TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஸ்பெக்ட்ரம் இழப்பின் மதிப்பிற்கு மூன்று ஆதாரங்கள்: ஜெ., பட்டியல்

Go down

ஸ்பெக்ட்ரம் இழப்பின் மதிப்பிற்கு மூன்று ஆதாரங்கள்: ஜெ., பட்டியல் Empty ஸ்பெக்ட்ரம் இழப்பின் மதிப்பிற்கு மூன்று ஆதாரங்கள்: ஜெ., பட்டியல்

Post by ஜனனி Mon Dec 27, 2010 7:50 am

சென்னை : "2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கை அதிகாரியின்
ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்பின் மதிப்பு அனுமானம் அல்ல. அது
யூகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டதல்ல என்பதற்கு மூன்று ஆதாரங்கள்
உள்ளன' என்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத
அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்
ஊழல் நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நான் பூதாகரமாக ஆக்குவதாக
கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த ஊழலே பூதாகரமான ஊழல் தான்; இதை யாரும்
பூதாகரமாக்கத் தேவையில்லை. கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை
அமைக்கப்பட்டபோது, ஏற்கனவே ராஜா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக
இருந்ததால், அவருக்கு தொடர்ந்து அந்த துறை ஒதுக்கப்பட்டதே தவிர, அதில்
தி.மு.க., பிடிவாதமாக இல்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் இந்த கூற்று, "முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்'
அமைந்துள்ளது.அந்த காலகட்டத்தில், டில்லியில் இருந்து சென்னை வந்து,
"வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம்' என்ற முடிவை தி.மு.க., எடுத்ததற்கான
காரணம் என்ன? இதற்குக் காரணம் வளம் கொழிக்கும் இலாகாக்கள் கிடைக்காதது
தான் என்பதும், தி.மு.க., கேட்ட வளம் கொழிக்கும் இலாகாக்களை தருகிறேன்
என்று பிரதமர் சொன்ன பிறகு தான் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் மத்திய
அமைச்சராக பொறுப்பேற்றனர் என்பதும் ஊரறிந்த விஷயம்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில், "முதலில் வருபவருக்கு முதலில்
தருவது' என்ற முந்தைய கோட்பாட்டைக் கூட ராஜா பின்பற்றவில்லை. "தனக்கு
வேண்டியவர்களுக்கு மட்டும் தருவது' என்ற கோட்பாட்டைத் தான்
கடைபிடித்துள்ளார்.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, ஆயிரக்கணக்கான ஏழைகளின்
விவசாய நிலங்கள் அமைச்சர்களாலும், தி.மு.க.,வினராலும்
அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த நில அபகரிப்புகளை கருணாநிதி வேடிக்கை
பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்."2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு அனுமானத்தின்
அடிப்படையில் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது' என்று, கருணாநிதி
கூறியுள்ளார். ஆனால், தணிக்கை அதிகாரியின் ஆண்டறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ள இழப்பின் மதிப்பு அனுமானம் அல்ல; அது யூகத்தின்
அடிப்படையில் கணிக்கப்பட்டதல்ல என்பதற்கு மூன்று ஆதாரங்கள்
உள்ளன."எஸ்-டெல்' என்ற நிறுவனம் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விலை
கொடுத்து அலைக்கற்றை உரிமத்தை வாங்க முன்வந்தது. ஆனால், 2001ல்
நிர்ணயிக்கப்பட்ட 1,650 கோடி ரூபாய்க்கு உரிமங்களை ராஜா விற்றார். அதன்
அடிப்படையில் இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது."ஸ்வான்' என்ற,
"லெட்டர்பேடு' நிறுவனம் 1,650 கோடி ரூபாய்க்கு உரிமங்களை வாங்கியது.
அந்நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை, "இடிசலட்' (ETISALAT) என்ற
நிறுவனத்திற்கு, சில நாட்களுக்கு பின் 9,000 கோடி ரூபாய்க்கு
விற்றிருக்கிறது.
இதே போன்று, "யுனிடெக்' என்ற, "லெட்டர்பேடு' நிறுவனம் தனது 60 சதவீத
பங்குகளை, "டெலிநார்' (TELENOR) என்ற நிறுவனத்திற்கு 6,120 கோடி
ரூபாய்க்கு விற்றிருக்கிறது. அந்த விலைக்கு அரசே கொடுத்திருந்தால், அந்த
லாபம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும். அதன் அடிப்படையில் இழப்பின்
மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது.அண்மையில் "3ஜி' ஸ்பெக்ட்ரம்
விற்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி
ரூபாய் கிடைத்துள்ளது. "2 ஜி' ஸ்பெக்ட்ரம் இதை விட அதிக மக்களால்
பயன்படுத்தப்படுகிறது. இதே விலைக்கு "2 ஜி' ஸ்பெக்ட்ரம்
விற்கப்பட்டிருந்தால், மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்திருக்கும்
என்ற அனுமானத்தின் அடிப்படையிலுமே இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் பயன்பாடு இன்னும் அதிகம் என்பதால், தணிக்கை அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளதை விட இழப்பின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்க
வாய்ப்புள்ளது.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டிபாசிட் இழப்பின் பின்னணியில் சதி : ஜெ., குற்றச்சாட்டு
» ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இந்த வகையான தீவனதில் எதாவது மூன்று கண்டிப்பாக தயார் செய்வது கட்டாயம்
» சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !
» தமிழீழத்தில் இன அழிப்பு நடைப்பெற்றதற்கான ஆதாரங்கள்
» "இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்கள் தம்மிடமிருப்பதாக ஐ.நா அறிவிப்பு"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum