TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பனா?...............உண்மை என்ன?

2 posters

Go down

கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பனா?...............உண்மை என்ன? Empty கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பனா?...............உண்மை என்ன?

Post by sakthy Wed Oct 03, 2012 7:04 pm

கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பனா?...............உண்மை என்ன?
கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பனா?...............உண்மை என்ன? 2264-kattpix1
தமிழர்களிடம் இருந்ததும்,இன்றும் இருப்பதும் ஒற்றுமையின்மையே.அன்று மூவேந்தர்கள் ஒற்றுமையின்மையால் அன்னியப் படையெடுப்புக்கள்,ஆரிய மதம், கலாச்சாரம் உள்ளே நுழைந்து, தமிழர் கலச்சாரம்,மதக் கொள்கைகளை சின்னபின்னப்படுத்தியது. பாண்டியர்களின் அரசு உடைந்து சுக்கு நூறாகிய நிலையில், மாலிக்காபூர் வந்து மதுரையை சின்னாபின்னப்படுத்தி பின்,தொடர்ந்து வந்த நாயக்கர்கள் மீனாட்சி அம்மன ஆலயத்தை சீர்படுத்தி மதுரைக்கு சிறப்பேற்றினர்.

இந்த வரிசையில் வந்த, நல்லம நாயக்கர், சந்திரகிரியை ஆண்டு வந்தார்..பாளையங்களாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட அங்கு,மல்லன் ஒருவனுடன் ஏற்பட்ட தராற்றில் மல்லன் இறந்து போகவே,அவன் எட்டு சகோதரர்களை தன் பிள்ளைகளாக ஏற்று அடைக்கலம் கொடுத்ததால் அந்த நாயக்கருக்கு எட்டப்பர் என்ற பெயர் வந்தது.அந்த பட்டப்பெயர் நாயக்கர்களின் பரம்பரைப் பெயராயிற்று.அந்த வழியில் வந்த அனைவரையும் எட்டப்ப நாயக்கர் என்று சொல்லப்பட்டு வந்ததுடன் அவர்கள் வாழ்ந்த இடமும் எட்டயபுரமாயிற்று.
It is said that kings of Ettapayapuram were called so (ETTAPPAN) because of the fact that one of the Kings, named Nalama Nayak, accepted himself as a father to eight oprhaned siblings of another king who he defeated in the war.

மனித நேயம் கொண்ட நாய்க்கர் செய்கைக்காக கொடுக்கப்பட்ட பட்டப் பெயரை துரோகி எட்டப்பன் எனப் பயன்படுத்துவது எப்படி சரியானதாகும்?எட்டப்பன் கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தது என்பது வரலாற்றில் இல்லாத ஒன்றாகும்.தற்போது உள்ள கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியர் லேனா தமிழ்வாணின் தந்தை தமிழ்வாணன், கட்டப்பொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்ற ஆய்வு நூலை வெளியிட்டிருந்தார்.அதில் அவர்,கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று என்று எழுதினார். ஆனால் தமிழ்வாணன் கால்ட்வெல்லின் வரலாற்று நூலை மட்டுமே வைத்து அந்த நூலை எழுதினார்.

இது தவிர,ஜெனரல் பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு, என்கிறார் தி.நா.சுப்ரமணியம். அவர் அதில் தொடர்ந்து, கோலார்பட்டியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சை கேட்பதே கட்டபொம்மனது நோக்கம், என்று எடுத்துக்காட்டியுள்ள பகுதியால் அறியலாம். இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனாரும் மறுக்காமல் உறுதி செய்துள்ளார்.அதே சமயம்,மபொசி அவர்கள் கட்டப்பொம்மனை தொண்டமான் தான் காட்டிக் கொடுத்தான் என்கிறார்.
Under Instruction of Mr.Lousington, Collector of Tinnevelly, The Kattabomman Captured by Thondaman in Sathirapathi Forest on 23/09/1799. (History of Tennevelly – By B.Coldwell P.112
“I have received a letter from Mr Lushington (Collector Tinnevelly) that he has received a letter from the Tondaiman (Pudukottai Poligar who was also aligned with the British) informing him that he had succeeded in his exertions to seize the person of Kattabomma Nayka”, and desiring to be furnished with orders respecting the disposal of that rebellious Poligar.
Thus it becomes clear that the Pudukottai people were the ones who located and captured Kattabomman, not the Ettayapan Nayak or his people, as rumored.
கட்டப்பொம்மன் வரலாற்றின் சில பகுதிகளை, கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் காட்டுகின்றன.அச்செப்பேடு 27 செ.மீட்டர் நீளம், 15 செ.மீட்டர் அகலம் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில், ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த செப்பேட்டை ஆய்வு செய்த ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் செ.ராசு பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது தவிர கட்டப்பொம்மன் படத்தில்,வெள்ளையத்தேவன் பற்றியும்,அவனுக்கு வெள்ளையம்மாளை திருமணம் செய்து வைத்ததையும் கூறுகிறார்கள்.இது வேடிக்கையாகவே இருக்கிறது. 02-02-1790ல் பட்டம் ஏற்ற கட்டப்பொம்மன், வேட்டையாட காட்டிற்குப் போகிறான். கண்டெடுத்தான் ஒரு கைவிடப்பட்ட குழந்தையை. பொடி நடை பயிலும் வயது. சண்டை துவங்கியது. 1798 ல் இந்த ஒன்பது ஆண்டு காலத்திற்குள்ளாக வெள்ளையத்தேவன் வளர்ந்து வில், வாள் பயின்று வீரனாக படை நடத்தும் தலைவனாக ஆகி வெள்ளையம்மாளை திருமணமும் செய்வது எப்படி? 10,12 வயதில் படைத்தலைவன்,திருமணம் சாத்தியமா?

ஆனாலும்,இவை எல்லாம் சரியா தவறா என ஆராய வரவில்லை.கட்டப்பொம்மு வரலாற்றில் எட்டப்பனின் பங்கு என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கட்டபொம்மு நாயக்கர் பிறந்தது 03-01-1760
பட்டம் ஏற்றுக் கொண்டது 02-02-1790
அவன் தூக்குக்கயிற்றில் தொங்கியது 16-10-1799
மொத்தம் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி தான்.

1790 ல் பாஞ்சாலம் குறிச்சியின் பாளையக்காரனாக வந்த கட்டப்பொம்மு திருநெல்வேலியின் கிழக்கு பகுதியினருடன் ஒன்று செர்ந்தாலும்,மற்றவர்களுடன் ஒன்று சேர முடியவில்லை.முன்னர் பல தாகுதல்கள் தோல்வியுற்ற நிலையில், 1767 ல் மேஜர் பிளிண்டனால் பாஞ்சாலம்குறிச்சி முதல் தாக்குதலுக்கு ஆளானது. இந்த தாக்குதலில் பாளையக்காரர்கள் தப்பி விட்டனர்.
1781 முதல் 1790 வரை வரி வசூல்க் காலம் எனவும் ,அதன் பின் 1790 முதல் 1792 வரை ஆக்கிரமிக்கப்பட்ட வரி வசூல் காலம் என அழைக்கப்பட்ட காலத்தில் தான்,1790 ல் பாஞ்சாலம் குறிச்சிக்கு கட்டப்பொம்மு நாயக்கர் பாளையக்காரனாக வந்தது தொடக்கம், கட்டப்பொம்முவின் வெள்ளையனுடனான விரோத செயல்கள் ஆரம்பமானது.

கட்டப்பொம்மு என்பது அவன் குடும்ப பட்டப்பெயராகும்.1755 ல் முதல் கட்டப்பொம்மு நாயக்கனும் ,1760 ல் இரண்டாவது நாயக்கனும்,1790 ல் மூன்றாவதும்,1799 ல் நான்காமவனும் இருந்தனர்.கடைசி இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.கட்டப்பொம்மனுக்கு ஒரு தம்பி ஊமையன் குமாரசாமி நாயக்கனும்,இன்னொரு தம்பி சிவத்தையா என்ற சுப்பனாயக்கனும் ஆவர்.பாஞ்சாலம்குறிச்சி பாளையக்காரனுக்கு தொடக்க முதல் விரோதியாக இருந்தவன் எட்டையபுரத்து எட்டப்ப நாயக்கன் என்ற இன்னொரு பாளையக்காரன் ..

இப்போ நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது............வரலாற்றை எழுதிய கால்டுவெல்லின் அடுத்த கருத்துக்கள்.இதை ஏன் எழுதினார் என்பது தெரியவில்லை.ஆங்கிலேயர் என்பதால் எழுதினாரா, இல்லை உண்மையை எழுதினாரா என்பது இன்றும் சர்ச்சையாகவே உள்ளது.

கட்டப்பொம்மு நாயக்கன், அரசுக்கு சொந்தமான இடங்களில் கொள்ளையடித்தான்,என்றும் பல கிராமவாசிகளை கொண்டு சென்றான் என்றும் எழுதுகிறார். இதை வைத்து தான் தமிழ்வாணன் கட்டப்பொம்முவை கொள்ளைக்காரன் என்றாரா?.1797 ல் இராமனாதபுரத்தில் ஏற்பட்ட கலவரத்தில் திருநெல்வேலி பாளையக்காரர்கள் எல்லோரும் கட்டப்பொம்மு தலைமையில் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர்.அரசுக்கு சேர வேண்டிய கிஸ்தி தொகையை கொடுக்க மறுத்தனர்.இதனால் சென்னையில் இருந்து அரசு கலெக்டருக்கு, அவர்களுடன் பேச்சு நடத்தும்படி உத்தரவு அனுப்பியது.

அப்போது வரி வசூலிப்புக்கு பொறுப்பான கலெக்டர் ஜாக்சன்,கட்டப்பொம்முவை தனியாக வந்து சந்திக்கும்படி செய்தி அனுப்புகிறான்.பல முறை தட்டிக் கழித்த கட்டப்பொம்மு, 1798 செப்டெம்பர் 9 ல் அங்கே செல்கிறான்.அங்கே கலெக்டரால் அனுப்பபட்ட செய்திக் கடிதங்களை ஜாக்சன் எடுத்துக் கூறிக் கொண்டிருந்த போது,திடீரென கட்டப்பொம்மு காவலர்களை தாக்கி விட்டு ஓடி விடுகிறான்.போகும் போது வெளியே நின்ற கிளார்க் என்பனை கத்தியால் குத்தி விட்டு, வழியில் உள்ள அரச கிராமங்களையும் சூறையாடி சென்றிருந்தான். பாஞ்சாலம் குறிச்சிக்கு சென்று விட்ட கட்டப்பொம்முவை,கலெக்டரிடம் அல்லது மேயர் புளொயிட்டிடம்(Floyd) சரனடையும்படி அரசு அறிவித்தது

இதே நேரத்தில் அரசு ஜாக்சனைக் கண்டித்து,பாளையக்காரன் கடிதங்களைப் புரிந்து கொண்டானா,என்ன நடவடிக்க எடுத்தீர் என்றெல்லாம் பல கண்டனங்களை வைத்தது.பேச்சுக்கு வந்த கட்டப்பொம்முவிடம் மரியாதையற்ற வார்த்தைகளைப் பேசியது,மற்றைய பளையக்காரர்கள் முன் அவமானப்படுத்தியது போன்ற குற்றங்களை அரசு ஜாக்சனிடம் வைத்தது.இதனால் தான் அவமானம் அடைந்த அவன் தன்னை காப்பாற்ற தப்பித்ததும்,கிளார்க்கை குத்திக் கொலை செய்ததும் என்றும் அரசு கூறியது.

ஆனால் வரிமானத்துறையினரோ, கிளார்க் கட்டப்பொம்முவினால் கொலை செய்யப்படவில்லை என்றும், வேறொரு வேலினால் எறிந்தே கொல்லப்பட்டான் என்று கூறி கட்டப்பொம்முவை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பியது.கடமையில் இருந்த போது கொல்லப்பட்ட கிளார்க்கின் குடும்பத்திற்கு பாளையக்காரனே இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பாயீற்று.அதே சமயம் கட்டப்பொம்மு கொலைக் குற்றத்தில் இருந்தும் விடுவிக்கப் பட்டான்.

அதற்குப் பின் வந்த அதிகாரியிடம், எட்டயபுரத்தார்,கட்டப்பொம்மு எமாற்றுகிறான் என்றும்,அவன் தான் கிளார்க்கின் கொலைக்கு காரணம் என்று குற்றம் சுமத்தினர்.ஆரம்ப காலத்தில் இருந்தே எட்டயபுரத்திற்கும், பாஞ்சாலங் குறிச்சிக்கும் பகை இருந்ததை கவனத்தில் கொள்ளலாம்.ஜாக்சனுக்குப் பின் லூசிங்க்டன் என்பவன் பதவிக்கு 1799 ஜனவரி 12 ல் வந்தான்.லூசிங்க்டன் எல்லா குற்றங்களில் இருந்தும் கட்டப்பொம்மு விலக்கப்பட்டதாகவும்,கிஸ்தி தொகையுடன் தன்னை தனியாக வந்து சந்திக்கும்படியும் கடிதம் அனுப்புகிறான். அதற்கு தற்போது வசதி இல்லை என்றும், பாதுகாப்ப்பாக ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் தான் வர முடியும் என இழுத்தடிக்கிறான் கட்டப்பொம்மு.இது அரசுக்கு அறிவிக்கப்பட்ட அதே நேரம், பாளையக்காரர்கள் போர் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பிப்பதாக சந்தேகித்த அரசு, லூசிங்க்டனுக்கு கடிதங்களை அனுப்புகிறது. எட்டையபுரத்தானுடைய உதவியும்,மேலும் 5 பளையக்காரர்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பூலித்தேவன், மருது மற்றும் சில பாளையக்காரர்களும் கட்டப்பொம்முவிற்கு துணை போயினர்.

லூசிங்க்டன் கலெக்டர் இல் இருந்து கவர்னராக பதவி உயர்ந்ததை தொடர்ந்து, மேயர் பானர்மன் தலைமையில் படை அனுப்ப கவர்னர் ஜெனரல் தயாரானார்.அத்துடன் பானர்மன்னிற்கு சகல அதிகாரங்கள் கொடுக்கப்படுள்ளதாகவும் பணிய மறுப்பவர்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் கொடுத்து, கடிதம் அனுப்பினார்.
செப் 5 ல் பானர்மன் படையுடன் பாஞ்சாலங் குறிச்சிக்கு சென்றான்.கோட்டை முற்றுகையிடப்பட்டது.ஐரோப்பிய படையணியும் வந்து சேரவே பலத்த தாக்குதல் நடத்த பானர்மன் திட்டமிட்டிருந்த நிலையில் பாளையக்காரன், வேறு ஆறு பேருடன் தப்பி விட்டான்.எட்டயபுரத்தார் தொடர்ந்து சென்று போரிட்டதில் பலத்த இழப்பின் மத்தியில் கட்டப்பொம்மு தப்பித்து தொண்டமானிடம் அடைக்கலம் பூண்டான்.

பிடிபட்ட சுப்பிரமணியபிள்ளை,சௌந்தரபாண்டியனும் தூக்கிலடப்பட்டனர்.அவர்கள் தலையை வேலில் குத்தி பாஞ்சாலம் குறிச்சியில் நிறுத்தி, அனைவரும் பார்க்க வைத்தனர்.ஆனால் கட்டப்பொம்முவை தம்மிடம் ஒப்படைக்கும்படி பானர்மன் கடிதம் அனுப்பவே மிரண்ட போன தொண்டைமானோ, கட்டப்பொம்முவை கைது செய்து அவனுடைய உறவினர் சிலருடன் பானர்மன்னிடம் அனுப்பி வைக்கிறான்.பானர்மன் அவனை விசாரணைக்குப் பின் அக்டோபர் 16 ல் கயத்தாற்றில் உள்ள பழைய கோட்டைக்கு அருகில் உள்ள திடலில் மற்றைய பாளையக்காரர்கள் முன் நிலையில் தூக்கிலிட உத்தரவிட்டான்.

பானர்மன் அரசுக்கு எழுதிய கடிதத்தில்,உள்ளூர் படைகள் கட்டப்பொம்முவுடனான போரில் அதிக அக்கறை காட்டாததால் தான் அதிக நாட்கள் எடுத்தது என்று குறிப்பிடுகிறான்.அத்துடன் தூக்கிலப்பட்ட சுப்பிரமணியபிள்ளை அதிக சொத்துக்களை உடையவன் என்றும், கட்டப்பொம்மு முதலே கைது செய்யப்பட்டாலும் கூட, பணத்தை வைத்து சுப்பிரமணிய பிள்ளை மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டு கட்டப்பொம்முவிற்கு துணை போயிருப்பான் என்றும், அதனால் தான் சுப்பிரமணிய பிள்ளையை தூக்கிலிட்டதாகவும் தெரிவிக்கிறான்.மறு நாள் 17 ம் திகதி,
பானர்மன்னின் உத்தரவின்படி பாளையக்காரர்கள் அனைவரினதும் உரிமை பறிமுதல் செய்யப்பட்டதுடன், கோட்டைகளை இடிக்கும்படியும் பானர்மன் உத்தரவிடுகிறான்.சில பாளையக்காரர்கள் சிறையிலும்,வேறு சிலர் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பலர் போகும் வழியில் இறந்தும் விடுகிறார்கள்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது.......ஈழத் தமிழர் படுகொலைகளில் தமிழக காங்கிரசை விட, திமுக மீது தான் நமக்கு வெறுப்பு அதிகம்.துரோகம் இழைத்தது கருணாநிதி தான் என்கிறோம்.தமிழக காங்கிரஸ் மீது அதிக வெறுப்பு கிடையாது.காரணம் அவர்கள் தமிழர்களாயிருந்தும், மனிதர்களாக கூட இருக்கவில்லையே என்ற வருத்தம் தான் அதிகம் இருந்தது.ஏனெனில் அவர்கள் சோனியா அம்மையாருடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருபவர்கள் என்பதால், அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று நமக்கு முன்னரே தெரிந்ததுதான். ஆனால் திமுக அப்படியல்ல.போராட்ட அறிவிப்புக்களை அறிவித்துக் கொண்டே இனப்படுகொலைக்கு துணை போனார்கள்.
அது போலவே எட்டாப்ப நாயக்கர், முதலாம் கட்டப்பொம்மு நாயக்கர் தொடக்கம் விரோதிகளாகவும்,தொடர்ந்தும் ஆங்கிலேயர்களுடன் உறவாடி வந்தவர்கள் தான். ஆனால் தொண்டைமான் நண்பனாக இருந்து, தன் படையையே அனுப்பி கைது செய்து,வெள்ளையர்களிடம் ஒப்படைத்தவர். இப்போது யார் காட்டிக் கொடுத்தவராகிறார்? எட்டப்பன் பற்றி கட்டப்பொம்முவிற்கு முன்னரே தெரிந்திருந்தது.ஆனால் தொண்டமான் பற்றி தெரியாதிருந்தது.நம்பி அவன் நாட்டுக்குள் அடைக்கலமாயிருந்தான்.கூட இருந்து குழி பறிப்பவன் தான் முதல் துரோகி. எட்டப்பன் அன்னிய அடிமை என்று சொல்லலாமே தவிர,காட்டிக் கொடுத்தான் என்று சொல்ல முடியாது.வேண்டுமானால் தமிழ்த் துரோகியாக சொல்ல முடியும். இனி உங்கள் சிந்தனைக்காக விட்டு விடுகிறேன்.

ஆதாரம்......History of Tinnevelly by Rev R Caldwell, கட்டப்பொம்மன் பற்றி தமிழ்வாணன், மபொசி நூல்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பனா?...............உண்மை என்ன? Empty Re: கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பனா?...............உண்மை என்ன?

Post by மாலதி Wed Oct 03, 2012 7:14 pm

இது வரை அறியாத தகவல் கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பனா?...............உண்மை என்ன? 28284


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum