TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்...

4 posters

Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்...

Post by KAPILS Tue May 28, 2013 9:29 pm

ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.

* கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

* நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து,கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன

* குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது. குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற்றத்தை நீக்கவும் சோப்புகளை பயன்படுத்துவோம். அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்? அவ்வாறு மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது, நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.

* நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty Re: கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்...

Post by அருள் Wed May 29, 2013 6:51 am

நன்றி ................பயன்தரும் குறிப்பு கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty கால்களை பராமரிப்பது எப்படி?

Post by அருள் Wed May 29, 2013 6:52 am

கால்களை பராமரிப்பது எப்படி?
இப்போது கால்களுக்கான பாராமரிப்பையும், பெடிக்யூர் பற்றியும்
பார்ப்போம். கால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான்.
பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின் ட்ரையாகறதாலதான்
வருதுன்னு சொல்றாங்க. எதுவாக இருந்தாலும் இது போக்க முடியாத விஷயமில்லை.
வீட்டில் செருப்பு அணிய பிடிக்காதவர்கள், அதிக எடை உள்ளவர்கள், ட்ரை ஸ்கின்
உள்ளவர்கள், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்டவேலை செய்பவர்கள்
என்று எல்லாருக்குமே இது பொது சொத்தாக இருக்கிறது.

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Pedicure_1முதலில்
இந்த வெடிப்புகளை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம். ரெகுலரான
பெடிக்யூர் மிக அவசியம். பெடிக்யூர் ஆரம்பிக்கும் முன்பே எப்போதும் கால்
நகங்களை ஷேப் செய்து விடுவது நல்லது. நம் ஊரில் பலரும் ஒட்ட
வெட்டிவிடுவதுதான் வழி வழியாக செய்வது. ஆனால் காலில் நகங்கள் வளர்த்தால்
அழகாக இருக்கும். காலில் நகங்கள் வளர்க்கும்போது எப்போதும் ஸ்கொயர்
ஷேப்பையே கடைபிடித்தால் நன்றாக இருக்கும். என்னடா இது மெனிக்யூர்,
பெடிக்யூர்னு அலுத்துக்கிட்டால் இது அந்த காலத்திலிருந்து எல்லாரும்
தினமுமே செஞ்சுட்டு இருந்த விஷயங்கள்னு சொன்னா ஆச்சரியமாதான் இருக்கும்.

பீர்க்கை நாறிலிருந்து, ப்யூமிஸ் ஸ்டோன் வரை பாட்டி காலங்களிலிருந்து
ஸ்க்ரப் செய்யவென்றே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும்
சொல்லப்போனால், அந்த காலத்து பாத்ரூம்களில் கால்களை தேய்க்கவென்றே சின்னதாக
சொர சொரப்பான கல் வைத்து கட்டியிருப்பார்கள். இந்த கல்லிற்கு பதிலாக நாம
ஸ்க்ரப்பர் உபயோகிக்கிறோம். அவ்வளவே. கால்களுக்கு இப்படி ரெகுலரான
ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் (அந்த காலத்தில் தேங்காய் எண்ணெய்) செய்வதன்
மூலம் பித்த வெடிப்புகளை நீக்கிவிடலாம்.

முதலில் நெயில் பாலீஷை ரிமூவ் செய்து, நகங்களை வெட்டி, பைல் செய்துக்
கொள்ள வேண்டும். கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால்தான் ஸ்க்ரப்பிங்
செய்வது எளிது. கடினமான தோல்களை எளிதில் நீக்கலாம். அந்த காலம் போல இப்போது
நம்மால அதிக நேரம் செலவழித்து, துணியெல்லாம் துவைத்துப் பிறகு
குளிப்பதற்கு நேரம் இல்லை. அவசியமும் இல்லை. அதனால் கால்கள் நெடுநேரம்
தண்ணீரில் ஊறுவதற்கு வாய்ப்பில்லை. இதற்கு மாற்றாகத்தான் பெடிக்யூர் என்ற
பெயரில் கால்களை நெடுநேரம் சுடுதண்ணீரில் ஊறவைத்து பிறகு தேய்க்கிறார்கள்.
அதனால் வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய நினைப்பவர்கள், அதற்காக தலைகுளிக்கும்
நாளை தேர்ந்தெடுத்தால் நல்லது. நாம் குளித்துமுடிக்கும்போது நமது கால்கள்
தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். சளித் தொந்தரவு, சைனஸ் உள்ளவர்கள் ஒரு
பக்கெட் சுடு தண்ணீரில் லிக்விட் சோப் ஊற்றி அதில் கால்களை ஊறவைக்கலாம்.

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Pedicure_2கால்களை
தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள Foot Scrubber
விற்கிறார்கள். இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக
நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த
ஸ்க்ரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு
இதுவே சிறந்தது. மற்றவர்கள் Pumice Stone உபயோகிக்கலாம். Pedi Egg என்று
உள்ளதையும் கூட ஸ்க்ரப் செய்ய உபயோகிக்கலாம். ஆனால் ஈரமான கால்களுக்கு
சரிவராது.

மிகவும் கடினமாக அங்கங்கே முடிச்சு போல சிலருக்கு ஸ்கின்
கடினத்தன்மையுடன் இருக்கும். இவர்கள் நான் மெனிக்யூரில் சொன்ன Corn Blade
வாங்கி அதனைக் கொண்டு அந்த தோல்களை சீவிவிடலாம். பிறகு பெடிக்யூர் கிட்
அல்லது நெயில் கட்டரிலேயே (கொக்கிபோன்று வளைந்திருக்கும், முனை கொஞ்சம்
ஷார்ப்பாக இருக்கும்) உள்ள அட்டாச்மெண்ட் கொண்டு நக இடுக்குகளில் உள்ள
அழுக்கினை நீக்க வேண்டும். பிறகு கால்களில் சோப் தேய்த்து, கால்தேய்க்க
வென்றே பிரஷ்கள் கடைகளில் விற்கும் பிரஷினைக் கொண்டு நன்றாக தேய்க்க
வேண்டும். இப்போது கால்களை நன்றாக துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை
கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல்
தடவுங்கள். பிறகு கால்கள் உலர்ந்ததும், கைகளுக்கு சொன்ன அதே முறையில்
நெயில் பாலீஷ் போடுங்கள். அவ்வளவே பெடிக்யூர்.

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Pedicure_3கால்களில்
அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட்
உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த
மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன்
கிடைக்கும். இல்லாவிட்டால் தேய்க்கும் அத்தனை மருந்தும் படுக்கையில் பட்டு
பாழாவதோடு, கால்கள் சரியாகவும் நாளாகும். கை, கால்களின் பராமரிப்பினை மாதம்
இரண்டு முறை செய்து கொண்டால் போதும். எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்க
முகம் மட்டுமல்ல, கை கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது அவசியம்.

உடைகளும் கூட கை, கால்களின் ஷேப்பினை பொருத்துதான் தேர்ந்தெடுக்க
வேண்டும். கை குண்டாக இருப்பவர்கள் ஸ்லீவ் லெஸ்ஸை தவிர்ப்பதும், கால் மிக
குண்டாக அல்லது மிக ஒல்லியா இருப்பவர்கள் மினி ஸ்கர்ட்டை தவிர்ப்பதும்
நல்லது. கால்களில் நிற வேறுபாடு அல்லது அதிகமான கரும்புள்ளி இருப்பவர்கள்
ஸ்கர்ட் அணியும்போது ஸ்டாக்கிங் போட்டுக் கொண்டால் கால்களின் குறைபாடு
தெரியாது. ஸ்டாக்கிங் பிடிக்காவிட்டால் ஸ்ப்ரே பவுண்டேஷனும் கூட
உபயோகிக்கலாம். கைகளுக்கும் கூட நிற வேறுபாடு இருந்தால் ஸ்ப்ரே பவுண்டேஷன்
அல்லது சாதாரண பவுண்டேஷன் உபயோகிக்கலாம். அதிக நேரம் தரையில் உட்கார
நேர்ந்தால் கால் முட்டி தரையில் படாமல் துணியினை விரித்து அதில்
உட்காரலாம். இதனால் நிறம் மாறாமல் இருக்கும். கைகளை மேஜையில் வைத்துக்
கொண்டு நெடுநேரம் கம்ப்யூட்டர் முன்பு இருப்பது கூட கை முட்டியின் நிறத்தை
பாதிக்கும். இதனைப் போக்க ஆலிவ் பட்டர் அல்லது கோக்கோ பட்டரை தினமும்
தடவலாம். நல்ல பலன் இருக்கும்.

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Pedicure_4கால்கள்
குட்டையாக இருப்பவர்கள் லாங்க் ஸ்கர்ட் போடலாம் அல்லது புடவை கட்டும்போது
நல்ல இறக்கமாக கட்டலாம். இது கால்களின் உயரத்தை அதிகமாக்கி காட்டும்.
கால்களுக்கு செருப்பினை தேர்ந்தெடுக்கும்போதும் மிகுந்த கவனம் தேவை.
அதிகமான உயரமுள்ள செருப்புகள் அணிய விருப்பமுள்ளவர்கள், அணியும்
நேரத்தையாவது குறைந்த நேரமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பென்சில் ஹீல்ஸ் உபயோகிக்கும் முன்பு நமது கால்கள் நம் எடையை நன்கு பாலன்ஸ்
செய்கிறதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல
தரமான ஷூக்களையே வாங்குங்கள். செருப்புகள் அணிந்து வாக்கிங் போவதைக்
காட்டிலும், ஷூ அணிவதால் பாடி பாலன்ஸ் நன்கு இருக்கும். காற்றோட்டமுள்ள
ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும். ஜிம்முக்கு செல்லும்
பழக்கமுள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் அங்கே குளிக்கும்போது பாத்ரூம்
ஸ்லிப்பர் இல்லாமல் குளிக்காதீர்கள். அதிகமாக தொற்று நோய் பரவும் இடங்கள்
இவை. இப்படி கை,கால்களை கவனித்துக் கொண்டால் அழகாக மட்டுமல்ல,
ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அடுத்த உறுப்பினைப் பற்றி வரும் பதிவில்
பார்க்கலாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty நகங்களை பராமரிப்பதற்கு சிலஇலகு எளிய வழிகள்…

Post by அருள் Wed May 29, 2013 6:55 am

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Handandlegfront-600-300x225உடலில்
கால்களும் கைகளும் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு முக்கியமானவை அவற்றுடன்
தொடர்புடைய நகங்களும். நம்முடைய கைகள் மற்றும் கால்களுடன்
இணைந்திருக்கின்ற முக்கியமான பகுதிகளான கை மற்றும் கால் விரல் நகங்களை
முறையாக பராமரிப்பதும் முக்கியமானதாகும். சுத்தமான மற்றும் ஆரோக்கியமான
நகங்கள் கை மற்றும் கால்களை அழகாக தோற்றமளிக்கச் செய்வதுடன், பல்வேறு
வகையான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதல்களிலிருந்தும்
பாதுகாக்கவும் செய்கிறது. நகங்களுக்கு வேண்டிய சத்துக்கள்:
இரும்புச்சத்துள்ள உணவுகள்: உடலில் இரும்புச்சத்து பற்றாக்குறை இருந்தால்,
நகங்கள் எளிதில் உடைந்துவிடும். எனவே நகங்களை நன்றாக பராமரிக்க
வேண்டுமென்றால், இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
அதிலும் இறைச்சி, மீன் வகைகள், சோயா வகைகள், பீன்ஸ், அவரைக்காய் மற்றும்
அவரை விதைகள், முழு தானிய பொருட்கள், பச்சை கீரை வகைகள், காய்கறிகள்,
கிழங்கு வகைகள், நட்ஸ், முட்டை, கோழி மற்றும் வான்கோழி பேரிச்சை போன்றவற்றை
சாப்பிட வேண்டும்.

வைட்டமின் டி உணவுகள்: நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வைட்டமின் டி
ஆகியவை பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய சத்து பீட்ரூட்டில் அதிகம்
உள்ளது. எனவே தினமும் பீட்ரூட்டினை உணவில் சேர்த்துக் கொள்வதால், நகங்கள்
ஆச்சிரியப்படும் வகையில் ஆரோக்கியமான வளர்ச்சியையும், வலிமையையும்
பெற்றுவிடும். கால்சியம் உணவுகள்: பால் பொருட்களில் கால்சியம் அதிகம்
உள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, நகங்கள் தினந்தோறும்
நல்ல பராமரிப்பை பெறுவதாக உறுதி செய்திட முடியும். குறிப்புகள்: * ஒரு
மேசைக்கரண்டி அளவு எலுமிச்சை சாற்றினை, ஒரு கோப்பை சாதாரண தண்ணீருடன்
கலந்து விடுங்கள். பிறகு, அந்த கலவையில், கை மற்றும் கால் விரல் நகங்களை
சில நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதன்பின் நகங்களை சூடான தண்ணீரில்
சுத்தம் செய்து விட்டு, அதன் மீது மாய்ச்சுரைசரை தடவி விடவும். இந்த
வழிமுறை நகங்களிலுள்ள கறைகளை நீக்கவும் மற்றும் நகங்களை பாதுகாக்கவும்
உதவும். * ஒரு காட்டன் துணியை எலுமிச்சை சாற்றில் நனைத்து பிழிந்து
எடுத்து, நகம் முழுவதும் சிறிது நேரத்திற்கு மசாஜ் செய்து விட வேண்டும்.
இதனால் கை மற்றும் கால் நகங்கள் உறுதியானதாகவும் மற்றும் பிரகாசமானதாகவும்
மாறிவிடும். * ஆலிவ் ஆயில் நக பராமரிப்பு உட்பட பல்வேறு அழகு குறிப்புகளில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. கை மற்றும் கால் நகங்களை பிரமிக்கத்தக்க
வகையில் பளபளப்பாகவும் மற்றும் உறுதியாகவும் மாற்ற விரும்பினால்,
நகங்களுக்கு தினமும் கொஞ்சம் ஆலிவ் எண்ணையை தடவி விட வேண்டும். * நகங்களின்
பராமரிப்பிற்கு, வெதுவெதுப்பான கடுகு எண்ணையில் நகங்களை ஒவ்வொரு நாளும், 8
முதல் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த நகங்களை
மெதுவாகவும் மற்றும் மென்மையாகவும் இரத்த ஓட்டம் சீராகும் வகையில் மசாஜ்
செய்து விடவும். இந்த செயல்களை தினமும் செய்து வந்தால் நகங்கள்
உறுதியாகவும் மற்றும் அழகாகவும் இருக்கும். * உண்மையான நகப்
பாதுகாப்பிற்கு, கால் விரல் நகங்களை வளைவாக வெட்டாமல் நேர்கோட்டில்
வெட்டுங்கள். பொருத்தமில்லாத வகையில் நகங்களை வெட்டுதல், சரியாக பொருந்தாத
காலணிகள், கால் விரல் நகங்களில் விரிசல்கள் மற்றும் வெடிப்புகளை
ஏற்படுத்திவிடும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty Re: கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்...

Post by அருள் Wed May 29, 2013 6:56 am


* கை, கால்
முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில்
எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில்
கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஒலிவ்
ஒயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


*
நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை
வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.


* பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.


* உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.


* அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.


*
பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு
ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து
நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.


*
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை
வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.


*
ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.


*
சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு
கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம்
ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய்
எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.


* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.


*
தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது
நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.


*
ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.


*
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம்
கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம்
எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும்
நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன்
கிடைக்கும்.


* ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில்
தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து
வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.


* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை
நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில்,
காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.


* நகங்கள்
உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே
காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள்
மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty கால் நகங்களைப் பாதுகாக்க...

Post by அருள் Wed May 29, 2013 7:00 am

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Handandtoenail
நகங்களின் அழகு பெரும்பாலும் அவைகளை வடிவத்திலும், சீராகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதிலும் அமைந்துள்ளது. நகங்களின் பாதுகாப்புக்கு அவற்றை பளபளப்பாகவும், தூய்மையாகவும், ஒரு சிறந்த மேற்பூச்சுடனும் வைத்திருத்தல் அவசியமாகும். மற்றபடி, நகங்களின் நீளம் அவரவர் பின்பற்றும் அன்றாட வாழ்க்கை முறையை சார்ந்தது.


அழுக்குடன் நகங்களை பேணுதல் சுகாதார கண்ணோட்டத்தில் மட்டுமில்லாமல், நம் பழக்கங்களின் அறிகுறியாகவும் கருதப்படுகின்றது.


கைகளின் பாதுகாப்பு, அவைகளை தூய்மையாகவும், நகங்களை நன்று பராமரிப்பதிலும் தான் அமைந்துள்ளது.


நகங்களை அழகாக வைத்திருக்க, அழகியலில் "மேனிக்யுர்" என்கிற முறை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது. அதிலும் "ஃப்ரெஞ்ச் மேனிக்யுர்" முறை நளினமான உத்தியாகும். ஏனென்றால் இம்முறையால் நம் நகங்கள் பொலிவோடும், அழகோடும், சுகாதாரமாகவும் எப்போதும் காணப்படும்.

கால் நகங்களை பொறுத்தவரை, "பெடிக்யுர்" முறை சாலச்சிறந்ததாகும். இம்முறைகளை மேற்கொள்ள நீங்கள் அடிக்கடி அழகு நிலையம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இல்லத்தில் இருந்தபடியே, மிகவும் எளிதாக இந்த அழகியல் முறைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். கை மற்றும் கால் நகங்களை பேண, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த முறைகளை பின்பற்றுதல் அவசியமாகும்.


நகங்களைஅழகாகவைத்திருக்கசிலஆலோசனைகள் :


நகங்களை மென்மையாக பாதுகாக்க, நீங்கள் பயன்படுத்தும் "ஹேண்ட் க்ரீம்"- கைகளில் மட்டுமில்லாமல் நகங்களிலும் தடவிகொண்டு, பின்பு சுத்தமான துணியால் துடைத்து எடுங்கள். நகத்தின் பளபளப்பிற்கு, அவற்றில் "பெட்ரோலியம் ஜெல்லி" தடவி கொள்ளலாம்.


ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து 20 நிமிடங்கள் நகங்களை அதில் ஊற வைத்தால், நகங்கள் மேலும் மென்மையாக மாறும்.


தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், மற்றும் பாதாம் எண்ணெய், இம்மூன்றும் நகங்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அதீதமாக உதவுகின்றன. வீட்டில் இருந்தபடி, எதேனும் ஒரு எண்ணெயையை நகத்தில் தடவி மென்மையாக மஸாஜ் செய்யுங்கள். பின்பு, ஒரு சுத்தமான துணியால் உபரி எண்ணெய்யை துடைத்து எடுங்கள். நீரினால் கழுவ வேண்டாம்.


நகங்களின் உள்ளே இருக்கும் அழுக்குகளை நீக்க, அவற்றை நோண்டி எடுக்காமல், நீர்த்த "ஹ்ட்ரோஜன் பெராக்ஸைடு" - பயன்படுத்தவும். இதை நகங்களின் மீது தடவி சிறிது நேரம் காத்திருந்தால், நகங்களில் உள்ள அழுக்குகள் இளகிவிடும். அதன்பின், வெதுவெதுப்பான வெந்நீரால் கழுவி சுத்தப்படுத்தலாம்.


நகங்களில் காணும் கறைகளை நீக்க எலுமிச்சை சாறு ஒரு நல்ல தீர்வாகும். எதேனும் சாயத்தினாலோ, பூச்சினாலோ நகத்தில் கறை படிந்துவிட்டால், எலுமிச்சை சாறை அதில் ஊறி சிறிது நேரத்திற்கு பின், ஒரு மென்மையான துணியால் () டிஷ்யு பேப்பரால் துடைத்து எடுக்கவும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty கால் விரல் நகங்கள் அசிங்கமா இருக்கா? இத ட்ரை பண்ணி பாருங்க...

Post by அருள் Wed May 29, 2013 7:02 am

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... 27-1369648026-3-soapywaterஉண்மையில்,
ஒருவரின் உடல் நலத்தை நகங்களைக் கொண்டு அறியலாம். ஆனால் சிலரது நகங்களைப்
பார்த்து மட்டும் உடல் நலத்தைக் கூற முடியாது. ஏனெனில் அத்தகையவர்களின்
நகங்களில் அழுக்குகள் தங்கியிருப்பதால், அவை நகத்தின் உண்மையான நிலையை
வெளிப்படுத்தாமல் தடுக்கிறது. எனவே எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை
பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு
கொடுக்க வேண்டும். இத்தகைய பராமரிப்புக்களை பெண்கள் அதிக ஆர்வம் கொண்டு
மேற்கொள்வார்கள். ஆனால் ஆண்கள் அதனை கொஞ்சம் கூட கண்டு கொள்ள மாட்டார்கள்.
அவ்வாறு விட்டால், நகங்களில் தங்கியுள்ள அழுக்குகளாலேயே உடலில் பிரச்சனைகள்
வந்துவிடும். அதிலும் சில நேரங்களில் நகங்களே வெளியே வந்துவிடும். எனவே
ஆண்களே, உங்கள் நகங்களை சரியாக பராமரித்து வாருங்கள். இப்போது நகங்களை
அழகாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய முறைகளை கொடுத்துள்ளோம். இதில் ஆண்
மற்றும் பெண் என இருபாலருக்குமே பொதுவான முறைகளைக் கொடுத்துள்ளோம். அதில்
உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து, பின்பற்றி வாருங்கள்.


சுத்தமாக கழுவுதல்

வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால்,
நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து
கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

நெயில் பாலிஷ் ரிமூவர்

பெண்களுக்கு நகங்களை அழகாக்குவதற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம்
இருக்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு
1-2 முறையாவது, நல்ல நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் தான், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும்.

சோப்பு நீர்

பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில்
அத்துடன் சிறிது நறுமண எண்ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர்த்துக்
கொள்ளலாம். குறிப்பாக பாதங்களை 15 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். இதனால்
பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள்
நீங்கிவிடும்.

ஸ்கரப்

பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களைச் சுற்றியுள்ள இடங்களை ஸ்கரப்பர்
பயன்படுத்தி தேய்த்து, அங்கு தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கிருமிகளை
வெளியேற்றவும். முக்கியமாக இவ்வாறு தேய்க்கும் போது, அளவுக்கு அதிகமாக
தேய்க்கக் கூடாது.

நகங்களை வெட்டவும்

கால் விரல் நகங்களை நீளமாக வளர்க்காமல், அவ்வப்போது வெட்டிவிட வேண்டும்.
பொதுவாக பெண்கள் தான் நீளமாக வளர்ப்பார்கள். ஆனால் இவ்வாறு வளர்த்தால்,
பாக்டீரியாக்கள் மற்றும் அழுக்குகள் தங்குவதற்கு வசதியாகிவிடுவதோடு, பின்
எவ்வளவு தான் சுத்தமாக செய்தாலும் விரைவில் அவற்றை அகற்ற முடியாது. எனவே
அவ்வப்போது கால் விரல் நகங்களை வெட்டிவிட வேண்டும்.

பிரஷ்

பாதங்களை சுத்தம் செய்யும் போது, கால் விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை
பிஷ் கொண்டு நகங்களின் முனைகளில் தேய்த்தால், அழுக்குகள் எளிதில்
வெளிவந்துவிடும். அதிலும் இதனை தினமும் குளிக்கும் போது செய்வது மிகவும்
நல்லது. வேண்டுமெனில் இந்த முறைக்கு டூத் பிரஷ்களை பயன்படுத்தலாம்.

மாய்ஸ்சுரைசர்

பிரஷ் கொண்டு செய்த பின்னர், பாதங்கள் மென்மையாகவும், வறட்சியின்றியும்
இருப்பதற்கு, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இவ்வாறு தினமும் நல்ல
மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினால், பாதங்களில் ஏற்படும் குதிகால் வெடிப்பை
குணமாக்கலாம். வேண்டுமெனில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தவும் செய்யலாம்.

எலுமிச்சை சாறு

ஒருவேளை நகங்கள் வெள்ளையாக இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றை நீரில் விட்டு,
பின்னர் பாதங்களை அதில் ஊற வைத்து, பின் பிரஷ் செய்து, மாய்ஸ்சுரைசர்
தடவவும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty நகங்கள் உணர்த்தும் நோய் அறிகுறிகள்

Post by அருள் Wed May 29, 2013 7:05 am

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Nail-284x300
நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக
அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும்.


ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக
வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின்
நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம்.மருத்துவ உலகில் நகங்களை வைத்தே
நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ
அறிஞர்கள்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல,
கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு
மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள்
இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டுவிடும்.

நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின்
அடிப்பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும்,
பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக
இருக்கும்.

பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம்
வேறுபட்டிருக்கும்.

ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக
இருக்கும். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி
குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால்
பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதயநோயால்
பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில்
இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும்
கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள்
கிளிமூக்கு போல வளைந்து இருக்கும். இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து
குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும். சர்க்கரையின் அளவு
அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால்
நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம்,
புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.
நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும்
மஞ்சள் கோடுகள் இருக்கலாம். நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி,
அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற
தோல் வியாதியின் அறிகுறியாகும்.கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Nail-284x300

இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால்
நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்
பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.

இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந்தால் குறைத்துக்
கொள்ள வேண்டும். அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக்கரைசல்
போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது.
அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.
நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு
அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.

சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும்
சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால்
வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய
உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை
சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty Re: கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்...

Post by அருள் Wed May 29, 2013 7:06 am

அடுத்தவர்
கண்களுக்கு அத்தனை எளிதில் தெரியாது என்பதால், பாத பராமரிப்பு பல
பெண்களுக்கு இரண்டாம்பட்சம்தான். தவிர, பாதப் பிரச்னையில் பெண்கள்தான்
அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தம் அதிகமாவதால் குதிகால் வெடிப்பு,
பாதத்தில் வலி, குடைச்சல் ஏற்படும். தோல் வெடிப்பு ஏற்பட்டு கொஞ்சம்
கொஞ்சமாக தோல் உரிந்துவரும். தோல் உரிவதால் வலி உண்டாகும். “உங்கள்
கைக்கெட்டும் பொருட்களை வைத்தே இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்”

என்கிறார் சித்த மருத்துவர் பொன்.ராமச்சந்திரன்.




கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... 223339_10150186937148158_191366298157_6892632_1213274_n






பாதம், நகம் பராமரிப்பு

மல்லி விதை (தனியா), சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து மிக்ஸியில்
பொடிக்கவும். அந்தப் பொடியை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு தளதளவென
கொதிக்கவைத்து இறக்கவும். கொஞ்சம் வெதுவெதுப்பாக ஆறியதும், அந்தத் தண்ணீரை
தாம்பாளத்தில் ஊற்றி, 10 நிமிடம் பாதத்தை அதில் வைக்கவேண்டும். அல்லது
மல்லி - சீரகப் பொடியை தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டுவர,
நாளடைவில் பாத வெடிப்பு காணாமல் போய்விடும். கால் ஆணியும் வராது. நகமும்
நன்றாக வளரும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.



கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... 269654_10150258395478158_191366298157_7441715_4284255_n

சிலருக்கு கால் நகங்கள் சொத்தையாக இருக்கும். நக வெடிப்பு இருக்கும்.
கிருமித் தொற்று இருக்கும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் கால்சியம்
குறைபாடுதான். இதை உணவுமுறையிலேயே எளிதில் குணப்படுத்த முடியும். வாரம்
இரண்டு நாட்கள் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் கால்சியம் சத்துகளைப்
பெறமுடியும். முருங்கை, பொன்னாங்கன்னி, அரைக்கீரை, தண்டுக்கீரைகளில்
கால்சியம் அதிகம் இருக்கிறது.



கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... 253402_10150220712173158_191366298157_7189107_1921235_n

நகக் கண்களை சுத்தமாக வைத்துக்கொள்வதும் சுலபம்தான். ஒரு சிட்டிகை கஸ்தூரி
மஞ்சள், ஒரு கைப்பிடி குப்பை மேனி மற்றும் புதினாவை வெந்நீரில்
வெதுவெதுப்பானதும் அதில் நகக் கண்கள் படுமாறு கால்களை வைக்க வேண்டும்.
வாரம் இருமுறை இப்படிச் செய்துவந்தால் அழுக்கு நீங்கும், கிருமித் தொல்லை
இருக்காது. சொத்தை வராது, நக வெடிப்புகள் மறைந்துபோகும். தோலும்
பளபளக்கும். சோரியாஸிஸ், சேற்றுப்புண் இருந்தாலும் குணமாகும்; வராமலும்
தடுக்கமுடியும்.



கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... 26715_413367488157_191366298157_4432364_803503_n

இதையெல்லாம்விட மிக எளிமையான வழி மருதாணி மருத்துவம்! அழகுக் குறிப்பில்
மட்டுமல்ல ஆரோக்கிய குறிப்பிலும் மருதாணிக்கு முக்கிய இடம் உண்டு.
பாதத்தைச் சுற்றி மருதாணி வைப்பதால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
நகக்கண்களில் வைத்தால் நகசொத்தையும் வராது. பாதத்தில் வெடிப்பு இருந்தால்
ஆண்களும் மருதாணி வைக்கலாம்.



- சா.இலாகுபாரதி

Photos courtesy: Sowmya, Bangalore
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty Re: கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்...

Post by Tamil Sat Apr 26, 2014 7:43 pm

அருமை ....நன்றிகள் அருள்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty Re: கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்...

Post by Muthumohamed Sat Apr 26, 2014 11:56 pm

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி பகிர்வுக்கு
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்... Empty Re: கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum