Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இல்லாததொரு இயக்கத்தை எதற்காக இந்தியா தடை செய்ய வேண்டும்! :அனலை நிதிஸ் ச. குமாரன்
Page 1 of 1

ராஜீவ் கொலை விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இந்தியாவின் நீதித்துறை அரசியல் அழுத்தம் காரணமாக, நீதி தேவதையின் கண்களை நிரந்தரமாகவே மூடிவிட்டுத்தான் விடுதலைப்புலிகள் மீது அபாண்டமான கொலைக்குற்றத்தை சுமத்தி, அதன் மீதான தடையை விதித்தது.
ஈழம் என்று கூறினாலே குற்றமென்ற நிலை இந்தியாவில். பொடா சட்டத்தின் மூலமாக பயமுறித்தி மானமுள்ள தமிழரின் வாயை மூடியது இந்திய அரசு.
அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டே வந்தார்கள். ஒரு சிலரைத்தவிர, பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே புலியென்ற வார்த்தையை கூறினாலே கிலிகொண்டு ஓடும் பரிதாப நிலை. ஈழம் வரை சென்று புலிக்கொடி ஏற்றிய ராஜராஜனை போற்றி விழா நடத்துபவர்கள், பாவம் அவனின் வம்சாவளியினர் இன்று மரணத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றார்கள். ராஜராஜனின் மன்னர்கள் ஆண்ட ஈழத் தேசம் இன்று சிங்களத் தேசமாக மாற்றப்படுகின்றது.
தமிழக அரசோ சிங்கள அரசியல்வாதிகளுக்கு செங்கம்பள வரவேற்பு அளித்து, தமிழ்நாட்டின் அனைத்துப்பகுதிகளுக்கும் உல்லாசப் பயணம் செய்ய அனுமதிக்கின்றது. ஆனால், ஈழத்தமிழர் மீது பல தடைகளை போட்டு அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு பிரயாணம் செய்தால் காவல்துறையினர் புலி என்று பொய்க்குற்றம் சுமத்தி கைது செய்கின்றது. இது தான் இன்றைய தமிழக நிலை.
அரசியல்வாதிகளின் முரன்பாடான கருத்துக்கள்
விடுதலைப்புலிகள் இல்லையேல் தமிழினம் இல்லையென்று கூறிய ஜெயலலிதா, பின்னர் தான் எப்பொழுதுமே விடுதலைப்புலிகளின் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறினார். இவரின் கொள்கையிலும் விட தான் மிக கடினமான கொள்கையை பின்பற்றுபவர் என்ற பாணியில் அறிக்கைகளை விடும் கலைஞர் கருணாநிதியோ, தான் சேர்த்துக் கொடுத்த பணத்தை வாங்காமல் எம்.ஜி.ராமச்சந்திரன் கொடுத்த கோடிக்கணக்கான பணத்தை புலிகள் வாங்கியதாக புலம்பினார்.
விடுதலைபுலிகளின் அரசியல் தலைவர் தமிழ்ச்செல்வன் கொலையுண்ட செய்திகேட்டு தான் மனமுடைந்துவிட்டதாகவும், இரங்கல் கவிதையையும் எழுதி பத்திரிகைவாயிலாக வெளியிட்டார். பின்னர், புலிகளை அழிக்க பல வேலைத்திட்டங்களை தனது கட்சி அங்கம் வகிக்கும் இந்திய மத்திய அரசுடன் இணைந்து ஈழத்தமிழரின் பல இன்னல்களுக்கு காரணமாக இருந்தார். இப்படியாக, அரசியல்வாதிகளின் செயல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
கடந்த வருடம் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிச் சேவைக்கு பேட்டியொன்றை அளித்த கலைஞர் கருணாநிதி, பிரபாகரனை ஒரு பயங்கரவாதியாகப் பார்க்கவில்லை என்றும் இலங்கையில் அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டைகளில் அவர் கொல்லப்பட்டிருந்தால் தனக்குப் பெரும் கவலை என்றும் தெரிவித்திருந்தார்.
பேட்டிகண்ட செய்தியாளர், பிரபாகரனை நீங்கள் ஒரு பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களா? என்று கேட்டபோது, “பிரபாகரன் எனது நல்ல நண்பர்' நான் ஒரு பயங்கரவாதியல்ல, என்று அவர் பதிலளித்தார். அப்போது அவருடன் கூட இருந்த மகள் கனிமொழி எம்.பி., பிரபாகரனைப் பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களா என்று தந்தையிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த கலைஞர் “நான் அப்படிப் பார்க்கவில்லை. பிரபாகரனின் குழுவில் இருப்பவர்கள் பயங்கரவாதச் செயல்களை நாடியிருக்கிறார்கள். ஆனால், அது பிரபாகரனின் தவறு அல்ல” என்று கூறினார்.
“தமிழ்க் குழுக்களிடையே ஐக்கியம் இல்லாததன் விளைவாகவே இன்றைய அவலநிலை ஏற்ப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் இலக்குகள் நியாயபூர்வமானவை. தவறான வழிமுறைகளை அந்த இயக்கத்தவர்கள் கையாள்வதைக் கண்டபின்னரே அவர்களில் தவறுகண்டேன். அவர்களின் இலக்குகள் சரியானவை. வழிமுறைகளில் தான் பிழை” என்று பேட்டியின்போது கூறியிருந்தார்.
இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால், இந்திரா காந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக, உறுப்பினராக பின்னர் வேண்டப்பட்ட முக்கிய புள்ளியாக கருதப்படும் சிதம்பரம் எப்பொழுதுமே தமிழர் விரோத கருத்துக்களையே கூறி வருபவர். ராஜீவ் - ஜெயவர்தனே செய்துகொண்ட ஒப்பந்த காலப்பகுதியில் இவரின் பங்கு மிகப்பெரியது. இவரே முன்னின்று இந்த ஒப்பந்தத்தை செய்துவிட வேண்டுமென்ற முனைப்புடன் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜரின் 108-வது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது கடந்த ஜூலை மாதம் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இலங்கை பிரச்சனை பற்றி தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: “ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன். இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன். அவர் ராஜீவ்காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் 2 மாநிலங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார். ஆனால் நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்."
இப்படியான அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் நிச்சயமாக தமிழினத்திற்கு விமோசனமே கிடையாது. இவர்கள் அனைவரும் பதவி ஆசையினால், எப்படியாவதும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், வாரிசுகளுக்கும் அனைத்து வளங்களையும் சேர்த்துவிட வேண்டுமென்ற கோட்பாட்டுடன் வேலைசெய்பவர்கள். ஆகவே, இவர்களிடம் இருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அத்துடன் இவர்களுக்கு விடுதலைக்காக தமது உயிர்களையும் துச்சமென நினைத்து களமாடி தமது இன விடுதலைக்கு போராடும் வீரர்களைப் பற்றி பேசக்கூட அருகதையற்றவர்கள். பின்கதவால் வந்து ஆட்சி செய்பவர்களிடம் எதனையும் எதிர்பார்ப்பது முட்டாழ்த்தனமானதே.
இந்தியாவின் கபட நாடகம்
கடந்த மே 14-ம் தேதி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த ஆணை, நடுவர் மன்றத்தில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறை. அதற்காக, செப்டெம்பர் 21-ம் தேதி நடந்த விசாரணையில் வைகோ ஆஜரானார். அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் தனஞ்ஜயன் ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து, முறைப்படி வழக்கறிஞர் மூலம் ஆஜராகுமாறு நீதிபதி விக்ரம்ஜித் சென் வைகோவுக்கு உத்தரவிட்டார்.
அதையடுத்து, செப்டம்பர் 24-ம் தேதி விசாரணை நடந்தபோது, வைகோ முறைப்படி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், தனி வழக்கறிஞரை வைக்காமல் அவரே வாதாடினார். ஆனால், விடுதலைப் புலிகளின் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை எதிர்க்கிறீர்களா என்று கேட்டு அந்த இயக்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அந்த இயக்கத்தின் தலைவரோ, செயலாளரோ நிர்வாகியோ இல்லாத வைகோ, இங்கு வாதாட முடியாது என்று தமிழக அரசு வழக்கறிஞர் தனஞ்ஜயன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சந்திஹோக் ஆகியோர் வாதிட்டார்கள். இந்தத் தடையுத்தரவைப் பயன்படுத்தி, இலங்கையிலிருந்து வரும் தமிழர்கள் துயரங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று வாதிட்டார் வைகோ.
வைகோ முன்வைத்த வாதம் என்னவெனில்: “விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிப்பதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து தனி தமிழ் ஈழ நாடு கோருவதால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு தனது வாதத்தில் கூறியுள்ளது. தனி ஈழம் என்பது இலங்கைத் தீவில் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம். வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அவர்கள் அரசாண்ட பூமி. தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட அவர்கள் தனி ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இதற்கு மத்திய அரசு ஆதாரத்தை காட்ட முடியுமா?. புலிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த மத்திய அரசு செய்யும் திட்டமிட்ட பிரச்சாரமாகும்.”
அவர் மேலும் கூறுகையில்: “நான் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ நாட்டை ஆதரிக்கிறோம். அதை அமைப்பதுதான் எங்களின் குறிக்கோள். புலிகள் மீது தடை இருப்பதால் அகதிகளாக தமிழகத்துக்கு வரும் தமிழர்களை புலிகள் என்று முத்திரை குத்தி சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள் அல்லது இலங்கைக்கே திருப்பி அனுப்புகிறார்கள். இதற்காகவே தடையை நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது என்கிறேன். உலகம் முழுவதும் இணையதளத்தில் புலிகளுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளார்கள். மனித உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற குரல் அது. தமிழர்களுக்கு துன்பம் விளைவிப்பதற்காகவே புலிகள் மீதான தடையை அரசு பயன்படுத்துகிறது. இந்தக் காரணத்துக்காகவே, தடையை நீட்டிக்கக் கூடாது என்கிறேன்."
புலிகள் சார்பாக வைகோ ஆஜராக முடியுமா என்பது குறித்த தீர்ப்பை ஒத்திவைப்பதாகத் தெரிவித்த நீதிபதி விக்ரம்ஜித் சென், செப்டம்பர் 27 அன்று அந்த உத்தரவை வழங்கினார். அதன்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகள் சார்பில் ஆஜராக வைகோவுக்கு உரிமையில்லை எனறு தீர்ப்பளித்தார்.
புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பான இந்தத் தீர்ப்பாயம் தனது விசாரணையை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும். இதன் முதல் இரண்டு கூட்டங்கள் டெல்லியில் நடந்த நிலையில் 3வது கூட்டம் சென்னையில் அக்டோபர் 5-ம் தேதி ஆரம்பமானது. இக் கூட்டத்தில் தமிழக க்யூ பிராஞ்ச் காவலாளர் எஸ்.பி. அசோக் குமார் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து அளித்த சாட்சியத்தில், தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்தினர் 47 பேர் மீதும், அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றம் குறித்த ரகசிய ஆவணங்களும் தீர்ப்பாயம் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
வைகோ ஆஜராகி தனது கருத்தை கூறுகையில்: "விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் இந்தியாவில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமே அந்த இயக்கம் உள்ளது. அதன் மீதான தடையை நீடிக்க அரசு கூறும் காரணங்கள் யூகத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்றார்."
பழ. நெடுமாறன் கூறுகையில்: "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நான் நடத்தி வந்த தமிழர் தேசிய இயக்கம் என்ற கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. என் மீதும், எனது கட்சியினர் மீதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். எந்த இடத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டியுள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி எங்கள் பேச்சுரிமையே பறிக்கப்பட்டுள்ளது."
மேலும் பல தமிழின உணர்வாளர்கள் புலிகள் மீது விதித்துள்ள தடை நீட்டிப்பு மீதான தமது ஆட்ச்சேபனையை தெரிவித்துள்ளார்கள். தீர்ப்பாயத்தின் விசாரணைக் கூட்டம் இந்த மாதம் 20-ந் தேதி ஊட்டியில் நடைபெறும் என நீதிமன்றப் பதிவாளர் அறிவித்தார்.
தடை தேவைதானா?
அரச தரப்பினர் உட்பட சிலரைத் தவிர எவரும் விடுதலைப்புலிகளின் தடை நீட்டிப்புக்கு ஆதரவாக கருத்துக்களை கூறவில்லை. பலர் தமது ஆதங்கங்களை தெரிவித்து புலிகள் மீதான தடையின் மூலமாக தமக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகள் மறுக்கபடுகின்றதென்று கூறினார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவு ஏற்படவில்லை. சிங்கள ராஜபக்ச ஆட்சியின் மனித உரிமை பறிப்புகள் பற்றி, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், வெளிப்படையாகவே கூறியுள்ளார். உலகப் போர் நெறிமுறைகளை மீறி தவறாக ராஜபக்ச நடந்துகொண்ட குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலைப்புலிகள் என்றும் இலங்கை சிறையில் மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ள பல்லாயிரவர் பற்றி ஐக்கிய நாட்டு அமைப்புகளின் 60 சட்ட வல்லுனர்கள் கண்டனம் உள்பட சில நாட்களுக்குமுன் உலக ஏடுகளில் செய்தியாக வந்தது. இந்நிலையில், அவதிப்படும் ஈழத் தமிழர்களுக்கென பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசு (தமிழக அரசின் உதவியும் இணைத்து) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டதாகவோ, படுவதாகவோ தெரியவில்லை."
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: “தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றங்களாக்கப்படும் கொடுமை தொடர்கதையாகி வருகின்றது! இந்நிலையில், கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்னும் பழமொழிக்கொப்ப, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்! இலங்கை அரசே இங்கே விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை நீடிக்கும் சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படையிலோ என்று நமக்குப் புரியவில்லை."
வீரமணி மேலும் தெரிவிக்கையில்: “காஷ்மீரிலும் சரி, மற்ற நக்சலைட்கள் பெருகிய பல வட மாநிலங்களிலும் சரி, அவர்களை மத்திய அரசும், நம் பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பேசி சுமுகத் தீர்வு காணும் நல்லெண்ண முயற்சிகளை மேற்கொள்வது அறிவிப்பது நல்ல அணுகுமுறையே! அதே அரசு, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் மீண்டும் தடையை நீடித்துக் கொண்டே போவது சரிதானா? ஈழ அகதிகளாகி, அகதியாக, வாழ்க்கையை தமிழ்நாட்டிலும், வேறு சில இடங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் நிம்மதியற்ற வாழ்வினை (அவர்களுக்கு) தரத்தான் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடும். எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப்படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுகவேண்டும். நிர்ப்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிடவேண்டும் முன்னுரிமை அதற்குத்தான் தரப்படவேண்டும்."
எந்தவொரு தனிநபரும் பொதுவில் பேச அதிகாரம் அளிக்கப்பட்டும், ஒரு இனம் அழிவதைக் கண்டு பேசாமல் வாய்மூடி மௌனியாக இருக்கச் சொல்லுகின்றது இந்திய அரசு. அதை மீறி பேசினால் சிறைக்குள் தள்ளுகின்றது ஆளும் சர்க்கார். இது தனி நபர் சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகவெ இருக்கின்றது. ஆகவே, புலிகளின் தடையின் காரணமாக ஈழத் தமிழர்களை பற்றியே பேச தடை விதிக்கப்படுகின்றது. அருகில் இருக்கும் தமது இனத்தின் அழிவைக்கண்டு பாராமுகமாக இருக்கச் சொல்லுகின்றது இந்திய அரசு. இதற்கு துணைபோகின்றது தமிழக அரசு.
உலகின் மூத்த ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடிக்கும் இந்தியா தனி நபர் சுதந்திரத்தை அடக்க முனைவது என்ன நியாயம். இது இந்தியாவின் கபட நாடகத்தை காட்டுகின்றது.
ராஜீவ் காந்தியின் கொலையை சாக்காக வைத்து அரசியல் ஆதாயம் தேட முனையும் இந்திய அரசியல்வாதிகள், சட்டத்துறையின் துணையுடன் ஒட்டு மொத்த தமிழர்களின் வாயையும் மூடவைத்து அவர்களின் தார்மீக அரசியல் போராட்டங்களை நசுக்கி தமது பகைமை உணர்வை காட்ட முனைகின்றது ஆரிய வர்க்கத்தைச் சேர்ந்த இந்திய மத்திய அரசு, பாவப்பட்ட ஏழை எளிய திராவிட சாதியினரோ அவர் தம் இனத்தினாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு அழிக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்படும் திராவிட இனம், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த இழிவு வாழ்வையே சந்திக்க துணைபோகின்றார்கள் எட்டப்பர்கள். அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து ஈழம் காண்பதுவே இலக்கு என்ற வேள்வியுடன் பயணத்தை தொடர, தமிழர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் விலக்கி உலக நாடுகளின் ஆதரவுடன் களம் காண்பதுவே சாணக்கியம்.

sagan- உதய நிலா
- Posts : 30
Join date : 28/08/2010
Similar topics
» சிங்கள தேசத்தின் வன்முறை குறைந்தபாடில்லை!- அனலை நிதிஸ் ச. குமாரன்
» இலங்கையுடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தா. பாண்டியன்.
» யாருக்கு வேண்டும் டெசோ ? எதற்காக வேண்டும் டெசோ ? மானம் இருக்கிறதா மஞ்சள் துண்டு முனியே !!
» நடிகர் ஜெயராமைக்கைது செய்ய வேண்டும்.வன்முறையைத்தூண்டியது நானல்ல.
» 2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: மோடி உறுதி!'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்: மோடி அறைகூவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum