TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்

2 posters

Go down

 பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் Empty பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்

Post by sarabu12 Fri Nov 26, 2010 2:42 am

இந்தியாவில் அனைத்து தரப்பு பொது மக்களுக்கான முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது வெகுஐன சினிமா. அத்தகைய பெருமை வாய்ந்த சினிமா மக்கள் மீதும், மக்களின் கலாச்சார கருத்தாக்கத்தின் மீதும் செலுத்தும் ஆதிக்கம் நாம் அனைவரும் நன்கறிந்ததே. இன்று பெருமாண்மை வெகுஐன மக்களுக்கு அவர்களது வாழ்க்கையில் நேரடி அனுபவமற்ற அனைத்தும் வெள்ளித்திரையின் மூலமாகவே அதிகளவில் சென்றடைகிறது. உதாரணமாக தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் நீதிமன்றத்தின் படி கூட ஏறியிறாதவர்க்கு அந்நீதி மன்றம் குறித்த பிம்பத்தை தருவது சினிமாவாகவே உள்ளது. இவ்வாறாகவே அரசியல் துறை, காவல் துறை, மருத்துவ துறை சார்ந்த பலவற்றையும் நாம் சொல்ல முடியும். அதுபோலவே, பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் குறித்த அறிமுகமும், அறிவும் சினிமா மூலமாகவே தவறான கண்ணோட்டத்தில் சென்றடைகிறது.

ஒட்டுமொத்த தமிழ்சினிமா வரலாற்றில் மிக அரிதாகவே திருநங்கைகள் திரைப்படங்களில் கண்ணியமான முறையில் காண்பிக்கப்படுகிறார்கள். அந்த விதத்தில் பம்பாய் இயக்குநர் மணிரத்னம் பாராட்டப்பட வேண்டியவராகிறார். கதைப்படி,கலவரச் சூழலில் பிரிந்துவிடும் இரட்டைச் சகோதரர்களில் ஒருவன் நிர்கததியாக திகைத்து நிற்கும வேளையில் எதிர் பாராத திருப்பமாக வந்து அச்சிறுவனை பாதுகாப்பது தெருவோரத்தில் வசிக்கும் ஒரு திருநங்கையாவார். தொடர்ந்து வரும் காட்சியிலும் உயிரின் மதிப்பு குறித்து கலவரக்காரர்களிடம் வீராவேசத்துடன் ஒரு வசனம் பேசி முடிப்பார்.

நிச்சயமாக மனித உயிரின் மதிப்பு குறித்தும், அதனால் ஏற்படும் உறவுகளின் இழப்பு குறித்தும் திருநங்கையொருவர் விளக்குவது மற்ற யாரையும் விட பொருத்தமாகவே இருக்கும். தனக்குள்ள பாலின அடையாள சிக்கல் ஒன்றின் காரணமாக மட்டுமே குடும்பம் உள்ளிட்ட எல்லா தளங்களிலும் விளக்கப்பட்டவர்க்குதான் உயிர், உறவின் மதிப்பும் வலியும் தெரியும். அதனை தக்க இடத்தில் பயன்படுத்திய பம்பாய் படம் போல் வேறு படம் கூட தமிழ் சினிமாவில் வந்திருக்கவில்லை.

சமீபத்தில் வந்த “சித்திரம் பேசுதடி”யில் ஒரு சிறு காட்சியில் நற்குணமுள்ள திருநங்கையாக ஒருவர் காட்டப்பட்டிருந்தார். அதே படத்திலும் பிரபலமான “வாழமீனுக்கும், விளங்கு மீனுக்கும்” பாடலில் ஆபாசமில்லாத வகையில் திருநங்கைகள் காட்டப்பட்டிருந்தனர். கதாநாயகனைத் தேடி நாயகி வருகிறாள். அங்கே அயர்ன் பண்ணுபவனிடம் சிறிய சண்டையிட்டபடி நிற்கும் திருநங்கையிடம் கதாநயாகன் எந்த வழியாக சென்றான் என்று கேட்கிறாள். கதைப்படி நாயகன் சென்ற இடம் ஒரு விபச்சார விடுதி என்பதாலும், அங்கே ஒரு குடும்பப் பெண் செல்வது சரியாகாது என்பதாலும் தனக்கு தெரியாதென்று கூறிவிடுகிறாள். இதுபோக, மருத்துவத்துறையின் நடக்கும் திரைமறைவு பொருளாதார-அரசியலை முதன்முறையாக பேசிய “ஈ” இயக்குநர் கூட பாடலில் ஓரமாக ஆடிவிட்டு போகும்படி காட்டியுள்ளார். அறுவெறுப்பாக காட்டிடவில்லை என்றாலும். அவரால் முடிந்தது அவ்வளவு தான்.

சமீபத்தில் அமீரின் இயக்கத்தில் வந்து சிறந்த எதார்த்த சினிமாவாக புகழ்பெற்று வரும் பருத்தி வீரன் திரைப்படத்தில் வரும் ஆரம்ப மற்றும் இறுதி பாடல் காட்சிகளில் திருநங்கைகள் நிதர்சனம் என்ற பெயரில் குத்தாட்ட வேடதாரிகளாக பயன்படுத்தப்பட்டுளனர். அதில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல் ஒன்றில் காட்டப்பட்டிற்கும் ஆறு திருநங்கைகளில் இரண்டு பேர் மட்டும் உண்மையான திருநங்கைகள் மீதமுள்ள நான்கு பேரும் அலிகளாக வேடமேற்றிருக்கும் மீசை மளித்த ஆண்களே. அசத்தலான கிராமிய பாடலான இதில் அவ்வேடதாரிகள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வசனங்களும் குத்தாட்டமும் திருநங்கைகளின் மீதான தமிழ் சினிமாவின் பழைமையான மதிப்பீட்டினையே இப்படத்திலும் பதிவு செய்கிறது. படத்தில் இரண்டு காட்சிகளில் வரும் பாலியில் தொழிலாளி முதல் திருநங்கைகள் வரை விளிம்புகள் மீதான இவர்களின் எதார்த்தம் என்பது ஆதிக்கத்தின் பார்வையிலான கேளிக்கை சார்ந்த எதார்த்தமாக மட்டுமே இருக்கிறது. அதன் நவீன பதிப்பே பருத்தி வீரன்.

மற்றபடி, இன்று தமிழ்சினிமாவை ஆளும் அனைத்து பெரிய ஹீரோக்களும், தாங்களோ தங்கள் படத்தல் வரும் காட்சியிலோ திருநங்கைகளை கேவலப்படுத்தியே வருகின்றனர். அமராவதி, போக்கிரி, சிவகாசி, கட்டபொம்மன், துள்ளாத மனமும் துள்ளும், திருடா திருடி, பருத்தி வீரன், கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே, வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல், வரலாறு, ஈரமான ரோஐhவே, ….. இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத, நினைவில் வராத படங்கள் கணக்கில்லாமல் உள்ளன.

பொதுவாக, தமிழ் சினிமாவில் சித்திரிக்கப்படும் திருநங்கைகள் ஒன்றாகவோ, நான்கைந்து கூட்டமாகவோ அடர்த்தியான மேக்கப்பில் டோப்பா மாட்டிக் கொண்டு, கதையின் நாயகன் ஃ நகைச்சுவை நடிகரை பாலுறவுக்கு விழையும் தோரணையில் அழைப்பர். பெரும்பாலும் பாடல்காட்சிகளின் மத்தியிலேயே அதிகம் பயன்படுத்தப்படுவர். பொழுது போக்கு சாதனமாகிய படத்தின் முக்கிய பொழுது போக்கான பகுதியான பாடல்களில் இவ்வாறு காட்டப்படுவது திருநங்கைகளும் பொழுது போக்கு உடைமையாக பாவிக்கப்படுகின்றனர்.

பத்து பத்து பத்துல நீ ஒன்ன நீக்கு…

எட்டு எட்டு எட்டுல நீ ஒன்ன கூட்டு… 9ஒன்பது என்பதை கவிநயமாக சொல்கிறார் கவிஞர்)

தலைப்புச் செய்தி வாசிப்பது கிரிஐhக்கா, கோமளம்……
…. …….. …….
…. …….. …….
ஒரேயொரு கீரவடைக்கு ஒம்பது பேர் போட்டி

அந்த ஒம்பது பேரும் அடிச்சிகிட்டதுல அவுந்து போச்சு வேட்டி…

இத்தகைய தெரு பொருக்கி பாடல்களுக்கு ஆண்களுக்கு மீசையை மளித்து அலிவேசமிட்டு அழகுபார்த்து மகிழ்கின்றனர். எதிர்பார்த்தபடியே பாடலும் ஹிட்….

இதுமட்டுமன்றி, ஒரு குடும்ப நிகழ்வாக அமையக்கூடிய பாடல்களிலும் கூட திருநங்கைகளை போகிற போக்கில் நிர்வாணப்படுத்தி மகிழ்கின்றனர் தமிழ் சினிமாவினர். இதற்கு உதாரணமாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் கும்மியடி கும்மியடி பாடலைக் கூறலாம். இதில், கும்மியடி என்ற வரி வரும் இடத்திலெல்லாம் வடிவேலு அலிகளை நினைவு கூர்ந்து கிண்டலடிக்க தக்கதாய் கையடிப்பார். திருநங்கைகள் கைதட்டுவதற்கான, காரணம் தேவை, முறை என்பதே வேறு. ஆனால், ஒரு அலியை சித்திரிப்பதற்கான எளிய வடிவமாக இந்த கையடிக்கும் பழக்கத்தை தமிழ் சினிமா கர்த்தாக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

நகைச்சுவைக்கென்ற தனி நடிகரற்ற வேட்டையாடு விளையாடு போன்ற படத்திலும் வில்லன்களான அவ்விரண்டு இளைஞர்களையும் நோக்கி கமல் கேட்டும் “நீங்க என்ன ஹோமோ செக்சுவலா?” என்று கேடபதும் ஒரு வில்லனிடம் பிடிபட்ட மற்ற வில்லனை “உன் பொண்டாட்டி இப்ப என்கிட்ட…” என்பதுமே மிகப் பெரிய நகைச்சுவை காட்சியாக காட்டப்படுகிறது.

இத்தகைய காட்சியமைப்புகள் ஹீரோக்களின் எடுபிடி பார்வையாளர்களுக்கும், மற்ற பார்வையாளர்களுக்கும் திருநங்கைகள் யாவருமே கேலிக்குறிய எளிய பிறவிகள், அவர்களை கேலி செய்வதென்பது வாழ்க்கையில் ஒரு ரசமான அனுபவம் என்ற அறிவை பதித்து விடுகிறது. இதனால், திருநங்கைகளை கேலி செய்வதோ, அவ்வாறு கேலி செய்யப்படுவதை வேடிக்கை பார்த்து களிகொள்வது தவறில்லை. அதுகுறித்து குற்றவுணர்வும் தேவையில்லை என்ற தளத்திலேயே அவர்களை கொண்டு செல்கிறது.

கட்டபொம்மன் என்ற படத்தில் கவுண்டமனி பெண்களை வேலைக்கு ஆள் எடுப்பதாக ஒரு நகைச்சுவை காட்சி வரும். இதில் வழக்கமான நகைச்சுவை போலன்றி ஒரு நுட்பமான விசயத்தையும் பதிவு செய்திருப்பார்கள். காட்சிப்படி இரண்டு திருநங்கைகள் (போல வேடமிட்ட ஆண்கள்) பணி தேர்வுக்காக காத்திருப்பார்கள். அவர்களை கண்ட கவுண்டமணி “யே. போ…. யே.. போ…..” என்று தொரத்துவார். அதற்கு அவர்கள் “ஏன் நாங்க வேலை செய்யமாட்டமா?” என்று கேட்க, பதிலாக கவுண்டமனி “ங்கூம், அப்பிடியே நீங்க வேலை செஞ்சுட்டாலும்…” (அதாவது, அலிகள் பொதுத் தளங்களில் பணி புரிவதற்கு லாயக்கற்றவர்கள்) என்று துரத்துவார். இங்கே, இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வேலைக்காக அவர் தெரிவு செய்யும் ஆட்கள் இளைய, அழகான பெண்களை மட்டுமே. வயதான பாட்டிகளையோ அழகற்றவர்களையோ அல்ல. வேலைக்கு ஆளெடெக்கும் இடத்தில், அதுவும் பாலியில் இச்சையோடு அழகிய இளம்பெண்மளை தேர்வு செய்பவன் கூட திருநங்கைகளை மட்டமான மதிப்பீட்டுடன் வெளியேற்றுவதை முரணை காண்கிறோம். எரிச்சலூட்டும் இக்காட்சி ஒரு விதத்தில் திருநங்கைகளின் வேலை வாய்ப்பு குறித்தான நிதர்சனத்தை கூறுவதாகவும் உள்ளது.

படங்களில் திருநங்கைளாக ஆண்களே வேசமிடப்படுவதற்கு சிறந்த உதாராணமாக, “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தை கூறலாம். இப்படத்தில், வையாபுரி முதலில் பெண்தன்மையுள்ள ஆணாக விஐயின் நண்பர் வட்டத்தில வலம்வருபார்;. இடையில் காணமல் போகும் அவர் பெண்ணாக (கல்யாண சுந்தரம் – கல்யாணியாக) கல்லூரி மாணவியாக வருவார். திருநங்கைகளுக்கு சட்டரீதியாக பாலின அடையாள சிக்கல் இருக்கும் இந்திய சூழலில் எளிதாக பெண்ணாக மாறிவிட்டாதகும், கல்லூரி செல்வதாகவும் எதார்த்தமாக இல்லாததோடு பார்வையாளர்களிடம் இதுவும் நகைச்சுவையாகவே சேர்கிறது.

இவ்வாறு ஆண்கள் திருநங்கைகளாக நடிக்கும் படங்களில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய படம், வசந்த் இயக்கத்தில் வெளிவந்து நடிகர் பிரகாஷ் ராஐpன் சிறப்பான நடிப்பில் வெளிவந்த “அப்பு”. இதில் பிரகாஷ் ராஜ் மகாராணி என்ற அலிவேடத்தில் நடித்திருப்பார். படத்தில் பிராகஷ் ராஜ் அறிமுகமாகும் முதல் காட்சியே மீஅபத்தமாக படத்தின் தரத்தை காட்டும். அதாவது முதல் காட்சியே அமைந்துருக்கும். அதாவது பிரகாஷ் ராஜ் தனது மீசையை சேவிங் செய்து கொண்டிருப்பார். உண்மையில், திருநங்கைகள் தங்களது தாடை ரோமங்களை நீக்க கிடிக்கி போன்ற சிம்;டா என்னும் பாதுகாப்பற்ற (ஏனெனில் பாதுகாப்பான ஆயுதம் வேறில்லை) கருவியால் ஒவ்வொரு முடியாக வேரோடு பிடிங்கி எறிவர். அதன் வலியறிய ஒரேயொரு முறை தங்களது ஒரு முடியை பிடிங்கி பாருங்கள். பின்னர் அது முகத்தின் மென்மையான தோலில் எத்தகைய வலியைத் தரும் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.

இங்கேயும் கதைப்படி மகாராணி என்னும் திருநங்கை பெண்களை அடக்கி வைத்து விபச்சாரம் செய்யும் ஒரு பிம்ப். இதுவரை சிறிய சிறிய காட்சிகளாக திருநங்கைகளை கேலி பொருளாக மட்டுமே முன்வைத்த தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக நேர்மறையாக காட்டப்பட்ட பம்பமாய் இயக்குநரின் வழி;த் தோன்றலாலேயே முழு நீள கிரிமினலாக திருநங்கைகள் சித்தரிக்கப்படுகின்றனர்.

திருநங்கைகள், கிரிமினல்களாக காட்டப்படுவதன் இன்றைய நவீன பதிப்பாக நாம் காணக்கிடைக்கும் மற்றொரு படம் “சில்லென ஒரு காதல்”. இப்படத்தில் மும்பைக்கு செல்லுமிடத்தில் அங்கு பிரபலமாகவுள்ள விபச்சார விடுதிக்கு நண்பர் ஒருவருடன் ஆர்வத்துடன் செல்கிறார் அப்பாவி வடிவேல். அங்கோ, திருநங்கை இருக்க கண்ட அவர் தப்பித்து ஓட முயல்வார். அப்போது அவர் கூறும் வசனம் “ டே இங்க பூரா அவிங்களாத்தான் இருக்காய்ங்க” என்பதாக இருக்கும். அவ்வாறு தப்பித்து ஓட முயலும் வடிவேலுவை அங்கிருக்கும் மற்ற திருநங்கைகள் வலைத்துப் பிடித்து விடுவார்கள். தொடர்ந்து வடிவேலு “யெப்பா தெரியாம வந்துட்டேன் மன்னிச்சு விட்டுடுங்கப்பா” என்பார்.

மற்றபடங்களிலாவது அலிகள் அது, இது என்று அஃறிணையிலாவது குறிக்கபடும் நிலையில் இப்படத்தில் அவிங்க, இவிங்க என்று ஆண்பாலில் குறிக்கப்படுகின்றனர். அதாவது இவர்களெல்லாம் ஆண்கள் தான், கொழுப்பின் காரணமாக பெண்களைப் போல புடவை அணிந்து ஊரை ஏமாற்றுகின்றனர் என்று மிக எளிதாக வரையரை செய்துவிடுகின்றனர்.

இவ்வாறு மாட்டிக் கொண்ட வடிவேலை அங்குள்ள அலிகள் பணம் தருமாறு மிரட்டுகின்றனர். மட்டுமன்றி, பணம் இல்லை என்று கதறும் வடிவேலுவை “அப்படியில்லைனா, எங்கள மாதிரி நீயும் ஆப்ரேசன் பண்ணி எங்களை மாதிரி சம்பாதிச்சு குடுத்துட்டு அப்புறம் போ”…என்று கூறி துரத்துகின்றனர்.

ஒரு அப்பாவி பல அலிகளால் துன்புறுவதைப் போல காட்டப்படும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு திருநங்கைக்கு சமுகத்தின் பொது இடத்தில் உள்ள பாதுகாப்பின்மை குறித்து எத்தனை காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன….?

ஆக, வேலையின்றி வெட்டியாகத் திரியும் ஒருவர், மும்பை வந்ததும் விபச்சார விடுதிக்கு செல்ல ஆர்வமாய் உள்ள திருமணமான ஒரு நபர் அப்பாவியாகவும், அப்படி வரும் அப்பாவிகளை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கொள்ளைக் கூட்டமாக திருநங்கைகளையும் சித்தரிக்கின்றனர். மேலும், திருநங்கைகள் சிறவர்களை கடத்தி சென்று ஆபரேசன் செய்து அலிகளாக மாற்றிவிடுவதாக அபத்த செய்திகள் நிலவுகிற நிலையில், இக்காட்சியல் திருநங்கைகள் அத்தகையவர்களாக காண்பிக்கபடுவதன் மூலம் ஒரு சமூக விரோகிகளாகஃகொள்ளையர்களாக பார்வையாளர்களுக்கு பாடம் புகுட்டப்படுகின்றனர்.

சென்ற ஆண்டில் அதிக பொருட் செலவில் தயாராகி கௌதம் இயக்கத்தில் வெளிவந்த படம் “வேட்டையாடுஇ விளையாடு” சென்ற ஆண்டில் டாப் டென் தரவரிசையிலும் முதல் இடம் பெற்ற சிறப்பும் இதற்குண்டு. தொடர்ந்து தனது படங்களில் வித்தியாசமான குற்றவாளிகளை காண்பித்து வரும் கௌதம் இதில் வித்தாயசமான குற்றக் காட்சி ஒன்றினை பாலியல் வெறி பிடித்த அலியின் மூலம் காட்சிப்படுத்துகிறார். படத்தில் வரும் ஒரு காட்சி
கதைப்படி அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு அலி வாரந்தோறும் தன் காமஇச்சையை தீர்த்துக் கொள்ள வருவார். இதில் அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டருக்கும் பங்குண்டு. அதன்படி அந்த வாரமும் வருகிறார். அவரைக் கண்டதும் அதிகாரிக்கு ஒரு விபரீதமான யோசனை வருகிறது. லாக்க்ப்பி;ல் இருக்கும் இரண்டு கல்லூரி இளைஞர்களையும் வித்தாயாசமான முறையில் தண்டிப்பதற்காக இவரை அவர்களது அறைக்குள் அடைக்கிறார். அந்த திருநங்கைக்கோ அவ்விரு இளைஞர்களும் லட்டாக அமைகின்றனர். இளைஞர்கள் இருவரும் திருநங்கையை கண்டு அலறு , அவரோ அய் இந்த பக்கம் சிகப்பு, இந்த பக்கம் கருப்பு” முத்தாய்ப்பாய காட்சியை இளைஞர்களின் அலறலோடு முடிப்பார்.

தொடர்ந்து வரும் காட்சியில் அந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் உயர் அதிகாரி(கமல்) கைதிகளை குறித்து எந்த குறிப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்று மட்டும் தான் கடிந்து கொள்கிறார். அலியைக் கூட்டிட்டு வந்து அந்த கசமுசா-வெல்லாம், மூச்! அதப்பத்தி ஒரு வார்த்தை கிடையாது!
வேறொரு காட்சியில் இது குறித்து கொலைவெறியோடு பேசும் பாதிக்கப்பட்ட (?!) கைதிகளில் ஒருவர் ~கோத்தாத… அந்த அலியமொத கொல்லனும்னு நெனைச்சன்….) என்பதாக ஒரு வசனம் .

இப்படத்தில் இரண்டு மருத்துவ மாணவர்கள் வில்லன்களாக காட்டப்பட்டிருந்தாலும், மருத்துவ அதிகாரியொருவர் (நல்லவர்) இத்தகைய மாணவர்களால் தான் மருத்துவவர்களுக்கே அவமானம் என்று வருத்தப்படுவார். கூடவே அம்மாணவர்களின் மருத்துவ பட்டத்தையும் இந்தியன் ;மெடிக்கல் கவுன்சில் நிராகரிப்புதாகவும் தெரிவிப்பார், இந்த நல்லவன் ஏழை கெட்டவன் எல்லாத் துறையிலுமே இருப்பதாகவே அனைத்து தமிழ் சினிமாவிலும் காட்டப்டுவர். படத்தில் ஒரு போலிஸ் வில்லன் (கெட்டவன்) என்றால் இன்னொரு போலிஸ் நல்லவனாக நிச்சயம் வருவான். ஆனால், திருநங்கைகள் மட்டும் இதுநாள் வரை இப்படியொரு மட்டமானவர்களாகவே சித்தரிக்கபடுவதன் அவசியம் என்ன…?

குடும்பத்தாலும், ஒட்டு மொத்த சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு சகமனித அங்கீகாரமின்றி பொதுத் தளத்தில் வாழ வழியுமின்றி (சோத்துக்கு வழியில்லாமல் என்று புரிந்து கொள்ளவும்) கடைக்கோடியில் நின்று பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களின் திருநங்கைகள், அப்படிப்பட்வர்களின் பிரச்சனை என்ன..? அவர்களின் தேவை என்ன? என்பது குறித்த எந்தவொரு அக்கரையுமின்றி கேலிக்காக மட்டுமா பயன்படுத்தி வருகிறது தமிழ் சினிமா. இன்று வெள்ளித் திரையிலும், நாளை தொலைக்காட்சியிலுமாக இத்தகைய படங்களில் வரும் நங்கைகளை மட்டுமே கண்டு வளரும் தலைமுறையும் அத்தகைய சிந்தையோடே வளர்ந்து திருநங்கைகள் மீதான தனது வன்முறையையும் நிலைநாட்டுகிறது.

கீதை என்று விஐய் படம் அது பகவத் கீதையை குறிக்கிறதென. அப்படம் வெளிவர தடைவிதிக்க கோரின இந்துத்துவ அமைப்புகள், அதன்படி, புதிய கீதை என பெயரும் மாற்றப்பட்டது. டாவின்சி கோட் திரைப்படம் கிருஸ்துவர்களின் நம்பிக்கையை அவமானப்படுத்துகிறதென அப்படம் வெளிவருவதற்கே தடை விதிக்கப்பட்டது. ஆனால், திருநங்கைகள் மீதான இத்தகைய அறைவேக்காட்டு கற்பிதங்களை எப்போது நிறுத்துவார்கள்
sarabu12
sarabu12
பண்பாளர்
பண்பாளர்

Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia

Back to top Go down

 பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் Empty Re: பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள்

Post by Tamil Fri Mar 04, 2016 10:28 am

திருக்குறள் விளக்கம்,
திருக்குறள் விளக்கம் pdf,
திருக்குறள் விளக்கம் download,
திருக்குறள் விளக்கம் mp3,
திருக்குறள் விளக்கம் urai,
திருக்குறள் பொருள் விளக்கம்,
திருக்குறள் 1330 விளக்கம்,
திருக்குறள் உரை விளக்கம்,
திருக்குறள் மற்றும் விளக்கம்,
திருக்குறள் அதன் விளக்கம்,
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum