Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தண்ணீரில் மிதந்த பிஞ்சுகள்... கண்ணீரில் தத்தளித்த கோவை
Page 1 of 1

கடந்த இரண்டு நாட்களாக அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது கோவை.
பணத்துக்காக இரு பள்ளிக்குழந்தைகள் கடத்தப்பட்டு, இரக்கமற்ற கொடூரனால்
கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவையை அதிர வைத்துள்ளது. காலையில் உற்சாக
ஊற்றாய் பள்ளி கிளம்பிய குழந்தைகளை இனி எப்போதும் காணப்போவதில்லை என,
அவர்களின் தாய் கனவிலும் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்.
கோவை ஒன்றும் குற்றமே இல்லாத நகரம் இல்லை. சிறுசிறு சம்பவங்கள்
நடந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், இரு பிஞ்சுகளின் கொலை இதுவரை கோவை
கண்டிராத ஒன்று. பள்ளிக்கு வழக்கமாக செல்வதற்காக குழந்தைகள்
காத்திருக்கின்றன. வழக்கம் போல் கார் வருகிறது; நீண்ட நாட்களாக வராத
டிரைவர் வருகிறார். ஆனால், ஏற்கனவே நன்கு பழக்கமான டிரைவர் என்பதால்,
தம்பியுடன் வாகனத்தில் நுழைகிறாள் அச்சிறுமி.அதற்குப்பின் நடந்தது
சோகசம்பவம். குழந்தைகள் கடத்தப்பட்டதை, மிக தாமதமாக உணரும் பெற்றோர்,
போலீசில் புகார் செய்கின்றனர். போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டபோதும்,
நிலைமை கைமீறி விட்டது. கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள
உடுமலை அருகே பி.ஏ.பி., கால்வாயில் புத்தகப்பை மிதக்கிறது என்ற தகவல்,
விபரீதம் நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டியது.போலீசாரின் வாகன சோதனையில்
குற்றவாளி சிக்கினான்.
"பணத்துக்காக கடத்தினேன். மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில்,
கால்வாய்க்குள் குழந்தைகளை தள்ளிவிட்டேன்' என "பகீர்' தகவலை அந்த கொடூரன்
சொல்ல, அலறியடித்தபடி கால்வாயில் தேடியது போலீஸ். தள்ளிவிட்ட இடத்தில்
இருந்து 70 கி.மீ., தூரத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இன்னொரு
பிஞ்சின் உடல், பொள்ளாச்சி கெடிமேடு அருகே நேற்று மீட்கப்பட்டது.சம்பவம்
அறிந்ததும், கோவை மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். முதல்நாள் சம்பவம்
கேள்விப்பட்டதும், "பணத்துக்காக கடத்தியிருப்பர். குழந்தைகள் எப்படியும்
மீட்கப்படும்' என்றுதான் எண்ணியிருந்தனர். அவர்களின் பெற்றோரைப்போலவே,
கோவை மக்களும் பதைபதைத்துக் காத்திருந்தனர். ஆனால், நிதர்சனம் வேறாக
இருந்தது. எவரது பிரார்த்தனையும் பலிக்கவில்லை. குழந்தைகள் இறந்தது,
இறந்ததுதான்.
இறுதி ஊர்வலத்தில் இளகிய இதயங்கள்:சிறுமி முஸ்கின் சடலம்
முன்னதாகவே மீட்கப்பட்டதால், நேற்று காலை முஸ்கினின் இறுதி ஊர்வலம்
நடந்தது. கோவை ரங்கேகவுடர் வீதியில், முஸ்கின் குடும்பத்தினரின்
வசிப்பிடத்தில் துவங்கிய இறுதி ஊர்வலம் ஒப்பணக்கார வீதி, உக்கடம்,
கரும்புக்கடை வழியாக ஆத்துப்பாலம் மயானத்தை சென்றடைந்தது.முஸ்கின் மரணம்
கோவை மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால், இறுதி
ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். 15 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். வழிநெடுக இருமருங்கிலும் மக்கள் திரண்டு
நின்று கண்ணீருடன், முஸ்கின் சடலத்தை வழியனுப்பினர்.
வாகனங்களில் சென்றவர்கள், அலுவலகம் சென்றவர்கள் என ஊர்வலம் சென்ற
வழியில் இருந்த பொதுமக்கள், முஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
காலை 9 மணிக்கு துவங்கிய இறுதி ஊர்வலம், மதியம் 12.40 மணி வரை
நடந்தது.கண்களில் கண்ணீர் திரள பொதுமக்கள் பங்கேற்ற காட்சி, காண்போரின்
உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. நேற்று காலை வரை முஸ்கின் சடலம் மட்டுமே
கிடைத்திருந்தது. இதனால், உறவினர்கள் ரித்திக் உயிருடன் இருப்பதாகவே
நம்பினர். "நிச்சயம் உயிருடன் வீடு திரும்புவான் ரித்திக்' என, உடைந்த
குரலில் திரும்பத் திரும்ப கூறியபடி இருந்தனர்.குற்றவாளி மோகன்ராஜுக்கு
எதிராக பொதுமக்கள் கொந்தளித்தனர். குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என
வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். "கோர்ட், வழக்கு என இழுத்தடிக்காமல்
உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்' என, பொதுமக்கள் ஆவேசமாக
கோஷமிட்டனர்.
கொடுஞ்செயலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொதுமக்கள் ஏந்திச்
சென்றனர். "கொலை செய்வதை தவிருங்கள்; என் குழந்தை எனக்கு வேண்டும்' என்ற
வாசகம் அடங்கிய பதாகை பலரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. மனித நேய
மக்கள் கட்சி சார்பில், கொலைகாரனை தூக்கிலிட வலியுறுத்தி கண்டன போஸ்டர்கள்
ஒட்டப்பட்டு இருந்தன. மக்கள் வெள்ளத்தில் மிதந்த முஸ்கின் உடல்,
ஆத்துப்பாலம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» கோவை மாவட்டத்தில் யாழ் படிப்பகம் துவக்க விழா - கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி
» ஈழத் தமிழச்சியின் கண்ணீரில் இருந்து சில துளிகள்..........
» பட்டினியால் மடியும் பிஞ்சுகள் : "ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்'
» பிஞ்சுகள் மனதில் பணத்தாசை விதைப்பு:அடுத்த தலைமுறைக்கு தலைவலி
» நடுக்கடலில் தத்தளித்த 120 இலங்கை அகதிகள்- வைகோ முயற்சியால் மீட்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum