TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ராவண தேசம் திரைவிமர்சனம்

Go down

ராவண தேசம்  திரைவிமர்சனம் Empty ராவண தேசம் திரைவிமர்சனம்

Post by மாலதி Sun Nov 17, 2013 2:41 pm

ராவண தேசம்  திரைவிமர்சனம் 1441342_651301514919888_1118206672_n

தனி ஈழம் வேண்டும் என்று போராடிய நம் சொந்தங்களை கொன்றொழித்த இலங்கை ராணுவத்தின் பாதக செயலை அப்பட்டமாக காட்டும் படம்தான் ராவண தேசம். 2009 உச்சகட்ட போரின்போது இலங்கை ராணுவத்தினரிடம் இருந்து தப்பித்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் நடுக்கடலில் தத்தளித்து, அவதிப்பட்டு மாண்ட கதையை தோலுரித்து காட்டியுள்ளது இப்படம். அகதி என்ற பெயருடன் வேறொரு நாட்டுக்குள் நுழையும் நம் சொந்தங்கள் எத்தனை கஷ்டங்கள்பட்டு வருகிறார்கள் என்ற வலியை உணர்த்திய படம்.

படத்தில் விடுதலைப்புலிகளை (மேலோட்டமாக) விமர்சிக்கும் ஒன்றிரண்டு வசனங்கள் தவிர்த்து மொத்தப்படமும், படமாக்கிய விதமும் அருமை...

தைரியமாக இப்படி ஒரு படத்தை, தானே நடித்து இயக்கியுள்ள ஆந்திரக்காரரான அஜெய் நூத்தகிக்கு வாழ்த்துக்கள். இந்தப் படத்திற்கு எப்படி சுலபமாக யு/ஏ சர்டிபிகேட் கொடுத்து வெளியிட அனுமதித்தார்கள் என்பதுதான் வியப்பு, ஏனெனில் 'உச்சிதனை முகர்ந்தால்', 'தேன்கூடு' உள்ளிட்ட படங்களுக்கு ஏற்பட்ட தடைகளை நாமறிவோம்.

இப்படத்தை பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளன. சிலவற்றை மட்டும் கூறுகிறேன் மீதியை திரையில் காணுங்கள்...

நம் புலிக்கொடியை பல இடங்களில் காட்டியும் அதை சென்சார் அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது. படத்தில் என்னைகவர்ந்தது முதல்பாதியில்வரும் ஒரு சிறுவன் கதாப்பாத்திரம். அதை வைத்துதான் அனைத்துவித விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார் இயக்குநர். 

பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புலிகளைப்பார்த்து அந்த சிறுவன் சொல்லும் ஒரு வசனத்திற்கு திரையரங்கில் பலத்த கைதட்டல் "இப்படி தவழ்ந்து கொண்டிருந்தால் ஈழம் கிடைக்காது, எழுந்து அடி". படத்தில் அந்த சிறுவனுக்கு நேரும் முடிவு எதிர்பாராதது.

ஒரு காட்சியில் சிங்கள ராணுவம் திடீரென்று தமிழர் பகுதியைத் தாக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட.. தமிழர்கள் கொல்லப்பட்டு.. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டு கொல்லப்படும் சூழலில், அண்ணன் பிரபாகரன்(அது அண்ணன் பிரபாகரன் கதாப்பாத்திரமா இல்லை ஏதேனும் தளபதி கதாப்பாத்திரமா என்பது தெரியவில்லை) என்ட்ரியாகி, மீண்டும் அந்த கிராமத்தை மீட்டெடுத்து புலிக்கொடியை பறக்கவிடுகிறார். (இந்த காட்சியில் நம்மையறியாமல் நரம்புகள் புடைத்துக் கொள்ள, அது வெறும் கைதட்டல்களுக்கு மட்டுமே பயன்படுகிறது) 

அண்ணன் பிரபாகரன் வேடத்தில் நடித்திருப்பவர் கொஞ்ச நேரமே வந்தாலும் அனல் பறக்கும் வசனத்தால் கவர்ந்திழுக்கிறார். தேச விடுதலையைவிட தன் உயிர் ஒன்றும் பெரிதில்லை என்று தன் படைவீரனைக்கொண்டே தன்னை சுடசொல்லும் காட்சி ஒன்றே போதும் அண்ணின் நேர்மையை பறைசாற்ற. "உங்களோட பெண்கள், குழந்தைகள் யார் மேலயாவது நாங்க கையை வச்சுருக்கோமாடா? அவங்களை துன்புறுத்தியிருக்கிறோமா? என்று பிரபாகரன் கதாப்பாத்திரத்தையே பேசவைத்து புலிகளின் பேராண்மையை வெளிப்படுத்தும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இந்த வசனத்திற்கு திரையரங்கில் பலத்த கைதட்டல்.

ஒரு காட்சியில் சிங்களன் ஒருவன் நம் புலிக்கொடியை மிதிப்பது போல் காட்டும்போது கோபம் வந்தாலும் அங்கே அதுதான் யதார்த்தம் என்பதால் விட்டுவிடலாம். 

முதல்பாதி பரபரப்பாகவும் இரண்டாம்பாதி பதற்றமாகவும் செல்கிறது. படத்தின் இறுதிக்காட்சி அதிர்ச்சி.

குத்துப்பாடலையும், சந்தானத்தின் மொக்கை காமெடிகளையும் மட்டுமே நம்பியிருக்கும் தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு மத்தியில் அஜெய் நூத்தகி போன்றோர் இத்தகைய ஒரு படைப்பை எடுக்க துணிந்தது பாராட்டுக்குரியது. நம் போராட்டத்தை கொச்சைபடுத்தும் மெட்ராஸ் கபே போன்ற கேவலமான படங்களுக்கு மத்தியில் இதுபோன்ற படைப்புகள் தேவையான ஒன்று...

"நாங்கள் இப்போது தோற்றவர்களாக இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள்.. எங்களது வாரிசுகள் வெல்வார்கள்.." என்ற நம்பிக்கையை நம் மனதில் விதைக்கும் இப்படம் உலகத்தமிழர்கள் பார்க்கவேண்டிய ஒரு உலகப்படமே.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ராவண தேசம்  திரைவிமர்சனம் Empty Re: ராவண தேசம் திரைவிமர்சனம்

Post by மாலதி Sun Nov 17, 2013 2:44 pm



மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய முரணான கருத்துக்களுடன் ராவண தேசம் திரைப்படம்!
» இலங்கை அகதிகளின் வலியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் 'ராவண தேசம்' டிரெய்லர்
» நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையான ‘ராவண தேசம்’.-ஆல்பம் + டிரைலர்
» உங்கள் மனதை சிந்திக்க வைக்கும் உங்கள் கண்ணீர் துளிகளை உதிர வைக்கும் ''''ராவண தேசம்'''' விரைவில் உங்கள் பார்வைக்கு...
» சலீம்-திரைவிமர்சனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum