட்டோரம் கிடந்து நாறும். அத எவ்வளவு தான் கொண்டு போய்  சந்தியில் இருக்கிற பெரிய குப்பைத் தொட்டியில் போட்டாலும் இங்க அடுத்த நாள் காலை ஊத்த பரகத்தா புதுசா நிரம்பிக் கிடக்கும். வளர்ந்த ஆம்புளகள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு நடு இரவில் ஊத்த பேக்குகள கொண்டு வந்து போட்டுட்டு போறத நானே பல முறை கண்டிருக்கிறேன்.

அதே பேக்கரிக்கு மேல இருக்கிற மாடித் தட்டு கொஞ்சம் மறைவான இடம்.முழுசா கட்டாம இடையில் நிப்பாட்டி  நாலைந்து வருஷமா அது அப்படியே தான் இருக்கிறது. மஃரிபு ஆனா அங்க பொடியன் கூட்டம் சேர்ந்துக் கொண்டு பாட்டும்  கூத்துமா சப்தம். பக்கத்துல இருக்கிற ஊடுகள்ள இருக்கிறவங்க ஜன்னல இழுத்து மூடி கர்டின போட்டு விடுவாங்க.

அந்த நேரத்தில மருந்தெடுக்கப் போயிட்டோ அல்லது அடுத்தூட்டில  விக்கிற ஷல்வார் மெடீரியல் பார்க்கவோ போற பொம்புளப் புள்ளைகள் அவன்கள்ட வாயில விழுந்து அரை படுவார்கள். கலியாணம் முடிச்சு குழந்தை குட்டி இருக்கிற ஆக்களும் அங்க வாரதா கதை.  உள்ள கசாமுசாவெல்லாம் நடக்கிறதா ஆக்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.என்ன கசாவோ முசாவோ, வெளியிருந்து பார்த்தா அங்க மையிருட்டு. உள்ள என்ன நடக்கிறதென்று எங்களுக்கும் தெரியா.

ஆனா  அந்தத் தெருவுக்கே அதுவொரு பெரிய தலைவலி. ஆனா இதத் தட்டிக் கேக்குறதுக்கு ஆள் இல்ல. பயமோ அல்லது நமக்கெதுக்கு வம்பு என்ற மனப்பாங்கோ தெரியாது. அந்த நேரமெல்லாம்  இல்லாத ஆக்கள், இளந்தாரிப்பொடியன்கள் எல்லாம் இப்ப சூர் ஊதினா கபுறுகளிலிருந்து ஈசல் போல மையத்துக்கள் எழும்பி வார மாதிரி வாரான்கள்.அதத் தான் உம்மா அப்படிப் பூடகமாகச் சொன்னா என்று நினைக்கிறேன்.

அந்திச் சூரியன் கரையும் போது கிணற்று ஏரியாவே கலியாண ஊடு மாதிரி ஆகிட்டுது.அங்கயும் இங்கயுமா வயர் இழுத்து  பல்புகள் தொங்க விடிய விடிய வேலை. கிண்ற்றுல போட்ட கம்பு,கல்லு,கருப்பு எண்ணெய் எல்லாவற்றையும் எடுத்து வெளியே போடணுமே.

இரவிரவா வேலை நடக்குது,கெணத்த இறைக்கிறாங்க. வேலை செய்யுற ஆக்களுக்கு சூடா பட்டீஸும் இஞ்சிப் பிளேன்டியும் போகுது.

நிஸாரா மாமி ஊட்டு ஜன்னல் எல்லாம் டப் டப் என்டு மூடிப்படுகுது.உள்ளுக்கு இருந்து ரேடியோவ கொஞ்சம் சத்தமாக போட்டிருக்கிறாங்க போல. வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும் ஸலவாத்தும் என்கிறது முஸ்லிம் நிகழ்ச்சி.அப்ப சரியா ஒன்பது மணி ஆயிருக்கும்.

கிணற்றடியில் சந்தடி ஓயல்ல.லைட் எல்லாம் பிரகாசமா எரியுது. எங்கட ஊட்டு மேல் தட்டு ஜன்னலால மாறி மாறிப் பார்க்கிறோம். நள்ளிரவு தாண்டியும் கிணறு இறைப்பு நல்ல உற்சாகமாக நடக்குது.

அடுத்த நாள்.

சுபஹுக்கு எழும்பி அவ்ராதுகள எல்லாம் ஓதுர நிஸாரா மாமி அன்டக்கி  சொணங்கித் தான் எழும்பினா. முந்தின நாள்ட நிகழ்ச்சி எல்லாம் மனசுக்குள்ள ஓடுது. அவட  தலை, பாரமாக இருக்குது.

கெணத்துப் பக்கம் ஜன்னல திறந்தா  ரெக்ஸோனா சோப் வாசம்.

கறிவேப்பிலச் செடியச் சுத்தி சோப்பு நுரை தள்ளுது.

அத பார்க்க முடியாம மாமி படக்குனு தலய திருப்பிக் கொண்டுட்டா.

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) W1010
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty நித்தியமானவன்

Post by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 3:59 pm

இரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ‘ரூம் நண்பரிடம்’ சொல்லிவிட்டேன்.

புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி வைத்துக் கொண்டேன். வெவ்வேறு தருணங்களில் சேகரித்து வைத்திருந்த பலமொழிப் படங்களின் சீ.டி, டிவீடி கேஸட்டுகளை ஒரு பையில் போட்டுக் கொண்டேன் இனி அவற்றை எடுத்துப் போவதற்கில்லை வேறு யாருக்காவது பயன்படட்டும் என்று அறையிலேயே வைத்துவிட்டேன்.. இரவு அறைக்கு திரும்புகையில் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ’ரூம் நண்பர்’ வந்தபிறகு சொல்லிக்கொண்டு புறப்பட வேண்டியதுதான்.

என் பொருட்களையெல்லாம் எடுத்த பிறகு அலமாரியில் நான் பயன்படுத்திக்கொண்டிருந்த அடுக்கு வெறுமைகூடியிருந்தது. சட்டைகளை மாட்டும் கம்பிகள் அனாதைகளாக சுவற்றில் ஒட்டியிருந்தன. அறையின் முக்கால் பங்கு இடத்தை என் பொருட்கள்தான் நிறைத்திருந்திருக்கின்றன என்பதை உணர்த்தும் விதமாக துடைத்து எடுக்கப்பட்டதைப் போல தோற்றமளித்தது அறை.

எடுத்துப் போவதற்கு வேறு எதுவும் இல்லை நல்ல நினைவுகளும் கூட.. சுவற்றில் போட்டோவாக ஒட்டி வைத்திருந்த மார்லன் பிராண்டோவும், சார்லி சாப்ளினும் என்னைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதைப் போல இருந்தது. உடனே அந்தப் படங்களைக் கிழித்தேன்.

போன் அடித்தது.. ஈரத் தலையை துவட்டிக் கொண்டே எடுத்தேன். ஏஜென்ட் யுவராஜ் தான் அழைத்தான்.

“சண்முகம்..தாசில்தார் கேரக்ட்ருப்பா..சின்ன பட்ஜெட்டுங்கறதால.. கம்பெனி காஸ்ட்யூம் கிடையதாம்.. நீ ஃபார்மல் ஷர்ட் ரெண்டும், பேண்ட்டும் எடுத்துட்டு வந்துடு”

மளமளவென சொல்லிவிட்டு துண்டித்துவிட்டான். இரண்டு செட் சட்டைகளை இஸ்திரி செய்து மடித்து வழக்கமாக எடுத்துச் செல்லும் பையில் வைத்துக் கொண்டேன்.

வடபழனி பேருந்து டெப்போவை வந்தடையும்போது வானம் நீலத்திலிருந்து கறுப்பைப் பிரிக்கவில்லை. இரவு நிறுத்திவைக்கப் பட்டிருந்த பேருந்துகள் எல்லாம் நின்றுகொண்டே உறங்குவதைப் போல காட்சியளித்தன. பசித்தது டீ குடிக்கப் போகலாம் அதற்குள் ஏஜென்ட் வந்துவிடக் கூடும். வந்தால் அவனே டீ வாங்கித் தருவான். சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. டெப்போவில் சில பேருந்துகள் புறப்படத் தயாராகி உறுமிக் கொண்டிருந்தன.

இடதுபுறம் பார்த்தேன் வசந்தபவன் பக்கமாக பல வயதுக் கலவையான ஆண்கள் பெண்களென ஆட்கள் வரத் தொடங்கினர். அவர்கள் திரைப்படங்கள், சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிற்குமான உதிரி நடிகர்கள்.

“ஆமாம்” “இல்லை” “ஓகோ” இதுபோன்ற ஒற்றை வார்த்தைகளை கூட்டமாக முழங்கவும், பிரதான கதாபாத்திரங்களின் செய்கைகளுக்கு பின்னால் நின்று கைகளை உதறி பதட்டமடையவோ, கைதட்டி ஆர்ப்பரிக்கவோ, வாய் பொத்தி ஆச்சர்யப் படவோ செய்யும் துணைநடிகர்கள்.

சென்னையின் பல மூலைகளிலும் ஏதோ ஒரு அறையில் ஒண்டிக்கொண்டு என்றைக்காவது தமிழ்சினிமாவின் மறக்கமுடியாத நட்சத்திரமாக ஆகிவிட வேண்டுமெனத் துடிக்கும் மின்மினிகள். தினசரி வடபழனி டெப்போ, ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் என அதிகாலையிலயே வந்து நிற்பார்கள். இவர்களை படப்பிடிப்புகளுக்கு துணைநடிகர்களை அழைத்துவரக் கூடிய ஏஜென்ட்கள் அன்றைய நாளின் படப்பிடிப்புக்குத் தேவையானவர்களை அழைத்துச் செல்வது அன்றாட நிகழ்வு! கமிஷன் போக ஏஜென்ட் கொடுக்கும் சொற்பத் தொகைக்கு அன்றாடக் கூலிகளாய் செல்பவர்கள்.  ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்பது இவர்களின்  சினிமா வட்டாரத்துப் பொதுப்பெயர்.

“வணக்கம் தம்பி” முதுகில் விழுந்த குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

வலதுகையில் சுருட்டி வைத்துக்கொண்டிருந்த துணிக்கடை கட்டைப்பையை உயர்த்தி காட்டினார் தாடிகிருஷ்ணன். கண்களையும், மூக்கையும் தவிர மொத்த முகமும் தாடிக்குள் புதைந்திருந்தது. தொண்ணூறுகளில் இருந்து முப்பது வருடங்களுக்கும் மேலாக துணைநடிகர்.

“வணக்கம்ணே”

”தம்பிக்கு எங்க சூட்டிங்..? சீரியலா படமா?” என என் வலதுகரத்தைப் பிடித்துக்கொண்டு கேட்டார். விழிகளால் புன்னகைத்தார்.

”படம்தாண்ணே.. திருவான்மியூர்ல..உங்களுக்கு?” போலியாக வலிந்து ஒரு சிரிப்பை உருவாக்கிக் கொண்டேன்.

”தேவதையின் கணவன் சீரியல்ல..கேரக்டரு பண்றன் தம்பி.. டைரக்டரு நமக்கு எட்டு ஒம்பொது வருசத்துக்கு முன்னாடிலருந்து பழக்கம்..கதைப்படி ஹீரோயினிக்கி ஒரிஜினல் அப்பாவா பிளாஷ்பேக்கில் வர்ற மாதிரி.. அருமையான கேரக்டரு..” மிகுந்த உற்சாகமாக சொல்லிக்கொண்டே இருந்தார். அவ்விடத்தை விட்டு துரிதமாக நீங்க வேண்டுமென்ற மனநிலையில் அவர் பேசுவதை கவனிப்பது போலவே தலையை திருப்பிப் பார்வையை வேறுபக்கம் செலுத்தினேன்.

அங்கே மரத்தடிக்குக் கீழ் குழுவாக நின்றிருந்தவர்களை நோக்கி கணேசன் வந்தார். முன் வழுக்கை விழுந்த நெற்றியில் சந்தனமும், குங்குமமும் துலங்கியது, கரிய நிறம், பிரேம் இல்லாத கண்ணாடி பளபளத்தது, புலிப்பல் வடிவில் மீசை முறுக்கம். ஒரு காலத்தில் துணை நடிகராக இருந்து தற்போது ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுக்கு ஏஜென்ட்.. நல்ல பணப்புழக்கம்.. கணேசன் கூட்டத்திற்கு மையமாக நின்று “ரெண்டு பாட்டி.. தொப்பையோட மூனு போலீஸ்.. அப்புறம் அஞ்சு லேடீஸ்..” என்று சொல்ல பத்து பேர் அவர் சொன்ன விதத்தில் கூட்டத்தில் இருந்து தனியே உதிர்ந்தார்கள்.. “கொஞ்ச நேரத்துல நம்ம வேன் வந்துரும் நீங்கள்லாம் வளசரவாக்கம் தீபா சூட்டிங் ஹவுஸ்  வந்திடுங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த கூட்டத்தை நோக்கியவர் என்னைப் பார்த்துவிட்டார்.

“சண்முகம் நானே ஒனக்கு போன் பண்ணனும்னு இருந்தேன்..”

கணேசன் பேசிக்கொண்டே வந்தார்.. இடையில் அவருக்கு தாடிகிருஷ்ணன் வைத்த வணக்கத்தை அவர் கவனிக்கவில்லை..

”ஆனந்த் சார் படத்துல ஒரு சின்ன ரோல் இருக்காம்.. நான் உன் போட்டோ அனுப்சிட்டேன்..ஆபீஸ் அட்ரஸ் அனுப்புறேன் போய் பாருய்யா” என்றார்.

“அண்ணன்… இல்லண்ணே இன்னைக்கு ஊருக்குப் போறன்ணே..”

“அட நல்ல வாய்ப்புய்யா..போயி பாரு”

“இல்லண்ணே ஊருக்கே போயிடலாம்னு..”

நான் முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னது அவருக்கு வெறுப்பேற்றியிருக்க வேண்டும். “சரி சண்முகம் உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்..  அவருக்கு ஒரு மாதிரியான சாய்ந்த  நடை..

கணேசன் போனவுடன் கிருஷ்ணன் அடங்கிய குரலில் கேட்டார் “ஏன் தம்பி வந்த வாய்ப்ப இப்புடி ஒதறி உடுற?”

”அடப் போங்கண்ணே வாய்ப்பு வாய்ப்புன்னு வயச உட்டதுதான் மிச்சம்” எனக்கு குரல் உடைந்துவிட்டது

“அப்டி நம்பிக்கை இல்லாம பேசப்புடாது சண்முகம்.. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு நம்பிக்கதான் உரம் அத எதனாலயும் உட்றக்கூடாது”

”நம்பிக்க நம்பிக்கன்னுதான்ணே இத்தன வருசமா ஓட்டிக்கிட்டு இருந்தேன்.. நடிக்கணும்ங்கற ஆசையில இருவது வயசுல ஊரவிட்டு ஓடி வந்தன்.. இன்னய வரைக்கும் வீட்டுக்குன்னு நான் எதையுமே செஞ்சதில்ல.. என் தம்பிதான் எல்லா பொறுப்பையும் எடுத்துக்கிட்டான். என் அம்மா செத்தப்போ அடக்கம் பண்ணக்கூட என் கையில இருந்து காசு கொடுக்க முடியல.. என் தங்கச்சி கல்யாணத்துல கூனிக் குறுகி ஒன்னுமே செய்ய முடியாம போயி அவமானத்தோட நின்னேன்..முப்பத்தியேழு வயசுல கல்யாணத்தப் பண்ணி பொண்டாட்டிகிட்ட ஒரு மாசத்துல சென்னைக்கு கூட்டிட்டுப் போயிடுறேன்னு சொல்லி சொல்லி இந்தா அந்தான்னு வருசம் எட்டாயிருச்சி..

அஞ்சு வயசுல ஒரு பொம்பளப்புள்ள இருக்கு அதுக்கு ஒரு பொட்டு தங்கம் வாங்கிப் போட வக்கில்லாத நாய் வாழ்க்க என்னத்துக்குன்ணே? ஊருல ஒரு நல்லது கெட்டதுல நிம்மதியா கலந்துக்க முடியாம, யாருகிட்டையும் முகம் கொடுத்துப் பேச முடியாம, குடும்பத்த விட்டு அனாதையா ஒரு சின்ன ரூம்ல ஒண்டிகிட்டு வாய்ப்பு வரும் மயிரு வரும்னு ஏங்கிக் கிட்டே இருந்தது போதும்னுதான் சொந்த ஊருக்கே போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. ஊருக்குப் போகனும்னு முடிவு பண்ணதுக்கு அப்றம் ஏஜென்ட் கூப்ட்டான்..  ஆயிரம் ரூவா கெடைக்கும் ஊருக்குப் போகுற செலவுக்கு ஆகும்ங்கற ஒரே காரணத்துக்காகதான் கடசியா இன்னைக்கிப் போறேன்” சொல்லும்போதே எனக்கு விதிர்விதிர்த்தது. கைகளில் வந்த நடுக்கத்தை மறைக்க கைகளை பின்னால் கட்டிக்கொண்டேன்.

சற்று அமைதியாயிருந்த கிருஷ்ணன் சமாதானப்படுத்தும் தொனியில் பேச ஆரம்பித்தார் “இது எல்லா சினிமாக்காரனுக்கும், எல்லா ஆர்ட்டிஸ்ட்டுக்கும் நடக்குறதுதான் சண்முகம்.. இன்னைக்கி ஜெயிச்சி நிக்கிற எல்லார் வாழ்க்கைக்குப் பின்னாடியும் இந்த மாதிரி ஒரு கத இருக்கு.. ஜெயிக்கனும்ங்கற வெறியை.. அவமானத்தையும், பசியையும் விட வேற எதாலயும் கொடுக்க முடியாது சண்முகம். அதப்புடிச்சு ஜெயிச்சவனதான் இன்னைக்கி உலகம் அன்னாந்து பாக்குது”

“அண்ணன் வெறும் பேச்சு பேசியே பாதி வாழ்க்கை போயிடிச்சின்ணே.. இதவிட நம்பிக்கை வார்த்தைய நான் நிறய பேருக்கு சொல்லிருக்கேன்.. கைக் கொழந்தைய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போக எரநூறு ரூவா இல்லாம தலையப் பிச்சிக்கிட்டு நின்னுருக்கேன்ணே.. எனக்குப் புடிச்ச மாதிரி சினிமாவுலயும் முன்னுக்கு வர முடியாம, குடும்பத்தோடயும் நிம்மதியா இருக்க முடியாம ரெண்டு வாழ்க்கையையுமே தொலச்சிட்டு நிக்கிறேன்ணே.. அதான் இனிமேலாவது ஊர்ல போயி எதாவது பொழைக்கிற வழிய பாக்கலாம்னு மொத்தமா சென்னைய விட்டே போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்” இதுதான் இறுதிச்சொல் என்பதுபோல அழுத்திச் சொன்னேன். அவர் எதுவுமே சொல்லாமல் தாடியைத் தடவியபடி நின்றிருந்தார். அவருக்கான வண்டி வந்ததும் சட்டென்று ஒரு சின்ன தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். எனக்கு அவரை விவாதத்தில் வென்றுவிட்ட சிறிய பெருமிதத்தில் புன்னகைக்கத் தோன்றியது.

தாடிகிருஷ்ணன் குடும்பம் உறவு என யாருமின்றி தனியாக இருப்பவர். அவருக்கு எந்தவிதமான குடும்ப அழுத்தமோ, இத்தனை வருடங்களாக துணைநடிகராகவே இருப்பதைப் பற்றிய வருத்தமோ எதுவுமில்லை.

ஹாரன் சத்தம் அழைத்தது.. என் ஏஜென்ட் யுவராஜ் வந்துவிட்டான்.  பக்கத்துக் கடையில் டீ குடித்தோம். அவனது இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டேன்.  

ஏஜென்ட்கள் அழைத்துப் போன பின்னே மீதமிருந்த துணைநடிகர்கள் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது பேர் மரத்தடியிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். யாரும் அழைத்துச் செல்லாததால் இன்று அவர்களுக்கு வேலை இல்லை அதனால் இன்றைக்கு அவர்களுக்கு சம்பாத்தியமும் இல்லை.

திருவான்மியூர்  தாண்டி கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து முட்புதர்கள் அடர்ந்திருந்த ஓரிடத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது.  

லைட்மேன்கள் கனமான லைட்களைத் தூக்கிக் கொண்டு உற்சாகமாக  பேசிக்கொண்டு நடந்தார்கள், மூன்றுபேர் இருபதடி கிரேனை தள்ளிக்கொண்டே வந்தார்கள், புரடக்‌ஷன் பையன் கையில் மாட்டியிருந்த இரண்டு பிளாஸ்க்குகளில் இருந்து படப்பிடிப்பு தளத்தில் உள்ள எல்லோருக்கும் தேநீர், காபி என கேட்டுக் கேட்டு ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

வட்டத் தொப்பியும், கண்ணாடியும் அணிந்த கைகளை விரித்து கேமரா கோணம் காட்டி ஒளிப்பதிவாளரிடம் விளக்கிக் கொண்டிருந்தவர்தான் இயக்குனர் என்று தெரிந்தது.

சற்றுத் தள்ளி ஒரு மரத்தடியில் சூடான தோசைக் கல்லில் தண்ணீர் தெளித்து தோசை ஊற்ற தயாரான மாஸ்டரின் முன்பு ஏற்கனவே பாதி சாப்பிட்டிருந்த பொங்கல், இட்லி மிச்சங்களின் எச்சில் தட்டோடு பத்து பதினைந்து பேர் முற்றுகையிட்டிருந்தார்கள்.

நான்கு லைட்மேன்கள் டிராக் போடுவதற்காக சிறு தண்டவாளங்களை பரபரப்பாக முடுக்கிக் கொண்டிருந்தனர். உடைகளுக்கென்று நிற்கும் பெட்ஃபோர்ட் வேனில் போலீஸ் உடைகளை அணிந்தபடி நிற்கும் துணை நடிகர்களுக்கு பெல்ட், ஷூ என மாட்டிவிட்டுக் கொண்டிருந்தார் காஸ்ட்யூமர் செல்வம். எனக்கு நன்கு தெரிந்தவர்

“சண்முகம் எப்டிப்பா இருக்க?”

“நல்லா இருக்கேன்ணே.. சொந்த காஸ்ட்யூம்னாங்க.. தாசில்தார் ரோலு”

“ஆமா..ஆமா.. இந்தா இந்த ஷூவ மாட்டிக்க பத்தாம் நம்பர்தான ஒனக்கு?”

அவர் பார்க்காமலே அளவு சொன்னதைப் பார்த்து பக்கத்தில் இருந்த அவரது உதவியாளருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

“இன்னைக்கி நேத்தி பழக்கமா?” சிரித்துக்கொண்டே ஷூவை எடுத்து சாக்ஸை உதறி என் கையில் கொடுத்தபடி சொன்னார் செல்வம். வாங்கிக் கொண்டு அங்கிருந்து விரைந்தேன்.  

கலைந்த தலையும், வியர்வையில் நனைந்த சட்டைகளுடன் தலையில் தொப்பியணிந்து குறுக்கும் நெடுக்குமாக விரைந்து ஓடிக் கொண்டிருந்தவர்களை பார்க்கும்போதே அந்தப் படப்பிடிப்பின் உதவி இயக்குனர்கள் யாரென்று எளிதில் அறிய முடிந்தது.

துணை நடிகர்கள் சாப்பிட்டுவிட்டு பேசி சிரித்தபடி அங்கிருந்த கட்டிடத்தின் புறவாசல் ஓரமாக குவிந்திருந்தார்கள். கல்யாண வீட்டின் கலகலப்பு, திருவிழாவின் குதூகலம் என படப்பிடிப்பு தளமே சுறுசுறுவென இயங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர்  வடம் பிடித்து இழுக்கும் மாயுரநாதர் கோவிலின் ஐப்பசி மாத தேரோட்டம் நினைவில் வந்து போனது.  

ஒரு உதவி இயக்குனர் சில ஆட்களை மேக்கப் மேனிடம் அழைத்து வைத்து எதையோ விளக்கிச் சொல்ல அவர்களுக்கு ஒப்பனை தொடங்கப்பட்டிருந்தது. நான் எடுத்து வந்திருந்த சொந்த உடைகளை அணிந்து கொண்டு அந்த உதவி இயக்குனரிடம் சென்று “எனக்கு என்ன மேக்கப்?” என்றேன். “நீங்க தாசில்தாருல்ல..கொஞ்சம் வெயிட் பண்ணுங்கண்ணே உங்களுக்கு ஸ்பெஷல் மேக்கப் இருக்கும்.. நீங்க போய்ட்டு சாப்டுருங்க..நான் கூப்பிடுறேன்” எனச் சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த நோட்டோடு ஓடினான். அவன் ஓடிய திசை பார்த்து  “என் டையலாக்” என்று எனக்குள்ளேயே முனகிக்கொண்டேன்.

படத்தின் கேஷியர் அமர்ந்திருக்கும் இடத்தைத் தேடிப் பார்த்தேன். ஒரு சிறிய மாமரத்து நிழலில் மேனேஜருடன் கேஷியரும் அமர்ந்திருந்தார். ஐந்து மணிக்குள் என் பகுதி முடிந்துவிட்டால் பணம் வாங்கிக் கொண்டு புறப்பட்டுவிட வேண்டும். பல கம்பெனிகளில் பணம் விஷயத்தில் ஏமாந்த முன்னனுபவத்தினால் எந்த தளத்திற்கு சென்றாலும் முதலில் கேஷியரைப் பார்த்துவிடுவது தற்போதெல்லாம் அனிச்சையாகிவிட்டது.

சாப்பிட்டு வந்து அமர்ந்திருந்தேன். காட்சிக்காக நெடுநேரம் காத்திருப்பது என்னைப் போன்ற குறுங்கதாபாத்திரங்கள் செய்பவர்களுக்கு புதிதல்ல. நிதமும் ஐந்திலிருந்து பத்து பட அலுவலங்களுக்கு சென்று புகைப்படங்களைக் கொடுத்து அவர்களிடமிருந்து அழைப்பு வரும் வரும் என்று காத்திருந்தால் நூற்றுக்கு பத்து சதவீதத்தினர் மட்டுமே அழைப்பார்கள். ஒரு படத்தில் அரைநொடிக்கும் குறைவான நேரமே வந்த “ஓகே சார்” என்ற துளி வசனத்தைப் பேசுவதற்காக ஐந்து மாதங்கள் காத்திருந்திக்கிறேன்.

அலைபேசி அடித்தது ஊரிலிருந்து மனைவி அழைக்கிறாள்

“என்னங்க..பிறந்தநாள் வாழ்த்துகள்ங்க”

“ம்” பிறந்தநாளை நினைவில் வைத்திக்கொள்ளும் அளவிற்கு காலம் ஒன்றும் நட்புடன் இல்லை என்னிடம்.

“எப்பங்க ஊருக்கு வர்றீங்க முந்தாநாளே கெளம்பறதா சொன்னீங்களே”

“ஒரு சின்ன வேலை இருந்துச்சு…இன்னைக்கு நைட் கெளம்பிடுவேன்”

“நீங்க இங்கியே வேல பாத்துக்குறேன்னு சொன்னதும் அப்பா கண்ணாரத்தெருவுலயே ஒரு கட வந்துருக்குன்னு சொன்னாங்கங்க..”

“சரி..சரி.. நான் அப்பறம் பேசுறேன்” எனச்சொல்லிவிட்டு அழைப்பை  துண்டித்துவிட்டேன்.

போட்டோ கொடுத்த ஒரு சில திரைப்பட அலுவலகங்களில் இருந்து வரும் அழைப்புகளால் அங்கே நடிப்புத் தேர்வுக்கு செல்வேன். கற்றறிந்த அத்தனை வித்தைகளையும் அபிநயிக்க வேண்டுமென்று உத்வேகத்துடன் சென்றால் முப்பது நொடிக்குள் எதையாவது நடித்துக் காட்டச் சொல்வார்கள். அங்கிருக்கும் உதவி இயக்குனர்கள். நடித்துக் காட்டியதும் வியந்து பாராட்டுவார்கள். படப்பிடிப்பு தேதி அறிவித்த பின் அழைப்பதாக சொல்வார்கள். நெடுநாட்கள் அழைக்கமாட்டார்கள் திரும்ப போன் செய்தால் நாளை, நாளை மறுநாள் என எதாவது ஒரு தேதியை சொல்லி விடுவார்கள். பிரசவ தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிறைசூலியைப் போல நான் அந்த தேதி குறித்தே கனவு கண்டுகொண்டிருப்பேன். குறிப்பிட்ட தேதியில் போன் செய்வேன்  கனவுகளில் வெடிகுண்டு வைத்ததைப் போல படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பார்கள்.

மேக்கப் போட கூப்பிட்டார் அந்த உதவி இயக்குனர். மேக்கப் மேன் நீண்ட அனுபவஞானம் உடைய வயதானவர். இரண்டு தேசிய விருது உட்பட பல அங்கீகாரம் பெற்றவர். என்னை அலட்சியமாக நோக்கினார். என்னை அருகில் இருத்தி தாடையை இடவலமாகப் பார்த்தார். தலைமுடியெல்லாம் கலைத்துவிட்டு. முகத்தில் கறுப்படிக்கத் தொடங்கினார்கள். பற்களில் ரத்தம் காய்ந்த சிவப்புக்கறை தடவப்பட்டது. இறந்துகிடக்கும் ஒரு சடலத்தின் குளோசப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கன்றிப் போன காயத்தை ஒப்பனையிலே உருவாக்கத் தொடங்கினார் மேக்கப் மேன்.  அரைமணிநேரத்திற்கு பின் கண்ணாடியில் பார்க்கும்போது என் முகத்தை எனக்கே அடையாளம் தெரியவில்லை.

சிறிது நேரத்தில் காஸ்ட்யூம் அசிஸ்டண்ட்டோடு வந்த அதே உதவி இயக்குனர் நான் அணிந்திருந்த சட்டையை முள் மாட்டி கிழிந்ததைப் போல நறுக்கச் சொல்ல அப்படியே நறுக்கப்பட்டு சட்டை மீது சேற்றைக் குழைத்துப் பூசி அழுக்காக்கப்பட்டது.

உதவி இயக்குனரிடம் “சார் இப்பவாவது என் டயலாக் என்னன்னு சொல்லுங்க..நான் ரெடியாகிக்கிறேன்..” எனக்கேட்டேன்.

என் முகத்தை நோக்கி “அண்ணே சாரிண்ணே சொல்ல மறந்திட்டேன்..உங்களுக்கு இதுல டயலாக்லாம் இல்ல..ஹீரோவ மெரட்டுரதுக்காக.. வில்லன் உங்கள அடிச்சுக் கொன்னு முள்ளுக் காட்டுல போட்டுட்டு போய்டுவாரு..ஹீரோவோட ஃபிரண்ட் வந்து கண்டுபிடிச்சு ஹீரோவுக்கு ஃபோன் பண்ணுவாரு..அதான்ணே இப்ப எடுக்கப் போறோம்”

“டெட் பாடியா நடிக்கனுமா?”  பதட்டத்தில் சற்று மிகை ஒலியோடு கேட்டுவிட்டேன்.

“இல்லண்ணே கதைப்படி போன சீன்ல ஹீரோ தாசில்தார்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணப் போறதா சொல்லிருப்பாரு..அதான் ஒடனே வில்லன் தாசில்தார் அதாவது உங்கள கொன்னுடுறாரு..குத்துயிரும் கொலை உயிருமாக் கெடந்து கொஞ்சம் கொஞ்சமா சாகற மாதிரி…”

எனக்கு சட்டென்று நெற்றிப்பொட்டில் ஸ்பிரிங்கை இழுத்து அடித்ததைப் போல இருந்தது.

நல்ல நடிகனாக வேண்டுமென்ற கனவே செத்துவிட்ட பிறகு செத்துப் போவது போல நடிப்பதிலே என்ன சிரமம் இருக்கப் போகிறது.

என்னைக் கடந்து போய் பின் திரும்ப வந்து

“ஸாரிண்ணா ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்க லஞ்ச்க்கு அப்புறம் அநேகமா உங்க சீன்தான்” என்று சொல்லிவிட்டுப் போனார் உதவி இயக்குனர்.

சினிமாவில் ஒரு வார்த்தைக்கு இரண்டு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அப்புறம் பார்க்கலாம் என்றால் இனி பார்க்கவே முடியாது என்று அர்த்தம். இரண்டு நிமிஷம் காத்திருங்கள் என்றால் இரண்டு மணிநேரம் என்று அர்த்தம், நடிக்க அழைத்து, தளத்திற்கு வந்து நடித்து, படத்தொகுப்பில் வெட்டுப்படாமல் தப்பித்து திரையில் பார்ப்பது வரை சினிமாவில் எதற்குமே உறுதி இல்லை. இங்கு நீர்க்குமிழியால் எழுப்பப்படும் பிரம்மாண்ட கோட்டைகள் அசாதாரண நம்பிக்கையை அடித்தளத்தமாகக்கொண்டு உருவாகின்றன.
அதை அலைக்கழிப்புகளும், நிராகரிப்புகளும் தகர்த்தெறிந்து கொண்டேயிருக்கின்றன. காத்திருப்பின் பெருவெளியில் நம்பிக்கையெனும் காற்று இன்றி எத்தனை காலம்தான் மூச்சடைத்து நிற்பது? வேண்டாம் இதுபற்றி இனி நினைக்க வேண்டாம். நினைக்க ஒன்றுமில்லை. இரவு ஊருக்கு கிளம்பிவிட வேண்டும். தீர்மானமாக உள்ளூரச் சொல்லிக்கொண்டு மனதின் புலம்பலை முடிவுக்குக் கொண்டு வந்து நிறுத்தினேன்.

உதவி இயக்குனர் ”ஷாட் ரெடி” என்று அழைத்தார்.

ஒரு சிவந்த இளைஞன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடை அணிந்து நின்றிருந்தார். கதைப்படி அவர்தான் நான் கொலையுண்டு கிடப்பதை கண்டறியப்போகிறவர் என்று யூகித்துக்கொண்டேன். அவருக்கு அந்த உடை சற்றும் பொருத்தமில்லாமல் இருப்பதை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டுட்க்கு அவ்வளவு அதிகாரம் கிடையாது என்ற நிதர்சனம் திரையாக மறைத்தது.

”டேய் இன்ஸ்பெக்டருக்கு பின்னாடி நிக்க வேண்டிய நாலு கான்ஸ்டபிள்ஸ் எங்கடா?” இயக்குனர் உதவி இயக்குனர்களைப் பார்த்து மைக்கில் கத்த ஆளுக்கொரு புறமாய் சிதறிய உதவி இயக்குனர்கள் மரத்தடிக்கு கீழ் அரைத் தூக்கத்தில் இருந்த போலீஸ் சிப்பந்தி உடையணிந்த துணைநடிகர்களையும், இரண்டு மூன்று பொதுஜனமாக நடிக்கும் துணைநடிகர்களையும் அழைத்துக்கொண்டு திரும்பினர்.

படப்பிடிப்பு நேரத்தில் இப்படி எங்காவது சென்று புகை பிடிக்கவும், இளைப்பாறவும் சென்றுவிடும் துணைநடிகர்களால் நேரத்துக்கு காட்சி துவங்காத கோபத்தால் உதவி இயக்குனர்களுக்குத்தான் திட்டுகள் கிடைக்கும்.

வந்த கான்ஸ்டபிள் உடையணினிந்த ஒருவரிடம் துணைநடிகை ஒருவர் எதோ சங்கேத பாஷையில் சைகை காட்ட அவர் சட்டென்று திரும்பி தனது பேண்ட் ஜிப்பை சரி செய்தார்.

நான் இயக்குனர் எனக்கு சொன்ன முள்காட்டின் நடுவே சென்று படுத்தேன். போலீஸ் வேடமிட்டவர்கள் கேமராவிற்கு பின்னாலிருந்து வருவார்கள் என்று ஏற்கனவே எனக்கு சொல்லப்பட்டிருந்தது. நான் படுத்திருந்த இடத்திற்கு சற்று தொலைவில் கிடந்த நைலான் கயிறிலிருந்து நகரத்துவங்கும் கேமரா எனது காலிலிருந்து பயணப்பட்டு என் முகத்தில் வந்தடையும்போது உயிர் பிரிவதாக நடிக்க வேண்டும்

“கேமரா ரோல்” என இயக்குனர் கட்டளையிட,

“ரோலிங்” என்று ஒளிப்பதிவாளர் ஆமோதிக்க

“ஆக்‌ஷன்” என இயக்குனர் சொன்னவுடன் ட்ராலியிருந்து கேமரா மெதுவாக நகர்ந்தது பூட்ஸ் சத்தங்கள் படபடவென கேட்க இயக்குனர் “கட்” என்று எரிச்சலுடன் கத்தினார். “ஜூனியர்ஸ் நீங்க ஏன்யா முன்னாடி போறீங்க..  இன்ஸ்பெக்டர் சார்.. நீங்கதான் முன்னாடி போகனும் இவங்கள்லாம் உங்கள பின்தொடர்ந்து வருவாங்க” என்று அந்த இன்ஸ்பெக்டர் இளைஞனிடம் சொன்னதும் அவர் ஆமோதிப்பதற்காக வேகமாக தலையாட்டினார்.

”ஒன்மோர்” என்றார் இயக்குனர்

மறுபடியும் கேமரா நகர்ந்தது.. இந்த முறையும் அந்த இளைஞர் முன்னால் வரவில்லை.. “கட்ட்ட்..” இயக்குனரின் குரல் சற்று ஓங்கி ஒலித்தது.

இது திரும்ப திரும்ப நான்கு முறைக்குமேல் சென்றது.

இந்த சினிமா உலகில் பணத்தையும், பரிந்துரைகளையும் மட்டுமே தகுதியாக வைத்துக்கொண்டு வந்தவர்கள்தான் பெரும்பான்மையாக நிறைந்திருக்கிறார்கள். ஒரே டேக்கில் சில நிமிடங்களில் எடுத்து முடியவேண்டிய காட்சியை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். போலீஸாக நடிக்க வேண்டியவனை பிணமாகவும், பிணமாக நடிக்க வேண்டியவனை போலீஸாகவும் நடிக்க வைத்துக்கொண்டிருக்கும் காலத்தை நம்பி இதற்கு மேலுமா இத்துயரத்தில் உழல வேண்டும்?

இன்ஸ்பெக்டருக்கும்,கான்ஸ்டபிளுக்கும் தனியே சிறப்பு நடிப்பு ஆலோசனைகளை வழங்கினார் இயக்குனர். அவர்கள் வருவதைப் பார்த்தால் இந்தமுறை சரியாக செய்துவிடுவார்கள் என்று தோன்றியது.

“ஸார் லைட் போயிருச்சு ஸார் டூ மினிட்ஸ்..” என்று வானத்தைப் பார்த்துக்கொண்டே லைட் மீட்டர் வைத்திருந்த உதவி ஒளிப்பதிவாளரின் குரல் கேட்க எல்லோரின் முகமும் வெவ்வேறு கோணங்களில் தொங்கியது.

தரையில் படுத்திருந்ததால் புழுதி பட்டு முகத்தில் போடப்பட்டிருந்த கன்றிய காயத்துக்கான ஒப்பனை, கன்னத் தசைபரப்பை இறுக்கி லேசாக வலித்தது. மேலுதட்டை மடக்கி கீழுதட்டால் ஊதிக்கொண்டேன் காற்று முகத்தில் பட்டதும் சற்று இதமாக இருந்தது.

உயிர்விடுவது போன்று முன்பு நான் பார்த்த படங்களில் நடிகர்கள் நடித்த காட்சிகளை எல்லாம் ஒருமுறை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தேன். மகளிர் மட்டும் படத்தில் பிணமாகவே வந்த நாகேஷ் நினைவுக்கு வந்தார். ஒரு நடிகன் இறந்துபோவது போல நடித்தாலும் கூட காலம் கடந்தும் உயிரோடுதானே இருப்பான். நினைக்குந்தோறும் அவனைக் கண்ணாரக் காண முடியும். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் பார்க்கப்பட்டு…நினைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறான் எனில் எல்லோர் நினைவிலும் வாழ்கிறவனுக்கு நிஜத்தில் இறப்பு ஏது?
உண்மையில் இறப்பு என்பது ஒரு வாழ்க்கை கொண்டவனுக்குத் தானே.. போன படத்தில் டாக்டராக நடித்தேன் இந்த படத்தில் தாசில்தார்… பல வாழ்க்கையைக் கூட விதிவிலக்காக ஒருசிலர் வாழ்ந்து பார்த்துவிட முடியும். ஆனால் நடிகனால் மட்டும்தானே செத்துப்பார்த்து விடவும் முடிகிறது.. உயிரை உடலுக்குள் மட்டும் வைத்திருந்தவனுக்குத்தான் மரணத்துக்குப் பிறகு ஒன்றுமில்லை. உயிரை தன் கலைக்குள் வைத்திருப்பவனுக்கு மரணம் என்ற ஒன்றே இல்லைதானே?

”சைலன்ஸ்”

இயக்குனரின் குரலால் எல்லோரும் அமைதியானார்கள்

“ஆல் ஓக்கே சார்..லைட் வந்திருச்சி போகலாம்” என்று மறுபடியும் உதவி ஒளிப்பதிவாளரின் குரல்..

இயக்குனர் “ஆக்‌ஷன்” எனச் சொல்ல கேமரா நகர்கிறது.

பக்கவாட்டில் கேமரா வரும் திசை நோக்கிப் பார்த்தபடி நான் படுத்திருக்கிறேன். கயிற்றால் கழுத்தை இறுக்கிய பிறகு எப்படி இருக்குமென கற்பனை செய்து பார்க்கிறேன். பூட்ஸ் காலடி சத்தம் காதில் விழுந்ததை சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு தொண்டைக்குழியை ஏற இறங்கவிட்டேன்.  சிறுவயதில் ஒன்று இரண்டு என எண்ணச்சொல்லிவிட்டு தண்ணீருக்குள் மூச்சடக்கி இருப்பதைப்போல மூச்சடக்கிக் கொண்டேன். உடல் எடையற்று நீரில் சருகாக மிதப்பதைப்போல நினைத்துக்கொள்கிறேன்.. தொண்டைக்குள் சுவாசம் மற்றும் உணவுக்குழல் நெறிக்கப்பட்டபிறகு கருவிழிகள் மேலே சொறுகிக்கொள்வதைப்போல விழிகளை மெல்ல மெல்ல மேல் இமைக்குள் இழுத்துக்கொண்டேன்.
விழிகள் நிலைகுத்தி வானத்தையே வெறித்துப் பார்த்தேன் மெல்ல என் பார்வையிலிருந்த வானம் மறைந்து முழுவதுமாக இருண்டது.. சிறு ஓட்டைக்கூட இல்லாத இருட்டு அறையில் என்னைப் போட்டு அடைத்துவிட்டதாய் கற்பனை செய்துகொண்டேன். யோகா கற்றிருந்ததால் மூச்சைப் பிடித்து வைத்துக்கொள்ள முடிந்தது. சுற்றிலும் கேட்கும் சத்தங்கள் ஏதோ குகைக்குள் இருந்து கேட்பதைப்போல இருக்கிறது. சத்தங்கள் சன்னமாக குறைகிறது.. இப்போது சுத்தமாக ஓசைகள் எதுவும் கேட்கவில்லை. பூரண அமைதி..

“டம்” என ஏதோ ஒலி கேட்க “கட்… டேக் ஓக்கே” என்ற குரல் ஆழத்திலிருந்து கேட்கிறது.. என் உடல் அசைகிறது.. யாரோ என்னைப் பிடித்து உலுக்குகிறார்கள்.. வேகவேகமாக இழுத்துப் நெடுமூச்சு விடுகிறேன்.. தலைக்குப் புறையேறி இருமத் தொடங்கினேன். கண்களில் இன்னமும் இருள்கவிந்த புகையென எதிரில் இருக்கும் எதுவும் தெரியவில்லை.. தொண்டையில் காற்றடைத்து இருமல் தொடர்ந்தது.. என்னைச் சுற்றி ஆட்கள் கூடிவிட்ட சலசலப்பு கேட்டது. யாரோ “தண்ணி..தண்ணி” என்றார்கள். முகத்தில் நீர்த்துளிகள் வேகமாக வந்து அறைந்தன. கண்களில் மங்கிய பளபளப்பில் ஆட்கள் தெரியத் தொடங்கினார்கள்.

“என்னண்ணே பிணமா நடிக்கச் சொன்னா..அதுக்குன்னு இப்படியா.. கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டீங்களே?” உறைந்த முகத்தோடு கேட்டார் அஸோஸியேட் டைரக்டர்.

“இல்ல..கீழே படுக்கிற வரைக்கும் தோணல…ஆனா பொணம்னு காட்டனும்ல”

”அரை மணிநேரம் அப்டியே பிணமாவே இருந்தீங்களேண்ணே” அஸோஸியேட் டைரக்டர் குனிந்து செவியோரத்தில் சொல்லிவிட்டுச் சென்றார்.

படுத்திருந்தபடியே கண்களை மெதுவாக விரித்துப் பார்க்கிறேன் வானத்தின் விசாலம் மனதை என்னவோ செய்தது. நீலப்பின்னணியில் விஸ்வரூப பஞ்சுக்குழுமங்களைப் பறக்கவிட்டுக்கொண்டு பளீரென ஒளிர்ந்து கண்கள் கூசியது..

கேமரா அஸிஸ்டெண்ட் சொன்னார் ”சார் கேமராவ பார்த்து மூணு தடவ சிரிங்க” சினிமாவில் யாராவது இறந்துபோவதுபோல நடித்தால் இப்படியொரு சடங்கு..

உயிர்த்தெழுகிறேன். என் உடலிலிருந்து வெளியேறி வேறு உடலிலிருந்து உயிர் உண்டாகி எழுவதைப்போல உணர்ந்து எழுந்து அமர்ந்தேன்.

கேமராவைப் பார்த்து மூன்று முறை மிகுந்த சத்தமாக சிரித்தேன்.. முழு உடலையுமே வாயாக்கி அப்படியொரு பிரம்மாண்ட சிரிப்பு.. ஓடாமலிருந்து திடீரென இயங்கும் எந்திரம் ஓடத்துவங்கும்போது அதன் மேலிருந்து துரு கொட்டுவதைப்போல.. பசி, அவமானம், கழிவிரக்கம், வெறுமை எல்லாம் என்னிடம் இருந்து உதிர்ந்து கொட்டும்படி அதிர அதிர சிரித்தேன். அடக்கி வைத்த எதையோ வெளியேற்றிவிட்ட மனவிடுதலையால் விழிகளில் கண்ணீர் துளிர்த்து வழிந்தது.

ஆர்ட் அசிஸ்டண்ட் தேங்காயில் சூடம் ஏற்றி எனக்கு முன்னே வந்து மூன்று முறை சுற்றினார். என் மேனி சிலிர்த்தது.. நாளங்களில் ரத்தம் தடதடத்து ஓடுவதை உணர்ந்தேன். பாதங்களுக்குக் கீழே பூமி நழுவுவதைப்போல தோன்றியது…தளத்திலிருந்த எல்லோரையும் பார்த்து புன்னகைக்க வேண்டும் என்று தோன்றியது. கன்னத்தசைகள் விரிய சிரித்தபோது முதுகுத்தண்டில் ஐஸ்கட்டியால் கோடு இழுப்பதைப்போல இருந்தது.

சட்டென்று நினைவில் விளக்கெரிய ஏஜென்ட் கணேசனுக்கு போன் செய்தேன்.. இரண்டு ரிங் போனதும் எடுத்தார்.

“அண்ணே.. ஆனந்த் சார் படத்துல எதோ கேரக்டர் இருக்குன்னு சொன்னீங்களேன்ணே….நான் போயி ஆபீஸ்ல பாக்குறன்ணே..”

-செந்தில் ஜெகன்நாதன்-

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Senthil-Jeganathan_Storyjuly
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

Post by வாகரைமைந்தன் Thu Dec 30, 2021 8:15 pm

"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம்.

"எந்த அற்புத மரி?" என்றேன் நான்.

"இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்."

தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான்.

"என்னத்துக்கு சார் டி.சி?"

"என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?"

"ஆமாம். அப்பப்போ இஷ்டப்பட்டால், ஏதோ எனக்கு தயவு பண்ணுகிற மாதிரி கிளாசுக்கு வரும். போகும்."

"உம். நீரே சொல்கிறீர் பாரும்." என்று சொல்லிவிட்டு இரண்டாள் சேர்ந்து தூக்க வேண்டிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும், இன்னும் இரண்டு மூன்று ஃபைலையும் தூக்கி என் முன் போட்டார்.

"பாரும். நீரே பாரும். போன ஆறு மாச காலத்திலே எண்ணிப் பன்னிரண்டே நாள் தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டுதான் இருக்கேன். ஒரு பூச்சி, புழு இப்படி எட்டிப் பார்த்து, அந்த கடுதாசிபோட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா? ஊகூம். சர்தான் போடா நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவள். சரி ஏதாச்சும் மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு வாங்கிச்சேர்த்துக்கலாம்னா, வந்தால்ல தேவலாம். நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஷ்டப்பட்டால் வருகிறாள். வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றாள்? சே…சே…சே… என் வாயாலே அத எப்படிச் சொல்றது?

ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே, கன்னுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக் கொண்டு வர்றாள். பாண்டுங்காணும்… பாண்ட்! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர்? அப்படியே 'சிக்'குன்னு பிடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு சட்டம் போட்ட மாதிரி, அதது பட்பட்டுன்னு தெறிச்சுடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றாள். சட்டை போடறாளே, மேலே என்னத்துகுங்காணும் இரண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது?

அது மேலே சீயான்பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது. கூட இத்தினி பசங்க படிக்கறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம்? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம், ஒரு ஒழுங்கு, ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியுங்காணும்… நீர் அதையெல்லாம் ரசிச்சிருப்பீர்!"

"சார்…"

"ஓய் சும்மா இருங்காணும். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டல் டமிள்! தமிழ்சார், எனக்கு மனத்தத்துவம் தெரியும்பா. உமக்கு என்ன வயசு?"

"இருபத்தொன்பது சார்!"

"என் சர்வீஸே நாற்பது வருஷம்."

"பாண்ட் , சண்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார்."

"அதுக்காக, அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளிக்கு! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு, தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ, அவள் ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாறே-ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா?

யாரோ நாலு தடிக்கழுதைகளோட - நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு - நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே… அது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் "இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி, உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா?

"சொல்லுங்க சார்"

"உங்களுக்கு பொறாமையா இருக்கா சார்ன்னு கேட்டுட்டாள். அந்தப்பசங்க முன்னால வெச்சு மனுஷன் கண்ணாலே ஜலம் விட்டுட்டு என்கிட்டே சொல்லி அழுதார். இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்

எச்.எம்.முக்கு முகம் சிவந்து மூக்கு விடைத்தது.

“இந்த அநியாயம் இத்தோடு போகலே. சாயங்காலம், பி.டி. மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கொண்டாள். அவன் இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையணும், இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக்கொடுத்திருக்கான். தொட்டவன், எசகுபிசகா எங்கேயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?”

“என்னைத் தொட்டுப் பேசாதீங்கன்னு சொல்லியிருப்பாள்.”

“மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும்? இவள் என்ன சொன்னாள் தெரியுமா?”

எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது.

”சார்... உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுவிட்டாள். பாவம்! நம்ம பி.டி. பத்மநாபன் லீவு போட்டு விட்டு போய்விட்டான். முடியாதுப்பா முடியாது. நானும் நாலு பெத்தவன். இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு, இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சுத் தலைமுழுகிட வேண்டியதுதான்.”

“இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.”

”அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு?”
***
நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு, அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள்? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்?

நான் சுமதியிடம் சொன்னேன். எச்.எம். மாதிரிதான் அவளும் சொன்னாள்.

”உங்களுக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? நீங்க சொல்றதைப் பார்த்தால், அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது. உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிட்டால்??” என்றாள்.

அவளை சம்மதிக்க வைத்து, அவளையும் அழைத்துக்கொண்டு மரி வீட்டுக்கு ஒரு நாள் சாயங்காலம் போனேன்.

என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில், திண்ணை வைத்த, முன்பகுதி ஓடு போட்டு, பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து, பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள் சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து கிடந்தன.

“மரி,” என்று நான் குரல் கொடுத்தேன். மூன்று முறை அழைத்தபிறகுதான், “யாரு?” என்று ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. கலைந்த தலையும், தூங்கி எழுந்த உடைச் சுருக்கங்களோடும், சட்டையும் கைலியுமாக வெளிப்பட்டாள் மரி.

என்னைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம், வெளிப்படையாக அவள் முகத்தில் தோன்றியது. என் மனைவியைப் பார்த்ததில் அவளுக்கு இரட்டை ஆச்சரியம் இருக்க வேண்டும்.

“வாங்க சார்.. வாங்க, உட்காருங்க.” என்று எங்கள் இருவரையும் பொதுவாக வரவேற்றுவிட்டு நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினாள். சோபாவில் நானும் சுமதியும் அமர்ந்தோம். எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அவள் அமரச் சொன்னதும் அமர்ந்தாள்.

“தூக்கத்தைக் கலைச்சுட்டேனாம்மா?” என்றேன்.

”பரவாயில்லே சார்,” என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முகத்தில் விழுந்த முடியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டாள்.

”நீங்க எப்படி இங்கே..?”

“சும்மாத்தான்.  பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலே தானே உங்க வீடு. பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. உடம்பு சரியில்லையா?”

”தைலம் வாசனை வருதா சார்? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார்?”

“எல்லாம் ஆச்சு. வீட்டிலே யாரும் இல்லையா?”

“வீடா சார் இது....? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா செத்துப் போயிடலே. எங்களை விட்டு விட்டு போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமாக விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக்கொண்டால் அது அதிகம். அதனால்தான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜிலே தங்கற மாதிரி தோணுது.”

எனக்குச் சங்கடமாய் இருந்தது. இரவுகளில், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது.

”சாப்பாடெல்லாம் எப்படியம்மா?”

“பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லேதான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.”
சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள்.

”உன் அம்மாதானே அவங்க?”

“ஆமாங்க. இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.”

ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான், சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“மரி... ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலாக இருக்குமில்லே?”

“நான் யாருக்காக சார் படிக்கணும்?”

“உனக்காக,”

“ப்ச்!” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.

”பீச்சுக்குப் போகலாம். வாயேன்.”

”வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“வா.”

“இதோ வந்துவிட்டேன் சார்,” என்று துள்ளிக் கொண்டு எழுந்தாள். உள்ளே ஓடினாள்.
நான் சுமதியைப் பார்த்தேன்.

“பாவங்க,” என்றாள் சுமதி.

“யாருதான் பாவம் இல்லே? இந்தப் பெண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா? இத்தோட அப்பா பாவம் இல்லையா. எல்லோருமே ஒருவிதத்திலே பாவம்தான்.” என்றேன் நான்.

அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி, வெளிப்பட்டாள் மரி. பேண்ட்தான் போட்டிருந்தாள். சட்டையை டக் பண்ணியிருந்தாள். அழகாகவே இருந்தது அந்த உடை. உடம்புக்குச் சௌகரியமானதும், பொருத்தமானதும்தானே உடை.

“ஸ்மார்ட்!” என்றேன்.

“தேங்க்யூ சார்,” என்றாள், பரவசமான சிரிப்பில்.

நான் நடுவிலும், இரண்டு புறமும் இருவருமாக, நாங்கள் நடந்தே கொஞ்ச தூரத்தில் இருந்த கடற்கரையை அடைந்தோம்.

கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும் யுவதிகளும். கடலைகள், கடல் மணலில் சுகமாக வறுபட்டன.

குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்துப் பலூன்கள் பறந்தன. ஸ்டூல் போட்டுப் பட்டாணி சுண்டல் விற்கும் ஐயரிடம் வாங்கிச் சாப்பிட்டோம்.

“கார வடை வாங்கிக் கொடுங்க சார்,” என்றாள் மரி, கொடுத்தேன். தின்றாள்.

”மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமாக இருந்துச்சு. தூங்கிட்டேன்.”

“ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே,” என்றாள் சுமதி.

“இருக்கட்டுங்க்கா.”

”என்ன இருக்கட்டும். நீ வர்றே.”

வரும்போது, சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோத்துக்கொண்டு, சற்றுப்பின் தங்கி மரி பேசிக் கொண்டு வந்தாள். நான் சற்று முன் நடந்தேன்.

சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக் கருவாடு இருந்தது.

“தூள்க்கா.... தூள்! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் பயங்கரமான காம்பினேஷங்க்கா,” என்றாள் மரி.
*****
மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான்.
“ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால், சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். மரி,” என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண், சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

“ஏம்மா... சைக்கிள்ளே ஊரைச் சுற்றுகிற பெண் நீ. இங்கே இவளுக்கு வெங்காயம் நறுக்கித் தர்றியோ?” என்றேன்.

“இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்கிறது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்.” என்றாள். ஐயோ இந்தப் பயங்கரமே!

“சார், ஒண்ணு சொல்லட்டுமா?”

“ஊகூம். ரெண்டு மூணு சொல்லு.”

“சீரியஸாகக் கேட்கிறேன், சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?”

“சத்தியமாகக் கிடையாது.”

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்.

“ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?”

சிரிப்புத்தான் வந்தது.

“பைத்தியமே! உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது, தெரியுமா?
மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.”

அவள் சொனாள்: “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்.”

“எனக்கும் தெரியும்.” என்றேன்.

பத்து நாள் இருக்குமோ? இருக்கும். ஒரு நாள் மரி என்னிடம் கேட்டாள்.

”சார்.. நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை?”

நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரண்டு மணிகள் உருண்டு விழத்தயாராய் இருந்தன. அவள் கண்களில்.
“என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி  யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?”

“உனக்கே அது தோணனும்னுதானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப்புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்.” என்றேன்.

மரி, முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Prabanjan22_thumb%5B3%5D
பிரபஞ்சன்
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty அரக்கன்-என்.கணேசன்

Post by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm

அரக்கன்


பைக்கில் வந்திறங்கி, எதிர்க்குடிசை பாண்டியிடம் பேசிக் கொண்டிருக்கும் இளைஞன் முகம் மகாதேவனுக்கு மிகவும் பரிச்சயமுள்ளதாகத் தோன்றியது. அவன் பைக்கை விட்டு இறங்கும் போது ஒரு கணம் தான் அவன் முகத்தை அவர் பார்த்திருந்தார். அதன் பின் அவன் அந்தப்பக்கம் திரும்பி விட்டதால், இப்போது அவன் முதுகு மட்டும் தான் அவருக்குத் தெரிகிறது. வயோதிகத்தினால் கண்பார்வை மங்கி வருவதால் அவன் அவர் சந்தேகப்படும் நபர் தானா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. அவன் திரும்பும் போது தான் சொல்ல முடியும். அதற்குள் அவர் மனம் அலை பாய்ந்தது.

அவர் அந்த இளைஞனையே உற்றுப் பார்ப்பதை பாண்டி கவனித்தான். பாண்டியின் கண்கள் கூர்மையானவை. அவன் உள்ளுணர்வும் மிகவும் எச்சரிக்கையானது. அவனைச் சுற்றி நடக்கும் எதையும் உடனடியாகக் கூர்ந்து கவனிப்பவன் அவன். அது அவனுடைய தொழிலுக்கு அவசியமும் கூட. அவனையோ அவன் வாடிக்கையாளர்களையோ கவனிக்கும் நபர் போலீஸாராகவோ, போலீஸ் ஒற்றராகவோ இருக்கலாம் என்ற சிறிய சந்தேகம் அவனுக்கு வந்தாலும் கூட, சினிமாப்படத்தில் கடவுள் மாயமாவது போல, அவன் இருந்த இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் மாயமாகி விடுவான். கவனிப்பது எதிர்க்குடிசை பெருசு என்பதால் பாண்டி பதறாமல் அமைதியாகவே தன் வாடிக்கையாளனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அந்த இளைஞன் பர்ஸிலிருந்து பணத்தை எண்ணிக் கொடுத்து, பாண்டி கொடுத்த சிறிய பொட்டலத்தை வாங்கிக் கொண்டு திரும்பினான். மகாதேவனுக்கு அந்த இளைஞன் அவர் சந்தேகப்பட்ட நபர் தான் என்பது உடனடியாக உறுதியாகியது. தொடர்ந்து அவருடைய அந்தராத்மாவின் ஆழத்திலிருந்து எழுந்த ஓலத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விதி வலிது!

ஆனால் அந்த இளைஞன் எதிர்க்குடிசை முன் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த கிழவர் பக்கம் பார்க்கவில்லை. அவன் அவரைப் பார்த்திருந்தாலும் அவனுக்கு அடையாளம் தெரிந்திருக்காது. அவன் பைக் ஏறி வேகமாகப் போய் விட்டான். அந்த இளைஞனின் பைக் பார்வையிலிருந்து மறையும் வரை மகாதேவன் அவனையே சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாண்டி கேட்டான். “ஏன் அப்புடி பாக்கறே பெருசு? தெரிஞ்சவனா அந்தப் பையன்?”

இல்லையென அவர் தலையசைத்தார். என்றோ பிரிந்து விட்ட மகனை அறிந்தவன் என்று சொல்லக்கூட அவரால் முடியவில்லை. “இதே சாயல்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருந்தான். அவன் ஞாபகம் வந்துச்சு. அதான் பார்த்தேன்.”

பாண்டிக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. கிழவர் இந்தச் சேரிக்கு வசிக்க வந்து ஆறேழு வருடங்கள் ஆகி விட்டன. அவரைத் தேடி இது வரை யாரும் வந்ததில்லை. அவருக்குக் குடும்பம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அவர் அதைப் பற்றி யாரிடமும் பேசியதுமில்லை. அக்கம் பக்கத்தினர் சில சமயங்களில் குடும்பம் பற்றியோ, உறவுகள் பற்றியோ கேட்டால், “யாருமில்லை. எல்லாரையும் இழந்தாச்சு” என்று மட்டும் பொதுவாகச் சொல்லி நிறுத்திக் கொள்வார். அதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டார். தெரிந்த ஆட்களின் சாயல் இருப்பவர்களைக் கூடச் சோகமாகப் பார்க்கும் அந்தக் கிழவரை அவன் இரக்கத்துடன் பார்த்தான்.

இந்தச் சேரிக்கு வந்ததிலிருந்து இன்று வரை அவர் ஒருவரிடமும் சண்டை போட்டோ, கோபப்பட்டோ அவன் பார்த்ததில்லை. ஏன், அவர் குரல் உயர்த்திப் பேசிக் கூட அவன் கேட்டதில்லை. எப்போதும் தானுண்டு, தன் வேலையுண்டு என்று தனிமையிலேயே இருப்பார். சேரியில் எல்லோரும் அவரை ‘பரம சாது’ என்றே நினைத்தார்கள். ஆனால் ஒரு காலத்தில் அவர் இதற்கு நேரெதிராக இருந்தார் என்பதையும், அவர் குடும்பத்தினரே அவரை ‘அரக்கன்’ என்று அழைத்தார்கள் என்பதையும் அவன் அறிய மாட்டான்.

ஒரு வசதியான குடும்பத்தில், பெற்றோருக்கு இரண்டு பெண்களுக்கு அடுத்து பிறந்தவர் மகாதேவன். ஆண்பிள்ளையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தலைமுறை அது. இரண்டு பெண்களுக்குப் பின் தவமிருந்து பெற்ற மகாதேவனை அவர் பெற்றோர் அப்படித் தான் கொண்டாடினார்கள். எல்லையில்லாத பாசம் காட்டி, மகன் கேட்கும் போதெல்லாம் ஏன், எதற்கு என்று கேட்காமல் பணத்தைக் கொடுத்து, எதற்கும், எப்போதும் கண்டிக்காமல் பெற்றோர் வளர்த்ததால் மகாதேவனிடம் நல்ல பண்புகள் எதுவும் ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை. பொறுப்பற்றவராகவும், ஷோக்குப் பேர்வழியாகவும் வளர்ந்த அவருக்கு தன்னுடைய சுகம், சௌகரியம், தேவைகள் மட்டுமே என்றும் பிரதானமாக இருந்தன. அவற்றில் ஏதாவது குறை இருந்தால், அதற்குத் தடங்கலாக யாராவது இருந்தால், அவரால் சிறிதும் சகித்துக் கொள்ள முடியாது. உடனே கோபத்தில் கத்தியும், ஆர்ப்பாட்டம் செய்தும், பொருட்களை உடைத்தும் தன் அதிருப்தியை அவர் வெளிப்படுத்துவார். அதனால் வீட்டார் அவருடைய மனம் சிறிதும் கோணாமல் பார்த்துக் கொள்வார்கள். எப்படியோ அவர் சுமாராகப் படித்து ஒரு பட்டதாரி ஆனார்.

மிகவும் செல்லமாய், சிறப்புச் சலுகையுடன் வளர்ந்ததால் மகாதேவனால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை. பிறருக்கு வேலை செய்து சம்பாதிப்பதை அவர் அடிமைத்தனமாகவே பார்த்தார், அதனால் சுய தொழிலே நல்லது என்று முடிவெடுத்து தொழிலில் இறங்கினார். அதிலும் ஒழுங்கு முறையோ, உழைப்போ, முழுக்கவனமோ இல்லாததால், அதில் போட்ட முதலீடு கரையத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் தான் அவருடைய பெற்றோர் நிலைமை பூதாகரமாகப் போவதை உணர்ந்தார்கள்.

”கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகப் போய்விடும்” என்று யாரோ சொன்னார்கள். திருமணம் செய்து வைத்தால் மகனுக்குத் தானாகப் பொறுப்பு வந்து விடும் என்று அவர்களும் நினைத்தார்கள். அவர்கள் இறப்பதற்கு முன் புத்திசாலித்தனமாக, அரசாங்க வேலை பார்க்கும் ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணை மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். பிரச்சினை கைமாறியது.

அவர் மனைவி கிரிஜா பத்தரை மாற்றுத் தங்கமாக இருந்தாள். மகள் மல்லிகாவையும், மகன் சுரேஷையும் அவருக்குப் பெற்றுத் தந்தாள். கணவர் சரியாகச் சம்பாதித்துத் தரா விட்டாலும், ஏழைக் குடும்பத்துப் பெண்ணான அவளுக்கு, தன் சம்பளத்தில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கத் தெரிந்திருந்தது. கிரிஜா தன் சம்பளத்தில் எப்படியோ குடும்பத்தை நடத்தினாள். மகாதேவன் கடைசியாகச் செய்த கூட்டு வியாபாரத்தில் கூட்டாளி அவருக்குப் போதையை அறிமுகப்படுத்தி, அவர் போதையில் இருக்கையில், வியாபாரப் பணத்தைச் சுருட்ட ஆரம்பித்தான். மகாதேவனின் பெற்றோரின் சொத்து எல்லாம் முடிந்து, அவர் மனைவியின் பணம், நகை எல்லாம் முடிந்த அளவு பிடுங்கி, அந்த வியாபாரத்தில் போட்டார். ஆரம்பத்தில் கிரிஹா அவருக்கு நல்லவிதமாய் அறிவுரை சொல்லிப் பார்த்தாள். அவருக்கு எப்போதும் அடுத்தவர்களின் அறிவுரை அதிகப்பிரசங்கித்தனமாயும், அவரை அவமானப்படுத்துவதாகவும் தான் தோன்றும். அதனால் அவர் கோபம் கொண்டு வீட்டில் பாத்திரங்களை உடைத்தும், மனைவியையும், பிள்ளைகளையும் அடித்தும் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தன்னுடைய அறிவுரை, பண நஷ்டத்திலும், மனக் கஷ்டத்திலும் முடிந்ததால் கிரிஜா அறிவுரை சொல்வதையே விட்டு விட்டாள்.

அவளுடைய பணமும், நகைகளும் தீர்ந்தவுடன் அவருடைய கூட்டாளி இனி இவரிடமிருந்து எதுவும் பெயராது என்பதைப் புரிந்து கொண்டு ஒரு நாள் இருப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு, சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவானான் அப்போதும் கூட கிரிஜா அவரிடம் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக “சனியன் விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் சும்மா இருங்கள் போதும். என் சம்பளத்தில் எப்படியாவது சமாளிப்போம்” என்று தான் சொன்னாள். ஆனால் போதைப்பழக்கம் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. அவருக்குக் குடும்ப செலவைச் சமாளிக்கும் பிரச்சினை பற்றிய கவலையில்லை. அதை கிரிஜா பார்த்துக் கொள்வாள். பணமில்லாமல் போதைப் பழக்கத்தைச் சமாளிக்க முடியவில்லை என்பது தான் அவருடைய தலையாய பிரச்சினையாக இருந்தது. கண்டவர்களிடம் கடன் வாங்கி அதற்குச் செலவு செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்க ஆரம்பித்தார்கள்.

அந்தச் சமயத்தில் தான் கிரிஜா, பட்டப்படிப்பு முடித்த மகள் மல்லிகாவின் திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது மகன் சுரேஷ் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான் கிரிஜா வங்கியிலும், தெரிந்தவர்கள், மற்றும் உறவினர்களிடமும், கடன் வாங்கி, திருமண ஏற்பாடுகளை ஒருத்தியாகவே செய்தாள்.. கணவர் மகளைத் தாரை வார்த்துக் கொடுக்கும் போது அருகில் இருந்தால் போதும் என்று நினைத்தாள்.

திருமணத்திற்குத் தேவையான நகைகளை எல்லாம் ஒரு நாள் வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் காட்டினாள். அதில் அவருக்கு கடனாளிகளைச் சமாளிப்பதற்கும், மேற்கொண்டு போதுமான அளவு போதைப் பொருள் வாங்குவதற்கும் வழி தெரிந்தது. மகள் திருமணத்திற்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கையில் அந்த நகைகளையும், திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த வெள்ளிச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு ஒருநாள் நள்ளிரவில் அவர் ஓடிப் போனார். போதை அப்போதைய சந்தோஷத்தைத் தவிர வேறு எதையும் லட்சியம் செய்வதில்லை. அதன் ஆதிக்கத்தில் இருந்த அவரும் மனைவியின் நிலைமை, மகளின் எதிர்காலம், நியாயம், தர்மம், மனிதாபிமானம், அன்பு, பாசம் என்று எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.

அந்தப் பணத்தில் அவரால் மூன்று வருடங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது. கையிருப்பு முடிந்து, இனி கடனும் கிடைக்க வழியில்லை என்ற நிலைமை வந்த போது தான் வேலைகளுக்குப் போக ஆரம்பித்தார். எடுபிடி வேலைகள் கூடச் செய்தார். ஒரு காலத்தில் அடிமைத்தனம் என்று நினைத்த வேலைகளை விடப் பல மடங்கு கேவலமான வேலைகளையும் அவர் செய்ய வேண்டி வந்தது. அதட்டலையும், மிரட்டலையும். அவமானத்தையும் அவர் சகிக்க வேண்டி வந்தது. அறிவுரைகளைச் சகிக்க முடியாத மனிதருக்கு, கசப்பான அனுபவங்களையே வரிசையாகப் பாடங்களாகத் தந்து வாழ்க்கை அறிவுறுத்தியது. ஆடி அடங்கி வாழ்க்கையில் ஞானோதயம் வந்த போது, வயோதிகமும் வந்து சேர்ந்திருந்தது. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ்ந்திருந்ததால் ஆரோக்கியமும் முற்றிலும் பாழ்பட்டு விட்டது. முடிவில் ’போதைப்பழக்க மறுவாழ்வு மையம்’ ஒன்று அவரை போதை அரக்கனிடமிருந்து காப்பாற்றியது. அதன்பின் அவர் ஒரு சிறிய ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். உணவு ஓட்டலில் கிடைத்தது. தங்குவதற்கு அருகில் உள்ள அந்தச் சேரியில் ஒரு குடிசை குறைந்த வாடகைக்குக் கிடைத்தது.

வாழ்க்கையின் இறுதியில் யோசிக்க முடிந்த போது, நினைவில் இருத்திக் கொள்ள அவருக்கு இனிமையான நினைவுகள் எதுவும் இருக்கவில்லை. அது போன்ற நினைவுகளும் கூட முந்தைய காலத்தில் சம்பாதித்திருந்தால் மட்டுமே அல்லவா ஒருவர் வைத்திருக்க முடியும்? வாழ்ந்த வாழ்க்கையைப் பரிசீலித்துப் பார்க்கையில், அவருக்குத் தன்னையே வெறுக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியாக, மகளின் திருமணத்திற்கென்று மனைவி கஷ்டப்பட்டு வாங்கிய நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓடி வந்ததை எண்ணுகையில் அவருக்கே அவரை மன்னிக்க முடியவில்லை. அவரது சகோதரிகளும், சில உறவினர்களும், சில அக்கம்பக்கத்தினரும் அவரை அரக்கன் என்று அவர் காதுபடவே சொன்னதுண்டு. அந்த அடைமொழி, அவருக்கு இப்போது தவறாகத் தெரியவில்லை. அவரே தன்னை அப்படித்தான் இப்போது நினைக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அந்த அடைமொழியை நிரூபித்திருக்கிறார். செல்லமாய் வளர்ந்தவர்கள் எல்லாரும் அவரைப் போல் ஆகி விடுவதில்லை. பலரும் ஒருகாலத்தில் விழித்துக் கொண்டு ஒழுங்காகி விடுகிறார்கள். ஆனால் அவருக்கோ சாகப் போகிற காலத்தில் தான் ஞானோதயம் பிறந்திருக்கிறது.

வாய்விட்டு நிறைய நாட்கள் அழுது இப்போது தான் அவர் ஓய்ந்திருக்கிறார். இப்போதெல்லாம் அவர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. ஒரு காலத்தில் அற்ப விஷயத்திற்கு எல்லாம் வந்து கொண்டிருந்த கோபம் இப்போது பெரிய விஷயத்துக்கும் கூட வருவதில்லை. அவருக்கு கிடைக்கும் வசவுகள், கசப்பான அனுபவங்கள், வலிகள் எல்லாவற்றுக்கும் காரணம் அவருடைய பழைய கர்மாக்கள் என்று நம்பினார். அதெல்லாம் தனக்கு வர வேண்டியதே என்று நினைத்தார். ‘இதுவும் வேண்டும். எனக்கு இன்னமும் வேண்டும்!’ ஒவ்வொரு வலியையும், ஒவ்வொரு அவமானத்தையும் அவர் தனக்குக் கிடைக்கும் தண்டனையாகவே மனப்பூர்வமாகவே ஏற்றுக் கொண்டார். ஆனால் சுற்றியிருப்பவர்களோ அது புரியாமல், சில சமயங்களில், அவரை மகானைப் போல நினைப்பது அவருக்கு வேடிக்கையாக இருக்கும். அது போன்ற நேரங்களில் ‘நான் மகா மட்டமானவன், அரக்கன், மனிதன் என்று சொல்லக்கூட லாயக்கில்லாதவன்’ என்று கத்திச் சொல்லத் தோன்றும். ஆனால் அதற்கும் மனம் சலிக்கும்.

பலரும் அவரிடம் குடும்பத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். குடும்பம் ஒன்று இருப்பதையே யாரிடமும் அவர் சொல்லவில்லை. இப்போதும் நேராகச் சென்று மன்னிப்பு கேட்டால், அவருடைய பிள்ளைகள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, அவருடைய மனைவி அவரை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. ஆனால் இனி எந்த விதத்திலும் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுத்திருந்தார்.

ஆனால் கடைசியாக மனைவியையும், மகனையும், மகளையும் தூரத்தில் இருந்தாவது ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அவருக்கு மிகவும் ஆசையாக இருந்தது. ஒரு நாள் சென்று, தூரத்திலிருந்து அவர் வீட்டைக் கண்காணித்தார். அருகிலேயே போனாலும் அவர்கள் யாருக்கும் அடையாளம் தெரியும் தோற்றத்தில் அவர் இல்லை. ஆனாலும் அவர் அவர்களை நெருங்க விரும்பவில்லை.

சுரேஷ் பைக்கில் வெளியே போவதையும், கிரிஜா பாசத்துடன் வெளியே வந்து அவனை வழியனுப்பி வைப்பதையும் பார்த்தார். மாலையில் மல்லிகா தாய் வீட்டுக்கு வந்தாள். சிறிது நேரத்தில் அவளும், கிரிஜாவும் கோயிலுக்குப் போனார்கள். போகும் போது அவரைத் தாண்டி தான் போனார்கள். மகள் முகத்தில் சந்தோஷமும், கழுத்தில் தாலியும், உடலில் தங்க நகைகளும் இருந்தன. ஆனால் அவர் மனைவி கழுத்தில் வெறும் தாலிச் சரடு மட்டும் தான் இருந்தது. காதிலும் மூக்கிலும் தங்கம் இருந்தாலும் கழுத்தில் தங்கம் எதுவும் இல்லை. பழைய கடன்கள் இன்னமும் தீரவில்லை போல் இருக்கிறது. ஐந்தாறு மல்லிப்பூக்களைச் சேர்த்துக் கட்டி தலையில் அவள் வைத்திருந்தாள். அது ஒன்று தான் கூடுதல்.

திரும்பி வரும் போது ஒரு இடத்தில் அமர்ந்து குமுறிக் குமுறி அழுதார். அவரைத் திருமணம் செய்து கொண்டதைத் தவிர அந்த உத்தமி, வேறு எந்தத் தவறையும் செய்யவில்லையே! அழுது ஓய்ந்த பின் தன்னையே அவர் மனசமாதானப்படுத்திக் கொண்டார். ’இதெல்லாம் கொஞ்ச காலம் தான். இப்போது சுரேஷ் தலையெடுத்து விட்டான். அவன் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்வான். அவள் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.’

அதன் பின் அவர் அவர்களைப் பார்க்கப் போகவில்லை. இனி எத்தனை காலம் இருக்கப் போகிறாரோ தெரியவில்லை. இறந்தாலும் அவர்களுக்குத் தெரிவிக்கிற மாதிரி எந்தக் குறிப்புகளையும், ஆதாரங்களையும் அவர் தன்னிடம் வைத்திருக்கவில்லை. ’இறந்தால் அனாதைப் பிணமாக கார்ப்பரேஷன்காரன் எடுத்துக் கொண்டு போகட்டும். குடும்பத்தாருக்கு எந்தச் செலவும் வேண்டாம். தலையில் வைக்கும் பூவாவது கிரிஜாவுக்கு மிஞ்சட்டும். நான் செத்த சமாச்சாரம் தெரிந்து அவள் அதையும் தியாகம் செய்ய வேண்டாம்.’

வைராக்கியத்துடன் வாழ்க்கையில் ஓரளவு அமைதியும் வந்து சேர்ந்திருக்கும் காலத்தில் தான் அவர் மகனைத் திரும்ப ஒருமுறை பார்க்கிறார். பாண்டியிடம் அவன் வந்து போதைப் பொருள் வாங்கிச் சென்றது அவருக்குப் பேரதிர்ச்சியாகவும், பெரும் வேதனையாகவும் இருந்தது. அவர் குடும்பத்தில் சரித்திரம் திரும்புகிறதா?

சுரேஷ் ஆட்கள் அதிகமில்லாத பூங்காவில் தனியாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு, அந்தப் போதைப் பொடியை மூக்கில் உறிஞ்சிக் கொண்டு இருந்தான். சொர்க்கத்தின் கதவுகள் திறப்பது போல் இன்பமாக இருந்தது. அவன் ஒரு மாதமாகத் தான் இந்தச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். ஆரம்பத்தில் அவனுக்கு குற்றவுணர்ச்சி சற்று இருக்கத் தான் செய்தது. ஆனால் யோசிக்கையில் அது தேவையற்றது என்பது புரிந்தது. எதிலும் ஒரு அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமானால் தான் எதுவும் பிரச்சினை. அளவைத் தாண்டும் அளவு அவன் முட்டாள் அல்ல. அவன் அப்பாவைப் போல் கண்டிப்பாக ஆகிவிட மாட்டான். பின் இந்த வயதில் அனுபவிக்காமல் வாழ்க்கையில் எந்த வயதில் இந்த சந்தோஷங்களை எல்லாம் அனுபவிப்பது?

அருகில் யாரோ வந்து நிற்பது போல் தோன்றவே அவன் கண்களைத் திறந்தான். யாரோ ஒரு பிச்சைக்காரன்! சுரேஷ் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினான். அந்தக் கிழவன் அதை வாங்க கையை நீட்டவில்லை.

“என்ன தான் வேணும்?” என்று சிறு எரிச்சலுடன் சுரேஷ் கேட்டான்.

“இந்தப் பழக்கத்தை விட்டுடு சுரேஷ்.” என்று சொல்லி அந்தக் கிழவன் கைகூப்பியது அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. கூர்ந்து பார்த்த பின் அவனுக்கு தந்தையின் அடையாளம் தெரிந்தது.

சுரேஷுக்கு முதலில் ஏற்பட்ட அதிர்ச்சி பின் கடுங்கோபமாய் மாறியது. அவன் தன் வாழ்க்கையில், இந்த மனிதனை வெறுத்தது போல் வேறு யாரையும் வெறுத்ததில்லை. அம்மாவும், அவனும், அக்காவும் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் இந்த நாய் தான். குடும்பத்திற்காக ஒரு சிறு துரும்பையும் நகர்த்தாத இந்த நாய், எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாய் இருந்த இந்த நாய், இப்போது அவனுக்கு அறிவுரை சொல்ல எங்கிருந்தோ வந்திருக்கிறது. அறிவுரை சொல்ல இந்த நாய்க்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

சுரேஷ் இறுக்கமான முகத்துடன், ஒரு புழுவைப் பார்ப்பது போல், தந்தையைப் பார்த்து வெறுப்பு கலந்த அலட்சியத்துடன் கேட்டான். “நீ இவ்வளவு நாள் எங்கேயிருந்தே?”

மகன் மரியாதை தராமல் பேசியதற்கு மகாதேவன் வருத்தப்படவில்லை. இதைத் தான் அவர் சம்பாதித்திருக்கிறார். இதற்கு அவனைக் குறை கூற எதுவுமில்லை. அமைதியாகப் பதில் சொன்னார். “நரகத்தில் இருந்தேன். இப்பவும் அங்கே தான் இருக்கேன். நீயும் அங்கே வந்துடாதப்பா”

அந்த ஆளின் கோபத்தைத் தான் சுரேஷ் சிறு வயதிலிருந்து பார்த்திருக்கிறான். அவரது அமைதி அவனுக்குப் புதியது. ஓங்கி நான்கு அறை அறைய வேண்டும் என்று தோன்றினாலும் அந்த ஆளின் உடலில் கை படுவது கூட அவனுக்கு அருவறுப்பாக இருந்தது. அலட்சியமாக அவன் இன்னொரு சிட்டிகைப் பொடி எடுத்து மூக்கின் நுனியில் வைத்து மெல்ல உறிஞ்சினான். அது தான் அந்த ஆளுக்கு அவன் தரக்கூடிய சரியான பதில் என்று தோன்றியது.

அவன் எண்ண ஓட்டங்களை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் ஒன்றும் சொல்லாமல் அவனையே மிகுந்த வேதனையுடன் பார்த்தார். அது அவனை மேலும் கோபமூட்டியது. “உன் மகன் உன்னை மாதிரி தானே ஆவான். அதுல என்ன தப்பிருக்கு?” என்று கேட்டான்.

மகாதேவன் வருத்தத்துடன் சொன்னார். “என் மகன் என்னை மாதிரி ஆகறது தப்பில்லை. ஆனால் கிரிஜாவோட மகன் அப்படி ஆகிறது சரியா சுரேஷ்?”

தாயின் பெயரைச் சொன்னது சுரேஷை அசைத்தது. அவன் கோபத்துடன் சொன்னான். “ஓ… பொண்டாட்டி, புள்ள மேல திடீர்னு அக்கறை வந்துடுச்சு.. வயசான காலத்துல உனக்கு குடும்பம் தேவைப்படுது. அதனால அக்கறை இருக்கறவன் மாதிரி நடிச்சு ஒட்டிக்க பாக்கிறியா? வாய்ல கெட்ட வார்த்தை வந்துடும். பேசாம போயிடு.”

மகாதேவன் பொறுமையாகச் சொன்னார். “நான் ஒட்டிக்க வரலை. அப்படி வர்றதுன்னா எப்பவோ வந்திருப்பேன். வந்து சேர்ற அருகதை எனக்கில்லை. ஏன் மன்னிப்பு கேட்கற அருகதை கூட எனக்கு இல்லை. இனி எப்பவும் நான் வரவும் மாட்டேன். இந்தப் பழக்கம் இப்ப சுகமா தெரியும். ஆனால் கடைசில பணம், மானம், மரியாதை, பெருமை எல்லாம் இழந்து கடைசில என்னை மாதிரி உன்னை ஆக்கிடும்ப்பா. அதுக்கு நானே ஒரு உதாரணம்ப்பா”

சுரேஷ் கோபமாய்ச் சொன்னான். “மரியாதையா ஓடிப்போயிரு. உன்னைப் பார்க்கவே எனக்கு அருவறுப்பாய் இருக்கு. அதனால கண்டிப்பா உன்னை மாதிரி நான் ஆயிட மாட்டேன். எனக்கு எந்த அளவுல நிறுத்திக்கணும்னு தெரியும்”

மகாதேவன் விரக்தியுடன் சிரித்தார். ”இப்படி தான் நானும் ஆரம்பத்துல நினைச்சேன். இதை ஆரம்பிக்கிற ஒவ்வொருத்தனும் நினைச்சிருக்கான். புதைகுழில உள்ளே இழுத்துகிட்டே போய் அழிச்சுடற பழக்கம் இதுப்பா. என் அனுபவத்துல மட்டுமில்ல, என்னை மாதிரி எத்தனையோ பேர் அனுபவத்தை வெச்சும் சொல்றேன். வேண்டாம்ப்பா. எனக்காக வேண்டாம். உன் அம்மாவுக்காக விட்டுடுப்பா. அவளை நீயும் தண்டிச்சுடாதப்பா. அவ பாவம்ப்பா. அந்த உத்தமி ஏற்கெனவே என்னால நிறைய துக்கத்தை அனுபவிச்சிருக்கா. நீயும் அதையே அவளுக்குக் குடுத்துடாதப்பா. இதைச் சொல்ல தான் வந்தேன். இனி வந்து உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்ப்பா” சொல்லச் சொல்ல அவர் உடைந்து போய் பேரழுகை அழுதபடி கைகூப்பி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

சுரேஷ் தந்தையை திகைப்புடன் பார்த்தான். அவர் சொன்னதையும் அம்மாவையும், நினைக்கையில் அவனையறியாமல் போதைப் பொட்டலத்தை அவன் கை தூர எறிந்தது. அந்தக் காட்சியை தூர இருந்து பார்த்து விட்டு ஆகாயத்தை நோக்கி கைகூப்பி விட்டு, மகாதேவன் வேகமாக நடக்க ஆரம்பித்தார். இனி மகன் கண்ணில் பட அவர் விரும்பவில்லை. வாழ்வில் ஒரு முறையாவது ஒரு நல்ல தகப்பனாகவும், நல்ல கணவனாகவும் இருக்க முடிந்த நிறைவு அவருக்கிருந்தது.

சில நிமிடங்கள் சிலை போல அமர்ந்திருந்த சுரேஷ் பின் சுயநினைவுக்கு வந்து, எழுந்து ஓடிச் சென்று தந்தை எங்கேயாவது தென்படுகிறாரா என்று அங்குமிங்கும் பார்த்தான். எத்தனை தேடியும் அவனால் அவரைப் பார்க்க முடியவில்லை. இனி எப்போதும் அவரைப் பார்க்க முடியாது என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. அவன் கண்கள் லேசாகக் கலங்கின.

- என்.கணேசன்-
கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) 5d8tc9bsc2v38tf24qar4n7cqs._SY600_
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty ஜூகிபா

Post by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் இதழில் ஜூகிபா என்ற கதை எழுதினார். அதே கதையை திக் திக் தீபிகா என்ற தலைப்பில் நாவலும் எழுதி 2007ம் ஆண்டு வெளியிட்டார். 
ஜூகிபா

எனது நான்கு வருடங்களை செலவிட்டு உழைத்ததில்.. இதோ என் எதிரே உயிர்த்து நிற்கிறது ஜூகிபா!

இது மானுட சரித்திரத்தின் உச்சபட்ச சாதனை. மூளையைக் கசக்கிக் கசக்கி நான் உருவாக்கிய கம்யூட்டர் பார்முலாக்களுக்கு கண் முன் பலன். ஜூகிபாவிற்காகக் தலையில் நிறைய முடி உதிர்த்திருக்கிறேன். உணவு உறக்கத்தை தியாகம் செய்திருக்கிறேன். என் ப்ரியமான காதல் பொழுதுகளைக் கூட வருஷக் கணக்கில் ஒத்தி வைத்திருக்கிறேன். என் கன்னப் பிரதேசத்து ரோமப் பயிரை வழித்தெறியக் கூட அவகாசமின்றி நான் நடத்திய விஞ்ஞான வேள்விக்கு இதோ கம்ப்யூட்டர் வரமாய் ஜூகிபா!
 


ஜூகிபா, ஒரு அதி அற்புத கம்யூட்டர் ரோபாட்.
 
உருளும் நியான் விழிகளால் பார்க்கும் காட்சிகளை படம் படமாய் தனக்குள் பதிவு செய்துகொள்ளும். எலக்ட்ரானிக் சிந்தசைசர் மூலம், கேட்கும் கேள்விகளுக்கு டக்டக்கென மெட்டாலிக் வாய்ஸில் பதில் சொல்லும். ஆதாம் காலம் தொடங்கி, இந்த நிமிஷத்து உலகம் வரை அத்தனைத் தகவல்களையும் தன் மெமரிக் கிடங்கில் சேமித்து வைத்திருக்கும். அதோடு, எந்திர மூட்டசைத்து அதிராமல் நடக்கும். தன் உலோகக் கைகளைக் கண்டபடி, கண்ட திசைகளிலும் சுழற்றி, கொடுத்த வேலையைக் கச்சிதமாய்ச் செய்யும்.
 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சூழலைப் புரிந்துகொள்ளும் உணர்வுத் திறனும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுத்து இயங்கும் சுய செயல்திறனும் ஜூகிபாவிற்குப் புகட்டப்பட்டிருக்கிறது. என் ஜூகிபா ஒரு மனிதன். ஏறத்தாழ 95 விழுக்காட்டு மனிதன். பிள்ளைப் பேறு என்ற சங்கதிக்கும் ஏற்பாடு செய்துவிட்டால் நூற்றுக்கு நூறு மனிதனாய் மாறிவிடும்.
 
பார்வைக்கு ஒரு மனிதனைப் போலவே புறத்தோற்றத்தையும் விஷேச ஃபைபர் கொண்டு வடிவமைத்துவிட்டேன். இந்த ஜூகிபா எனக்கு வைரப் புதையல்!

இனி அரசாங்கங்கள் என் அறிவுக்கு விலைபேசும். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், விஞ்ஞான கேந்திரங்கள், பல்கலைக் கழகங்கள் என்னைத் தேடிவந்து விருதுகளையும் பட்டங்களையும் வழங்கும். இந்த வருட நோபல் பரிசு கூட எந்த சிபாரிசும் இன்றி என் விலாசத்தை விசாரிக்கும்.

சிரிக்க - அழ - மிரட்ட - நெகிழ என சகலத்தையும் என் ஜூகிபாற்குப் போதித்து விட்டேன். இதோ ஜூகிபா என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறது.
 
"என்ன ஜூகிபா, எப்படி இருக்கிறாய்?"
 
"உங்களால் இந்த நிமிடத்தில் மிகத் துல்லியமாய் நலத்தோடு இருக்கிறேன்"
 
‘நாளை நான் கூட்ட இருக்கும் கான்பரன்ஸில் உன் சகல சித்துக்களையும் நீ நடத்திக்காட்டி, வந்தவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும்படி செய்யவேண்டும்.’
 
”உத்தரவு”
 
“சரி ஜூகிபா, இன்னும் சற்று நேரத்தில் ஒரு நபரை உனக்கு அறிமுகப்படுத்துவேன். இனிமையாக நடந்துகொள். என்ன?”
 
“உத்தரவு”
 
“நான் அழைக்கும் வரை கம்யூட்டர் ஹாலில் ஓய்வெடு”
 
“சரி பாஸ், என்ற ஜூகிபா மெதுநடைபோட்டு வெளியேறியது.
வரப்போகும் என் காதல் தேவதை ஜோசஃபின், இந்த ஜூகிபாவைப் பார்த்தால் ஆனந்தமாய் அதிர்வாள்.
 
"இது எப்படி சாத்தியம் ராபின்? யூ ஆர்  கிரேட். வெரி கிரேட்" என கட்டிக்கொண்டு தாடிக் கன்னத்தைக் கன்னத்தால் உரசுவாள். சந்தோசம் கசிவாள். வரவுக்குக் காத்திருந்தேன்.

டீ சர்ட் மிடியில் இளமை அதிர அழகுப்புயலாய் ஜோசஃபின்...
 
லிஃப்டுக்குக் கூட காத்திருக்கும் பொறுமை இன்றி,
எட்டு மாடியையும் ஏறிக் கடந்திருக்கிறாள் என்பதை அவை சொல்லாமல் சொல்லின.
 
“என்ன திடீர் அழைப்பு ராபின்.?” - கீ போர்டை வாயில் வைத்திருப்பவளைப் போல் சங்கீதமாய்க் கேட்டாள்.
 
” நீ மிஸஸ் ராபின் ஆகுற நாள் வந்திடுச்சி”
 
“ஏய், என்ன சொல்றே?”
 
சந்தோசமாய்க் கூவிய ஜோசஃபினை மெல்ல அணைத்து...என்னோட ஆரய்ச்சி ஜெயிச்ச உடனே மேரேஜ்னு சொன்னேன்ல”
 
”ஆமா”
 
“நான் ஜெயிச்சிட்டேன்”
 
“ நிஜமாவா?”
 
“இதோ நீயே பார். நான் உருவாக்கிய சாதனையைப் பார்”
சொன்ன நான், ஜூகிபா என்று கூப்பிட்டேன்.
 
அடுத்த நொடியில், கம்யூட்டர் ஹாலில் இருந்து மெல்ல நடந்து வந்தது அது.
 
ஆச்சரியத்தில் உறைந்துபோய் நின்றவளை. ஜுகிபா தன் நியான் விழிகளை உருட்டி  உருட்டிப் பார்க்க..
 
”ஜூகிபா, இது ஜோசஃபின். என் காதலி”- என அறிமுகப்படுத்தினேன்.
 
மெல்ல நடந்து ஜோசஃபின் அருகே வந்த ஜூகிபா, கை குலுக்கத் தன் உலோகக் கையை நீட்ட- ஜோசஃபின் மிரண்டுபோய்ப் பின் வாங்கினாள்.
 
“பயப்படாதே ஜோசஃபின். இந்த ஜூகிபா உன்னை ஒன்றும் செய்யாது. இது ஏறத்தாழ ஒரு மனுஷன்”
 
நான் சொன்னதும் மிரட்சி நீங்காமல் கையைத் தயக்கமாய் நீட்டினாள்.
கையை மெல்லப் பற்றி குலுக்கிய ஜூகிபா,

‘ரொம்ப சாஃப்ட்” என்றது குறும்பாக.
 
அதைக் கேட்டு ஜோசபின் களுக்கெனச் சிரித்தாள்.
 
”உங்க சிரிப்பு இன்னும் அற்புதம். என் கவிதைப் பகுதியிலிருந்து சில வர்த்தைகளைப் பொறுக்கித்தான் உங்களைப் பாராட்டனும்’
 
ஜூகிபா, பேசப் பேச ஜோசஃபின்  ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமானாள்.
 
”ஜோசஃபின்... நிங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அழகை அனலிசிஸ் பண்ணினதுல, நீங்க பூவுக்குப் பிறந்த பூவோன்னு நினைக்கத் தோணுது”
 
ஜுகிபா, மேலும் மேலும் பேசிக்கொண்டே போக, இடைமறித்தேன்.
 
’என்ன ஜூகிபா, விட்டால் நீயே ஜோசஃபினைக் காதலிப்பாய் போலிருக்கிறதே”
 
ஒரு நிமிடம் மெளனமாய் நின்ற ஜூகிபா,
 
”பாஸ், அதுதான் சரியான வார்த்தை. நான், ஜோசபினைக் காதலிக்கிறேன். ஐ டூமச்.. லவ் ஹர் பியூட்டி”
 
ஜூகிபாவின் வரம்புமீறிய வார்த்தைகள் எரிச்சலை உண்டாக்க, சற்று கோபமாகவே சொன்னேன்.
 
“அளந்து பேசு  ஜூகிபா, நீ  ஒரு ரோபாட். ஜோசஃபின் என்னைப் போல் சதையும் ரத்தமும் உள்ள மனுஷி.”
 
“நோ.. எனக்கு ஜோசஃபினைப் பார்த்தால் கிளுகிளுன்னு இருக்கு. ஜோசஃபின் இல்லாட்டி நான் இல்லை.”
 
’முட்டாள் ரோபாட்டே. ஜோசஃபினைப் பத்தி
நீ இனிமே பேசக்கூடாது. உடனே உன் ரூமுக்குப் போ.. யூ கெட் லாஸ்ட்”
அதட்டினேன். ஜோசஃபின் விக்கித்துப் போய் நின்றாள்.
 
ஜூகிபாவின் நியான் விழிகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த செயற்கைக் கண்ணீர் வழிந்தது.
 
”ஜோசபின் இல்லாமல் நான் இல்லை... நான் இருக்கமாட்டேன்.. ”சொன்ன ஜூகிபா, நான் சற்றும் எதிர்பார்க்காத அந்த நொடியில் கண்ணாடிச் சன்னல்களை உடைத்துக் கொண்டு, வெளியே குதிக்க.. நான் ஸ்தம்பித்தேன்.

(கதைத்திருட்டில் சிக்கிய எந்திரன் சினிமா.அதன் மூலக்கதை இது.)

இந்தச் சமயத்தில் இதையும் நினைவு கூரலாம்....................

அன்றைய ஆல் இந்தியா ரேடியோ வானொலியில் ஒரு பேராசிரியர்..……….
"இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார்.“
யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம்.ஏன்றார்கள் சிலர்.
நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதான் , இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது தெரிகிறது..என்று சிலர்...

இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க , உச்சி குளிர்ந்து போனது அந்தப் பெண்ணுக்கு ..!

மறுபடியும் ஒரு போன் கால் !

மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."

“சொல்லுங்க சார் ..”

"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள்.
ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் , உங்களைப் போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.
ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் , பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது.
அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.

உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட...
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு'
என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?
ஆனால் அதையே நான்..
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.
இது தவறு என்று சொல்கிறீர்களா?"

வாயடைத்து நின்றவர் பேராசிரியர்.
“மன்னித்துக் கொள்ளுங்கள் சார் ..”
(கல்கி,12 சனவரி 2020)
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1688
Join date : 23/05/2021

Back to top Go down

கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்) Empty Re: கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum