TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இது உண்மை, அது உண்மையல்ல.

3 posters

Go down

இது உண்மை, அது உண்மையல்ல. Empty இது உண்மை, அது உண்மையல்ல.

Post by sakthy Sat Nov 05, 2011 1:21 pm

இது உண்மை, அது உண்மையல்ல.

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

What is true for one person is probably not true for another person.

நாம் பலவற்றை படிப்போம்,பார்ப்போம்,கேட்போம். அவற்றில் பல உண்மை போல் தெரியும், ஆனால் உண்மையாக இருப்பதில்லை.ஒரு சாமியார் கோயில்களில் செய்யும் பல, உண்மை போல் தெரியும்,ஆனால் அவை உண்மையல்ல, ஏமாற்றுக்கள்.ஒரு மாஜிக் நிபுணர் வித்தை காட்டுவார்,உண்மை போல் தெரியும் ஆனால் உண்மையல்ல தந்திரம். ஏமாறுவோம்.ஜோதிடர் வாய்ஜாலம் செய்து நம்மை நம்ப வைப்பார்,ஆனால் அத்தனையும் உண்மையல்ல .
கங்க்ராசுலேஷன்ஸ்! 999,999 வது நபர் நீங்கள் என இணயத்தில் வரும்; அமெரிக்கன் க்ரீன் காட் உங்களுக்குத் தான் என்று சொல்லி அடுத்த பக்கத்துக்கு கூட்டி செல்வார்கள்,முகவரி தொலைபேசி இலக்கம் அனைத்தும் தருவார்கள்,ஆனால் இவை அனைத்தும் உண்மை போல் தெரியும்,ஆனால் உண்மையல்ல.

கி.பி.208 ல் இருந்து ஒக்டோபர் 2011 வரை, சிசிலி நாட்டில் ஒரு பெண் ஒரே இடத்தில் சட்டவிரோதமாக தன் வாகனத்தை நிறுத்தி வருகிறார், என்று அந்த நாட்டு போலீஸ்காரர் ஒருவர் வழக்கு பதிவு செய்தார்.அவருக்கு 32,000 யூரோ (44,500 டாலர்) தண்டப்பணமாக,(2000 ஆண்டுகளுக்கான) செலுத்த உத்தரவிடப்பட்டது.அது உண்மை,ஆனால் 208 ல் கார் வந்துவிட்டதா? 2008 என்பதை தவறுதலாக 208 என்று எழுதி விட்டார்.பின்னர் போலீஸ்காரர் தவறுக்காக மன்னிப்புக் கோரி 102 யூரோ மட்டுமே கட்ட உத்தரவிடப்பட்டது.2008 என்பது உண்மை,208 உண்மையல்ல.

இணையத்தளம் மூலம் நடந்து வரும் திருமணங்கள் பற்றி எத்தனை எடுத்து சொன்னாலும் எவரும் கண்டு கொள்வதில்லை இது உண்மை. இணையத்தள திருமண மோசடியில் ஈடுபட்ட ஒரு தம்பதியினர் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இதுவும் உண்மை தான்.
இணையத்தள ஏமாற்று பற்றிய எனது கட்டுரையில் வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் ,ஏழை நாடுகளில் தங்கள் தயாரிப்புக்களை பரீட்சிக்கிறார்கள் என எழுதி இருந்தேன்.சில தினங்களுக்கு முன் இந்தியாவில் பரீட்சிக்கப்பட்டு பரிதாபமான முறையில் இறப்புக்கும்,பாதிப்பிற்கும் உள்ளானவர்கள் பற்றி செய்திகள்,பட்டியலிட்டு வந்துள்ளன. இந்த மருந்துக்கள் எல்லாம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையத்தின் அனுமதி பெற்றதாக கூறப்படுவது உண்மையா அல்லது லஞ்சமா?அப்பாவி ஏழைகளின் வாழ்வில் விளையாடும் இவர்களுக்கு, பண ஆசை பிடித்த மருத்துவர்களும் மருத்துவ நிலையங்களும் உடந்தையா? பணத்தை காட்டி ஏழைகளை வைத்து பரிசோதிக்கிறார்களே.இந்தியா,மலேசியா,ஆபிரிக்க நாடுகள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இந்த மருந்துக் கம்பனிகள் பரீட்சை மருந்துக்களை, probe, பாவனைக்கு விட்டுள்ளனர்.AMA,WHO இந்தியாவிலும்,வேறு சில நாடுகளிலும் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளதையும் பாதிக்கப்பட்டதையும் வெளியிட்டுள்ளது.அமெரிக்கா போன்ற மற்றைய நாடுகளில் பரீட்சித்தோம் என்பது உண்மையல்ல,ஏழை நாடுகளில் மட்டுமே பரீட்சிக்கிறார்கள் என்பதே உண்மை. அரசு தடுக்கவோ அல்லது தடை செய்யவோ முன் வராதது ஏன்?ஏழைகளின் உயிர் எலியை விட மலிவானதா?

ஜப்பான் ,இத்தாலி,ஜேர்மனி போன்ற நாடுகள் அணு உலைகளை மூட ஆரம்பித்து விட்டன. ஆனால் ,உலகம் முழுவதாலும்,ரஷ்ய உலைகளே பாதுகாப்பற்றவை என ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும்,திருநெல்வேலிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும், ஈழத்தின் வட பகுதிக்கும் பாதிப்பை தரக்கூடிய, கூடங்குளம் உலை பாதுகாப்பானது என அச்சம் களைவதற்கு,பணம் கொடுக்கப்பட்ட வல்லுனர்கள் மத்திய அரசால் அனுப்பப் பட்டுள்ளனர்.பாதுகாப்பற்றவை என்பது உண்மை,மத்திய அரச வல்லுனர்கள் சொல்வது உண்மையல்ல.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் முடிந்ததும் பலவற்றை சொன்னார்.அனைத்தும் உண்மை போல் தெரிந்தது.நம்பினோம்,சீமான் போன்றவர்கள் அவரின் குணம் தெரியாது பாராட்டுக் கூட்டங்கள் கூட நடத்தினார்கள்..ஆனால் அவை அனைத்தும் உண்மையல்ல. மிகக் குறுகிய காலத்தில் அவர் பெற்றுக் கொண்ட கரும்புள்ளிகள், சட்டசபை கட்டிட மாற்றம்,சமசீர்க்கல்வியில் தலையீடு, ராஜீவ் குற்றவாளிகள் விஷயத்தில் தமிழர்களை ஏமாற்றியது,அண்ணா நூலகத்தை மாற்ற முடிவு செய்தது,அரசியல் பழிவாங்கல், சொத்துசேர்ப்பு வழக்கில் வடிவேல் சொல்வது போல் சிறுபிள்ளைத்தனம்,இன்னும் எத்தனை வரப் போகிறதோ...?அவர் மாறவே இல்லை.மாறவும் மாட்டார்.அவரின் செயல்கள் உண்மை,சொன்னது சொல்வது உண்மையல்ல.
சீமானை அமெரிக்காவிற்குள் நுழைய விடாது தடுத்தது உண்மை,அமெரிக்காவின் போலித்தனம் உண்மை,தமிழர்கள் மீது அமெரிக்க காட்டும் கரிசனை உண்மையல்ல.

சிங்களம் எல்லாப் படுகொலைகளையும் செய்து விட்டு,விடுதலைப் புலிகள் மீது சுமத்தி பயங்கரவாதிகள் என்று உலகுக்கு காட்டியது.உலகம் நம்பி ஏமாந்தது.இரண்டு இலட்சம் மக்கள் படுகொலையில் முடிந்தது.ராஜபக்சே உருக்கமாக,தமிழ்மக்களின் நண்பராக தன்னைக் காட்டுகிறார்.அவர் நடிப்பை உலகமே ஏன் சில தமிழர்கள் கூட நம்புகிறார்கள். அவை உண்மையல்ல.பச்சையாக தெரியும் அக்கரை,ஏமாற்றும் கானல் நீர்.
ஏமாறுவது தமிழனின் எழுதப்பட்ட விதியா இல்லை எழுதப்படாத சதியா?

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும் எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்........................பாரதியார்.

சரித்திரத்தில் நாம் கண்ட சில உண்மைகள்,ஆனால் அவை உண்மையல்ல.

இராமாயணம் மகாபாரதம் பற்றி சரித்திர ஆய்வாளர்கள் சொல்வது உண்மை.அந்த இதிகாசங்களில் இருப்பவை உண்மையல்ல.

மின்விளக்கை முதலில் கண்டு பிடித்தது யார் என்றால் உடனே தோமஸ் அல்வா எடிசன் என்று பதில் வரும்.ஆனால் முதலில் யார் கண்டு பிடித்தார்? 1880 ளில் எடிசன் கண்டு பிடிப்பதற்கு முன் பிரித்தானிய இராசயணவியலாளர் வாரேன் (Warren de la Rue ) 1840 ல் மின்விளக்கை கண்டு பிடித்து விட்டார்.பிளாட்டினம் கம்பி சுருளை காற்றில்லாத குழாயில் செலுத்தி பல்பை எரிய வைத்தார்.ஆனாலும் முதலில் கண்டு பிடிக்கப்பட்டவை அவ்வளவாக செயல்படவில்லை என்று கருதப்படுகிறது.இதைவிட லண்டனை சேர்ந்த ஹம்ரி டேவி (Sir Hamphry Davy)கார்பன் சுருள்களில் இருந்து தயாரித்தார்.இவையெல்லாம் பின்னர் மெருகேற்றப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

பிரான்ஸ் இராணி மேரி அந்தோனேட்டே (Marie Antoinette) மக்களுக்கு உணவில்லா(bread) விட்டால் கேக் சாப்பிடட்டும்(let them eat cake) என்று சொன்னதாக கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் Confessions ல் Jean Jacques Rouseau,1766 ல் எழுதிய சிலவற்றை தங்களுக்கு ஏற்ப மாற்றி,அவர் எழுதிய போது மேரி யின் வயது 11 ஆகும், அரசியல் எதிரிகள் மக்களிடம் தவறாக பரப்பியதன் விளைவு, பின் அவரும் அவர் கணவனும் கொலை செய்யப்பட்டார்கள்.உண்மையில் அந்த இராணி, அவர் ஆட்சிக் காலத்தில் சொன்னது, தரம் குறைந்த மலிவான பிரெட்டை(bread) பேக்கரி உரிமையாளர்கள் செய்து விற்பனை செய்வதை சுட்டிக் காட்டி,தரமான உயர்த்த ரக பிரெட்டை செய்யலாம்,சாப்பிடலாம் என்பது தான்.
let them eat broiche(feiner bread)

ரோம் எரியும் போது, ஆறு நாட்களும் ஏழு இரவுகளும், நேரோ மன்னன் அதைக் கண்டு கொள்ளாது பிடில் வாசித்தான் என்று இப்போதும் பேசி வருகிறோம்.என்ன நடந்தது?இந்த பிடில் அப்போது கண்டு பிடிக்கப்படவே இல்லை. அப்போது பிரபலமாக இருந்த சரித்திர ஆசிரியர்,கொர்னேலியுஸ் தாசிருஸ் தனது குறிப்பில்,நீரோ தனது வழமையான இடத்தில்(Antium என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில்) இருந்தார் என்றும்,இயேசுவுக்கு தண்டனை வழங்கிய,பொந்தியுஸ் பிளாட்டே பற்றிய நீரோவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்தவர்களும், அரசியல் எதிரிகளும் அனைத்தையும் மறைத்து நேரோவிற்கு எதிராக மக்களை திருப்பியதன் விளைவே இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.தீ பற்றி அறிந்ததும்,நீரோ உடனே ரோமிற்கு சென்று, தன் சொந்த செலவில் தீயை அணைக்க ஏற்பாடு செய்யததும், உணவு ஏற்பாடுகள்,வீடு இழந்தவர்களை தன் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்ததும்,பின்னர் வீடுகள் தெருக்கள்,புதிய நகரையும் அமைத்து,தனக்கென புதிய மாளிகையையும்,Domus Aurea, அமைத்தான் என்பதாகும். உதவி பெற்ற மக்களும் மறந்தார்களே!

அவுஸ்திரேலியாவை கண்டு பிடித்தது கப்டன் குக் என்கிறார்கள். ஆனால் அவருக்கு முன்னரே,ஒல்லாந்தை சேர்ந்த Abel Tasman,Dirk Hartog,Wiliam Dampier அங்கு சென்று விட்டனர். குக் அவுஸ்திரேலியாவின் வேறொரு பகுதிக்கு சென்றிருந்தார் என்பதே உண்மை.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது எப்போது,யார் முதல் ஜனாதிபதி?

உடனே வருவது 4 ஜூலை 1776 ஜார்ஜ் வாஷிங்டன் என்பது பதிலாக வரும். உண்மை என்ன?
அமெரிக்காவில், 04.07.1776 ல், 13 பிரிட்டிஷ் காலணிகள் ஒன்று சேர்ந்து, தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.அந்த காலத்தை,1775 – 1783,American Revolutionary war என்று சொல்லப்பட்டது. ஆங்காங்கே நடைபெற்ற போர்,பிரிட்டனின் தடைகள் காரணமாக அந்த சுதந்திர பிரகடனம்,பிரிட்டனால் பின் தள்ளப்பட்டு , 1983 செப்டெம்பர் மாதம் 3 ல் பிரிட்டனின் மூன்றாவது ஜார்ஜ் ற்கும் அமெரிக்க தலைவர்களுக்கும் இடையில் சுதந்திரப் பிரகடனம் கைச்சாத்தானது. வாஷிங்டன் 30.04.1789 ல் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அப்படியானால் 1776 முதல் 1789 வரை ஜனாதிபதியாக யார் இருந்தார்கள்?
அமெரிக்க continental congress ஆல், முதல் ஜனாதிபதியாக பைடோன் ரண்டோல்ப்,Peyton Randolph,தெரிவு செய்யப்பட்டார்.அதன் பின் 14 தலைவர்கள் மாறி ஜார்ஜ் வாஷிங்டன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று அமெரிக்காவின் 15 வது ஜனாதிபதியாக 1789 ல் தெரிவு செய்யப்பட்டார்.
இவை போல் பல நிகழ்சிகள்,சம்பவங்கள்,சரித்திரங்கள்........................
உண்மை போல் இருக்கும் உண்மைகளை(பொய்களை)பிரித்தறியா விட்டால்,அதற்குள் நாமும் ஒரு நாள் மூழ்கி விடுவோம். அதனால் தான் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்றார்களா?தொடர்ந்து சொல்லும் பொய்கள் ஒரு நாள் உண்மையாகி விடும்.

மீண்டும் அடுத்த வாரம்.................................சக்தி
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இது உண்மை, அது உண்மையல்ல. Empty Re: இது உண்மை, அது உண்மையல்ல.

Post by mmani Sat Nov 05, 2011 1:31 pm

நன்றிகள்
இது உண்மை, அது உண்மையல்ல. 28284 இது உண்மை, அது உண்மையல்ல. 28284
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இது உண்மை, அது உண்மையல்ல. Empty Re: இது உண்மை, அது உண்மையல்ல.

Post by navas Sat Nov 05, 2011 4:50 pm

நல்ல இருக்கு
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

இது உண்மை, அது உண்மையல்ல. Empty Re: இது உண்மை, அது உண்மையல்ல.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum