TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குழம்புகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

குழம்புகள் Empty குழம்புகள்

Post by Tamil Sun Jan 10, 2010 2:21 pm

குழம்புகள் Gravy
தென்னிந்தியர்களின் உணவுகளில்
முக்கிய இடம் வகிக்கும் திரவ வகை பக்க உணவு இது. பெரும்பாலும் சாதங்களுடன்
கலந்து சாப்பிடப்படுகின்றது. சைவம், அசைவம் இரண்டு பிரிவிலும்
எண்ணிக்கையற்ற வகைகளில் இந்த குழம்புகள் தயார் செய்யப்படுகின்றன.
தமிழர்களின் வற்றல் குழம்பு, காரக்குழம்பு மிகவும் பிரசித்தம். எல்லோருடைய
நாவும் ஏங்குவது இந்த வகை குழம்புகளுக்குதான்.

குழம்புகள் Kuzhambu_recipes
குழம்பு தயாரிப்பது ஒரு கலை
என்றால் அதற்கான குழம்பு பொடி தயாரிப்பது ஒரு தனிக்கலை. இந்த பொடிகள்தான்
குழம்பின் சுவையை நிர்ணயிக்கின்றன. ஒரே குழம்பு, ஒரே முறையில் செய்யப்பட்ட
போதிலும், வீட்டிற்கு வீடு சுவையில் மாறுபட இந்த பொடிகள் ஒரு முக்கிய
காரணம். குழம்புகளுக்கு புளி ஒரு முக்கிய பொருள். பெரும்பாலும்
புளிக்கரைசல் சேர்த்துதான் குழம்புகள் செய்யப்படுகின்றன. விதிவிலக்குகளும்
உண்டு. மோர்க்குழம்பு ஒரு உதாரணம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty கறிவேப்பிலை குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:22 pm

கறிவேப்பிலையில்
விட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் நிறைய உண்டு. இது முடி வளரவும், நினைவாற்றலை
அதிகரிக்கவும், பசியை தூண்டவும் உதவுகிறது. இது புற்றுநோய், இதய மற்றும்
நுரையீரல், கண் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்து என சொல்கிறார்கள்.


தேவையானப் பொருட்கள்





  • கறிவேப்பிலை – அரை கப்
  • சின்ன வெங்காயம் - 20
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • சிகப்புமிளகாய் - 4
  • பூண்டு - 2 பல்
  • இஞ்சி – சிறுத்துண்டு
  • கட்டிப்பெருங்காயம் - சிறுத்துண்டு
  • வெங்காய கறி வடகம் – ஒரு துண்டு
  • கடுகு - தாளிக்க
  • நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
  • புளி - எலுமிச்சையளவு
  • உப்பு – தேவைக்கு



சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.


ஒரு
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம்,
இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து
வதக்கவும்.


வதக்கிய
பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ஊற வைத்த புளியை சேர்த்து
சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக விழுது போல் அரைக்கவும்.


அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கட்டி பெருங்காயம், வெங்காய கறி வடகம் சேர்த்து தாளிக்கவும்.


தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கின வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.


பின்னர் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி விடவும்.


வதக்கிய
பின்னர் ஊற வைத்த புளி தண்ணீர் மற்றும் மிக்ஸியில் அரைப்பு கழுவிய
தண்ணீர்(2 கப்) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


குழம்பில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை சுண்டியதும் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


சுவையான
கறிவேப்பிலை குழம்பு தயார். இந்த குழம்பு சாதம், இட்லி, தோசைக்கு
பொருத்தமாக இருக்கும். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து
காட்டியவர் திருமதி. இளவரசி அவர்கள்.

Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty சுண்டைக்காய் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:23 pm

தேவையான பொருட்கள்




  • சுண்டைக்காய் - 1 கப்(தட்டியது)
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் - 2
  • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  • தக்காளி - 2
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • புளி விழுது - 3 தேக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
  • _________________________
  • தாளிக்க தேவையானவை
  • _________________________
  • சின்ன வெங்காயம் - 10
  • கருவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - சிறிது




செய்முறை




  • சுண்டைக்காயை தட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெடித்ததும் வெங்காயம்,பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் தக்காளி,மஞ்சள் தூள்,சுண்டைக்காய் சேர்த்து தண்ணீர் 1/2 கப் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • பின் புளி விழுது,உப்பு,மிளகாய் தூள்,தண்ணீர் சிறிது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்
    தாளிக்கும் பாத்திரத்தில் சின்ன வெங்காயம்,கருவேப்பிலை,எண்ணெய் சேர்த்து
    நன்கு வதக்கி குழம்புடன் சேர்த்து நன்கு வதக்கி பின் பரிமாறவும்.





குறிப்பு:


இதே வகையில் கத்திரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty வறுத்த கோழி குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:24 pm

தேவையானப் பொருட்கள்





  • கோழி - அரைக் கிலோ
  • வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள்:
  • வர மிளகாய் - 8
  • மல்லி - 4 தேக்கரண்டி
  • சோம்பு - 2 தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி - 3 இன்ச் அளவு
  • பூண்டு - 10 பல்
  • சின்ன வெங்காயம் - 10
  • தேங்காய் - ஒரு கப்
  • தாளிக்க தேவையான பொருட்கள்:
  • பட்டை - 2 துண்டு
  • கிராம்பு - 2
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - 3



கோழியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.



வாணலியில்
2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு,
சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.


இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.



பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.


அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த கோழியை சேர்த்து கொதிக்க விடவும்.



குழம்பு
கொதித்து, கோழி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து
விடவும். சுவையான வறுத்த கோழி குழம்பு ரெடி. இந்த குறிப்பை செய்து
காட்டியவர் அறுசுவை உறுப்பினரான திருமதி. மாலதி மோகன் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty பரோட்டா குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:24 pm

தேவையான பொருட்கள்




  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • பட்டை - 1
  • லவங்கம் - 3
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • ஏலக்காய் பொடி - சிறிது
  • வெங்காயம் - 2
  • கறிமசாலா - 1 தேக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • _____________________________
  • அரைக்க தேவையானவை
  • _____________________________
  • பட்டை - 2
  • லவங்கம் - 4
  • சோம்பு - 2 தேக்கரண்டி
  • இஞ்சி - 1 துண்டு
  • பச்சை மிளகாய் - 5
  • தேங்காய் துறுவல் - 1/2 கப்
  • வெங்காயம் - சிறிது
  • தக்காளி - 2 அல்லது 3
  • __________________________
  • தனியாக அரைக்க
  • __________________________
  • பொட்டு கடலை - 5 தேக்கரண்டி




செய்முறை




  • கடாயில்
    எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம்,சோம்பு,ஏலக்காய்
    பொடி,வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு
    வதக்கவும்.
  • பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • பின் கறிமசாலாவை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பின் பொட்டுகடலை விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கருவேப்பிலை,நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.





குறிப்பு:


காரத்திற்க்கேற்ப பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளவும். இட்லி,சப்பாத்தி,தோசை,பரோட்டா என அனைத்துக்கும் ஏற்றதாக இருக்கும்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



10 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty கத்தரிக்காய் காரகொழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:25 pm

தேவையான பொருட்கள்




  • கத்தரிக்காய் - 1/4 கிலோ
  • வெங்காயம் - 1/2 கப்
  • தக்காளி - 1/4 கப்
  • பூண்டு பல் - ௭
  • புளி - 1 எலுமிச்சை அளவு
  • சாம்பார் பொடி (அ) மிளகாய் தூள் + தனியா தூள் - 2 tsp
  • வெந்தயம் - 1/2 tsp
  • உப்பு - தேவையான அளவு
  • அரைபதற்கு:
  • தேங்காய் - 2 tbsp
  • தக்காளி - 1
  • தாளிக்க :
  • நல்லெண்ணெய் - 1 tbsp
  • கடுகு - 1/2 tsp
  • துவரம் பருப்பு - 1/2 tsp
  • வெந்தயம் - 1/2 tsp
  • பெருங்காயம் - தேவையான அளவு
  • கருவேப்பிலை - 1 இணுக்கு




செய்முறை




  • எண்ணெய் சூடானதும், தாளிக்க கொடுத்துள்ளதை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
  • கத்தரிகாயை நான்காக அறிந்து தக்காளிக்கு பின் சேர்த்து வதக்கவும்.
  • சாம்பார் பொடி சேர்த்து ஒரு தரம் பிரட்டி புளி தண்ணீர் சேர்க்கவும். தேவையானால் மேலும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  • அரைக்க கொடுத்துள்ளதை அரைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.
  • கடைசியாக உப்பு மற்றும் 1/2 ஸ்பூன் வெந்தயத்தை பொடி செய்து கொழம்பில் கொட்டி கொதிக்க விடவும்.
  • காய்கறிகள் வெந்து எண்ணெய் மேல மிதந்ததும் தீயை அணைக்கவும்.





வழங்கியவர்


Ms. Moorthy, USA





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

5 நிமிடம்

25 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty ஈசி காளான் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:26 pm

தக்காளி,வெங்காயம் இல்லாத குழம்பு... அனைத்து உணவுகளுக்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.







தேவையான பொருட்கள்




  • காளான் - 1 பாக்கட்
  • எண்ணெய் - தேவைக்கேற்ப
  • உப்பு - சிறிது
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • கறிமசாலா தூள் - 1 தேக்கரண்டி
  • தேங்காய்,முந்திரி விழுது - 1/2 கப்
  • தேங்காய் துறுவல் - 3 தேக்கரண்டி
  • பெப்பர் - 2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை,கொத்தமல்லி தலை - சிறிது.




செய்முறை




  • கடாயில் எண்ணெய் விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிய காளான் சேர்த்து லேசாக வதக்கவும்.
  • பின் உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கறிமசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தேங்காய்,முந்திரி விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின் தேங்காய் துறுவல்,பெப்பர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பின் கருவேப்பிலை,கொத்தமல்லி தலை தூவி பரிமாறவும்.





வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



2 நிமிடம்

10 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty பீர்க்கங்காய் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:26 pm

தேவையான பொருட்கள்




  • பீர்க்கங்காய் - 1 கப்(பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் - சிறிது
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் - 1/2 கப்
  • பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
  • உப்பு - சிறிது
  • மஞ்சள் தூள் - சிறிது
  • தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - சிறிது.




செய்முறை




  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வெங்காயம்,பச்சை மிளகாய்,பீர்க்கங்காய் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  • பின் தண்ணீர் 1 கப் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  • பின் உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பீர்க்கங்காய் வெந்த பின் தேங்காய் துருவல்,கருவேப்பிலை சேர்த்து ஒரு கொதி விட்டு பரிமாறவும்.





வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



10 நிமிடம்

15 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty ஈஸி பூண்டு குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:27 pm

தேவையான பொருட்கள்




  • 1. பூண்டு - 15 பல்
  • 2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
  • 3. தக்காளி - 2
  • 4. புளி தண்ணீர்
  • 5. தேங்காய் பால் - 1 கப்
  • 6. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
  • 7. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  • 8. கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 10. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • 11. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • 12. உப்பு




செய்முறை




  • வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும்.
  • எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  • பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
  • பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுக்கவும்.





குறிப்பு:


தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.



வழங்கியவர்


VaniVasu
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty முருங்கைக்காய் தக்காளி குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:27 pm

தேவையான பொருட்கள்




  • முருங்கைக்காய் - 5
  • எண்ணெய் - தேவைக்கேற்ப
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் - 1/2 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • தேங்காய் துறுவல் - 3 தேக்கரண்டி
  • புளி - 3 தேக்கரண்டி தண்ணீர்
  • கருவேப்பிலை - சிறிது
  • நல்லெண்ணெய் - சிறிது
  • அரைக்க தேவையானவை
  • தக்காளி - 2
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி




செய்முறை




  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் 2 கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக விடவும்.
  • பின் புளி தண்ணீர் சேர்த்து நன்கு வற்றும் வரை வதக்கவும்.
  • பின் தேங்காய் துறுவல் சேர்க்கவும்.
  • பின் அரைத்த (தக்காளி,சீரகம்) விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பின் கருவேப்பிலை,நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.





குறிப்பு:


குழம்பு தண்ணீராக வேண்டும் என்றால் தண்ணீர் நிரைய சேர்க்கவும்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



10 நிமிடம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty ஈசி கருவாட்டு குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:28 pm

தேவையான பொருட்கள்




  • கருவாடு(sprate) - 1 கப்(தலையை நீக்கி கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும்)
  • நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
  • பட்டை - 2
  • லவங்கம் - 3
  • ஏலக்காய் - 1
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 20 அல்லது பெரிய வெங்காயம்.
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • தக்காளி - 2
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • புளி தண்ணீர் - 1/2 கப்
  • கருவெப்பிலை - சிறிது
  • அரைக்க தேவையாவை
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 10




செய்முறை




  • கடாயில் நல்லெண்ணெய்,பட்டை,லவங்கம்,ஏலக்காய்,சோம்பு,சின்ன வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கருவாடு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் புளி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பின் அரைத்த விழுது(தேங்காய் துருவல்,இஞ்சி,பூண்டு) சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின் கருவெப்பிலை சேர்த்து பரிமாறவும்.





குறிப்பு:


இந்த முறையில் பிரான் வத்தல்,கத்திரிக்காய் வத்தல் என அனைத்து வத்தலிலும் செய்யலாம்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



15 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty புடலங்காய் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:29 pm

தேவையான பொருட்கள்




  • புடலங்காய்-1
  • வெங்காயம்-2
  • பச்சை மிளகாய்-3
  • பூண்டு-4 பல்
  • தக்காளிப் பழம்-1
  • புளி ஒரு எலுமிச்சை அளவு
  • பால்-1 கப்
  • மிளகாய்த்தூள்-1 மே.க
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்
  • கடுகு-1/2 தே.க
  • பெருஞ்சீரகம்-1 தே.க
  • கறிவேப்பிலை ஒரு நெட்டு




செய்முறை




  • புடலங்காயை பொடியாக நறுக்கவும்.
  • வெங்காயம், மிளகாய், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்கவும்.
  • புளியைக் கரைத்து வைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு புடலங்காயைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • ஒரு
    பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது
    வெடித்ததும் வெங்காயம், மிளகாய், பெருஞ்சீரகம்,கறிவேப்பிலை, பூண்டைப்
    போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • புளிக்கரைசல், ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  • மிளகாய்த்தூளின் பச்சை வாசனை போனதும் பாலை விடவும்.
  • ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்த புடலங்காயைப் போடவும்.
  • குழம்பு தடிப்பாக வந்ததும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  • இது சோறு, புட்டு, இடியப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.





வழங்கியவர்


திருமதி வத்சலா நற்குணம்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6 நபர்களுக்கு

15 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty வெண்டைக்காய் கார குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:30 pm

தேவையான பொருட்கள்




  • 1. வெண்டைக்காய்
  • 2. சின்ன வெங்காயம் - 10
  • 3. தக்காளி - 2
  • 4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 5. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • 6. தனியா தூள் - 1 தேக்கரண்டி
  • 7. உப்பு
  • 8. புளி தண்ணீர் - 1/4 கப்
  • தாளிக்க:
  • 1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  • 2. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு
  • 3. கறிவேப்பிலை, கொத்தமல்லி




செய்முறை




  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
  • இதில் வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம்
    கலர் மாறி, வெண்டைக்காயும் பாதி வெந்ததும், தக்காளி சேர்த்து குழைய
    வதக்கவும். (விரும்பினால் முன்னே ப்லென்டரில் அடித்து தக்காளியை
    சேர்க்கலாம்)
  • தக்காளி வெந்து எண்ணெய் பிரியும் போது, தூள் வகை எல்லாம் சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • தூளின் வாசம் போய், காய் வெந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.





வழங்கியவர்


VaniVasu
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty புளி குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:31 pm

தேவையான பொருட்கள்




  • புளி - 1 கப்(கெட்டியாக கரைத்த புளி தண்ணீர்)
  • நல்லெண்ணெய் - 1/2 கப்
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  • வற மிளகாய் - 10
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி
  • வெங்காயம் - 1/2 கப்
  • பூண்டு - 20
  • தக்காளி - 2
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
  • கருவேப்பிலை - சிறிது




செய்முறை




  • மாங்காய் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்து கொள்ளவும்.
  • பின்
    கடாயில் நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் கடுகு,பெருங்காயம்,வற
    மிளகாய்,வெந்தயம்,வெங்காயம்,பூண்டு(முழு) என ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
  • பின் தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் கரைத்து வைத்த புளி தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் சிறிதளவு சேர்த்து மிதமான தீயில் நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் கருவேப்பிலை சேர்த்து வதக்கி பரிமாறவும்.





குறிப்பு:


சீக்கிரம் கெடாமல் இருக்கும்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



15 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty முள்ளங்கி பருப்பு குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:32 pm

தேவையான பொருட்கள்




  • முள்ளங்கி - 2 கப்(நறுக்கியது)
  • துவரம் பருப்பு - 1 கப்(வேக வைத்தது)
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் - 1/2 கப்
  • தக்காளி - 2 பழுத்தது
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 1 அரை தேக்கரண்டி
  • புளி விழுது - 2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - சிறிது
  • கொத்தமல்லி தலை - சிறிது
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி




செய்முறை




  • கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் கடுகு,வெந்தயம்,பெருங்காயம் சேர்க்கவும்.
  • பின் வெங்காயம்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,சீரகம் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.
  • பின் அதனுடன் மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள் சேர்த்து லேசாக வதக்கி 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து நன்கு வேக வைக்கவும்.
  • பின் அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பின் புளி விழுது சேர்த்து கொதிக்க வைத்து கருவேப்பிலை,கொத்தமல்லி தலை,நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.





குறிப்பு:

அனைத்து
வகையான காய்கள்,கீரைகள் கொண்டு இம்முறையில் குழம்பு செய்யலாம்.
கருவேப்பிலைக்கு பதில் துளசியும் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு நெய்
சேர்த்து கொடுக்கலாம். துளசி சேர்ப்பதால் சளி தொல்லைக்கு நல்லது.


வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

15 நிமிடம்

25 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty பாகற்காய் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:33 pm

தேவையான பொருட்கள்




  • பாகற்காய் - 1
  • தாளிக்க
  • ==============
  • நல்லெண்ணை - 3 தேக்கரண்டி
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • ஜீரகம் - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 2 இனுக்கு
  • வதக்க
  • ==========
  • வெங்காயம் - 1 பெரியது
  • அல்லது சிறிய வெங்காயம் - 15
  • பூண்டு - 3 பல்
  • தக்காளி 1
  • புளி - 2 எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
  • தேங்காய் விழுது - 1/2 கப்




செய்முறை




  • முதலில் பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு அதனை சிப்ஸ்சாக நறுக்கவும்.கசப்பு போக சிறிது மோரில் 30 நிமிடம் வைத்த பின் கழுகவும்
  • எண்ணையில் பாகற்காயை நன்கு வதக்கிக் கொள்ளவும்
  • மீதமுள்ள
    எண்ணையில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து வரிசையாக வதக்க கொடுத்துள்ளவற்றை
    வதக்கி ,வதக்கி வைத்த பாகற்காய் சேர்த்து, புளி கரைசல் சேர்த்து உப்பும்
    சேர்த்து கொதிக்க விடவும்..
  • பாகற்காய் வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
  • சுவையான பாகற்காய் குழம்பு ரெடி





குறிப்பு:


பாகற்காய் குழம்பிற்கு சுவை சேர்ப்பது நல்லெண்ணை தான்..குழம்பை காலையே
சமைத்து வைத்தால் தான் மதியத்திற்கு சுவை கூடுதலாக இருக்கும் கசப்பும்
குறையும்..குழம்பிற்கு புளியை உறைப்பாக சேர்த்து தேங்காயை கம்மியாக
சேர்க்கவும்...சரியாக சமைக்க தெரிந்தால் பாகற்காய் குழம்பை சின்ன
பிள்ளைகள் கூடகேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.


வழங்கியவர்


தளிகா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty வெந்தயக் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:34 pm

தேவையான பொருட்கள்




  • வெந்தயம் - மூன்று டேபிள்ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - ஐந்து
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • பெருங்காயம் - மூன்று சிட்டிகை
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தாளிக்கும் கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
  • கடுகு - தாளிப்பதற்கு
  • புளி - பெரிய எலுமிச்சை அளவு
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • * புளியை மூன்று டம்ளர் சுடு நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
  • * வாணலியில் எண்ணெய் ஊற்றி காயிந்ததும் கடுகு போட்டு பொறிந்ததும் கடலை பருப்பு சேர்க்கணும்.
  • * கடலை பருப்பு சிவந்ததும் பெருங்காயத்தை பொரிய விடனும்.
  • * வெந்தயம் சேர்த்து லேசாக வதக்கணும்.
  • *
    வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி மிளகாய் வற்றல் மற்றும் பச்சை
    மிளகாய் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கணும்.
  • * உப்பு சேர்த்து கொதிக்க விடனும்.
  • * நன்றாக கொதித்து எண்ணெய் குழம்பின் மேல் தெரிந்தவுடன் இறக்கவும்.





குறிப்பு:


பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் அல்லது முருங்கைக்காய் சேர்த்தும் செய்யலாம்.
*வெந்தயத்தை கருகாமல் கவனமாக வதக்க வேண்டும் இல்லாவிட்டால் ருசி மாறி விடும்.
*இந்த குறிப்பிட்ட குழம்பிற்கு கீரை மசியல் மிக நன்றாக இருக்கும்.
*இந்த குழம்பிற்கு பொடிகள் எதுவும் சேர்க்க கூடாது.



வழங்கியவர்


அம்மு மது,ஸ்ரீவில்லிபுத்தூர்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty மொச்சைக்கொட்டை குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:36 pm

தேவையான பொருட்கள்




  • காய்ந்த (சிவப்பு) மொச்சைக்கொட்டை - 100 g
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • சோம்பு - 1/2 tsp
  • தேங்காய் - 1/4 மூடி
  • புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
  • மிளகாய் தூள் - 2 tsp
  • மஞ்சள் தூள் - 1/4 tsp
  • நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
  • கடுகு - 1/4 tsp
  • கருவேப்பிலை - 1 கோத்து
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • மொச்சையை லேசாக வறுத்து வேகவைத்து எடுக்கவும்.
  • புளி கரைசலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
  • தேங்காயை துருவி சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நல்ல வதக்கவும்.
  • வெங்காயம் சிவந்ததும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். பிறகு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • ஒரு கொதி வந்ததும் வேகவைத்த மொச்சையை சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு அரைத்து வைத்த விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • எண்ணெய் மேலே வந்து மிளகாய் தூள் வாசம் அடங்கியதும் அடுப்பை அணைக்கவும்.





வழங்கியவர்


Ms. Moorthy, USA





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

20 நிமிடம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty மஞ்சள் பூசணி வற்றல் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:37 pm

மஞ்சள்
பூசணியை பரங்கிக்காய் அல்லது கல்யாணப்பூசணி என்றும் சொல்வார்கள். இதில்
நார்சத்து, வைட்டமின் A,C,K,E சத்துக்கள் உள்ளன. மணத்தக்காளி வற்றல்
வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.


தேவையானப் பொருட்கள்





  • மஞ்சள் பூசணி – 2 கீற்று
  • மணத்தக்காளி வற்றல் – ஒரு மேசைக்கரண்டி
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • புளி - எலுமிச்சையளவு
  • கறிவேப்பிலை - ஒரு கீற்று
  • கடுகு - தாளிக்க
  • முதல் அரைப்புக்கு தேவையானவை:
  • தக்காளி - ஒன்று
  • இஞ்சி – சிறுத் துண்டு
  • பூண்டு – 2 பல்
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • சாம்பார்த்தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • 2 வது அரைப்புக்கு தேவையானவை:
  • தேங்காய் – 2 மேசைக்கரண்டி
  • முந்திரிபருப்பு – 5



வெங்காயத்தை
தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை
துண்டுகளாக நறுக்கவும். பூசணியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி
வைக்கவும்.


முதல்
அரைப்புக்கு தேவையான தக்காளி, மிளகு, சீரகம், சாம்பார்த்தூள் ஆகியவற்றை
மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


பிறகு இரண்டாவது அரைப்புக்கு தேவையான தேங்காய், முந்திரியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.


அதன் பிறகு புளியை கரைத்து வடிகட்டி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி மணத்தக்காளி வற்றலை போட்டு பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.


அதே
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து,
வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் முதல் அரைப்பான
தக்காளி விழுதை ஊற்றி நன்கு வதக்கவும்.


இந்த தக்காளி விழுது கலவையுடன் நறுக்கின பூசணித் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.


பின்னர் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.


காய் பாதியளவு வெந்ததும் அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.


அது பச்சை வாசனை போக கொதித்ததும் மணத்தக்காளி வற்றலை போடவும்.


குழம்பு ஒரளவுக்கு கெட்டியானதும் தேங்காய் அரைப்பை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.


சுவையான மஞ்சள் பூசணி வற்றல் குழம்பு ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இளவரசி அவர்கள்.





Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty வற்றல் மாங்காய் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:38 pm

தேவையானப் பொருட்கள்





  • மாங்காய் வற்றல் - 5 துண்டுகள்
  • சிறிய வெங்காயம் - 15
  • பூண்டு - 10
  • தக்காளி - ஒன்று (பெரியதாக)
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • வெல்லம் - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
  • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் - 60 மி.லி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து



மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


புளியை
ஊற வைத்துக் கொள்ளவும். மாங்காய் வற்றலை வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து,
பிறகு ஐந்து நிமிடம் தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


தக்காளியை
கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து இரண்டு ஸ்பூன்
அளவிற்கு தனியாக எடுத்து வைக்கவும். அதிலேயே ஐந்து பல் பூண்டு,
மிளகாய்த்தூளை தவிர மற்ற மசாலாத்தூள்களை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்
கொள்ளவும்.


புளியை
கரைத்து அந்த தண்ணீரில் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவிற்கு உப்பு
சேர்த்து கரைத்து கொள்ளவும். மீதமுள்ள பூண்டு, வெங்காயத்தை இரண்டிரண்டாக
நறுக்கிக் கொள்ளவும்.


ஒரு
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை
போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பூண்டு, வெல்லம்
சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.


பிறகு
தனியாக எடுத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் மாங்காய் வற்றலையும், மிளகாய்த்தூளையும்
சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.


அதில் கரைத்து வைத்திருக்கும் புளிமசாலா கரைசலை ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும்.


பிறகு அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பை கொதிக்க விடவும்.


குழம்பின் மேல் எண்ணெய் மிதந்து கதகதவென்று வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.


சுவையான வற்றல் மாங்காய் குழம்பு தயார். இந்த சுவையான வற்றல் மாங்காய் குழம்பு குறிப்பினை திருமதி. அப்சரா அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்


இதற்கு
அப்பளம், ஏதேனும் பருப்பு கூட்டு நல்ல சைட் டிஷ்ஷாக இருக்கும். இந்த
குழம்பை மழைக்காலங்களில் சமைத்து, மதியம் சூடான சாதத்துடன் சாப்பிட நன்றாக
இருக்கும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty கோழி மசாலாக் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:38 pm

தேவையான பொருட்கள்




  • கோழித்துண்டுகள்- 1 கிலோ
  • அரிந்த வெங்காயம்-2
  • அரிந்த தக்காளி-2
  • தக்காளி அரைத்த விழுது- அரை கப்
  • சின்ன வெங்காயம் பொடியாக அரிந்தது- அரை கப்
  • பூண்டு இஞ்சி விழுது- 1 மேசைக்கரண்டி
  • உருளைக்கிழங்கு-2
  • மிளகாய்த்தூள்- 1 மேசைக்கரண்டி
  • கொத்தமல்லித்தூள்- 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
  • சோம்புப்பொடி- 1 ஸ்பூன்
  • எண்ணெய்- 4 மேசைக்கரண்டி
  • தேவையான உப்பு
  • அரிந்த கொத்தமல்லி- அரை கப்
  • கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
  • கீழ்க்கண்ட பொருள்களை மிருதுவாக அரைக்கவும்:
  • தேங்காய்த்துருவல்- 1 கப்
  • கசகசா- 1 மேசைக்கரண்டி
  • சோம்பு- 1 மேசைக்கரண்டி
  • பட்டை இலை- 1
  • சின்ன வெங்காயம்-6





செய்முறை




  • ஒரு
    பாத்திரத்தில் அரிந்த சின்ன வெங்காயம், அரைத்த தக்காளி, மஞ்சள் தூள்,
    மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், சிறிய துண்டங்களாக அரிந்த
    உருளைக்கிழங்குகள், தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கு
    சிறிது வெந்ததும் கோழியை தேவையான உப்பைச்சேர்த்து வேக வைக்கவும். கோழி
    பாதி வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு வாணலியில்
    எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சோம்புப்பொடி போட்டு அரிந்த வெங்காயம்,
    அரிந்த தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து குழைய வதக்கி
    கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் குழம்பு கொதித்ததும்
    இறக்கவும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty காளான் கொழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:39 pm

தேவையான பொருட்கள்




  • காளான் - 1 pkt
  • சின்ன வெங்காயம் - 1/2 கப்
  • துருவிய தேங்காய் - 2 tsp
  • தக்காளி - 2
  • கருவேப்பிலை - 1 கப்
  • பூண்டு - 6 பல்
  • இஞ்சி - 1 அங்குல துண்டு
  • பச்சை மிளகாய் - 2
  • காய்ந்த மிளகாய் - 6
  • புளி - 1 சிறு எலுமிச்சை அளவு
  • கடுகு - 1/4 tsp
  • உளுந்து - 1/2 tsp
  • எண்ணெய் - 1 tbsp
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • 1/2 tsp எண்ணெய் ஊற்றி பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பில்லை மற்றும் தக்காளியை வதக்க வேண்டும்.
  • ஆறியபின் தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
  • மீதமுள்ள எண்ணையில் கடுகு, உளுந்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • வெங்காயம் வதங்கியதும் காளான் சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  • வெந்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான காளான் கொழம்பு தயார்.





வழங்கியவர்


Ms. Moorthy, USA





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

5 நிமிடம்

25 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty மொச்சை கறி

Post by Tamil Sun Jan 10, 2010 2:40 pm

தேவையான பொருட்கள்




  • வெங்காயம் - 1
  • சிறிய வெங்கயாம் - 10
  • மொச்சை - 1 கப்
  • சிகப்பு மிளகாய் - 6
  • கொத்தமல்லி விதை - 3/4 tsp
  • சீரகம் - 3/4 tsp
  • மிளகு - 8
  • துருவிய தேங்காய் - 1/2 கப்
  • கச கசா - 2 tsp
  • கருவேப்பிலை - 2 இணுக்கு
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • எண்ணெய் - 1 tbsp
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • எண்ணெய் இல்லாமல் சிகப்பு மிளகாய், கொத்தமல்லி, சீரகம், மிளகு, தேங்காய் (1/4 கப்), கருவேப்பிலையை வறுத்தெடுக்க வேண்டும்.
  • வெங்காயத்தை நேரிடையாக தணலில் சுட்டு தோலுரித்து வறுத்து வைத்திருக்கும் மற்றவையோடு சேர்த்து அரைக்க வேண்டும்.
  • மொச்சையை வேக வைத்து தோலுரித்து வைக்க வேண்டும்.
  • கச கசாவை சுது தண்ணீரில் ஊறவைத்து மீதமுள்ள தேங்காயுடன் அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
  • எண்ணெய் சூடானதும் சிறிய வெங்காயம் கருவேப்பில்லை சேர்த்து வதக்கி மொச்சையை சேர்க்கவும்.
  • பின்பு
    அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து புலி தண்ணீர் சேர்த்து (தேவையானால்
    மேலும் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்) மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.
  • புளியின் பச்சை வாசனை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள கச கசா மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.





வழங்கியவர்


Ms. Moorthy, USA





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

20 நிமிடம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty இறால் அவரைக்காய் குழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:41 pm

தேவையான பொருட்கள்




  • இறால் - 1/4 kg
  • அவரைக்காய் - 1/4 kg
  • வெங்காயம் - 150 g
  • தக்காளி - 100 g
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 3 tsp
  • மிளகாய் தூள் - 2 tsp
  • மல்லி தூள் - 3 tsp
  • மஞ்சள் தூள் - 1/2 tsp
  • கருவேப்பிலை - 1 இணுக்கு
  • எண்ணெய் - 3 tbsp
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • எண்ணெய் சூடு செய்து கருவேப்பில்லை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் அடங்கும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
  • அவரைக்காய் சேர்த்து வதக்கி எல்லா தூளையும் சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அவரைக்காய் பாதி வேண்டும் இறால் சேர்த்து கம்மியான தீயில் கொதிக்க விடவும்.
  • இறால் வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்





வழங்கியவர்


Ms. Moorthy, USA





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



15 நிமிடம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty காரகுழம்பு

Post by Tamil Sun Jan 10, 2010 2:42 pm

தேவையான பொருட்கள்




  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • பூண்டு - 1/2 கப்
  • தக்காளி - 3
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • உப்பு
  • தாளிக்க:-
  • ----------
  • கடுகு,உளுந்து - 1/2 ஸ்பூன்
  • வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  • சீரகம் - 1.4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை சிறிது
  • நல்லெண்ணெய் சிறிது
  • வறுத்து பொடிக்க:-
  • --------------------
  • மல்லி விதை - 2 ஸ்பூன்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • உளுந்து - 1 ஸ்பூன்
  • கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  • வெந்தயம் - 1/2 ஸ்பூன்




செய்முறை




  • வெங்காயம் மற்றும் பூண்டை நீளமாக நறுக்கவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  • புளியை கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
  • பொடிக்க வேண்டியதை தூளாக,நைசாக பொடிக்கவும்
  • இப்பொழுது வானலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம் பூண்டை வதக்கவும்.
  • பிறகு தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கி மிளகாய்,மஞ்சள் தூள்கள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
  • புளிதண்ணிரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க்க விடவும்,கொதிக்க ஆரம்பித்ததும் பொடித்த பொடியை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • குழம்பு பதம் வந்ததும் இறக்கவும்.





குறிப்பு:


சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்,இது கொஞ்சம் காரமாக இருக்கும்.



வழங்கியவர்


Mrs.RenukaSiva
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழம்புகள் Empty Re: குழம்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum